Friday, July 19, 2019


.வெ.ரா காலம் முதல் செல்டன் பொல்லாக் காலம் வரையில் நீடித்த‌;


தமிழ்ப்புலமையின் பலகீனமான  அறிவு வலிமை முடிவுக்கு வருகிறதா?


இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு இனி நல்ல வாய்ப்பு?



.வெ.ரா அவர்கள் ஆரம்பப்பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். ஆனால் சுயலாப நோக்கின்றி தமது அறிவுக்கு சரி என்று பட்டதை எல்லாம் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர் ஆவார்.

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்." என்று .வெ.ரா முன்வைத்த வாதத்தினையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்
(‘'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’;

செல்டன் பொல்லாக் முனைவர் பட்டம் பெற்று, உலக அளவிலும், இந்தியாவில் 'இந்துத்வா எதிர்ப்பு' அறிவுஜீவிகளாலும் போற்றப்படுபவர் ஆவார்

தமிழ் மொழி தொடர்பாக .வெ.ரா வெளியிட்டுள்ள கருத்தினை ஒட்டியே, இன்னும் மோசமாக;

தமிழில் இலக்கியங்களே கி.பி 1000-க்குப் பின், சமஸ்கிருதத்தின் துணையுடன் வெளிவந்தன; என்பது போன்ற அபத்தமான கருத்துக்களை, இன்று உலகில் செல்வாக்குடன் வலம் வரும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்

இதில் இன்னொரு வினோதமான ஒற்றுமையும் உண்டு. .வெ.ரா வாழ்ந்த காலத்தில் தமிழ் தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்து ஏன் அபத்தமானது? என்று .வெ.ராவுக்கு நெருக்கமான தமிழ்ப்புலமையாளர்கள் எவரும் அவருக்கு சுட்டிக்காட்டி, அவரைத் திருத்தியதாக தெரியவில்லை.

அது போல, நானறிந்த வரையில், இன்று செல்வாக்குடன் வலம் வரும் எந்த தமிழ்ப்புலமையாளரும், தமிழ் தொடர்பாக செல்டன் பொல்லாக் வெளிப்படுத்திய கருத்து ஏன் அபத்தமானது? என்று அவருக்கு சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை. அண்மையில் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரும் போது தான், அம்மாநாட்டில் பங்கேற்ற தமிழ்ப்புலமையாளர்களில் எவராவது, செல்டன் பொல்லாக்கின் தமிழ் தொடர்பான தவறான கருத்தை மறுத்திருக்கிறார்களா? என்ற உண்மை வெளிச்சமாகும்.

.வெ.ராவின் தமிழ் தொடர்பான கருத்தினை எதிர்த்து உரக்க பேசி வருபவர்களில், எழுதி வருபவர்களில், எவராவது செல்டன் பொல்லாக்கின் தமிழ் பற்றிய கருத்தினை எதிர்த்தார்களா? இல்லையென்றால், அது அவர்களின் இரட்டை வேடப் போக்காகாதா?

பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் தமது ஆய்வின்(?) மூலமாக, "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்." என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார். அந்தமுடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்ற மறுப்புகளும் வெளிவந்துள்ளன. அதன் பின்னும், 'அந்த' தவறான முடிவை, அவர் திருத்திக் கொண்டாரா?  செல்டன் பொல்லாக்கின் தமிழ் பற்றிய தவறான கருத்தினை, ஜார்ஜ் ஹார்ட் மறுத்தாரா? இல்லைடயென்றால், கோவை செம்மொழி மாநாட்டிலும், அண்மையில் அமெரிக்காவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிலும் அவர் முக்கியத்துவம் பெற்றதானது, தமிழ்ப்புலமைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html)

.வெ.ராவிற்கும், செல்டன் பொல்லாக்கிற்கும், தமிழை இழிவுபடுத்த வேண்டும்; என்ற உள்நோக்கம் இருந்ததாக நான் கருதவில்லை.

