Wednesday, May 16, 2018

'பெரியார்' .வெ.ரா அவர்களால் விளைந்த பெரும் சமூகக்கேடு ?


சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (1)



என்னை அறிமுகப்படுத்தி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதிய கட்டுரையானது,  துக்ளக்’ (15-05-2018) இதழில் வெளிவந்துள்ளது. அது தொடர்பாக, ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து, கீழ்வரும் பின்னூட்டம் வந்துள்ளது.

‘துக்ளக் அனுமதித்து கருப்பு காவி பாதிப்பு இல்லாமல் வந்தால் வரவேற்புக்குரியதே.


துக்ளக் கில் வருவதால் பெரியார் அமைப்புகளின் கவனத்தைப் பெறும்


தாங்கள் எதிர்பார்க்கும் விவாதம் கருப்பு,சிவப்பு,காவி அணிகளிடையே ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை காத்த அமைதி கலையலாம்.’

'இதுவரை' என்பது குறைந்த காலமல்ல;  

தமிழைப் பற்றிய .வெ.ரா அவர்களின் தவறுகளை எல்லாம், 2005இல் நான் சிங்கப்பூரிலிருந்து வந்து, சென்னை அறிவாலயத்தில் சந்தித்ததஞ்சை இரத்தினகிரியிடம் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான எனது 'தமிழ் இசையின் இயற்பியல் (Physics of Tamil Music)' ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கி, அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காததை கணக்கில் கொண்டாலும்;

மணியரசன் விரும்பியதாக தெரிவித்த, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியனின் ஆலோசனையில், நான் எழுதிகறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’  என்ற தலைப்பில் 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' வெளிவந்ததை கணக்கில் கொண்டாலும்; (http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை', 1944க்கு முன் .வெ.ரா பயணித்த அறிவுபூர்வ போக்கில், நான் முன்னெடுத்த அறிவுபூர்வ போராட்டமானது, 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களின் 'அமைதி'யை மட்டுமே எதிர்வினையாக சந்தித்து வந்துள்ளது.

‘'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படாத எந்த கொள்கையும் மரணமடைவதைத் தடுக்க முடியாது என்று பெரியார் .வெ.ரா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அது தனது கொள்கைக்கும் பொருந்தும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே பெரியாரின் கொள்கைகளையும்,நிலைப்பாடுகளையும் 'காலதேச வர்த்தமான'  மாற்றங்களுக்குட்படுத்தாமல் பயணிக்கும், பெரியார் கட்சிகளும், ஆதரவாளர்களும், பெரியாருக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைக்கிறார்கள்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். பிறர் தூண்டியோ, தாமாகவோ பெரியார் படத்தை செருப்பால் அடித்து, சிறுநீர் கழித்து, புகைப்படங்கள் வெளியிட்டவர்கள்,  கண்ணுக்கு தெரிந்து தீங்கிழைத்தவர்கள் ஆவர். மேற்குறிப்பிட்ட தீங்கானது, அதை விட ஆழமான,மோசமான தீங்காகாதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?’; http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true )

2015 மேயில் மேலே குறிப்பிட்ட பதிவு வெளிவந்தும், மேலே குறிப்பிட்ட 'அமைதி'யானது தொடர்ந்து நீடித்தது.

இன்றும் எனது மாணவர்கள் (Trichy NIT & SASTRA) உள்ளிட்டு எவரும், அறிவுபூர்வமாக உரிய சான்றுகளின் அடிப்படையில் எனது விளக்கத்தில் உள்ள குறைபாடுளை சுட்டிக்காட்டினால், அதனை பகிரங்கமாக ஏற்று, அவர்களுக்கு நன்றியும் தெரிவிப்பேன் என்பதை, ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

வே.ஆனைமுத்து, கி.வீரமணி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்டு, நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், என்னை அறிந்தவர்களும், அதனை அறிவார்கள்.

ராகவன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம், மாத்தையா, பேபி சுப்பிரமணியன், உள்ளிட்டு விடுதலைப்புலி இயக்கத்தில் என்னை அறிந்தவர்களும், அதனை அறிவார்கள்.

அத்தகைய பின்புலம் உள்ள நான் முன்னெடுத்த அறிவுபூர்வ போராட்டமானது, 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களின் 'அமைதி'யை மட்டுமே எதிர்வினையாக சந்தித்து வருவது ஏன்? என்ற எனது ஆய்வின் அடிப்படையில் தான், கீழ்வரும் முடிவானது வெளிப்பட்டது.

