அரசியல் கொள்ளையர்களுக்கு எதிரான மத்திய அரசின் சோதனைகள்;
தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி ?
இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டு உலகில் உள்ள நாடுகளில் 'மாட்டிக் கொள்ளாமல்' சட்ட விரோதமாக சம்பாதித்து, வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியுள்ளவர்களின் பட்டியலானது, 'பனாமா கோப்புகள்' (Panama
Papers) என்ற பெயரில் 2015இல் வெளிவந்து, அந்த பதுக்கலுக்கு எதிரான முயற்சிகளின் வலிமையைக் கூட்டியுள்ளது. (https://en.wikipedia.org/wiki/Panama_Papers
) அதை தொடர்ந்து, கடந்த வாரத்தில் 'சொர்க்க கோப்புகள்' (Paradise
Papers ) என்ற பெயரில், இன்னொரு பதுக்கல் பட்டியலும் வெளிவந்துள்ளது. (https://en.wikipedia.org/wiki/Paradise_Papers
)
மேல்நடுத்தர, வசதி மிகு மனிதர்களில் உள்ள அறிவுஜீவிகளில் பலர் பதுக்கல்காரர்களிடமிருந்து பல வகையில் பலன்கள் பெற்றுக் கொண்டு, 'யோக்கியர்களாக' புறத்தில் காட்சி தந்து, அந்தந்த நாடுகளில் பதுக்கலுக்கு துணை போகும் சமூக செயல்நுட்பமும் அம்பலமாகியுள்ளது. (Today
it is these same golden figures with their offshore billions who host the
fundraisers, hire the lobbyists, bankroll the think tanks and subsidize the
artists and intellectuals.; This is
their democracy today. We just happen to live in it.; https://www.theguardian.com/commentisfree/2017/nov/09/paradise-papers-offshore-billionaires
)
அந்த பதுக்கல் பணத்தினை மீட்டால், அமெரிக்காவில் ஏழை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை சீரமைக்க முடியும்; குண்டும் குழியுமான சாலைகளையும் , ஆயுள் முடிந்து உடையும் நிலையில் உள்ள நெடுஞ்சாலை பாலங்களை சீரமைக்க முடியும்; என்பது போன்ற எழுச்சிகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ( Think
of all the young people saddled with catastrophic student-loan debt: we should
have – could have – made that unnecessary. Think of all the decayed small
towns, and the dying rust belt cities, and the drug-addicted hopeless: all of
them should have – could have – been helped.
But no. Instead America chose
a different project. Our leaders raised up a tiny class of otherworldly
individuals and built a paradise for them, made their lives supremely
delicious. Today they hold unimaginable and unaccountable power.; https://www.theguardian.com/commentisfree/2017/nov/09/paradise-papers-offshore-billionaires
)
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசானது பதுக்கல்காரர்களின் செல்வாக்கிற்கும், பதுக்கலுக்கு எதிரான மக்களின் கோபத்திற்கும் இடையில் சிக்கி, தட்டுத்தடுமாறி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன..
தனியாக எந்த ஒரு நாட்டின் அரசும் அதில் வெற்றி பெற முடியாது, என்ற எதார்த்தத்தை உணர்ந்து, உலக அளவில் கூட்டு முயற்சிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில், உலக பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 (G-20)
அமைப்பின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் நானும் கையெழுத்திட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் இணைய தளங்களுக்கு சென்று தங்களின் ஆதரவினை பதிவு செய்யலாம்.
