Sunday, October 14, 2018

தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும் (3)

 

'தர அடையாளம்'(benchmark) தாழ்ந்தவர்களுக்கு, 'தமிழ்' கவசமாக நீடித்ததும், முடிவுக்கு வருகிறது


தமிழ்நாட்டில் உள்ள புலமைக் குறைவின் விளைவாக, 'கருத்தில் குறைபாடும்', 'வாதத்தில் குறைபாடும்', 'உணர்ச்சிகர' பேச்சுகளில் 'காணாமல்' போக, அதைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமல், உணர்ச்சிகரமாக கைத்தட்டுபவர்கள் அரங்கில் இருக்கும் காட்சிகள், தமிழ்நாட்டில் நிறைய உண்டு. அவற்றில் பல இணைய தளங்களில் இடம் பெற்று,  ஆய்வாளர்களுக்கு அரிய தடயங்களாக உள்ளன.

இதில் வியப்பென்னவென்றால், 'தமிழுணர்வு, சாதி/ சாதி எதிர்ப்பு உணர்வு, மத/ மத எதிர்ப்பு  உணர்வு' என்ற அடிப்படைகளில்  எதிரெதிராக செயல்படும் அமைப்புகளில் உள்ள பல பேச்சாளர்கள் இது போன்ற தவறுகள் புரிவதில் ஒன்றுபட்டுள்ளார்கள். அவர்கள் பேச்சுகளுக்கு கைதட்டும், எதிரெதிதிரான மனநிலையில் உள்ள அரங்கத்தினரும், இந்த வகையில் ஒன்றுபட்டுள்ளார்கள்.பொது அரங்கில் விவாதிக்கப்படும் பொருள் பற்றிய, தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல், விவாதப் பொருளை விட்டு, 'அத்துமீறி' வெளியேறி, விவாதிப்பவர் மீது குறைகாணும் நோயிலும், அத்தகையோர் ஒன்றுபட்டுள்ளார்கள். அந்நோயில் சிக்கியவர்களில், சிலர், பிறரின் அறிவு உழைப்பின் மூலம் வெளிப்பட்ட தகவல்களை, 'அரைகுறையாக' புரிந்து கொண்டு, தம்மை 'அதிபுத்திசாலியாக'  காட்டிக்கொள்ள, 'விவாதிப்பவர்கள் அனைவருமே, - தம்மையும் அதில் சேர்த்து - புரிதல் அற்றவர்கள்' என்று 'அறிவிப்பவர்களும்',  இருக்கிறார்கள். புலமை வீழ்ச்சிக்கு, இந்நோய் வழங்கியுள்ள பங்களிப்பும், ஆய்விற்குரியதாகும்.’ (‘தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்(1)’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ அரங்கமானது, தமிழ்நாட்டில் 1967க்கு முன், என்னைப் போன்ற தி.மு. ஆதரவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நிறைந்திருந்த தி.மு. சார்பு அறைக்கூட்டங்களில், பொதுக்கூட்டங்களில் மட்டுமே காண முடிந்தது

காமராஜர் ஆதரவுப் போக்கில் பயணித்த என் தந்தையும், அவரது நண்பர்களும், தி.மு. பேச்சாளர்களை சமுகத்திற்குக் கேடான இழிவானவர்களாக கருதி, என்னைப் போன்றமாணவர்கள் 'முதிர்ச்சியின்றி', அவர்களின் 'கவர்ச்சிகர' பேச்சுக்களில் 'மயங்கி' இருப்பதாக கருதி இருந்தார்கள். அதே நேரத்தில், பெரியவனான பின், என்னைப் போன்றவர்கள் திருந்தி விடுவோம், என்று கருதி, உயர்நிலைப்பள்ளி/கல்லூரி மாணவர்களாயிருந்த என்னைப் போன்றவர்களுடன், எனது தந்தை உள்ளிட்ட பெரியவர்கள் எல்லாம்;

எஙகளுடன் அவ்வப்போது விவாதித்து, அந்த தவறானப் போக்கிலிருந்து விடுவிக்க முயற்சிக்காம‌ல்,‌ 'அலட்சியமாக' இருந்ததே;

கீழ்வரும் விளைவுகளுக்கு காரணமானது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

