Thursday, November 1, 2018

தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும் (4)





சமூக மூச்சுத்திணறலும் (Social Suffocation), நல்ல சமூக சுவாசத்திற்கான  (social breathing) சமூகவெளியும்  (Social Space)


தமிழ்நாட்டில் ‘இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் -  ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அவ்வாறு வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு என்பதே, அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக மூச்சுத்திணறலை (Social Suffocation) உணரத் தொடங்கியுள்ளதன் 'சிக்னல்' ஆகும். அத்தகையோர் எல்லாம் நல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூகவெளி  (Social Space) நோக்கி எவ்வாறு பயணித்து, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்? என்பதை இங்கு பார்ப்போம்.


நல்ல
ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம், பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space), சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான (social breathing)  'திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  மது இயல்போடு ஒட்டியஉள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.( http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவையும் விஞ்சிய தினகரன் காட்டிய வழியில் பயணிக்காத, பழைய/புதிய கட்சிகளை எல்லாம், நோட்டாவுடனும், டெபாசீட்டுடனும் போட்டி போட்ட கட்சிகளாகவே, இனி வரும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்; சமூக மூச்சுத்திணறலானது நீடிக்கும் வரை. அறிவுஜீவிகள், பத்திரிக்கை அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் ஊழல் திமிங்கலங்களுடன் 'நெருக்கமாகி', அவரவர் 'யோக்கியதைக்கு' ஏற்ற பலன்கள் அனுபவித்து, சமூக மூச்சுத்திணறலுக்கு காரணமாகி வரும் சூழலில், அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க, மனித சங்கிலியில் பங்கேற்க, மொட்டை போட, etc, சேவைகள் கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை குறை சொல்ல முடியுமா? (‘தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறுகிறாரா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html) கடந்த சட்ட மன்ற தேர்தலில், உயிரைப் பணயம் வைத்து, ஒரு பெண் அதிகாரி ஆம்னி பெருந்தில் இருந்து கைப்பற்றிய பணமானது, தேர்தலுக்குப் பின், உரியவர் காட்டிய சான்றுகளின்(?) அடிப்படையில் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அது போல, தேர்தலில் கைப்பற்றிய பணம் திருப்பிக் கொடுத்ததில் ஊழலுக்கு இடமிருந்திருந்தால், இனி வரும் தேர்தல்களில் கைப்பற்றுப்படும் பணம் எல்லாம் கேலிக்கிடமாகாதா?

தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளி இருக்கிறது? என்பதை அடுத்து பார்ப்போம்.

எரிக்கப்படாத பிணம் அழுகும் வேகத்தில் நோய்க்கிருமிகளை ஈர்த்துப் பெருக்கவே உதவும். அது போலவே சமூகத்தில் 'பிணமாக' வாழும் மனிதர்களும், சமூக நோய்க்கிருமிகளாக வாழும் மனிதர்களை பெருக்கவே உதவுவார்கள். அந்த சமூக செயல்நுட்பத்தினை ஆராய உதவும், தனித்துவமான சமூகவியல் பரிசோதனைக் கூடமாக தமிழ்நாடு இருப்பதையும், ற்கனவே விளக்கியுள்ளேன். http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

சமூக நோய்க்கிருமியான மனிதருக்கு ஒரு உதாரணம்;

சமூக பொது ஒழுக்க நெறிகளைக் காவு கொடுத்து, 'அதிவேக பணக்காரர்' ஆக, ஒரு இளம் வக்கீல் செயல்படுத்திய சமூக செயல்நுட்பங்களில் ஒன்று வருமாறு;

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறக்கும் பிணங்கள் பற்றிய தகவலை, 'உடனே' தெரிவிக்கும் உரிய சன்மானம் பெரும் தரகரை, அந்த மருத்துவமனை பணியாளர்களில் ஒருவரை நியமித்துக்கொள்வது;

தகவல் கிடைத்தவுடன், இறந்தவரின் உறவினர்களிடம் காப்பீட்டுத்தொகை நீதிமன்றம் மூலம் வாங்கித்தருவதாகவும், தமக்கான சேவைக்கட்டணத்தை அந்த தொகையில் எடுத்துக் கொள்வதாகவும் கூறி, (விபத்தில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி இறந்தது போல) காப்பீட்டுத்தொகைக்கான படிவங்களில் கையொப்பங்கள் பெற்றுக் கொள்வது;

