Thursday, October 13, 2016

ஈ.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கான’ அளவுகோலின்படி,

நமது  'யோக்கியதை '  எப்படி?


1925-இல் காங்கிரசிலிருந்து ஈ.வெ.ரா வெளியேறி, 'குடி அரசு' இதழை தொடங்கி, காங்கிரஸ் எதிர்ப்பு போக்கில் பயணித்த காலத்தில், கீழ்வரும் கருத்தை வெளியிட்டார்.

“இந்திய தேசிய காங்கிரஸ் எனும் ஒரு தேசிய வியாபார லிமிடெட் கம்பெனியானது, அது ஏற்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அந்த தேசிய வியாபாரக் கம்பெனியில் நிர்வாக ஸ்தானம் வகித்தவர்களுக்கெல்லாம் பெரும்பான்மையாய் அய்கோர்ட் ஜட்ஜ் உத்தியோகமும், நிர்வாக சபை அங்கத்தினர் பதவியும், மற்றும் அதில் சார்ந்த பங்காளிகளுக்கெல்லாம், ஜில்லா ஜட்ஜ், சப் ஜட்ஜ் முதலிய உத்தியோகப் பதவிகளும், மற்றும் பட்டம், கவுரவ உத்தியோகங்கள் தொழில் விருத்தி ஆகியவைகளும் தாராளமாக கிடைத்து வந்தது யாவரும் அறிந்ததேயாகும்.

இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அநேகர் இவ்வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததன் பின், லிமிடெட் கம்பெனியாய் இருந்ததானது, அன்லிமிடெட் கம்பெனியாகி, அதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரம், ஒரு தரத்தாருக்கு மாத்திரம், என்று வரையறுக்கப்பட்டு, இருந்ததானது மாறி, எல்லா வகுப்பாருக்கும், எல்லா தரத்தாருக்கும், அதில் பங்கு எடுத்துக் கொள்ள சவுகரியம் ஏற்பட்டு, பிறகு அதற்கு அநேக கிளை ஸ்தாபனங்களும் உண்டாகி, இப்போது வரவர பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே,  வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய, அதாவது தங்களது யோக்கியதைக்கும், தகுதிக்கும், எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தை, பயனை, அடையும்படி செய்து விட்டது.” ;- குடி அரசு 1 - 2 – 1931

1949- இல் தி.கவிலிருந்து பிரிந்து, தி.மு.க உருவான பின், தி.மு.க எதிர்ப்பு போக்கில்,  ஈ.வெ.ரா பயணித்த காலத்தில் வெளியிட்ட கருத்து அடுத்து வருகிறது.

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செல்வத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962 ( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் ) 

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, அதை ஈ.வெ.ராவும் அங்கீகரித்து(?), பாராட்டி(?), பயணித்த போக்கில், அண்ணாவின் மறைவிற்குப்பின், தி.மு.கவானது, அவ்வப்போது, தேர்தல் கணக்குகளின் அடிப்படையில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பயணித்த போக்கில், மேற்குறிப்பிட்ட இரண்டு அபாய அறிவிப்புகளும் 'சங்கமமாகி';

மேற்குறிப்பிட்ட 'சுயநல கள்வர்களான' பொதுத் தொண்டர்கள், எவ்வாறு 'பெரியார்' முகமூடியில் அரங்கேறினார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும். ( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) திராவிட இயக்க வரலாற்றில், சமூக ரத்த ஓட்டத்தில்,  லாப நட்டம் பார்க்கும், 'கள்வர் பண்பு' நுழைவதற்குக் காரணமான, அந்த ' திராவிடத் திறமைசாலிகளின்' வளர்ச்சியானது, திரைப்படத் துறையில், குறிப்பாக, 'வேலைக்காரி', 'பராசக்தி' போன்ற திரைப்பட வெற்றிகளின் பலப் பின்னணியில் வளர்ந்ததா?

தமிழக அரசியலில் திரை உலகச் செல்வாக்கும், குடும்ப அரசியல் செல்வாக்கும், -ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும்-, இந்தியாவிலோ, உலகிலோ, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, எவ்வாறு தோன்றி வளர்ந்தது? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது. (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html)

இன்று நாமோ அல்லது நமக்கு வேண்டியவர்களோ, எந்த கட்சியில் இருந்தாலும்;

நாம் ஒவ்வொருவரும், நமது ‘யோக்கியதையை',

சுயவிமர்சனம் செய்து, நம்மிடம் உள்ள குறைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்து, பயணிக்கவும்;

அதை செய்யாமல், சமூகத்திற்கு கேடாக பயணிக்கும், 'பொதுத் தொண்டர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கவும்;

மேற்குறிப்பிட்ட மேற்கோள்கள் துணை புரியும். 

தமக்கு விளையும் இழப்புகளை ஏற்றுக்கொண்டு;

'அந்த ஊழல் கொள்ளையர்களை' ஒதுக்கி வாழ்பவர்களை, நடுத்தர, ஏழை மக்களில் கணிசமானோர், மதிக்கும் போக்கானது, தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அரசியல் நீக்கம் காரணமாக;

சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது' (Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)

உயர் நடுத்தர(upper middle class), பணக்கார (affluent)  வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை' (Comfort Zone) விட்டு விலகி,  பார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை 'தாமதமான' வால்களாக்கி;

இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவிய‌ போக்கானது,

 சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெளிப்பட்டது.

அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, அந்த போக்கானது, மேற்குறிப்பிட்ட விசாரணையை தூண்டுவிக்கும் காலமானது, எதிர்பார்ப்பதை விட, விரைவாகவே நடந்தால், வியப்பில்லை. அதில் சந்தேகம் உள்ளவர்களின் பார்வைக்கு;
https://www.youtube.com/watch?v=pKWvSJNN3vo&feature=youtu.be

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும் என்பதை மேற்குறிப்பிட்ட உரையானது, சுட்டிக்காட்டியுள்ளது.


'பெரியார், அண்ணா, காந்தி, நேரு' போன்ற பிம்ப வழிபாடுகளை ஊக்குவித்து, பயணிக்கும் இன்றுள்ள கட்சிகள் எல்லாம் சாதாரண மக்களிடமிருந்து, எந்த அளவுக்கு அந்நியமாகியுள்ளார்கள்? என்பதை அறிய;
https://www.youtube.com/watch?v=6uzEmrKLj4k

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும், காவிரிப் பிரச்சினையில் வன்முறையைத் தூண்டி வரும் 'பைத்தியங்களை' (?), இரண்டு அரசு ஆட்சியாளர்களும் கைது செய்ய வேண்டும்? என்ற கோரிக்கையை  RJ பாலாஜி முன் வைத்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=lu9Dk72xAcw

அது சாத்தியமா? என்ற கேள்விக்கு, விடை காண;
http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html

http://tamilsdirection.blogspot.in/2016/09/blog-post.html

 http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_13.html




No comments:

Post a Comment