தமிழ் இதழ்கள் இன்னும் 10 வருடங்களுக்குள், 'வாசகர் வீழ்ச்சி சுனாமி'யைச் சந்திக்க இருக்கும் அபாய எச்சரிக்கை;
தமிழ் சிக்கியுள்ள ‘நம்பகத்தன்மை நெருக்கடி' (credibility
crisis)?
'குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி, தமிழ் நூல்களையும், இதழ்களையும் (எனது தமிழ்ப் பதிவுகள் உள்ளிட்டு) படிக்கும் வாசகர்கள் எல்லாம் பெரும்பாலும் 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கும் சூழலில், தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்களும், இளைஞர்களும் அதிவேகமாக எண்ணிக்கையில் வளர்ந்து வருவதையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன் ( http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
தமிழ் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்கள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே. ஆங்கில வழியில் படித்த சுமார் 40 வயதுக்கும் குறைவானவர்களில் எவரும் காசு கொடுத்து, வாங்கியதை நான் பார்த்ததில்லை. தமிழ் வாசகர்களையே நம்பி நடத்தப்படும் 'பெரியார்' ஆதரவு/எதிர்ப்பு இதழ்கள் உள்ளிட்டு அனைத்து கட்சிகளின் தமிழ் இதழ்கள் 'தினத்தந்தி', 'தினமலர்', 'தமிழ் இந்து', 'தினமணி' போன்ற இன்னும் பல, தமிழ் இதழ்கள்; இன்னும் 10 வருடங்களுக்குள், 'வாசகர் வீழ்ச்சி சுனாமி'யைச் சந்திக்க இருக்கும் அபாய எச்சரிக்கையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/06/httptamilsdirection.html
)
இன்றைக்கு தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத, மாணவர்களாகவும், இளைஞர்களாகவும், இருப்பவர்கள் எல்லாம் சுமார் 10 வருடங்களுக்குப் பின் பயணிக்கும் போக்கில், அரசியல் உள்ளிட்டு தமிழ்நாட்டில் இப்போது 'செல்வாக்குடன்'(?) இருக்கும் கட்சிகளில் சுவடின்றி காணாமல் போகும் கட்சிகள் எவையாக இருக்கும்? என்ற கேள்விக்கு;
அவரவர் அறிவு மற்றும் அனுபவ அடிப்படைகளில் ஆராய்ந்து விடைகளைப் பெறலாம்.
மற்றபடி இன்றுள்ள தமிழ்/தமிழர்/திராவிட/ தேசிய/ பொதுவுடமை உள்ளிட்ட இன்னும் பல அமைப்புகளுடன் தொடர்பின்றியே, பொதுத்தேர்தல்களின் முடிவுகளை நிர்ணையிக்கும், பெரும்பாலான மாணவர்களும், இளைஞர்களும் , பெண்களும், சாமான்யர்களும் பயணித்து வருகிறார்கள்; அனல் பறக்கும் தொலைபேசி விவாதங்களை பார்க்கும் ஆர்வமின்றியே.
‘தமிழ்நாட்டில் ஆதாய அரசியல் மூலம் விளைந்த அரசியல் நீக்கத்தின்
(Depoliticize) காரணமாக, தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில் தொடர்பு முறிவானது (link breaking) அதிவேகமாக அதிகரித்து வருகிறது; ஊடகங்களையும், கருத்துக் கணிப்புகளையும் முட்டாளாக்கி வருகிறது.’
'விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் வாசகர்களும், சமூக முதுகெலும்பு முறிந்து, 'நோகாமல் நொங்கு சாப்பிடும்' திசையில் பயணித்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்ததானது மரணவாயிலை நெருங்கி விட்டது.' என்பதையும்;
தமிழர்களின் வாழ்வில் அகம், புறம் ஆகிய இரண்டு புலங்களிலும் பலன் தரக்கூடிய வகையில், தமிழின் அடுத்த கட்ட புலமை வளர்ச்சியானது பயணித்தாக வேண்டும். தமிழரின் தர அடையாளத்தை
(benchmark) உயர்த்தவும் அதுவே சரியான வழியாகும். 'என்பதையும்; (‘சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்', தமிழைச் சீரழித்தது இனி தொடராது’ என்பதையும்;; http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html
)
ஏற்கனவே விளக்கியுள்ளேன். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களும், இளைஞர்களும்
தமிழில்
எழுதவும் படிக்கவும் ஆர்வம் காட்டும் போக்கினை எவ்வாறு உருவாக்குவது?
