தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இன்னொரு திண்டுக்கல் இடைத் தேர்தலாக';
ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டு பொதுவாழ்வில் 'அந்த மூச்சுத் திணறலுக்கு' எதிரான ஜன்னல் திறக்கிறதா?
‘இயற்பியலில் (Physics), வளையும் தன்மையுள்ள (Elastic) பொருட்களின் வளையும் தன்மைக்கும், 'மீட்சி எல்லை' (Elastic Limit) என்று ஒன்று உண்டு. அதற்கு மேலும் வளைத்தால் அப்பொருள் உடைந்து விடும்; அல்லது அந்த எல்லையை நெருங்கும் போது, மீட்சி விசையும் பெருமமாகி, தம்மை பிடித்து வைத்திருக்கும் கரங்களில் இருந்து, 'திமிறி' வெளியேறி விடவும் வாய்ப்புண்டு.
தமிழ்நாட்டில் அரசியல் இயற்பியலில் (Political Physics), 'சுயலாப' நோக்கில் ஜெயலலிதாவை, 'வளைந்து' வணங்கி வந்தவர்களில், 'தமது வளைவிற்கு' எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால், 'திமிறி' வெளியேறி, தி.மு.கவில் சேர்ந்து, அக்கட்சித் தலைவருக்கு 'வளைந்து' பலன் பெற்றவர்களும் இன்னும் அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலில் 'எஜமானருக்கு' துணையாக எவ்வளவு காலம் இருந்தாலும், எஜமானரின் மறைவிற்குப் பின், 'சூழ்ச்சிகரமாக' அந்த எஜமானர் இடத்தை அந்த துணையாள் பிடித்தாலும்;
தமது 'வரை எல்லைகள்'(limitations) தெரியாமல், அந்த எஜமானரின் கட்டமைப்பை(Structure) 'வளைத்தால்', அந்த கட்டமைப்பே அந்த துணையாளின் 'சமாதி' ஆகிவிடும், என்பதை நிரூபிக்கும் வகையில், சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ ( ‘நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட ‘; http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html )
மேலே குறிப்பிட்ட பதிவில், கீழ்வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”இதற்கு முன்பு பலரும் 'காலில் விழும் கட்சி', 'அடிமைகள்' 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாத கட்சி என்றும் வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, கேலி பேசப்பட்ட கட்சியிலிருந்து இத்தகைய போர்க் குரல் வெளிவந்திருப்பது தமிழகத்தில் செயல்படும் 'உட்கட்சி ஜனநாயகம்' இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ள கட்சிகளுக்குமே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பேட்டி என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.”
(‘ஓபிஎஸ் 'கெத்து' பேட்டியும் ஓர் உளவியல் பார்வையும்!’- முத்துக்குமார்; http://tamil.thehindu.com/opinion/blogs/ & http://tamil.oneindia.com/news/tamilnadu/we-must-prevent-the-mafia-from-capture-the-power-the-state-273736.html )
‘'நேற்று வரை குனிந்திருந்தவர்
தானே, ஓபிஎஸ்' என்று கேலி பேசுபவர்கள் எல்லாம், 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள்
ஆவர்.
'நேற்று வரை குனிந்திருந்த
ஓபீஸ், இன்று நிமிர்ந்ததற்கு, அவரின் அகத்தில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன? என்பது
அவரின் மனசாட்சிக்குத் தான் தெரியும்.
ஆனால், புறத்தில் ஜல்லிக்கட்டு
ஆதரவு போராட்ட வெற்றி உள்ளிட்டு, ஆக்கபூர்வமாக வெளிப்பட்டுள்ள சமூக விசைகளின்
(Social Forces) செல்வாக்கின் துணையின்றி, சமூக அளவில் ஓபிஎஸ் நிமிர்ந்திருக்க முடியுமா?
அகத்தில் உரிய மாற்றங்களின்றி, புற சமூக விசைகளின் செல்வாக்கில், ஓபிஎஸ் நிமிர்ந்திருந்தால்,
அவ்வாறு நிமிர்ந்தது நீடிக்குமா?
