Wednesday, March 22, 2017

'சக மனிதனை' பாரபட்சமின்றி நேசிக்கும் விழிப்புணர்வைத் தூண்டி;

 ஃபாருக் கடைசி பலியாக இருக்கட்டும்


‘தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!’

 "திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர்." 
 
விவரங்கள்
எழுத்தாளர்: செ.கார்கி
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 21 மார்ச் 2017 ; www.keetru.com

மேலே குறிப்பிட்ட கட்டுரையை, 'பெரியார்' கட்சிகளை எதிர்க்கும் அமைப்புகளில், திறந்த மனதும், அறிவு நேர்மையும் உள்ளவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டும், என்று, தமிழ்நாட்டின் நலன் கருதி, பரிந்துரைக்கின்றேன்.

‘தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன்.’ என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html 'பெரியார்' கொள்கையாளராக பயணித்த காலத்திலும், என்னை பாராட்டுபவர்களிடமிருந்து இயன்ற அளவு விலகியும், அறிவுபூர்வமாக வெளிப்படும் எதிர்ப்புகளை தேடி, தேடி, அறிந்து, ஆராய்ந்து, அறிவுபூர்வமாக சந்திப்பதிலும், பயணித்ததே, ஒரு 'புலமையாளராக' (Theoretician) வளர்ந்ததன் இரகசியமாகும். அதே அணுகுமுறையில், இன்று இசைத் தகவல் தொழில் நுட்ப துறையில் (Music Information Technology) புலமையாளராக, உலகின் கவனத்தை ஈர்த்து வரும் ஆய்வுகளுடன் பயணித்து வருகிறேன்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கும், சுயலாப நோக்கின்றி, என்னால் இயன்ற பங்களிப்பையும் வழங்கியவாறே.

அதே அணுகுமுறையில்  மேற்குறிப்பிட்ட கட்டுரை தொடர்பான எனது கருத்துக்களை அடுத்து பார்ப்போம். 

'ஊழல் தமிழ்நாடு' உருவான சமூக செயல்நுட்பத்தை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

"நாட்டு மக்களை சுரண்டுகின்றார்கள், இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றார்கள், நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுகின்றார்கள். அதை எல்லாம் தட்டிக் கேட்கத் துப்பற்ற"வர்களாக ( கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளபடி);

தமிழ்நாட்டில் பெரும்பாலான 'பெரியார்' கட்சிகளும், 'இந்து, முஸ்லீம், கிறித்துவ' மதவெறி அமைப்புகளும், 'தலித்' உள்ளிட்ட எல்லா சாதி அமைப்புகளும், புறத்தில் 'வேறுபட்டிருந்தாலும்', 'சுயநல காரியத்தில்' ஒன்று பட்டு, 1967 முதல் 'அண்ணா'வுக்கு பயந்து 'ஆமையாக'வும்,1969க்குப் பின் முயலாகவும், 1991க்குப் பின் 'ஜெட்டாகவும்'(Jet) முன்னேறியுள்ளதன் விளைவாக; 

ஏற்கனவே 'பாரம்பரிய, பண்பாடு' அடிப்படைகளில், குடும்பம், நட்பு உள்ளிட்ட தனிமனித உறவுகளில், 'இயல்பாகவும், சுயலாப நோக்கின்றியும்' செயல்பட்டு வந்த அன்பும், மதிப்பும்;

லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்பத்தில் சிக்கியதன் தொடர் விளைவாக;

இன்று துணிச்சலாக யாரும் யாரையும் கொலை செய்யலாம்;

'ஊழல்' காரணமாக;

கைது செய்வதிலிருந்து தப்பிக்கலாம்; 'கைது செய்தாலும்', காவல் நிலையத்தில் ராஜ மரியாதை; நீதிமன்றத்திலும் ராஜமரியாதை; 'கண் துடைப்பாக' சிறை சென்றாலும் ராஜ மரியாதை; வசதியும்,  அரசியல் செல்வாக்கும் இருந்தால், அரசு சாட்சிகளை, 'பிறழ் சாட்சிகளாக்கி', விடுதலை பெறலாம்; பின் அமைச்சராக பவனி வரலாம், 'பினாமி ஆட்சி' மூலம் தமிழ்நாட்டையும் ஆட்சி செய்யலாம். அனைத்து கொள்கை, சாதி, மத வி.ஐ.பிக்கள் 'வாலாட்டும்' அளவுக்கு, தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வலம் வரலாம்.

