Friday, December 7, 2018


நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா?  (1)


'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு' (‘Narcissistic personality disorder’) நோயில் நாம் சிக்கி விட்டோமா?


சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில்விதை கொண்டு, உரமூட்டப்பட்டுவளராமல், 'திடீரென' வந்து விடாது. (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

அது தொடர்பான ஆராய்ச்சியின் மூலமாக கிடைக்கும் பாடங்களின் அடிப்படைகளில், 'இழக்க வேண்டியவைகளை' வருத்தமின்றி இழந்து, ஏற்க வேண்டியவைகளை துணிச்சலுடன் ஏற்று, பயணிப்பதன் மூலமே, நாம் தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்;

என்பதனை நிரூபிக்கும் வகையில் என்னைப் போல வாழ்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது

“தேரா வாழ்க்கை வாழத்தகுதியற்ற வாழ்க்கை ஆகும்
 - சாக்ரடிஸ் ("The unexamined life is not worth living"- Socretes; https://en.wikipedia.org/wiki/The_unexamined_life_is_not_worth_living )

நாம் இப்போது வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா? அல்லது தன்மானமிழந்து 'வாலாட்டி' வாழும் வாழ்க்கையா? செல்வாக்கான நபர்களுக்கு வாலாட்டுபவர்களுக்கு, வாலாட்டி வாழும் இன்னும் மோசமான தன்மானக்கேடான வாழ்க்கையா? சொந்தவாழ்வில் தன்மானக்கேடான சமரசங்களுடனும், பொது அரங்கில் மீடியா வெளிச்சத்தில் 'புகழுடனும்'(?) வாழ்வதானது, அதை விட மோசமான தன்மானக்கேடான வாழ்க்கையாகாதா?  அகத்தில் குற்ற உணர்வின்றி அவ்வாறு வாழ முடியுமா?

என்ற கேள்விகளுடன் நமது வாழ்வினையும், நமது உற்றம் சுற்றங்களையும், நாம் தொடர்ந்து கண்காணித்து மிகுந்த கவனமுடன் வாழ வேண்டிய காலக்கட்டம் இதுவாகும்.

ஜெயலலிதா இறந்தது முதல், சிறை செல்லும் வரை, எந்த அரசு பதவியிலும் இல்லாத சசிகலாவை தரிசித்த தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், அறிவுஜீவிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களில் எவராவது, சிறையில் இருக்கும் சசிகலாவை தரிசித்தார்களா? தரிசிக்கவில்லையென்றால், ஏன் தரிசிக்கவில்லை? சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, மீண்டும் அதே செல்வாக்கினை வெளிப்படுத்த முடிந்தால், வெட்கமில்லாமல் மீண்டும் அவர்கள் எல்லாம் சசிகலாவை தரிசிப்பார்களா? 'அடுத்த முதல்வராவார்' என்ற நம்பிக்கையில், 'போட்டி போட்டு' ஸ்டாலினை இன்று தரிசிப்பவர்களில் யார், யார், அடுத்து வரும் பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் பாணியில் தி.மு. தோல்விகளை சந்திக்க நேர்ந்தால், ஸ்டாலினை கைவிட்டு, அடுத்த முதல்வராகும் வாய்ப்புள்ளவருக்கு 'வாலாட்டி' நெருக்கமாக முயல்வார்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பும் அளவுக்கு, 'யோக்கியதை'(?) உள்ள தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், அறிவுஜீவிகள், தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மிகுந்துள்ள அளவுக்கு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருக்கிறார்களா? என்ற ஆய்வானது; 'இல்லை' என்ற விடையை வெளிப்படுத்தினால் வியப்பில்லைசசிகலாவாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட 'யோக்கியதை' உள்ளவர்கள் புடை சூழ வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?

'எந்த பக்கம் காற்றடிக்கிறது?' என முன்கூட்டியே 'நுகர்ந்து' வாழும் 'அமாவசைகளின் புரட்சியில்' சிக்கியுள்ள நாடாக தமிழ்நாடு இன்று இருக்கிறது
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html). அமாவாசைகள் படை சூழ வாழும் தலைவர்கள் எல்லாம், அந்த அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்த சொத்து இருந்தாலும்

மனித அர்த்தமுள்ள மனித உறவுகள் (‘meaningful human relationships’) இன்றி, 'வாலாட்டுபவர்கள் புடை சூழ' வாழும் வாழ்க்கையில் சிக்கியவர்கள் யாராக இருந்தாலும், அத்தகையோர் 'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு
(‘Narcissistic personality disorder’; https://en.wikipedia.org/wiki/Narcissistic_personality_disorder) என்னும் மனநோயில் சிக்கும் அபாயமும் இருக்கிறது.