ஓபிஎஸ் மட்டுமின்றி,
தமிழ்நாட்டில், பணம் சம்பாதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்கள்
எல்லாம், அவ்வாறு குனிந்திருப்பதானது, 'சமூக அவமானம்' என்று உணரும் அளவுக்கு;
மேலே குறிப்பிட்ட சமூக
விசைகளின் வளர்ச்சிக்கு, நாம் எவ்வாறு பங்காற்ற முடியும்? என்ற நோக்கில்;
'கடந்த கால அடிமைகளாக'
வாழாமல், நிகழ்காலத்தில் சுயமரியாதையுடன் காலூன்றி, அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள வருங்காலம்
நோக்கி, வாழ்பவர்கள் எல்லாம், பங்களிப்பார்கள்.
‘காலில் விழுவதையும், ஆடம்பர பேனர்கள் வைப்பதையும் கண்டித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், இன்றைய முதல்வர் தேசிய கொடி ஏற்றிய குடியரசு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வெறுப்பவர்களில் பலரும் ஆதரிக்கத் தொடங்கும் அளவுக்கு, 'அரசியல் நாகரீகத்துடன்', தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் திசைக்கு எதிரான, 'அரசியல் தற்கொலை' திசையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை அவமதித்து, சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலாவின் "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்( Political Science) புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் 'ஓபிஎஸ் நிகழ்வு' ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது.’ (
என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில், பார்த்தோம். 'ஓபிஎஸ் நிகழ்வு' ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது, தமிழ்நாட்டு அரசியலில் அனைத்து கட்சிகளுக்கும் சவாலாக, 'சத்தமில்லாமல்' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டு அரசியலில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளிலும், குழு அரசியலில், அக்கட்சிகள் 'மூச்சுத் திணறலில்' சிக்கி, பயணிப்பது தொடர்பான தகவல்கள் எல்லாம் ஊடகத்தில் வெளிவந்துள்ளன.
1944இல் தொடங்கி, மேலே குறிப்பிட்ட 'மூச்சுத்திணறலில்' (Suffocation) வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு அளவுகளில் பயணித்து, அரசியல் கட்சிகள் எல்லாம், 'உச்சக்கட்ட மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகியுள்ள சூழலில்;
எனது பார்வையில், முதல்முறையாக, 'அந்த மூச்சுத் திணறலுக்கு' எதிரான ஜன்னல் திறந்து, 'இயல்பான சுவாசமானது' அரங்கேற தொடங்கியுள்ளதா? என்ற வியப்பையூட்டும் கேள்வியை, கீழ்வரும் செய்தி எழுப்பியுள்ளது.
“‘தங்களது திட்டம் குறித்து மைய மண்டபத்தில் ஆலோசித்துக் கொண்டிருந்த, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்களிடம் வந்த இவர்கள், சமாதானம் பேச ஆரம்பித்தனர்.'நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள் நாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், அங்கு நாம், வேறு வழியின்றி எதிரெதிர் துருவத்தில் நிற்கிறோம். அதை பார்லிமென்டிலும் காட்ட வேண்டுமா. நமக்குள் ஏற்பட்ட பிளவு வெளியில் தெரிய வேண்டாமே' என, சசி அணி, எம்.பி.,க்கள் பரிதாபமாக கூறினர்.
அதை ஏற்க மறுத்த, ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள், 'அம்மாவின் மரணம் குறித்து தான் நியாயம் கேட்கிறோம். இதில் தவறே இல்லை. நீங்களும் அம்மாவால் உருவாக்கப் பட்டவர்கள் தான். உங்களுக்கு மனசாட்சி இருந்தால், எங்களுக்கு நீங்களும் ஆதரவு தர வேண்டும். அது முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. எங்களை தடுக்காதீர்கள்' என்று கூறினர். வேணுகோபாலின் சமாதானம் பயனளிக்க வில்லை என்பதை, மற்ற எம்.பி.,க்க ளோடு சேர்ந்து தம்பிதுரையும் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தார்.