பின் காவல் துறை, நீதிமன்றம், காப்பீட்டுத்துறை ஆகியவற்றில் உள்ள 'கறுப்பு ஆடுகள் வலைப்பின்னல்' துணையுடன், ஒரு பெரும் தொகையை நீதிமன்ற தீர்ப்பு மூலம் பெற்று, தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, ஒரு சிறுதொகையை இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கொடுப்பார். தமக்கு எந்த செலவும் இன்றி இலவசமாக பணம் கிடைத்ததில் அந்த வாரிசுகளும் மகிழ்வர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் இது போன்றவற்றையே, 'இரு சாராருக்கும் வெற்றி - வெற்றி வாய்ப்பு' (Win-Win deal) என்று வியாபார உலகில் சொல்வார்கள். தமிழ்நாடானது ஊழல் சுனாமியில் சிக்கியபின், நேர்மையற்ற மனிதர்கள் எல்லாம் 'வெற்றி - வெற்றி வாய்ப்பு' (Win-Win deal) மூலமாக பணம் ஈட்டும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன‌. அகத்தில் சீரழிந்து புறத்தில் நேர்மையாகக் காட்சி தந்தவர்களுக்கும், அதில் பங்கு பெற்று பலன் பெறும் துணிச்சலும் அதிகரித்துள்ளது. எனக்கு தெரிந்த ஒருவருக்கு நடந்த தவறான அறுவைச்சிகிச்சையின் காரணமாக, அவரது மூக்கு நாற்றத்தினை உணரும் திறன் இழக்க நேரிட்டது. அது போல சமூக நாற்றத்தினை உணறும் திறன் இழந்தவர்கள் எல்லாம், 'அந்த' துணிச்சலை அகவயப்படுத்தி, சமூகக் கிருமிகளுக்கு நெருக்கமாகி, பணம் சேர்க்கும் தன்மானக்கேடான ஓட்டப்பந்தயத்தில் சிக்கி வருகிறார்கள். (‘தவறான திசையில் பயணிப்பவர்கள், இழக்கக்கூடாதவற்றை இழந்து வாழ்கிறார்களா?’; http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_17.html  )

படித்த காலத்தில், பணியாற்றிய/பணியாற்றும் காலத்தில், வாழ்ந்த/வாழும் இடத்தில், இழப்புகளுக்கு அஞ்சி, எந்த அநீதியை எதிர்த்தும் போராடாத 'யோக்கியர்கள்' எல்லாம், 'சமூக முதுகெலும்பு' முறிந்தவர்களாக வளர்ந்து, பின் வெளிப்படுத்தும் 'சமூக அக்கறையும்', மேலே குறிப்பிட்ட சமூகக் கிருமிகளின் வளர்ச்சிக்கே துணை புரிந்தது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அடுத்து சமூகத்தில்  மேலான வசதி வாய்ப்புகளுடன் பிணமாக வாழும் நபருக்கு ஒரு உதாரணம்.

அகத்தில் தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் சுயலாபக் கணக்குகளுடன், ஊழலில் நேரடியாக பங்கேற்று கெட்ட பெயர் சம்பாதிக்காமல், புறத்தில் 'யோக்கியராக' வாழ்பவர்கள், அரசு, தனியார் துறை, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், என்பது போன்ற பலதுறைகளில் இருக்கின்றனர். (குறிப்பு கீழே)

அந்த போக்கிலேயே, கீழே குறிப்பிட்ட சமூக சீரழிவுகளின் காரணக்கர்த்தாக்களாக ஆண்ட/ஆளும் கட்சித்தலைவர்களை 'துதித்து' வாழ்பவர்கள் எல்லாம், நம்மிடையே பொது ஒழுக்க நெறி மரணித்த 'பிணமாக' வாழும் மனிதர்கள் ஆவார்கள்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயிரிழந்த உதயகுமாரோ, திருச்சி கிளைவ் விடுதியில் காவல்துறையின் கண்மூடித்தாக்குதலில் கை, கால் உடைந்த மாணவர்களில் எவருமோ, அச்சுறுத்தியும், கொலைசெய்தும் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை இழந்தவர்களில் எவருமோ, மவுலிவாக்க ஊழல் கட்டிடச்சிதைவில் உயிரிழந்த எவருமோ, தமது குடும்பத்தினர் இல்லையே, என்ற துணிச்சலில்;

