இணைய யுக 'மென் சக்தியின்' (Soft Power) வலிமையில் அதிர்ச்சி வைத்தியமாக;
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்?
எந்த ஒரு சமூகத்திலும்
நாட்டிலும் பொதுப் பிரச்சினைகளுக்கு மாணவர்கள் போராட்டமானது முளை விட்டு, வளரத் தொடங்கி
விட்டால்;
அந்த சமூகத்தில் அவர்களின்
பெற்றோர் தலைமுறையானது; பொதுப் பிரச்சினைகளுக்கு போராடி, தீர்வு காணும் வலிமையை இழந்து
விட்டதா? என்ற கேள்வியை எழுப்பும் சிக்னல், அது ஆகும்.
அனைத்து பிரச்சனைகளுக்கும்,
மாணவர்களை போராட அழைப்பது சரியாகுமா?
தவறு என்பது 'பெரியார்' ஈ.வெ.ரா
அவர்களின் கருத்தாகும். தாகூரும் அதே நிலைப்பாட்டில் இருந்தார்.
இந்தியாவில் அந்த தவறை
செய்தது காந்தியாவார். அதற்காக காந்தியை அந்த இருவரும் கண்டித்துள்ளார்கள்.
‘பொதுச் சொத்துக்களுக்கு
சேதம் விளைவிக்கும், பொது மக்களைப் பாதிக்கும் போராட்டங்கள் போன்றவை எல்லாம், காந்தியின்
'சத்தியாகிரகம்' மூலம், இந்தியாவில் அறிமுகமான
'காலித்தனம்' என்று அவர் (ஈ.வெ.ரா) வன்மையாகக்
கண்டித்திருக்கிறார்.
தாகூரும் அதே போல் காந்தியை
எச்சரித்திருக்கிறார். அவரின் எச்சரிக்கையை மீறி,
காந்தி செயல்பட்டதன் பலன்களை இன்றுவரை இந்தியா 'அனுபவித்துக்' கொண்டிருக்கிறது.(Tagore
to Gandhi, March 1921, Gandhi, Collected Works, XX (Navajivan Trust, Ahmedabad,
1966), 539, 540-1.)’
(‘உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html
)
தாகூரின் எச்சரிக்கையை
மீறி, காந்தி மாணவர்களை வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட ஊக்குவித்த முயற்சிகள்,
இந்தியாவில் மற்ற பகுதிகளில் எடுபட்டது போல, தமிழ்நாட்டில் எடுபடவில்லை, என்பது உண்மையா?
உண்மையென்றால், அந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரியவர்களின் பொதுநல
அக்கறையும் முக்கிய காரணமா?
அத்தகையோர் 1938இல் கட்டாய
இந்தி திணிப்பை எதிர்த்து, முன்னெடுத்த போராட்டத்தில், அடுத்த கட்டத்திற்கு தலைமையின்றி
தவித்த நேரத்தில்;
காங்கிரசிலிருந்து
1925இல் வெளியேறி, சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டிருந்த 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் தலைமை
தாங்கி;
அப்போராட்டமானது, தமிழ்நாட்டில்
கட்டாய இந்தியை ஒழித்து, விருப்பமிருந்தால் படிக்கும் வெற்றியை ஈட்டியது.
1965இல் நான் பள்ளி இறுதி
தேர்வு (S.S.L.C) எழுதிய போது, இந்தியில் தேர்வு
எழுதினாலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. தி.மு.க ஆதரவு மாணவனாக இந்தி
வெறுப்பில், அந்த பாடத்தை வெறுத்து, மிக குறைவான மதிப்பெண் எடுத்ததானது, எனது தேர்ச்சியை
கெடுக்கவில்லையென்றாலும்; அந்த வாய்ப்பினை பயன்படுத்தாத மொழி வெறுப்பு எனும் நோயில் சிக்கி, நான் வாழ்ந்ததாக இன்று கருதுகிறேன். எனது இசை ஆய்வுக்காக, சமஸ்கிருதம்
தொடக்க நிலை மாணவராக இன்று வாழ்ந்து வருகிறேன்.
‘ஓரு போராட்டம் எந்த
அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு
சேதமின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும்
நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, 'பெரியார்' ஈ.வெ.ரா தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப்
போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம்
வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத்
தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில்
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு'
உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் 'பெரியார்' ஈ.வெ.ரா சுட்டிக்
காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள்
ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்'
இன்றி நடத்த முடியும் என்பதை 'பெரியார்' ஈ.வெ.ரா நிரூபித்தது, தாகூரின் பார்வைக்குப் போனதாகத்
தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.