லோக்சபா ஆரம்பித்ததும் நாமக்கல், எம்.பி., சுந்தரம் தலைமையில், எட்டு எம்.பி.,க்களும் கோஷங்கள் போட ஆரம்பித்தனர். 'ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, கோஷம் போட்டனர், அதோடு, ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டிருந்த, ஜெ., உடலின் போட்டோக்களை பெரிய அளவில் பிடித்தபடி நின்றனர். இதற்கு சசி அணி, எம்.பி.,க்கள் சிறியளவில் எதிர்ப்பு தெரிவித்த படி நின்றனர். தம்பிதுரையும், வேணுகோபாலும் செய்வதறியாது திகைத்துப் போய் இருந்ததை காண முடிந்தது. ( http://www.dinamalar.com/news_detail.asp?id=1727674 )
சசிகலாவை போல, சசிகலா வழியில் தினகரனைப் போல, இன்னொரு ஜெயலலிதாவாக நடப்பதை தவிர்த்து, தம்மை நோக்கி வருபவர்களை தோழமையுடன் அரவணைத்து ஓபிஎஸ், தமிழக அரசியலில், நம்பமுடியாத 'தென்றலாக', வெளிப்பட்டு, பயணித்து வருவதும்;
மேலே குறிப்பிட்ட செய்தியில், 'மூச்சுத் திணறலுக்கு எதிரான ஜன்னல் திறந்து வருவதும்', ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, என்பது எனது ஆய்வு முடிவாகும். தம்மையும் 'இன்னொரு ஜெயலலிதாவாக' கருதி, காலில் விழச்செய்த சசிகலாவை விட்டு; 'தன்மானம்' மீட்பு உணர்வில், அவ்வாறு விழுந்தவர்கள் எல்லாம், ஓபிஎஸ் அணி நோக்கி மாறும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறினால் வியப்பில்லை; தேர்தலில் வாக்குகளை
'ஈர்த்த' ஜெயலலிதாவின் இடத்தில், வாக்குகளை 'விரட்டுபவராக' சசிகலா இருப்பது நிரூபணமாகும்
போக்கில்.
'வழிபாட்டு போக்கானது' தமிழக மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் உள்ளாகியுள்ளதை, எப்படியோ தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உணர்ந்து, திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்;
அது அவரைத் தாண்டி, கீழ் நோக்கி அரசியல் விரவலுக்கு (Political Diffusion) உள்ளானதாக தெரியவில்லை. ஏற்கனவே பயணித்தது போலவே, மாவட்டங்கள், ஒன்றியங்கள் எல்லாம், தி.மு.கவில் பழைய போக்கிலேயே பயணித்து வருவதாக தெரிகிறது. டிஜிட்டல் யுகத்தில்,
அப்பொல்லோவில் 'மர்மமான' முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடங்கி, மக்கள்
பார்வையில் அது குவியமாக தொடங்கிய, மறுவாரம் முதலே;
இன்று ஊடகங்களில் வெளிப்படும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பெரும்பாலான கேள்விகளை, எதிர்க்கட்சித்தலைவரான ஸ்டாலின், அப்போதே எழுப்பத் தொடங்கியிருந்தால்;
இன்று ஊடகங்களில் வெளிப்படும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பெரும்பாலான கேள்விகளை, எதிர்க்கட்சித்தலைவரான ஸ்டாலின், அப்போதே எழுப்பத் தொடங்கியிருந்தால்;
சுயலாப நோக்கின்றி ஜெயலலிதாவை நேசித்த எண்ணற்ற நடுத்தர,
