Tuesday, July 2, 2019


                   அரசியல் பரமபதத்தில் (4)


 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாஞ் சிறப்பு' – ஒளவையார்


 'புரோக்கர்க்கு சென்ற கட்சியெல்லாஞ் சிறப்பு' - புதிய‌ ஒளவையார்



கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு முன், ‘அரசியல் பரமபதத்தில்(3); வரும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கரையப் போகும் திராவிடக் கட்சி?’ என்ற தலைப்பில் மார்ச் 20, 2019 இல் கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.

கடந்த பொதுத்தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்; ...தி.மு. ஆட்சி தொடரும்;

என்று மேலுள்ள பதிவில் வெளிப்படுத்தியஎனது கணிப்புகள் சரியானாலும்:

தி.மு. அணி பெற்ற வெற்றிகள் ஆனவை, எனது கணிப்பில் இருந்த குறைபாட்டினை வெளிப்படுத்தியுள்ளன.

நமது கணிப்புகள் பெரும்பாலும் தவறானால், சமூக முரண்பாடுகள் பற்றிய, (கட்சிகள், கொள்கைகள், மனிதர்கள் தொடர்பான‌) நமது புரிதலில் உள்ள தவறுகளை வெளிப்படுத்திய 'சிக்னல்'களாக, அவற்றைக் கருதி, நமது புரிதலில் உரிய திருத்தங்களை (கசப்பாக இருந்தாலும்) மேற்கொண்டு, பயணித்தால் தான், ஆக்கபூர்வமாக, வெற்றி நோக்கி, நாம் பயணிக்க முடியும். தமது கணிப்புகள் தவறானதற்கு, மக்களை குறை சொல்லும் கட்சிகளும்/தலைவர்களும், (தொடர்ந்து தோல்விகளை தழுவும் திரைப்பட இயக்குநர்களும் கூட) 'சுய மரண' திசையில் பயணிப்பவர்கள் ஆவர்; 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கிகணிப்புகளின் (படைப்புகளின்) வெற்றிக்கான‌ 'ஊற்றுக் கண்களாகிய' சாதாரண மக்களிடமிருந்தும், இயற்கையினிடமிருந்தும் அந்நியமாகி, உணர்ச்சிபூர்வமாக தமது நிலைப்பாடுகளை 'பாதுகாப்பு கவசமாக' கருதி, ஆனால் உண்மையில்  மனச்சிறைக் கைதியாக வாழ்ந்து கொண்டு.’

மேற்குறிப்பிட்ட மார்ச் 20, 2019 பதிவில் எனது கணிப்பிற்கான 6 காரணிகளை விக்கியிருந்தேன். எனது கணிப்பிற்கான காரணிகளில், 6-ஆவது காரணியாகஇடம் பெற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களுமே நோட்டாவிற்கே பெரும்பாலும் வாக்களிப்பார்கள், என்று நான் எதிர்பார்த்தேன்.

அவர்களில் பெரும்பகுதியினர் மோடி எதிர்ப்பில் பயணித்த தி.மு.கவிற்கு பெரிய அளவிலும், கமல்ஹாசன் கட்சிக்கும், சீமான் கட்சிக்கும் சிறிய அளவிலும் வாக்களித்துள்ளனர். ஆர்.கே.நகர் பாணியில் தினகரன் ஏமாந்து, தினகரன் இடத்தை ஸ்டாலின் பிடிக்க, தி.மு. வரலாற்றில் அண்ணா, கருணாநிதி பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும் அளவுக்கு, தி.மு. அணி வெற்றி பெற்றுள்ளது.

மாணவர்களும், படித்த இளைஞர்களுமே நோட்டாவிற்கு வாக்களிப்பதில் இருந்து திசை திரும்பி, கட்சிகளுக்கு வாக்களிக்கத் தொடங்கி இருப்பது நல்ல சிக்னலாகும்.