என்பதை இந்தப் பதிவில் ஆராயலாம்.
மேக்ரோ உலகத்தில் மீடியா வெளிச்சத்துடன் வலம் வரும் தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டு எவராயிருந்தாலும்;
நமக்கு ஆர்வம் உள்ளவை தொடர்பாக வெளிப்படும் கருத்துக்களே:
அதிலும் நமது நம்பகத்தன்மையில் தேறிய மனிதர்களிடம் வெளிப்படும் கருத்துக்களே:
நமது கவனத்தை ஈர்க்கும்.
‘முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல், ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
சினிமா, கிரிக்கெட், காதல், அடுத்த படிப்பு/வேலை, இடையில் தமது செலவுகளுக்காக வருமானம் (பகுதி நேர வேலை, செல்ஃபொன்/தங்க நகை திருட்டு, etc)
என்று அவரவருக்கு ஆர்வமும், திறமையும் உள்ள திசைகளில் பயணித்து வரும் மாணவர்களை;
தமிழ் மீது ஆர்வம் கொள்ளும் திசை நோக்கி திருப்ப வேண்டுமானால்;
தமிழால் அவர்கள் உணரும் பலன்களை வெளிப்படுத்தி, அவற்றை அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேக்ரோ உலகமானது ஆதாய அரசியலின் வலிமையில் வளர்ந்து உச்சத்தில் உள்ள 'அரசியல் நீக்கம்' (Depoliticize)
முடிவுக்கு வரும் வரையில்;
சினிமா உள்ளிட்ட பொழுது போக்கு சம்பந்தப்பட்ட துறைகள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத்துறைகள், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 'சாதனையாளர்கள்' எல்லாம், அந்தந்த துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களின், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிற போக்கானது தொடரும்; அந்த வரிசையில் கட்சித் தலைவர்கள் இடம் பெற முடியாத அளவுக்கு.
மீடியா வெளிச்சத்திற்கு வராமல், மைக்ரோ உலகில் தத்தம் சமூக வட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வியக்கும் அளவுக்கு சாதனை புரிந்தவர்களும், அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
அவ்வாறு அவர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சாதனையாளர்கள் தமது வாழ்வில் எந்த அளவுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், பாராட்டு மற்றும் புகழ் ஏக்கமின்றியும் வாழ்கிறார்கள்? என்பதை அவர்கள் கவனித்து, அதற்கு ஏற்ற அளவிலேயே, அந்த சாதனையாளர்களின் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
அவ்வாறு எனது சமூக வட்டத்தில் வரும் மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்ப்பவர்களில் ஒருவராக நான் பயணித்தாலும் (http://drvee.in/);
அந்த ஈர்ப்பினை தமிழை நோக்கித் திருப்புவதும் கடினமே;
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.
மைக்ரோ உலகத்தில் வளரும் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் தவறான முன்மாதிரிகளாக
(bad role model) இருக்கும் பெற்றோர்கள், நெருக்கமான உறவினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெரியவர்களில் பெரும்பாலோர், மனசாட்சியின்றி ஊழல் வழிகளிலும், தன்மானமிழந்து வாலாட்டும் வழிகளிலும், பணம் ஈட்டுவதையே வாழ்வின் முதன்மை நோக்கமாக வெளிப்படுத்தி வாழ்ந்து வரும் சூழலில்;
மேற்குறிப்பிட்ட நபர்களில் பலருக்கு, 'பகுத்தறிவு, சமூக நீதி, ஆன்மீகம்' போன்ற இன்னும் பல முகமூடிகள் ப்யன்பட்டு வரும் சூழலில்;
தமிழ் ஆணிவேர் இழந்து, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாமல், மேற்கத்திய மோக நுகர்வு பண்பாட்டில், தமிழ்நாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் சிக்கி வளர்ந்து வரும் போக்கில்;
தமிழ் ஆணிவேர் இழந்து, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாமல், மேற்கத்திய மோக நுகர்வு பண்பாட்டில், தமிழ்நாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் சிக்கி வளர்ந்து வரும் போக்கில்;
குவார்ட்டர், பிரியாணி, மோட்டர் சைக்கிள் டேங்க் நிரம்பும் அளவுக்கு பெட்ரோல் வாங்கிக் கொண்டு கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்வதையும், செல்ஃபொன், தங்க நகை திருட்டு, etc,
போன்றவற்றில் ஈடுபட்டு, கிடைக்கும் பணத்தில் தாங்கள் 'ஏங்கும்' அதிக விலையுள்ள பொருட்களை வாங்கி, எஞ்சிய பணத்தில் தங்கள் நண்பர்களுடன் 'உல்லாசமாக'(?) பொழுதைக் கழிப்பதையும்;
குறை சொல்ல முடியுமா?
