Sunday, September 24, 2017

பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி பயணித்த;


'பெரியார்' .வெ.ராவின் நாத்திகம்



ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு புறகாட்சி வடிவமாக எழுதப்படும் சொல் தொடர்பான மொழியியல் பகுதி 'மார்ஃபாலாஜி' (Morphology) ஆகும். ( https://en.wikipedia.org/wiki/Morphology_(linguistics) )

ஒரு சொல்லின்  உள்ளடக்கமானபொருள் தொடர்பான மொழியியல் பகுதிசெமாண்டிக்ஸ்' (Semantics)  ஆகும். (https://en.wikipedia.org/wiki/Semantics )

எந்த ஒரு மொழியிலும் ஒரு சொல்லின் புறக்காட்சி வடிவமும், அதனுள் உள்ள பொருளும், மனித வாழ்வினைப் போன்றே, பிறப்பு, மாற்றம், இறப்பு உள்ளிட்ட மொழியியல் வாழ்வு (linguistics life) வாழக்கூடியதாகும். மொழியியல் வாழ்வு என்பதானது, அந்த மொழி சம்பந்தப்பட்ட சமூகம் சந்தித்து வரும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும்.

உதாரணமாக 'பிள்ளையார்' என்ற சொல்லானது, தமிழில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே அறிமுகமானதாகவும், பாலி மொழியிலிருந்து அச்சொல்லானது, தமிழ் மொழியில் அறிமுகமானது என்றும் நான் படித்திருக்கிறேன். 'கழகம்' என்ற சொல்லானது, திருக்குறளில் (935)  'சூதாடுமிடம்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக தேவைகளின் அடிப்படைகளில்;

'பிள்ளையார்' தமிழில் இறக்குமதியாகி, வளர்ந்து, வழிபாட்டில் முக்கிய இடம் பிடித்தது? அவை பற்றிய எந்த அளவுக்கு சரியான/தவறான புரிதலில், .வெ.ரா 'பிள்ளையார் பொம்மைகளை உடைத்தல்' போராட்டங்களை நடத்தினார்? அந்த போராட்டத்திற்கு முன், தனிப்பட்ட குடும்ப அளவில் கொண்டாடப்பட்ட 'பிள்ளையார் சதுர்த்தி'யானது, இன்று பொது இடங்களில் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகளை வைத்து வணங்கும் போக்கிற்கு, அதுவே காரணமானதா?

'சூதாடுமிடம்' என்ற பொருளிலிருந்து, 'கழகம்என்ற சொல்லானது திரிந்து, இன்றுள்ள பொருளை, எப்போது, எதனால், பெற்றது?

அதாவது மொழியில் உள்ள சொற்களின் பிறப்பு, புற வடிவத்திலும், பொருளிலும் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட மொழியியல் வாழ்வு, மறைவு ஆகியவை எல்லாம், அந்த மொழி சம்பந்தப்பட்ட சமூகத்தில் நடைபெற்று வரும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும். அந்த தொடர்பைப் பற்றிய புரிதலின்றி, தமிழுக்கு கேடாக .வெ.ரா அவர்கள் பயணித்த போக்கானது, இறுதியில் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகி விட்டதா? என்ற விவாதத்தை உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி, அறிவுபூர்வமாக அரங்கேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்திராவிடர்/திராவிட அரசியலில் சீர்குலைந்த பொது ஒழுக்க திசைக்காட்டியானது, மீண்டும் வலிவு பெறும்போது, 'பிள்ளையார் சதுர்த்தியானது' பொது இடங்களிலிருந்து வெளியேறி, மீண்டும் விடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறும் என்பதும், எனது கணிப்பாகும்.

பிறமொழியிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகி, பொருள் சிதைவுக்கு (semantic distorsion)  உள்ளான சொற்கள் பற்றிய ஆய்வுகள், இதுவரை என் கண்ணில் படவில்லை. அத்தகைய ஆய்வுக்கு உரிய சொல்லாக, .வெ.ரா அவர்கள் பயன்படுத்திய 'நாத்திகம்' என்ற சொல் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் அந்த சொல்லானது, 'வேதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்', என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. { கீழே  குறிப்பு 2:  "āstika" means "one who believes in the authority of the Vedas" or "one who believes in life after death". ("nāstika" means the opposite of these)}

ஆங்கிலத்தில் உள்ள 'எதீஸ்ட்' (atheist) என்ற சொல்லானது, கடவுளை மறுக்கும் நபரைக் குறிக்கும் சொல்லாகும். (https://en.wikipedia.org/wiki/Atheism )

பிறமொழிச் சொற்களை தமிழில் இறக்குமதி செய்யும் போது, பொருள் சிதைவின்றி ஓசை சிதைவுடன் இறக்குமதி செய்வது தொடர்பான, தொல்காப்பியம் குறிப்பிடும் விதி தொடர்பான, எனது ஆய்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_8.html ) தொல்காப்பிய விதியை தவறாக புரிந்து கொண்டு, தனித்தமிழ் ஆர்வத்தில், அந்த சொல்லைத் தவிர்த்து, தமிழில் வழக்கில் உள்ள சொல்லை, அல்லது புதிதாக ஒரு சொல்லை, உருவாக்கி பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளேன்
(https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none.html)

.வெ.ரா அவர்களின் 'நாத்திகம்' என்ற சொல்லானது, சமஸ்கிருதத்தில் இருந்த பொருளை திரித்தது மட்டுமின்றி, அவ்வாறு திரிதலுக்கு உள்ளான சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள, கடவுள் மறுப்பு தொடர்பான‌ 'எதீஸ்ட்' (Atheist) என்ற சொல்லுடன் பொருத்தியது தொடர்பான ஆய்வினைப் பார்க்கும் முன்;

.வெ.ரா அவர்களின் 'கடவுள் மறுப்பு' பற்றிய கருத்துக்களை முதலில் பார்ப்பதும் முக்கியமாகும்.

1925 இல் 'குடிஅரசுஇதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய .வெ.ரா அவர்கள், எந்த காலக்கட்டத்தில், அந்த 'குடிஅரசு' இதழில் கடவுள் மறுப்பு தொடர்பான கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார்? மேற்கத்திய கடவுள் மறுப்பாளர்களாகிய இங்கர்சால் போன்றோர், எந்த அடிப்படையில் கடவுள் மறுப்பு போக்கில் பயணித்தனர்? என்று ஆராய்ந்தால்;

.வெ.ராவின் கடவுள் மறுப்பானது, அவரின் சமூக சீர்திருத்த போக்கில், அவர் சந்தித்த தடைகள் தொடர்பான பிராமண எதிர்ப்பின் வளர்ச்சிக்கட்டத்தில், அந்த சமூக சீர்திருத்ததிற்கு கட்டுப்பட்ட போக்கிலேயே (subordinated), கடவுள் மறுப்பை கையாண்டார்; சாகும் வரை பகிரங்கமாக குன்றைக்குடி அடிகளாருடன் நட்பைத் தொடர்ந்தவாறே.

.வெ.ராவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், ஒருவர் எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்? என்பது பற்றி கவலைப்படாமல்;

வெவ்வேறு காலக் கட்டங்களில், வெவ்வேறு சமூக சூழலில் வெளிப்படுத்திய கருத்துக்களை;

ஆய்வுக்கு உட்படுத்தி, அபத்தமான முடிவுகளை பெற முடியும்;

என்பதற்கு சான்றாக கீழ்வருவது உள்ளது.

