Tuesday, May 1, 2018


தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’ (Macro-world (4)

 

நிதானமில்லாமல், நேர்மையின்றி, நீசத்தன்மையில் சேற்றை வாரி இறைப்பது 'துக்ளக்'கா? 'விடுதலை'யா?



Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.

‘ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், குறிப்பிட்ட சமூக‌ செயல்நுட்ப அடிப்படையில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ, அந்த பயணத்தின் முடிவில், அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது.’ (http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true ) 

அந்த நோக்கில், ‘கலாச்சார சீரழிவாக மாறிய, சமுதாய சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் துக்ளக் (01.05.2018) இதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் கீழ்வரும் பகுதியானது, எனது கவனத்தை ஈர்த்தது.

“தமிழகத்தில் விஷம் போல பரவியிருக்கும் பொதுவாழ்வு, குடும்பம் மற்றும் தனிநபர் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுத்த பெரியாரின் சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (intellectual property rights) பெரியாருடையது அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வட நாட்டில் வாழ்ந்த சாருவாக முனி, குறிப்பாக ஆன்மிக மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஸம்ஸ்க்ருதத்தில் என்ன கூறினாரோ, அதைத்தான் பெரியார் இங்கு தமிழில் கூறினார்.

நாவுக்கு சுகமாக உண்டு களிப்பதும், பெண்களுடன் மகிழ்ந்து களிப்பதும்தான் வாழ்க்கை. மோக்ஷம் என்பது மூச்சு நின்று இறப்பதுதான். அதனால் மோக்ஷத்திற்காக எவரும் தன்னை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. முட்டாள்கள்தான் விரதத்தையும், தவத்தையும் மேற்கொள்வார்கள். கற்பு மற்றும் அது போன்ற கோட்பாடுகளும் சாதுர்யமானவர்களின் சதி" என்று கூறினார் சாருவாக முனி. அவர் கூறியதை யாரும் ஏற்கவில்லை. ஆனால் அப்படிக் கூறியதற்காக யாரும் அவரைத் தூற்றவும் இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் பெரியாரும், அவருடைய சீடர்களும் - ‘கண்ணீர் துளிகள்’ என்று பரிகசித்து பெரியார், யாரை ஒதுக்கினாரோ அவர்கள் உட்பட - கலாச்சார சீரழிவை, சமுதாய சீர்திருத்த, அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அதனால் அது சாருவாக முனி துவங்கிய விவாதமாக மட்டுமில்லாமல், மக்களின் ஒழுக்கத்தைக் குலைக்கும் கருவியாகவும் மாறி, தமிழக அரசியல், ஆன்மிகம், கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய எல்லாவற்றையுமே பாதிக்கிறது……. இந்த கலாச்சார சீரழிவுச் சிந்தனை இருளிலும், நமக்குப் பெருமை கலந்த நம்பிக்கையைத் தருவது நிர்மலா தேவியின் மாணவிகள் நடந்து கொண்ட விதம். அவர்கள் மீது செல்வாக்குள்ள பேராசிரியை, தங்களை எவ்வளவு ஆசை காட்டி வலை விரித்தாலும், அந்த மாணவிகள் பெரியார் சிந்தனைகளை குப்பைத் தொட்டியில் போட்டு, ‘பாலியல் தடம் புரளுதல் பாவச் செயல்’ என்றும், பெரியார் கூறியது போல, ‘கற்பு அடிமைத்தனம் அல்ல. புனிதம்’ என்று உணர்த்தியிருக்கின்றனர். தங்களையும் காத்து, தமிழகத்தையும் பெருமைப்படுத்திய அந்த மாணவிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.

முடிவாக, தமிழக ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துகிறார். அது தவிர, ஸி.பி.ஸி.ஐ.டி. விசாரணையும் நடக்கிறது. இந்த விசாரணைகள் மூலமாக உண்மை வெளிவந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இது போன்ற கேவலங்கள் நடக்கத் தூண்டும் சித்தாந்தங்களையும், கல்வித்துறையிலிருந்து களைய தமிழகத்தில் உள்ள பொறுப்பான எல்லோரும் முயல வேண்டும்.”