திருட்டு, ஊழல், அச்சுறுத்தி அல்லது கொலை செய்து தனியார் சொத்துக்களை அபகரித்தல் போன்ற இன்னும் பல பொது ஒழுக்கக்கேடான வழிகளில் அதிவேக அதீத பணக்காரர்களாக வலம் வருபவர்களை தலைவர்களும், பத்திரிக்கை அதிபர்களும், முற்போக்கு, புரட்சி, ஆன்மீகம், வேடங்களில் வலம் வரும் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தரிசித்து வரும் தமிழ்நாட்டில்:
மேலே குறிப்பிட்ட போக்கில், மாணவர்களும், இளைஞர்களும், தங்கள் நண்பர்களுடன் 'உல்லாசமாக'(?) பொழுதைக் கழிப்பதை குறை சொல்ல முடியுமா?
வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும், வகுப்புக்கு வராமல் 'ஜாலியாகப்' பொழுதைக் கழிக்கும் மாணவர்களுக்கும் இடையில் இருந்த 'இடைவெளி' மறைந்து;
வகுப்பில் ஒழுங்காக நடந்து கொண்டு, நல்ல மதிப்பெண் எடுத்து ஆசிரியர் மதிக்கும் மாணவர்களில் சிலர், ஆசிரியர் வருகைப்பதிவு எடுக்கும்போது, வகுப்பிற்கு வராத 'ஜாலி' மாணவருக்கு, அந்த 'நல்ல'(?) மாணவர் 'பிராக்சி' குரல் கொடுத்து, ஆசிரியரை ஏமாற்றுவதையும் குறை சொல்ல முடியுமா?
மேலே குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகிற்கும்', 'மேக்ரோ உலகிற்கும்' இடையில் தொடர்பு முறிவானது (link breaking) அதிவேகமாக அதிகரித்து வருவதன் விளைவே, மேலே குறிப்பிட்ட போக்குகள் ஆகும்;
என்பதும் விவாதத்திற்குரிய எனது ஆய்வு முடிவாகும்.
திருட்டு, ஊழல், அச்சுறுத்தி அல்லது கொலை செய்து தனியார் சொத்துக்களை அபகரித்தல் போன்ற இன்னும் பல பொது ஒழுக்கக்கேடான வழிகளில் அதிவேக அதீத பணக்காரர்களாக வலம் வருபவர்களை எல்லாம், சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர் 'மதித்து நெருக்கமாகி'(?) வரும் தமிழ்நாட்டில்;
தமிழ்நாட்டில் தமிழ் வாசகர்களாக இருக்கும் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடம் தனிப்பட்ட முறையில் நாம் இயல்பான அன்புடனும், நேர்மையுடனும் பழகினால், அவர்களில் அகத்தில் சுயலாபக் கணக்குகளுடன் நம்மிடம் பழகுபவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள்? அதிலும் 'பெரியார்' ஆதரவுப் போக்கில் உள்ளவர்கள் இன்னும் எவ்வளவு மோசமானவர்கள்?
என்ற எனது அனுபவங்களின் பின்னணியில்;
மேலே குறிப்பிட்ட மாணவர்களிடம் இயல்பான அன்புடனும், நேர்மையுடனும் நாம் பழகினால், அவர்கள் மேலே குறிப்பிட்ட ஒப்பீட்டளவில் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து வேறுபட்டு;
பிரமிக்கும் வகையில் அதே அன்புடனும், நேர்மையுடனும் பழகுகிறார்கள்;
என்பது எனது நிகழ்கால அனுபவங்கள் ஆகும்.
