ஈ.வெ. ரா -வின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு விலகி, 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்கிறார்களா?
'பெரியார்' பிம்பம்' ஈ.வெ.ராவின் சமாதியாகுமா?
‘எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன், வாய்ப்பு கிடைத்தால்.
பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்; அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன்.’
நான் 'பெரியார்' இயக்கத்தில் நுழைந்த காலக்கட்டத்தில், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும், பெரியார் எதிர்ப்பாளராகவும் இருந்த பேரா.அ.மார்க்ஸ், என்னிடம் பெரியாரையும், அவர் கொள்கைகளையும் எதிர்த்து, கேள்விகள் பல கேட்டார். அதற்கு 'திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும்' நான் தொடங்கிய தேடலே, பின்னர் என்னை ஒரு புலமையாளராக,
(theoritician) வளர்த்துக்கொள்ள உதவியது.
பேரா.அ.மார்க்ஸ் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்; நீண்ட இடைவெளி; இப்போது எப்படி என்று எனக்கு தெரியாது. 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களை, இந்த காலக்கட்டத்தில், 'ஆசிரியர்' என்று பேரா.அ.மார்க்ஸ் எழுதி வருவதானது, எனக்கு நம்பமுடியாத நகைச்சுவையாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
"ஈ.வெ.ரா, கி.வீரமணி, மு.கருணாநிதி என்று நமது பேச்சில், எழுத்தில் குறிப்பிட்டால், அவர்களை அப்பெயர்கள் மூலம் நாம் அவமதிக்கிறோமோ? என்று நமக்கு ஐயம் வரும் வகையில், அவர்கள் ஆதரவாளர்கள் நினைப்பது உண்மையா? பொய்யா? என்பதும் ஆய்விற்குரியதாகும். மதிப்பதற்கும் வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, தமிழ்நாட்டில் மறைந்து விட்டதா? சினிமா ரசிகர்கள் நடிகர்களையும், தொண்டர்கள் தலைவர்களையும், கடவுளர்களாக 'வழிபடுவது', அதன் விளைவா? இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."
என்பதையும்;
ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
அந்த வகையில் இன்றும் நான் மதிக்கும் ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து, எனது நிலைப்பாடுகளுக்கு எதிராக வந்த மடல், கீழ்வருமாறு தொடங்கியுள்ளது.
"பேராசிரியர் வீரபாண்டியனை நான் நன்கு அறிவேன்,
அவர் எழப்பியிருக்கும் கேள்விகளுக்கு அவரே மிக எளிதில் பதில சொல்ல முடிந்தவராகவே ஒரு காலத்திலிருந்தார். அவரிடமிருந்து இந்த எதிர்வினை எனக்கு வியப்பளிக்கிறது. எனவே அவரை மறந்து விட்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்." என்று எழுதிய மடலில், அவர் வெளிப்படுத்திய கருத்துக்களும் (சிகப்பில்), எனது விளக்கமும் வருமாறு:
“"மனு நீதி நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற வாதம் எப்போதுமே இருந்துதான் வருகிறது. எந்த வாதத்தையும் யாரும் யாருடைய தனிப்பட்ட ஆராய்ச்சி புலத்திற்கு விட்டு விட்டு முடிவுகளுக்காக காத்திருக்க முடியாது.
மனு நீதி மட்டுமல்ல இன்றைய சட்டங்கள் வரை எந்த சட்டத்திற்கும் அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வரலாற்றில் என்றுமே இருந்தததில்லை. பெரும்பான்மை என்ற புரிதலே சரியானது. அபபடி இல்லை யெனில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியின்றி இருந்த காட்சிக்கு என்ன விளக்கத்தை தரப் போகிறீர்கள்
ஏன் அவர்கள் படிக்கவில்லை ஏன ஒரு சாராரை சாமி என்று சொல்லி அவர்கள் கூனிக் குறுகி நின்றார்கள் துண்டை எடுத்து தோளில் போட்டது யார் தீண்டாமை என்ன எங்களுடைய கற்பனையா
சமுக உண்மையில்லையா?"
இது தொடர்பான விளக்கத்திற்கு கீழ்வரும் பதிவுகள் துணை புரியும்.