"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே .வே. ராமசாமி நாயக்கரின் வேலை." ‍ பெரியாரின் மறுபக்கம்பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)
July 10, 2009 - வெங்கடேசன்http://www.tamilhindu.com/2009/07/periyar_marubakkam_part07/

1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டு .வெ.ரா முக்கியமான பொதுப்பிரச்சினைகளுக்காக போராடிய போதும், பிரச்சாரங்கள் செய்தபோதும், கடவுள் மறுப்பு கொள்கையை முன்னிறுத்தியதில்லை. பிராமணர்களும், கடவுள் நம்பிக்கையுடையவர்களும், அந்த பொதுப்பிரச்சினையில், தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதை, அந்த கடவுள் மறுப்பு கொள்கை மூலம் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பியதில்லை. எனவே தான் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடவுள் நம்பிக்கையுடையவர்களும், பிராமணர்களில் சிலரும் ஆதரித்தது போலவே, இந்திய விடுதலைக்கு முன், .வெ.ராவின் திராவிடநாடு பிரிவினை கோரிக்கைக்கு ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரவு தெரிவித்தனர்

பொதுப் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள், பிரச்சாரங்கள் அவசியமில்லாமல் இருந்த காலக்கட்டங்களில், கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தினார். தஞ்சாவூர் மருதவாணன் அவர்கள் தான் முதல்முறையாக, இது பற்றி உரிய சான்றுகளுடன் விளக்கினார். அவர் துணையுடன், இது தொடர்பாக, எவரும் ஆய்வு மேற்கொள்ள முயன்றால், என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்அது போலவே, ஏற்கனவே தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' மற்றும் 'சாதி' போன்ற சொற்கள், எந்த காலக்கட்டத்தில், காலனி சூழ்ச்சியில் பொருள் திரிதலுக்கு (Semantic distortion) உள்ளானது? அந்த பொருள் திரிதலுக்கும், அந்த திரிதலில் .வெ.ரா அவர்கள் பயணித்ததால், சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலுக்கும், உள்ள தொடர்பு பற்றி, ஆர்வமும் உழைப்பும் உள்ள எவரும் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள முயன்றால், அவருக்கும் நான், என்னால் இயன்ற உதவிகளை, புரிய இயலும்'திருச்சி பெரியார் மையம்' மூலம், நான் அடையாளம் கண்ட 'பெரியார் சமூக கிருமிகள்' வெளிப்படுத்தியுள்ள‌, அந்த தொடர்பு பற்றிய வெளிச்சமும் கிடைத்துள்ள பின்னணியில்.

.வெ.ரா அவர்களின் பிராமண எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் உணர்ச்சிபூர்வமாக புரிந்து கொண்டு, 'பெரியார் சிறைக்கைதிகளாக' பயணித்து வரும் போக்கு பற்றியும், ஏற்கனவே எச்சரித்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html  )

இந்திய தத்துவத்தில் வேதங்களுக்கு எதிரான அறிவுபூர்வ விவாத திசையில், கடவுள் மறுப்பின்றி பயணித்த 'நாத்திகமானது', தமிழில் .வெ.ராவின் கடவுள் மறுப்பு போக்கில், உணர்ச்சிபூர்வமாக சிக்கியதும், தமிழ்நாட்டில் 'பெரியார் சிறைக் கைதிகளின்' வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்ததா? என்பதையும் நான் ஆராய உள்ளேன்.

.வெ.ரா அவர்களின் கடவுள் மறுப்பு போக்கானது, எந்த அளவுக்கு மேற்கத்திய உலகில், கடவுள் மறுப்பாளர்களாக பயணித்த இங்கர்சால் போன்றோரின் கடவுள் மறுப்பிலிருந்து வேறுபட்டது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

கிறித்துவ மதத்தில் அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமில்லாத அறிவு மூச்சுத்திணறலுக்கு (intellectual suffocation) எதிரான போக்கில், வெளிப்பட்ட கடவுள் மறுப்பாளரே இங்கர்சால் ஆவார்.  ( கீழே குறிப்பு 3 :The Church never enabled a human being to make even one of these exchanges ; on the contrary, all her power has been used to prevent them.)