எனது ஆய்வுகள் மூலமாக ஈர்க்கப்பட்டாலும்;
அவர்களின் ஆர்வத்தைத் தமிழ் நோக்கியும் திருப்ப, நான் எடுத்து வரும் முயற்சிகளில் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. உதாரணத்திற்கு ஒன்று: சுமார் 40 கி.மீ பயணம் செய்து, என்னிடம் கணினி மூலம் இசை அமைக்கும் பயிற்சி பெற்று வந்த மாணவரிடம், ஏ.ஆர். ரகுமான் பற்றி ஒரு பிரபல வார இதழில் வெளிவந்த அட்டைப்பட கட்டுரையைப் படித்துப் பார்க்குமாறு, நான் காட்டினேன். ஒரு புரட்டு புரட்டிப் பார்த்து விட்டு, படிக்காமல் மேசையில் வைத்து விட்டார்.
ஆங்கில வழியில் படித்த தமிழ்க் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும், 'தமிழ் தேவையில்லை' என்று கருதும் அளவுக்கு, தமிழ்நாட்டில் தமிழுக்கு ஒரு ‘நம்பகத்தன்மை நெருக்கடி' (credibility crisis) ஏற்பட்டுள்ளது. தமிழின் நம்பகத்தன்மை இழப்பும், தமிழர்களின் நம்பகத்தன்மை இழப்பும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது?
ஆங்கில வழியில் படித்த தமிழ்க் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும், 'தமிழ் தேவையில்லை' என்று கருதும் அளவுக்கு, தமிழ்நாட்டில் தமிழுக்கு ஒரு ‘நம்பகத்தன்மை நெருக்கடி' (credibility crisis) ஏற்பட்டுள்ளது.
என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
தமிழில் அடுக்கு மொழியில் உணர்ச்சிகரமாக ஒரு தலைவரை வானளாவப் பாராட்டுவதும், பின் அதே தலைவரை மிகவும் மோசமான சொற்களால் இழிவுபடுத்துவதும், மீண்டும் அதே தலைவரை கூச்சமின்றி வானளாவப் புகழ்வதும்;
என்ற சுயலாப அரசியல் போக்கிற்கு தமிழ் மொழியானது பயன்பட்டு, அவை எல்லாம் இணையங்களில் வெளிப்பட்டு வருவதும் ஆகிய போக்குகள் காரணமாக;
தமிழும், தமிழுணர்வும், மாணவர்களின், இளைஞர்களின் பார்வையில் கேலிப்பொருளாகி வருவதை எல்லாம், குறை சொல்ல முடியுமா?
விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் வாசகர்களும், சமூக முதுகெலும்பு முறிந்து, 'நோகாமல் நொங்கு சாப்பிடும்' திசையில் பயணித்த போக்கிற்கும் (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html
);
தமிழ்நாட்டில் தமிழுக்கு ஒரு ‘நம்பகத்தன்மை நெருக்கடி '
(credibility crisis) ஏற்பட்டுள்ளதற்கும் இடையில் உள்ள தொடர்பினை;
எந்த தனிப்பட்ட நபரையும் இழிவுபடுத்தாமல், தீர்வுக்கான அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.
ஒரு மொழியின் நம்பகத்தன்மை என்பதானது நிலை ஆற்றலைப் (Potential
Energy) போன்றதாகும். கல்வியிலும், புலமையிலும் உயர்ந்தவர்களின் உழைப்பின் மூலமே, அந்த நிலை ஆற்றலானது அதிகரிக்கும். அந்த மொழியின் இலக்கியங்களில் உறைந்த நிலையிலுள்ள
(frozen)
புலமை ஆற்றல்கள் எல்லாம், சமூகத்தில் வாழும் புலமையாளர்கள் மூலமாக, சமூகத்திற்கான நிலை ஆற்றலாக மீளும். அறிவுபூர்வ விமர்சனங்கள் அந்த சமூகத்தில் ஒதுக்கப்படும் போது, அவ்வாறு மீண்டதானது, 'திரிந்த சமூகப் பாலாகி', அந்த சமூகத்திற்கே கேடாகும்; தேவநேயப் பாவாணரின் 'லெமூரியா' கருத்தினை இன்றும் ஏற்றுப் பயணிப்பது போலவே.
(http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html )
மக்களிடம் அந்த மொழிக்கு உள்ள செல்வாக்கானது, அந்த நிலை ஆற்றலின் அளவைப் பொறுத்ததாகும்.
