Sunday, January 13, 2019


தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்(4)


தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்



இளம் தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம், ஆய்வுக்குழாயடி சண்டையில் தமது ஆற்றலையும், நேரத்தையும் விரயமாக்காமல், உண்மையைக் கண்டறியும் நோக்கிலேயே அறிவுபூர்வ திசையில் விவாதங்களை முன்னெடுப்பார்கள்;

என்பதும் எனது நிகழ்கால அனுபவமாகும். அது மட்டுமல்ல, தங்களின் தமிழ்ப்புலமையின் வரைஎல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடன்,

பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலமையாளர்களுடன் 'ஈகோ'(Ego) சிக்கலின்றி கூட்டாக பல்துறை ஆய்வுகளிலும் (interdisciplinary researches) அவர்கள் ஈடுபடும் காலமும் நெருங்கி விட்டது; என்பதும் எனது கணிப்பாகும்.’ (https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html )

தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் யாப்பிலக்கணத்தை விளங்கிக்கொள்ள 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), அகியவற்றில் அடிப்படை அறிவு பெற்றால், தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்' தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகையோருக்கு இசை மொழியியல் அடிப்படையிலான   Natural Language Processing (NLP) ஆய்வுத்திட்டங்களிலும், மென்பொருள் உருவாக்க (Software development)தொழில்களிலும், Resource Persons வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன.

அது போல பொறியியலில் ECE, Computer Science, உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் எல்லாம்,இசை மொழியியல்அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் காலமும் கனிந்து வருகிறது. அவர்களில் ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், தமக்கு உள்ள தமிழறிவு போதுமா? என்று தயங்காமல், எவ்வாறு தமிழ்ப்புலமையை வளர்ப்பது? என்பதற்கான புதிய உத்தியையும், நான் விளக்கியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444) அவ்வாறு புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிப்பார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html )

தெலுங்கு சமஸ்கிருதம் மொழிகளில் இருந்தபாடல்களை ஆராய்ந்து, அவற்றில் வரும் அசைகளின் எண்ணிக்கை, அசைகளின் நேரம், சொற்களின் எல்லைகள் அடிப்படையில் பாடலையும், பாடலின் தாளத்தையும் ஆராய்ந்த முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவையே ஆகும். ஆனால் தமிழ் இசையியலில் (Tamil Musicology) மொழிக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு பற்றிய இலக்கணம் ஒன்று இருப்பது பற்றி தெரியாமல் அந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன;

என்பதைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

‘'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான, மேலே குறிப்பிட்ட பதிவினை விளங்கிக் கொள்ள முடியாதவர்களும், முயன்றால் விளங்கிக்கொள்ள துணைபுரியும் ஒரு கட்டுரையினை எனது நண்பர் தொல்காப்பியன் அனுப்பியுள்ளார்.

The music in you; You might not be a virtuoso, but you have remarkable music abilities. You just don’t know about them yet’; 

'மொழியின் வளர்ச்சியும், இசையின் வளர்ச்சியும் இணையானவையாகும்' (‘musicality emerges in ways that parallel the development of language’) என்ற உண்மையை, உரிய சான்றுகளுடன் அக்கட்டுரையானது விளக்கியுள்ளது.

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதையே, நான் கண்டுபிடித்துள்ளேன். அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளேன்.

The logic behind the above  ‘parallel’ -applicable to all world languages,  was discovered in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’ in 2013, in The journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677  )

அது மட்டுமல்ல, ' சி வா ' என்ற ஐந்தெழுத்து மந்திரமும், மோகன ராகத்தில் வரும் ' , ரி, , , ' என்ற ஐந்து சுரங்களுடன், மேலே குறிப்பிட்ட 'லாஜிக்' அடிப்படையில் தொடர்புள்ளவையாகும். அதனை பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணம் தெளிவுபடுத்தியுள்ளதையும், ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளேன். பின் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த 'உலக சைவ மாநாடு' ஆய்வரங்கிலும் இடம் பெற செய்தேன். (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html )