1944க்கு முன் 'பெரியார்' ஈ.வெ.ரா தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி
விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள்
எப்போது ‘பலம்’ பெற்றன?சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்'
ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு, காந்தி காலத்தில் இந்தியாவின்
பிறபகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி
வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான
விடையைத் தரும்……
1965 முதல் இன்று வரை
நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும்
சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள்.
ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள்
படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக'
ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு
வருகிறர்கள்.
அரசுக் கல்லூரிகளில்
அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும்
மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த
கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள்.
ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி
ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது
தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.’ (‘1944க்கு முன் எப்படி இருந்த
தமிழ்நாடு, இன்று எப்படி இருக்கிறது? இந்தி
எதிர்ப்புப் போராட்டம்:1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html
)
இன்று தமிழ்நாடானது
1944க்கு முன்பிருந்த நிலையை நோக்கி, பயணிக்கத் தொடங்கியுள்ளதை, ஜல்லிக்கட்டு ஆதரவு
போராட்டம் உணர்த்தியுள்ளது,
வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஓக்களை (NGOs)
போலின்றி, தமது பெற்றோரின் சம்பாத்தியத்திலும், சுய சம்பாத்தியத்திலும், ‘மீடியா வெளிச்சத்திற்கு
வராமல், தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில்
வெளிப்பட்டு வந்த, இது போன்ற போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும்,
அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும்.
ஒரு படிகத்தின்
(crystal) தோற்றத்தின் முதல் கட்டமான 'நியுகிலியேசன்'
(‘Nucleation’; https://en.wikipedia.org/wiki/Nucleation ) போல;
தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
இந்தியாவிலேயே முதல்முறையாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, தமிழ்நாட்டின்
மீட்சி நோக்கிய வன்முறை தவிர்த்த, 'அரசியல் நியுகிலியேசன்' ( Political
Nucleation) போக்கானது, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டது.’
(http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html
)
அதாவது சுயசம்பாத்தியமுள்ள
இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தில், தனியார் கல்லூரி, அரசு கல்லூரி என்ற வேறுபாடின்றி,
அனைத்து மாணவர்களும் பங்கேற்க, அதன் தொடர்ச்சியாக அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும்
பங்கேற்க;
சாதி, மத வேறுபாடுகள்,
பிராமணர் - பிராமணரல்லாதோர் வேறுபாடுகள், தமிழர் - தமிழரல்லாதோர் வேறுபாடுகள் எல்லாவற்றையும்
பின் தள்ளி, கோரிக்கைக்கு ஆதரவான அனைவரையும் ஒருங்கிணைத்து;
வன்முறையையையும், பொத்துச்
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்த்து;
1938 இந்தி எதிர்ப்பு
போராட்டம் பயணித்த போக்கில், தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது
பயணித்தது.
அது மட்டுமல்ல, இணையயுகத்தில்
'மென் சக்தியின்' (Soft Power) வலிமையை மிகவும் திறமையாக வளர்த்து, 1938 போராட்டத்தை விட, இன்னும்
மேலான நிலையில், தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது; பழைய போக்கிலேயே பயணிக்கும் கட்சிகளையும்,
தலைவர்களையும் முட்டாள்களாக்கி.
வரும் ஆர்.கே. நகர் இடை
தேர்தல் முடிவுகளில் அது 'பிரமிக்க வைக்கும்' வகையில் வெளிப்படும் என்பதும் எனது கணிப்பாகும்.
(‘தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இன்னொரு திண்டுக்கல் இடைத் தேர்தலாக'; ஆர்.கே நகர் இடைத்
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?; http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_11.html
) கடந்த பாராளுமன்ற தேர்தலில்,
2 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்று, தி.மு.க கூட்டணியை பின் தள்ளிய வெற்றியிலிருந்து,
தொடர்ந்து 'சறுக்கி' வந்த பா.ஜ.கவிற்கு, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவானது, வாக்கு
எண்ணிக்கையில் 'பிரமிக்க வைக்கும்' முன்னேற்றமாக இருந்தால் வியப்பில்லை.