ஏழை மக்களின் மனங்களில் அவர் இடம் பிடித்து, இன்று 'சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேறாமல்,
தி.மு.கவிற்கு எதிர்பாராத பலன் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். மாறாக ஸ்டாலினும்
மற்ற தலைவர்களை போலவே அப்பொல்லோ சென்று, கண்ணாடி வழியாக கூட ஐ.சி.யூவில் இருந்த ஜெயலலிதாவை
பார்க்க்காமல் திரும்பியதும், ராஜாத்தியும் கனிமொழியும் சசிகலாவை சந்தித்ததும், ஊடக வாயிலாக, தி.மு.கவை 'அந்த' குவியத்திலிருந்து
ஒதுக்கி, ஓரங்கட்டி விட்டதா? என்ற கேள்விக்கும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விடை
கிடைக்கலாம். அப்பொல்லோவில் நுழைய விடாமல் சசிகலா தடுத்ததாக கூறிய
தீபாவும், ஜெயலலிதாவின் உறவினர் என்ற அடிப்படையில், விசாரணை வேண்டி நீதிமன்றத்தை நாடாமலும்,
ஆளுநரிடம் கூட மனு கொடுக்காமலும், அதே தவறை செய்து, இன்று ஓபிஎஸ் குவியமாகியுள்ள போக்கில்,
ஓரத்தில் ஒதுங்கும் போக்கு தெரியாமல், சசிகலாவைப் போலவே, இன்னொரு ஜெயலலிதாவாக முயன்று, வீழ்ச்சி திசையில் பயணிக்கிறார்.
1980களில் போராளிகளின்
எண்ணிக்கையில், ஆயுத பலத்தில், பண பலத்தில் விடுதலைப் புலிகள் மூன்றாம் இடத்தில் இருந்த
போது;
முதல் இரண்டு இடங்களில்
இருந்த 'புளோட்' தலைவர் உமா மகேசுவரனையும், 'டெலோ' தலைவர் சிரி சபாரெத்தினத்தையும்
'வானளாவ' புகழ்ந்து, அந்த குழுக்கள் சார்பில் வெளிவந்த இதழ்களிலும், நூல்களிலும் எழுதிய
எழுத்தாளர்களிலும், புகழ்ந்த பேச்சாளர்களிலும், யார், யார், அந்த இரண்டு தலைவர்களையும், அக்குழுக்களின்
போராளிகளையும் விடுதலைப் புலிகள் அழித்த பின், பிரபாகரனை 'வானளாவ' புகழ்ந்து எழுதினார்கள்?
பேசினார்கள்?
அதே போல், முன்பு ஜெயலலிதா
காலில் விழுந்து வணங்கியவர்களில் யார், யார்,
ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா காலில்,
இன்று விழுந்து வணங்குகிறார்கள்?
ஏற்கனவே ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியவர்களில் பலர்;
தமக்கு எதிராக சதி செய்தத்தாக
ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் கால்களில், இன்று
விழுந்து வணங்குகின்றனர்: மீடியா வெளிச்சத்துடன்.
இவை எல்லாம் பொது மக்கள்
மனங்களில், குறிப்பாக சுயலாப நோக்கின்றி ஜெயலலிதாவை நேசித்த எண்ணற்ற நடுத்தர, ஏழை மக்களின்
மனங்களில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன? அரசியலில் திருப்பு முனை கட்டத்திலுள்ள
தமிழ்நாட்டில், 'பொதுமக்கள் கருத்துருவாக்கம்' (Public Opinion Formation) என்ற சமூக செயல்நுட்பத்தில் அதன் விளைவுகள்
எப்படி இருக்கும்? அப்பொல்லோ மருத்துவமனையில்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை, சசிகலாவை ஆதரித்து வரும் கட்சிகளை/தலைவர்களை
எல்லாம், அந்த விளைவுகள் எந்த அளவுக்கு பாதிக்கும்?
