Monday, December 3, 2018

தமிழ் சந்திக்கும் வித்தியாசமான புகழ்ச்சிக்கல் (2):


தமிழ்ப்புலமையானது, 'எந்திரர்'(Human Robot) திசையில் இனி பயணிக்க முடியாது


'செயற்கை அறிவு'(Artificial Intellegence) அடிப்படையில் செயல்படும் ஒரு 'தமிழ்ப்புலமை எந்திரரை' உருவாக்கி, அந்த எந்திரரிடம், தமிழில் 'ஒரீஇ' என்ற சொல்லுக்கு, விளக்கம் கேட்டால்;

'ஒரீஇ' என்ற சொல்லுக்கான உரைகள், தமிழ் லெக்சிகன் உள்ளிட்டு, கணினி நூலகத்தில் உள்ள அனைத்தையும் சில நொடிகளில் 'மேய்ந்து', விளக்கத்தினை தரும் காலமும் அதிக தொலைவில் இல்லை.

'ஒரீஇதொடர்பாகதமிழ் நாட்டிலும்உலக அளவிலான தமிழ் மொழி  அறிஞர்கள் மத்தியிலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட‌ பொருளானது, எவ்வாறு தவறானது? என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அந்த தவறான புரிதலின் காரணமாக, ஒருங்குறி சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான எதிர்ப்புகள் தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பது தொடர்பான விளக்கத்தினையும் பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/11/5-unicode-consortium.html )

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, என்னை மிகவும் மதித்து அன்புடன் பழகும் ஒரு தமிழ்ப்புலமையாளரிடம், 'ஒரீஇ' தொடர்பான எனது ஆய்வு பற்றி தொலைபேசியில் தெரிவித்தேன். எனது ஆய்வு பற்றி கேட்கும் ஆர்வமின்றி, சற்று எரிச்சலுடன் "உங்களின் ஆய்வுகளை இசையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட வேண்டாம்' என்று அறிவுறுத்தினார். எனவே அவரின் பார்வைக்கு, அந்த ஆய்வினை முன்வைக்கும் முயற்சியைக் கைவிட்டேன்

தமது நிலைப்பாடுகளுக்கு எதிரான ஆய்வுகளை வெறுத்து ஒதுக்குவதும், 'சமஸ்கிருத வெறுப்பு நோய்' போன்ற இன்னும் பல வெறுப்பு நோய்களில் சிக்கி, அவ்வாறு வெறுத்து ஒதுக்குவதும், புலமை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்(‘புலமை வீழ்ச்சி’-குறிப்பு கீழே)

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான சொற்களுக்கு உரைகள் சரியான விளக்கம் தரவில்லை, என்பதை 1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்று வரை கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் வெளியிட்டு வருகிறேன்………………. எனது ஆய்வானதுபுதிய உத்தியில்இருப்பதை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் மலேசியாவில் உள்ள பொறியியல் பேராசிரியர் பேரா.முனைவர். R.சிவக்குமார் ஆவார். எனது ஆய்வுகளை எல்லாம் தொடர்ந்து பாராட்டி ஊக்குவித்தவர் மறைந்த பேரா.முனைவர்.லோகநாதன் (உலகன்) ஆவார்ஆஸ்திரேலியாவில் வாழும் மாணிக்கம் அர்ச்சுனமணியும் எனது ஆராய்ச்சியை ஊக்குவிப்பவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

எனது 'உத்தியைப்' புரிந்து கொள்ளாமல், 'அந்த' வரிகளுக்கான உரையையே எனது ஆய்வுக்கு எதிராக முன்வைக்கும் தவறு என்பதானது

நான் மிகவும் மதிக்கும், என் மீது அன்பு கொண்ட தமிழ்ப்புலமையாளர்களிடம் வெளிப்பட்டதையும், நான் அனுபவித்திருக்கிறேன்.

