Wednesday, May 30, 2018

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (5);



கடந்த 40+ ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததானது வீணடித்ததாகுமா? சீரழித்ததாகுமா?



துக்ளக்கில் என்னை அறிமுகப்படுத்தி வெளிவந்துள்ள கட்டுரையின் விளைவாக, சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வந்த மெளனமானது உடைந்து, எதிர்வினைகள் தொடங்கியிருப்பதை சென்ற பதிவில் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதன் தொடர்ச்சியாக, கீழ்வரும் பின்னூட்டமானது, இந்த பதிவிற்கு அடித்தளமானது.

ஆட்சி அதிகாரம் நம் கையில் கடந்த 40+ ஆண்டுகள் இருந்தும் வீணடித்து விட்டோம் என்பதால் அதற்கு முன்பு இருந்தவை எல்லாம் சரியாகி விடாது; திராவிட இயக்க எழுச்சிகள் எல்லாம் தவறாகி விடாது. “

"அதற்கு முன்பு இருந்தவை எல்லாம் சரியாகி விடாது;" என்று கருத்துள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் பார்வைக்கு

தி.மு.கவைப் பற்றி 1949 முதல் 1967 வரை .வெ.ரா வெளியிட்ட கருத்துக்கள் எல்லாம் சரி என்றால், எவ்வளவு மோசமான சமூக நச்சு சக்திகளிடம் 1967இல் தமிழக அரசு சிக்கியது என்பது தெளிவாகும். 1967க்குப்பின் .வெ.ராவும் முதல்வர் அண்ணாவும் இணக்கமாகியும், இருவருமே அந்த சமூக நச்சு சக்திகளிடம் தோற்றதன் வெளிப்பாடுகளாகவே;

'பொதுவாழ்வில் வெறுத்து முனிவராகும் எண்ணம்' .வெ.ரா அவர்களுக்கு வந்தது.

மருத்துவமனையில் தம்மை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம், 'விரைவில் மரணமடைய விரும்புவதாக' தெரிவிக்கும் சலிப்பும் அண்ணாவுக்கு வந்தது.

அதற்கு காரணமான சமூக சக்திகள் எல்லாம் 'அரசியல் நீக்கம்'(Depoliticize) மூலம் 'ஆதாய அரசியலை' உரமூட்டி வளர்த்து, உச்சக்கட்ட சீரழிவில் ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும், மரணத்திற்கும் காரணமாகி, 'அரசியல் அமாவாசைகளின் புரட்சியைத் தூண்டி', மக்களிடம் அம்பலமாகி, மரணத்தை நெருங்கி விட்டன. (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

1944க்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது? என்பது பற்றி நான் அறிந்தவைகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

1965 முதல் (இன்றும் இருட்டில் உள்ள, தி.மு. ஆட்சிக்கு வந்த பின்னும் தொடர்ந்த) 1968 வரை, கல்லூரி மாணவனாக இருந்து,  திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்ட, தி.மு. ஆதரவு மாணவராக பயணித்த நான், 1967க்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது? என்பது பற்றி நான் அறிந்தவைகளையும், ஏற்கனவே எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டிலேயே இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அந்தந்த மொழிகளில் இல்லாத அளவுக்கு, அதிவேகமாக அதிகரித்து வருவதும், குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வருவதும், சங்க காலம் முதல் 1967 வரை 'ஆக்கிரமிப்புக்கு' உள்ளாகாத ஏரிகளும், ஆறுகளும், கல்வெட்டுகளும் வேகமாக 'மறைந்து வருவதும்', அண்டை மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் தமிழ்நாட்டின் மீதிருந்த பயம் நீங்கி, 'கச்சத்தீவை' இழந்து, 'காவிரி, பெரியாறு' போசடிகளுக்கு உள்ளாகி வருவதும்;

1967க்கு முன் வாழ்ந்த எவராலும் நம்பமுடியாத 'சீரழிவு சாதனைகள்' ஆகும்

'ஆட்சி அதிகாரம் நம் கையில் கடந்த 40+ ஆண்டுகள் இருந்தும் வீணடித்து விட்டோம்' என்ற நிலைப்பாடானது, திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அரண் ஆகாதா? 'திராவிட அரசியல் அமாவாசைகள் செயல்நுட்பத்திற்கு' 'பெரியார்' பெயரில் பாதுகாப்பு அரண்கள் செயல்பட்டதற்கும், 'அந்த நியாயமே'  காரணமானதா?

இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, .வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

இந்திய ஊழல் கோரப்பசியாளர்களிடம், செல்வாக்கை இழந்த, மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன் உருவானது தான், 'ஆம் ஆத்மி கட்சியா'? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளும் வெளிவரத்தொடங்கியுள்ளன

சசிகலா வலைப்பின்னலில் இடம் பெற்ற‌ 'பெரியார்' ஆதரவாளர் அக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலப்பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெற்று; கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில 'பெரியார்' ஆதரவாளர்களும் அவருக்கு பக்க பலமாக பங்களித்து.

இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்.  வெள்ள நிவாரணப் பணியில் பங்களித்த, கட்சிசாரா இளைஞர்களும், மாணவர்களும், 'மூல காரணத்தை' தேடி, கண்டுபிடித்து, அவர்களின் கோபமானது, சென்னை வெள்ளம் போல, பெருக்கெடுப்பதற்கு முன், 'பெரியார்' சமூக கிருமிகளிடமிருந்து, '.வெ.ரா'வைக் காப்பாற்ற முடியுமா? அதிலும் சுமார் 50 வருடங்களுக்கு முன் வெளிப்படுத்திய, 'தமிழ், மதுவிலக்கு, திராவிடர் 'இனம்' (?)' தொடர்பான நிலைப்பாடுகளை, .வெ.ரா அறிவுறுத்தியபடி, 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், இன்றும் அந்த பழைய நிலைப்பாடுகளையே (சுயநல போக்கிலோ அல்லது 'திராவிட' மனநோயாளியாகவோ) முன்னிறுத்தினால், 'தமிழ், தமிழர்' பகையாக 'பெரியாரை' முன்னிறுத்தும், 'பெரியார் எதிர்ப்பாளர்களின்' சூழ்ச்சிக்கு துணை போய், 'பெரியாரை' தமிழ்நாட்டு மக்களின் 'கோப வெள்ளத்திற்கு' இரையாக்கி விடாதா, .பொ.சி, பெங்களுர் குணா வழியில், வழக்கறிஞர் பா. குப்பனின்தமிழரின் இனப்பகை . வெ. ராபோன்ற நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில்?

இவை பற்றிய புரிதலின்றி, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து அந்நியமாகி, 'நீண்ட காலம்' பயணித்து,  'உணர்ச்சிபூர்வ வழிபாட்டு போக்கில்' தொடர்ந்து பயணிக்கும் 'பெரியார்' கட்சிகள் எல்லாம், 'விழித்துக் கொள்ளவில்லையென்றால்', 'பெரியார் சமூக கிருமிகளின்' துணையோடு, விடுதலைப்புலி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினராக உள்ள‌,  'பெரியார்' எதிர்ப்பாளர்கள் (அவர்களில் யார்? யார்? 1980களில் 'கடும் நிதி மற்றும் தமிழ்நாட்டில் 'சமூக வெளி' -social space- நெருக்கடிகளிலும் இருந்த, விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள்)   வினையூக்கியாக (catalyst)  செயல்பட,  'தமிழ், தமிழர்' நலன்களின் 'எதிரி சக்தியாக‌' 'பெரியார்', முத்திரை குத்தப்பட்டு(branded),   சமூக குப்பைத் தொட்டிக்கு போகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எனக்கு தெரிகிறது; எனது '.வெ.ரா மீட்பு' முயற்சிகளையும் தாண்டி.’ ( ‘கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (2); ஒரு பின்னூட்டமும்(Feedback)  விளக்கமும்’; http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

முகநூலில் 'கலாநிதி மாறனின் சம்பந்திதான், (ஸ்டெர்லைட்) அனில் அகர்வால்' என்று பார்த்தேன்.

என்னை விட தமிழ்நாட்டின் நடப்புகள் பற்றி அதிகம் தெரிந்தவரிடம், "இது உண்மையா?" என்று கேட்டேன். அவரிடமிருந்து கீழ்வரும் பதில் கிடைத்தது.

இது உண்மையெனில்; இது தெரியாமல் சன்டிவி ஸ்டெரிலைட் பிரச்சனையில் பாஜக ஆதரவு நிலையில் இருப்பதாக விமர்சிக்கிறார்கள்.”

அடுத்து எனக்கு வந்துள்ள கீழ்வரும் பின்னூட்டம் பற்றி பார்ப்போம்.

அதே போல் சீரழிவுக்குப் பல காரணங்கள் (அடிப்படையாக மனிதர் இயல்பு) உள்ள போது பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்திப் பெரியாரால் கெட்டது போல் எழுதுவது சமநிலையான சிந்தனையைக் காட்டவில்லை.”

எனது பதிவானது 'சமநிலையான சிந்தனையைக் காட்டவில்லை' என்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு சரியானது? என்று ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு;

'.வெ.ரா செயலாக்கியை' (EVR Processor) மேம்படுத்தி பயன்படுத்துவதா? சமூக  காயலான் கடைக்கு ஒதுக்குவதா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html

No comments:

Post a Comment