அந்த அபாயமானது தலைவர்களோடு நில்லாமல், சமூக நோயாக வளர்ந்து, 'பலகீனமான' தமிழர்களை எல்லாம் 'வறட்டு கெளரவ' நோயில் சிக்க வைத்து விட்டது. சக்திக்கு மீறி ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தி, பிறர் பொறாமைப்படும் அளவுக்கு, தமது சக்திக்கு மீறி கடன் வாங்கி வீட்டைக் கட்டி, சாகும் வரை கடனில் தத்தளிக்கும் குடும்பங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன; ;தற்கொலைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.

மறைந்த வழக்கறிஞர் விருத்தாச்சலம் ரெட்டியார் (https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vridhachalam-reddiar-passes-away/article2855752.ece ) தமது வீட்டில் நடத்திய திருமணங்கள் அனைத்திலும் மணமகன், மணமகள் ஆகியோரின் நெருக்கமான உறவினர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்ற அளவுக்கு, மிகவும் எளிமையாக நடத்தினார், என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வழியில் பயணிக்கும் துணிச்சல் உள்ளவர்களே, 'வறட்டு கெளரவ' நோயில் சிக்காமல், உண்மையான தன்மானத்துடன் தமிழ்நாட்டில் வாழ முடியும்.

சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, வறட்டு கெளரவத்திற்காக, உற்றமும் சுற்றமும் பொறமைப்படும் அளவுக்கு சொத்து சேர்க்கும் வெறியில், தன்மானமிழந்து, 'அமாவாசைகளாக' பயணிப்பவர்கள் வளரும் போக்கானது, கட்சிகள் மற்றும் தலைவர்களின் 'ஆதாய அரசியலின் சமூக முதுகெலும்பாகி';

ஊழல் கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) மரணப்பயணத்திற்கு உள்ளாகி, தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனிவளங்களும்  சூறையாடப்பட்டு வருகின்றன.

குக்கிராமங்களிலும் கூட, ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகளில் படிப்பைத் தொடங்கி, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது
(https://www.youtube.com/watch?v=p35Pj9fDvCc )

தமிழ்நாட்டில் குடும்பங்களில் சீர் குலைவும், ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும் எண்ணிக்கையில் பெருகி வர, மாணவர்கள் மத்தியில் கொலை, தற்கொலை, திருட்டு போன்றவைகளும் அதிகரித்து வருகின்றன.

இவை எல்லாம் தாய்மொழிவழிக்கல்வியின் மரணப்பயணம் விளைவித்து வரும் கேடுகள் ஆகும். ((http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm

ஊழல் போக்கில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் மூலம் மேலே குறிப்பிட்ட விளைவுகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டில்;

'பிணம் தின்னும் கழுகுகள்' போலவே, காவல் நிலையம், நீதி மன்றம் உள்ளிட்ட அரசுத்துறைகள் மற்றும் அரசியலில், ஊழல்பேர்வழிகள் எல்லாம் அதிவேகப் பணக்காரர்களாகி வருகிறார்கள்.

நாம் அவர்களில் ஒருவராகவோ, அல்லது அத்தகையோர் நமது உற்றத்தில் சுற்றத்தில் ஒருவராகவோ, இருந்தால், நாமும் 'அந்த' கழுகுகள் வரிசையில் இடம்பெற மாட்டோமா?

காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கப்போகும் வரையில், 'அந்த' வரிசையில் இடம் பெற்றுள்ளவர்களின் மூளை செயல்பாடானது, 'அதிவேகப் பணக்காரராகும் கணக்குகளில்' தானே மூழ்கியிருக்க நேரிடும்; 'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு' நோயின் அறிகுறியாக. (‘Those affected often spend much time thinking about achieving power or success’; https://en.wikipedia.org/wiki/Narcissistic_personality_disorder )


'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் மூலமாக, எவ்வாறு தனித்துவமான‌ (Unique), சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களமாக தமிழ்நாடு இருக்கிறது? என்று நான் கண்டுபிடித்ததை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ). அந்த ஆய்வின் மூலமாக வெளிப்பட்ட 'திராவிட மன நோயாளிகள்' எல்லாம், தனித்துவமான 'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு' நோயாளிகளாக, அடுத்து ஆர்வமுள்ளவர்கள் மேற்கொள்ளும் ஆய்வில் வெளிப்பட்டால் வியப்பில்லை
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.htmlஅரைகுறை தமிழறிவுடன் தம்மை 'அதிபுத்திசாலி பெரிய மனிதராகக்' கருதிக்கொண்டு, 'குருட்டுப் பகுத்தறிவில்’ கேள்விகள் கேட்கும்,, பாராட்டு, புகழுக்கு ஏங்கும், பிறர் பார்வை அறியும் அறிவின்றி, தமது நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை மரியாதைக் குறைவாக நடத்தும், 'திராவிட மன நோயாளிகள்' எல்லாம், 'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு' அறிகுறிகளுடன் வாழ்பவர்கள் அவர்கள்(‘People with narcissistic personality disorder (NPD) are characterized by persistent grandiosity, excessive need for admiration, and a personal disdain and lack of empathy for others.)