1.’ தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html
2. ‘இசையில் ' தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடை’யா?’;
http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html
http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html
“"இந்தக் கடவுளின் கருவறை
ஆதிமனிதனின்
அறியாமையும்,
பயமும் தான.
கடவுளின்
தொடர்ந்த
இருத்தலுக்கு
ஆயிரம்
காரணத்தைக்
கற்பிக்கலாம். ஆனால்
தோற்றுவாய்
இது
தான்
என்பதில்
இரண்டாம்
கருத்துக்கு
இடமில்லை."
என்ற மேலே குறிப்பிட்ட 'பெரியார்' ஆதரவாளரின் கருத்துக்கு, நான் கீழ்வரும் கேள்வியை எழுப்பினேன்.
“இது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது? அந்த ஆதாரம் 'ஆதி மனிதன்' பற்றிய தகவல்களை எந்த ஆய்வுகளின் அடிப்படையில் பெற்றது? அந்த ஆய்வுகள் எந்த அளவுக்கு அறிவியல் அணுகுமுறைகள் அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டன?”

அதற்கு கீழ்வருவது, எனக்கு பதிலாக வந்தது.
“பேராசிரியர் கவனத்துக்கு நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள வரிகள் என்னுடையவை. பெரியாருடைய பேச்சுக்கள் எழத்துக்கள் மேலும் நான் படித்த பல்வே று புத்தகங்கள் வரியிலாக நான் உணர்ந்தவை. இதனை தாங்களின் முட்டாளின் கருத்து என்று சொல்லி ஒதுக்கி விடலாம். ஆனால் ஆதாரம் கேட்க முடியாது. இராகுல சாங்கிருத்தியாயன் மார்க்சு இப்படி யாருமே முறையாக ஆய்வு செய்தவர்கள் இல்லையென்று தாங்கள் கருதும்போது கற்காலம் பற்றிய புரிதலுக்கு யாரால் ஆதாரம் தர முடியும்.”
சாங்கிருத்தியாயன், மார்க்சு போன்றவர்களின் ஆய்வுகள் எல்லாம் முடிந்த முடிவுகளாகக் கருதிப் பயணிப்பதானது வழிபாட்டுப் போக்காகும். பின் வந்தவர்களால் எந்த அளவுக்கு மறுஆய்வுக்கு உள்ளாகி, என்னென்ன உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன? 'புதிய ஜனநாயகம்' இதழுக்கு மறுப்பாக, 'உண்மை' இதழில் நான் எழுதிய கட்டுரைகள் மூலமாக வெளிப்பட்ட தகவல்கள், 'காரல் மார்க்ஸை' வழிபடும் போக்கில் பயணித்த 'பெரியார்' ஆதரவாளர்களுக்கே கசப்பாக இருந்ததையும் நானறிவேன். அந்த காலக்கட்டத்தில், மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாதங்களில் நான் ஈடுபட்டிருந்தேன்.
இன்று இசை ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கியுள்ளது போல், அதற்கு முன் பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஆகியோர் படைப்புகளில் மூழ்கி வாழ்ந்தேன். அப்போது பொருள் உற்பத்தி முறை(Mode of Production), உற்பத்தி விசைகள்(Productive Forces), உற்பத்தி உறவுகள்(Production relations), அவற்றிற்கிடையிலான தொடர்புகள், உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the surplus
product), முரண்பாடுகள்(contradictions) பற்றிய படைப்புகளில் ஆழ்ந்து மூழ்கி, இந்திய சமூகத்தில், தமிழ்நாட்டில், அவற்றின் பின்னணியில் உள்ள வித்தியாசமான தனித்துவ கூறுகளை அடையாளம் கண்டேன். அவற்றை மார்க்சிய லெனினிய முகாம்களில் இருந்தவர்களோடு விவாதிக்க விரும்பி கட்டுரைகளும் வெளியிட்டேன். இடையில் 'மக்கள் யுத்தம்' பிரிவின் வெளியீடான 'வர்க்கப் போராட்டத்தின் கேந்திரமான கண்ணி' என்ற அவர்களின் கொள்கை விளக்கப் புத்தகம் பேரா.கோச்சடை மூலம் எனக்குக் கிடைத்தது. மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளின் அடிப்படையில் அப்புத்தகம் தொடர்பான விமர்சனத்தை எழுதி அவரிடம் கொடுத்தேன். இன்று வரை எந்த பதிலும் இல்லை. ஆக 'ஆனைமுத்துவின் மறுப்பு'க்கு ஏற்பட்ட விளைவுக்கும், இதற்கும் பெரிய வேறுபாடில்லை.
