Wednesday, October 26, 2016

காவிரிப் பிரச்சினை:
தி.மு.கவின் அனைத்துக் கட்சி கூட்டம் உணர்த்திய 'சிக்னல்'


உண்மையாகவும், நேர்மையாகவும், குறுக்கு வழிகளை தவிர்த்து, தமது புலமையின் அடிப்படையில் வளர்ந்து வருபவருமான, நான் மிகவும் மதிக்கும் நண்பரான‌, ஒரு தி.மு.க ஆதரவாளரிடம்;

 எதேச்சையாக காவிரிப் பிரச்சினை தொடர்பாக, விவாதிக்க நேரிட்டது.

1969இல் முதல்வரான பின், சட்டசபையில் 'கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை' என்ற வகையில் தி.மு.க.தலைவர் 'கலைஞர்' கருணாநிதி கருத்து தெரிவித்த பின்னணியில்;

‘தி.மு.க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாமா? ' என்று நான் கேட்டேன்.

'அதெல்லாம் பழைய கதை. இப்போது நடப்பது தானே முக்கியம்' என்றார் அவர்.

'பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல. முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் சாகும் வரை மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாகத் தான், பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக, உச்ச நீதி மன்றத்தில் முதலில் ஒப்புக் கொண்டு, அதன்பின் பின் வாங்கினார் என்ற தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

முன்னாள் பிரதமர் தேவகவுடா காவிரிப்பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்திரவை துச்சமாக மதித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டபோது;

அது இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சிக்கும்'(Rule of Law), 'இந்திய ஒருமைப்பாட்டிற்கும்' எதிரானது' என்று;

இந்தியாவில் எந்த பொறுப்புள்ள தலைவரும், பத்திரிக்கைகளும் கண்டித்தார்களா? (‘Caution: BJP's support to strengthen the regional chauvinism, at the cost of the Indian unity?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

கருப்பையா மூப்பனார் பிரதமராக இருந்த வாய்ப்பைக் கெடுத்து, தேவகவுடா பிரதமர் ஆக உதவிய தி.மு.க தலைவர் கண்டித்தாரா? பிரதமர் பதவி வகித்தவர் என்பதால் தானே, அவரின் உண்ணவிரத அச்சுறுத்தலுக்கு பலன் இருந்தது.

அவர் உண்ணாவிரதம் தொடங்கியவுடன், தமிழக எம்.பிக்கள் எல்லாம் டெல்லியில் போட்டியாக‌ உண்ணாவிரதம் தொடங்கியிருந்தால், அந்த பலன் கிடைத்திருக்குமா?

தமிழக பாஜ.கவினர் தமது கட்சித் தலைவர் அமித் ஷாவை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள். அது போல, தமிழக காங்கிசார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, கர்நாடக அரசின், காங்கிரஸ் முதல்வர் தமிழக விரோத போக்கை கடைபிடிப்பது தொடர்பாக ஏன் முறையிடவில்லை?

இப்போது உச்சநீதிமன்ற உத்திரவை மதித்து 2000 கனாடி நீர் தினமும் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை, தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டித்தார்களா?

ஆக, இந்தியாவில் 'இந்தியர்' என்ற உணர்வை பின் தள்ளி, கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளில் உள்ளவர்களும்;

'கர்நாடகர்' என்ற 'வெறியில்', தமது மாநில நலன்களை பாதுகாப்பதில் போட்டி போடுகின்றனர்.

தமிழ்நாட்டிலோ, தமிழில் 'உணர்ச்சிகரமாக' பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும், (அதன் மூலம் பக்கவாட்டு பாதிப்பாக-collateral damage-, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள்/இளைஞர்கள் பார்வையில் தமிழும் செல்வாக்கிழக்க );

'காரியத்தை கெடுக்கும்’  சுயநல அரசியல் போட்டியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளனர்.” என்று எனது கருத்தை தெரிவித்தேன். அந்த நண்பர் ஆம் என்று ஒப்புக் கொண்டார்.

ஆனால், அவரிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கவில்லை.

'"பின் ஏன் தி.மு.கவை ஆதரிக்கிறிர்கள்?"

அவர் கீழ்வரும் பதிலைச் சொல்வார் என்பது எனக்கு தெரியும்.

'வேறு எந்த கட்சி இருக்கிறது?' என்று அவர் கேட்பார், என்பதும் எனக்கு தெரியும்.

அதற்கு சரியான பதில், இன்று என்னிடம் கிடையாது. (குறிப்பு கீழே)

அதற்கு சரியான பதில் கிடைக்காத வரையில், கீழ்வரும் மரணப்பயணத்தில், தமிழும், தமிழர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது எனது கருத்தாகும்.

“தமிழ்நாடானது,  தமிழ்க் கூட்ட அழிவு நோயில்(Tamil colony collapse disorder- TCCD)
சிக்கியதன் காரணமாக, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் மற்றும் பண்பாடும் எவ்வளவு வேகமாக அழிந்து வருகின்றன‌,”  என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

குறைந்த பட்ஜெட்டில், பெரிய நடிகர்கள் இன்றி, உருவாகி, 'ஜோக்கர்' என்ற திரைப்படம் பெற்ற வெற்றியானது;

தமிழ்நாட்டு கட்சிகளுக்கு எவ்வாறு அபாய அறிவிப்பாகும்? என்பதையும் விளக்கியுள்ளேன்.

அந்த மரணப் பயணத்திலிருந்து, எந்த கட்சி, எப்படி பயணித்தால், தமிழையும், தமிழரையும் மீட்க முடியும்? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/09/signal.html )

‘வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அரசியல் நீக்கம் காரணமாக;

சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது' (Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)

உயர் நடுத்தர(upper middle class), பணக்கார (affluent) வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை' (Comfort Zone) விட்டு விலகி,  பார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை 'தாமதமான' வால்களாக்கி;

இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவிய‌ போக்கானது,

சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெளிப்பட்டது.

அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, அந்த போக்கானது, மேற்குறிப்பிட்ட விசாரணையை தூண்டுவிக்கும் காலமானது, எதிர்பார்ப்பதை விட, விரைவாகவே நடந்தால், வியப்பில்லை. அதில் சந்தேகம் உள்ளவர்களின் பார்வைக்கு;

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும் என்பதை மேற்குறிப்பிட்ட உரையானது, சுட்டிக்காட்டியுள்ளது.’ (‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html )  


குறிப்பு:

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். (http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )

கட்சிப் பதவிகளிலும்,ஆட்சிப் பதவிகளிலும் .இ.அ.தி.மு.கவில் உள்ள நிச்சயமற்ற போக்கின் காரணமாக;


தமது நியாயமான மற்றும் அநியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்றிக்கொள்ள, தொடர்பு கொண்டு, ஆட்சியில் 'சாதிக்க' ஏதுவான கட்சி வலைப்பின்னலானது, தமிழ்நாட்டில், தி.மு.கவிடம் மட்டுமே உள்ளது. அதுவே தி.மு.கவின் 'தனித்துவமான'(Unique)  பலமாகும்.

No comments:

Post a Comment