அவ்வாறு அவர்கள் நம்மிடையே 'பிணமாக' வாழ்ந்து வருகிறார்கள்; நமக்கு பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இருக்குமானால், 'சகிக்க முடியாத சமூக நாற்றமாக' நமக்கு அவர்கள் வெளிப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்ட 'பிணமாக' வாழும் நபரும், மேலே குறிப்பிட்ட 'சமூக கிருமியாக' வாழும் நபரும் சந்திக்க நேரிட்டால், காலதாமதாமின்றி நேசமாகும் சமூக செயல்நுட்பத்தினை கவனிக்கும் வாய்ப்புகளும் எனக்கு கிட்டியிருக்கின்றன; இது போன்ற அனுபவங்கள் எல்லாம் தமிழ்நாட்டை எச்சரித்து மீட்கும் ஊடகமாக நான் வாழ நேர்ந்த இயற்கையின் விதியோ? என்று நானே அதிசயிக்கும் வகையில்


மேலே குறிப்பிட்ட 'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியின்- பங்களிப்பின்றி,  எந்த தனி மனிதராலும் கீழே குறிப்பிட்டுள்ள அளவுக்கு; 

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில், அதிக மதிப்புள்ள சொத்துக்களும், தொழில் வியாபார வாய்ப்புகளும் பிறமாநில/வெளிநாட்டினர் வசம் சிக்கி வரும் போக்கில், அந்த போக்கின் 'ஆணிவேராக', தமிழர்களில் 'எல்லா வகை' தரகர்களும், திருடர்களும். 'ஊழல் அரசியல்' போக்கில் வளர்ந்து, 1970களின் பிற்பகுதிகள் முதல், 'மம்மி, டாடி' நோயில்  தாய்மொழி தமிழின் ஆணிவேரை இழந்து, தமிழில் எழுதவும், படிக்கவும், பெரியவர்களை மதிக்கவும் தெரியாத, மாணவர்களை உருவாக்கி, 1990 முதல் அம்மாணவர்களில், வளரும் எண்ணிக்கையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற நோய்களில் சீரழியும் அளவுக்கும், அதை பயமின்றி செய்யும் அளவுக்கும், காவல்துறை நீதிமன்றங்களில் கறுப்பு ஆடுகளின் வளர்ச்சியும், சமூக மூச்சுத் திணறலை உச்சமாக்கும் அளவுக்கு; (http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html );

தமிழ்நாட்டை சீரழித்திருக்க முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, அந்த சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது, 'அந்த பங்களிப்பு' வழங்கிய 'முக்கூட்டணி சமூக குற்றவாளிகள்' எல்லாம், சமூக கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்; தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தி. 


சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளியில், வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் நபர்களிடமிருந்து வெளிப்படும். 


பொது ஒழுக்க நெறியை 'நுகரும் திறன்' ஆனது, பொது அரங்கில் பலகீனமாகி, தமிழர்களின் தர அடையாளத்தை (benchmark) கீழிறக்கியதே, ‘முக்கூட்டணி சமூக குற்றவாளிகள்' சாதனையாகும்; சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் அதில் பாதிக்கப்பட்டு, இன்றைய மாணவர்களுக்கும், நன்கு படித்த இளைஞர்களுக்கும், அத்தகையோர் எல்லாம் கேலிப்பொருளாகி வருகிறார்கள். ‘முக்கூட்டணி சமூக குற்றவாளிகள்' பங்களிப்பில், 'தமிழரின் தர அடையாளம்' கேள்விக்குறியாகி வந்த சமூக செயல்நுட்பத்தில், ஈழ விடுதலை முயற்சியானது எவ்வாறு சிக்கி, முள்ளி வாய்க்க்கால் அழிவை நோக்கி பயணித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html  & http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html

நமக்கு பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இருந்து, சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியை விட்டு துணிச்சலுடன் விலகி, அதனால் விளையும் இழப்புகளையும் விரும்பி ஏற்று பயணிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி அடுத்து பார்ப்போம்

சுயலாபக் கள்வர்கண பிணங்கள் மிகுந்த சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியில்,

நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல், அந்த கடிவாளங்களில் சிக்கிய பிணைக்கைதி போல பயணிப்பதிலிருந்து விடுபட்டு;

பிணங்களின் சமூக வெளியில் இருந்து விடுபட்டு, நமக்கு நாமே எவ்வாறு எஜமானராகப் பயணிப்பது?

