Wednesday, July 6, 2016


நாடு பயணிக்கும் போக்கில்:

நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?



நமது சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, மூன்றாம் மனிதரைப் போல, நாட்டு நடப்புகளை கவனித்தால் மட்டுமே, நாடு பயணிக்கும் போக்கு தொடர்பாக‌,  நாம் ஓரளவு சரியாக கணிக்க முடியும்;  

அதிலும் நமது 'நேர்மையான' வருமானம் அனுமதிக்கும், 'சொகுசு' (Comfort Zone) வாழ்விலிருந்து விலகி, இயன்ற வரை சாதாரண மற்றும் அடிமட்ட மக்களுடன் 'அந்நியமாகாமல்' பழக, பார்க்க (witness) இயலுமானால்;

'குறுக்கு வழி' பணக்காரர்கள் எல்லாம், 'கிசு கிசு' பாணி ‘சமூக தகவல் பரிமாற்ற செயல்நுட்பம்’ (Social Communication Mechanism) மூலம் அசிங்கப்படுவதானது, அதிகரித்து; 'ஊழல் பணக்காரர்' குடும்ப ஆடம்பர திருமணங்கள் எல்லாம், கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றிய, 'கிசு கிசு' பேச்சுகள் மூலமாக, 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமூக நகைச்சுவை' ஆகி, அத்தகைய வாய்ப்பை இழந்துள்ள  சூழலில்.

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு முன், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்க, நான் அதிலிருந்து மாறுபட்டு, அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருந்தேன்; அ.இ.அ.தி.மு.க சார்பு 'ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற, 'பெரியார் சமூக கிருமி’ மூலமாக, எனது குடும்பத்தில் சீர்குலைவினை, நான் சந்தித்து வரும் சூழலிலும் (‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html) "அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள  ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக'  உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில்;..ஊழலுக்கு எதிரான 'செயல்பூர்வ சாதனைகள்' இன்றி, மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது; தமிழ்நாட்டில் பா.ஜ.க 'தலை நிமிர' முடியாது; என்ற சூழலில்." என்பதையும், அந்த கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அது போல மோடி அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறது என்று ஊடகத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கியபோது, எனக்கு தெரிந்த பேராசிரியர்களில் பெரும்பாலோர், மனித வள மேம்பாட்டு துறையில் மாற்றம் வராது என்று உறுதியாக (சோகத்துடன்) நம்பினார்கள்.

நான் மட்டுமே,   ‘99% சதவீதம் மாற்றம் வரும்’ என்று, அவர்களிடம் எனது கணிப்பை வெளிப்படுத்தினேன். எனது கணிப்பு தவறானால், அதனை சமூக மூச்சு திணறலாக (Social Suffocation) கருதி, எனது ஆய்வுத்திட்டம் (R & D Project)  முடிந்தவுடன், தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி, சிங்கப்பூரில் அல்லது எனது ஆய்வுகளை ஊக்குவிக்கும் நாட்டில், வாழ முடிவு செய்துள்ளதாக, என்னிடம் பணியாற்றும் ஆய்வாளரிடம் (Ph.D Research Scholar) தெரிவித்து விட்டேன்.

ஏனெனில், அது நடக்கவில்லையென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இருந்த மாணவர்களில் பெரும்பாலோர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில், மோடிக்கு எதிராக வாக்களித்து, மாநிலக்கட்சிகள், அதில் பலன் பெற்று, குழப்ப திசையில் இந்தியா பயணிக்க நேரிடும் என்று கருத்து தெரிவித்து வந்தேன்.

நான் கணித்தது போலவே,  மனிதவள மேம்பாட்டு  துறையிலிருந்து, ஸ்மிருதி ராணியை மாற்றி;

தமது திறமைகளை நிரூபித்துள்ள ஜவடேகரை,  அந்த துறையின் அமைச்சராக்கியுள்ளனர்.

சர்வதேச சமூக, அரசியல்,  பொருளாதார போக்குகள் பற்றிய புரிதலுடன், நாட்டின் போக்குகளை ஓரளவாவது சரியாக கணிக்க முடியுமானால், அந்த போக்குகளில் உள்மறைந்துள்ள (Latent) முரண்பாடுகள் (Contradictions)  பற்றிய தெளிவு கிடைக்கும். அந்த தெளிவின் மூலமே, நமது வரைஎல்லைகளுக்குட்பட்டு (Limitations), நமக்குள்ள ஆற்றலின் மூலம், அந்த முரண்பாடுகள் மீதும், நாடு பயணிக்கும் திசையின் மீதும், ஆக்கபூர்வமாக செல்வாக்கு செலுத்த முடியும்

அல்லது மனசாட்சியை அடகு வைத்து, குறுக்கு வழிகளில் 'செல்வம், செல்வாக்குடன்' சமூக கிருமியாகி, இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம்,  தமது 'வால்களாக்கியும்', வாழவும் முடியும்; 'வித்தியாசமான பொதுவாழ்வு விபச்சாரத்தை' சமூக நோயாக வளர்த்துக் கொண்டு. 

சுயலாப நோக்கின்றி, தாம் ஆதரிக்கும்/எதிர்க்கும் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளை (Contradictions) பகிரங்கமாக கையாண்டதில், இந்திய பொது வாழ்வில், ஈடு இணையற்ற முன்னுதாரணம் 'பெரியார்' ஈ.வெ.ரா ஆவார்; தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்திருந்தாலும்.

உதாரணமாக காங்கிரசில் பிரதமர் நேருவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, முதல்வர் காமராஜரை தீவிரமாக ஆதரித்தார். 

அந்த முன்னுதாரணத்தை, என்னால் இயன்றவரை அகவயப்படுத்தி (internalize), நானும் பயணிக்கிறேன்; எனது அறிவு வரை எல்லைகள் பற்றிய தெளிவுடன்.

உதாரணமாக மோடியின் ஆட்சியை ஆதரித்து கொண்டே(‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்  ‘திராவிடச் சிக்கல்கள்; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html );

மனிதவள மேம்பாட்டு அமைச்சர்  ஸ்மிருதி ராணியின் தவறுகளையும் நான் கண்டித்து வந்துள்ளேன். ( சென்னை அய்.அய்.டியில் அம்பேத்கார்-  பெரியார் வாசகர் வட்ட பிரச்சினை தொடர்பாக: ‘Chennai IIT & APSC issue : The Noises dominating over the Signals’; "if it is the ‘tip of the iceberg of the changes’ introduced by the Modi govt, it may prove to be the ‘Modi’s waterloo’, nullifying all other achievements of the non-corrupt govt."; http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

அதே போல, 'பெரியார்' ஈ.வெ.ராவை 'தேச துரோகி' என்று கண்டித்த,  தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை எனது பதிவுகளில் விமர்சித்துள்ளேன். ( ‘பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;  என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை. http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

நமது கணிப்புகள் பெரும்பாலும் தவறானால், சமூக முரண்பாடுகள் பற்றிய, (கட்சிகள், கொள்கைகள், மனிதர்கள் தொடர்பான‌) நமது புரிதலில் உள்ள தவறுகளை வெளிப்படுத்திய 'சிக்னல்'களாக, அவற்றைக் கருதி, நமது புரிதலில் உரிய திருத்தங்களை (கசப்பாக இருந்தாலும்) மேற்கொண்டு,  பயணித்தால் தான், ஆக்கபூர்வமாக, வெற்றி நோக்கி, நாம் பயணிக்க முடியும். தமது கணிப்புகள் தவறானதற்கு, மக்களை குறை சொல்லும் கட்சிகளும்/தலைவர்களும், (தொடர்ந்து தோல்விகளை தழுவும் திரைப்பட இயக்குநர்களும் கூட) 'சுய மரண' திசையில் பயணிப்பவர்கள் ஆவர்; 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கி, 'ஊற்றுக் கண்களாகிய' சாதாரண மக்களிடமிருந்தும், இயற்கையினிடமிருந்தும் அந்நியமாகி, உணர்ச்சிபூர்வமாக தமது நிலைப்பாடுகளை  'பாதுகாப்பு கவசமாக' கருதி, ஆனால் உண்மையில்  மனச்சிறை கைதியாக வாழ்ந்து கொண்டு.

கட்சி, கொள்கை, புற தோற்றங்களை மட்டுமே நம்பி ஏமாறாமல், ஆதரிக்க வேண்டியவைகளை, 'பிம்ப' சிறையில் (Ego prison)  சிக்காமல், துணிச்சலுடன் ஆதரித்தும், எதிர்க்க வேண்டியவைகளை எதிர்த்தும்;

என்னைப் போலவே, ‘இன்னும் பலரும் பயணிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை,  கீழே குறிப்பிட்டுள்ள‌ தகவல்கள் உணர்த்துகின்றன. 

'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் இடையே, முகநூலில் நடந்த, இந்த விவாதத்தை எனக்கு அனுப்பி வைத்த திரு.பொ.முருகானந்தத்திற்கு நன்றி.

பிஜேபியின் பயோமெட்ட்ரிக் அட்டடென்ஸ் சிஸ்டம் டெல்லி அரசு அலுவலர்களை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறது.

என்னுடைய(எனதுநாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்தநேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை. 

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!! 

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும். 

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.”

மேற்குறிப்பிட்ட திசையில் வெளிப்பட்டுள்ள இன்னொரு தகவல் வருமாறு.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. அங்கு ஒரு மாவட்ட நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வரும் திட்டத்தில்,  நூறாண்டு பழமையான ஏரி பாதிக்கப்பட உள்ளது.  அந்த ஏரியைக் காப்பாற்ற‌,  அந்த மாநில காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க கட்சியினரும் இணைந்து போராடி வருகிறார்கள்.
(“BJP and Congress have come together to save century-old Pipliyahana lake of the city near which construction of new building of the district court is going on.”

எனது பார்வையில், சமூக குருட்டு (Social Colour Blindness)  நோயில் சிக்கி, (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ; ‘திறந்த மனதின்றி, கோபத்துடன் வாழ்பவர்களின் மூளையில், சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை' தவறாக புரிந்து கொண்டு,  தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. ; People with anger disorder wired to misunderstand social cues: New study; http://www.dnaindia.com/health/report-people-with-anger-disorder-wired-to-misunderstand-social-cues-says-study-2232386 )

உணர்ச்சிபூர்வமாக, 'இந்துத்வா' எதிர்ப்பில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், மக்கள் செல்வாக்கை இழந்துவரும் சூழலில்;

மோடி அரசில் 'எதிர்பார்த்த' பலன்கள் கிடைக்காத,  'இந்துத்வா' கட்சியினர், மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உணர்ச்சிபூர்வமாக, செயல்படுவதற்கும்; 

நடுநிலையாளர்களின் கருத்துக்கு மோடி அரசு மதிப்பு கொடுத்து, அதனை கண்டித்து வருவதும், ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.

தமிழக பா.ஜ.க எச்.ராஜா, வலது கம்யூனிஸ்ட் எம்.பியான டி.ராஜா தொடர்பாக பேசிய மிகவும் தவறான கருத்தை, மத்திய அமைச்சர் வெங்கயா நாயுடு கண்டித்துள்ளார்.

( The BJP on Monday has distanced itself from the comment made by H Raja. Union parliamentary affairs minister M Venkaiah Naidu has said in New Delhi that the party does not approve " the purported statement made by H Raja". "There should not be personal criticism. There should be decent criticism," Naidu told the media after an all-party meeting on the eve of the Budget Session.

"If D Raja is a patriot, let him prove his patriotism by asking Communists to shoot his daughter. I would have done that if it was my child,'' the BJP leader had said. ( http://timesofindia.indiatimes.com/city/chennai/H-Rajas-speech-brings-down-public-discourse-to-new-low/articleshow/51099250.cms )

சுயலாப நோக்கின்றி, தமது வரை எல்லைகள் பற்றிய தெளிவுடன், 'பாராட்டு, புகழ்' உள்ளிட்ட‌ போதைகளுக்கு உள்ளாகாமல், பயணிப்பவர்கள் மட்டுமே, நாடு பயணிக்கும் போக்கை  கணித்து, முரண்பாடுகள் மீதும், நாடு பயணிக்கும் திசையின் மீதும், ஆக்கபூர்வமாக செல்வாக்கு செலுத்த முடியும்.

மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;
 

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன. 

உதாரணத்திற்கு ஒன்று:

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் என்னுடன் பணியாற்றிய பேரா.பொன்னுசாமி, 1989இல் மருங்காபுரி எம்.எல்.ஏ ஆனபின், சட்டமன்ற கூட்ட தொடருக்கு செல்லும் முன், காஜாமலை காலனியில் இருந்த எனது வீட்டிற்கு வந்து, விவாதித்து, குறிப்புகள் எடுத்து செல்வார்.1989-91 சட்டமன்ற குறிப்புகளை ஆராய்ந்தால், அந்த காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்பாக, அதிக தகவல்களை அவர் சட்டமன்றத்தில் பேசியதானது வெளிப்படும்.


பின் 1991இல் ஜெயலலிதா முதல்வராகவும், பேரா.பொன்னுசாமி சட்டசபை துணை சபாநாயகர் ஆனார். சட்டசபையில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாக, என்னுடன் விவாதித்து எடுத்துக்கொண்ட குறிப்புகளே, முதல்வர் ஜெயலலிதா முன் மொழிந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவு மீட்புக்கான தீர்மானமாக சட்டசபையில் நிறைவேறியது

 இது தொடர்பான,  கடந்த சுமார் 50 வருடங்களில், நான் பங்கேற்ற, பார்த்த;

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், பாரதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் 'பாரதி வளர்த்த்து பார்ப்பனீயமா? மூட நம்பிக்கையா/' வழக்காடு/பட்டிமன்ற நிகழ்ச்சிகள்;
 
'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு/விவசாயம்' பிரச்சாரங்கள்/போராட்டங்கள்; சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு நிதி NGO உதவி  இல்லாமல், சுயபலத்தில்,  'அணு சக்தியா? அழிவு சக்தியா' (1990) என்ற தலைப்பில் 'திருச்சி பெரியார் மையம்' வெளியிட்டதை, தமிழ்நாட்டு 'முற்போக்குகள்'/ NGOக்கள் புறக்கணித்து, தும்பை- அத்திட்டத்தை வேறு மாநிலத்திற்கு 'இடம் பெயர' இருந்த வாய்ப்பை- விட்டு விட்டு, இன்று வாலைப் பிடித்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தாமல், அணு உலையை மூடுமாறு, குவியப்படுத்தியது சரியா?