தமிழ்நாட்டில் அந்த புதிய போக்கும், ஆர்.கே.நகர் பாணியில் வாக்குகளை வாங்கியப்  போக்கும் சங்கமாகி வீசிய, தேர்தல் அரசியல் சூறைக்காற்றில் தி.மு. அணியானது, எவரும் கணிக்காத பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது. 

அநேகமாக அந்த வெற்றிக்குப் பின், ...தி.மு. பலகீனமானதை விட, இன்னும் அதிக வேகத்தில் உள்மறையாக (Latent)  தி.மு. பலகீனமாகும் போக்கும் தொடங்கி விட்டது;

என்பதும் எனது கணிப்பாகும். 

தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் சிக்னல்களும், தி.மு.,  ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளில் முதலில் தி.மு. கரைந்து, அவ்வாறு கரையும் சமூக செயல்நுட்பத்திலேயே ...தி.மு. அடுத்து கரையும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

அதனை நான் எவ்வாறு கணித்தேன்? என்பதை விளக்க, முதல் தடயமாக, கீழ்வரும் துக்ளக் செய்தியிலிருந்து தொடங்குகிறேன்.

தி.மு..வின் சீனியர் பிரமுகர் ஒருவர், போகிற போக்கைப் பார்த்தால் தளபதியைச் சுற்றி (மு..ஸ்டாலினை) பழைய .தி.மு.. பிரபலங்கள்தான் ஃபோட்டோக்களில் வருவார்கள் போலிருக்கிறது" என்று கிண்டல் கலந்த ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

இப்போது சேருகிற .தி.மு..காரர்கள் எம்.ஜி.ஆர். காலத்தவர்கள் அல்ல. இவர்கள் எல்லாம் அரசியலில் உயர்ந்த விதமே வேறு. அந்தகலாச்சாரத்தைதி.மு..வுக்கும் கொண்டு வந்து விடுவார்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது" என்றார் அவர்.

இந்த வகையில் மட்டுமின்றி, பொதுவாகவே புதிதாகச் சேர்கிறவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், அக்கட்சியில் பலரிடையே புகைச்சலைத் தோற்றுவித்திருப்பது மறைக்க முடியாத உண்மை.’ (துக்ளக் 03-07-2019)

எம்.ஜி.ஆர் காலத்து ...தி.மு.கவிற்கும், தி.மு.கவிற்கும், இடையில் என்ன பண்பு வேறுபாடுகள் இருந்தன? எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், அந்த வேறுபாடுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின், முதல்வர் ஜெயலலிதாவையே முட்டாளுக்கும் வகையில், உள்குத்து அரசியலில், ...தி.மு. எவ்வாறு பலகீனமாகி, கடந்த சட்ட மன்ற பொதுத் தேர்தலில் மயிரிழையில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் அவலத்திற்குள்ளானது? என்பதையெல்லாம், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில், சம்பாதிக்க கோடு காட்டினால், 'ரோடு' போட்டு ஒழுங்காகக் கப்பம் கட்டும் திறமைசாலிகளான புரோக்கர்கள் உருவானர்கள். அவர்களில் ஜெயலலிதாவின் வெறுப்பைச் சம்பாதித்தவர்கள் எல்லாம் தி.மு. உள்ளிட்ட எந்தக்கட்சிக்கு சென்றாலும், சிறப்பான இடம் பெற்று, தமது 'திறமையை'(?) நிரூபித்து, சேர்ந்த கட்சியில் 'அதிவேகமாக' உயர்ந்தார்கள்.

'மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்கு
சென்ற இடமெல்லாஞ் சிறப்பு'
ஒளவையார்

அரசியல் செல்வாக்கு பீடங்களை அடிவருட மறுக்கும் கற்றோர்க்கு, சென்ற இடமெல்லாஞ் சிறப்பு உண்டா? என்ற கேள்வியை எழுப்பும் நிலையில் தமிழ்நாடு உள்ளது

'தலைவர்க்குத்
தன்கட்சி ல்லாற் சிறப்பில்லை
புரோக்கர்க்கு
சென்ற கட்சியெல்லாஞ் சிறப்பு'
– (தமிழ்நாட்டில் அடிப்படைக்கல்வியில், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னூல் எல்லாவற்றையும் பள்ளிக்கூடங்களிலிருந்து தி.மு.. ஒழித்துக் கட்டியதால் தோன்றிய‌) புதியஒளவையார்

கே: ‘தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, நீதி போதனை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க முடியும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளதே?

: ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னூல் எல்லாவற்றையும் பள்ளிக்கூடங்களிலிருந்து தி.மு.. ஒழித்துக் கட்டியது. அதனால்தான் இப்போது, நீதிபோதனை வேண்டும் என்கிற கோஷம் எழுகிறது. தி..வும், தி.மு..வும் தெய்வத்துக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும், பெரியோருக்கும் இருந்த மரியாதையையும், சம உரிமை என்று பேசி, பெண்களுக்கு இருந்த மரியாதையையும் குறைத்துவிட்டது. அவர்கள் அழித்ததைத் திரும்பப் பெறப் பிரும்மப்பிரயத்தனம் தேவை. (துக்ளக் 03-07-2019; குறிப்பு கீழே)

அரசியலில் சம்பாதிக்க கோடு காட்டினால், 'ரோடு' போட்டு ஒழுங்காகக் கப்பம் கட்டும் திறமைசாலிகளான புரோக்கர்களுக்கு சென்ற கட்சியெல்லாம் சிறப்பு. ஆனால் 'அந்த' புரோக்கர் மாவட்டத்தில், 'அந்த' கட்சியில் நெடுங்காலம் குப்பைக் கொட்டியவர்களுக்கு தான் இழப்பு.

கட்சியின் தலைமையானது, 'அந்த' சமூக செயல்நுட்பத்தில், 'எந்த' அளவுக்கு பலன் பெறுகிறதோ, நெடுங்காலமாக பயணித்தவர்களின் அதிருப்தி மூலமாக, அதை விட பன்மடங்கில், 'அந்த' கட்சியின்  வேரழுகி, கடைசியில் 'புரோக்கர் கட்சியாகும் திசையில், அந்த கட்சியானது பயணிப்பதைத் தவிர்க்க முடியாது.,

புரோக்கர் கட்சியாக வளர்ந்த கட்சிகள் எல்லாம்எவ்வளவு உயரத்தில் பயணித்தாலும் புதிதாக கிளம்பும் அரசியல் காற்றில், புழுதியாக மரணிப்பதும் நிச்சயமாகி விடும்.

செப்டம்பர் 18, 2017-இல் வெளிவந்த கீழ்வரும் பதிவானது, இந்த ஆராய்ச்சியில் கவனிக்கத்தக்கதாகும்.

பணபலத்தில் ஒத்து வரும் மீடியாக்கள் துணையுடன் வெளிச்சம் போட்டாலும், சசிகலா அரசியல் பரமபததில், தவறான ஆலோசனைகளின் வழியில் செயல்பட்டு, பாம்பின் தலையைப் பிடித்து, அரசியல் குழியில், மீள்வதற்கு வழியின்றி விழுந்து விட்டார், என்பது வெட்ட வெளிச்சமாகும் காலமும், அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கணிப்பாகும்.

கீழ்வரும் காரணங்களால், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் விரும்பினாலும், ஆட்சியைக் கவிழ்க்க முடியாது, என்பதும் எனது கணிப்பாகும்.’ (‘அரசியல் பரமபதத்தில்(2): ஸ்டாலின் - சசிகலா நன்கொடையாக, தமிழக ஆட்சி நிலைக்கப் போகிறதா?’;

வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் பின்னணியில் உள்ள சாதக, பாதகங்களை தெரியாமல், பணம் ஈட்டுவதிலும், செல்வாக்கிலும் முன்னேற வேண்டும் என்று பயணிப்பவர்களின் வாழ்வோடு ஒப்பிடக்கூடியது, பரமபதம் விளையாட்டு ஆகும்………….