என்ற கேள்விக்கு விடையாக நாம் வாழத் தொடங்கினால், நமது வாழ்க்கையானது நமக்கு தெரியாமலேயே, ஒரு ஆக்கபூர்வ சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering Catalyst) அமையும்.  பிறரின் பாராட்டு, புகழ் போன்றவற்றிற்கு ஏங்காமல், சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Infection) சிக்காமல், நமது இயல்பான அடிப்படைத்தேவைகளையும், திறமைகளையும், உள்ளார்ந்த ஈடுபாடுகளையும் (Passions) புரிந்து வாழ்ந்தால்;

நமது சமூக வட்டமே அதற்கேற்ற வகையில் மாறி விடும்; மேலே குறிப்பிட்ட சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளியில் வாழ்ந்தபோது, நமது (சமூக வட்டத்தில் நாம் அனுமதித்தவர்களின்) 'பாராட்டு, புகழ் ஏக்கம்' மற்றும் 'சமூக ஒப்பீடு நோய்' வழிகளில் செலவாகிக் கொண்டிருந்த நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவைகள் எல்லாம் மீதமாகி, நல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூகவெளியில், நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(passions) ஒட்டி, நாமும் வளர்ந்து, திருக்குறள்(469) வழியில், விளம்பரமின்றி தகுதியானவர்களுக்கு உதவி, மனநிறைவோடு வாழ்வது எளிதாகும்.

அவ்வாறு வாழ்ந்து வரும் போக்கில் தான், உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் என்னிடமிருந்து வெளிப்பட்டு வருகின்றன‌; அவற்றின் மூலம் வெளிப்படும் 'புகழ், சொகுசு வாழ்வு' வாய்ப்புகளில் தடுமாறி, 'தடம் புரண்டு', பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, சமூக மூச்சுத்திணறல் (Social Suffocation) மிகுந்த சமூக வெளியில்(Social Space) சிக்கிவிடக்கூடாது, என்பதிலும் மிகுந்த கவனத்துடன் வாழ்கிறேன்.

அகத்தில் உரிய மாற்றங்கள் இன்றி, மேலே குறிப்பிட்டதானது சாத்தியமாகாது. சாத்தியமானபின் நமது சொல்லும், செயலும் மிகுந்த வலிமை பெறும் போக்கில் பயணிக்கத் தொடங்கும். 'பதரான' மனிதர்கள் தாமாகவே நம்மை விட்டு விலகுவதும், மணியான மனிதர்களை நோக்கி நாமும், நம்மை நோக்கி அவர்களும் ஈர்க்கப்படுவதும், 'இயற்கையின் விதியோ?' என்று அதிசயிக்கும் வகையில் அரங்கேறும்.

அவ்வாறு அரங்கேறியதன் விளைவாக, நமது கருத்து பரிமாற்றங்களும் பதரான மனிதர்களை விட்டு விலகி, மணியான மனிதர்களை நோக்கி, இயற்கையின் விதியோ? என்று அதிசயிக்கும் அளவுக்கு முன்னேறும்.

நான் புலமையாளர்களுடன் நேரடியாகவோ அல்லது இணைய வழி மடல்கள் மூலமாகவோ உரையாடுகையில், நான் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள் பற்றிய புரிதல் இன்றி, தன்னை 'அதிபுத்திசாலியாக' காட்ட முனையும் தன்முனைப்பு நோயுடன் கருத்து பரிமாற்றம் செய்தால், அவர்கள் அதை என்னிடம் தெரிவிக்காமலேயே என்னை ஒதுக்கி விடுவார்கள்;