என்ற புரிதலின்றி;
'சுயநல அரசியல்வாதிகள்'
எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களை 'இனம்' கண்டு வெறுக்கும் பார்வையானது (திருக்குறள்-573) மேற்குறிப்பிட்ட மக்களிடம் வியக்கும் வகையில்
வெளிப்பட்டு வருவதும் தெரியாமல்;
பா.ஜ.க உள்ளிட்ட தேசியக்
கட்சிகளிலும், திராவிட கட்சிகளிலும், 'அந்த' சுயநல பேர்வழிகளால் எந்த அளவுக்கு 'பின்னடைவு'
ஏற்பட்டு வருகிறது, என்பதும் அந்தந்த கட்சிகளின் தலைமைகளுக்கு தெரியாமல்;
ஏற்கனவே அதே வழியில், அறிவுபூர்வ விமர்சனத்தை புறக்கணித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பயணித்ததாலேயே;
அ.தி.மு.க சந்தித்த முதல் இடைத் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலைப் போல, வரும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலானது, தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பெறும். தி.மு.கவின் குடும்ப ஊழல் அரசியலுக்கு எதிரான மக்கள் கோபத்தில், வளர்ந்து வந்த காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' இரண்டாவது இடம் பிடிக்க, எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க வேட்பாளர், அந்த திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்; மக்களின் கோபம் தொடர்பான 'அரசியல் நியுக்கிலியேசனில்' (political nucleation), எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியின் அறிகுறியாக.
எந்த பிரச்சினைகளின் அடிப்படைகளில் மக்களின் கோபமானது, எந்த தலைவர்/கட்சியை குவியமாக கொண்டு குவிகிறதோ, அந்த நிகழ்வே 'அரசியல் நியுகிலியேசன்' ஆகும். 1952 தேர்தலில் பெரும் எதிர்க்கட்சியாக வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியானது, தி.மு.க வளர்ந்த வேகத்தில் கரைந்த போக்கும் அவ்வாறே; ஸ்தாபன காங்கிரஸ் திண்டுக்கல் இடைத் தேர்தலுக்குப் பின் கரைந்தது போலவே கரைந்து, கடைசியில் திராவிட கட்சிகளின் வாலாக பயணித்தே, சட்டமன்றத்தில் நுழையமுடியும் என்ற நிலைக்கு உள்ளானது.
நிகழ்கால சாதாரண மக்களின் நாடித் துடிப்புகளுடன் 'ஒத்திசைவு' (Resonance) போக்கில் பயணிக்கும் ஒபிஎஸ் அணி அ.தி.மு.கவானது, திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை பெறுவார்கள் என்பதும்;
காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' பிடித்த இரண்டாவது இடத்தை, தி.மு.க பிடிக்கும் என்பதும்;
மற்ற சசிகலா, தீபா அணிகள் டெபாசீட் இழந்து, காலப் போக்கில் சுவடின்றி அரசியலில் மறைவார்கள் என்பதும் எனது கணிப்பாகும். சசிகலா அணிக்கு உதவிய தி.க தலைவர் கி.வீரமணியின் (அறிவுபூர்வ அடிப்படைகளில் தவறென்று ரோமிலா தாபார் உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பு அறிவுஜீவிகளும் அறிவித்துள்ள) ‘ஆரிய – திராவிட’ ஊழல் கவசமும், சுவடின்றி மறையவும் வாய்ப்புள்ளது.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, 'தி.மு.க ஆட்சிக்கு வரும்' என்ற பெரும்பாலான கணிப்புகளுக்கு மாறாக, அ.தி.மு.கவின் வெற்றியை, நான் கணித்ததை ஏற்கனவே பார்த்தோம்.
“வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும், என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்; கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.”
(May 1, 2016; ‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html )
திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெளிப்பட்ட மாற்றத்திற்கான எழுச்சியை, சாதாரண மக்களிடம் நான் உணர்கிறேன்.