அந்த அனுபவம் தொடர்பான வரிகள் வருமாறு:

"கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்" (சிலப்பதிகாரம் அரங்; 16-௧௬ உரை ; http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0451_01.html  )

மேற்குறிப்பிட்டஇரண்டு வரிகளிலேயே, உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) சிலப்பதிகாரத்தில் இருந்ததையும், நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன். ((http://musicresearchlibrary.net/omeka/items/show/2440 )

நான் மிகவும் மதிக்கும், என் மீது அன்பு கொண்ட தமிழ்ப்புலமையாளர், எனது விளக்கத்தினை கேட்ட பின், சற்றே எரிச்சலுடன், உரையில் உள்ள விளக்கத்தினைச் சொல்லி, எனது விளக்கத்தினை நிராகரித்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள உரைகளை எல்லாம் உள்வாங்கிய ஒரு எந்திரன் (Robot), அவ்வாறு நிராகரிப்பதை, என்னால் விளங்கிக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட வரிகளில் உள்ள ஒவ்வொரு சொல் பற்றிய எனது விளக்கமும், அந்த விளக்கங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வரிகளுக்கான விளக்கம் சரியா? உரையில் உள்ள மாத்திரைகள் தொடர்பான விளக்கமானது, ஒரு குறிப்பிட்ட பாணிக்கான உரையே, என்ற எனது விளக்கம் சரியா? 'பாணி' என்ற சொல்லானது, சங்க இலக்கியங்கள் உள்ளிட்டு எந்தெந்த இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன? மேலே குறிப்பிட்டுள்ள உரையின் விளக்கமானது, அங்கெல்லாம் பொருந்துமா? என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், மனப்பாடமாக உரையைச் சொல்லி, மேற்குறிப்பிட்ட வரிகளுக்கான எனது விளக்கத்தினை மறுக்க, ஒரு எந்திரர் போதுமே? மனிதராக உள்ள தமிழ்ப்புலமையாளர் தேவையில்லையே.

அதிலும் இசையியல்(Musicology), இசை இயற்பியல்(Physics of Music), பற்றிய அறிவுகள் தேவைப்படும் மேலே குறிப்பிட்ட வரிகளுக்கான விளக்கத்தினை, தமிழ்ப்புலமை அறிவில் மட்டுமே மறுப்பது சரியாகுமா?’ (‘தமிழ் சந்திக்கும் வித்தியாசமான புகழ்ச் சிக்கல் (1); https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வெளிப்பட்ட‌ எனது கண்டுபிடிப்புகள் (http://drvee.in/?page_id=21 ) எல்லாம், 20 வருடங்களுக்கும் மேலாக 'வெளிச்சத்திற்கு' வராமல் இருக்கும் அவலமானது, தமிழைத் தவிர, வேறு எந்த மொழிக்கும், எந்த மொழி ஆய்வாளருக்கும், உலகில் நேர்ந்திருக்கிறதா?

அநேகமாக இது போன்ற நெருக்கடியில் சிக்கிய ஒரே ஆய்வாளராக நானும், ஒரே மொழியாக தமிழும் இருந்தால் வியப்பில்லை. தமிழ்ப்புலமையானது, 'உரைகளுக்கு அடிமையான எந்திரர்' போக்கில் பயணிப்பதாலேயே, இந்த நெருக்கடிகள் எழுந்துள்ளன, என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

உலக அளவிலும், இந்திய அளவிலும் கடந்த சுமார் 20 வருடங்களில் 'வீச்சுடன்'(?) செயல்பட்ட தமிழ் அமைப்புகள் எல்லாம், இதற்கு தகுந்த பதில் சொல்லாமல், இன்னும் எவ்வளவு காலம் 'மெளனமாக' இருக்க முடியும்? 'திராவிட' கட்சிகளின் மற்றும் 'விடுதலைப்புலிகள்' அமைப்பின் நலன்களுக்கு, தமிழின் வளர்ச்சியானது அடிமைப்பட்ட திசையில், 'அந்த' அமைப்புகள் எல்லாம் பயணித்ததே, இந்த சீர்கேட்டிற்குக் காரணமா? என்ற விவாதம் தொடங்க வேண்டிய நேரமும் வந்து விட்டதுஎந்திரரைப் போலவே, மான அவமானம் பற்றிய 'அறிவின்றி'(?), உமா மகேஸ்வரன், சிரி சபாரத்தினம், பத்மநாபா போன்ற ஈழ விடுதலைத் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் துதித்த தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம், அவர்களின் மறைவிற்குப் பின், 'அந்த' மரணங்களுக்கு காரணமான 'செல்வாக்கு' நபர்களை துதித்தானதுசெல்வாக்கை வழிபடும் 'எந்திரர்' பாணியாகாதா? 
 (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html )

‘அந்த'  போக்கின் காரணமாகவே, மேலே குறிப்பிட்ட 'தமிழ்ப்புலமை எந்திரரை' விட, கீழான புலமையுடன் வலம் வரும் 'செல்வாக்கான'(?) தமிழ்ப்புலமையாளர்களும் இருக்கிறார்களா? என்ற கேள்வியை, கீழ்வரும் அனுபவமும் எழுப்பியுள்ளது.