பிறந்த மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையதாகும். அந்த புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், 'இனம்', 'சாதி' தொடர்பான காலனிய சூழ்ச்சியில் சிக்கி, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் பயணித்த போக்கில், தி.மு.க தோன்றி, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக ஈ.வெ.ரா அவர்கள் செல்லாக்காசாகி விட்டதை உணர்த்தியது. தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கின் பின்னணியில், 1967இல் ஆட்சிக்கு வந்த 'திராவிட' கட்சிகளின் பங்களிப்பால், தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த 'அரசியல் நீக்கமானது' உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலை 'செனோபோபியா' சமூக நோயாக வளர்த்தது. அந்த சூழலில் 1980களில் ஆட்சியில் இருந்த திராவிட க‌ட்சிகளின் 'உதவிகளை' எல்லாம், அதன் வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, பெற்று, 'ஈழ விடுதலை' குழுக்கள் பயணித்த போக்கிலும்; (http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post_19.html )

அந்த 'செனோபோபியா' போக்கின் ஊடேயே மற்ற குழுக்களை அழித்து, விடுதலைப் புலிகள் இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களின் ஆதரவோடு பயணித்த போக்கிலும், அதன் தொகுவிளைவாக(Resultant), தமிழ்நாடானது கீழ்வரும் வகையில் 'செனோபோபியா' சமூக நோயில் சிக்கியுள்ளது.

'பெரியார்' .வெ.ரா அவர்களால் விளைந்த பெரும் சமூகக்கேடு என்பதானது, தமிழ்நாட்டை பாதித்த
ன் விளைவாக, 'பெரியார்' கட்சிகள் மட்டுமின்றி, 'பெரியார் எதிர்ப்பு தமிழ்த்தேசியம்' உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில், அறிவுபூர்வ விவாதங்களில் இருந்து தடம் புரண்டு, எதிர்க்கருத்தில் பயணிப்பவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் 'செனோபோபியா' மனநோயில் தமிழ்நாடு சிக்கி, சீரழிந்து வருகிறது.

அந்த 'செனோபோபியா' உணர்ச்சிபூர்வ நோயின் ஆதிக்கத்தில், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு கேடான 'அந்த அமைதி'யானது, சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருவதற்கு, 'மீடியா வெளிச்சத்தைத் தவிர்த்து, நான் வாழ்வதும் ஒரு காரணம், என்பதையும் உணர்ந்துள்ளேன்.

'முக்கியத்துவ'ப் போதை என்பது 'திராவிட மனநோயாளியாக' வளர்வதற்கான நுழைவு வாயில்' என்பதை உணர்ந்து, மீடியா வெளிச்சத்தில் வாழ்வதை, நான் தவிர்த்து வருவதையும், கீழ்வரும் பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.

‘1970களின் பிறபகுதியில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தில் நான் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்போது விசாகப்பட்டிணத்தில், 'இந்திய நாத்தீக மையம்' (Atheist Society of India) சார்பில் 'அகில இந்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணிக்கு அழைப்பு வந்தது. அவர் என்னை அம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். என்னுடன்  குப்பு.வீரமணி, தஞ்சை இரெத்தினகிரியின் தம்பியும், தற்போது தஞ்சை 'கிங் பொறியியல் கல்லூரி' நிர்வாக அதிகாரியுமான அண்ணாமலையும்  உடன் வந்தனர். விசாகப்பட்டிணத்தில் இருந்த பல்கலைக்கழக அரங்கில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அரங்கில் பல்வேறு நக்சலைட் குழுக்களின் ஆதரவாளர்களாயிருந்த மாணவர்களும், கல்லூரி ஆசிரியர்களும் அரங்கு முழுவதும் நிரம்பியிருந்தனர். மார்க்சியம்லெனினியம் தொடர்பான மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளை விளக்கி, அந்த பின்னணியில் பெரியாரின் நிலைப்பாடுகளை விளக்கினேன். எனது உரை முடிந்து, அடுத்து இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளின் ஊடேயும், உணவு இடைவேளைகளிலும், இரவு படுக்கப் போகும் வரையும், காலையில் விழித்து எழுந்து, காலை உணவை முடித்தது முதல், கடைசியாக விசாகப்பட்டிணத்தில் இரயிலில் ஏறும் வரை, என்னை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு,  அந்த நக்சலைட் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு, பதில் பெறுவதிலும், என்னிடம் கையெழுத்து பெறுவதிலும் (Autograph), என்னை முழ்கடித்தனர்.  ஆக தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்',  ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது , ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.'முக்கியத்துவ'ப் போதை என்பது 'திராவிட மனநோயாளியாக' வளர்வதற்கான நுழைவு வாயில் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டில் அந்த போதையாளர்களுக்கு எனது சமூக வட்டத்தில் இடம் அளிக்காமல் வாழ்வதும் அந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தான்.’ (‘உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

அவ்வாறு மீடியா வெளிச்சத்தை தவிர்த்து வாழ்ந்து வந்த நான், குட்டி ரேவதி மூலம் கீழ்வரும் நெருக்கடியையும் சந்தித்தேன்.

