அச்சுறுத்தும் புலிவேடத்தில் 'பார்ப்பன எதிர்ப்பு' ஊளைகள்;
அறிவுபூர்வ விவாத மழையில் கரையும் 'திராவிட' ஊழல் நரிகளின் ஒப்பனைகள்
சுமார்
25 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற உயர்க்கல்வி நிறுவனத்தில் உயர்பதவியில்
இருந்த ஒருவர் ஊழலில் ஈடுபட்டதோடன்றி, தமக்கு கீழ் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல்
தொல்லைகள் கொடுத்து, எல்லை மீறி போனதால், பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது புகார் செய்து
விசாரணை கோரினர். அந்த பெண்கள் பிராமணராகவும், அந்த கிரிமினல் பேர்வழி பிராமணரல்லாதாராகவும்
இருந்ததால்;
'ஒரு
பிராமணரல்லாத நபர்' உயர்பதவியில் இருப்பதை பொறுக்கு முடியாத 'பாப்பாத்திகள்', அவரை
அப்பதவியிலிருந்து அகற்றும் சதியாகவே அக்குற்றச்சாட்டினை எழுப்புவதாக, 'அந்த கிரிமினல்
புத்திசாலி' பெரியார் ஆதரவாளர்களை நம்ப வைத்து, அந்த சிக்கலில் இருந்து தப்பித்தார்.
அந்த காலக்கட்டத்தில் அவ்வாறு ஏமாந்த 'பெரியார் முட்டாள்களில்' நானும் ஒருவனாக இருந்தேன்.
பின் பல வருடங்கள் கழித்து, கல்லூரி ஆசிரியர் கழகத்திலும், பல முறை சிறை சென்ற போராட்டங்களிலும்,
நான் முக்கிய பங்கு வகித்த காலக்கட்டத்தில், ஒரு மகளிர் கல்லூரி பேராசிரியர் மேலே குறிப்பிட்ட
'பார்ப்பன எதிர்ப்பு' சம்பவத்தின் உண்மைகளை விளக்கி, என்னைப் போன்றவர்கள் உண்மையை ஆராயாமல்,
'பெரியார்' போதையில் அறிவுக்கண்களை மூடிக்கொண்டு, கிரிமினல்களை ஆதரித்தது சரியா? என்று
கேள்வி எழுப்பினார்; எனது தவறை ஒத்துக் கொண்டது மட்டுமின்றி, நான் சந்தித்த 'பெரியார்'
கட்சிகளின் முக்கிய நபர்களிடமும் அதை தெளிவுபடுத்தினேன்.
சுமார்
25 வருடங்களுக்கு முன், ஒரு நாள் முற்பகலில் திருச்சி பெரியார் மாளிகையில் நான் மட்டுமே
'குடிஅரசு' இதழ்களை படித்துக் கொண்டிருந்த போது, தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவரும்,
அவருடன் கூட ஒருவரும் குடிபோதையில் வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட வங்கியின் மேலாளராக
உள்ள பிராமணரை கண்டித்து, தி.க சார்பாக தாங்கள் சுவரொட்டி அச்சடித்து, நகர் முழுவதும்
ஒட்ட தி.க அனுமதி வெண்டும் என்றார்கள். நான் அவர்களிடம், "அந்த அதிகாரம் எனக்கு
இல்லை." என்று தெரிவித்து, சென்னை பெரியார் திடலை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி
அனுப்பி வைத்தேன்.
பின்
விசாரித்ததில், அவருக்கும் அந்த வங்கி மேலாளருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினையில்,
அவரைப் பழி வாங்க, 'பார்ப்பன எதிர்ப்பு' என்ற ஆயுதத்தினை அவர்கள் கையாள எண்ணியது தெரிந்தது.