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' கட்டுரைக்கு மறுப்பாக,  ‘கூறுகெட்ட குருமூர்த்திகளே கேட்பீர்! ' என்ற தலைப்பில், தி.க நாளிதழ் 'விடுதலை'யில் வெளிவந்துள்ள கட்டுரையில்;

“திருவாளர் சோ.ராமசாமியின் மறைவுக்குப் பிறகு - ‘துக்ளக்கை’ அபகரித்துக் கொண்டுள்ள - கோயங்கா வீட்டு கணக்குப்பிள்ளை என்று அறிமுகமான சங்பரிவார் வட்டாரத்தின் ஒரு கூர்முனையான சுவதேசி ஜாகரான் மஞ்ச் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளரான குருமூர்த்தி அய்யர்வாள் தனது கோணல் பூணூல் புத்தியை மையாக்கி எழுதிக் கொண்டு வருகிறார்.” என்று குறிப்பிட்டு;

“அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை பிரச்சினையை மய்யப்படுத்தி இந்த சீரழிவுகளுக்கு காரணம் பெரியார் தானாம். தமிழ்நாட்டில் பெரியாரும் அவரது சீடர்களும் - கண்ணீர் துளிகள் என்று பரிகசித்து பெரியார், யாரை ஒதுக்கினாரோ, அவர்கள் உட்பட கலாச்சார சீரழிவை, சமுதாய சீர்திருத்த அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அது  சாருவாக முனி துவங்கிய  விவாதமாக மட்டுமல்லாமல் மக்களின் ஒழுக்கத்தை குலைக்கும் ஒரு கருவியாகவும் மாறி, தமிழக அரசியல், ஆன்மீகம், கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய எல்லாவற்றையுமே பாதிக்கிறது" என்று துக்ளக் கட்டுரையின் கருத்தையும் வரவேற்கத்தக்க வகையில் வெளியிட்டு;

"பெரியாரின் சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (intellectual property rights) பெரியாருடையது அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வட நாட்டில் வாழ்ந்த சாருவாக முனி, குறிப்பாக ஆன்மிக மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஸம்ஸ்க்ருதத்தில் என்ன கூறினாரோ, அதைத்தான் பெரியார் இங்கு தமிழில் கூறினார்." என்ற துக்ளக்கின் கருத்தை மறுக்காமல்;

தி.மு.க துவக்கம், வளர்ச்சி, செயல்பாடு, விளைந்த பாதகங்கள் குறித்து விவாதிக்காமல்;

'பெரியார்' புகழ் பாடி;

கட்டுரையின் முடிவில் கீழ்வரும் கருத்து வெளிப்பட்டுள்ளது.

"பெரியாரைக் குறித்து நிதானமில்லாமலும், நேர்மையின்றியும், நீசத்தன்மையில் சேற்றை வாரி இறைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்க"
 
நிதானமில்லாமலும், நேர்மையின்றியும், நீசத்தன்மையில் சேற்றை வாரி இறைப்பது 'துக்ளக்'கா? 'விடுதலை'யா? என்பதை ஆர்வமுள்ளவர்கள், 'துக்ளக்' மற்றும் 'விடுதலை' ஆகிய‌ இரண்டு இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகளைப் படித்து, உண்மையை உண‌ரலாம். அவ்வாறு எதிரெதிர் கருத்துக்களுள்ள‌ கட்டுரைகளைப் படித்து, உண்மையைக் காண்போர் அதிகரிக்கும் போது, அறிவுநேர்மையிலிருந்து தடம் புரண்டு, சேற்றை வாரி இறைக்கும் எழுத்தாளர்கள் எல்லாம் ஒதுங்குவார்கள்; அல்லது திருந்துவார்கள். 1944வரை அந்த போக்கில் தான் தமிழ்நாடு பயணித்தது. 

‘'துக்ளக்' (13.9.2017) இதழில், 'சாமியார்களின் பின்னால் அலையும் மூடர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை படித்த போது, 1944க்கு முந்தைய, 'பெரியார்' ஈ.வெ.ராவின் ‘குடிஅரசு  இதழை படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

1944க்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ரா  தம் மீது, முத்துச்சாமி வல்லத்தரசு, ஜீவானந்தம் உள்ளிட்டோர் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளை அப்படியே வெளியிட்டு, 'குடிஅரசு' இதழில் எழுதிய விளக்கங்களை நான் படித்திருகிறேன். அது போலவே, 'முரசொலி' இதழில் ஸ்டாலின் வெளிப்படுத்திய குற்றச்சாட்டை, 'துக்ளக்' இதழில் வெளியிட்டு, குருமூத்தி எழுதிய விளக்கத்தை படித்த போது, அதுவும் என் ஞாபகத்திற்கு வந்தது.’ (‘1944க்கு முந்தைய 'குடி அரசு'  திசையில் 'துக்ளக்' ?’; http://tamilsdirection.blogspot.sg/2017/09/1944.html ) 

மேலே குறிப்பிட்ட 'விடுதலை' கட்டுரையில் புராணங்களில் உள்ள 'ஆபாசங்கள்' தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவை தொடர்பான எனது பதிவுகளுக்கு, இதுவரை அறிவுபூர்வமாக மறுப்பு ஏதும் வரவிலை. இனி வந்தாலும் வரவேற்பேன்.


‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்' ; http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html
 
ஈ.வெ.ரா அவர்களைப் போலவே, சாருவாக முனி "அப்படிக் கூறியதற்காக யாரும் அவரைத் தூற்றவும் இல்லை." என்ற 'துக்ளக்' கட்டுரையில் வெளிவந்துள்ள கருத்தானது;

யாருடைய கருத்துக்காகவும் அவரைத் தூற்றாமல், அறிவுபூர்வமாகவே விமர்சிக்க வேண்டும்; என்பதை உணர்த்துவது ஆகாதா?

‘துக்ளக்’ இதழானது இந்துத்வா எதிர்ப்பாளர்களால் உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கப்படுவது போலவே, இந்துத்வா ஆதரவாளர்களாலும் கண்டிக்கப்படும் 'பெருமையை' அடைந்துள்ளது.

'பா.ஜ.கவைப் பிடித்த சனி' என்ற தலைப்பில் துக்ளக்கில் வெளிவந்த கட்டுரையை பா.ஜ.க ஆதர‌வாளர்கள் கடுமையாகக் கண்டித்து முகநூலில் வெளியிட்ட கருத்துக்களில் ஒன்று:

ரத்தம் உறிஞ்சும் வைரஸ்களை கூட வைத்துக் கொண்டே தேசியம் பேசுது துக்ளக் -

சனி பிடித்திருப்பது துக்ளக்கை.

எட்டப்பர்களை எட்டி வைத்தால்தான் பத்திரிக்கை பலப்படும்.”

இல்லையேல் பஜ்ஜி மடிக்கும் பேப்பருக்குக் கூட லாயக்கில்லாமல் குழந்தைகளின் வெளியேற்றத்தைத் துடைக்கத்தான் பயன்படும்.

இந்துத்வா ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி;

விவாதத்தின் வரை எல்லையைத் தாண்டி, விவாதத்தில் ஈடுபடுபவர்கள் மீது குற்றம் சுமத்துவது என்ற போக்கானது, இன்றைய மாணவர்களாலும், படித்த இளைஞர்களாலும் வெறுக்கப்படுகின்றன. (‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’; http://tamilsdirection.blogspot.sg/2015/10/  ) 

'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் (morons) இருப்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html) எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களை எல்லாம் உணர்ச்சிபூர்வமாக இழிவுசெய்வது 'செனோபோபியா' (Xenophobia; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) சமூக‌ மனநோயின் வெளிப்பாடாகும். இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள உணர்ச்சிபூர்வ மூடர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் 'தேசக் கட்டுமான சீர்குலைவினை'(Derailing Nation Building Process) ஏற்படுத்துவதில் 'ஒன்றுபட்டுள்ளதையும்' ஏற்கனவே எச்சரித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_98.html )

'அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை பிரச்சினையை மய்யப்படுத்தி'(‘வைரமுத்து இசைத்தமிழைச் சீரழித்த போக்கின் தொடர்ச்சியா; இயற்றமிழைச் சீரழிக்கும் கமலஹாசனின் 'மய்யம்'?; http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_8.html ), இந்த சீரழிவுகளுக்கு காரணம்' எது? 1967இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் விளைவுகளா? இல்லையா? என்ற விவாதமானது, அறிவுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டால் தான், அது போன்ற நோய்களில் இருந்து தமிழ்நாடு மீள வழி உண்டாகும். 'துக்ளக்', 'விடுதலை' இரண்டிலும் வெளிவந்துள்ள கட்டுரைகளை படித்து, தமிழ்நாட்டை அந்த சமூக நோயிலிருந்து மீட்கும் ஆர்வம் உள்ளவர்களின் பார்வைக்கு, அந்த சமூகநோய் தொடர்பான கீழ்வரும் பதிவும் கவனிக்கத் தக்கதாகும்.

‘தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்(Macro-world (3); நிர்மலாதேவி போன்ற‌ ‘இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடமிருந்து', தமிழ்நாடு  விடுதலை பெறுவது?’; http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html

தமக்கு வேண்டிய மனிதர்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், சமுக நீதி கோரும் இரட்டை வேடப் போக்குகளின் காலமும் டிஜிட்டல் யுகத்தில் முடிவை நெருங்கி விட்டது. பாரபட்சமற்ற அறிவுபூர்வ விமர்சனங்களுக்கே மாணவர்கள் மத்தியிலும், படித்த இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