உண்மையில் முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பானப் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
பொதுவுடமை முகாம்களில் இது போன்ற உணர்ச்சிபூர்வ இரைச்சல் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பதையும் எனது கீழ்வரும் அனுபவம் உணர்த்தியது.
1970களின் பிற்பகுதியில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தில் நான் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்போது விசாகப்பட்டிணத்தில், 'இந்திய நாத்தீக மையம்' (Atheist Society of India) சார்பில் 'அகில இந்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணிக்கு அழைப்பு வந்தது. அவர் என்னை அம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். என்னுடன் குப்பு.வீரமணி, தஞ்சை இரெத்தினகிரியின் தம்பியும், தற்போது தஞ்சை 'கிங் பொறியியல் கல்லூரி' நிர்வாக அதிகாரியுமான அண்ணாமலையும்
உடன் வந்தனர். விசாகப்பட்டிணத்தில் இருந்த பல்கலைக்கழக அரங்கில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அரங்கில் பல்வேறு நக்சலைட் குழுக்களின் ஆதரவாளர்களாயிருந்த மாணவர்களும், கல்லூரி ஆசிரியர்களும் அரங்கு முழுவதும் நிரம்பியிருந்தனர். மார்க்சியம் லெனினியம் தொடர்பான மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளை விளக்கி, அந்த பின்னணியில் பெரியாரின் நிலைப்பாடுகளை விளக்கினேன். எனது உரை முடிந்து, அடுத்து இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளின் ஊடேயும், உணவு இடைவேளைகளிலும், இரவு படுக்கப் போகும் வரையும், காலையில் விழித்து எழுந்து, காலை உணவை முடித்தது முதல், கடைசியாக விசாகப்பட்டிணத்தில் இரயிலில் ஏறும் வரை, என்னை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு,
அந்த நக்சலைட் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு, பதில் பெறுவதிலும், என்னிடம் கையெழுத்து பெறுவதிலும் (Autograph), என்னை முழ்கடித்தனர்.
ஆக தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்', ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது, ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன். 'முக்கியத்துவ'ப் போதை என்பது 'திராவிட மனநோயாளியாக' வளர்வதற்கான நுழைவு வாயில் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டில் அந்த போதையாளர்களுக்கு எனது சமூக வட்டத்தில் இடம் அளிக்காமல் வாழ்வதும் அந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தான்.’
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html)
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html)
மேலே குறிப்பிட்ட 'பெரியார்' ஆதரவாளரைப் போலவே, நான் மிகவும் மதிக்கும், எனது நலனில் மிகுந்த அக்கறையுள்ள இன்னொரு 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து கீழ்வரும் கருத்து எனக்கு வந்தது.
"பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது யாருக்குச் சாதமாக முடியும் என்று யோசிக்க வேண்டும்."
'துக்ளக்' இதழில், எனது கட்டுரை (‘நிதானமில்லாமல், நேர்மையின்றி, நீசத்தன்மையில் சேற்றை வாரி இறைப்பது 'துக்ளக்'கா? 'விடுதலை'யா?’;
http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none.html ) வெளிவந்தது. அதற்கு அடுத்த இதழில் 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, என்னை அறிமுகம் செய்து, எனது கட்டுரைகள் தொடராக 'துக்ளக்' இதழில் வெளிவரும் வாய்ப்புள்ளதை அறிவித்திருந்தார். ('துக்ளக்' 15-05-2018)

அது தொடர்பாக, 'பெரியார்' ஆதரவாளர்களிடம் வெளிப்பட்ட கருத்துக்களுக்கு, எனது விளக்கங்களையும் வெளியிட்டுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html
& http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_18.html
& http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html
)
“பெரியாரால், திராவிட இயக்கத்தால் வந்த எழுச்சியின் பல சரியான போக்குகளைக் கொச்சைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் உடைத்து சிதைக்கவும் நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.”
என்று முன்வைக்கப்பட்ட கருத்திற்கும், எனது விளக்கத்தினை பதிவு செய்துள்ளேன்.
'துக்ளக்' இதழில் நான் எழுதும் எண்ணத்தினை எதிர்த்து வந்த கருத்துக்களில், கீழ்வருவதே எனக்கு மிகவும் முக்கியமாகப் படுகிறது.
"பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது யாருக்குச் சாதமாக முடியும் என்று யோசிக்க வேண்டும்."
ஈ.வெ.ரா அவர்கள் 'பெரியார்' என்ற பிம்பத்தில் சிக்கி, அவரின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு, எவ்வளவு தூரம் விலகி, எந்தெந்த 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணித்து வருகிறார்கள்? என்ற கேள்விக்கான, கீழ்வரும் விளக்கம் முக்கியமானதாகும்.
நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், சென்னை 'பெரியார் திடலிலும்', திருச்சி 'பெரியார் மாளிகையிலும்', 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் மூழ்கி வியந்து வாழ்ந்த காலம், இன்றும் நினைத்தாலும் இன்பம் தர வல்லதாகும். 1967 வரை ஈ.வெ.ரா அவர்கள் தமது பிறந்த நாளில் வெளியிட்ட அறிக்கைகளை, இன்றும் அறிவுநேர்மையுள்ள 'பெரியார்' எதிர்ப்பாளர்களும் படிக்க நேர்ந்தால் வியப்பு எய்துவார்கள்.
'திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது’ என்ற 'தவறினை' நடைமுறையாக்கி, கொள்கை எதிரிகளே பிரமிக்கும் வகையில் துணிச்சலுடன் பயணித்தவர் ஈ.வெ.ரா என்பதை, மேலே குறிப்பிட்ட சான்றுகள் எல்லாம் எனக்கு உணர்த்தின.
"அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பது; பொதுவாக வெளிப்படையாகச் செய்வது' என்ற இருவேறு அணுகுமுறையில் பயணித்த தேசிய, பொதுவுடமை கட்சிகளை எல்லாம், தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் ஓரங்கட்டியதன் விளைவாகவே;
ஈ.வெ.ரா அவர்களின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ஆதரித்து தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் 1952 முதல் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியில், காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாமல் தோற்ற வரலாறு அரங்கேறியது.
அவ்வாறு ஈ.வெ.ராவின் ஆதரவில் தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தலை சந்தித்த வலிமையையும்,
இன்று 'பெரியார்' கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள வலிமையையும் ஒப்பிடுவதானது, அரிய பாடங்களைத் தர வல்லதாகும்.
இரகசிய செயல்பாடும், வன்முறையும், எவ்வாறு தமிழ்நாட்டில் பலனின்றி கேடாக முடியும்? என்பதை விளக்கி, விமர்சனங்களை வரவேற்று, வெளிப்படையாகவும், பொது மக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் கேடு விளைவிக்காத போராட்ட வடிவங்களை சுயலாப நோக்கின்றி, உண்மையான சமூக அக்கறையுடன் முன்னெடுத்ததாலேயே, 1919 முதல் 1944 வரை ஈ.வெ.ரா அவர்கள் பிரமிக்கும் வகையில் சமூக ஆற்றல்களை வளர்க்க
முடிந்தது.
'பிரிவினை' பற்றி ஈ.வெ.ராவைப் போல துணிச்சலாக 'நியாயப்படுத்தி' இன்று பேச முடியுமா? இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா?
1919 முதல் 1944 வரை ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பத்தில் பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டு, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட வடிகால் மூலமாக ஈ.வெ.ரா வசம் இருந்த சமூக நேர்மையுள்ள சமூக ஆற்றல்களை எல்லாம் அழித்து, 1967இல் ஆட்சியை பிடித்து, ஆதாய அரசியல் மூலமாக அரசியல் நீக்கத்தை ஊக்குவித்து, வளர்ந்த பொதுவாழ்வு வியாபார சமூக ஆற்றல்களின் 'உண்மையான பலம் செல்லாக்காசு' என்பதானது, சென்னை வெள்ள நிவாரண மீட்சியில் கட்சி சார்பற்ற இளைஞர்கள் மூலம் அம்பலமாகி விட்டதை, ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html )
திராவிடர் கழகமானது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை ஆதரிக்கத் தொடங்கிய பின் பிளவுக்குள்ளானபோது, பிரிந்தவர்களுக்கும் இருந்தவர்களுக்கும் இடையில் வெடித்த வன்முறைகள் எல்லாம், ஈ.வெ.ராவைப் போல வெளிப்படையான விமர்சனப் போக்கினை இருசாராரும் பின்பற்றவில்லை என்பதையே உணர்த்தியது. அதன்பின் ஈ.வெ.ராவால் 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட 'பந்த்', 'உண்ணாவிரதம்', 'மெட்ராஸ் கஃபே' திரைப்பட எதிர்ப்பு' போன்ற முயற்சிகளில், 'பெரியார்' கட்சிகள் ஈடுப்பட்டதும், அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
'பிரிவினை' பற்றி ஈ.வெ.ராவைப் போல துணிச்சலாக 'நியாயப்படுத்தி' இன்று பேச முடியுமா? இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா?
1949 முதல் 'பெரியார்' இயக்கம் வீழ்ச்சிப்பாதையில் பயணித்ததே பொதுச்சொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் கேடான போராட்டங்கள் வளர்ந்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈ.வெ.ராவையே அவமதிக்கும் விளைவில் முடிந்தது.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)
வன்முறைக்கு இடமில்லாத போராட்டங்களில் காந்தி தோற்று, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் அவரின் 'சத்தியாகிரக' போராட்டங்கள் முடிந்தன. காந்தி தோற்ற இடத்தில் வெற்றி பெற்றவர் ஈ.வெ.ரா ஆவார். எனவே அறிவுபூர்வ விவாதத்தினைத் தவிர்த்து, 'பெரியார்' வழிபாட்டுப் போக்கில் ஈ.வெ.ரா சமாதியாவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. அந்த நோக்கிலேயே, 'இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?' என்ற விவாதத்தினைத் துவக்கினேன்.
(http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html)
ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது, மேற்கத்திய வழிபாட்டுடன் பிணைந்த, ஆங்கிலவழிக்கல்வி ஆதிக்கத்திலிருந்து, இந்தியாவை மீட்க, 'தாய்மொழிவழிக்கல்வி', 'சாதி, மத அடிப்படைகளில் உள்ள பாரபட்சத்தை' அகற்றுதல், போன்றவை மூலம், ஆர்.எஸ்.எஸ் ஆனது, நவீன கால தேவைகளுக்கேற்ற மாற்றங்களுடன், வியக்கும் வகையில் பயணிக்கிறது. (‘Is The RSS Making Peace With Modernity? It Certainly Seems So’; http://swarajyamag.com/ideas/is-the-rss-making-peace-with-modernity-it-certainly-seems-so & http://www.firstpost.com/politics/modi-ambedkar-and-rsss-ultimate-unifier-a-fresh-attempt-at-social-engineering-2728642.html).இந்துத்வா ஆதரவாளர்களில், உணர்ச்சிபூர்வ போக்குகளை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ராஜிவ்மல்கோத்ரா உள்ளிட்ட பல அறிஞர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். (‘அறிவுபூர்வ விவாதத்தில் 'இந்துத்வா'; ராஜிவ் மல்கோத்ராவும், செல்டன் பொல்லாக்கும்’;
http://tamilsdirection.blogspot.in/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_15.html)
உரிய மாற்றங்களின்றி பயணிக்கும் கொள்கைகளும், இயக்கங்களும், கால ஓட்டத்தில் 'சருகாகி', உதிர்ந்து போவதை தடுக்க முடியுமா? என்பதை 'பெரியார்' கட்சிகள் அறிவார்களா?
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )
ஈ.வெ.ரா எவ்வாறு தமது ஆதரவாளர்களிடமிருந்து தம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் தமது இதழில் வெளியிட்டு விளக்கம் அளித்தாரோ;

அது போல நிகழ்காலத்தில் அந்த போக்கில் பயணித்தவர் 'துக்ளக்' சோ ஆவார்.
அதனை 'துக்ளக்' இதழை தொடர்ந்து படித்து வருபவர்கள் அறிவார்கள்.