'பார்ப்பன
எதிர்ப்பு' என்பதானது, ஈ.வெ.ரா அவர்கள் காலத்திற்குப் பின், சொந்த பிரச்சினைகளுக்கு
உதவும் 'சுயநல ஆயுதமாக' மாறிய போக்கு வளர்ந்துள்ளதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
‘1944இல்
திராவிடர் கழகம் உருவாகி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் தடம்புரண்டு, உணர்வுபூர்வ
போக்கில் சிக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டாலும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும்,
கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு. ராஜாஜி
உள்ளிட்டு எந்த பிராமணரையும் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தனது கொள்கை ரீதியிலான
பிராமண எதிர்ப்பைப் பெரியார் பயன்படுத்தவில்லை. அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கு
'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' பயன்படும் போக்கானது செல்வாக்கு பெற்றதற்கு,
அந்த 'தடம் புரண்டதானது' எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.
அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கும், தமிழ்வழி வீழ்ச்சிக்கும், கனிவளங்கள்
சூறையாடப்படும் ஊழல் கோரப்பசிக்கும், 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு'
ஆனவை, 'தமிழ் இன உணர்வு' என்ற போர்வையில் பயன்படும் போக்கானது, செல்வாக்கு பெற்றதற்கு,
அந்த 'தடம் புரண்டதானது', எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.’
(http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )
ஈ.வெ.ரா
அவர்கள் தனது அறிவுக்கு பட்டவைகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக எதிர்வாதங்களை முன்வைத்து,
முடிவுரையாக சம்பந்தப்பட்ட நபரை 'பார்ப்பனக் கைக்கூலி' என்று அடையாளம் காட்டுவார்.
அந்த போக்கும் தடம் புரண்டு, அறிவுபூர்வ வாதங்களை எதிர்கொள்ளும் அறிவாற்றல் இல்லாததை
மறைக்க, அந்த முடிவுரையை முன்னுரையாக்கி, துவக்கத்திலேயே 'பார்ப்பனக் கைக்கூலி' என்று
துவங்கி, உணர்ச்சிபூர்வமாக வசைபாடும் போக்கு இன்று அரங்கேறி, 'பெரியார் புழுதிகளை'
பெருக்கி, அந்த புழுதிக் குவியல்களே 'பெரியார் கட்சிகளின்' கல்லறையாகும் போக்கும் துவங்கி
விட்டது.
மேலே
குறிப்பிட்ட பின்னணியில், முகநூலில் வெளிவந்துள்ள
கீழ்வரும் கருத்தானது எனது கவனத்தை ஈர்த்தது.
“Kavignar Thamarai விரும்பியோ விரும்பாமலோ பெருவாரியாக உள்ள 'இந்துக்கள்' என்று அடையாளப் படுத்தப்பட்ட மக்களை வன்மம் கொண்டு எதிர்க்கிறீர்கள். வெகுமக்களைத் திரட்டுவதில்தான் ஓர் இயக்கத்தின் வெற்றி
தோல்வி அடங்கியிருக்கிறது. அவர்களை உங்களை விட்டு விலகி ஓடச் செய்துவிட்டு யாருக்காக
அரசியல் செய்கிறீர்கள் ?.
பெருகிவரும்
கிறித்துவ மதமாற்றம் ( வறுமையைப் பயன்படுத்தி ), இசுலாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றைப் பற்றி பெரியாரின் பேரன்கள் மூச்சுக்காட்டக் காணோம்...
பெருவாரியான
மக்களை அச்சுறுத்தும் இந்த நிலைமைகளைக் கண்டுகொள்ளாமல்
1950லேயே உட்கார்ந்திருந்தால் என்ன பொருள் தோழர்
?.
Kavignar Thamarai தூயதமிழ்வாதமும் எடுபடாது, வெறும் 'இந்துமத எதிர்ப்பு'வாதம் மட்டும் என்பதும் எடுபடாது.
உறைநிலையில்
உள்ள திக காலாவதியாகிக் கொண்டிருக்கிறது.
விழித்துக் கொண்டால் நலம்.
Senkuttuvan Raja இன்னும் விரிவாக சில சொற்கள் வேண்டுகிறேன்
.நன்றி .
Kavignar Thamarai நேரமின்மையால் விரிவாக எழுத முடியவில்லை. இது
நீண்டதொரு விவாதத்திற்கு வழிவகுக்கக் கூடிய கேள்வி. எதைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் குஞ்சும்
குளுவானுமாக முதிர்ச்சியற்ற ஒரு கும்பல் வந்து
இறங்கும். மேலே வந்து பெ.ம வை பார்ப்பனக்
கைக்கூலி என்று அர்ச்சித்தவர் போல. எனவேதான் நான்
ஈடுபடுவதில்லை.