ஒரு மனிதரின் மூளை எவ்வாறு செயல்படுகிறது? என்பதைப் பொறுத்தே, அவர் நல்ல உடல்/மன நலத்துடன் வாழ்வதும், நோய்களில் சிக்குவதும் அமையும்;

என்பதனை கீழ்வரும் காணொளி விளக்கியுள்ளது.

1944இல் முளைவிட்ட, 'திராவிடர், திராவிட, தமிழர்அடையாளச் சிதைவு என்பது, மனித மூளைகளின் செயல்நுட்பத்தில் (processing)  ஏற்படுத்தியமாற்றங்கள் ஆனவை, எந்த அளவுக்கு, அவர்களின் தேவைகளையும் (needs), ஈடுபாடுகளையும் (interests), சமூகத்திற்கு கேடானவையாக மாற்றும்? என்ற சமூக ஆய்விற்கான, சுயநல மனித மிருகங்கள், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் வளர்ந்துள்ளார்கள்.
( http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

1967க்கு முன் இருந்த எம்.எல்.ஏக்களின், அமைச்சர்களின், மனங்களில் இருந்த தேவைகளையும், ஈடுபாடுகளையும், சொத்துக்களையும், இன்றுள்ள எம்.எல்.ஏக்களின், அமைச்சர்களின் தேவைகள், ஈடுபாடுகள், சொத்துக்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் ஆய்வின் மூலமாகவே, மேலே குறிப்பிட்ட அடையாளச் சிதைவின் பாதகங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

எனவே மேலே குறிப்பிட்ட 'கழுகுகள்' போல வாழ்பவர்கள் எல்லாம், 'அழிவுபூர்வ அலையியற்றிகள்' (Negative Oscillator) ஆவர். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

'அழிவுபூர்வ அலையியற்றி' மனிதர்களை ஒதுக்குவதன் மூலமே, நமது ஆற்றல் பெருகி பிரமிக்கும் திசையில் நாம் பயணிக்க முடியும், என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html

மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), மனிதர்கள் இருப்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

எனது வாழ்க்கை பரமபத விளையாட்டில், என்னை 'முட்டாளாக' கருதியவர்கள் எல்லாம் குழம்பி, மலைக்கும் வகையில், எனது சாதனைகள் எல்லாம் (http://drvee.in/);

அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மேற்கண்ட பதிவில் உள்ள சாதனைகள் காரணமாக, கடந்த சில வருடங்களாக புகழும், பணமும் வரும் வழிகள் தாமாகவே என் கண்முன் வருகின்ற போக்கில்ஸ்பினோசா ('Spinoza A Life' by Steven Nadler) வாழ்ந்து காட்டிய வழியில், சாமான்யனாக வாழும் 'சுதந்திரத்தை' இழக்க விரும்பாமலும், அதே நேரத்தில் தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான எனது பங்களிப்பை தட்டிக்கழிக்காமலும், கவனமாக தேர்ந்தெடுத்து நான் பயணித்து வருவதானது, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் அமைய, எனது வாழ்க்கை பரமபத விளையாட்டானது, ஒரு சமூக பொறியியல் வினை ஊக்கியாக(Social Engineering Catalyst) செயல்படுவதையும் உணர முடிகிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய 'சுயலாப கணக்குகளை' எல்லாம், குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைத்து 'வளமான';

'பெரியார்' ஆதரவாளர்களாக புறத்தில் (நேர்மையானவர்களிடமிருந்து அகத்தில் வேறுபட்டு) காட்சி தந்தபுத்திசாலிகள் எல்லாம்;

இயல்பான லாபநட்ட கணக்கின்றி வாழும் மனிதர்களின் பார்வைகளில், 'யோக்கிய புலி வேடம் கலைந்த நரிகளாக' அம்பலமாகி, வாழ்க்கை என்ற பரமபத விளையாட்டில் முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' ஆகி விட்டார்கள்

இயல்பான அன்பு வறண்ட மனித நரிகள் சூழவே, வாழ்ந்தாக வேண்டிய தண்டனையையும் அனுபவித்து.