என்ற புரிதலானது, கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றிய அனுபவங்களினால் கிடைத்த பாடமாகும். அந்த புரிதலுடன் பயணித்தாலேயே, இன்று நோவாம் சோம்ஸ்கி, அமர்த்யா சென், ரிச்சர்ட் வெட்டஸ், ஸ்டிவன் பிரவுன் உள்ளிட்ட இன்னும் பல வெளிநாட்டு புலமையாளர்களுடனும், இந்தியாவில் குருமூர்த்தி, மது கிஷ்வார் உள்ளிட்ட இன்னும் பல புலமையாளர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்து, தொடர்ந்து எனது புலமையை வளர்த்துக் கொள்ளும் போக்கில் பயணித்து வருகிறேன்;

இன்று என்னுடன் எனது ஆய்வுகள் தொடர்பான சமூக வட்டத்தில் (Research circle) இருப்பவர்களும், என்னைப் போலவே, மிகவும் கவனமாகவே உரையாடுகிறார்கள். வெளிப்படும் குறைபாடுகளையும் 'ஈகோ' (Ego) சிக்கலின்றி வெளிப்படையாக என்னைப் போலவே திருத்திக்கொண்டு வளர்ந்து வருகிறார்கள்.

சமூகத்தில் கொலை, கொள்ளை, மோசடி, ஊழல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளில் உள்ள 'கறுப்பு ஆடுகளில்' ஒருவராக;

என்னுடன் நல்லுறவில் இருப்பவர்களில் எவராவது இருந்தால், தமிழ்நாட்டின் சீர்குலைவிற்கு நானும் காரணமாவேன்.

1967க்குப்பின் அது போன்ற கறுப்பு ஆடுகளின் எண்ணிக்கை வளர்வதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு;

'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, முற்போக்கு' முகமூடிகளுடன், என்னைப் போன்றவர்களை சந்தித்து உரையாடும்போது, அந்த தலைவர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, 'யோக்கியராக' பேசி, என்னுடன் நெருக்கமாக முயன்றவர்களை அடையாளம் கண்டவுடன், எனக்கு நெருக்கமான வட்டத்திலிருந்து அகற்றாவிட்டால்; தமிழ்நாட்டின் சீர்குலைவிற்கு நானும் காரணமாவேன்.

நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்;

1970களின் பிற்பகுதி முதல் 1990களில் இசை ஆராய்ச்சி நோக்கி, நான் திசை திரும்பிய இடைப்பட்ட காலத்தில்;

'பெரியார்' .வெ.ராவை இழிவுபடுத்திக் கொண்டே, தனித்தமிழ்நாடு ஆதரவு போக்கினை ஊக்குவித்த பெங்களூர் குணாவை, 'பெரியார் கொள்கையாளராக' இருந்து கொண்டே ஆதரித்த தவறிலும் சிக்காமல்;

'அண்ணாவை' ஏற்றுக் கொள்ளாமல், கேலி பேசிக் கொண்டே, தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்த இழிவு திசையில் பயணிக்காமலும்;

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு கூடிய தனித்தமிழ்நாடு' ஆதரவு போக்கில், செயலளவில் பங்களித்து பயணித்து வந்துள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்' ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html )

அது போல, "ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்" என்ற கருத்தினை துணிச்சலுடன் வெளிப்படுத்தி, துக்ளக் இதழானது, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு பங்களித்து வருவதும் நம்பிக்கையூட்டும் சிக்னலாகும். (‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?’;  http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

துக்ளக் வாசகர்கள் சிலர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியைக் கண்டித்து எழுதிய மடல்களை துக்ளக் வெளியிட்டுள்ளதும் பாராட்டத்தக்கது. அது போல முன்பு 'பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில் எனக்கு நெருக்கமாக இருந்தவர்களில், நான் மதிக்கும் சிலரும் எனது துக்ளக் ஆதரவு நிலைப்பாடினைக் கண்டித்து எழுதியவற்றிற்கும், நான் உரிய விளக்கங்கள் அளித்துள்ளேன்.(‘ 'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா? (2)- '.வெ.ரா செயலாக்கியை' (EVR Processor) மேம்படுத்தி பயன்படுத்துவதா? சமூக  காயலான் கடைக்கு ஒதுக்குவதா?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html