தமிழில் இசை தொடர்பான 'இழை' பற்றிய எனது கண்டுபிடிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன்.


 அதில் கீழ்வரும் சான்று இடம் பெற்றுள்ளது.

'முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ்'; - பெருங்கதை 4:5,19

அது தொடர்பாக, கீழ்வரும் மறுப்பு எனக்கு வந்தது.

முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ் In explaining this, you say ‘muRRizai’ means an  accomplished thread ‘payiRRiya’ means giving birth. I am giving below what Tamil Lexicon gives as meanings for payiRRu” என்று குறிப்பிட்டு லெக்சிகனில், அது தொடர்பானஅனைத்தையும் சேர்த்துள்ளார்.

பின் கீழ்வரும் அவரின் முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

“There is no meaning as ‘giving birth to’. The context also does not allow that. Here one of the heroines of the epic  PatumAtEvi is referred to by the term muRRizai, who says that she would learn to play the lute that UtayaNan taught  another heroine, VAcavatattai, to play. Grammatically, muRRizai is an anmoziththokai. No musical thread is present in this poem.”

முதலில் வெளிப்படுத்தியுள்ள லெக்சிகன் தொடர்பான; ““There is no meaning as ‘giving birth to’.”  - கருத்துக்கு கீழ்வரும் விளக்கம் அளித்துள்ளேன்.

பயிற்றல்  - தோற்றுவித்தல் ;
மர்ரே எஸ் ராஜம் குழு தொகுத்த 'சங்க இலக்கியங்கள்' தொகுதியில், 'பாட்டும் தொகையும்' என்ற தலைப்பில் வந்ததில், 'சொல்தொடர்- விளக்கம்' என்ற் தலைப்பில், இந்த பொருள் வெளிவந்துள்ளது;

லெக்சிகனில் வெளிவராத பொருள் இதுவாகும்.

அடுத்து 'முற்றிழை' தொடர்பாமேலே குறிப்பிட்ட சான்றில் ;

 “Grammatically, muRRizai is an anmoziththokai.”

என்ற கருத்து தொடர்பாக, கீழ்வரும் விளக்கத்தினை அனுப்பினேன்.

அன்மொழித்தொகை என்று வைத்துக் கொண்டாலும்;

" வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத்தொடர் மொழிகளுக்கு உருய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிற சொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும்" (www.tamilvu.org  )

எனவே 'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து பற்றி ஆராய்வதும் இங்கு அவசியமாகிறது.’

அந்த ஆராய்ச்சியில் 'முற்றிழை' எவ்வாறு இசை தொடர்புடையது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினேன். (முழுவதும் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் மின்முகவரியை pannpandi@yahoo.co.in    தெரிவித்தால், அந்த விளக்கத்தினை அனுப்ப இயலும்).

அது தவறு என்றால்;

'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்பது எது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினால், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

அது போன்ற முயற்சியின்றி, இசையியல்(Musicology) தொடர்புடைய எனது விளக்கமானது எந்த அளவுக்கு அவருக்கு புரிந்தது? என்ற குழப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில், அவரிடமிருந்து மின்மடல் வந்தது. (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html )

மேலே குறிப்பிட்ட பதிவின் இறுதியில் குறிப்பிட்டவாறு, அவரிடமிருந்து  வந்த மின்மடலில், கீழ்வரும் முடிவினை தெரிவித்துள்ளார்.

“I am sorry to say your interpretations are logically flawed and philologically not justified.”

‘Philology' என்ற சொல்லின் பொருள் தெரிந்து, மேலே குறிப்பிட்ட சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளதா?

Philology: the study of literature and of disciplines relevant to literature or to language as used in literature;  https://www.merriam-webster.com/dictionary/philology

எனவே தமிழ், தமிழ் இசையியல் (Tamil Musicology), தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music) அறிவுள்ளவர்களே, எனது விளக்கத்தினை புரிந்து கொள்ள முடியும். அதே காரணத்தால், எனது விளக்கங்கள் புரியவில்லை என்ற பின்னூட்டங்கள் வந்துள்ளன.