'தமிழ் ஈழ விடுதலை' குழுக்கள்/மோதல்கள்/அறிவுபூர்வ விமர்சனங்களை மூழ்கடித்த உணர்ச்சிபூர்வ போக்குகள், மார்க்சிய-லெனினிய குழுக்களில், 'அறிவுபூர்வ கொள்கை விவாத வறட்சி', தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம்(depoliticize)/அடையாளக் குழப்பம் உள்ளிட்டவை தொடர்பான;

எனது அனுபவங்களை பதிவு செய்யும் எண்ணமும் உள்ளது.

அதில் 'சுயலாப' நோக்குடன், நம்முடன் பயணிப்பவர்கள் எல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போது, தமது பங்கை மிகைப்படுத்தி, வியாபாரத்திற்குட்படுத்தி, சமூக கிருமிகளாக வெளிப்படவும் வாய்ப்பிருக்கிறது.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) அதையும் தாண்டி, துணிச்சலான உரிய திருத்தங்களுடன், ஆக்கபூர்வமாக நம்மால் பங்களிப்பு வழங்கவும் முடியும்

விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமி’களை, ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலமே, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த, தமிழர்களை வேரற்றவர்களாக்கும் பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது. சுயநலக் கள்வர்களின் மூலதனமான, உணர்ச்சிபூர்வ போதைகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் மூலம், 'மீட்சிக்கான'  புதிய சமூக தளவிளைவினையும் (New Social Polarization)  தூண்ட முடிந்தது. சாதி, மத வேறுபாடுகளை ஓரங்கட்டி, மனித நேயத்தை குவியப்படுத்தி, இளைஞர்களும், மாணவர்களும், முன்னெடுத்த வெள்ள நிவாரணப் பணிகளும், அடி ஓட்டத்தில் (under current) அதன் தொடர்ச்சியும், புதிய சமூக தளவிளைவின் முன்னறிவிப்பே ஆகும்.( ‘தாராளமாக உதவும் இளைஞர்கள்: ஆர்ஜே பாலாஜி நேர்காணல்’; http://tamil.thehindu.com/society/lifestyle/) அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே, கல்லூரி மாணவர்கள்/இளைஞர்கள், வெளியில் தெரியாமல், 'பிரமிக்கும்' வகையில், ஆக்கபூர்வமான உதவிகள் புரிந்து வருவதையும், நான் பார்த்து, கேட்டு, வியப்பில் மூழ்கி, நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.


குறிப்பு: கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.

"கர்நாடக அரசு கல்வி, நிர்வாகம், வேலை வாய்ப்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து ஆணைகள் அமுல்படுத்தியுள்ளது. அதே ஆணைகளை வாங்கி, 'கன்னடம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்' என மாற்றி ஏன் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்கக் கூடாது?"

"கர்நாடக அரசின் அந்த ஆணைகளை வாங்கித் தாருங்கள். நான் முயற்சிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னார். எனக்குத் தெரிந்த 'தனித்தமிழ்' முக்கிய நபரிடம் அதைத் தெரிவித்தேன். ஒன்றும் பலனில்லை.

அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தகவலைச் சொன்னேன். அவர் பெருமையுடன் "அந்த கர்நாடக அரசின் ஆணைகள் வந்து விட்டன. எனது துறையில் தான் உள்ளது" என்றார். அதாவது பேரா.பொன்னுசாமியின் முயற்சியால் அந்த ஆணைகள் கிடைத்த‌ பின், ஆட்சி மாற்றம் நடந்ததிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் ப.தண்டபாணிக்கு ஏற்பட்ட முடிவே, 'அந்த' ஆணைகளுக்கும் நடந்தது. 

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, பேரா.பொன்னுசாமி 'கட்சி மாறி'யாகி விட்டார். அந்த தவறினை அவர் செய்யாமல், அ.இ.அ.தி.முகவில் நீடித்திருந்தால், மீண்டும் அவர் மூலம் முயற்சி நடந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.


தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய‌ கச்சத்தீவு தீர்மானத்தில் பேரா.பொன்னுசாமி ஆற்றிய முக்கிய பங்கினையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html) 

No comments:

Post a Comment