தமிழக மக்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் பிரச்சினைகளால், உள்மறையாக (Latent) இருந்த கோபத்தின் 'வடிகாலாக';
ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சையும், மரணமும் ஏற்படுத்தியுள்ள கோப எழுச்சியின் 'அரசியல் நியுக்கிலியேசனானது' (Political Nucleation);
தெரிந்தோ, தெரியாமலோ, இரண்டும் கலந்தோ, அல்லது குறுகிய காலத்தில் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில், 'உண்மையான மக்கள் முதல்வராக' ஓபிஎஸ் தன்னை வெளிப்படுத்தியதன் காரணமாகவோ;
இந்திய விடுதலைக்குப் பின், தமிழ்நாட்டில் நடந்த அரசு விழாக்களில், முதல் முறையாக, ஒரே மனைவியுடன் வாழும் முதல்வர், 'சசிகலா குடும்பம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்த', கடந்த குடிஅரசு தின விழா மேடையில், ஊடக நேரடி ஒளிபரப்பில், 'துணிச்சலுடன்' மனைவியுடன் அமர்ந்து, சாதாரண மக்கள் 'கூர்ந்து' கவனித்து, பாராட்டும் அளவுக்கு, ஓ.பி.எஸ் ஆதரவு 'பொதுமக்கள் கருத்துருவாக்கம்' ( Public Opinion Formation) நடந்துள்ளதும், அவற்றுடன் சேர்ந்ததன் காரணமாகவோ;
ஒபிஎஸ் அணியிடம் 'அரசியல் நியுக்கிலியேசனானது' (Political Nucleation) மையம் கொண்டதன் வெளிப்பாடே, மேலே குறிப்பிட்டுள்ள, 'அரசியல் மூச்சுத் திணறலுக்கு எதிரான ஜன்னல் திறப்பு' ஆகும்.
‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல்முறையாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய வன்முறை தவிர்த்த, 'அரசியல் நியுகிலியேசன்' ( Political Nucleation) போக்கானது, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டது….
பிரதமர் மோடியின் பின்பலத்தில், அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்ப அரசியலின் பிடியிலிருந்து விலகிய;
சமூக அரசியல் சூழலின் சாதகமின்றி, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'அரசியல் நியுகிலியேசன்' வெற்றிகரமாக நடந்திருக்குமா? என்ற கேள்வியை;
பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவிற்குப்பின் உருவாகியுள்ள நிலைமைகளானது எழுப்பியுள்ளது; சென்னை மெரினாவில் 'ஜல்லிக்கட்டு ஆதரவு'போராட்டத்தை துவக்கிய மாணவர்களும், இளைஞர்களும், 'அதே வழியில்', 'சசிகலா பினாமி' ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட 'மெரினா' போராட்டத்தினை, 'சசிகலா பினாமி' அரசானது, 144 தடையின் துணையுடன் சந்திக்க துணிவில்லாமல்,’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( ‘தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா? 'சசிகலா பினாமி' ஆட்சியின் முள்ளிவாய்க்கால் பயணம்?; http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html )
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கொலை செய்தது, பாலியல் அத்துமீறல்கள், தொடர்பான குற்றங்களில் துப்பு துலக்க, சிசிடிவி கேமராக்கள் பயன்பட்ட தகவல்கள் எல்லாம் ஊடகத்தில் வெளிவந்துள்ளன. (‘CCTV caught doc trying to kill her dad in ICU’; http://timesofindia.indiatimes.com/city/chennai/CCTV-caught-doc-trying-to-kill-her-dad-in-ICU/articleshow/53662093.cms ; http://www.ndtv.com/cities/new-mother-allegedly-raped-in-icu-man-caught-on-cctv-1277182) மருத்துவமனைகளில், குறிப்பாக ஐ.சி.யூவில்(ICU), சிசிடிவி கேமராக்களின் அவசியம் உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளது. (Why Cameras are necessary in each ICU patient’s room? https://www.health-first.org/hospitals_services/vitalwatch_pt_brochure.pdf ) உத்தரகண்ட் அரசின் காவல் துறையானது அனைத்து மருத்துவமனைகளிலும் அவ்வாறு பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. (http://www.oneindia.com/india/police-ask-hospital-officials-install-cctv-cameras-icus-1412016.html ) அப்பொல்லோ மருத்துவமனையோ இன்னும் ஒருபடி மேலே சென்று, உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவினர்கள் கண்காணிக்க, உலக நிபுணர்களின் ஆலோசனைகளையும் தேவைப்படும் போது பெற, 24 மணி நேரமும் அப்பொல்லோ மருத்துவமனை ஐ.சி.யூவில்(ICU), நோயாளிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக, தமது இணைய தளத்தில் அறிவித்துள்ளது. (https://www.apollohospitals.com/patient-care/value-added-services/virtual-icu-visit )