அவ்வாறு புரிந்து கொள்ள முயலாமல், ‘philologically not justified’ என்று முடிவு செய்து, அந்த தவறான முடிவின் அடிப்படையில், ‘logically flawed’ என்றும் முடிவு செய்தாரா? என்பதானது, மேலே குறிப்பிட்டவாறு எழுதியவரின் மனசாட்சிக்கே வெளிச்சம்

வாதத்தில் தான் முன் வைத்த மறுப்புக்கு எதிராக வெளிப்படும் சான்றுகளை மறுக்க முடியாத நிலையில், அதனை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளாமல், வாதத்தினை தன்னிச்சையாக விரிவுபடுத்துவதும், கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதியாக தம்மைக் கருதிக்கொண்டு, எதிர்நிலையில் உள்ளவர் மீது 'தீர்ப்பு' வழங்கும் அநாகரீகமும், ஏற்கனவே சில 'பெரியார்' ஆதரவாளர்களிடம் நான் அனுபவித்திருக்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

மேலே குறிப்பிட்ட செயற்கை அறிவு'(Artificial Intellegence) அடிப்படையில் செயல்படும் 'தமிழ்ப்புலமை எந்திரரிடம்' இது போன்ற விவாதத்தினை நான் மேற்கொண்டிருந்தால்;

'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்பது எது? என்ற திசையில், அந்த விவாதமானது முன்னேறியிருக்கும்.

அதற்கு மாறாக, 'Philology' என்ற சொல்லின் பொருளை அரைகுறையாகப் புரிந்து கொண்டு;

“your interpretations are logically flawed and philologically not justified.”

என்ற அந்த 'தமிழ்ப்புலமை எந்திரர்' தெரிவித்திருக்காது. அவ்வாறு 'தமிழ்ப்புலமை எந்திரருடன்' போட்டி போட்டால், 'மண்ணைக் கவ்வும்' அளவுக்கு வாழ்ந்து வரும், அரைகுறை தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம் சமூகத்தில் சருகாகி உதிரும் காலமும் நெருங்கி வருகிறதுஅந்த போக்கில் தமிழ் தொடர்பான சுயலாப வலைப்பின்னல்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு, பாரபட்சமற்ற அறிவுபூர்வமான விவாதங்களின் மூலமாக, தமிழ்/தமிழ் இசை ஆய்வுகள் முன்னேறும் காலமும் நெருங்கி வருகிறது.  

தமிழ் தொடர்பான சுயலாப வலைப்பின்னல்களில் 'செல்வாக்கோடு' பயணிக்கும் எந்த தமிழ்ப்புலமையாளராவது, தமிழ் இலக்கியங்களையும், புராணங்களையும் 'மூட நம்பிக்கை, குப்பை' என்று இழிவுபடுத்திவரும் 'பெரியார்' ஆதரவாளர்களிடம், 'அந்த நிலைப்பாடு எவ்வாறு தவறானது?' என்று தெளிவுபடுத்த முயற்சித்தார்களா? இனியாவது முயல்வார்களா? ('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?'; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software), தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும் (software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும் (signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன. (‘தமிழின்  அடுத்த கட்ட(Next Phase) புலமை? (1)&(2)&(3)’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html  & http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html  & http://tamilsdirection.blogspot.com/2017/06/next-phase-3.html


எனவே தமிழ்ப்புலமையானது, 'எந்திரர்'(Human Robot) திசையில் இனி பயணிக்க முடியாது. தமிழ் இசையியல் (Tamil Musicology) அறிவின்றி, யாப்பிலக்கணத்தை விளங்கிக் கொள்ளவும் முடியாது; அவ்வாறு விளங்கிக் கொள்ளாமல், மாணவர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பிக்க முயல்வதானது, கேலிக்கூத்தாகும் காலமும் நெருங்கி வருகிறது. இனி எந்த திசையில், இளம் தமிழ்ப்புலமையாளர்கள் பயணித்தால், உருப்பட முடியும்? என்பது தொடர்பான விளக்கத்திற்கு:
‘Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development’;
https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html 



குறிப்பு :

கம்போடியாவில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat) (1); தமிழனின் அடையாளமா? 'இந்திய' அடையாளமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html

1 comment: