லைக்கா நிறுவனம் காரணமாக, ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து;
'அந்த சிறுவன்' கைகொட்டி சிரிக்க மாட்டானா?
ரஜினிகாந்தின் இலங்கை
பயணம் ரத்தானதற்கு காரணமான 'லைக்கா' நிறுவனம், தமது நிறுவனத்திற்கும் ராஜபட்சே நிறுவனத்திற்கும்
தொடர்பில்லை என்று அறிவித்தது. அதை மறுத்து கீழ்வரும் தகவலும் வெளிவந்துள்ளது;
‘ராஜபக்சே குடும்பத்தின்
பக்கா பினாமி நிறுவனமே லைக்கா... அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ!’; http://www.newstig.com/news/srilanka/41050/Rajapaksa-family,-the-company's-master-proxy-cumulative-evidence-Laika-...-Behold
மேலே குறிப்பிட்ட செய்தியின்
தலைப்பில், 'பினாமி' என்ற சொல்லானது, அதன் சட்ட ரீதியிலான பொருள் தெரியாமல், பயன்படுத்தப்பட்டுள்ளதா?
என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘What is Benami Property?’; http://www.business-standard.com/article/current-affairs/what-is-benami-property-all-your-questions-answered-116111400263_1.html
)
முள்ளிவாய்க்கால் போருக்குப்
பின், டேவிட் கொமரான் பிரிட்டன் பிரதமராக இருந்து, முதலாவது உலக தலைவராக, இலங்கையில்
போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, உதவிகள் வழங்கியதிலும், 'லைக்கா' நிறுவனம் பெரும் பங்கு வகித்துள்ளது.
(The website says
that David Cameroon’s visit to Jaffna and his statements against the Sri Lankan
government were made on the behest of Subaskaran.; https://ltteagents.wordpress.com/2014/01/09/anti-sri-lankan-david-camerons-ltte-connections-are-exposed/
; Cameron allocated £6m aid to SL after Lankan businessman funded his party - :
http://www.dailymirror.lk/article/Cameron-allocated-m-aid-to-SL-after-Lankan-businessman-funded-his-party--117966.html)
மேலே குறிப்பிட்டதில்
எது சரி? எது தவறு? என்று குழம்ப வேண்டியதில்லை.
ஒன்றுக்கொன்று முரணாக
தெரிந்தாலும், அவை சரியான தகவல்களே.
சர்வதேச அரசியல் பொருளாதார
ஞானம் இல்லாதவர்களுக்கு தான், அவை முரணாக தெரியும்.
டேவிட் கொமரானின் பயணத்தை
எதிர்க்காமல் இருந்து விட்டு, இப்போது ரஜினியின் இலங்கைப் பயணத்தை எதிர்த்தது சரியா?
உலகில் எந்த நாட்டிலும்,
ஆட்சி பொறுப்பில் இருந்த/இருக்கும் அரசியல் தலைவர்களின் குடும்பங்களின் தொழில் வியாபார
முதலீடுகளானவை, அவர்களது அதிகார ஏற்ற, இறக்கங்களோடு தொடர்புடயவையாகும்.
அதே போல், தொழில் வியாபார
நிறுவனங்கள் எல்லாம் எந்தெந்த காலக்கட்டத்தில், யார் யாரை அனுசரித்தால், தங்களுக்கு
அனுகூலம் என்று கருதுகிறர்களோ, அந்த வகையில் புத்திசாலிகளாக செயல்படுபவர்கள் ஆவர்.
ராஜபட்சேயின் அரசியலை
கொள்கை அடிப்படையில் எதிர்ப்பது என்பதற்கும், ஊழல் என்ற அடிப்படையில் எதிர்ப்பதற்கும்
வேறுபாடு உண்டு.
லைக்கா நிறுவனத்தில்
ராஜபட்சே குடும்பத்தினர் பங்குகளை பெறுவதற்கும்,
விற்பதற்கும், எந்த அடிப்படையில் ஆட்சேபணை எழுப்ப முடியும்? ராஜபட்சே குடும்பத்தினர்
எந்தெந்த நிறுவனங்களில் பங்குகளை வாங்குகின்றனர்? விற்கின்றனர்? என்று கண்காணித்து,
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்? அவற்றில் ஊழல் இருந்தால், அதை
இலங்கை குடிமக்கள் எதிர்க்க வேண்டும். ஊழலில் சர்வதேச தொடர்பு இருந்தால், அதையும் விசாரித்து,
தண்டிக்கும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவரின் ஊழல்
எதிர்ப்பதில், அந்த நாட்டு மக்கள் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மாறாக அந்த
நபரின் அரசியலில் மனித உரிமை மீறல்கள் இருக்கும்போது தான், மற்ற நாடுகளில் உள்ளவர்களும்
அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அவ்வாறு மனித உரிமை மீறலுக்கான எதிர்ப்பில், அவரது
குடும்ப தொழில் வியாபார முதலீடுகளையும் சேர்த்து எதிர்ப்பதானது, அந்த மனித உரிமை மீறல்
எதிர்ப்பின் குவியத்தை, சார்பு நோய்க்குள்ளாகி (Subjective Infection), கெடுத்து விடும்.
அதே போல் ஒரு நாட்டின்
அரசானது, இன்னொரு நாட்டின் ஊழல் அரசு துணையுடன், அந்த நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து,
தனது நாட்டின் உற்பத்தி பொருட்களின் சந்தையாக்குவதை, எதிர்த்து, பாதிக்கப்பட்ட நாட்டிலுள்ள
மக்கள், அதை எதிர்த்து போராடுவார்கள்.
அவ்வாறின்றி;
தமிழ்நாட்டில் கடந்த
25 வருடங்களாக தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஏரிகள், குளங்கள், காடுகள் உள்ளிட்ட
கனிவளங்களை, சூறையாடி வரும் ஊழல் கொள்ளைக்காரர்களை எதிர்க்காமலும், அந்த கொள்ளையர்களுடன்
நேசமாகி பலன் பெற்றுக் கொண்டும், இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும்
கட்சிகளும், 'உணர்ச்சிபூர்வ' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் இருப்பது
போல, இலங்கை உள்ளிட்டு உலகில் எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இருப்பதாக தெரியவில்லை. அத்தகையோரில் யார்? யார்?
சுப்பிரமணியசாமியின் 'பொர்க்கி தமிழர்' (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html) தொடர்பான கருத்தை கண்டு கொள்ளவில்லை? ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பவை தொடர்பான அறிவுபூர்வ
விவாதங்கள் அரங்கேற வேண்டாமா? அத்தகையோரில் 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம், எந்த
அளவுக்கு, ஈ.வெ.ரா அவர்களை, 'பெரியார்' சிறையில் சிக்க வைத்து, தமிழ்நாட்டின் சீரழிவிற்கு,
அவரையும் குற்றவாளியாக்கினார்கள்? என்பவை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்களும் அரங்கேற
வேண்டாமா?
வரும் காலத்தில் லைக்காவோ, ராஜபட்சே குடும்பத்தினரோ, 'இன்போசிஸ்', 'டி.சி.எஸ்' போன்ற இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தால், அந்த நிறுவனங்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுமாறு, போராட்டங்கள் நடக்குமா?
தமிழ்நாட்டின் நலன்கள் பற்றியும், இந்தியாவின் நலன்கள் பற்றியும் புரிதலின்றி, உணர்ச்சிபூர்வமாக, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கேடாக, சில அமைப்புகளும், கட்சிகளும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த பகுதியிலும் நடந்ததாக/நடப்பதாக, நான் அறியவில்லை. தமிழ்நாட்டின் படைப்பாளிகள்
எல்லாம், தமிழ்நாட்டில் போக்கை தீர்மானித்த களங்களையெல்லாம், பெரும்பாலும் 'வாழ்வியல்
புத்திசாலித்தனத்துடன்' தவிர்த்ததும், அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
வரும் காலத்தில் லைக்காவோ, ராஜபட்சே குடும்பத்தினரோ, 'இன்போசிஸ்', 'டி.சி.எஸ்' போன்ற இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தால், அந்த நிறுவனங்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுமாறு, போராட்டங்கள் நடக்குமா?
தமிழ்நாட்டின் நலன்கள் பற்றியும், இந்தியாவின் நலன்கள் பற்றியும் புரிதலின்றி, உணர்ச்சிபூர்வமாக, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கேடாக, சில அமைப்புகளும், கட்சிகளும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த பகுதியிலும் நடந்ததாக/நடப்பதாக, நான் அறியவில்லை.
1938 இந்தி எதிர்ப்பு போராட்டம், அதன் போக்கிற்கு நேர்
எதிரான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், அவற்றின் தொடர் விளைவுகளான இந்தியாவிலும்,
உலகிலும் வேறெங்கும் காண முடியாத, மேற்குறிப்பிட்ட
அமைப்புகள் போன்றவற்றையெல்லாம், கதை களமாக கொண்டு, திரைப்படங்கள், நாவல்கள் என ஏதேனும்
உருப்படியான படைப்புகள் வெளிவந்துள்ளனவா? இல்லையென்றால் தமிழில் அசோகமித்திரன், பாலு
மகேந்திரா போன்ற இன்னும் பல, 'புகழ்' பெற்ற
படைப்பாளிகள் எல்லாம் 'எதற்கு வம்பு?' என,
ஒரு 'லக்ஷ்மண் கோடு' தாண்டாமல் தான், 'படைத்து' வந்தார்களா, வருகிறார்களா? அக்கோட்டினை
தொட முயன்ற ஜெயகாந்தன், அதில் 'சங்கமாகி' இழிவுக்கு இலக்கணமானாரா? (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html
) ஜெயமோகனோ, தான் எழுதும் பொருளில் தமக்குள்ள புலமை குறைபாடுகள்
பற்றிய தெளிவின்றி, ஈ.வெ.ராவைப் பற்றி 'அபத்தமாக' எழுதி வருகிறாரா? (http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none.html) இல்லையென்பதற்கு சான்றுகள் எவரேனும் தெரிவித்தால்,
நன்றியுடன், அச்சான்றுகளை திறந்த மனதுடன் அணுகி, மேற்குறிப்பிட்ட கேள்விகளை நெறிப்படுத்திக்
கொள்வேன். இன்றைய இளம் எழுத்தாளர்களில் யார், யார், துணிச்சலுடன், அந்த கோட்டினை அகற்றி, பயணிக்கிறார்கள்?
'ராஜபட்சே எதிர்ப்பு' என்று தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அமைப்புகள், ‘ஐ.நா உள்ளிட்டு உலக அரங்குகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் (தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில்,கட்டுப்பாடின்றி சீனப் பொருட்களை அனுமதித்து, பல தொழில்களை சிதைத்து, லட்சக் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து வரும்) சீனாவை, இது வரை, கண்டிக்காமல்,சத்தற்ற 'காமன்வெல்த் புறக்கணிப்பு', 'கத்தி திரைப்பட எதிர்ப்பு' போன்றவற்றில் 'யார் முதலில்?' என்ற கடும்போட்டியில் 'ஒன்றுபட்டுள்ளார்களா'? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு ; 'தமிழ் ஈழம்' - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark); http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
அதிலும் தமிழ்நாட்டில்
இலங்கை பிரச்சினையானது, எந்த அளவுக்கு பொது வாழ்வு வியாபாரமாகியுள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
‘1980களில் போராளிகளின்
எண்ணிக்கையில், ஆயுத பலத்தில், பண பலத்தில் விடுதலைப் புலிகள் மூன்றாம் இடத்தில் இருந்த
போது;
முதல் இரண்டு இடங்களில்
இருந்த 'புளோட்' தலைவர் உமா மகேசுவரனையும், 'டெலோ' தலைவர் சிரி சபாரெத்தினத்தையும்
'வானளாவ' புகழ்ந்து, அந்த குழுக்கள் சார்பில் வெளிவந்த இதழ்களிலும், நூல்களிலும் எழுதிய
எழுத்தாளர்களிலும், புகழ்ந்த பேச்சாளர்களிலும், யார், யார், அந்த இரண்டு தலைவர்களையும்,
அக்குழுக்களின் போராளிகளையும் விடுதலைப் புலிகள் அழித்த பின், பிரபாகரனை 'வானளாவ' புகழ்ந்து
எழுதினார்கள்? பேசினார்கள்?
அதே போல், முன்பு ஜெயலலிதா
காலில் விழுந்து வணங்கியவர்களில் யார், யார்,
ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா காலில்,
இன்று விழுந்து வணங்குகிறார்கள்?