‘'தமிழ், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இருந்ததை 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை 65) (முந்தையப் பதிவில் விளக்கியுள்ளவாறு) என்ற செயல்நுட்பத்திற்கு உட்படுத்தாமல், அவற்றைத் தமிழர்க்குக் கேடானவையாகக் கருதி, உருவாக்கிய கொள்கைகள் வழியில் பெரியார் பயணித்தார். அதாவது ஒரு சமூகத்தின் ஆணி வேரையே நோயாகக் கருதி அவர் பயணித்ததால், அவரது இயக்கத்திற்கான சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களிலிருந்து அவர் அந்நியமானார். எனவே ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக ஆற்றலில் இயக்கம் பயணித்து, வலுவிழக்க நேரிட்டது. மிகுந்த தியாகங்களுடன் தோன்றி வளர்ந்த அவரது இயக்கம் சந்தித்த இந்த முரண்பாடுகள் காரணமாகவே, 'குறுக்கு வழி செல்வம் சேர்க்கும்' நோயாளிகள் பொது வாழ்வில் 'அதி வேகமாக' வளர்ந்து,
(http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html), விமர்சனப் பார்வையற்ற உணர்ச்சிபூர்வ 'தமிழுணர்வாளர்கள்' அவர்களிடம் சிக்கியதால்,  பெரியாரையும் மீறி, தமிழையும், தமிழர்களிடம் இருந்த பண்பாடுகளையும் சீரழித்து, தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க அம்முரண்பாடுகள் வழி வகுத்ததா?
’ (http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true ) என்ற அறிவுபூர்வ விவாதத்தினை உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ அணுகுமுறையில் எதிர்கொள்ளும் சமூக பொறுப்பிலிருந்து 'விடுதலை' இனியும் தப்பிக்க முடியாது: நிர்மலாதேவி போன்ற‌ ‘இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடமிருந்து', தமிழ்நாடு  விடுதலை பெறுவதை இனியும் தடுக்க முடியாது என்பதால்.


கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி, கி.வீரமணி, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன் உள்ளிட்ட 'பெரியார்' கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான அறிவுநேர்மையுள்ள, சுயலாப நோக்கற்ற அறிவுஜீவிகளை கலந்து, ஈ.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' 'பெரியார்' கொள்கைகளை உட்படுத்தி, உரிய மாற்றங்களை அறிவித்து பயணிக்குமாறு, இந்த பதிவின் மூலம் கோருகிறேன்.


அவ்வாறு 'பெரியார்' கட்சி எதுவுமே பயணிக்காததன் காரணமாக‌வே, அறிவுபூர்வ சமூக வளர்ச்சி திசையில் தமிழ்நாடு பயணிக்க ஈ.வெ.ரா அவர்கள் விரும்பினாரா? என்ற ஐயத்தினை ஏற்படுத்தி; அரசியல் தரகர்கள், திருடர்கள் பிடியில் தமிழ்நாடு சிக்கியதற்கு ஈ.வெ.ராவே காரணம்; என்ற குற்றச்சாட்டினையும் வலுவாக்கி வரும் இந்துத்வா, தமிழ்த்தேசிய, மற்றும் (அறிவுபூர்வ தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்கில் சிக்கி, அதற்கு துணை புரியும்) 'பெரியார் வழிபாடு' முகாம்களில் உள்ள உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் (Morons) எல்லாம்;


மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் மூலமாக‌ வலுவிழந்து,  அதன் மூலம் 'தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) மரணப்படுக்கையிலிருந்து மீளும். தமிழ்நாடு திருப்புமுனை கட்டத்தில் இருப்பதால், சுயலாப நோக்கின்றி சமூக அக்கறையுடன் பயணிப்பவர்கள் எல்லாம், எந்த கொள்கையில் இருந்தாலும், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கி குவியப்போவதும் நிச்சயமே; 'பெரியார்' கட்சிகள் மட்டுமின்றி, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில், நேர்மையான சுயசம்பாத்தியத்துடனும், சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடனும் வாழ்பவர்கள் எல்லாம், உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து; அந்த குவியப் போக்கிற்கு உதவும் சூழலும் கனிந்து வருகிறது; 'அந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில்', துக்ளக்கை உணர்ச்சிபூர்வமாக கண்டிப்பதில் ஒன்றானவர்கள் எல்லாம், இன்றைய மாணவர்களாலும், படித்த இளைஞர்களாலும், பொதுஅரங்கில் 'ஒரே இனமாக' ஓரங்கட்டப்பட்டு. (‘'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் அறிவுபூர்வ விவாதம் சாத்தியமே’; http://tamilsdirection.blogspot.sg/2017/10/2_24.html )



குறிப்பு: "பொதுத்தொண்டருக்கான இலக்கணம், பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும், பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்காத, ஆனால் காரியம் சாதிக்கும் போராட்டம், ஆகிய இரண்டிலும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகள் எல்லாம், ஈ.வெ.ரா செயல்பூர்வமாக முன்னிறுத்திய வழியில் பயணித்தால் மட்டுமே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி சாத்தியம், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்." ( ' ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 'பெரியார்' சிறையிலிருந்து மீளும் ஈ.வெ.ரா?' ; http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )
 

No comments:

Post a Comment