நான் நீண்ட காலமாக பொது நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். அந்த சூழலில், பினாங்கில் பெரும்பாலும் தமிழ் அசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், அங்கு வாழும் பேரா.ஆர்.சிவக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்டதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

அண்மையில் மலேசியாவில் பினாங்குத் தீவில் உள்ள 'இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி' அரங்கத்தில், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics in Tholkappiam)  என்ற தலைப்பில், கணினி, ‘கீபோர்ட்  இசைக்கருவி (Music Keyboard) ஆகியவற்றின் துணையுடன் விளக்க உரை நிகழ்த்தினேன். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழ்ப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் சுமார் 100க்கும் அதிகமாக அரங்கை நிரப்பியிருந்தனர்.

பினாங்குத் தீவு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் குழாமும், அரசு கல்வித்துறையும், பினாங்கு சுய மெய்யறிவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அதுவாகும்.
 (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html  )

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'(Musical Linguistics) பற்றி, ‘கீ போர்ட்’(Music Keyboard), கணினி(PPT) ஆகியவை துணையிருந்தாலும், இசையியல்(Musicology), இசை இயற்பியல்(Physics of Music)  பரிச்சயம் இல்லாத தமிழ் ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு,  விளக்குவதில் உள்ள சிரமங்களை அன்று உணர்ந்தேன்.

Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development

Scope to develop lyrical text to music, vice versa, musical grammar check etc NLP products

‘Musical Linguistics in Tholkappiam’(in Tamil) by Dr.Vee (Website: http://drvee.in/ ) on 28.07.2018 in Penang (Malaysia)


யாப்பிலக்கணத்தில் இடம் பெற்ற அசை மற்றும் சீரின் இசையியல் (Musicology) பரிமாணங்கள் மேலே வெளிப்பட்டுள்ளன. யாப்பிலக்கணம் தொடர்பான அசை, சீர், கிளை, 'நீர்' போன்று இன்னும் எந்தெந்த சொற்களுக்கு, இசையியல் பரிமாணங்கள் பற்றிய புரிதல் இன்றி, தமிழ் லெக்சிகனில் வெளிவந்துள்ள பொருள் சரியல்ல? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

அசை, சீர், தூக்கு, கிளை, 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கானஇசை மொழியியல்’ (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்

தமிழில் லெக்சிகனைப் போலவே, உரைகளுக்கும் அடிமையாகாமல், உண்மையைக் கண்டறியும் துணிச்சலுடனும், அறிவுபூர்வ சான்றுகளின் அடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளும் கூடுதல் துணிச்சலுடனும் பயணித்ததாலேயே, தொல்காப்பியத்தில் இசை மொழியியலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, என்னை வியப்பில் ஆழ்த்தியது;

நன்னூல் மூலம் இசை மொழியியலுக்கு கூடுதல் வலிமை சேர்த்த கீழ்வரும் கண்டுபிடிப்பு.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
 இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்"
                                                                                    - நன்னூல் 394

ஆர்வமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கான, மயிலைநாதர் உரையையும், பிற உரைகளையும் படித்து, அதன்பின் கீழ்வரும் விளக்கத்தினை ஆராய்வது பலனளிக்கும்.

மயிலைநாதர் உரையில் வெளிப்பட்ட கீழ்வரும் பகுதியானது, எனக்கு முக்கியமாகப் பட்டது.

"அசைநிலை யிரண்டினும் பொருண்மொழி மூன்றினும், இசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்" என்றார் அகத்தியனார்.

தமிழில் அசை நிலை இரண்டாக நேரசையும், நிரையசையும் உள்ளன.

'இசை நிறைக்கு நான்கெல்லை' என்று நன்னூலும், 'இசைநிறை நான்கினும்' என்று அகத்தியனாரும், எதைக் குறிப்பிட்டுள்ளனர்? என்று அடுத்து ஆராய்வோம்.