மேற்குறிப்பிட்ட இரண்டு
போக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டா? ஆக, 'யார் எப்போது அதிகாரத்தில் முதலிடத்தில்
இருக்கிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் வாலாட்டி பிழைப்போம்', என்ற போக்கானது, எப்போது
முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்டத்தில் உள்ளதா?’ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html
) மேலே குறிப்பிட்ட
இரண்டு போக்குகளின் வினோதமான ஒற்றுமை என்னவென்றால், பிரபாகரனை 'மாவீரன்' என்று போற்றிய
வைகோ, இன்று 'வீரமங்கை வேலு நாச்சியாருக்கு இணையானவர் சசிகலா' என்று புகழ்ந்துள்ளார்.
மேலே குறிப்பிட்ட இரண்டு போக்குகளின் வினோதமான ஒற்றுமை
தொடர்பான, எனது கீழ்வரும் ஆய்வினையும் ஏற்கனவே பார்த்தோம்.
‘மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின்
சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;
தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை
எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’ கனவுகளிலும்,
காலனி சூழ்ச்சியில் உருவான 'பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவு(?), திராவிடர்' கனவுகளிலும், வாழுகின்ற உதிரிகளின்
சமூகம் உருவான போக்கானது;
எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;
மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம்
புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப்
போக்கும்;
‘தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப
அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு
காரணங்களால் வெளிப்பட்ட) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப்
பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.
‘அந்த காலக்கட்டத்தில் EPRLF குழுவின் புரவலராக இருந்த கும்பகோணம் ஸ்டாலினை நான் சந்தித்தபோது, "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை. 'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்று ஆணவத்துடன் பேசினார். மேலே குறிப்பிட்ட பொம்மலாட்டத்தில், EPRLF-ம், அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்களிப்பும், சுவடின்றி மறைந்த போனது ஏன்? என்பது பற்றி, ஸ்டாலினோ, அவரது ஆதரவு 'பெரியார்' கொள்கையாளர்களோ ஆய்வு செய்தார்களா? அல்லது அந்த ஆய்வின் அவசியம் தெரியாமல், 'தனித் தமிழ்நாடு' போதையில், அவர்களில் யார், யார், EPRLF-ஐ அழித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறினார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ ( ‘'உதவிகளும்', ‘தூண்டில் மீன்களும்’ ; சீமானும், ராகவா லாரன்சும்; அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும், வெற்றி பெற வாய்ப்புண்டா?; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_27.html )
காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலமாகவே,
இந்தியாவில் காலித்தனங்கள் அரங்கேறின, என்பதை விளக்கிய ஈ.வெ.ரா அவர்கள், தமிழர்கள்
பிரச்சினைக்கு 'வன்முறை மூலம் தீர்வு கிட்டாது; மாறாக பாதகமான எதிர்விளைவுகளே ஏற்படும்'
என்று ஏன் எச்சரித்தார்?
ஈ.வெ.ரா மறைவிற்குப் பின், அந்த நிலைப்பாடுகளை,
'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு அறிவுபூர்வமாக உட்படுத்தும் முயற்சியில், எந்த
'பெரியார்' கொள்கையாளர்களும் ஈடுபட்டார்களா? இனியும் ஈடுபடவில்லையென்றால், கால ஓட்டத்தில்
அந்த கட்சிகள் எல்லாம் சருகாகி, உதிர்வதை தவிர்க்க முடியுமா?
பின் எந்த அடிப்படையில் 'அறிவுக் கண்களை'
மூடிக்கொண்டு, 'உணர்ச்சிபூர்வமாக' விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார்கள்?
அவ்வாறு ஆதரித்தது சரி என்றால், ஈ.வெ.ரா வின் மேலே குறிப்பிட்ட’ 'வன்முறை தவிர்ப்பு’
நிலைப்பாடானது, இந்த காலத்திற்கு சரி வராது' என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டாமா? பிரபாகரன்
அடுத்து அடுத்து தவறுகள் புரிந்ததை, அறிவுபூர்வமாக அவ்வப்போது விமர்சித்திருந்தால்,
முள்ளிவாய்க்கால் அழிவானது, அரங்கேறியிருக்குமா?
மேலே குறிப்பிட்டுள்ளவாறு, மறைந்த
கும்பகோணம் ஸ்டாலின் வெளிப்படுத்திய, "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை.
