'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' ஈ.வெ.ராவா? (2)
'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்
நாகரீகமற்ற தொடக்க கால நிலையில் வாழும் மனிதரை 'காட்டுமிராண்டி' என்ற சொல்லால் குறிப்பர். (‘A
barbarian is a human who is perceived to be either uncivilized or primitive.’ ;
https://en.wikipedia.org/wiki/Barbarian
) 'காட்டுமிராண்டி' என்ற சொல்லினை, தாம் வெறுக்கும் நபரை/பொருளை இழிவுபடுத்த சொல்வதற்கும், நாகரீகமற்ற தொடக்க கால நிலையில் உள்ள நபரை/பொருளைக் குறிப்பதற்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று ஈ.வெ.ரா அவர்கள், நாகரீகமற்ற தொடக்க கால நிலையிலிருந்து வளராமல் தமிழ் மொழி இருப்பதாகக் கருதியே, அந்த கருத்தினை வெளியிட்டார்.
“இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், “தமிழ் மொழி 3000
– 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்…………….
தமிழ் தோன்றிய 3000
– 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்….. தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன். – “தாய்ப் பால் பைத்தியம்’ என்ற நூலிலிருந்து.
'The death of language, Language Attrition' போன்றவை தொடர்பான ஆய்வுகளை அறிந்தவர்களுக்கு மட்டுமே, மேற்குறிப்பிட்ட கருத்தானது, எவ்வாறு 'தமிழ் வேர்க்கொல்லி' ஆகும்? என்பது விளங்கும்.
'The death of language, Language Attrition' போன்றவை தொடர்பான ஆய்வுகளை அறிந்தவர்களுக்கு மட்டுமே, மேற்குறிப்பிட்ட கருத்தானது, எவ்வாறு 'தமிழ் வேர்க்கொல்லி' ஆகும்? என்பது விளங்கும்.
(The death of language ; http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)
& Language Attrition; https://www.babbel.com/en/magazine/possible-to-forget-mother-tongue-and-language-attrition)
தமது அறிவுவரை எல்லைகள்(intellectual
limitations) தெரியாமல், ஈ.வெ.ரா அவர்கள் மேலே குறிப்பிட்ட கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஈ.வெ.ராவுக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்கள், மேலே குறிப்பிட்ட கருத்து தவறு என்பதை ஏன் விளக்கி, அவருக்கு தெளிவை ஏற்படுத்தவில்லை? என்ற கேள்வியானது, இனியும் இருளில் நீடிக்கலாமா?
‘அவருக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
ஆக பயணித்தார்; முந்தைய பதிவில் விளக்கியபடி, 'அடையாள அழிப்புக்கு' வழி வகுத்து. தமிழ்நாடு திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழியவும், அந்த கொள்ளையர்களின் ஆதரவில் பிரபாகரன் சிக்கி, முள்ளி வாய்க்கால் அழிவில் முடியவும். (‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' ஈ.வெ.ராவா?’ (1);
http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html
)
இன்று ஈ.வெ.ராவை விமர்சிப்பதைக் கண்டிக்கும் தமிழறிஞர்கள், இனியாவது மேலே குறிப்பிட்ட கருத்து எவ்வாறு தவறு? என்பதைத் தெளிவுபடுத்துவார்களா? சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் எல்லாம், அவ்வாறு தெளிவுபடுத்த வேண்டியதானது, அவர்களின் சமூகக் கடமையாகாதா? (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html
)
தம்மை அறிவுபூர்வமாக 'இடிப்பாரை' வரவேற்று பயணித்த ஈ.வே.ரா-வின் தமிழ் தொடர்பான கருத்துக்களை, 'குருட்டுப்பகுத்தறிவாளரின்' கருத்துக்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் எனது ஆய்வுகள் மூலமாக, மேலே குறிப்பிட்ட கருத்து எவ்வாறு தவறானது? என்பது வெளிவந்த பின்பும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமலும், அறிவுபூர்வமாக மறுக்காமலும் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், 'குருட்டுப் பகுத்தறிவாளர்களாக' வரலாற்றில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?