அந்த ஊழல் வலைப்பின்னலில் இடம் பெற்று அதிவேக பணக்காரராகி, 'பெரியார் கொள்கையாளராக', அந்த 'ஊழல்' பணத்தில் எடுபிடிகளுடன் வலம் வரும் அளவுக்கு, 'பெரியார்' தொண்டு(?) பயன்பட்டு வருவதை, எந்த 'பெரியார்' கட்சிகளும், ஆதரவாளர்களும், குறைந்த பட்சம் கண்டித்ததுண்டா?

‘கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம், தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

‘மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா?’;
(http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html

அவ்வாறு பலியானவர்களின் 'சாபத்திலிருந்து', 'அந்த பலன்களை' அனுபவித்த, 'பிணம் தின்னும் கழுகுகளாக' வாழும் மனிதர்களும், கட்சிகளும் தப்ப முடியுமா? 'அந்த சாபத்திற்கு' இலக்காகாத, நான் உள்ளிட்டு அனைவரும், அந்த இழிநிலையிலிருந்து தமிழ்நாட்டை மீட்க, சுயலாப நோக்கின்றி, தத்தம் வரைஎல்லைகளுக்குட்ப்பட்டு (within our limitations), பங்களிப்பு வழங்கவில்லையென்றால், நாமும் சமூக குற்றவாளிகள் ஆக மாட்டோமா?

எனவே சமூகத்தில் பலியாகும் உயிர்களுக்கு சாதி, மத வேறுபாடு கிடையாது: 'இந்துத்வா', 'பெரியார்' உள்ளிட்ட எந்த அமைப்புகளை சார்ந்தவராயிருந்தாலும்.

பலியானவர் 'முஸ்லீம், 'பெரியார்' கொள்கையாளர்' என்ற காரணத்தால் வெளிப்படும் இதே வாதங்கள், கடந்த பல வருடங்களாக, இதே போல, தமிழ்நாட்டில் 'முஸ்லீம்' தீவிரவாதிகளால் 'இந்துத்வா கொள்கையாளர்கள்' கொல்லப்பட்ட போதும், 'இந்துத்வா' எழுத்தாளர்கள், இது போல கட்டுரை எழுதியதையும் படித்திருக்கிறேன்.

எங்கள் விமர்சனங்களை வன்முறை மூலம் அல்லாமல் கருத்தாகத்தானே எடுத்துவைக்கின்றோம்.

எப்போதாவது எந்த நாத்திகனாவது, முற்போக்குவாதியாவது ஆன்மீகவாதிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்திருக்கின்றார்களா? இல்லை கேள்வி கேட்பவரைத் தாக்கியிருக்கின்றார்களா? முதலில் சக மனிதனை, அவனின் உயிரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்"‍ கட்டுரையாளர்.

நான் திருச்சி 'பெரியார் ஈ.வெ.ரா' கல்லூரியில் பேராசிரியராக, 'பெரியார்' கொள்கையாளராக பணியாற்றிய காலக்கட்டத்தில்;

அங்கு அலுவலகத்தில் பணியாற்றிய சற்று வயதான பெண்ணை பார்க்கும் சமயங்களில்;

எனக்குள் குற்ற உணர்வினை அனுபவித்திருக்கிறேன்; 'பெரியார்' கொள்கை வெறியர்களால் கொலை செய்யப்பட்ட, ஒரு 'இந்துத்வா ஆதரவு பிராமண' பேராசிரியரின் மனைவியான அந்த பெண், 'அந்த கொலையின்' 'பரிசாக', அந்த அரசு வேலை கிடைத்து, தமது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

அது போலவே  ‘டெலோ தலைவரையும், நூற்றுக்கணக்கான ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகளையும், விடுதலைப் புலிகள் இலங்கையில் சுட்டுக் கொன்றனர். அதிலும் கைகளைத் தூக்கி சரணடைந்தவர்களையும் கொன்றனர். அதே போல்  EPRLF   போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த அமைப்புகளுக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தனர்? அவர்கள் மனநிலையில் என்னென்ன பாதிப்புகள் விளைந்தன? என்பது பற்றி, எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் விவாதம் நடக்கவில்லை. என்னைப் போன்று, அன்று விடுதலைப்புலி ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் தங்களுக்குள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டோம். ஒரு பெரிய இலட்சியத்திற்காகப் போராடும் இயக்கத்தில், இது போன்று நடக்கும் தவறுகளை, சகித்துக் கொள்வதைத் தவிர வேறு , என்று 'அன்று' இருந்த ‘அறிவில்(?)  சமாதானம் சொல்லிக் கொண்டோம்.’ ( ‘தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு; 'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)’;
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html  )

உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாட்டில் (குறிப்பு கீழே);

'சக மனிதனின் உயிரில்', 'சாதி, மத, கொள்கை' அடிப்படையில் பாரபட்சம் கடைபிடித்து,

தாம் எதிர்க்கும் கொள்கையாளர் பலியானால், கண்டுகொள்ளாமல் இருப்பதும்; 

அத்தகையோரில் சிலர், 'அந்த கொலையாளிகளை' வெளியில் தெரியாமல், 'கோழைத்தனமாக' பாராட்டி மகிழ்வதும்;

தாம் ஆதரிக்கும் கொள்கையாளர் பலியானால், 'நியாயம்' கேட்பதும்;

எந்த வகையில் நியாயம்? என்ற பொது விவாதமானது;

இதுவரை இவ்வாறு பலியாகியுள்ள;

'பெரியார்' கட்சிகள், 'இந்துத்வா, முஸ்லீம், தலித், இன்னும் பிற சாதி, மத, கட்சி' அமைப்புகளில், அரங்கேறவேண்டும். அவ்வாறு அரங்கேறியிருந்தால், ஃபாருக்கின் இறுதி ஊர்வலம் தொடர்பான, கீழ்வரும் முகநூல் தகவலானது, தலைகீழாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

“பாருக் கொலை செய்யப்பட்டப்ப அவனது சடலத்துடன் மயானம் சென்றவர்கள் 100 பேர். அதில் பெரும்பாலோர் திராவிட அமைப்புகளை சேர்ந்த இந்துக்கள்... முஸ்லீம் பயங்கரவாதி அப்துல் ஓசிர் கோவை ஜெயிலில் செத்தப்ப வீட்டுக்கு வந்த அவனது சடலத்துடன் பயணித்தவர்கள் 10000 பேர்...”

“நான் அந்தக் கல்லூரியில் படித்து முடித்து வெளியேறும் வரை இந்த அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதில் ஒரு இஸ்லாமிய மாணவன் எனக்கு ஒரு குரான் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்து “இதை முழுவதுமாகப் படி, அப்போதுதான் உனக்கு அல்லாவைப் பற்றி புரியும்என்று அறிவுரை வேறு சொன்னார். அந்தக் குரானை இன்னமும் நான் வைத்திருக்கின்றேன்.

ஆனால் அனைத்து மாணவர்களும், வார்டன்களும் அப்படி இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. என்னுடைய நண்பர்களில் பல பேர் இஸ்லாமியர்கள் தான். அதிலும் சிலபேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். கல்லூரியில் பல பேராசிரியர்கள் உண்மையில் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தும், அதை வகுப்பறையில் எப்போதுமே காட்டிக்கொள்ளாதவர்கள்.” – கட்டுரையில்;

முஸ்லீம்களில் மட்டுமல்ல, பிராமணர்களிலும் அவ்வாறு இருக்கிறார்கள்; என்பதை 'பெரியார்' கட்சிகளும்,

'தலித்துகளிலும்' அவ்வாறு இருக்கிறார்கள்; என்பதை பிற்படுத்த சாதி அமைப்புகளும்,

'பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும்' அவ்வாறு இருக்கிறார்கள்; என்பதை 'தலித்' அமைப்புகளும்,

'இந்துத்வா அமைப்புகளிலும்' அவ்வாறு இருக்கிறார்கள்; என்பதை 'முஸ்லீம் அமைப்புகளும்,

'முஸ்லீம் அமைப்புகளிலும்' அவ்வாறு இருக்கிறார்கள்; என்பதை 'இந்துத்வா அமைப்புகளும்',

இவ்வாறு எதிரெதிர் கொள்கை அமைப்புகள் எல்லாம்,

சமூகத்தில் 'பலியாகி' கொண்டிருக்கும் சக மனிதர்களிடம், 'பாரபட்ச' அணுகுமுறையின்றி, 'சக மனிதனை' பாரபட்சமின்றி நேசிக்க, கற்றுக் கொண்டால்;

'அந்த பாரபட்ச இருட்டில்', நாட்டிற்கும், சமூகத்திற்கும் கேடாக, 'தீய சக்திகளாக' பயணிப்பவர்களின் 'இருள் கேடயமானது',  தகர்ந்து விடும்;

பலிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் குறையும். மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வை தூண்டி, ஃபாருக் கடைசி பலியாக இருக்கட்டும். 