ஆளுங்கட்சியில் யார் முதல்வர்? என்பதில் ஆளுநர் தலையிட முடியுமா?

எதிர்க்கட்சித்தலைவர் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யாமல், தனது பணியை செய்யுமாறு ஆளுநரை நிர்பந்திக்க முடியுமா?

மாநில முதல்வராக இருந்த .பி.எஸ்ஸை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்று, ஆளுநருக்கு அனுப்பி, பின் எடப்பாடியை முதல்வராக்கிய சூழலில், அச்சுறுத்தி ராஜினாமா பெற்றதாக பதவியிழந்த முதல்வர் ஆளுநரிடம் எழுத்துபூர்வமாக முறையிட்ட பின் தான், ஆளுநர் முதல்வர் எடப்பாடியை சட்டசபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்திரவிட்டார். அதை மறந்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையானது 
(http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-indulging-politics-says-mk-stalin/articlecontent-pf260223-294397.html  ),பெரும்பான்மை பலம் இழந்ததாக கருதும் எதிர்க்கட்சித்தலைவர் தனக்குள்ள சட்டபூர்வ வாய்ப்புகளில் ஈடுபடாமல், அந்த வேலையை, ஆளுநரை செய்யுமாறு நெருக்குவது, கேலிக்கூத்தாகாதா? சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் கேலிக்குள்ளாக்கி, முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோவில் சேர்ந்தது முதல் இன்றுவரை, சசிகலா குடும்பம் நடத்தி வரும் அராஜக அரசியலுக்கு, இப்படிப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு வாய்த்ததும் ஒரு முக்கிய காரணமாகும்;

இந்திய அளவில், நேரு அறிமுகப்படுத்திய குடும்ப அரசியல் நோயில் சிக்கி, பயணித்ததன் தொடர்விளைவுகளான;

தி.மு. குடும்ப அரசியலும், சசிகலா குடும்ப அரசியலும், காங்கிரஸ் துணையுடன் சங்கமமாகி;

அந்த சமூக சுனாமியில் சிக்கி, மடிவதானது, இயற்கையின் விதியாக இருந்தாலும், வியப்பில்லை. (‘அரசியல் பரமபதத்தில் (1):ஸ்டாலினும்சசிகலாவும் பாம்பின் தலைக்கு தாவுகிறார்களா?’;
http://tamilsdirection.blogspot.com/2017/08/&
'திராவிட பொதுவாழ்வு வியாபார குடும்பஅரசியல்சங்கமமாகி முடிவை நோக்கி ?’
http://tamilsdirection.blogspot.com/2017/11/cognitiveskills.html)

மார்ச் 20, 2019- இல் வெளிவந்த கீழ்வரும் பதிவானது, இந்த ஆராய்ச்சியில் கவனிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக  பா..-வானது, இனி வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும்.

மேலே குறிப்பிட்ட 6 காரணிகளின் வரிசையில் முதலாவதாக இடம் பெற்ற அரசியல் அமாவாசைகளும், கடைசியாக இடம் பெற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக வெளிப்படுவார்கள். தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ள படித்த இளைஞர்களில் 'எல்கேஜி' (LKG) திரைப்பட கதாநாயகனைப் போல பலர் இருக்கக்கூடும், என்பது எனது கணிப்பாகும். எனவே இரண்டு கட்சிகளில் எந்த கட்சி கூட்டணியும் அமோக வெற்றி பெற்றாலும், அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளுமே மேற்கண்ட இரண்டு பிரிவினரிடம் சிறைபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகும் வாய்ப்பும் இருக்கிறது. (‘அரசியல் பரமபதத்தில்(3);வரும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கரையப் போகும் திராவிடக் கட்சி? ‘;

‘'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், இது போன்ற எதிர்பாராத‌ பிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்; தினகரன் கட்சியைப் போலவே.