'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்ற போக்கில் தான் இன்றும் கொளத்தூர்
மணி, கோவை இராமகிருட்டிணன் போன்றவர்கள் எல்லாம் பயணிக்கிறார்களா? அந்த போக்கிலிருந்து
விலகி, அறிவுபூர்வமாக பயணிக்க முயலும் திண்டுக்கல் முருகானந்தம் போன்றவர்களின் முயற்சிகள்
எல்லாம், உரிய ஆதரவின்றி, 'திருச்சி பெரியார் மையம்' போல மறைந்து போகுமா? அகத்தில் சுயலாப கணக்குடன், 'திருச்சி பெரியார் மையத்தில்' செயல்பட்டு, பின் சசிகலா
குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'பெரியார் சமூக கிருமிகளாக'வும், 'கிருமி
எடுபிடிகளாகவும்', வலம் வருபவர்கள் எல்லாம், அது போன்ற முயற்சிகள் வெற்றி பெற அனுமதிப்பார்களா? ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில்
எண்ணற்றோரும், 'சுயலாப நோக்கின்றி' உழைத்ததும், தியாகங்கள் புரிந்ததும், 'பெரியார்
சமுக கிருமிகளும்', 'கிருமி எடுபிடிகளும்', 'பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி' என்ற முகமூடிகளுடன்,
தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும், சீரழிக்கும் போக்கிற்கே 'உரமானதா'?
இந்திய 'அமைதிப்படையை' எதிர்க்க, அன்றைய இலங்கை பிரதமர் பிரேமதேசா வழங்கிய ஆயுதங்களை பெற்ற விடுதலைப் புலிகள், அந்த வாய்ப்பையாவது சுமூக தீர்வுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை? (http://defencewire.blogspot.in/2008/02/self-determination-movements-after.html )
ராஜபட்சே மிக குறைந்த வாக்கு வேறுபாட்டில் இலங்கை அதிபராக, அந்த தேர்தலில், விடுதலைப் புலிகள் உதவவில்லையா? ( https://www.colombotelegraph.com/index.php/messing-up-on-mahinda-michael-roberts-on-eelam-war-iv/ )
அரசியல் ஆயுதமாக வன்முறைப்போக்கை
கைவிடும் வரை, விடுதலைப்புலிகளை வேட்டையாடப் போவதாக, அமெரிக்க அரசு அறிவிக்கவில்லையா?
(‘The United States has said it would continue
to "hunt down" the LTTE and force it to give up the use of violence
as a political weapon.’; http://timesofindia.indiatimes.com/world/us/US-to-continue-pressure-on-LTTE/articleshow/26941.cms
)
அமெரிக்கா மட்டுமின்றி,
சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், செக்கோஸ்லோவாக்கியா, உக்ரேன் ஆகிய நாடுகளின் அரசுகள்
எல்லாம் விடுதலைப் புலிகளை ஒழிக்க, ராஜபட்சே அரசுக்கு உதவவில்லையா? (http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=122770
)
டிஜிட்டல் யுகத்தில்
பணமும் செல்வாக்கும் இருந்தால், உலகில் எந்த தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவையும் பெற
முடியும் என்றுள்ள சூழலில்;
'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு', 'பிரபாகரன் சாகவில்லை', 'தமிழ் ஈழம் கோரி ஆயுதப்போராட்டம் தொடரும்' என்பது போன்ற ஊடக தகவல்கள் எல்லாம், இலங்கையின் வடக்கில், தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை கூட்டுமா? குறைக்குமா? இனச்சிக்கலை தீர்க்க உதவுமா? இன்னும் மோசமாக்குமா? அவ்வாறு மோசமாக்கும் முயற்சிகளுக்கு துணை போகும் 'தமிழ்நாட்டு பொது வாழ்வு வியாபாரிகளாக', நாமோ, நமது சமூக வட்டத்தில் எவருமோ இருக்கிறோமா?