அந்த செல்வாக்கினை பேச்சாகவும், எழுத்தாகவும், கட்சிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தமது 'லாபங்களுக்காக' பயன்படுத்தும் போக்கில், அந்த நிலை ஆற்றலானது, இயக்க ஆற்றலாக
(Kinetic Energy) செலவாகும்.
கல்வியிலும், புலமையிலும் உள்ள செல்வாக்கினை இழக்கும் போக்கில், மேலே குறிப்பிட்ட வழியில், நிலை ஆற்றலானது
இயக்க ஆற்றலாக செலவாகி வற்றி, அந்த மொழியினை ‘நம்பகத்தன்மை நெருக்கடியில்' சிக்க வைத்து விடும்; மாணவர்களையும், இளைஞர்களையும் விட்டு அந்த மொழியானது விலகுவது, அதன் வெளிப்பாடாகும்; அந்த மொழியானது 'வாசகர் வீழ்ச்சி சுனாமி'யைச் சந்திக்க இருக்கும் அபாய எச்சரிக்கையின் அறிகுறியாக. 'அந்த சுனாமியே' அந்த மொழியின் மரணப்பயணத்தின் துவக்கமாக அமையும்.
அடுக்கு மொழியில் உணர்ச்சிகரமாக தமிழைப் பயன்படுத்தும் 'திறமைசாலிகளின்'(?) செல்வாக்குகளின் வீழ்ச்சிப் போக்கும், ஏரிகள் தூர் வாருதல், மக்களுக்கு நேரடியாக உதவிகள்(?) புரிதல், போன்ற இன்னும் பல நடவடிக்கைகள் மூலமே மக்களை 'நெருங்க முடியும்' என்ற நெருக்கடியில் கட்சிகள் சிக்கியுள்ள போக்கும்;
‘நம்பகத்தன்மை நெருக்கடியில்' இருந்து தமிழானது மீளும் வாய்ப்பிற்கு வழி வகுத்துள்ளது.
எனது ஆய்வுகள் மூலமாக ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் இளைஞர்களின் ஆர்வத்தைத் தமிழ் நோக்கியும் திருப்ப, நான் எடுத்து வரும் முயற்சிகளில் இன்னும் வெற்றி பெற முடியவில்லை, என்றாலும்;
நான் நம்பிக்கை இழக்காமல் 'இசைத்தகவல் தொழில் நுட்பம்'
(Music Information Technology) மற்றும் இசை மொழியியல்
(Musical Linguistics) தொடர்புடைய 'Natural
Language Processing ' ஆய்வுகள் மூலமாக;
உலகப்பல்கலைக்கழகங்களில் தொல்காப்பியம் அடிப்படையிலான 'இசை மொழியியல்'
(Musical Linguistics) துறையும், 'கணினி இசை மொழியியல்'
(Computational Musical Linguistics) துறைகளும் உருவாகி வளரும்;
புதிய தொழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் வெளிப்படும் பலன்கள் அவர்களின் கண்களைத் திறக்கும்;
என்ற நம்பிக்கையுடன் நான் பயணிக்கிறேன். என்னைப் போன்றே முயல்பவர்கள் இன்னும் பலரும் இருக்கக் கூடும். அவற்றின் தொகுவிளைவாக
(Resultant);
தமிழ் சிக்கியுள்ள ‘நம்பகத்தன்மை நெருக்கடி'யிலிருந்து விடுதலை பெற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்வமானது, தமிழை நோக்கி திரும்பும் காலமும் அதிக தொலைவில் இல்லை. அதன் தொடர்ச்சியாக, புத்திசாலி பெற்றோர்கள் எல்லாம், ஆரம்பப்பள்ளி வரையிலாவது தமது குழந்தைகளை தாய்மொழிவழிக்கல்வியில் படிக்க வைத்து, அந்த குழந்தைகளின் புலன் அறிவு மூளை வளர்ச்சிக்கு
(Cognitive Skills Development) அது துணை புரிந்து, ராமானுஜம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்கிய திசையில், மீண்டும் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கும். (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html
)
குறிப்பு: எனது சமுக வட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'தவறான முன்மாதிரி' நபர்கள் எவரும் நீடிக்கிறார்களா? என்று கண்காணித்து, அவர்களை அகற்றி வருவதும், தமிழின் மரணப்பயணத்திற்கு எதிரான போராட்டமாகவே கருதி, நான் பயணிக்கிறேன்.
No comments:
Post a Comment