Sunday, October 16, 2016

எனது ஆய்வுகளின் 'நண்பர்களான' வெளியீடுகள்:


எஸ்.வையாபுரி பிள்ளையும், மர்ரே ராஜமும், 

தமிழ்நாட்டின் புலமை மீட்சிக்கு வழிகாட்டிகள்


Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.


‘மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!’ (தி இந்து; 16-10-2016) கட்டுரையை படித்தவுடன், வியப்பில் அதிர்ந்தேன்.

எனது  'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்ட ஆய்விற்கும், அதில் நான் எதிர்பார்க்காமலேயே, திட்டமிடாமலேயே, பழந்தமிழ் இலக்கியங்களில் வெளிப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும்; ( 
http://musicresearchlibrary.net/omeka/ ; Search:s.a.veerapandian  & 

மர்ரே ராஜம் தொகுத்து, 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' 1981இல் வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' இரண்டாம் பதிப்பானது, ஒரு நண்பனைப் போல், நான் நேசிக்கும் அளவுக்கு, எனக்கு உதவி வந்தது/வருகிறது.

அது போன்ற முயற்சிகளில் மர்ரே ராஜம் ஈடுபட காரணமானவர் எஸ்.வையாபுரி பிள்ளை என்ற தகவல், மேற்குறிப்பிட்ட கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. (“1940-களில் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் ஏற்பட்ட சந்திப்பு ராஜத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.”)

1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலையில், அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, தற்போது அவற்றை வெளியிட்டு வரும் ‘சாந்தி சாதனா’வின் (வெளியீடுகளை வாங்க: 044 24352745; orders@santisadhana.org ; http://www.santisadhana.org/books.htm ) தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலா பற்றியும் அக்கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

மேற்குறிப்பிட்டபடி எனது ஆய்வுகளுக்கு உதவிய நூல்களை பதிப்பிக்கும் முயற்சிக்கு, எனது நன்கொடையாக ரூ.10,000 தர நான் விரும்புவதை, நான் சகுந்தலாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "நன்கொடையெல்லாம் வேண்டாம். தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கினாலே போதும் " என்றார். அடுத்த முறை சென்னை செல்லும்போது, அங்கு சென்று புத்தகங்களை வாங்கி வர முடிவு செய்துள்ளேன்; அந்த இடத்திற்கு செல்வதே எனக்கு ஒரு புனித யாத்திரையாகும்.

பெரியார் இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில், எஸ்.வையாபுரி பிள்ளை தொடர்பாக நிகழ்ந்த கீழ்வரும் அனுபவமும் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, எவ்வளவு அபத்தமான உணர்ச்சிபூர்வ திசையில் பயணித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அதன் விளைவான 'கறுப்பு - வெள்ளை' சமூக நோயில் தமிழ்நாடு சிக்கியதன் காரணமாக; (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423

என்பதை பின்னுக்கு தள்ளி;

‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து அவர்பால்
வெறுப்பை உமிழ்வது அழிவு’‍

என்னும் 'புது'க்குறள் அரங்கேறியதா? என்பது ஆய்விற்குறியதாகும்.

அந்த அரங்கேற்றம் காரணமாக, அதிக வெறுப்புக்குள்ளானவர்களில் எஸ்.வையாபுரிபிள்ளை முக்கிய இடம் பெறுவார்; ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாத, அரைகுறை தமிழறிவுடன், 'பெரியார்' முகமூடியில், 'சமூக கிருமிகள்' அரங்கேறிய சூழலில் ( அதை 'திருச்சி பெரியார் மையம்' மூலம் கண்டுபிடித்தேன்). 

‘Quantum Mechanics- இல் ஒரு அணுவில் உள்ள எலெக்ட்ரான்களில், இயல்பின் அடிப்படையில் 'சமத்துவமாக' இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்க முடியாது. இது பவுலியின் 'தவிர்ப்புத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle)  என்று அழைக்கப்படுகிறது. அதே போல், உலகில் உள்ள மனிதர்களில் இயல்பின் அடிப்படையில் 'இரண்டு மனிதர்கள்' கூட 'சமத்துவமாக' இருக்க முடியாது. எல்லா மனிதர்களையும், ‘இயல்பைப் புறக்கணித்து’, குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டம் உள்ளிட்டு, நமது வாழ்வில், அவர்களைச் 'சமத்துவமாக' நடத்துவது எவ்வளவு முட்டாள்த்தனமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பது எனது வாழ்க்கையில், நான் கற்ற 'அசாதாரண' பாடமாகும். புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்', எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு.’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlஎனவே எஸ்.வையாபுரி பிள்ளை, மர்ரே ராஜம், உள்ளிட்டு பல புலமையாளர்கள், 'திராவிட' கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'இருட்டில்' மறைந்த 'குற்றத்திற்கு', என்னை போன்றவர்களும் பங்களித்திருக்கிறோம். இயற்கை விதியின்படி, அதற்கான தண்டனையையும், எனது பங்களிப்பால் வளர்ந்த, 'பெரியார்' சமூக கிருமிகள் மூலம் நான் அனுபவித்து, பாடம் கற்று, அதை எனது சமூகவியல் ஆய்வுக்கும் உட்படுத்தி வருகிறேன். 'தேசிய கிருமிகள்' மூலம் வ.உ.சி அனுபவித்த 'தண்டனைகள்' மூலமாக‌, அந்த 'கிருமி சமூக செயல்நுட்பத்தின்' அடுத்த கட்ட வளர்ச்சியாக உருவெடுத்த, 'பெரியார் சமூக கிருமிகள்' இன்னும் மோசமானவர்கள்‌, என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