‘உலகில் எந்த அரசும், மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமலும், சுயலாப நோக்கின்றியும், ஆட்சியில் இல்லை என்பதும், ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்டு இன்னும் பல நாடுகளை மீறி, ஐ.நா செயல்பட்டதில்லை என்பதும், தொடர்பான சர்வதேச அரசியல் பொருளாதார ஞானமின்றி, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான போராட்டம்;
போன்ற போராட்டங்கள் எல்லாம்
தமிழ்நாட்டில் அரங்கேறி வருவதானது, யார், யாருக்கு, என்னென்ன பலன்களை தரும்? என்பதும்
ஆய்விற்குரியதாகும். மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து, நீண்ட காலம் சிறையில் இருந்து,
மனித உரிமைக்கான நோபெல் பரிசையும் பெற்று, இன்று தேர்தல் வழியில் ஆட்சி அதிகாரத்தில்
இருப்பவர் ஆங்க் சான் சூ கி ஆவார். மியான்மரில் ராகின் மாநிலத்தில் வாழும் ரோகிங்யா
முஸ்லீம்கள் மீது இராணுவத்தினர் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்கள் புரிந்தது
தொடர்பான, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மனித உரிமை விசாரணை முடிவை, மியான்மர் அரசு
எதிர்த்துள்ளது. (‘Myanmar rejects UN probe of crimes against Rohingya Muslims’;
http://www.newindianexpress.com/world/2017/mar/25/myanmar-rejects-un-probe-of-crimes-against-rohingya-muslims-1585752.html
) ‘ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html
)
சுயலாப நோக்கின்றி, உலகில்
எந்த அரசும் யாருக்கும் உதவி செய்வதில்லை. மனித உரிமை மீறலையும் எதிர்ப்பதில்லை. அந்த
அணுகுமுறையில் தான், 'உதவி' என்ற பெயரில், என்.ஜி.ஓக்களை (NGOs) உருவாக்கி, பல்வேறு
சுயலாபங்களுக்காக, அந்நிய அரசுகளும், அமைப்புகளும் செயல்பட்டு வருவதும், ஊடகங்களில்
அம்பலமாகி வருகின்றன.
'ராஜபட்சே எதிர்ப்பு'
என்று தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அமைப்புகள்;
‘இந்திராகாந்தி அரசு,
'பெரியார்' கட்சிகள், 'சிவசேனா', வெளிநாட்டு சக்திகள், என்று எந்த பக்கத்திலிருந்தும்
ஆதரவு வந்தாலும், 'உண்மையான' ஆதரவு எது? ‘தூண்டில் மீன்’ எது?
என்று பிரித்தறியும் புரிதல் இன்றி, பிரபாகரன் பயணித்து, முள்ளிவாய்க்காலில், 'தனி
ஈழ கோரிக்கையை' சமாதியாக்கிய பின்னும், அறிவுபூர்வ விமர்சன பார்வையின்றி, உணர்ச்சிபூர்வமாகவே
தொடர்ந்து, அவர்கள் எல்லாம் பயணிக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html
)
‘1944இல் 'பெரியார்'
ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும்
தகவல் வருமாறு:
1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியது, பிரபாகரன் திசை திரும்பியது தொடர்பாக, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையில் நான் வெளிப்படுத்தி வருபவை, தொடர்பான விவாதங்கள், அறிவுபூர்வமாக அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால், தமிழ்நாட்டிற்கு பெருங்கேடாக, அது முடியும். எனது பதிவுகளில் உள்ள சான்றுகளில் குறைபாடுகள் இருந்தாலும், வாதத்தில் குறைபாடு இருந்தாலும்; அவற்றை சுட்டிக்காட்டினால், திறந்த மனதுடன் பரிசீலித்து, சரி என்றால், நன்றியுடன் திருத்திக் கொள்வேன்.