மத்தியில் பா.. ஆட்சியே தொடர்வதால், தமது வெற்றிக்கான 'பலன்களை' அறுவடை செய்ய முடியாத வகையிலும், தமிழ்நாட்டில் ஆட்சியைத் தொடரும் வகையில் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடித்து அறுவடை செய்ய முடியாத நிலையிலும்;

தி.மு. வின் வெற்றியானது கேலிக்கிடமாகி வருகிறது.

அது மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் ஊழல் ஒழிப்பில் ஏமாந்தது போல பயணிக்காமல், பிரதமர் மோடியின் ஆட்சியானது ஊழல் ஒழிப்பில் விழிப்புடன் பயணித்தால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, தி.மு. ஆட்சியைப் பிடிப்பதானது கானல் நீராகவே முடியும். அது தி.மு.கவில் உள்ளசீனியர்களுக்குவெட்ட வெளிச்சமானவுடன், உதயநிதி கட்சியில் பெறும் முக்கியத்துவம் காரணமாக, கொக்கைப் போல காத்திருக்கும் மு..அழகிரியின் அல்லது தன்மானம் எஞ்சியுள்ள வேறு 'சீனியரின்' தலைமையில் தி.மு. நம்பமுடியாத அளவுக்கு பிளவுபடும், என்பதும் எனது கணிப்பாகும். அதன் பின், பிரதமர் மோடி ஆட்சியில் வெளிப்படும் ஊழல் ஒழிப்பின் வேகத்தைப் பொறுத்து;

காங்கிரஸ் கட்சியின் 'பிராண்ட் மதிப்பு (Brand Value) குறைந்தது போலவே தி.மு.கவின் 'பிராண்ட் மதிப்பு குறைந்து, 'தமது அரசியல் வியாபாரம் தொடர வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியானது, 'அந்த' கட்சியில் உள்ள‌ பொதுவாழ்வு வியாபாரிகள் மத்தியில் எழுவதற்கும் வாய்ப்புள்ளது. (பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் தோற்ற காங்கிரசும், தமிழ்நாட்டில் வென்ற தி.மு.-வும்; ஒரே பாணியிலான‌ 'பிராண்ட் மதிப்பு' (Brand Value)  வீழ்ச்சியில்?’; https://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post.html )

ஆட்சியில் இருந்து கொள்ளை அடித்தால், மத்திய அரசின் ஊழல் ஒழிப்பில் இருந்து தப்ப முடியாது, என்ற நிலை வருமானால், ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்வதில் ஆர்வம் காட்டாமல், கடந்த பாராளுமன்ற தேர்தலில் செலவழித்தது போக, எஞ்சிய பணத்தையும், சொத்தையும், எவ்வாறு காப்பாற்றுவது? என்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.

அந்த திசையில் தான், தமிழ்நாடு இப்போது பயணிக்கத் தொடங்கியுள்ளதா? இல்லையா? என்பதற்கான விடையை வெளிப்படுத்தும் காட்சிகளே, வரும் மாதங்களில் வெளிப்படும்; என்பதும் எனது கணிப்பாகும்

குறிப்பு: சிங்கப்பூரில் 'கலா மஞ்சரி' அமைப்பின் சார்பில், கடந்த 4, மே, 2019 ஆம் நாள், ‘ஆத்தி சூடி நாட்டிய நாடக வடிவில்' என்ற கலை நிகழ்ச்சி நடந்தது. மேடையின் பின்புலத் திரையில், பாடல் வரிகள் ஒளிக்க; ஆசிரியர் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாடல் தொடர்பான நாடகக் காட்சிகளும், பின் பாரம்பரிய இசையில் அந்த பாடல் வரிகளைப் பாடியதும், வயலின், மிருதங்கம், கீ போர்ட் இசைக்கருவிகளின் பின் பலத்தில், அதே பாடலுக்கு மாணவிகள் நடனமாடிய காட்சிகளும், பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பானால், நல்ல வரவேற்பினைப் பெறும்.


No comments:

Post a Comment