ஊடகங்களில் ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.( http://tamil.oneindia.com/news/tamilnadu/questions-about-jayalalithaa-death-poes-garden-276238.html & Jayalalithaa's discharge summary released by TN govt: Crucial questions regarding her death still unanswered http://www.firstpost.com/india/jayalalithaas-discharge-summary-released-by-tn-govt-crucial-questions-regarding-her-death-still-unanswered-3321442.html ; http://www.dinamalar.com/news_detail.asp?id=1728315 )
ஜெயலலிதா இருந்தது வரை அவரது தேர்தல் வெற்றிகளுக்கு பயன்பட்ட, தி.மு.கவின் குடும்ப அரசியலுக்கு எதிரான மக்களின் கோபமானது, சசிகலா குடும்ப அரசியலுக்கு எதிராக, ஜெயலலிதாவின் மரணத்திற்கே விடை கேட்டு, இன்று அதைவிட கூடுதலான அளவில் வளர்ந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட அடிப்படைகளிலான ஆய்வின் அடிப்படையிலேயே, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இன்னொரு திண்டுக்கல் இடைத் தேர்தலாக' நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிவுகளை, மேலே குறிப்பிட்டுள்ளவாறு நான் கணித்துள்ளேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், அந்த முடிவானது அ.தி.மு.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமையலாம், என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
‘அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக' உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில்’ (http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html )
அந்த தேர்தல் முடிவானது, முதல்வர் ஜெயலிதாவிற்கே அதிர்ச்சி வைத்தியமானதையும் ஏற்கனவே பார்த்தோம்.
‘1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயம் தொடர்பாக ஆவேசப்பட்டு, எச்சரித்து, பின் அதிலிருந்து 'பெரியார்' ஈ.வெ.ரா, அந்த ஆவேசத்திலிருந்து, வழுக்கியது போல வழுக்காமல், ஜெயலலிதா துணிச்சலுடன் தனது ஆவேசத்திலிருந்து வழுக்காமல்;
அந்த நோயிலிருந்து, தமது கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்? என்பது இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்; அதே சிக்கலை சந்தித்துள்ள எதிர் கட்சிகளும் ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய நெருக்கடியில்.
'அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்கில், 'தமக்கென்ன லாபம்?' என்ற எதிர்பார்ப்புள்ளவர்களின் ஆதிக்கத்தில், அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சிக்கியுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா தமது முயற்சியில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் திருப்பு முனையாக, அமைய வாய்ப்புள்ளது.‘ ( ‘'பெரியார்' ஈ.வெ.ராவின் ஆவேசமும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசமும்’; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_20.html )
அந்த முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றியும் பெறாமல், தோல்வியும் பெறாமல், 'மர்மமான' முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று மரணமடைந்துள்ளார்; சட்டத்தின்படியும் சம்பிரதாயப்படியும், 'சரியான' இறுதி சடங்கும் நடைபெற்றதா? என்ற கேள்வியுடன்.
அநேகமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் சரியான, தெளிவான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்; வெற்றி பெற்றாலும், ஓபிஎஸ் அணியில் 'பொதுவாழ்வு வியாபார' நோக்கில் பயணிப்பவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியமாக.
அநேகமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் சரியான, தெளிவான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்; வெற்றி பெற்றாலும், ஓபிஎஸ் அணியில் 'பொதுவாழ்வு வியாபார' நோக்கில் பயணிப்பவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியமாக.
No comments:
Post a Comment