ஆட்சியில் இருந்த முதல்வர்களின் கால்களில் விழுந்து வணங்கி, மாணவர்களுக்கு மோசமான முன்மாதிரிகளாக இருந்த துணைவேந்தர்களும்,  'முக்கியத்துவ' போதையில் சிக்கி, தமக்கு புலமையில்லாத துறை ஆய்வுத்திட்டங்களில் ஆய்வாளர்களை 'முட்டாள்த்தனமான' கேள்விகள் கேட்டு அவமதித்தவர்களும், ஆட்சியில் இருந்த கொள்ளையர்களுக்கு நேசமாக பயணித்தவர்களும்,  அந்த 'கறைகளையெல்லாம்'  மறைத்து, 'தமிழ்ப் பற்றாளர்களாக' வலம் வரும் போக்கும், இன்னும் அதிக காலம் நீடிக்க முடியாது; (‘'தர அடையாளம்'(benchmark) தாழ்ந்தவர்களுக்கு, 'தமிழ்' கவசமாக நீடித்ததும், முடிவுக்கு வருகிறது’; https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_13.html )

காலனியத்திற்கு முன் தமிழ்நாடு இருந்தது தொடர்பாக, .வெ.ரா போன்றவர்கள் முன்வைத்த தவறான கருத்துக்களை எல்லாம், உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுத்து, இணையத்தில் தெளிவுபடுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

மனசாட்சியை அடகு வைத்து, சமூக ஒழுக்க நெறிகளை 'வேஸ்ட்' (Waste) என ஒதுக்கி, 'செல்வாக்கான' நபர்களுக்கு வாலாட்டியே, 'பாதுகாப்பான சொகுசு மண்டிலத்தில்' 'புத்திசாலிகளாக'(?) வாழ்ந்து வந்தவர்கள் எல்லாம், கேலிக்கும், கிண்டலுக்குமுள்ளான முட்டாள்களாக வெளிப்படும் படலமும் தொடங்கி விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

இவையெல்லாம் மரணத்தை நெருங்கியுள்ள தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்), எவர் காலிலாவது எப்படியாவது விழுந்து பணம் ஈட்ட போட்டி போட்டு, தன்மானம் இழந்த தமிழர்களின், விலைமதிப்பற்ற வரலாற்றுச் சான்றுகளையும், மலைகளையும், ஏரிகளையும் , ஆறுகளையும் இழந்து சீரழிந்து வரும் தமிழ்நாட்டின் மீட்சிக்கான அறிகுறிகள் ஆகும்


ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தி.மு.க உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகள் எல்லாம், அடித்தளம் செல்லரித்த கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது போல, புதைபடும் காலமும் நெருங்கி வருகிறது. ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்; 


பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, மலேசியாவில் நடப்பது போல, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும். (‘ஈ.வெ.ராவும், ராஜாஜியும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறுவோம்’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html


2018 மே மாதத்தில், மலேசியாவில் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி அரங்கேறிய ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில், ‘மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்தில் வாழும் சாமான்யர்களிடமிருந்து தொடங்கும்' என்ற கருதுகோளை (Hypothesis) மெய்ப்பிக்கும் சமூகவியல் பரிசோதனையானது(Sociological Experiment), தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none.html

குறிப்பு

முதல்வர் ஜெயலலிதா, (சகிகலா கணவர்) நடராஜன், தி.மு. தலைவர் கருணாநிதி, ஆகிய மூவரும் அடுத்தடுத்து மரணித்தார்கள். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் உண்மையாகவே வருந்தி தெரிவித்தவர்கள் யார்? அவர்களிடம் பலன்கள் அனுபவித்த நன்றிக்காக தெரிவித்தவர்கள் யார்?   அவர்களின் குறைபாடுகளையும், அவர்களால் தமிழ்நாட்டிற்கு விளைந்த கேடுகளையும் தமக்கு நெருக்கமான வட்டத்தில் கேலி கிண்டல் செய்து விட்டு,, தமது 'வி..பி பிம்ப பாதுகாப்பிற்காக' இரங்கல் தெரிவித்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு, ஆர்வமுள்ளவர்கள் எல்லாம், அவரவர் அறிவு, அனுபவ அடிப்படைகளில் விடைகள் பெறலாம்.

No comments:

Post a Comment