1967க்கு முன், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கியவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவாகவும், அலுவலகங்களிலும், சமூகத்திலும் சற்று தலை குனிந்தே வாழ்ந்ததையும், நான் அறிவேன். 1967க்குப் பின், பொதுவாழ்வு வியாபாரமானது முளை விட்டு வளர்ந்த போக்கின் ஊடேயே, இன்று கட்சித் தலைவர்களை போலவே, அரசு உயர்மட்ட அதிகாரிகளும், ஊழல் எலும்புத் துண்டு விநியோகம் மூலம் 'வாலாட்டும் நாய்களுடன்', 'தலை நிமிர்ந்து' வலம் வருகிறார்கள். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அந்த துறை அமைச்சரை 'கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து', அந்த செல்வாக்கை, அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை; தமிழ்நாடு 'Tamilnadu Nursing Council' தொடர்பான, எனது அனுபவங்கள் மூலம் அறிந்தேன். அவ்வாறு 'தலை நிமிர்ந்து' வலம் வந்த/வரும் கூட்டத்தினருடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலி ஆதரவாளர்களாக, 'தலை நிமிர்ந்து' வலம் வருபவர்களில் யார்,யார், 'எந்தெந்த வழிகளில் கூட்டு சேர்ந்து', பயணிக்கிறார்கள்? என்பதும், அந்த அனுபவங்களில் அடக்கம். இது போன்ற அன்பவங்கள் அடிப்படையில், "எனது 'சுயசரிதை' எழுதினால், திராவிட இயக்கத்தால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட பாதகங்களின் சமூக செயல்நுட்பத்தை விளங்கிக் கொள்ள, அது துணை புரியும். அந்த எண்ணமும் உள்ளது." (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) தமிழ்நாட்டில் எந்த கட்சிக்காரருக்கும், எவரும் வீடு கொடுக்க தயங்குவார்கள் என்பது தெரியாமலும், தி.மு.கவில் இருக்கும் ஒரு பிரபலமான பிரமுகரான முஸ்லீமுக்கு சென்னையில் வீடு கிடைக்கவில்லையென்றால், அது அந்த கட்சிக்கே அவமானம் (கொள்கை அடிப்படையில் உள்ள பா.ஜ.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் இவ்வாறு இருக்குமா?) என்பது தெரியாமலும், இன்று சென்னையில் அந்தந்த மதக்காரர்கள் அந்தந்த மதத்தினருக்கே (அதிலும் சைவம், அசைவம், சாதி (இந்து), சியா, சுன்னி, உருது, தமிழ் (முஸ்லீம்), கத்தோலிக்க, பிராட்டஸ்டண்ட், தெலுங்கு, மலையாளம் (கிறித்துவ) உட்பிரிவினருக்கே) சென்னையில் வீடு தர விரும்புகிறார்கள் என்பதும் தெரியாமலும், இது போன்ற போக்குகள் எல்லாம் 1967க்குப்பின் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் அரங்கேறியதா? என்ற ஆய்வு பார்வையில்லாமலும், 'எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?' என்ற தலைப்பில், 'தமிழ் இந்து' இதழில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள கட்டுரையானது, 'இந்துத்வா எதிர்ப்பு' அறிவுஜீவிகளின் 'உணர்ச்சிபூர்வ' அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ள, ஒரு 'சமூக சிக்னலாகும்'. (http://tamil.thehindu.com/opinion/columns/ ) தமிழ்நாடானது இஸ்லாம் திவிரவாதிகளின் 'சரணாலயம்' ஆகி வரும் சூழலில், முன்பின் தெரியாத முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களே வாடகைக்கு வீடு தர தயங்கினாலும் வியப்பில்லை. (‘TN SAFE HAVEN FOR ISLAMIST TERRORISTS’; http://www.dailypioneer.com/nation/tn-safe-haven-for-islamist-terrorists.html ) நாத்தீகராக வாழ்ந்த “பாருக் கொலை செய்யப்பட்டப்ப அவனது சடலத்துடன் மயானம் சென்றவர்கள் 100 பேர். அதில் பெரும்பாலோர் திராவிட அமைப்புகளை சேர்ந்த இந்துக்கள்... முஸ்லீம் பயங்கரவாதி அப்துல் ஓசிர் கோவை ஜெயிலில் செத்தப்ப வீட்டுக்கு வந்த அவனது சடலத்துடன் பயணித்தவர்கள் 10000 பேர்...” ( ‘'சக மனிதனை' பாரபட்சமின்றி நேசிக்கும் விழிப்புணர்வைத் தூண்டி; ஃபாருக் கடைசி பலியாக இருக்கட்டும்’; http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_21.html )
தமிழ்நாடாக இருந்தாலும், உலகில் எந்த பகுதியாக இருந்தாலும்;
அந்த சமூகத்தில் பொது அரங்கிலிருந்து (Public Domain), பொது வாழ்வு வியாபாரிகளை வெளியேற்றும் சமூக சூழலின்றி, மீட்சி அடைய முடியாது. 'பணம் சம்பாதிக்க' நாய்களாகவும், அதே காரணத்தால், 'புலமையை' அடையாளம் கண்டு மதிக்கும் அறிவில்லாத கழுதைகளாகவும், தமிழர்களில் பலர் வளர்ந்து வரும் போக்கிலிருந்தும், தமிழ்நாடு தப்பிக்க முடியாது. உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமே, அந்த மீட்சிக்கான சமூக சூழலை வளர்க்க முடியும். பொதுவாழ்வு வியாபாரத்தை அம்பலப்படுத்தி, சூது கவ்வும், ஜிகிர்தண்டா, சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, கோலிசோடா போன்ற இன்னும் பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெற்று வருவதும், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட வெற்றியும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடன், மேற்குறிப்பிட்ட மீட்சிக்கான சமூக சூழலை உருவாக்கி வருகிறது.
இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் சீனா காலூன்றி வரும் பின்னணியில்;
முள்ளிவாய்க்கால் போருக்கு
முன்னும், போரின் போதும், போருக்குப் பின்னும், சீனா ராஜபட்சேயை ஆதரித்து வருவதை கண்டிக்காமல்,
இந்திய அரசை மட்டுமே கண்டித்து, இந்திய இலங்கை உறவை கெடுத்து, தமிழ்நாட்டில் போராட்டங்கள்
நடத்தி வரும் கட்சிகள் எல்லாம், இலங்கையை இந்தியாவின் பகை நாடாக, சீனாவின் எடுபிடியாக
மாற வேண்டும், என்று விரும்புகிறார்களா?
எதிர்காலத்தில் இந்தியாவிற்கும்
சீனாவிற்கும் போர் நடந்தால், அதில் தென் தமிழ்நாடு இன்னொரு முள்ளிவாய்க்காலாக மாற வேண்டும்
என்று விரும்புகிறார்களா?
அதே போல், நோபெல் பரிசு
பெற்ற, உலகம் மதிக்கும் புத்த தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்குள் அனுமதிக்க, இலங்கை அரசு
ஏன் மறுத்தது? தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இணக்கத்திற்கு அந்த பயணம்
உதவினால், இனப் பிரச்சினையை வைத்து, சீனா காலூன்றி வருவது தடைபடும் என்ற அச்சமே, அதற்கு
காரணமா? (https://www.tibetsun.com/opinions/2016/07/11/sri-lankas-hostile-attitude-towards-dalai-lama
) லைக்கா எதிர்ப்பு கட்சிகள் எல்லாம், இனியாவது, தலாய்லாமா இலங்கை செல்ல அனுமதி மறுக்கும்
இலங்கை அரசை கண்டிப்பார்களா? இல்லையென்றால், இனப்பிரச்சினை தீர்வதை, அக்கட்சிகள் விரும்பவில்லையா?
என்பது தொடர்பான விவாதங்கள், அறிவுபூர்வமாக அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால், தமிழ்நாட்டிற்கு பெருங்கேடாக அது முடியும்.
என்பது தொடர்பான விவாதங்கள், அறிவுபூர்வமாக அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால், தமிழ்நாட்டிற்கு பெருங்கேடாக அது முடியும்.
எழுத்தாளர் வாஸந்தி எழுதியுள்ள
'காயமே இது பொய்யடா!' (தி இந்து) கட்டுரை தொடர்பாக, நான் வெளியிட்ட பதிவில், கீழ்வரும்
பகுதி உள்ளது.
‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில்
எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!'
என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;
ஜெயலலிதாவின் 'மர்மமான'
மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும்,
இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும்
பலர் இருக்கலாம்.
ஆனால் சாதாரண மக்களிடையிலும்,
குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக்
கொண்டிருக்கிறது. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes )’(http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html
) மாணவர்களும், இளைஞர்களும்
'கை கொட்டி சிரிப்பது', இணையத்தில் தொடர்ந்து வெளிவருகிறது; 'மென் சக்தியின்'
(Soft Power) வலிமையில் அதிர்ச்சி வைத்தியமாக,
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் அளவுக்கு. (http://tamilsdirection.blogspot.in/2017/03/soft-power.html
)
அவ்வாறு கை கொட்டி சிரிக்கும்
வரிசையில், லைக்கா நிறுவனம் காரணமாக, ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தானது, இடம் பெற்றாலும்
வியப்பில்லை.
'ராஜபட்சே எதிர்ப்பு'
என்ற பெயரில், இதுவரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் போராட்டங்கள்
அடிப்படையில்;
நிகழ்கால சர்வதேச அரசியல் அரங்கில், 'இரட்டை வேட'
போக்குகளுடன் நடைபெற்று வரும் மனித உரிமை, போர்க்குற்ற விசாரணை நாடகங்களின் பின்னணியில்;
ஒரு நகைச்சுவை படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கலாம்;
ரஜினியே அதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கலாம்.
No comments:
Post a Comment