1967இல் தி.மு. ஆட்சியைப் பிடித்து, இன்று தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கி, மிகவும் படித்த, உயர் பதவிகளில் இருந்த, மிகுந்த வசதியான தமிழர்களும் கூட, 'புத்திசாலி ரவுடி வீரமணிகளை' துதிக்கும் அளவுக்கு சீரழிந்து; (http://tamilsdirection.blogspot.com/2018/02/ )

அவர்களை எல்லாம் 'முன் மாதிரியாக'(Role Model) கொண்டு, 'தன்மானமிழந்து பிழைக்கும்' போக்கில் தமிழர்களில் பலர் சீரழியவும்;

சங்க காலம் முதல் சரியாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகளும், ஆறுகளும், மலைகளும் ஊழல் சுனாமியில் சிக்கி, 'தனித்துவமாக'(Unique) தமிழ்நாடு உச்சக்கட்ட சீரழிவில், திருப்பு முனையை எதிர்நோக்கியுள்ளது. (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?  வீழ்ந்து வருகிறார்களா?’ http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html  )

கீழ்வரும் தகுதியின் அடிப்படையிலேயே, மேலே குறிப்பிட்ட ஆய்வுமுடிவுகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் உயர்நிலைப்பள்ளி படித்த காலத்திலிருந்து சுயலாப நோக்கற்ற தி.மு. ஆதரவாளராக பயணித்து, 1965 (அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி மாணவன்) முதல் (1967-இல் தி.மு. ஆட்சிக்கு வந்தும் தொடர்ந்த- பலருக்கும் தெரியாத) 1968 வரை திருச்சியில் மாணவர் தலைவர்களில் ஒருவராக‌, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று, பின் 1969இல் மு.கருணாநிதி முதல்வராகி, .வெ.ரா, அண்ணா பிறந்த நாட்களை விட, தனது பிறந்தநாளை அதீத முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடியது; 'டாக்டர்' பட்டம் வாங்க அநியாயமாக அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் பலியாகி, 'இறந்தது என் மகனல்ல' என்று அவரின் தந்தையை நீதி மன்றத்தில் சொல்ல வைத்தது; நான் படித்த கல்லூரியின் கிளைவ் மாணவர் விடுதிக்குள் காவல்துறை புகுந்து காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தியது (முக்கிய தி.மு. புள்ளிக்கு நெருக்கமான ஆசைநாயகியின் பருவ வயது மகளை, அந்த விடுதி மாணவர்களில் சிலர் கேலி செய்ததால், அது நடந்ததாக அப்போது கேள்விப்பட்டேன்); ஆகிய காரணங்களால் தி.மு.க- வை வெறுத்து, இன்று வரை எந்த அரசியல் கட்சியிலும் ஒட்டாமல் பயணித்து வருகிறேன்.

எனது தந்தை உள்ளிட்ட பெரியவர்கள் எல்லாம் 1967க்கு முன், உயர்நிலைப்பள்ளி/கல்லூரி மாணவர்களாக தி.மு. ஆதரவுப் போக்கில் பயணித்த தமது பிள்ளைகளிடம், அவ்வப்போது விவாதித்து, அந்த தவறானப் போக்கிலிருந்து விடுவிக்க முயற்சிக்காமல், 'அலட்சியமாக' இருந்திலிருந்தும்;

அதற்குப்பின் பெரியவர்களாக இருந்தவர்களில், 'சில புத்திசாலிகள்' தாமும், தமது குடும்பப்பிள்ளைகளும் எந்த போராட்டங்களிலும் பங்கேற்காமல், குப்பன் சுப்பன் வீட்டுப்பிள்ளைகளாகப் பார்த்து, காவு கொடுத்து பயணித்த தி.மு.கவை ஆதரித்துக் கொண்டு, 'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு'  தமிழ் ஆதரவாளர்களாக பயணித்ததிலிருந்தும்;

உரிய பாடங்கள் கற்று, நான் பயணித்து வருகிறேன்.