தமிழ்ப்புலமையின் அறிவு வலிமையானது மிகவும் பலகீனமான நிலையில் உள்ள தமிழ்ப்புலமையாளர்களின் செல்வாக்கில் தமிழ்நாடானது, .வெ.ரா காலம் முதல் இன்று வரை சிக்கியுள்ளதா? என்ற கேள்வியையே;

.வெ.ராவின், செல்டான் பொல்லாக்கின், தமிழ் தொடர்பான அபத்தமான கருத்துக்கள் எழுப்பியுள்ளன.

சர்வாதிகாரம் உச்சக்கட்டத்தில் இருந்ததாக சொல்லப்படும் இட்லர், ஸ்டாலின், மாவோ, இன்று வட கொரியா கிம் ஜாங்க் உள்ளிட்டோர் ஆட்சிகளில் எல்லாம் அந்தந்த மொழிகளில் இருந்த புலமைக்கு எந்த சிக்கலும் இருந்ததாக தகவல் ஏதும் இல்லை. அவர்களில் எவரும் அந்தந்த மொழிகளில் தாங்களே தலையான புலமையாளர் என்ற போதையில் சிக்காதது, அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

காஷ்மீரில் வெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட வலிமையானது, தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு, தேசியக் கட்சிகளை எல்லாம், 'சலாம்' போட வைக்கும் தமிழ்நாட்டின் மென்சக்தி (Soft Power);

என்பதை தமிழ்நாடு இன்றுவரை நிரூபித்து வந்துள்ளது.(‘அகில இந்திய பா..-வின் 'அடையாள அரசியல்' வெற்றியில், தமிழ்நாடு இடம் பெறாதது ஏன்?’; https://tamilsdirection.blogspot.com/2019/06/5.html )

தமிழ்நாட்டில்  தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன் (http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802சாகும் வரை, தமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டிய நெருக்கடியானது, எதை உணர்த்துகிறது?

தமிழ்நாட்டு ‘‘திராவிடஅரசியலில் சிக்கிய  திருக்குறள் ஆய்வுகள்பற்றியும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

நாகசாமிக்கும் தி.மு. தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில் வெடித்த கருத்து மோதலுக்குப் பின், சென்னை பெரியார் திடலில் கூட்டம் போட்டு நாகசாமியை கண்டித்த முன்னாள் துணை வேந்தர்களும், தமிழ்ப் புலமையாளர்களும் மேற்குறிப்பிட்டது தொடர்பாக மெளனம் சாதிக்கும் போக்கினை கடைபிடித்தால், அது தமிழ்ப்புலமைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, பொதுவாழ்விலும் பங்களித்த எனது ஆய்வுகளுக்கே இந்த கதி என்றால், இளம் தமிழ்ப்புலமையாளர்கள் நிலை எப்படி இருக்கும்? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்பட்டுள்ள, தமிழில் யாப்பிலக்கணக் கல்வியில் உள்ள குறைகளை நீக்குவதானது, 20 வருடங்கள் தாமதமாகியும், அதை நீக்க முயற்சிக்காத 'தமிழ்ப்புலமையாளர்கள்/ஆர்வலர்கள்', எத்தகைய முட்டாள்த்தனமான முயற்சியில் ஈடுபட்டு, முகத்தில் கரியைப் பூசிக் கொண்டார்கள்? என்று அடுத்து பார்ப்போம்.

தேவநேயர் பாவாணர் மறைந்த பிறகு, அவர் முன் வைத்த லெமூரிய கண்டம் பற்றிய கருத்தானது, அறிவியல் ஆய்வு முடிவுகளின் படி தவறு என்று வெளிப்பட்டுள்ளது.
“The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community.”