(http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html
) ) 'அந்த குருட்டுப் பகுத்தறிவின்' செல்வாக்கில், 'பெரியார்' பிம்ப வழிபாட்டினை முதலில்லாத மூலதனமாக்கி, சமூகத்திற்குக் கேடான குறுக்கு வழிகளில், 'அதிவேகப் பணக்காரர்களாக' வலம் வரும் 'பெரியார் சமூக கிருமிகளை' அடையாளம் காண, ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய 'திறவுகோலே' துணை புரியும். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html
)
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, உண்மையில் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது?” என்று அவரிடம் கேட்ட போது, எந்த தயக்கமும் இன்றி “வந்த கடவுளைச் சோதித்துப் பார்த்து உண்மையென்றால், கடவுள் உண்டு என்று சொல்லி விடலாம். நமக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட சண்டையா, என்ன?” என்ற வகையில் பதில் சொன்னவர் அவர்."
தனது ஆருயிர் நண்பர் ராஜாஜியின் பிணம் எரியூட்டப்படுவதற்கு முன், சக்கர நாற்காலியுடன் தன்னைத் தூக்கச்செய்து, மூன்று முறை வலம் வந்து, 'இந்து மத' சடங்கை நிறைவேற்றிய அளவுக்கு, தனிமனித நேயத்தில் 'சிகரமாக' வாழ்ந்தவர் ஈ.வெ.ரா. (http://tamilsdirection.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html
)
'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்ற வாசகத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம், 'தமது கடவுள் கற்பிக்கப்பட்ட கடவுள்' என்பதை ஒத்துக்கொண்டதாகாதா?
‘'கடவுள் இல்லை' என்ற முழக்கத்தை முன்வைத்த போது, இந்து, முஸ்லீம், கிறித்துவ மதங்களின் முக்கிய பிரதிநிதிகள் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியாரைச் சந்தித்து, தங்கள் மனம் புண்படுவதாக வருத்தம் தெரிவித்தனர். அதற்கு அவர்களிடம், 'நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் கடவுளை இல்லையென்பதால், உங்களின் மனம் புண்படாத போது, நான் கடவுள் இல்லை என்று சொல்வதால், உங்கள் மனம் புண்படுகிறது என்பது சரியா?' என்ற வகையில் விளக்கம் அளித்து, அவர்களை அனுப்பிய செய்தி வெளிவந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html
)
ஈ.வெ.ரா அவர்கள் தாம் பயன்படுத்தும் சொற்களை எல்லாம், சமூக நோக்கில் அறிவுபூர்வமாகவே பயன்படுத்தியுள்ளார். தமது சமூக இலக்கிற்கான சமூக ஆற்றலைப் பெருக்க, அரைததற்குறிகளாக வாழ்ந்தவர்கள் மத்தியில் 'உணர்ச்சிபூர்வமாக' பேசினார்;
பின் அத்தகையோரே 'முரண்பாடாக' கருதும் அளவுக்கு, தமது இலக்குக்கு சாதகமாக அவர் பேசினார்; என்பது தொடர்பான கீழ்வரும் தகவலானது, அண்மையில் இணைய வழியில் எனது கவனத்திற்கு வந்தது.
“சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி என்று திருச்சியில் ஒன்று இருக்கிறது. அங்கு விழாவிற்கு அய்யா போயிருக்கிறார். அந்த கல்லூரி தாளாளர் ராமசாமி அய்யரை அய்யா வெகுவாக புகழ்ந்து பேசினார். பிறகு பெரியாரிடம் நண்பர்கள் நீங்கள் காலமெல்லாம் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களை இவ்வளவு பாராட்டி பேசுனீர்களே ஏன் என்று கேட்டனர். அதற்கு தந்தை பெரியார்
"யாரா இருந்து நமக்கு என்னங்க, நம்ம பிள்ளைகள் படிப்பதற்கு கல்லூரி கட்டியிருக்கிறார். அதுவும் பெண்பிள்ளைகள் படிப்பதற்கு கட்டியிருக்கிறார். காலமெல்லாம் அதுக்குதானே பாடுபடறேன். அவர்களுக்காக ஒரு கல்லூரி கட்டியிருக்கிறப்போ நாத்திகராயிருந்தா என்ன, ஆத்திகரா இருந்தா என்ன? அவர் என்ன ஜாதியா இருந்தா என்ன? பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிற யாராயிருந்தாலும் உயர்ந்தவர்கள் தான், பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அந்த கடமை நமக்கு இருக்கிறது
"என்றார். நாகரிகம் தெரிந்த இந்த கிழவனை காலமெல்லாம் புகழ்ந்தாலும் என் கணக்கு தீராது!” (https://m.facebook.com/story.php?story_fbid=1147821665397558&id=100005092054803
)
'பிராமண எதிர்ப்பு' மற்றும் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' செனோபோபியா (https://en.wikipedia.org/wiki/Xenophobia
) மனநோயில் சிக்கியவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட தகவலை 'கசப்பாக' அணுகுவதில் ஒன்றுபட்டால் வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html
)
‘1944இல் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய 'திராவிடர் கழகமானது', தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள், ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து பயணித்ததானது;
தமிழர்களின் இயல்பான அடையாள சமூக செயல்நுட்பத்தை சீர்குலைத்து, எந்த வழியிலாவது தம்மை 'உயர்த்தி' காண்பிக்கும் போதைகளில் சிக்க வைக்கும் விளைவில் முடிந்தது; என்பதானது, ஈ.வெ.ரா அவர்களின் தோல்வியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் தத்தம் அரசியல் வாழ்வில் பெற்ற அதிகபட்ச வாக்குகளை எல்லாம் விஞ்சி, சாதனை படைத்து, கட்சிகளின் அரசியல் எல்லாம் செல்லாக்காசாகி விட்டதை நிருபித்து சாதனை படைத்த தினகரனின் வெற்றிக்கான அடித்தளமே;
தமது 'அறிவு வரை எல்லைகள்' பற்றிய புரிதல் இன்றியும், 'பெரியார்' என்ற பட்டமே தமது பெயராகும் அளவுக்கும், காந்தி, நேரு வழியில் தமக்கு 'சிலை' வைத்ததை அனுமதித்தும், கடவுளைப் போல தராசில் அமர்ந்து, 'எடைக்கு எடை' காசும், பொருளும் பெற்றும், 'பிம்ப' வழிபாட்டை ஊக்குவித்த காரணத்தால், தமிழ் அறிஞர்கள் 'ரசிகராக' பயணித்து வழிபட்ட போக்கில், 'இடிப்பாரின்றி' பயணித்த ஈ.வெ.ரா, நமக்கு ஒரு அபாய எச்சரிக்கையாகவே வாழ்ந்து மறைந்துள்ளார்; அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்று தாம் பயணித்திருந்தாலும். அத்தகையப் பயணத்தினை அடித்தளமாகக் கொண்டு, 'குருட்டுப் பகுத்தறிவானது' செல்வாக்கு பெற்று, ஊழலுக்கான சமூக முதுகெலும்பாகி, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது. தமிழைக் 'காட்டுமிராண்டியாக' விளங்கிக்கொண்ட அதே அறிவில், 'திராவிட' ஊழலை நிர்வாகப் பிரச்சினையாக அணுகி, ஊழலின் சமூக அடித்தளம் பற்றிய புரிதலின்றி, 'பெரியார் தந்த புத்தியில்', ஊழல் கவசமாக செயல்படவும் வழி வகுத்தது. அதனை 'திருச்சி பெரியார் மையம் அனுபவங்கள்' மூலமாக, நான் கண்டுபிடிக்க நேர்ந்தது அந்த 'படிப்பினையுடன்', எனது 'அறிவு வரை எல்லைகள்' பற்றிய புரிதலுடனும், என்னை அறிவுபூர்வமாக இடிப்பவர்களையே, எனது சமூக வட்டத்தில் அனுமதித்தும், என்னைப் பாராட்டி என்னுடன் 'நட்பு' கொள்ள முயன்றவர்களை/முயல்பவர்களை ஒதுக்கியும், நான் பயணித்து வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றியின் இரகசியமாகும்.