'பெரியார்' இயக்கத்தில், அந்த வெறுப்பு நோயில் சிக்காமல் பயணித்தவர், திரு.புலவர் இமயவரம்பன் ஆவார். திருமணம் செய்து கொள்ளாமல், படிப்பு மற்றும் வசதியுடன், தம்மை அர்ப்பணித்து, ஈ.வெ.ராவின் உதவியாளராக, வாழ்ந்து மறைந்தவர் அவர். என் மேல் தாயினும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர்.

திருச்சி பெரியார் மாளிகையில், அவர் ஒரு முறை என்னிடம் விவாதிக்கையில் “எஸ்.வையாபுரி பிள்ளை முன் வைக்கும் கருத்துக்களை முற்றிலும் மறுப்பது தவறு. சிலவற்றில் அவர் முன் வைக்கும் வாதங்கள், மறுக்க முடியாத அறிவுபூர்வமானவையாகும்' என்று தெரிவித்தார். 

அந்த காலக்கட்டத்தில், பெரியார் கொள்கையாளனாக (Theoretician), மார்க்சியம், லெனினியம், மாவோயிசம்' தொடர்பான நூல்களை தேடி தேடி படித்து, அந்த கொள்கையாளர்களுடன் அறிவுபூர்வ விவாதப் போராட்டம் நடத்தி வந்த எனக்கு, புலவர் இமயவரம்பன் தெரிவித்த கருத்தின் முக்கியத்துவம், அப்போது புலப்படவில்லை; பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, 'கறுப்பு - வெள்ளை' நோயில் நான் சிக்கியிருந்த‌ நிலையில்.

பழந்தமிழ் இலக்கியங்கள் மீது, 'இசை இயற்பியல்' (Physics of Music) ஆர்வத்தில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம், நான் அந்த நோயிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி, ஈ.வெ.ராவின் வரை எல்லைகள்' (limitations) பற்றியும், அது பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துக்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கு காரணங்களாகின? என்பது பற்றியும் ஆய்வுகளில் ஈடுபட நேர்ந்தது. 

எஸ்.வையாபுரி பிள்ளை தலைமையிலான அறிஞர் குழு  தொகுத்து, 1982இல் சென்னைப் பல்கலைக்கழகம் மறுபதிப்பாக வெளியிட்ட ‘Tamil Lexicon'-ம், மர்ரே ராஜம் தலைமையில் அறிஞர் குழு தொகுத்து வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' தொகுப்பு நூல்களும் இன்றி, பழந்தமிழ் இலக்கியங்களில் எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்காது.

வையாபுரி பிள்ளையாயிருந்தாலும், நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும், வெளிப்படுத்திய ஆய்வு முடிவுகளை எல்லாம், அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலமாக, நிறை குறைகளை திருக்குறள் (423) வழியில் வெளிப்படுத்துவதே அறிவுடைமை. அதை விடுத்து, அம்முடிவுகள் தமிழின் பெருமையை கூட்டுமா? குறைக்குமா? என்று உணர்ச்சிபூர்வமாக அணுகிய போக்கின் செல்வாக்கு காரணமாகவே;

செல்டன் பொல்லாக் போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் தமிழ்ப்புலமையை ஏளனம் செய்து, சமஸ்கிருதத்தின் துணையுடன், மணிப்பிரவாள காலத்திற்குப் பிறகே, தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன;

என்று தமது நூலில் அறிவிக்கும் விளைவில் முடிந்தது.
(http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

எனது ஆய்வுகள் மூலம் எனக்கு நெருக்கமான‌;

மலேசியாவில் வாழ்ந்து, அண்மையில் மறைந்த, அறிஞர் உலகன் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தை ஏற்கனவே பார்த்தோம்.

"என் அனுபவத்தைப் பொறுத்தவரை ஓர் 50 ஆண்டுகட்கு முன்பிருந்த அறிஞர்கள் இன்று அதிகம் இல்லை, 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆழமான கல்வி அறிவும் இப்பொழுது இல்லை என்றே நினைகின்றேன். இன்றும் நான் அன்று பதிப்பாக்கிய நூற்களையே என் ஆய்விற்கு பயன்படுத்துகின்றேன்.”

உலகன் குறிப்பிட்டுள்ளவாறு, 50 ஆண்டுகட்கு முன்பிருந்த தமிழ் புலமையாளார்கள் பற்றி விளங்கிக் கொள்ள, மேற்குறிப்பிட்ட 'தி இந்து' கட்டுரையின் கீழ்வரும் பகுதியானது, எனது கவனத்தை ஈர்த்தது.

“வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கி.வா.ஜ., தெ.பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு மர்ரே ராஜம் நிறுவனத்துக்கு வாய்த்தது. அதுபோன்றதொரு குழு இனியொருபோதும் வாய்க்காது! சிறு வயதில் ராஜத்திடம் பணிக்குச் சேர்ந்து அவரது இறுதிக்காலம் வரை உடன் இருந்த பரமார்த்தலிங்கத்திடம் பேசியபோது, “வழக்கமாக ஒரு குழுவின் பெரிய அறிஞர்கள் ஒன்றுகூடினால் அவர்களுக்குள் ‘நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் வந்துவிடும். ஆனால், இந்தக் குழு அப்படியில்லை. ஒருவர் பார்த்த ப்ரூஃபை இன்னொருவர் மறுபடியும் சரிபார்ப்பார். ‘நான் பார்த்ததை நீ எப்படிப் பார்ப்பது?’ என்றெல்லாம் யாரும் சண்டையிட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் பிரதான நோக்கம் பிழையில்லாமலும் எளிமையாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களின் வீடுகள்தோறும் சென்றடைய வேண்டும் என்பதுதான்” ( குறிப்பு கீழே)

மேலே குறிப்பிட்ட 'பிரபல' நபர்கள் எல்லாம், சுயலாப நோக்கில், தமது செல்வம், செல்வாக்கை எப்படி வளர்ப்பது? என்ற நோக்கில், மேற்கொண்ட முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்று, அவர்களைப் பிடிக்காதவர்கள் கூட சொல்ல மாட்டார்கள். ‘நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் இன்றி, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, உதவும் நபர்களையும், முயற்சிகளையும், சுயலாப நோக்கின்றி ஆதரிக்கும் 'பிரபல'ங்கள், இன்று யார் இருக்கிறார்கள்? என்று தேடும் நிலையில், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் தமது புலமையையும் விபச்சார தொழில்நுட்பத்தில் 'பிணைத்து' பயணிக்கும், 'புலமையாளர்களும்' இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் 'செல்வாக்கு' மிக்க அரசியல் குடும்பத்தினருடன் நேசமாக போட்டி போடும் 'புலமையாளர்கள்'’;

மற்றும் அப்போட்டியிலிருந்து ஒதுங்கி வாழும் புலமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும்;

தமிழ்நாட்டை புலமை வீழ்ச்சியிலிருந்து மீட்க விரும்பும் ஒவ்வொருவரும், முதலில் தமது அகவாழ்வை ‍சுயபரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும்.

'திராவிட முற்போக்கு வீரர்களாக' வேடம் போட்டு, 'அதிவேகமாக' வளர்ந்த பணக்காரர்களில், 'அதிபுத்திசாலிகள்' ஆனவர்கள், தமக்கு 'ஒத்து வரும்' தமிழ் அமைப்புகளின், தமிழ் 'அறிஞர்களின்'(?) 'ஆதரவுடன்' 'தமிழ்ப்புலமையின் புரவலர்கள்' ஆனார்களா? தெரிந்தோ, தெரியாமலோ, நாமும் அதில் இடம் வகிக்கிறோமா? மது தேவைகளும்(needs), அவை காரணமாக மனதில் தோன்றும் ஈடுபாடுகளும்(interests), 'எந்த வழியிலும்' எவ்வாறு செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' புற வாழ்வில் பெறுவது என்பதை,  தமது அகவாழ்வில் செல்வாக்கு செலுத்த, நாம் அனுமதித்துள்ளோமா? அத்தகைய செல்வாக்கிற்கு இடமளிக்காமல், விரும்பி புறத்தில் இழப்புகளை ஏற்று, புலமையை வளர்ப்பதில் அகத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறோமா? மேற்கத்திய சிந்தனை முறைக்கு (Western Paradigm)  அடிமையாக இல்லாமல், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் தமிழ், தமிழர் தொடர்பான தொன்மை பற்றிய ஆய்வுகளை எதிர்கொள்கிறோமா?