மைக்ரோ உலகத்தில் வெளிப்பட்டு வரும் இந்த போக்குகளின் விளைவுகள் எல்லாம் மேக்ரோ உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது;

'அந்த புத்திசாலிகளை' நம்பி, 'ஆதாய அரசியலில்' பயணித்து வரும் கட்சிகள் எல்லாம் 'சுவடின்றி அழியும் சுனாமியை' சந்திப்பதை தவிர்க்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

1949 முதல் 1967 வரை, மைக்ரோ உலகத்தில் தி.மு.கவிற்கு சாதகமாக வளர்ந்த போக்குகளை குறைவாக மதிப்பிட்ட காங்கிரஸ் கட்சியானது, 1967இல் தோற்று, இன்று தி.மு.கவின் வாலாக பயணிக்க நேரிட்டது. 1967க்கு முந்தைய காங்கிரஸ் பயணித்த திசையில், இன்னும் மோசமாக எவ்வாறு தி.மு. பயணித்து வருகிறது? என்பதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ தமிழ்நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில், என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

'அதிவேகப் பணக்காரராகும் கணக்குகளில்' மூளையின் செயல்பாடு சிக்கி,  பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, வாழும்போதே 'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியின்- பங்களிப்பின்றி,  எந்த தனி மனிதராலும், தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்திருக்க முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது, 'அந்த பங்களிப்பு' வழங்கிய 'முக்கூட்டணி சமூக குற்றவாளிகள்' எல்லாம், சமூக கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்; தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தி. (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )

தமிழர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகிய சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களானது, ஆங்கிலவழிக்கல்வி மூலம், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அந்நியப்பட்டு, வறண்டு போகும் ஆபத்தில் சிக்கியுள்ளதுஅதிலிருந்து மீளத் தவறினால், தமிழ்நாட்டில் தமிழர்கள் எல்லாம், தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக, அறிவு புலத்திலும், உடல் உழைப்பிலும் பின்தங்கி, பெரும்பாலோர் 'தரகர்களாகவும்', 'திருடர்களாகவும்' பிழைப்பதில் முடியும் ஆபத்து, தவிர்க்கமுடியாததாகி விடும். ஊழல் தரகில் நிபுணராகி, 'அதிவேகப்பணக்காராக' வலம் வரும் 'பெரியார் சமூகக்கிருமிகளின்' செல்வாக்கானது, அந்த அபாயத்தின் முன்னறிவிப்பாகும். (http://tamilsdirection.blogspot.com/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true )

ராஜாஜியின் ஆலோசனையைப் புறக்கணித்து, .வெ.ரா காங்கிரசில் சேராமல், ஈரோட்டிலேயே தமது வாழ்க்கையைக் கழித்திருந்தால், தி.மு. தோன்றியிருக்காது1967 முதல் சாதி வெறியும், சாதி மோதல்களும், அந்த போக்கில் அதிவேகப்பணக்கார சாதித்தலைவர்களும் அதிகரித்து, தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்களை உருவாக்கும் போக்கில் 'சமூக நீதியும்'(?) திரிந்து, .வெ.ராவின் தொண்டுகள் சாண் ஏறி, முழம் சறுக்கின கதையான 'சாதனையும்'(?) நிகழ்ந்திருக்காது'மனித உரிமை'யானது, சுதேசி புறக்கணிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சமூகத்தின் கருத்து அமைப்பில் (Paradigm), பாரபட்ச அணுகுமுறையில் சிக்கி, தமிழ்நாடு சீரழிந்து வரும் அவலமும் நிகழ்ந்திருக்காது.
( http://tamilsdirection.blogspot.com/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html )

ராஜாஜியின் துணை இல்லாமல், 1967இல் தி.மு. ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது; 1969இல் கருணாநிதி முதல்வராகியிருக்க முடியாதுஅவ்வாறு தி.மு.ஆட்சியைப் பிடித்தபின், .வெ.ரா அவர்களும், அண்ணாவும், ராஜாஜியும் ஏன் மனமுடைந்தார்கள்? என்ற கேள்வியை பொது அரங்கில் எழுப்பி, சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

அதே நேரத்தில், .வெ.ராவும், ராஜாஜியும் சரியான திசையில் பயணித்திருந்தால், தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கும்? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரமும் வந்துவிட்டது.

.வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்;

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, லேசியாவில் நடப்பது போல‌, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும்.

.வெ.ராவும், ராஜாஜியும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறுவோம். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

No comments:

Post a Comment