இசை ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' இயக்கத்தில் மார்க்சிய லெனினிய குழுக்களுடன், நான் அறிவுபூர்வ விவாத மோதலில் ஈடுபட்டபோது, என்னை மிகவும் பாராட்டி என்னுடன் நெருக்கமாகப் பயணித்த, 'திருச்சி பெரியார் மையம்' நபர்கள் எல்லாம், தமிழ் தொடர்பான எனது ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமலும், அறிவுபூர்வமாக மறுக்காமலும் இன்று வரை 'குருட்டுப் பகுத்தறிவுக்கு' முன்னுதாரணமாக பயணித்து வருவதால், நான் கற்ற பாடமும் அதுவேயாகும்: 'திராவிட மனநோயாளிகளாக' அவர்கள் பயணித்ததை நான் கண்டுபிடித்ததும் அந்த பாடத்தில் அடங்கும்.(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) அதன் தொடர் விளைவாகவே, 'இனம்' தொடர்பான ஆய்விலும் நான் பயணிக்க நேரிட்டது.
(''இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?';
http://tamilsdirection.blogspot.com/2015/06/depoliticize-4.html )
நானறிந்த 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியம் மூலமாக தாம் 'ஏங்கும்' உயர் செல்வ நிலையை அடைய முடியாதவர்களும், நேர்மையாக புலமையில் வளர திறமையோ அல்லது உழைக்க மனமோ இன்றி, தாம் 'ஏங்கும்' உயர் புலமை நிலையை அடைய முடியாதவர்களும், 'சமூக ஒட்டுண்ணிகளாகி' (ஊழல்/தரகு வழிகளில்) தமது ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டவர்களாகவே எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளார்கள்.(''இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?';
http://tamilsdirection.blogspot.com/2015/06/depoliticize-4.html )
‘சான்றாண்மை தீ இனம் சேரக்கெடும்’(நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 9) என்பதற்கான விளக்கத்தினை அனுபவம் மூலமாக 'கற்று', கீழ்வரும் திசையில் பயணிப்பதும் சாத்தியமாகி வருகிறது.
‘தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’ - திருக்குறள் 462
அந்த முயற்சிக்கு தொல்காப்பியமும் வழி காட்டியுள்ளது.
‘மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே’
தொல்காப்பியம்; மரபு இயல் 112 ; http://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html
'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்ற கருத்தினை இன்றும் ஏற்று பயணிப்பதானது, 'குருட்டுப் பகுத்தறிவு' ஆகாதா? ஈ.வெ.ரா அவர்கள், 'காட்டுமிராண்டி' என்ற சொல்லினை, உணர்ச்சிபூர்வமாக 'தமிழை இழிவுபடுத்தவே பிரயோகித்தார்', என்று கண்டிப்பதும், 'குருட்டுப் பகுத்தறிவு' ஆகாதா? அத்தகைய 'குருட்டுப் பகுத்தறிவிலிருந்து' தமிழ்நாடு விடுதலையாகாமல், தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) மரணப்பயணத்திலிருந்து மீட்க முடியுமா?
குறிப்பு: 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து, 'கடவுள்' தொடர்பான எனது கீழ்வரும்,
(சுமார் 5 வருடங்களுக்கு முன் வெளிவந்த) பதிவிற்கு, இது வரை மறுப்பு ஏதும் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்.
No comments:
Post a Comment