அது தெரியாமல், தேவநேய பாவாணரின் பக்தர்களாக பயணித்ததானது, தேவநேய பாவாணரையே கேலிப்பொருளாக்கி விட்டதா? அதை இணையத்தில் கேலி செய்தவரை, அறிவுபூர்வமாக மறுக்கும் அறிவு வலிமையின்றி, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், "மின் தமிழ் கூகிள் குழுமத்தையும், விக்கிபீடியாவையும் மூடி,”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்கோரிக்கையை முன்வைத்த 'தமிழ்ப்புலமையாளர்கள்/ஆர்வலர்கள்' யார்? யார்? என்ற விபரமும்;

'தேவநேயனை பின்பற்றுபவர்களுக்கு மூளையில் ஸ்க்ரூ லூஸ் என்பது இது தக்க சான்று.  பொற்கோ, பொன்னவைக்கோ ஆகியவர்கள் லெமூரியாவிலிருந்து விலகி இன்றைய உலகத்தில் ஆஜராகுவதுதான் அவர்களுக்கு தக்க அறிவுரை.' என்ற கருத்தும் கீழ்வருவதில் உள்ளது.

அதாவது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல், பயணிக்கும் 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக, உலக அளவில் அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் கருதும் விளைவில் அது முடியும். (‘உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வசிக்னல்கள்'; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html) தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா..சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

சுமார் 5 வருடங்களுக்கு முன் இதனை வெளியிட்டபோது, தமிழ் உலகில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் தொடர்பாக, அறிவுபூர்வ மறுபரீசிலனைத் துணிச்சலான திசையில் தொடங்கும், என்று நான் எதிர்பார்த்தேன். எப்பொருள் எவர் வாய் என்று ஆய்ந்து, சுயலாப நோக்கில், அப்பொருளைப் பாராட்டும், கண்டிக்கும், இருளில் தள்ளும் தமிழ்ப்புலமையாளர்களின் செல்வாக்கு ஒழியாமல், அது சாத்தியமில்லை, என்பதை உணர்ந்தேன்.’ 

1967க்குப் பின் தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில், எம்.ஜி.ஆர் ஆட்சியில் மட்டுமே தமிழ்ப்புலமையானது மதிக்கப்பட்டது. உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன(.வெ.ராவுக்கு ஆதரவாக தமிழ் தொடர்பான‌ - 'கம்ப ரசம்' போன்ற - தமது நிலைப்பாடுகள் தவறானவையா? - என்று விளக்கம் தராமல், கம்பர் உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் அண்ணா சிலை வைத்தது தவறில்லையா?)

இந்தியாவில் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சிறப்பான முன்னுதாரணமாக, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது; மிக மோசமான முன்னுதாரணமாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' இருக்கிறது.

தி.மு. ஆட்சியில் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜெனார்த்தனம், கி..பெ.விஸ்வநாதன் உள்ளிட்ட இன்னும் பல புலமையாளர்களை எல்லாம் தேடி, வரவழைத்து, மிகுந்த மரியாதை செய்து, ஆலோசனைகள் பெற்று முதல்வர் எம்.ஜி.ஆர்  ஆட்சியை நடத்தியதால்;

உலகப்புகழ் பெற்ற தமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியத்தை வரவழைத்து, அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்று, தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தராக்கினார். துணைவேந்தரான பின், அவர், கணபதி ஸ்தபதியை கட்டிடவியல் ஆலோசகராக கொண்டு உருவாக்கிய தமிழ்ப்பல்கலைக்கழகம் தான் இன்று தஞ்சையில் இருக்கிறது.

துவக்க காலத்தில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்ட போதும், அங்கு சென்று, அமெரிக்க பல்கலைக்கழக பதவியில் இருந்து விலகி, அங்கு மொழியியல் துறைத் தலைவராக இருந்தவரை கண்டு பேசி, செயல்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன். பின் இப்போதுள்ள வளாகத்தில் கட்டிடங்கள் முடிந்து, இடம் பெயர்ந்த பின்னும், அங்கு சென்று பார்த்து வியந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கும், கருணாநிதியின் ஆட்சிக்கும், பண்புரீதியிலான வேறுபாடு உண்டு; அது தொடர்பான அனுபவங்களைப் பெற வாய்ப்பின்றி, புத்தகங்களை மட்டுமே நம்பி, அபத்தமான வாதங்களுடன் தி.மு.கவை ஆதரித்த‌ M.S.S பாண்டியன் போன்றவர்களுக்கு அந்த வேறுபாடு தெரியாது. 

