Monday, October 10, 2016

தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை  சீரழிவிலிருந்து,  விடுவிக்கும் 'காலனிய நீக்கம்' (Decolonizing)?


காலனி ஆட்சியில் அடிமைப்பட்டு, விடுதலையான நாடுகளில் வாழும் மக்கள், குறிப்பாக படித்தவர்கள், தம்மையறியாமலேயே, காலனிய மன அடிமைகளாக எவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்? அந்த நோயிலிருந்து,  எவ்வாறு விடுதலை  பெற முடியும்?

அந்த விடுதலை முயற்சிகளுக்கு, அந்தந்த நாட்டு மக்களின் கடந்த காலம் பற்றி, காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்த 'கருத்தாக்கங்கள்' பற்றியும், அதற்காக அவர்கள் ஆதரித்து வளர்த்து வரும் 'அருங்காட்சியகங்கள்' பற்றியும், எந்தெந்த வழிகளில் மறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி, ஆக்கபூர்வமான வருங்காலத்திற்கு வழிகள் காண முடியும்? என்பது பற்றிய உலக  ஆய்வுகள் பல வெளிப்பட்டு வருகின்றன.

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்டு காலனி ஆட்சி புரிந்த நாடுகள் எல்லாம், தாம் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளிலிருந்தும், அகதிகளாகவும் குடியேறி, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்று, இன்று எண்ணிக்கையிலும், செல்வம்‍ செல்வாக்கிலும்,  அவர்கள் பெற்று வரும் வலிமையில், கடும் சிக்கல்களை, காலனி ஆட்சி புரிந்த நாடுகள், எதிர்நோக்கியுள்ளன.

அந்நாடுகளில் வாழும் 'வெள்ளையர்கள்' 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கி, நிறவெறி அமைப்புகள் எல்லாம் வலிமை  பெற்று வருகின்றன; மேற்கத்திய நாடுகள் முன்வைத்த 'மனித உரிமை'களை கேலிப்பொருளாக்கி.

எனவே மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய நெருக்கடியில், அந்நாட்டு அரசுகள் இருக்கின்றன.

அந்த நோக்கில், பிரிட்டன் அரசானது;

‘Arts and Humanities Research Council’ (AHRC) என்ற அமைப்பை நடத்தி வருகிறது.

அந்த அமைப்பின் நிதி உதவியில், ‘Utopian Archives: Excavating Pasts for Postcolonial Futures’ என்ற தலைப்பில், 2012 - 2014 கால இடைவெளியில், நான்கு பட்டறைகளை (Workshop) நடத்தியுள்ளனர். அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் முக்கியமானவற்றை தேர்ந்தெடுத்து, கீழ்வரும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

காலனிய அடிமைகளாக இருந்த மக்களின் பார்வையில் படாமல், இரகசியமாக இருந்தவையும், இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளதும் அந்த ஆய்வுகளில் வெளிவந்துள்ளன.

(Some of these claims are for access to the historical truths hidden in those archives, evidence of torture and maltreatment. This is the case for the ‘migrated archives’ of the British Empire that have for decades been hidden from, and made inaccessible to, their postcolonial claimants (Anderson 2011Anderson, David. 2011. Mau Mau in the High Court and the ‘lost’ British Empire archives: Colonial conspiracy or bureaucratic bungle?Journal of Imperial and Commonwealth History 39: 699716. doi:10.1080/03086534.2011.629082[Taylor & Francis Online], [Web of Science ®]). Other claims are not for specific data, but for a reappropriation of the archive as a system of knowledge. Indeed, the current postcolonial claim to the archive should be situated in a wider epistemological shift that comprehends the archive as an instrument for the production of knowledge.)

காலனிய நீக்கம் (Decolonization)  தொடர்பாக, பல்கலைக்கழகங்கள் மட்டங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுமுறைகளுக்கு (Research Methodologies) மாற்றாக;

கள அடிமட்ட ஆய்வு முயற்சிகள் - grassroots  research  collectives-  மூலம், மாற்று ஆய்வு முறைகள் உருவாகி வருவது பற்றியும் ஆய்வுகள் வெளிப்பட்டு வருகின்றன. http://decolonization.org/index.php/des/article/view/19113/16236

காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம் உள்ளிட்டவையெல்லாம், 'காலனியமய' (Colonizing) சூழ்ச்சியில் சிக்கி, இழிவுபடுத்தப்பட்ட போக்கினை எதிர்த்து, அவற்றை 'காலனிய நீக்கம்' (decoloizing)  மூலம் விடுவிக்கும் ஆய்வுகளும் உலகில் அரங்கேறி வருகின்றன.

கிராமங்களிலும், தமிழ்/திராவிட தலைவர்கள், ஆதரவாளர்கள் குடும்பங்களிலும், 'அம்மா, அப்பா' மறைந்து, 'மம்மி டாடி' அரங்கேறும் அளவுக்கு, 'காலனியமாக்கல்' நோயில், தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி குடும்பங்களில், அவரவர் தாய் மொழிகளிலேயே 'அம்மா, அப்பா' சொற்கள் வலம் வருகின்றன.