மேலே குறிப்பிட்ட பாரபட்ச இருட்டில் தான், உள்நாட்டு, வெளிநாட்டு சதிகள் எல்லாம் செயல்பட்டு;

சாதி, மத, வேறுபாடின்றி, அப்பாவிகளை காவு வாங்கும் தீவிரவாதமும், பயங்கரவாதமும், முளை விட்டு, 
ஊழல் திமிங்கலங்களுடன் பரிமாற்ற உறவு கொண்டு, அதி வேகமாக வளரும்; நாமும் விழிப்படையவில்லையென்றால், உணர்ச்சிபூர்வ போதையில், 'சக மனிதனை' பாரபட்சத்துடன் நேசிக்கும் போக்கில், பாரபட்ச இருட்டினையும் வளர்த்து துணை புரிய‌. 

மாணவர்களும் இளைஞர்களும் உடனடி நிவாரணத்தில் முன்னிடம் வகித்த‌, சென்னை வெள்ளத்தின் போது, 'இந்துத்வா' அமைப்புகளும், முஸ்லீம் அமைப்புகளும், திராவிடர் கழகமும், இன்னும் பல அமைப்புகளும், சாதி, மத பேதமின்றி, நிவாரணங்கள் வழங்கியதானது, நல்ல அறிகுறியாகும்.

குறிப்பு: இன்று 'பெரியார்' கட்சிகள் கீழ்வருமாறு பயணிக்கிறார்களா? அல்லது ஈ.வெ.ராவால் கண்டிக்கப்பட்ட 'காலிகள்' திசையில் பயணிக்கிறார்களா?


'பெரியார்’ ஈ.வெ.ரா தமது நிலைப்பாடுகளை பேச்சுக்கள், எழுத்துகள் மூலம் வெளிப்படுத்திய போது, எதிர் நிலைப்பாடுகளில் இருந்த பலர் ‘பெரியார்’ ஈ.வெ.ரா மீது  கோபப்பட்டதுண்டு; அவை சில சமயம் வன்முறையாகவும் வெளிப்பட்டதுண்டு. ஆனால் ‘பெரியார்’ ஈ.வெ.ரா, தமது நிலைப்பாடுகளை எதிர்த்தவர்கள் மீது கோபப்பட்டதுமில்லை; வன்முறையைத் தூண்டியதுமில்லை; ஆதரவாளர்களிடம் தாமாகவே வெளிப்பட்ட வன்முறையை அவர்  ஆதரித்ததுமில்லை.

‘பெரியார்’ ஈ.வெ.ரா வெளியிட்ட இதழ்களும், புத்தகங்களும் அரசால் பலமுறை தடை செய்யப்பட்டிருக்கின்றன; ஆனால் ‘பெரியார்’ ஈ.வெ.ரா எந்த புத்தகத்தையும் திரைப்படத்தையும்  தடை செய்யக் கோரவில்லை. எதிர்க்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட புத்தகம் தொடர்பான‌  எதிர்ப்பை,  மக்கள் மன்றத்தில் விளக்குவதும், பொது மக்களுக்கு இடைஞ்சலின்றி சம்பந்தப்பட்ட புத்தகங்களை எரிப்பதுமே அவர் கையாண்ட பிரச்சார போராட்ட வழிமுறைகளாகும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும், பொது மக்களைப் பாதிக்கும் போராட்டங்கள் போன்றவை எல்லாம், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம்,   இந்தியாவில் அறிமுகமான‌ 'காலித்தனம்' என்று அவர் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.’ ( ‘உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.htmlகாந்தி 'கிலாபத்' இயக்கத்தை ஆதரித்து, முஸ்லீம் மதவாதத்தை அரசியலில் நுழைய ஊக்குவித்து, அவ்வாறு 'ஊக்குவிக்கப்பட்ட' முஸ்லீம்களில் சிலர், காந்தியின் 'சத்தியாகிரக' போராட்டத்தில் ஊடுருவி, 'அந்த காலித்தனமும்', அரங்கேறியாதா? என்பது தொடர்பான ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. (‘Was Mahatma Gandhi a hypocrite?’; http://www.dailyo.in/politics/mahatma-gandhi-subhas-bose-ahimsa-non-violence-british-raj-independence/story/1/4756.html ) அதில் 'காலனிய சூழ்ச்சியும்' எந்த அளவுக்கு பங்கு வகித்தது? என்பதும், அடுத்து வரும் ஆய்வுகளில் வெளிப்பட்டால், வியப்பில்லை.

No comments:

Post a Comment