தி.மு. ஆதரவு போக்கில் பயணித்த, தி. மேடைகளில் பங்கேற்ற, என்னைப் போன்ற பேராசிரியர்களை எல்லாம், எம்.ஜி.ஆர் அரசு பழிவாங்கவில்லை; அடுத்து வந்த தி.மு. ஆட்சியில் பேரா.தீரன் போன்றவர்கள் எல்லாம் பணி நீக்கத்திற்கு உள்ளானார்கள்; தி.மு. ஆதரவு போக்கில், தி. பயணித்ததால், நாங்கள் தப்பித்தோம். 1970களில் தி.மு. ஆட்சியில் எழுச்சியுடன் எண்ணற்ற பள்ளி அசிரியர்கள் பங்கேற்ற போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டு, சிறையிலிருந்த ஆசிரியர்கள் மன்னிப்பு மடல் கொடுத்து விடுதலையானார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் பலமுறை கல்லூரி ஆசிரியர் போராட்டத்தில், என்னைப் போன்று சிறை சென்ற ஆசிரியர்கள் எல்லாம், ஒவ்வொரு முறையும் போராட்டம் வெற்றி பெற்றே விடுதலை ஆனோம்.’ 

தி.மு. தலைவர் கருணாநிதி ஆட்சியில், காவிரியிலும், கச்சத்தீவிலும் ஏற்பட்ட பாதகங்களிலும்;

எம்.ஜி.ஆர் ஆட்சியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏற்பட்ட பாதகங்களிலும்;

மிகுந்த துணிச்சலுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க பாடுபட்டவர் என்ற வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டினாலும்;

எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி;

முனைவர் பட்டம் பெறாத, பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாத,

வீணையிலும் சிட்டிபாபு, பாலச்சந்தர் போன்றவர்களுடன் ஒப்பிடமுடியாத, சிறுவயதில் வீணை வாசித்து புகழ் பெற்றவரான காயத்ரியை;

புதிதாக தொடங்கப்பட்ட‌ 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின்துணைவேந்தராக்கியதானது;

என்னால் இன்றுவரை சீரணிக்க முடியாத பெரும் தவறாகும்; காயத்ரி பிராமணராக இருந்தாலும், பிராமணரல்லாதோராக இருந்தாலும்.’ 

முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த கீழ்வரும் சம்பவமானது, முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்? என்று மனசாட்சியுடன் வாழ்பவர்கள் எல்லாம் யூகிக்கலாம்.

மதுரையில் 1981-இல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில், 'திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழிசை எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?' என்று வீ.பா.கா. சுந்தரம் உரையாற்றினார். உடனே எம்.ஜி.ஆர் மேடையில் ஏறி, 'நான் இப்போது முதல்வர். தமிழிசை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள்; செய்கிறேன்" என்று அறிவித்து; பின் வீ.பா.கா சுந்தரத்தை அணைத்து, அவரின் காதருகே, ", ரி, , , , , நி, தமிழா?" என்று எம்.ஜி.ஆர் கேட்க, உடனே வீ.பா.கா.சுந்தரம் "ஆமாம் ஐயா. வாய்ப்பு தந்தால் நேரில் விளக்குகிறேன்' என்று சொன்னார். அதன்பின் சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி, சில காலம் கழித்து மறைந்தார்.

வீ.பா.கா சுந்தரம் என்னிடம் மேற்குறிப்பிட்ட தகவலை சொன்னார். ...தி.மு. அவைத் தலைவராக இருந்த காலத்தில், புலமைப்பித்தனும் அதை என்னிடம் உறுதிப்படுத்தினார்.

2001 காலக்கட்டத்தில் அமைச்சர் பொன்னையனையும் வீ.பா.கா. சுந்தரத்தையும் சந்திக்க வைத்து, அதன் மூலம் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆரின் 'தமிழிசை மீட்பு' வாக்குறுதியை, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு செல்ல, புலமைப்பித்தன் முயற்சித்தார். ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. ஏன் நடைபெறவில்லை? என்ற ஆராய்ச்சியானது, ஜெயலலிதாவின் மர்மமான மரணம் நடந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பத்துடன் தொடர்புடையதாக, வருங்காலத்தில் வெளிப்பட்டால் வியப்பில்லை.’

தமிழ்ப்புலமையின் வளர்ச்சிக்கு உதவும் கீழ்வரும் வழிமுறையை, சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டியுள்ளது.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'
சிலப்பதிகாரம்: 1;3 அரங்;65

இசை தொடர்பான மேற்குறிப்பிட்ட வழிமுறையானது, தமிழ்ப்புலமையின் வளர்ச்சிக்கு திட்டமிட உதவும்.

உதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் உள்ளிட்ட இன்னும் பல அது போன்ற தொகுப்புகள் எல்லாம், பாராட்டுதலுக்குரிய வகையில் வெளிவந்தவை ஆகும்.

தமிழ் தொடர்பாக உலக அளவில் நடந்து வரும் ஆய்வுகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல மொழிகளில், பழந்தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதிலும், மேற்குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் உள்ள குறைபாடுகள் எல்லாம்மேற்குறிப்பிட்ட ஆய்வுகளிலும், மொழிபெயர்ப்புகளிலும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

உதாரணமாக, தமிழ் லெக்சிகனில் இடம் பெற்ற சொல்லிற்கான இலக்கிய சான்றுகளில் பாடல் தொடர்பான குறிப்புகளில் தவறுகள் உள்ளன. அதைவிட முக்கியமாக; 'அந்த' இலக்கியச் சான்றிலிருந்து, லெக்சிகன் குறிப்பிட்ட பொருள் பெறுவதற்கான நியாயம் இல்லாத பகுதிகளும் இருக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களில் எந்தெந்த சொற்கள் தமிழ் லெக்சிகனில் இடம் பெறவில்லை? என்ற குறைபாடும் இருக்கிறது. 

அவற்றில் என்னென்ன குறைகள் உள்ளன? அவற்றை எவ்வாறு கண்டு பிடிப்பது? என்பது தமிழ்ப்புலமையின் வளர்ச்சிக்கு (‘'வந்தது வளர்த்து’) உதவும் கேள்விகள் ஆகும்

மேற்குறிப்பிட்டவை தொடர்பாகவும், தமிழறிவுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ளவர்கள் எல்லாம், புதிய கண்டுபிடிப்புகளுக்காக, எவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்துவது? (‘வருவது ஒற்றி') என்பது தொடர்பாகவும், அண்மையில் ஆங்கிலத்தில் கீழ்வரும் நூலை வெளியிட்டுள்ளேன்.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'
(Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research. 

Free Excerpt:



சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில், தமிழ் நூல்களை - குறிப்பாக பாரதி, ஜெயகாந்தன் போன்ற இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை - விரும்பி தேடி படிக்கும் வாசகர்கள் எல்லாம், நானறிந்தது வரையில், சுயலாப நோக்கின்றி, இழப்புகளைப் பற்றிய கவலையின்றி, தாம் பணியாற்றும் இடத்தில், வாழும் இடத்தில், அநீதியை எதிர்த்தோ, நியாயமான கோரிக்கைகளுக்காகவோ போராடியதில்லை.

அத்தகைய 'எலிகளாக' வாழ்பவர்களை நம்பி, நான் ஒரு சமயம் 'பூனைக்கு மணிகட்டினேன். பின் அந்த எலிகள், சரணடைந்த பூனையை, எனது எதிர்ப்பினையும் மீறி, 'சேடிஸ்ட்'(Sadist) பழி வாங்கும் நோக்கில் துன்புறுத்த, நான் வெறுத்து ஒதுங்க, பின் அதே பூனையானது அந்த எலிகளைத் தூக்கிப் பந்தாடிய விநோதமும் அரங்கேறியது. அது தொடர்பான அனுபவங்களையும் நேரம் வாய்க்கும்போது பதிவு செய்வேன்

எனது கட்டுரைகள் மற்றும் பதிவுகள் மூலமாக, கடந்த சுமார் 10 வருடங்களாக;

தமிழ்ப்புலமையை மீட்க, அரசியல் கொள்ளையர்களுக்கு நெருக்கமாகி, நேர்மையான தமிழ்ப்புலமையாளர்களை, 'அச்சுறுத்திய பூனைகளுக்கு' மணிகள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளேன்; அது தொடர்பாக நான் சந்தித்த அச்சுறுத்தல்களும், துயரங்களும், கூடுதல் வலிமையுடன் அம்முயற்சியில் ஈடுபடவே என்னைத் தூண்டின.

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, பொதுவாழ்விலும் பங்களித்த எனது ஆய்வுகளுக்கு நேர்ந்தகதி, இளம் தமிழ்ப்புலமையாளர்களுக்கு இனி ஏற்படாது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்தது மட்டும் அதற்கு காரணமல்ல;

தமிழை வைத்து இனி அரசியல் வியாபாரம் செய்தால் எடுபடாது; என்பதை திராவிட அரசியல் கட்சிகள் உணர்ந்து விட்டார்கள். எனவே 'அந்த' அரசியல் வியாபார விற்பன்னர்களாக இருந்த எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், புரவலர்களை இழந்த அனாதைகளாக அல்லற்படும் படலமும் தொடங்கி விட்டது.

என்னைப் போன்றே தமிழ்ப்புலமையை மீட்கும் முயற்சிகளும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

இனி அறிவுபூர்வ எதிர்ப்பின்றி செல்டன் பொல்லாக் போன்றவர்கள் எல்லாம், தமிழ் தொடர்பாக அபத்தமான ஆய்வுகள் வெளியிட முடியாது.

.வெ.ரா தமிழ் தொடர்பாக வெளிப்படுத்திய அபத்தமான கருத்துக்களை எல்லாம், .வெ.ரா வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாமல், அவற்றை 'வேத வாக்காக' கருதி, இனியும் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், .வெ.ரா எச்சரித்த 'முட்டாள்களாக' வெளிப்படுவதையும் தவிர்க்க முடியாது.

மறைந்த பேரா..சஞ்சீவி போன்ற பிரபலமானவர்கள் வெளியிட்டுள்ள நூல்களிலும், கட்டுரைகளிலும்,  மேற்குறிப்பிட்ட ஆய்வு வழிமுறையில் இருந்து தடம் புரண்டு ஆய்வு முடிவுகள் வெளியிட்டதற்கான சான்றுகள் உள்ளன. இளம் ஆய்வாளர்கள் அவற்றை ஆய்வு செய்து வெளிப்படுத்தலாம்.

தமிழ் லெக்சிகன் உள்ளிட்ட தொகுப்புகளில் நான் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை எல்லாம் தொடக்கமாக கருதி, துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் இளம் ஆராய்ச்சியாளர்கள் முன்னேறலாம்.

அது மட்டுமல்ல, 'அந்த'  இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம், தொழில்நுட்ப புலமையாளர்களுடன் குழுவாக இணைந்து, சந்தைப்படுத்தக் கூடிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் காலம் நெருங்கி வருவதை, கீழ்வரும் காணொளியிலும் விளக்கியுள்ளேன்.

.வெ.ரா காலம் முதல் செல்டன் பொல்லாக் காலம் வரையில் நீடித்த‌, தமிழ்ப்புலமையின் பலகீனமான  அறிவு வலிமையானது, முடிவுக்கு வரும் படலம் தொடங்கி விட்டது.இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இனி நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment