Wednesday, April 22, 2015



                 நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை


திராவிடர் கழகத்தின் தலைவரான   பெரியார் ஈ.வெ.ரா இந்திய விடுதலையை துக்க தினமாக அறிவித்ததில் நேர்மையிருக்கிறதா? அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு, திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை கைவிடாமல், அண்ணாதுரை பெரியார் ஈ.வெ.ராவை மறுத்து, இன்பநாளாக வரவேற்றதில் நேர்மையிருக்கிறதா?  என்பது கீழ்வரும் தகவல்கள் அடிப்படையில் ஆய்விற்குரியது.


1857 முதலாம் இந்திய விடுதலைப்போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளையர் வெளியேறி, இந்தியாவானது, அந்தந்த பகுதி மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரில், காலனி ஆட்சியாளர்கள் என்னென்ன பாடங்கள் கற்று, தமது ஆட்சி அதிகாரத்தையும், உளவு அமைப்புகளையும் பயன்படுத்தி, காங்கிரஸ் உள்ளிட்டு எந்தெந்த கட்சிகளை உருவாக்கினார்கள்? எந்தெந்த தலைவர்களை தமது நேர்முக/மறைமுக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்? அவர்களில் யார் யாரின் துணையோடு நேதாஜி போன்று தனத்து ஒத்து வராத தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் ஒழித்தார்கள்? என்பது பற்றிய தகவல்களும், குறிப்பாக இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவானது எந்தந்த வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வேட்டைக்காடாக இருந்தது என்பது பற்றிய தகவல்களும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கசியத் தொடங்கியுள்ளன. வெள்ளைக்கரர்களுக்கு வெண்சாமரம் வீசியதாக குற்றம் சாட்டப்படும் பெரியார் ஈ.வெ.ராவும், அவர் நடத்திய பத்திரிக்கைகளும், காலனிய ஆட்சியில்.  சிறைவாசம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான அளவுக்கு,  தமிழ்நாட்டில் அந்த கால கட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்டு வேறு எந்த கட்சியும் தலைவர்களும் உள்ளானார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா குரல் எழுப்பும் முன்னரே, பெரியார் ஈ.வெ.ரா திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை முன்வைத்தவர் ஆவார். இந்திய பிரிவினையை பொம்மலாட்டமாக , தமது சுயநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயக்கிய காலனிய ஆட்சியும், மவுண்ட்பேட்டன் குடும்ப செல்வாக்கில் சிக்கிய நேருவின் பிரதமர் பதவி ஆசையுமே, பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும். திராவிட நாடு பிரிவினைக்கும் என்னென்ன வாய்ப்புகள் இருந்தன? ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும் ஆதரித்த நிலையில்,
 ( "We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ; http://en.wikipedia.org/wiki/C._R._formula);

திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட (குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல‌' - இறந்தது காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு அமைப்பு MI5   கோப்புகள்  declassify-இரகசிய நீக்கமாகும்போது-   தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது என் கருத்து. ("They make Indians fight with each other on caste and communal lines, operating through their agents, which include many of the political parties in India. Partition of India in 1947 was also part of this design.")
http://www.outlookindia.com/article/our-real-enemies-are-abroad/295698 

நல்லவேளையாக திராவிடநாடு பிரியவில்லை என்று நான் கருதுவதற்கான காரணங்கள் வருமாறு;

இன்று திராவிடக்கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் அரைகுறைத் தகவல்களுடன் உணர்ச்சிபூர்வமாக பேசிவரும் போக்கிற்கு, 1944இல் விதை போடப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதன்பின் நடந்த, அண்ணாதுரை புறக்கணித்த‌, தூத்துக்குடி தி.க மாநாட்டில் , வெளிவந்துள்ள பெரியார் ஈ.வெ.ராவின் உரையில், அண்ணாதுரைக்கு எதிரான உணர்ச்சிபூர்வ பேச்சு வெளிப்பட்டது. உண்மை, நேர்மை,நேரம் கடைபிடித்தல் (punctuality) , சொந்த பணத்தை செலவு செய்து உழைப்பு போன்றவற்றை விட்டுக்கொடுக்காத பெரியார் ஈ.வெ.ராவின் தி.கவானது, அதற்கு எதிரான 'பண்புகளுடன்'அண்ணாதுரையின் தி.மு.க வளர்ந்த வேகத்தில், பலகீனமானது. அந்த தவறான திசையில் தி.மு.க பெற்ற வளர்ச்சிக்கு, ராஜாஜியின் ஆதரவு முக்கிய பங்கு வகித்தது. 1967இல் தி.மு. க ஆட்சியைப் பிடித்ததற்கும், 1969இல், மூத்தவர்களை பின் தள்ளி, கலைஞர் மு.கருணாநிதி முதல்வரானதற்கும் ராஜாஜி முக்கிய காரணமாவார்.