ஆனால்
வாய்க்குமெனில் எதைப் பற்றிப் பேசவும் தயங்க மாட்டேன்.”
மேலே
குறிப்பிட்டவற்றில், கீழ்வரும் தகவலானது மிக மிக முக்கியமானதாகும்.
அறிவு
முதிர்ச்சியற்ற மேலே குறிப்பிட்ட கும்பலை
பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டாமல், தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ புழுதிகள் அடங்காது. 'அந்த புழுதி நீக்கத்தில்'
(Depollution) வெற்றி பெறாமல், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு சாத்தியமில்லை என்பதும், அது தாமதாகுமானால், தமிழ்வேரழிந்த,
(பெரும்பாலும் தரகர்களாகவும், ரவுடிகளாகவும்) தமிங்கிலீசர்களின் நாடாக தமிழ்நாடு மாறி வருவதை, பின்
திருப்ப முடியாததாகி விடும் (irreversible); என்பதும் எனது கருத்தாகும்.
குஞ்சும்
குளுவானுமாக முதிர்ச்சியற்ற ஒரு கும்பல் அறிவுபூர்வ
விவாதங்களை எதிர்கொள்ளும் அறிவாற்றல் இல்லாததை மறைக்க, ‘பார்ப்பனக் கைக்கூலி’ என்று புலிவேடமிட்ட நரிகளாக, 'கர்ஜிப்பதாக' நினைத்துக் கொண்டு ஊளையிடுவதானது;
‘எப்பொருள்
யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு' – திருக்குறள் 423
என்ற வழியில்
வாழும் அறிவாற்றல் இன்றி;
'எப்பொருள்
எவர்வாய் என்றாய்ந்து அவர்பால்
வெறுப்பை
உமிழும் இழிவு'
என்று
மனித இழிவுக்கு இலக்கணமாக வாழ்ந்து வருவதன் சிக்னலாகும்..
சுயலாப
நோக்கின்றி நேர்மையாக வாழும் 'பெரியார்' ஆதரவாளர்களை எல்லாம், மேலே குறிப்பிட்ட (நானும்
அக்காலக்கட்டத்தில் ஏமாந்தது போல) 'பெரியார் முட்டாள்கள்' வரிசையில் இடம் பெறும் வாய்ப்புகளை
கூட்டி, 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' வேடங்களில் 'மனித மிருகங்கள்' வலம்
வரும் நாடாகவும் தமிழ்நாடு உள்ளது.
“அகத்தில்
ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி, புறத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம், மனசாட்சியின்றி, தனது செல்வம், செல்வாக்கு
உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் மனித மிருகங்களின் பிடியிலிருந்து,
தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் விடுவிக்கும் முயற்சியானது, ஆர்வமுள்ள மனிதர்களின் 'அகத்தில்' இருந்து தான் தொடங்க வேண்டும்.
அத்தகைய போக்கினை ஊக்குவிக்கும் அமைப்பானது அந்த போக்கில் தான்
உருவாகும். சாதி/மத/மொழி/வட்டார அடிப்படைகளில் 'உணர்ச்சிபூர்வ' வெறுப்பை வளர்த்து வரும் கட்சிகள் ஒழியாமல், அறிவு பூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படாமல், அது சாத்தியமில்லை.
பிறமொழி
மன்னர்கள் ஆட்சியிலும், காலனி ஆட்சியிலும், பின் 1967 வரையிலும், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள்,
ஆறுகள், கிரானைட், தாது/ஆற்று மணல்,
சந்தனக் காடுகள் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, சீரழிக்கும் - மேலே குறிப்பிட்ட 'முதலில்லா
மூலதன'- கொள்ளையர்களிடம், நேரடியாகவும்/மறைமுகமாகவும் பலன்கள் பெறாத 'சான்றோர்கள்'(?), தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?” (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’ ; http://tamilsdirection.blogspot.in/2016/09/1967.html
)
'எதைப்பற்றிப்
பேச ஆரம்பித்தாலும் குஞ்சும் குளுவானுமாக முதிர்ச்சியற்ற ஒரு கும்பல் வந்து
பார்ப்பனக் கைக்கூலி’ என்று அர்ச்சிக்கும்' ஒரு கூட்டமே;
தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நிகழ்கால சிக்கல்களின் பரிமாணங்களை எல்லாம்,
தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதம் மூலமாக அடையாளம் கண்டு, அறிவுபூர்வ விவாதங்கள் மூலம் தீர்வுகளை தேடி முன்னேறுவதற்கான தடைகளாக உள்ளார்கள்.