உலகில் தொன்மை மொழிகளில் அறிவுபூர்வ விவாதங்களை வெளிப்படுத்தும் நூல்கள் மிகுந்த மொழி சமஸ்கிருதம் ஆகும். தொன்மை மொழிகளில் நாத்திகம் பற்றிய அதிக நூல்கள் உள்ள மொழியாக சமஸ்கிருதம் இருப்பதை, இந்துத்வா எதிர்ப்பாளராகியஅமர்தியா சென் வெளிப்படுத்தியுள்ளார்.  ( Page 35, 'Identity and Violence' by Amartya Sen)

சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் ஒன்றே மனுஸ்மிரிதி ஆகும். இது போன்ற நூல்களில் உள்ளவையெல்லாம், அந்த நூலாசிரியரின் விருப்பங்களின் வெளிப்பாடுகள் தான் என்பதையும், அன்று நடைமுறையில் இருந்தவை அல்ல என்பதையும், குறிப்பாக ' சூத்திரர் வாயிலும், காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது போன்ற தண்டனைகளும், ஒரு மனவெறியரின் ஆலோசனைகள் மட்டுமே; அவை நடைமுறையில் வராதவை; என்பதையும் .எல்.பாஸம் என்ற அறிஞர் ' the wonder that was india' என்ற நூலில் விளக்கியுள்ளார். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

ஆனால் பொருள் திரிபுக்குள்ளாகி (semantic distortion)  பயணித்த, .வெ.ராவின் நாத்தீகமானது;

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது மனுநீதியின்  'பார்ப்பன சூழ்ச்சி' என்ற முடிவில்;

உணர்ச்சிபூர்வ போதைக்கு வழிவகுத்து, சமஸ்கிருதம் என்ற மொழியையும் வெறுத்து, அறிவுபூர்வபோக்கிலிருந்து தடம் புரண்டு, 'பெரியார் சிறைக் கைதிகளை' உருவாக்கி விட்டதா? என்ற விவாதம் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

ஒரு மனிதன் தான் விரும்பும் கடவுளை, தான் விரும்பும் முறையில் வழிபடுவதற்கும், வழிபடாமல் இருப்பதற்கும், வழிபடும் கடவுளை மாற்றிக் கொள்வதற்கும், கடவுளை மறுப்பதற்கும், இன்று அதிகபட்ச விடுதலை வழங்கியுள்ள ஒரே மதம் இந்து மதமாகும்.

அது மட்டுமல்ல, ஒரு மனிதனின் சுய விடுதலையையும் (Self liberation), சமூகத்திற்கும், இயற்கைக்கும் தொடர்புள்ள வகையில், ஒரு மனிதனுக்கான மனித உரிமைகள் இருப்பதையும், ஊக்குவிக்கும் மதம் இந்து மதமாகும். கிறித்துவ மதப் போக்கிற்கு எதிராக வெடித்த கிளர்ச்சிகளின் போக்கில், மேற்கத்திய உலகில் முன்னிறுத்தப்பட்ட தனிமனித உரிமைகளின் வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழ்நாட்டில் அதனை இறக்குமதி செய்வதில் உள்ள ஆபத்துகளையும், நான் எச்சரித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2015/03/12.html )

எனவே தான், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நாத்திகர் ஜீன் பெர்ரி லேமான், உலக முன்னேற்றத்திற்கு உலக மதமாகும் தகுதியானது, இந்து மதத்திற்கு இருப்பதாக அறிவித்துள்ளார். (According to the atheist minded Western writer Jean-Pierre Lehmann , “  The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.” In his article ‘The Dangers of Monotheism in the Age of Globalization’ . )

.வெ.ரா அவர்களின் நாத்திகப் போக்கானது, தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு சாதகமாகி, எந்த அளவுக்கு (.வெ.ரா அவர்களே வலியுறுத்திய) பொது ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்திற்கான திசை காட்டியையும், ஆன்மீகத்தையும் (“sense of moral order, spirituality and an ethical compass”) சீர்குலைத்தது? என்பது பற்றிய எனது ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.htmlஅந்த சீர்குலைவின் பாதகங்கள் 'பெரியார்' கட்சிகளையும் தீண்டிய பின்னும், அக்கட்சிகள் எல்லாம் விழித்துக் கொள்ளாமல் இருப்பது சரியா? (‘ஃபாருக் கடைசி பலியாக இருக்கட்டும்’; http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_21.htmlதிராவிட அரசியல் கொள்ளையர்களை உரசாமலும், தெரிந்தும் தெரியாமலும் அந்த கொள்ளையில் ஒரு பகுதியை உதவியாக பெற்றுக் கொண்டும், விடுதலைப்புலிகளை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் வழிபடும் போக்கை ஊக்குவித்து, 'தனித்தமிழ்நாடு' என்று குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை உசுப்பி, காவு கொடுக்கும் போக்கினையும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் சரியா? (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