உதாரணமாக, 1989 தமிழக சட்டசபைத் தேர்தலில், கருப்பையா மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக ராஜிவ் காந்தி அறிவித்த போது;
'போபர்ஸ்' ஊழலில் ராஜிவ் காந்தியை எதிர்த்த சோ, 'முதல்வராக கருப்பையா மூப்பனர் வருவதே தமிழ்நாட்டிற்கு நல்லது' என்று துணிச்சலுடன் ஆதரித்தார்; குருமூர்த்தி உள்ளிட்ட இந்துத்வா ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி.
பிரதமர் நேருவை எதிர்த்துக் கொண்டே முதல்வர் காமராஜரை ஈ.வெ.ரா அவர்கள் ஆதரித்தது கடந்த கால வரலாறாகும்.
மேலே குறிப்பிட்ட தகவலும், அந்த காலக்கட்டத்தில் 'பெரியார்' ஆதரவாளராக பயணித்த எனக்கு தெரியாது. 'துக்ளக்' எதிர்ப்பு வெறுப்பு நோயில் சிக்கி பயணித்து வந்த நான், 2005 சூலையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய காலத்தில், 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் தொடர்பான கட்டுரை துக்ளக்கில்
வெளிவந்திருப்பது கேள்விப்பட்டு, அந்த இதழை வாங்கி படித்தேன். அதன்பின் தொடர்ந்து துக்ளக் இதழைப் படித்த போது தான், மேலே குறிப்பிட்ட தகவலானது எனது பார்வைக்கு வந்தது.
ஈ.வெ.ரா அவர்கள் 'திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது' என்ற போக்கில் பயணித்தது மட்டுமின்றி, சென்னை லட்சுமிபுரம் பிராமணர் அமைப்பு, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி போன்றவற்றில் உரையாற்ற அழைப்புகள் வந்தபோது, அதனை மறுக்காமல் ஏற்று உரையாற்றியவர். அது தொடர்பாக தமது கட்சியினர் தம் மீது முன்வைத்த விமர்சனங்களுக்கும் வெளிப்படையாகவே விளக்கங்கள் கொடுத்து பயணித்தவர் ஆவார்.
இன்று 'விடுதலை'யும். அந்த இதழால் 'மவுண்ட் ரோடு மகா விஷ்ணு' என்று நீண்ட காலமாக கண்டிக்கப்பட்ட 'இந்து' இதழும், 'சசிகலா'-விடமும், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும் 'சங்கமம்' ஆனதை, மேலே குறிப்பிட்ட 'பெரியார்' ஆதரவாளர்கள் ஆதரித்தார்களா? எதிர்த்தார்களா? அது 'ஆரிய திராவிட சங்கமமா'? அந்த சங்கமமானது, 'ஆரியர்களுக்கு' நலன் தருமா? 'திராவிடர்களுக்கு' நலன் தருமா? அல்லது சம்பந்தப்பட்டவர்களின் நலன்களின் சங்கமமா? என்று ஆராய்ந்தார்களா? என்பது எனக்கு தெரியாது. எவராவது தெரிவித்தால், நன்றியுடன், அதனை நான் ஆய்வுக்கு உட்படுத்துவேன்.
இறுதியாக, 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வுக்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தி, தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் தொடர்பான ஈ.வெ.ரா -வின் கருத்துக்கள் எவ்வாறு தவறானவை? என்று கண்டுபிடித்த பின் சுமார் 12 வருடங்களுக்கு முன், நான் எழுதிய முதல் கட்டுரையில்;
'கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) என்ற தலைப்பில் நான் வெளியிட்ட கீழ்வரும் கருத்தே:
உணர்ச்சிபூர்வ இரைச்சலில் இருந்து, தமிழ்நாட்டை மீட்டு அறிவுபூர்வ போக்கில் பயணிக்கச் செய்யும்; இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம் ஒரங்கட்டி.
“பெரியார் பிராமணர்கள் சங்கத்திலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பெரியாரியல் நிபுணரும் பெரியார் இயக்கக் கூட்டத்தில் இந்துத்வா நிபுணரும் உரையாற்றும் வகையில் கருத்து வேறுபாட்டை மதித்துக் கூட்டம் நடத்தும் ஆரோக்கியமான சூழல் வர வேண்டும். ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய் ஒழிய அது வழி வகுக்கும்.”
No comments:
Post a Comment