அந்த
தடைகளை முன்னெடுக்கும் ‘மேய்ப்பர்களின் வருமான மூலங்களும்’, அது தெரிந்தும், அந்த
'பார்ப்பன எதிர்ப்பு மேய்ப்பர்களின்' தொண்டர் அடிப்பொடிகளாக பயணிப்பவர்களும், அம்பலமாகாமல் வாழ்ந்து வருவதே அந்த 'தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான தடைகளின்'- உணர்ச்சிபூர்வ புழுதிகளின்- பலமாகும்.
தமிழ்நாட்டில்
' பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, எவ்வாறு ஊழலின், ஒழுக்கக் கேடுகளின் கவசமான 'பொதுவாழ்வு வியாபாரமாக' வளர்ந்துள்ளது? என்பது தெரிந்தால் தான், மேலே குறிப்பிட்ட 'அந்த
புழுதி நீக்கத்தில்' (Depollution) வெற்றி பெற முடியும்.
மத்தியில்
பா.ஜ.க ஆட்சிகளில்
இடம் பெற்று 'பலன்களை' அனுபவிக்கும் அளவுக்கு 'பா.ஜ.க'வின் ஆதரவு போக்கு
என்பதை வெளியில் தெரிந்தும், தெரியாமலும்,ஒரு சிறகாகவும்;
அறிவுபூர்வ
விவாதங்களை எதிர்கொள்ளும் அறிவாற்றல் இன்றி, 'பார்ப்பனக் கைக்கூலி என்று அர்ச்சிக்கும்' கூட்டத்தின் 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதை இன்னொரு சிறகாகவும் கொண்டு;
'திராவிட
ஊழல் கழுகுகள்' பயணித்த போக்கின் காரணமாகவே;
பிறமொழி
மன்னர்கள் ஆட்சியிலும், காலனி ஆட்சியிலும், பின் 1967 வரையிலும், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள்,
ஆறுகள், கிரானைட், தாது/ஆற்று மணல்,
சந்தனக் காடுகள் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, அச்சுறுத்தல், கொலை உள்ளிட்ட வழிகளின்
தனியார் சொத்துக்களும் 'கங்கை அமரன் தொடங்கி, நிகழ்காலத்தில் 'சத்யம்' வரை;
'திராவிட
ஊழல் கழுகுகளின்' இரையாகி, அந்த ஊழல் சுனாமி
போக்கிலேயே ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக்கல்வியும், தமிழும் மரணப்பயணத்தில் சிக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது.
அச்சுறுத்தும்
புலிவேடத்தில், தமிழ்நாட்டின் சீரழிவின் கவசங்களாக பயன்பட்டு வந்த 'பார்ப்பன எதிர்ப்பு' ஊளைகள் எல்லாம்;
அறிவுபூர்வ
விவாத மழையில் கரையும் 'திராவிட' ஊழல் நரிகளின்
ஒப்பனைகள் கரையத் தொடங்கியதன் காரணமாக;
'திராவிட
ஊழல் கழுகுகளின்' 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற சிறகின் முறிவும்; ( http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html
)
மேலே
குறிப்பிட்ட ஒப்பனைகளை கரைக்கும் அறிவுபூர்வ விவாதங்கள் எல்லாம், எச்.ராஜா போன்றவர்களின்
உணர்ச்சிபூர்வ இரைச்சல்களையும் மீறி இந்துத்வா ஆதரவு
முகாமில் வெளிப்படத் தொடங்கியதன்
காரணமாக;
இந்துத்வா
எதிர்ப்பு அச்சுறுத்தல் மூலம், பேரம் பேசி பலன்கள் அனுபவிக்க
துணை புரிந்த, ‘பா.ஜ.க'வின் ஆதரவு போக்கு'
என்ற சிறகின் முறிவும்;
ஏற்படுத்தி
வரும் தொகு விளைவின் (Resultant) காரணமாக;
'திராவிட
ஊழல் கழுகுகளின்' வீழ்ச்சியானது, பின் திருப்ப முடியாத
அளவுக்கு (Irreversible)
துவங்கி விட்டது.
ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தின் 'எஞ்சினின்' செயல்பாடு நின்று போனாலும், உரிய முறையில் 'பிரேக்' போடாத வரையில், அதன் ஓட்டம் விளைவிக்கும் சேதங்களை தவிர்க்க முடியாது.
ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தின் 'எஞ்சினின்' செயல்பாடு நின்று போனாலும், உரிய முறையில் 'பிரேக்' போடாத வரையில், அதன் ஓட்டம் விளைவிக்கும் சேதங்களை தவிர்க்க முடியாது.
அது
தெரியாமல், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக
ஒன்றாகி, 'தமிழர்
யார்?' குழப்பத்தில் கூறுபட்ட குழுக்கள் மூலமாக பலகீனமாகி, மாணவர்களிடமும், படித்த இளைஞர்களிடமும் கேலிப்பொருளாகும் அபாயத்தில் 'தமிழர்' என்ற அடையாளம் சிக்கி
வருவது தெரியாமல், 'இந்துத்வா எதிர்ப்பு' போக்கில் உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், அந்த சேதங்களை கூட்டி,
தமிழின், தமிழ்நாட்டின் மீட்சியை தாமதப்படுத்தி வருகிறார்கள்.
பேரத்திற்கான
தேசிய/இந்துத்வா எதிர்ப்பு, பேரம் முடிந்த தேசிய/இந்துத்வா
(காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சிகளில் இடம் பெற்று 'பலன்கள்' அனுபவித்த) ஆதரவு இறக்கைகளில் பயணித்த 'திராவிட அரசியல் ஊழல் எஞ்சினின்' 'மூல செயல்பாடு' நின்று போனாலும்;
(காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சிகளில் இடம் பெற்று 'பலன்கள்' அனுபவித்த) ஆதரவு இறக்கைகளில் பயணித்த 'திராவிட அரசியல் ஊழல் எஞ்சினின்' 'மூல செயல்பாடு' நின்று போனாலும்;
சிறையில்
உள்ள லல்லு பொறாமைப்படும் அளவுக்கு, 'திராவிட லல்லுக்கள்' அடுத்து அடுத்த வழக்குகளில் விடுதலையாகி, இந்தியாவின் 'சட்டத்தின் ஆட்சியையே' (Rule of Law) சவாலுக்குள்ளாக்கி
வரும் சூழலில்;
'காற்றுள்ள
போதே' தூற்றிக்கொள்ளும் 'அரசியல் அமாவாசைகளின்' ஆட்டங்கள் எல்லாம், கையிருப்பில் உள்ள 'ஊழல் பலன்கள்' தீரும்
வரை தொடர்வதையும் தவிர்க்க முடியாது;
'ஆதாய
ஆரசியலில்' சீரழிந்த 'சமூக செயல்நெறி மதகுகள்'
எல்லாம் புத்துயிர் பெறுவதை விரைவுபடுத்துவதன் மூலமே, (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html
);
மேற்குறிப்பிட்ட
'அரசியல் அமாவாசைகளின் ஆட்டங்கள்' விளைவிக்கும் சேதங்களை விரைவில் குறைக்க முடியும்; அறிவுபூர்வ விவாதங்களை எதிர்கொள்ளும் அறிவாற்றல் இன்றி, 'பார்ப்பனக் கைக்கூலி என்று அர்ச்சிக்கும்' கும்பலை எல்லாம் ஓரங்கட்டி. (‘ஜெயலலிதாவின்
‘மர்ம’ மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும்; தமிழ்நாட்டின் ‘சமூக
அதிர்ச்சி வைத்தியமா ? ‘; http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html
)
எனவே
இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமாக, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்க முடியும்.
No comments:
Post a Comment