தமிழ் இசையியலில் 'நிறுத்தல்' என்ற சொல்லானது, யாழ் நரம்புகளில் 'சுருதி சேர்த்தல்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை, எனது ஆய்வுகள் மூலம் விளக்கியுள்ளேன். ('தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' ‍ 2009; 'நல்லிசை நிறுத்தல்') அது மட்டுமின்றி பாடலில் வரும் அசை, சீர் தொடர்பான நிறுத்தலையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html )

யாழில் சரியாக சுருதி சேர்க்கப்பட்ட நரம்பானது எழுப்பும் 'இசையொடு சிவணி' ஒலி எழுப்பும் எழுத்துக்களைக் கொண்ட பாடல்களையே;

முறையாக பயிற்சி பெற்ற பாடகரால், எழுத்துச்சிதைவின்றி பாட முடியும்;

என்பதை ஏற்கனவே விக்கியுள்ளேன்.

தமிழில் திரை இசையில், சுருதிச்சிதைவுள்ள பாடல்கள் செல்வாக்கு பெற்ற போக்கில்; புதுக்கவிதை மோகத்தில், கவிஞர்கள் சுருதி சுத்தமற்ற எழுத்துக்களைக் கொண்ட பாடல்களை எழுதிய போக்கும்;

யேசுதாஸ் அளவுக்கு முறையான நீண்ட இசைப்பயிற்சியற்ற பாடகர்கள் அப்பாடல்களைப் பாடிய போக்கும், சுருதி சுத்த இசை அறிவற்ற அல்லது வியாபார நோக்கில்,

இசை அமைப்பாளர்கள் அப்பாடல்களை அனுமதித்த போக்கும்;

முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு உதவக்கூடியதாகும்.

பாடலில் எழுத்தொலியின் மூலம் உருவாகும் இரண்டு வகை அசைகளும் சேர்ந்து உருவாக்கும் சீர் என்பதானது;

'பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகியவற்றை தன்னுள் கொண்டிருக்கும் என்பதைச் சிலப்பதிகாரம் ( அரங்கேற்று காதை 26 உரை) விளக்கியுள்ளது.

"அசையும் சீரும் இசையுடன் சேர்த்தி
 வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே'

என்று விளக்கிய தொல்காப்பியம் (செய்யுளியல் 10) கீழ்வரும் சூத்திரத்தில்;

"இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்
 அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே" (செய்யுளியல் 26)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு பாடலில் இசை நிறுத்தலானது எவ்வாறு இடம் பெற்றுள்ளது? என்பதைக் கீழ்வரும் சான்றுகள் விளக்கியுள்ளன.

'நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
 தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
 எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,'
-          அகநானூறு 352:13 –‍ 15

'பண்ணுமை நிறீஇயோர் பாணி கீதம்'
-          பெருங்கதை 35: 100 101

பாடலில் வரும் சீர்கள் எல்லாம் தூக்குகள் வழியாக பாணியை உருவாக்கி, எவ்வாறு பண்ணை வழி டத்தும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

எனவே பாடலில் வரும் இசை நிறுத்தலானது;

'கொட்டு, அசை, தூக்கு, அளவு' என்ற நான்கின் கட்டுப்பாட்டிற்குள் நடைபெறுகிறது.

எனவே 'இசை நிறைக்கு நான்கெல்லை' என்று நன்னூலும், 'இசைநிறை நான்கினும்' என்று அகத்தியனாரும், அந்த நான்கினையே குறிப்பிட்டுள்ளனர்;

என்பது தெளிவாகிறது.