உணர்ச்சிபூர்வ சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்கும் நோக்கில், திருக்குறள்(4) வழியில், பாரபட்சமற்ற, சுயலாபநோக்கற்ற, அறிவுபூர்வ விமர்சனங்களை, எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் முன்னெடுத்து வருகிறேன். தமிழ்நாட்டில் என்னைப் போன்றே பயணிப்பவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகும்.

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ.பா. சுந்தரம், பாரதி, 'பெரியார்' .வெ.ரா, அண்ணா உள்ளிட்ட இன்னும் பலரை நான் அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை, தனிப்பட்ட முறையில் அவர்களை எல்லாம் இழிவுபடுத்துவதாகவோ, கண்டிப்பதாகவோ கருதினால், அது புலமை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். அறிவியல் துறையில் அத்தகையோர்' அறிவிலிகளாகவே' வெளிப்படுவார்கள்


'தமிழ்ப்புலமையாளர்களின் சான்றுகள் நம்பத்தக்கவையல்ல‌' என்று உலகப்புகழ் பெற்ற செல்டன் பொல்லாக் தமது நூலில் அறிவித்து, அதன் அடிப்படையில் 'மணிப்பிரவாள' காலத்திற்க்குப் பின் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்கள் உருவாகின; (http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html)

என்று அறிவித்துள்ளதையும் கணக்கில் கொள்ளாமல், மறுக்காமல் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் பயணித்து வருகிறார்களா? அதுவே நிகழ்கால தமிழ்ப்புலமையின் வீழ்ச்சியின் அறிகுறியா? தமிழ்த் தொடர்பாகவும், உலகப்பிரச்சினைகள் தொடர்பாகவும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தமிழ்ப்புலமையாளர்களில் எவராவது, அதனைப் பற்றி ஏதாவது கருத்து வெளிப்படுத்தினார்களா? இனியாவது வெளிப்படுத்துவார்களா? துணைவேந்தர் பதவிகளும், பேராசிரியர் பதவிகளும் 'ஏலத்திற்கு' உள்ளானதன் விளைவா இது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்
 

'தமிழினத்தின் அடையாளம்' என, கவிஞர் வைரமுத்துவை சொல்லும் சீமானுக்கு, அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது; 'வைரமுத்துவை தமிழினத்தின் அடையாளம்' எனக் கூறுவது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இழுக்கு.’ (http://www.dinamalar.com/news_detail.asp?id=2124961 ) அது மட்டுமல்ல, மேலே குறிப்பிட்ட தமிழ் தொடர்பான செல்டன் பொல்லாக்கின் கருத்தை மறுக்காத, பாடல் எழுத்தொலியின் சுருதிச் சுத்தம் பற்றிய எனது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்காத(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html), தான் பயன்படுத்திய சான்றின் நம்பகத்தன்மையைக் கூட அறியாமல், ஆண்டாளை இழிவுபடுத்திய(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html  ) வைரமுத்து தமிழின அவமான அடையாளமா? என்ற விவாதத்தினை இனியும் இருளில் நீட்டிக்க முடியுமா?

தமிழ்நாடானது, 'புலமை எதிர்ப்பு' சமூக நோயிலிருந்து மீளும் காலம் துவங்கி விட்டது. தமிழ் இலக்கியங்களை கேலி, கிண்டல் செய்யும் போக்குகள் எல்லாம் சமூக சருகாகி உதிர்வதும் துவங்கி விட்டது. பழந்தமிழ் இலக்கியங்களின் வலிமையில், சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் எனது ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன. (‘தமிழகப் பல்கலைக்கழகங்களின் 'மொழியியல்', 'இசை' துறைகள் 'வாலாக' பயணிக்கலாமா? மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'; http://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html
 
ஆட்சியில் இருந்த முதல்வர்களின் கால்களில் விழுந்து வணங்கி, மாணவர்களுக்கு மோசமான முன்மாதிரிகளாக இருந்த துணைவேந்தர்களும்,  'முக்கியத்துவ' போதையில் சிக்கி, தமக்கு புலமையில்லாத துறை ஆய்வுத்திட்டங்களில் ஆய்வாளர்களை 'முட்டாள்த்தனமான' கேள்விகள் கேட்டு அவமதித்தவர்களும், ஆட்சியில் இருந்த கொள்ளையர்களுக்கு நேசமாக பயணித்தவர்களும்,  அந்த 'கறைகளையெல்லாம்'  மறைத்து, 'தமிழ்ப் பற்றாளர்களாக' வலம் வரும் போக்கும், இன்னும் அதிக காலம் நீடிக்க முடியாது;  