எனவே தமிழ்நாடு அறிவுபூர்வ போக்கில் பயணிக்க வேண்டுமானால்:

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, தமிழிலும் ஆழ்ந்த புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, 'அறிவுஜீவிகளாக' வேடமணிந்து வலம் வரும் 'பெரியார் சிறைக் கைதிகளிடமிருந்து', நாத்தீகத்தைஅதன் பொருள் சிதைவிலிருந்து (Semantic Distortion)  விடுவித்து;

அறிவுபூர்வ விவாதங்களை உணர்ச்சிபூர்வ இரைச்சல்களிலிருந்து விடுவித்து, தமிழ்நாடு பயணிக்கும் போக்கினை ஊக்குவிக்க வேண்டும்(கீழே குறிப்பு 1)

குறிப்பு:


1.    ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

2.    ‘The Dravidian movement, initiated by Periyar EVR, imported the western concept of atheism; into Tamil employing the Sanskrit originated Tamil word ‘nAththikam’ – நாத்திகம். But the Sanskrit word nāstika – नास्तिक   had a meaning different from the western concept of atheism, as explained below.

“ Āstika (Sanskrit: आस्तिक āstika; "it exists") and Nāstika (नास्तिक, nāstika; "it doesn't exist") are technical terms in Hinduism used to classify philosophical schools and persons, according to whether they accept the authority of the Vedas as supreme revealed scriptures, or not, respectively. By this definition, Nyāyá, Vaiśeṣika, Sāṃkhya, Yoga, Mīmāṃsā and Vedānta are classified as āstika schools; and some schools like Cārvāka, Ājīvika, Jainism and Buddhism are considered nāstika.[2] The distinction is similar to the orthodox/heterodox distinction in the West.

In non-technical usage, the term āstika is sometimes loosely translated as "theist", while nāstika is translated as "atheist". However, this interpretation is distinct from the use of the term in Hindu philosophy. Notably even among the āstika schools, Sāṃkhya is an atheistic philosophy

The different usages of these terms are explained by Chatterjee and Datta as follows:
In modern Indian languages, "āstika" and "nāstika" generally mean "theist" and "atheist", respectively. But in Sanskrit philosophical literature, "āstika" means "one who believes in the authority of the Vedas" or "one who believes in life after death". ("nāstika" means the opposite of these). The word is used here in the first sense. In the second sense, even the Jaina and Buddha schools are "āstika", as they believe in life after death. The six orthodox schools are "āstika", and the Cārvāka is "nāstika" in both the senses. “ http://en.wikipedia.org/wiki/%C4%80stika_and_n%C4%81stika ‘ ; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

3.   ‘The civilization of man has increased just to the same extent that religious power has decreased.


The intellectual advancement of man depends upon how often he can exchange an old superstition for a new truth. The Church never enabled a human being to make even one of these exchanges ; on the contrary, all her power has been used to prevent them. In spite, however, of the Church, man found that some of his religious conceptions were wrong. By reading his bible, he found that the ideas of his God were more cruel and brutal than those of the most depraved savage. He also discovered that this holy book was filled with ignorance, and that it must have been written by persons wholly unacquainted with the nature of the phenomena by which we are surrounded ; and now and then, some man had the goodness and courage to speak his honest thoughts.’ ; ‘The Gods and other lectures’ by Robert G. Ingersoll ; https://ia802701.us.archive.org/4/items/godsotherlectu00inge/godsotherlectu00inge_bw.pdf

No comments:

Post a Comment