தமிழ்நாட்டில் புலமை மீட்சிக்கு பங்களிப்பு வழங்க, எஸ்.வையாபுரி பிள்ளையும், மர்ரே ராஜமும், எனக்கு வழிகாட்டிகள் ஆவர்.


குறிப்பு:

'அறிஞர்களுடன்' ஒன்று கூடாமல்;

ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாத, அரைகுறை தமிழறிவுடன், 'பெரியார்' முகமூடியில், இருந்த 'சிற்றின' மனிதர்களை 'சமமாக' கருதி, அவர்களுடன் ஒன்று கூடினால்;


நமது 'அறிவு உழைப்பில்', அவர்கள் 'சமூக கிருமிகளாக' வளர்வார்கள் என்பது, எனது ‘திருச்சி பெரியார் மையம்' அனுபவமாகும்.

1944இல் ஈ.வெ.ரா திராவிடர் கழகம் துவங்கி, மேற்கத்திய இறக்குமதிகளின் பொருளில், தமிழில் 'இனம், சாதி' ஆகிய சொற்களை திரித்து, உருவான 'திராவிடர்' போதையில், பயணித்து அரங்கேறிய சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism);


டார்பிடோ ஜனார்த்தனம், குத்தூசி குருசாமி உள்ளிட்ட‌  பலரின் 'சுயலாப நோக்கற்ற‌  அறிவு உழைப்பின்' பலன்களாக, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாகி செல்வாக்கு பெற்றதை;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் கண்டுபிடித்து(discover) வெளிப்படுத்தி, அந்த சமூக செயல்நுட்பத்தை வீழ்த்த வேண்டும் என்பதும்வ.உ.சி உள்ளிட்டு, 'தேசிய', 'திராவிட' இயக்கங்களில், எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், 'கிருமி சமூக செயல்நுட்ப வளர்ச்சிக்கு உரமானது' என்ற பழியும் நீங்கும் என்பதும், இயற்கையின் விதி போல நடைபெற்று வருகிறது. அந்த வீழ்ச்சியில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி துவங்கும் என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

மனசாட்சியையும், அறிவு நேர்மையையும் அடகு வைத்து, 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', எந்த கொள்கை முகமூடியுடன் பயணித்தாலும்;


அல்லது காலத்தால் ஒதுக்கப்பட்ட (anachronistic) கொள்கை அபிமானிகளாக பயணித்தாலும்;

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் எளிதில் அவற்றை கண்டுபிடித்து, (அவர்களை எதிர்ப்பதும் 'வேஸ்ட்'(Waste)  என்று கருதி) ஒதுக்கி வருகிறார்கள்,  என்பதும் எனது அனுபவ புரிதல் (field observation) ஆகும். ஆனால் 'அவசர உதவிக்கு', பெரியவர்களையும், கட்சிகளையும், 'தாமதமான வால்களாக்கி', உதவுபவர்கள் அவர்கள் என்பதை, சென்னை வெள்ள நிவாரணம் மூலம் நிரூபித்தார்கள். மாணவர்களையும், இளைஞர்களையும் பெரும்பான்மையாகக் கொண்டு பயணத்தை துவக்கிய 'பெரியார்' கட்சிகள் எல்லாம், இன்று அவர்களை சிறுபான்மையாகவும், 50 வயதுக்கும் அதிகமானவர்களை பெரும்பான்மையாகவும் கொண்டு பயணிக்கிறார்களா? அது அக்கட்சிகளின் மரணப் பயணங்களின் அறிகுறியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். எஸ்.வையாபுரி பிள்ளை, மர்ரே ராஜம், உள்ளிட்டு, 'திராவிட' கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'இருட்டில்' மறைந்த புலமையாளர்கள் எல்லாம், மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் போக்கு தொடங்கி விட்டது; தமிழின் புலமை மீட்சியின் முன்னறிவிப்பாக.


சாதி, மதம், 'இனம்'(?) உள்ளிட்ட அடிப்படைகளில், 'வெறுப்பு' மனநோய்க்கு அடிமைகளாகப் பயணித்து, கீழ்வரும் குறளை, புறக்கணித்து வாழ்பவர்கள் எல்லாம், கால ஓட்டத்தில் புறக்கணிப்புக்குள்ளாகி, சருகாக உதிரும் கட்டம்(Phase) தொடங்கி விட்டது.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423

No comments:

Post a Comment