சில வருடங்களுக்கு முன் தொலைபேசியில் தன்னை 'குட்டி ரேவதி' என்று அறிமுகம் செய்து, எனது 'தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்' நூலை படித்ததாக கூறி, அந்நூலின் சிறப்புகளை நீண்ட நேரம் விவரித்தார்; அநேகமாக அந்நூலை முழுவதும் ஆழ்ந்து படித்து பலன் பெற்ற ஒரே கவிஞராக, அவர் இருந்தாலும் வியப்பில்லை.

ஒளிப்பதிவில் என்னை பேட்டி கண்டு ஆவணப்படுத்த, தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்னையில் சந்தித்த போதும், அவர் பெரிதும் முயற்சித்தும் நான் மறுத்து விட்டேன். உரையாடலை ஒலிப்பதிவு செய்து கொள்ள மட்டும் அனுமதித்தேன்

தமிழ்நாட்டில் சாமான்யனாக வாழும் சுகமானது, 'மீடியா வெளிச்சம்' மூலம் சிறைக்கூடமாகி விடும் என்ற அபாயத்தை உணர்ந்தவன் நான். சாமான்யனாக வாழும்போது உணரும் 'சமூக சிக்னல்கள்' எல்லாம், மீடியா வெளிச்சத்தில் 'பிரபலமாக' வாழ்பவர்களுக்கு கிட்டாது. ஒர் இசைத்திட்டத்தினை (Music Project) மேற்கொள்வதற்காக இளையராஜாவை பல முறை சந்தித்த காலத்தில், அவரிடம் அதனை தெரிவித்த போது, அவரும் அந்த அபாயத்தில், தான் சிக்கியுள்ளதை ஒத்துக்கொண்டார்.

தமிழ் மொழியியல் தொடர்பான எனது மடலுக்கு பதில் அனுப்பிய நோவாம் சோம்ஸ்கி (https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky );

மனிதரின் அடையாளச் சிக்கல் (Identity Crisis)  தொடர்பாக, தமிழ்நாட்டில் .வெ.ராவால் விளைந்த பாதிப்புகள் குறித்து நான் எழுதிய மடலுக்கு பதில் அனுப்பிய அமர்த்த்யா சென் (https://en.wikipedia.org/wiki/Amartya_Sen );

பழந்தமிழ் இலக்கியங்களில்இசை இழை’ (Musical Threads) பற்றிய எனது கண்டுபிடிப்பானது எவ்வாறு 'நுண்ணொலி'யுடன் தொடர்புடையது? என்று விளக்கிய எனது மடலுக்கு பதில் அனுப்பி பாராட்டிய, நுண்ணொலி (Microsound) ஆய்வின் பிதாமகனாக அமெரிக்காவில் வாழும் 'கர்டிஸ் ரோட்' (https://en.wikipedia.org/wiki/Curtis_Roads );

உள்ளிட்ட இன்னும் பல வெளிநாட்டு பிரபலங்கள் எல்லாம், சாமான்யனா? பிரபலமானவனா? என்ற பாகுபாடின்றி, தமது ஆர்வ புலம் தொடர்பாக, அறிவுபூர்வமாக வரும் மடல்களுக்கு பதில் எழுதி, பாராட்டத்தக்கவையாக கருதுபவற்றை பாராட்டி ஊக்குவிப்பவர்கள்

என்பதை அனுபவபூர்வமாக அறிவேன். இந்தியாவிலும் 'பிரபல' பிராமணர், பிராமணரல்லாதோர் உள்ளிட்ட‌ தமிழ் எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் உள்ளிட்டு, அது போன்று எவரும் உள்ளார்களா? என்ற ஆய்வு நோக்கில், பலருக்கும்’ ஈமெயில்’ (Email)  அனுப்பியிருக்கிறேன்; 'காலனிய மனநோயாளிகளும், திராவிட மனநோயாளிகளும்' பற்றிய (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  ) எனது தொடர் ஆய்வின் ஒரு பகுதியாக. 'முற்போக்கு, புரட்சி' எழுத்தாளர்களும், கவிஞர்களும், என்னை யாரென்று தெரியாமல், மைக்ரோ உலக சாமான்யராக 'மட்ட‌மாக' அணுகியதையும் 'பரிசோதனையாகவே' அனுபவித்துள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

இந்தியாவில் விதி விலக்காக‌, அவ்வாறு எனக்கு பதில் போட்டு இன்ப அதிர்ச்சி தந்தவர் குருமூர்த்தி ஆவார். அவருக்கு நான் எழுதிய மடலுடன், மேலே குறிப்பிட்ட கீழ்வரும் பதிவினையும் அனுப்பியிருந்தேன்.