பாடல் என்பதானது இசை இன்பத்துடன் பொருந்தும் வகையிலான பொருளை ள்ள‌டக்கமாகக் கொண்டதாகும். எனவே 'ஓசையாக' பேச்சில் இடம் பெறும் எழுத்தின் ஒலியானது, பாடலில் 'இசையாக' செவியில் உணரப்படும் வகையில் ஒலிக்க வேண்டும். எனவே பாடலில் இடம் பெறும் எழுத்தின் ஒலிக்கு இரண்டு பணிகள் இசை நோக்கிலும், பொருள் நோக்கிலும் உள்ளன. எனவே மேலே குறிப்பிட்ட நன்னூல் சூத்திரத்தினை அந்த வழியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

" 'அசை நிலை' மற்றும் 'இசை நிறை' ஆகியவற்றுடன் 'பொருள் நிலை' கொண்டுள்ள தொடர்பினை, கீழ்வரும் சூத்திரம் விளக்கியுள்ளது.

'புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவும்,
 வேற்றுமைப் பொருள் வயின் உருபு ஆகவும்,
 அசைநிலைக்கிளவி ஆகி வருநவும்,
 இசைநிலைக் கிளவி ஆகி வருநவும்,
 தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும், என்று
 அப் பண்பினவே, நுவலும் காலை. (2)

 'அவைதாம்,
  முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்,
  தம் ஈறு திரிதலும், பிறிது அவண் நிலையலும்,
  அன்னவை எல்லாம் உரிய' என்ப." (3)
                - தொல்காப்பியம் இடை இயல்

ஒரு மொழியின் முக்கிய நோக்கமே தகவல் பரிமாற்றம் ஆகும். அந்த தகவல் பரிமாற்றத்தில் ஒரு சொல் இடம் பெறும் நிலையானது, அந்த சொல்லின் பொருளைப் பொறுத்து அமையும். மேலே குறிப்பிட்ட சான்றில், 'பொருள் நிலை' என்பதானது,''புணரியல் நிலையிடைப் பொருள் நிலை' என்பது தொடர்பாக இடம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தேடும் 'பொருள்' நிலை என்பதானது, பாடலுடன் தொடர்புடைய‌ 'அசைநிலை' மற்றும் இசைநிறை' ஆகியவற்றுடன் தொடர்புள்ள 'பொருள் நிலை' ஆகும்.

அது தொடர்பான விளக்கமானது, கீழ்வரும் சூத்திரத்தில் உள்ளது.

" 'இசை நிறை, அசை நிலை,பொருளொடு புணர்தல், என்று
   அவை மூன்று' என்ப 'ஒரு சொல் அடுக்கே'
                        - தொல்காப்பியம்: எச்ச இயல்: 15

'தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
அம் மூஇடம்' தொடர்பான தொல்காப்பிய சூத்திரம் வருமாறு:

" 'செலவினும், வரவினும், தரவினும், கொடையினும்,
  நிலை பெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்,
  தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
  அம் மூஇடத்தும் உரிய' என்ப"
          -          தொல்காப்பியம் -கிளவி ஆக்கம்: 28

அத்துடன் தொடர்புடைய நன்னூல் சூத்திரம் வருமாறு:

 "தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே" - நன்னூல் 265

நன்னூல் சூத்திரத்தில் உள்ள 'பொருள் நிலை' என்பதானது, அகத்தியனாரால் 'பொருள் மொழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; 'ஒரு சொல் முறை அடுக்கும்' என்று நன்னூலும், 'ஒரு மொழி தொடரும்' என்று அகத்தியனாரும் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.

'முறை அடுக்கும்' என்ற சொல்லானது 'வரிசையில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இடம் பெறச் செய்தல்' என்ற பொருளில், 'ஒரு சொல் முறை அடுக்கும்' என்பதைக் குறிக்கிறதா?

'தொடரும்' என்ற சொல்லானது 'வரிசையில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தொடராக இடம் பெறச் செய்தல்' என்ற பொருளில், 'ஒரு மொழி தொடரும்' என்பதைக் குறிக்கிறதா?

என்பதும் ஆய்விற்குரியதாகும். 