பிரதமர் மோடியின் பின்பலத்தில், அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்ப
அரசியலின் பிடியிலிருந்து விலகிய;
சமூக அரசியல் சூழலின்
சாதகமின்றி, சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'அரசியல்
நியுகிலியேசன்' வெற்றிகரமாக நடந்திருக்குமா? என்ற கேள்வியை;
பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவிற்குப்பின்
உருவாகியுள்ள நிலைமைகளானது எழுப்பியுள்ளது; சென்னை மெரினாவில் 'ஜல்லிக்கட்டு ஆதரவு'போராட்டத்தை
துவக்கிய மாணவர்களும், இளைஞர்களும், 'அதே வழியில்', 'சசிகலா பினாமி' ஆட்சிக்கு எதிராக
திட்டமிட்ட 'மெரினா' போராட்டத்தினை, 'சசிகலா பினாமி' அரசானது, 144 தடையின் துணையுடன் சந்திக்க துணிவில்லாமல்,’ என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
( ‘தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா? 'சசிகலா
பினாமி' ஆட்சியின் முள்ளிவாய்க்கால் பயணம்?;
http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html ) இணைய யுக 'மென் சக்தியின்' (Soft Power) வலிமையில், அதிர்ச்சி வைத்தியமாக வெளிப்பட்ட 'சமூக
சூடானது', ஆட்சியில் உள்ள 'திராவிட'
கட்சியின் 'பொதுச் செயலாளர்' சசிகலா படத்தை தவிர்த்தே, அக்கட்சியின் வேட்பாளர் வாக்கு
சேகரிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியதா? அதற்கும் என்ன பலன் கிடைத்தது? என்பதானது
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் தெரியும். (http://tamilnadu.indiaeveryday.in/fullnews--------1295-3360925.htm
) உச்சநீதிமன்றமானது, நிலுவையில் உள்ள வழக்கில், 'கிரிமினல்
ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது' என்று தீர்ப்பு வழங்கினால், அந்த 'பெருமையும்'(?)
ஆட்சியில் உள்ள 'திராவிட' கட்சியின் 'பொதுச் செயலாளர்' சசிகலாவையேச் சாரும்; (http://www.dinamalar.com/news_detail.asp?id=1738402
)
சசிகலாவை 'வேலு நாச்சியராக' அறிவித்த இன்னொரு திராவிடக் கட்சியின் தலைவர் வை.கோவையும்
சாரும்.
டிஜிட்டல் யுகத்தில், அப்பொல்லோவில் 'மர்மமான' முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடங்கி, மக்கள் பார்வையில் அது குவியமாக தொடங்கிய, மறுவாரம் முதலே;
டிஜிட்டல் யுகத்தில், அப்பொல்லோவில் 'மர்மமான' முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடங்கி, மக்கள் பார்வையில் அது குவியமாக தொடங்கிய, மறுவாரம் முதலே;
இன்று ஊடகங்களில் வெளிப்படும்
சிசிடிவி கேமரா உள்ளிட்ட பெரும்பாலான கேள்விகளை, எதிர்க்கட்சித்தலைவரான ஸ்டாலின், அப்போதே
எழுப்பத் தொடங்கி, சுயலாப நோக்கின்றி ஜெயலலிதாவை நேசித்த எண்ணற்ற நடுத்தர, ஏழை மக்களின்
மனங்களில் அவர் இடம் பிடிக்கும் வாய்ப்பை; ( http://tamil.oneindia.com/news/tamilnadu/questions-about-jayalalithaa-death-poes-garden-276238.html
&
Jayalalithaa's discharge summary released by TN govt: Crucial questions
regarding her death still unanswered http://www.firstpost.com/india/jayalalithaas-discharge-summary-released-by-tn-govt-crucial-questions-regarding-her-death-still-unanswered-3321442.html
; http://www.dinamalar.com/news_detail.asp?id=1728315
)
இழந்துள்ள தி.மு.கவிற்கும்
'அந்த பெருமையில்' மறைமுக (indirect) இடமும் உண்டு.
‘திராவிட தேர்தல் அரசியலை
தொடங்கி வைத்தவர் அண்ணா என்பது வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
1965 இந்தி எதிர்ப்பு
போராட்ட 'வீரர்' நடராஜனின் ஆதரவுடன்;
அதை முடித்து வைப்பவர்
சசிகலாவா? என்ற கேள்வியும் வரலாற்றில் இடம் பெறத் தொடங்கியுள்ளது.
அதாவது 1965 இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் பலனாக ஆட்சியில் அமர்ந்த திராவிட தேர்தல் அரசியலானது, அதே 1965 இந்தி
எதிர்ப்பு போராட்ட 'வீரரின்' பங்களிப்புடன் தான்,முடிவுக்கு வர வேண்டும், என்பதானது,
இயற்கையின் விதி போல நடைபெறுகிறது.’ (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html
)
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்
வெளிப்பட்ட சுயசம்பாத்தியமுள்ள இளைஞர்கள் முன்னணி வகிக்க, மாணவர்களும், பெற்றோர்களும் ஒருங்கிணைந்து, வன்முறை தவிர்த்து, இணைய யுக 'மென் சக்தியின்' வலிமையில் பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாகவே, அது தமிழ்நாட்டின்
மீட்சி நோக்கிய திசையில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளாக வெளிப்பட உள்ளது, என்பதும்
எனது ஆய்வு கணிப்பாகும்.
No comments:
Post a Comment