டிஜிட்டல் யுகத்தில் அடுத்து அடுத்து எல்லா துறைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம், 'மீ டூ' (Me too) இயக்கம் மூலம் வெளிவரும் போக்கு துவங்கி விட்டபடியால்;('மீ டூ' (Me too) இயக்கம் தடம் புரள்வதைத் தடுக்கும் அபாய எச்சரிக்கைகள்;https://www.quora.com/What-are-some-criticisms-of-the-Me-Too-social-media-campaign )


'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா ஆதரவு' கவசங்கள் எல்லாம் குற்றவாளிகளைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு செல்லரித்து வருவதாலும்


பொதுவாழ்வு வியாபாரிகளின் கவசமாக செயல்பட்டு, தமிழும் தமிழுணர்வும் மாணவர்களின் கேலிப்பொருளாகி வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/06/  ) மேலே குறிப்பிட்ட நபர்கள் முன்னிலை வகிக்கும் தமிழ் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக 'தமிழின் தர அடையாளமானது'  இன்னும் மோசமாகாதா?

தமது உள்மறை வேலைத்திட்டத்திற்கு(Hidden Agenda) ஒத்து வராத புலமையாளர்களை எல்லாம் ஒதுக்கி பயணிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கு காரணமாகி வருகின்றன;

என்பதும் எனது அனுபவமாகும். எனவே எனது ஆய்வுகளின் வெற்றிகள் மூலமாக, தமிழ்ப்புலமையும், 'அந்த' சிறைகளில் இருந்து விடுதலை ஆகும் காலமும் நெருங்கி வருகிறது.(‘ தமிழ்நாட்டில் 'புலமை எதிர்ப்பு' சமூக நோய்க்கு, இனி இடம் இருக்காது’; http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) 

இந்துத்வா ஆதரவு/எதிர்ப்பு உள்மறைத்திட்டங்களுடன் (Hidden Agenda) செயல்பட்டு வந்த உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மூலமாக, உணர்ச்சிபூர்வ அலையில் தமிழ்நாட்டில் வர்ந்து வந்த 'புலமை வறட்சி'யானது, முடியும் காலமும் நெருங்கி விட்டது. இந்தியாவில் பா.ஜ.க உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் 'கட்சிகளின் சுயலாபங்களுக்காக தேச கட்டுமானத்தினை (Nation Building) சீர்குலைத்து வருவதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (‘Fringe Mechanism derailing the Indian Nation Building Process’; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html

மேற்கத்திய 'பொருள் திரிபு சூழ்ச்சி வலையில்', தேசக்கட்டுமானமானது சிக்கி (‘The Semantic Trap of the ‘Western Paradigm Prison’’; http://veepandi.blogspot.com/2017/07/are-seculars-liberals-in-india-losing.html ), சீரழிவதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். சுயலாப சமூகப்பற்றுடன் முற்போக்கு வேடத்தில், ஊரான் வீட்டுப்பிள்ளைகளைக் காவு கொடுத்து பயணித்த பிரிவினைப் போக்குகளே தமிழ்ப்புலமையின் சீரழிவிற்கும் காரணமானது. எனவே தமிழ்ப்புலமையின் மீட்சியானது அதற்கு எதிரான திசையில் 'தேசக்கட்டுமானம்'  நோக்கியே பயணித்தாக வேண்டும்.  எனவே 'பிரிவினை' போக்குகளில் தமிழ்நாட்டில் விளைந்த 'புலமை வறட்சியானது' முடிவுக்கு வந்து, புலமை மீட்பு முயற்சிகள் வளரும் போக்கில், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, தமிழ்நாட்டில் சரியான தேசக்கட்டுமான திசையும், அம்முயற்சிகளின் கூடுதல் பலன்களாக(Byproduct), தெளிவாகி வருகிறது; திருக்குறள் (573) வழியில் கண்ணோட்டம் உள்ளவர்களுக்கு.

No comments:

Post a Comment