எனவே 'பொருள் நிலை மூன்று' என்று நன்னூலும், 'பொருண்மொழி மூன்று' அகத்தியனாரும் குறிப்பிடுவது ஒன்றா? அல்லது வேறா? என்பதனையும் ஆராய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்

தொல்காப்பியத்தில் வரும் 'ஓசை' மற்றும் 'இசை' ஆகிய சொற்களின் வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு, தொல்காப்பிய விதிகளைப் புரிந்து கொண்டு, அந்த பின்னணியில், மேலே குறிப்பிட்ட ஆய்வில் முயல்வதே பலன் தரும்.

உரைநடையில் சொல்லாக இடம் பெறுவதானது, பாடலில் அசைகளாகப் பிரிந்து சீர்களாக சேர்ந்தே இடம் பெறும். 'இசைநிறை' பற்றி குறிப்பிட்டுள்ளசூத்திரமானது பாடலுக்கான சூத்திரமாகும். எனவே நன்னூல் சூத்திரத்தில் இடம் பெற்ற 'சொல்' என்பதை விட, அகத்தியனார் சூத்திரத்தில் இடம் பெற்ற, 'மொழி' சூத்திரமே, சூத்திரத்தில் புதைந்துள்ள பொருளுக்கு ஏற்றதாகும்;

என்பது எனது கருத்து.

பாடலில் சொல்லானது அசையாக பிரிந்து, சீராக சேர்ந்து, பாடலின் சுர இசைக்கும், தாளத்திற்கும் பொருத்தமாக எவ்வாறு இடம் பெறும்? என்பது தொடர்பான நுட்பத்தினைக் கண்டுபிடித்து, சுமார் 25 வருடங்களுக்கு முன், மறைந்த வே.கிருட்டிணமூர்த்தியின் 'ஆய்வு வட்ட வெளியீடு' நூலில், 'சீரும் இசையும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. பின் அதனை மேம்படுத்தி, கீழ்வரும் இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளேன்.

பாடலில் இடம் பெறும் சொல் தொடர்பான மேலே குறிப்பிட்ட நுட்பத்துடன் தொடர்புடையதாக, மேலே குறிப்பிட்ட நன்னூல் சூத்திரஆராய்ச்சியானது இடம் பெறும்


உரைநடையில் சொல்லாக இடம் பெறுவதானது, பாடலில் அசைகளாகப் பிரிந்து சீர்களாக சேர்ந்தே இடம் பெறும்போது;

'பொருள் நிலைக்கு உதவும்' வகையில், 'முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்' ஆகிய இரண்டு நிலைகளொடு, மூன்றவதாக பாடலில் அசையாகப் பிரிந்து, சீராக சேரும்போது, 'தம் ஈறு திரிந்து' அவ்வாறு நிலை பெறுவதும்;

என்றே, மேலே குறிப்பிட்ட தொல்காப்பியம் இடை இயல் (2 & 3) சூத்திரங்களை நான் புரிந்து கொண்டுள்ளேன். எனது புரிதல் தொடர்பான விமர்சனங்களையும், நான் வரவேற்கிறேன்.


தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணமானது, உலகமொழிகளுக்கான இசைமொழியியல் இலக்கணமாகும்;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'; 

பொறியியலில் ECE, Computer Science, உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்களும், மக்குள்ள தமிழறிவு போதுமா? என்று குழம்பாமல், தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் எவ்வாறு புதையல் வேட்டையைத் தொடங்குவது?

என்ற இரகசியத்தைக் கீழ்வருவதில் வெளிப்படுத்தியுள்ளேன்.


அந்த முயற்சியில் இறங்கி, அதன்பின் அவர்கள் தமிழில் முதுநிலைப்பட்டம்/பிஎச்.டி பெற்ற மாணவர்களில் ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் கூட்டாக‌;

இசை மொழியியல்அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில்  ஈடுபடுவதானது, அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்தகைய முயற்சிகள் அவர்களை 'செயற்கை அறிவாற்றல்'(Artificial Intelligence) துறையில் இன்னும் உயர்ந்த பணிகளுக்கு அழைக்கும் நுழைவாயிலாக அமைந்தாலும் வியப்பில்லை

No comments:

Post a Comment