அமெரிக்காவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா(http://rajivmalhotra.com/), தரம்பால் (https://en.wikipedia.org/wiki/Dharampal) போன்ற இன்னும் பல அறிஞர்கள் மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், இந்தியாவை விடுவிக்கும் முயற்சிகளில், அறிவுபூர்வமான விவாதங்களை, வியக்கும் வண்ணம் முன்னெடுத்து வருகிறர்கள். 

ஆனால் அவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கும் புலமை அளவுக்கு தமிழில் இல்லாதது பெருங்குறையாகும்.

எனவே மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்க, அம்முயற்சிகளில் முக்கிய இடம் இல்லை.

இசையில் செவ்விசை/நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளும், 'தீண்டாமையும்' காலனியத்தின் நன்கொடைகள், என்பதை எனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html

அதே போல, பழந்தமிழ் இலக்கியங்களில், நான் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ள, ‘தமிழிசையியல்’ (Tamil Musicology) பற்றியும் (http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13), தொல்காப்பியத்தில் இசை மொழியியல் பற்றியும் (Musical Linguistics; http://musictholkappiam.blogspot.in/ ), வெளிவந்துள்ளவை எல்லாம் ;

மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்க துணை புரியும்.

'இனம்' (Race), 'சாதி'(Caste) போன்றவற்றில் உள்ள காலனிமயத்தைப்(Colonization) பற்றிய புரிதலின்றி,  'இன விடுதலை', 'சாதி ஒழிப்பு' போன்ற முயற்சிகளும், ‘காலனிமயமாக்கல்’ நோயில் சிக்கி, பயணிக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

இந்திய வரலாற்றில் வெற்றி பெற்ற அரசர்கள், தோற்ற மன்னர்களின் குடிமக்களை, குறிப்பாக இராணுவத்தினரை, அடிமை வேலைகள் செய்யும் பிரிவினராக்கிய சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காலனி அரசானது, 'சாதி'யை நுழைத்து, சாதி அடையாள பட்டியல் புதிதாக உருவாக்கிய போது, அந்த காலக்கட்டத்தில், அடிமைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை, தனிப்பட்ட அட்டவணைக்குள்ளாக்கி, 'தீண்டத்தாகதவர்கள்' என பிரித்தனரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

சோழ அரசில்(  கீழ்வரும் சான்றின்  படி);
மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;
இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்' தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;

'கள்ளர், மறவர், அகமுடையார்', 'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்; 

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர், இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்; 

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

சோழ அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, எந்தெந்த சிற்றரசர்களின் இராணுவத்தில் மேற்கண்ட பிரிவினர் பணியாற்றினர்? 

அவர்களில் எந்தெந்த பிரிவினர், காலனி ஆட்சி காலக்கட்டதில்;

தோற்ற சிற்றரச இராணுவத்தினராக, அடிமைப் பணிகளில் இழிவு படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர்? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

சங்க காலத்தில், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டவர்களில் பலர்;

பறைவகை இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லுநர்களாக, ‘குடிமகன்களாக';

'பறையர்' என்ற பிரிவில், அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றனர். 

இன்று 'பறையர்' தலித் சாதியாக வலம் வருகின்றனர்.

கூடுதல் சான்றுகளுக்கும், தகவல்களுக்கும் படிக்கவும்.
http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

தமிழ்நாட்டில் கலைக்கல்லூரிகளில், வரலாறு, தமிழ்த் துறைகளைச் சார்ந்த மாணவர்களில் பலர், 'கல்வெட்டியல்'(Epigraphy) உள்ளிட்ட தொல் பொருள் ஆய்வு பயிற்சிகளில் ஆர்வம் காட்டி வரும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.( http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/origin-of-tamilbrahmi-scripts-traced-at-training/article4275131.ece & http://www.pchrmadurai.com/activities.jws ) அம்மாணவர்களில் பெரும்பாலோர், தமிழ் வழி அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாய் இருந்தால் வியப்பில்லை.

இச்செய்திகள், கள அடிமட்ட ஆய்வு முயற்சிகள் - grassroots  research  collectives-  மூலம், மாற்று ஆய்வு முறைகள் உருவாகும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

ஆனால் இன்று கிராமப்புறங்களில் ஆங்கில வழிக் கல்வி விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) எல்லாம், 'புற்றீசல்' போல் வளர்ந்து வரும் போக்கில், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்கும் 'காலனிய நீக்கம்' (Decolonizing) வெற்றி பெறுமா? வெற்றி பெற, காலனிய மனநோயாளிகளும், திராவிட மனநோயாளிகளும், வழி விட்டு, ஒதுங்குவார்களா?(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) வெற்றி பெறவில்லையென்றால், தமிழ் வேரழிந்த 'தமிங்கிலீசர்கள்' நாடாக தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் இருக்குமா? என்பவையெல்லாம், ஆய்விற்கும் விவாதத்திற்கும் உரியவையாகும். 

குறிப்பு:
எழுத்தில், பேச்சில், 'தமிங்கிலீசர்களாக' வாழ்ந்து கொண்டு, அல்லது அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து, உணர்ச்சிபூர்வமாக, 'பழந்தமிழ், தமிழர்' பெருமைகளை வெளிப்படுத்தி, தம்மை உயர்த்திக் கொள்பவர்களும், காலனிய மனநோயாளிகளா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

No comments:

Post a Comment