‘ கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்

பின் 'திருவாசகம் சிம்பொனி' தொடர்பாக எனக்கும் பாதிரியார் கஸ்பாருக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பின், அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. தமது கொள்கைகளிலிருந்து மாறுபட்டு பயணிப்பவர்களையும் மதித்து, அறிவுபூர்வமாக உரையாடுபவர் அவர் என்பது தெரிந்து, இருவரும் ஒருவரையொருவர் மிகவும் மதித்து பழகத் தொடங்கினோம். சில மாதங்களுக்கு முன், பெங்களுரில், இசையில் ஆஸ்கார் விருதாக கருதப்படும் 'கிராமி அவார்ட்' (Grammy Award) வாங்கிய ரிக்கி கேஜ்ஜை (https://en.wikipedia.org/wiki/Ricky_Kej) சந்தித்த போது, குருமூர்த்தியின் மேலே குறிப்பிட்ட அரிய பண்பினை மிகவும் பாராட்டி விளக்கினார்.

தமிழ்நாட்டிற்கு நேர்ந்துள்ள பாதிப்புகளை எல்லாம், காலனியத்திற்கு முன் இருந்த நிலைமைகள் முதல் தொடங்கி, காலனிய சூழ்ச்சியில் சிக்கி .வெ.ரா அவர்கள் பயணித்து, அவரும் அதனால் பாதிக்கப்பட்டு, தமிழும், தமிழ்நாடும் எவ்வாறு சீரழிந்தது? என்பதை துக்ளக்கில், அறிவுபூர்வமாக தொடர்கட்டுரைகளாக வெளியிடுமாறு, அவர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கும் உழைத்து வருகிறேன். இடையில் என்னை துக்ளக்கில் அறிமுகப்படுத்திய கட்டுரைக்கு, எனது புகைப்படத்தினை வெளியிட கேட்டபோது  அதனை மறுத்தேன்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட‌ 'தமிழிசைக் கலை களஞ்சியம்' தொகுப்பில் என்னைப்பற்றிய பகுதியில் வெளியிட, தொகுப்பாசிரியர் வீ.பா.கா சுந்தரம் எனது புகைப்படம் கோரியபோது மறுத்து, எனது புகைப்படம் இன்றியே வெளிவந்துள்ளது போல

இந்த முறை எனது மறுப்பில் நான் தோற்றேன்; சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும்அமைதியானது முடிந்தால் தான், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி எளிதாகும்  என்பதால்.

மேலே குறிப்பிட்ட 'அமைதி'யின் மூலமாகவே தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியானது நீடித்து வருகிறது. (‘தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

'தமிழ்நாட்டில் அறிவுப் புலத்தில் உள்ள கீழ்வரும் நோயை அடையாளம் கண்டு தீர்ப்பதற்கான முயற்சி இனியும் தாமதமாவது நல்லதல்ல. ஏனெனில்,  'எது அறிவு பூர்வமானது?' 'எது குப்பை?' என்று பிரித்துணர்வதே சிக்கலாகும் அளவுக்கு, 'இரைச்சலும், சிக்னலும்' பிரித்துணர முடியாத தகவல் பரிமாற்ற சிக்கலில்  தமிழ்நாடு மீள முடியாமல் சிக்க நேரிடும். 

எது அறிவுபூர்வமானது? எது அபத்தமானது? என்பது பற்றிய குழப்பம் இருப்பது ஒரு சமூகத்தில் அறிவுப்புலத்திற்கு ஆபத்தானதாகிவிடும். அதன்விளைவாக குப்பையில் இருக்க வேண்டியது கோபுரத்திற்குப் போக, கோபுரத்தில் இருக்க வேண்டியது குப்பைக்கு போக வேண்டியதாகி விடும். சமுகப் பயணத்தின் 'என்ஜீனாக'(Engine)  இருப்பது அறிவுப் புலம் ஆகும். அது 'குப்பைகளின்' கரங்களில் சிக்கியபின், அந்த சமூகம் இழிவான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது.' (‘'தமிழிசை மீட்பு' – தவறுகள்’; https://groups.google.com/forum/#!topic/minTamil/hrOOYG68Z1w )

சமூக குப்பைகளின் கரங்களில் சிக்கியிருந்த, புலமை தொடர்பான அந்த 'சமூக என்ஜீனை' (Social Engine) மீட்கும் தனிமனித இராணுவமாக முயற்சித்து வந்த நான், துக்ளக் மூலமாக மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளேன்; சமூக சூழலும் வெற்றிக்கான திசையில் கனிந்து வருவதால்.

No comments:

Post a Comment