https://www.newstatesman.com/politics/staggers/2017/11/there-way-outlaw-tax-havens-and-i-ll-personally-tell-world-leaders-how-do & https://secure.avaaz.org/campaign/en/paradise_papers_loc/?dl
தமிழ்நாட்டிலும் ‘ வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
அரசியல் நீக்கம் (Depoliticize)
காரணமாக;
சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது'
(Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)
உயர் நடுத்தர(upper
middle class), பணக்கார (affluent) வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை'
(Comfort Zone) விட்டு விலகி, பார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.(ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கான’ அளவுகோலின்படி, நமது 'யோக்கியதை' எப்படி?’ ; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html
)
ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த காலத்தில், அப்பள்ளியில் படித்த, இன்று உலகப்புகழ் பெற்ற நடனக் கலைஞராக வாழும் அனிதா ரத்னம் அவர்கள், ஜெயலலிதா மீது, ஜெயலலிதாவின் அம்மா மற்றும் எம்.ஜி.ஆரை போலவே, சசிகலாவுக்கு இருந்த 'அதிகாரத்தை' கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
“Perhaps it was Sasikala, with
her mostly rustic sensibilities who introduced a surreal atmosphere of court
intrigue, grandiose financial chicanery and the phenomenon of obsequiousness in
to the Maugham and Beatles loving, academically inclined and shy Brahmin born
politico’s life. And perhaps like she had done with her mother and MGR before,
Jayalalithaa”
தி.மு.க ஆட்சியில் காவிரி, கச்சத்தீவு பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பையும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏற்பட்ட பாதிப்பையும் தீர்க்க, துணிவான ஆக்கபூர்வமான திசையில் செயல்பட்டவர்; இந்திய அளவிலும், உலக அளவிலும் முன்மாதிரியாக செயல்பட்ட அம்மா உணவகங்கள்; தி.மு.க ஆட்சியில் 8 மணி நேர மின்வெட்டில் தவித்த தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக மாற்றியவர்; சொந்தங்களை தொலைவில் வைத்தவர்: போன்ற - அரசியல் எதிரிகளும் மறுக்க முடியாத - சாதனைகளுக்குரியவர் ஜெயலலிதா: ஊழலற்று தொடங்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, தி.மு.க தலைவரின் தூண்டுதலால் கலைத்து, பின் அரசியலில் தொடர, அ.தி.மு.க ஆட்சியும் ஊழல் திசையில் பயணிக்க வைத்தார்கள். அதே திசையில் பயணித்த ஜெயலலிதாவை முன் வைத்து, அவரின் பலகீனங்கள் மூலம் அவரை சிறைப்படுத்தி, (அதன் காரணமாகவே, கடைசியில்
'மர்மமான' முறையில் மரணமடைய), சசிகலா
குடும்பமானது ‘அரை – பினாமி’ ஆட்சியைத் தொடங்கியது.
ஆனால் எம்.ஜி.ஆரைப் போல, தி.மு.க தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற பல புலமையாளர்களை தேடி, வரவழைத்து, மதித்து துணையாக கொள்ளாமலும், தன்மானமுள்ள புலமையாளர் எவரும் நெருங்காமல் ஒதுங்கும் வகையிலும், பயணித்ததாலேயே, எம்.ஜி.ஆரைப் போல தனது பெயரில் உள்ள சொத்துக்களை தருமம் செய்யும் வகையில் உயில் கூட எழுத முடியாத 'மர்மமான' முறையில் மரணமடையும் அளவுக்கு; அவ்வாறு ஜெயலலிதா சசிகலா குடும்பப் பிடியில் சிக்கினாரா ? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அப்படி சசிகலாவின் செல்வாக்கில் சிக்கி, 1991இல் தொடங்கிய அவரது ஆட்சியில் தான், ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் இரையாக தொடங்கியதும், அச்சுறுத்தி தனியார் சொத்துக்களை அபகரிக்க தொடங்கியதும் ஆகிய போக்குகள் வெளிப்பட்டன; இன்று வரை வெட்கமில்லாமல், 'சசிகலா அரசியலுக்கு' வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், ஆதரவு தெரிவித்து வரும் தேசிய/திராவிட/தமிழ்/கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவோடு.
பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதே திசையில் பயணித்து: அந்த போக்குகளில், மக்களின் கோபத்திற்கு உள்ளாகி, உச்சக்கட்ட நிலையை அடைந்து, இரண்டு கட்சிகளும் மாறி, மாறி, ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தன. ( http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )
ஆனால் எம்.ஜி.ஆரைப் போல, தி.மு.க தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற பல புலமையாளர்களை தேடி, வரவழைத்து, மதித்து துணையாக கொள்ளாமலும், தன்மானமுள்ள புலமையாளர் எவரும் நெருங்காமல் ஒதுங்கும் வகையிலும், பயணித்ததாலேயே, எம்.ஜி.ஆரைப் போல தனது பெயரில் உள்ள சொத்துக்களை தருமம் செய்யும் வகையில் உயில் கூட எழுத முடியாத 'மர்மமான' முறையில் மரணமடையும் அளவுக்கு; அவ்வாறு ஜெயலலிதா சசிகலா குடும்பப் பிடியில் சிக்கினாரா ? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அப்படி சசிகலாவின் செல்வாக்கில் சிக்கி, 1991இல் தொடங்கிய அவரது ஆட்சியில் தான், ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் இரையாக தொடங்கியதும், அச்சுறுத்தி தனியார் சொத்துக்களை அபகரிக்க தொடங்கியதும் ஆகிய போக்குகள் வெளிப்பட்டன; இன்று வரை வெட்கமில்லாமல், 'சசிகலா அரசியலுக்கு' வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், ஆதரவு தெரிவித்து வரும் தேசிய/திராவிட/தமிழ்/கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவோடு.
பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதே திசையில் பயணித்து: அந்த போக்குகளில், மக்களின் கோபத்திற்கு உள்ளாகி, உச்சக்கட்ட நிலையை அடைந்து, இரண்டு கட்சிகளும் மாறி, மாறி, ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தன. ( http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )
'பிரிவினையைக் கை விடுகிறேன். பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கின்றன' என்று அண்ணா அறிவித்ததானது, பின்னர் 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில்;
உணர்ச்சிபூர்வ முட்டாள்களின்/தரகர்களின் ஆதரவோடு, ஊழல் சுனாமியில் தமிழ்நாட்டை சூறையாடவும், வசதியானவர்களை அச்சுறுத்தி ஊழலுக்கு எதிரான 'சமூக முதுகெலும்பை' முறித்து, ஊழல் பிரமிடு சிலந்தி வலையில் தமிழ்நாட்டு அரசியலையே சிக்க வைத்ததே; (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’;
http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html
)
நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியைக் கலைத்து, தி.க/தி.மு.க தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. அதில் பாடம் கற்காமல், இந்திரா காந்தி பின்னர் தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்ததன் பலனாக, காங்கிரஸ் செல்வாக்கை இழந்து, கடந்த சட்ட மன்ற தேர்தலில்,
சசிகலா குடும்ப அரசியல் எதிர்ப்பு அலையில், தி.மு.க ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பினை கெடுத்த அளவுக்கு, 'தீண்டத்தகாத' கட்சியாகி வருகிறது.
மத்திய அரசானது தமிழ்நாட்டில் அடுத்து அடுத்து ஊழல் கொள்ளைக்கு எதிரான வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு சோத்னைகளை நடத்தி, அதன் உச்சக்கட்டமாக சசிகலா குடும்ப வலைப்பின்னல் மீது நடத்தி வரும் சோதனைகள்;
உண்மையில் தமிழ்நாட்டு மக்களிடையே மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடியை (crisis
of confidence) ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோதனை வலையிலிருந்து ஊழல் திமிங்கிலங்கள் தப்பிக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளில் உள்ள ஊழல் திமிங்கிலங்களை நெருங்குமா?
மோடி அரசு ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும்; ஏற்கனவே 'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கின் வெளிப்பாடாக.
மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சிகளின் முதுகெலும்பை முறிக்காமல், மோடியாலும் கூட தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியாது. (‘ மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சிகளின் முதுகெலும்பை முறிக்காமல், மோடியாலும் கூட தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியாது. (‘ மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
தமிழ்நாட்டில் வாழும் மேல்நடுத்தர, வசதி மிகு மனிதர்களில் நான் உள்ளிட்டு பெரும்பாலோர் வெவ்வேறு காலக்கட்டங்களில்,
'கொள்கை அடிப்படை' என்று அவரவர் புரிதலில் கருதிக் கொண்டோ, அல்லது அவ்வாறு வெளியில் காட்டிக் கொண்டு', அகத்தில் 'சுயலாபக் கணக்குடனோ', தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளை ஆதரித்தவர்கள் எல்லாம்;
திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கு 'சமூக முதுகெலும்பாக' பயன்பட்டிருக்காவிட்டால்;
லட்சக்கணக்கான கோடிக்கணக்கில் பெருந்தலைக் குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கோடிக்கணக்கில் வார்டு கவுன்சிலர் வரையும், ஊடகங்கள் வெளிப்படையாகவும், கிசுகிசு பாணியிலும் வெளிப்படுத்திய கொள்ளை நடந்திருக்க முடியுமா?
அதாவது மேல் நடுத்தர, வசதியான மட்டங்களிலும், அறிவுஜீவிகளிலும் கணிசமானோர் 'சமூக அழுகல்' போக்கில் சிக்காமல், மேற்குறிப்பிட்ட கொள்ளை நடந்திருக்க முடியாது; 'ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்ற வகையில்.
அழுகல் இன சமூக வட்டத்தில், இனியும் நாம் நீடித்தால், ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ள நமது குடும்பத்தினரும், நண்பர்களும் நம்மை மதிப்பார்களா?
வெளியில் யோக்கியராக காட்சி தந்து, ஊழலுக்கு 'சமூக முதுகெலும்பாக' நாம் தொடர்ந்தால், நாமும் நமது குடும்பமும், நண்பர்களும், தமிழ்நாட்டின் ' அழுகல் இனம்' ஆக மாட்டோமா?
'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?
'அழுகல் இன' கவிஞர்களின், எழுத்தாளர்களின், பேச்சாளர்களின் 'பிடியிலிருந்து', தமிழையும், தமிழ் உணர்வினையும், 'விடுதலை' செய்யத் தவறினால், 'தமிழர்' என்ற அடையாளம் மிகவும் பலகீனமாகி, 'இந்தியர்' என்ற அடையாளமானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 'தனித்துவ(Unique) வலிமை' பெறும் போக்கானது, 'ஊழல் சுனாமி' ஆதரவுடன் 'ஆங்கிலவழிக் கல்வியின் அசுர வளர்ச்சி மூலமும், அதன் தொடர் விளைவான கிரிக்கெட் 'நோய்' மூலமும் அதிகரித்து வருகிறது. (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும்
(depoliticize) (7); தமிழும், தமிழ் உணர்வும், மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.sg/2015/06/
)
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,
ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும் அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம், தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்.
'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று குழம்ப வேண்டியதில்லை.
சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். (குறிப்பு கீழே)
அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ள ‘சமூக செயல்நெறி மதகுகள் ‘ புத்துயிர் பெறும்.
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html
)
அதன்பின் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட சட்டங்களும் ஒழுங்காக செயல்படும்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்திலிருந்து, 'விடுதலை' பெற்று.
தமிழில் மனிதரின் பண்பு அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்',
1944க்குப்பின் திரிந்து உருவான, 'அழுகல் இனத்திலிருந்து' 'விடுதலை' பெற்றால் தானே, தமிழ்நாட்டில் 'நல்லினம்' பல்கி பெருக முடியும். நமது முயற்சியில், நமது சமூக வட்டத்திலிருந்து, 'அழுகல் இனத்தை' அகற்றுவது தானே, அதற்கு சரியான, வலுவான, தொடக்கமாக அமையும்.; ( http://tamilsdirection.blogspot.sg/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html
)
குறிப்பு :
திருக்குறள் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வரும் கீழ்வரும் திருக்குறளில் 'ஒழுகல்' என்பதானது, ஒழுக்கமுடைமையோடு தொடர்புடையதாகும்.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்’
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140)
மோடி ஆட்சியில் வெளிப்படும் குறைகளை சுட்டிக்காட்டாமல் ஆதரிப்பவர்களும், நிறைகளை பார்க்கத் தெரியாமல் (திருக்குறள்-573) கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்களும், தமிழ்நாட்டை ஊழல் வலைப்பின்னலிலிருந்து மீட்கும் முயற்சிக்கு தடைகளே ஆவர். 'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை) பயணிப்பவர்கள் மட்டுமே; ஊழல் ஒழிப்புக்கு எதிராக வெளிப்படும் சமூக ஆற்றல்களோடு
(Social Energy), திருக்குறள் வழியில் 'ஒட்டி' பயணித்து, தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியும்; ஊழல் வலையின் 'ஆக்ஸிஜனில்' ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலவழிக்கல்வி நோயிலிருந்து, தமிழ்வழிக் கல்வியையும்(எனவே தமிழையும்), மரணப் படுக்கையிலிருந்து மீட்க முடியும். (‘‘தமிழ் அழிவு சுனாமி’யிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html
)
ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது; தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியாது; என்று சொல்லி ஒதுங்கி வாழ்பவர்கள் எல்லாம்;
ஊழல் ஒழிப்புக்கு எதிராக வெளிப்படும் சமூக ஆற்றல்களை கண்டு, 'ஒட்டி' பயணிக்க தெரியாதவர்கள் (‘ பலகற்றும் கல்லார்’ ) ஆவார்கள்.
உணர்ச்சிபூர்வ போதையில் சிக்காமல், அறிவுபூர்வ போக்கில் பயணிக்கும் நேர்மையாளர்களை தேடிச் சென்று, 'ஒட்டி' பயணித்து வரும் நான்;
வாழ்வியல் புத்திசாலிகளாக தம்மை கருதிக் கொண்டு, தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலில் உள்ளவர்களோடு 'ஒட்டி' பயணித்தவர்களில், எனது உற்றத்திலும், சுற்றத்திலும் இருந்தவர்களை எல்லாம், உலகத்தோடு ஒட்டி அழுகல் மனிதர்களாக பயணிப்பதாக கருதி;
'உலகத்தின் கேடாக அழுகல் வழிவாழும்
உறவும் தீதாகு மே' ; புதுக்குறள் - 140
‘பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions)
வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும். நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html)
இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத் தழுவ முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html
)
No comments:
Post a Comment