Wednesday, October 5, 2016

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(10)


காந்தி பிம்பம் உள்ளிட்ட பிம்பங்களின் சமூகத் தூண்டலை (Social Induction) எவ்வாறு ஒழிக்க முடியும்?


மாவட்ட அளவில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில், மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஒருவர், என்னை முதல் முறையாக சந்தித்த போது;

எனது (மறைந்த) தந்தையைப் பற்றி 'பெருமையாக' சொன்ன தகவலானது, எனது தந்தையும் காந்தியைப் போன்றே, வாய்ப்பு கிடைக்கும் போது, தமது சுய (அக) உருவத்தை வெளிப்படுத்தியவரோ? என்ற ஐயம்,  எனக்குள் எழ காரணமான‌து.

மாவட்டத்தில் தாசில்தார் பதவிகளில், 'ஹொசூர் சிரஸ்தார்' என்ற பதவியானதுமாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில், மாவட்டத்தில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளும் 'அனுசரித்து' போக வேண்டிய அளவுக்கு, முக்கியமான பதவியாகும்.

அந்தகாலத்தில், 'சகாயம் ..எஸ்' போன்று நேர்மையானமா..லைவரின் கீழ், எனது தந்தையானர், 'ஹொசூர்  சிரஸ்தார்' ஆக‌ ணியாற்றி, அவர் பாராட்டும் கையில் ணிபுரிந்தகாலம் அது. (குறிப்பு கீழே)

ஊழல் குற்றச்சாட்டில், சிக்கி. 'சஸ்பெண்ட்'(Suspend) ஆனஅதிகாரி, எனது தந்தையின் உதவியை நாடியிருக்கிறார்.

எனது ந்தையின் 'அறிவுரை'(?) அடிப்படையில்;

அந்தநேர்மையான‌  மா..லைவர் தவியில் இருந்தது ரை, விசாரணையை 'இழுத்தடித்து', அடுத்து ணியில் சேர்ந்தமா..லைவர்  காலத்தில், விசாரணை முடிவில், 'எந்தபாதிப்புமின்றி' ணியில் மீண்டும் சேர்ந்துள்ளார்; காந்தியின் கொள்கைக்கு எதிரான கொள்கையில் இருந்த நேரு, காந்தியை 'மிகவும் மதித்து', அவரின் உதவியோடு, சுபாஸ் சந்திர போசுக்கு பதிலாக, இந்திய அரசியலில் தலைமை செல்வாக்கு பெற்றது போல.

'மிகுந்த புத்திசாலித்தனத்துடன்'  (எனது பார்வையில், காந்தி தன்னை மதித்த‌ நேருவுக்கு  உதவியது போல) எனது தந்தை தன்னை மதித்து உதவி கோரியவருக்கு,  'உதவியதாக' ;

மேற்குறிப்பிட்ட 'பாராட்டில்' இடம் பெற்றதானது, எனது ஆய்வுக்கு உள்ளானது.

காந்தி தொடர்பாக;

"..சிக்கு உதவ, தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கொடுத்த நிதியை, இந்தியா திரும்பியபின், காந்தி மறந்தது சரியா?" என்பதையும்;

"காந்தியின் எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவராக, வாக்கெடுப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை,செயல்பட விடாமல் தடைகள் ஏற்படுத்தி, மனம் வெறுத்து, போஸ் காங்கிரசிலிருந்து வெளியேற காரணமானவர் காந்தி." என்பதையும்;

முந்தைய பதிவில் பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2016/09/depoliticize9.htm )

மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற, இன்னும் பல, காந்தியின் தனிமனித குறைபாடுகளை/பலகினங்களை வெளிப்படுத்திய நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்களில்,  'இன்றைய காந்தி' ரசிகர்களும்;

.வெ.ரா தொடர்பாக, நான், கடந்த 10 வருடங்களாக, முன்வைக்கும் விமர்சனங்களில், 'பெரியார்' ரசிகர்களும்;

'சப்பைக் கட்டி, விட்டுக் கொடுக்காமல்' கருத்து தெரிவித்து வருவது போல;

நானும் எனது தந்தையை விட்டுக் கொடுக்காமல் அணுகி, சமூகத்தின் சீரழிவிற்கு, பங்களிப்பு வழங்க விரும்பவில்லை;

ஒரே நேரத்தில், முதல் மனிதராகவும், சமூக நியாயத்திற்கானமூன்றாம் மனிதராகவும் எனது வாழ்வை, (ஆடம் ஸ்மித்- Adam Smith-  'The Theory of Moral Sentiments ' என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளபடி) நான் அணுகி வாழ்வதால்.

காலனிய ஆட்சியை அச்சுறுத்திய புரட்சியாளர்களிடமிருந்து, 'இந்திய விடுதலை' போராட்டத்தை மீட்டு, தமது கட்டுப்பாட்டில் உள்ள பொம்மலாட்டமாக அதை மாற்ற;

'காந்தி பிம்ப' தோற்றத்திலும், அதை 'ஊதி' பெருக்க வைத்ததிலும், அந்நிய உளவு அமைப்புகளின் பங்களிப்பு பற்றி;


இந்திய விடுதலைக்கு முந்தைய கால, பிரிட்டன், அமெரிக்க உளவு அமைப்புகளின் கோப்புகள் எல்லாம்,  'இரகசிய நீக்கம்' (Declassify) மூலம் வெளிவரும் போது, உண்மைகள் தெரியவரும். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )
 

'வெள்ளைக்காரன் காந்தியை சிறை படுத்தினால்,  சிறையிலிருந்து, வெள்ளைக்காரன் கண்களில் மண்ணைத் தூவி தப்பிக்கும் அளவுக்கு, கடவுளைப் போன்ற சக்தி மிக்கவர் காந்தி' என்று பலர் பேசியதை,தாம் மாணவராயிருந்த காலத்தில், நம்பியதாக,'காந்தி ரசிகராக' வாழ்ந்த, எனது தந்தை  என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

நான் 'பெரியார்' இயக்கத்தில், தீவிரமாக பங்கேற்றிருந்த காலக்கட்டத்தில், திருச்சி செல்வேந்திரனின் பொதுக்கூட்ட பேச்சை கேட்ட மறு நாளில், வீட்டுக்கு 'நாளிதழ்/வார இதழ்' போட வந்த பையனிடம், 'இனிமேல் பிராமண பத்திரிக்கைகளை போட வேண்டாம்.' என்று சொல்லி, என்னை வியப்பில் ஆழ்த்தியவரும் எனது தந்தையே.

'காந்தி பிம்பம்', 'பெரியார் பிம்பம்', 'அண்ணா பிம்பம்', 'எம்.ஜி.ஆர் பிம்பம்' போன்று, 'முற்போக்கு பிம்பம்' உள்ளிட்ட‌ இன்னும் பல பிம்பங்களுக்கு செல்வாக்கிருந்த‌, அந்தந்த காலக்கட்டங்களில், 'சுயலாப நோக்கற்ற ரசிகர்களாக' எனது தந்தையைப் போன்ற, இயல்பில் பலகீனமான‌  பலர் பயணித்து வந்தார்கள்/வருகிறார்கள். அந்த பயணத்தில் 50 வயதுக்கும் அதிகமானாவர்களின் 'அரசியல்'(?), இசை, நடனம், திரைப்படம் உள்ளிட்ட இன்னும் பல ரசனைகளுக்கும், இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் ரசனைகளுக்கும், இடையே உள்ள இடைவெளி பற்றிய ஆராய்ச்சியே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியல் உள்ளிட்ட போக்குகள் பற்றிய வெளிச்சத்தை தரும்.

தமிழ்நாட்டில் 'பிம்ப' அரசியலின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலின்றி, மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, 'எம்.ஜி.ஆரின்' பிம்பம் தொடர்பாக;

மறைந்த பேரா.  M.S.S பாண்டியன் ' '‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) ' என்ற நூல் வெளியிட்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (‘உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்’கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

காந்த பண்பற்ற இரும்பானது, காந்த புலத்தில்(Magnetic Field)  இருக்கும்போது, 'காந்தத் தூண்டல்'(Magnetic Induction)  என்ற அறிவியல் வினை (Scientific process) மூலம், காந்தப் பண்பு' (Magnetic property)  பெறுவது போல;

மேற்குறிப்பிட்ட இயல்பில் பலகீனமான,  'ரசிகர்கள்' எல்லாம், 'சுயபுத்தியையும், இயல்பையும்' காவு கொடுத்து, சமூகத்தில் 'அதீத' செல்வாக்கில் வலம் வரும் பிம்பங்கள் மூலம், சமூகத் தூண்டல்' (Social Induction)  என்ற சமூகவியல் வினை (Sociological Process)  மூலம், 'பிம்ப ரசிக' பண்பில் தம்மை சிறைபடுத்தி, தாமாகவே தம்மை பலியாக்கி, வாழ்கிறார்கள்.

ஒழுக்கக்கேடான வழிகளில் பணம் ஈட்டும் பொது வாழ்வு கொள்ளையர்களும், 'சூழ்ச்சிகர' வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஓக்களும், இது போன்ற பிம்பங்களை, மிகுந்த புத்திசாலித்தனத்துடன்  வளர்த்து, சமூக கிருமிகளான பொதுவாழ்வு விபச்சாரிகளாக‌ ‌ வாழ்கிறார்கள்

அந்த சமூக கேடான போக்கில், தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில ழிக் கல்வியில் படிக்க வைக்கும், ஊரான் வீட்டுப் பிள்ளைகளை, 'தமிழ்வழியில்' படிக்க அறிவுறுத்தும், தமிழ் 'புலமையாளர்களின்'(?), ஆதரவாளர்களின்,  ‘பொதுவாழ்வு வியாபாரத்தின்கருவிகளாகி', அந்த சமூகவியல் வினை (Sociological process) மூலமாக, சமூகக் கேடான‌ , 'உணர்ச்சிபூர்வ'  'பிம்பங்களில்' தமிழும், தமிழுணர்வும் சிறை பட்டுள்ளனவா? தமிழ்வழிக் கல்வியின் ( எனவே தமிழின்) மரணப்பயணமும், அதன் விளைவுகளா? என்பவையும் ஆய்விற்குறியதாகும்.

தமிழ்நாட்டில் 'பிம்ப' போதையில் மிதக்கும் 'திராவிட' தலைவர்களிடம், அவர்களை 'துதி' பாடிக் கொண்டே, 'பெரியாரையும்', அண்ணாவையும் குறை சொல்லி, அவர்களை விட, அந்த 'பிம்ப' போதையில் மிதக்கும் தலைவர் உயர்ந்தவர் என்று  சொன்னால், அந்த தலைவர்கள், அதை உச்சக்கட்ட துதியாக கருதி மகிழும் கூத்துகளும், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன. தாய் மொழியின், தாம் வாழும் தமிழ்நாட்டின், உரிமைகள் பற்றிய கவலையின்றி, 'பாரத மாதா' புதல்வர்களாக வாழும் கூத்துகளும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறி வருகின்றன.

திராவிடக்கட்சிகளின் ஆட்சிகள் ஏற்படுத்திய சமூக பாதிப்புகளின் பின்னணியில், மேலே குறிப்பிட்ட 'சமூகத் தூண்டல்' போக்கிற்கு எதிராக நான் பயணித்ததால், எனக்கு ஏற்பட்ட கடன் சிக்கல்கள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ‘தத்தம் கொள்கைகளில்/கட்சிகளில், எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க' வேண்டாமா? அது இயலாதெனில், அப்படிப்பட்ட கட்சிகள்/கொள்கைகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா?   
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

மேலே குறிப்பிட்ட சிக்கல் காரணமாக, என்னால் செல்வாக்கு பெற்றிருந்த 'பெரியார்' பிம்பமும், எனது குடும்பத்தினர்/உறவினர் பார்வையில் செல்வாக்கு இழந்தது; (தி.மு.கவில் 'அண்ணா பிம்பம்' வளர்ந்த வேகத்தில், 'பெரியார் பிம்பம்' இளைஞர்களிடையே செல்வாக்கு இழந்தது போல)

எனது ஆய்விற்கு மதிப்புமிக்க உள்ளீடானது(input);

தமிழ்நாட்டில் பிம்பங்கள் தொடர்பான சமூக இயக்கவியல் (Social Dynamics) ஆய்விற்கு பயன்படும் வகையில்.

'பெரியார்' ரசிகராக, 'பெரியார் கொள்கை' வேடமிட்டிருந்த, , இயல்பில் சிற்றினமானவர்களை, 'சமமாக' கருதி, எனது குடும்பத்தில் நான் அனுமதித்த 'பாவத்திற்காக', எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html

மேற்குறிப்பிட்டஅனுபஅறிவில், மிழ்நாட்டில், மேலே குறிப்பிட்ட 'சமூகத் தூண்டல்' போக்கின் பின்பலத்தில், 'பெரியார் கிருமிகள்' உள்ளிட்ட 'பொதுவாழ்வு வியாபாரிகள்',  'குறுக்கு ழிகளில் ணக்காரர் ஆகும்,  வெற்றியின் இரசியங்களையும், ண்டுபிடித்து, திவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)

செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் 'வாலாட்டி' வாழ்பவர்களிடமிருந்தும், எனது ஆய்வுகள் பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அந்த 'ஆய்வுகள்' மூலம் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது/கிடைக்கும் என்பதில் மட்டுமே ஆர்வமுள்ள, அறிவு/உள்ளார்ந்த ஈடுபாடு 'வாசனை' பற்றி அறியாதவர்களிடமிருந்தும், நான், இயன்றவரை அவர்களை புண்படுத்தாமல் ஒதுங்கி, எவ்வாறு உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions) வாழ்ந்து வருகிறேன்? என்பதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.htmlதனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; தமது தனி வாழ்வில் கோழையாக இழிவான, 'சுயலாப'  சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, மேக்ரோ உலகில் 'யோக்கியர்களாக' வலம் வருபவர்களை, என்னை மதித்தாலும், ஒதுக்கி, என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன். சமூக இயக்கவியலில் (Social Dynamics), சமூக பொறியியல் (Social Engineering) வினையூக்கியாக (Catalyst) வாழ்வதன் மூலமே, சமூக தள விளைவினைத் (Social Polarization)  தூண்டி, ஆக்கபூர்வமாக தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்மால் பங்களிப்பு வழங்க முடியும். 

மனித மதிப்பீடுகளை காவு கொடுத்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை ஊக்குவிக்கும் சமூக போக்கில், பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் பொது வாழ்வானது, விபச்சார தொழில்நுட்ப புலமையாளர்கள் பிடியில் சிக்குவதில் வியப்புண்டோ! சமூக தள விளைவின் மூலமாக‌, 'அந்த' புலமையாளர்கள் வீழாமல், அவர்களின்  'பிடியில்' சிக்கியுள்ள தமிழையும், தமிழுணர்வையும் மீட்க முடியுமா?

தமது இயல்பின் காரணமாக, (நடுத்தர, ஏழை மக்களில் அதிக சதவீதத்தினரும்,பணக்காரர்களில் வெகு சிலரும்) மேற்குறிப்பிட்ட 'எந்திரர்களாக' பயணிக்காதவர்களின் பார்வையில், 'மேற்குறிப்பிட்ட 'செல்வம்' மிக்க எந்திரர்கள் எல்லாம் வெறுப்புக்குள்ளான 'நிஜஜோக்கர்களாக' வலம் வருகிறார்கள்' என்பதை;

சிறிய பட்ஜெட்டில் உருவான, 'ஜோக்கர்', 'சூது கவ்வும்', 'ஜிகிர் தண்டா', 'சதுரங்க வேட்டை' 'காக்கா முட்டை' உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களின் வெற்றிகள் உணர்த்துகின்றன.

அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் குடும்பத்தினர், திரை அரங்குகளில், தமது 'செல்வ' வழிகள் பற்றி அறிந்த பொதுமக்களுடன் அமர்ந்து, இப்படங்களை பார்க்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பிம்பங்களின் ரசிகர்களாக, தமக்கான வாழ்வை தொலைத்து, 'இழிவான சமரசங்களுடன்',

'பிறர் பொறாமை' பட, செல்வம்' ஈட்ட, எதையும் இழக்கும்,  ' மூளை செயல்பாட்டில்' (brain processing) அடிமைப்பட்டுள்ள எந்திரர்களில்;

'செல்வம்' ஈட்டுவதில் வெற்றி பெற்றவர்களும் சரி, தோல்வியானவர்களும் சரி,

எதையும் கொண்டு வராத பிறப்பிற்கும், எதையும் எடுத்து செல்ல முடியாத இறப்பிற்கும் இடையிலான வாழ்க்கைப் பயணத்தில்;

பிறருக்காக ( அவர்களை பொறமைப் பட வைப்பதற்காக‌ ), 'தமது இயல்பான பயணத்தை' விட்டில் பூச்சிகளாகதொலைத்து, நடைபிண எந்திரர்களாக, வாழ்பவர்கள் என்பதும்,  எனது கருத்தாகும்.

மேலே குறிப்பிட்ட, கேடான சமூகத் தூண்டலுக்கு, எதிரான போக்கில்,  நாம் வாழ்வதன் மூலமே, அந்த சமூகத் தூண்டலை பலகீனப்படுத்தி, விட்டில் பூச்சிகளாக வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை சிறுமமாக்க(minimize) முடியும்; அரசியல் நீக்கமும் முடிவுக்கு வரும். அரசியல் நீக்கம் முடிவுக்கு வரும்போது, 'ஆதாயத் தொண்டர்களின்' பலத்தில், பயணித்து வரும்,  கட்சிகள் எல்லாம், சுவடின்றி மறைந்து விடும்.

அந்த சமூக தள விளைவின் காரணமாக, உருவாகி வரும் சமுகத் தூண்டலில், அரசியல் நீக்கத்தில், சீரழியும்  தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கும் சுயவலிமையும் வளரும்.
(தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(9); த‌மிழ்நாட்டில் பொதுவாழ்வில், ‘அரசியல் நீக்க‌’, ச‌மூக‌ கேடான‌ போக்கை, அர‌ங்கேற்றிய‌வ‌ர் காந்தியா?; 
http://tamilsdirection.blogspot.com/2016/09/depoliticize9.html)

குறிப்பு :

அந்த காலக் கட்டத்தில்,  எனக்கும் பேரா..மார்க்சுக்கும் இடையில் இருந்த நெருக்கமான நட்பை, சுயலாப நோக்கில், தவறாக பயன்படுத்தி, முட்டை வியாபாரி வேலுச்சாமி, அடுத்த மாவட்டமுட்டை வியாபாரியுடன் தனக்கு இருந்த மோதலை, என்னிடம் உதவி கேட்டு வந்த‌ , ஒரு கிராம முதல் பட்டதாரியினை 'காவு கொடுத்து', 'வியாபார பலன்' பெற, எனது தந்தையின் அந்த 'செல்வாக்கு' உதவியது: அந்த கிராம முதல் பட்டதாரி, என் மீது, நியாயமாக, வருத்தப்பட காரணமாகி;

'மார்க்சிய முற்போக்காளர்களில்' பலர், தனி மனித உறவில் வாய்ப்பு கிடைக்கும் போது, தமது சுய (அக) உருவத்தை வெளிப்படுத்தும், எவ்வளவு அபாயமானவர்கள்? என்று நான் கண்டுபிடிக்க உதவி; 

சமூக அக்கறையுள்ள கதாசிரியரை சந்திக்க நேர்ந்தால், அவரின் துணையுடன், அந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், 'ஜோக்கர்' திரைப்படம் போன்று, 'முற்போக்கு முட்டை' என்ற கதையை உருவாக்கும் திட்டமும் எனக்கிருக்கிறது.

No comments:

Post a Comment