1944இல் விதை போட்ட பாவத்திற்காக, 1965இல் பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து, ராஜாஜி ஆதரவுடன் , 'காந்தி வழியில்' தமிழ்நாட்டில் முதன் முதலாக மாணவர்கள் முன்னெடுத்த, பொதுச்சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் சேதம் விளைவித்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.
https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  தி.மு.க வை வளர்த்து, ஆட்சியைப் பிடிக்க வைத்து, கலைஞர் மு.கருணாநிதியை முதல்வராக்கிய பாவத்திற்காக, தமிழ்நாட்டில் ராஜாஜி உயிராக நேசித்த‌  மது விலக்கு கொள்கை மரணத்திற்குள்ளானது; இன்று டாஸ்மாக் மூலம் தமிழ்நாடே பேராபத்தில் மூழ்கும் விளைவிற்கு அது துவக்கமானது. 

இந்தியாவில் தமிழ்நாடு ஒரு மாநிலமாக இருக்கும் போதே, தமிழ்வழியின் மரணப்பயணத்தைத் துவக்கி, தமிழ்நாட்டின் கனிவளங்களைச் சூறையாடி, அந்த கொள்ளையில் தமக்கு வாலாட்டி பங்கு பெறும் நாய்களாக தமிழர்களில் கணிசமானவர்களை மாற்றி, (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
https://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html  )',  ஆங்கிலவழிக் கல்வி மூலம் தமிழர்களை வேரற்றவர்களாக, தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமையற்ற, திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் மூழ்கிய , தமிங்கிலிசர்களாக, மாற்றி வரும் அபாயத்தில் சிக்கி,  திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடும் அளவுக்கு  பரவி, தமிழ்நாடு சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. 1947லிருந்து 1967 வரை தமிழ்நாடு எப்படி இருந்தது என்று அனுபவித்த தலைமுறையினர் இன்றும் உயிரோடிருக்கின்றனர். 1947இல் திராவிடநாடு பிரிந்திருந்தால், 1967க்கு முன்னேயே ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மீட்சிக்கே வாய்ப்பில்லாதவாறு சீரழிந்திருக்கும். நல்லவேளை திராவிட நாடு பிரியவில்லை.

மோடி ஆட்சியில் வரும் வருடங்களில் அடிப்படைக்கல்வி வரை தாய்மொழிக்கல்வி கட்டாயமாதல் நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். அப்போது தமிழ்நாட்டில் தமிழ்வழியின் மரணப்பயணம் தடுக்கப்படும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் சந்தன மரங்களை வேட்டையாடி, முற்றிலும் அழித்து, அண்டைமாநில காடுகளிலும், அந்தந்த மாநில அரசியல் கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து, சூறையாடுவது தப்பிக்கும்; தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் சூறையாடியது போக, எஞ்சிய இயற்கை கனி வளங்கள் தப்பிக்கும்;  என்றும் நம்புகிறேன். அரசியல் கொள்ளையர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது என்றும் நம்புகிறேன்.  

இந்துத்வா கட்சிகளிலும், திராவிடக் கட்சிகளிலும் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் காரணமாக சாதி, மத மோதல்கள் புத்துயிர் பெற்று, மேலேக் குறிப்பிட்ட நம்பிக்கைகள் சிதையவும் வாய்ப்பிருக்கிறது. வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில்,தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. ( https://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html )

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது. அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது.  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள்,  திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் வாலாகி, மனிதப்பண்புகளை இழந்த கள்வராகியதற்கு, மேற்கண்ட அனுபவ அறிவு காரணமா? இயல்பில் திரிந்தவர்கள் எல்லாம், சுயநல நோக்கில்,   'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற பொதுப்பிரச்சினைகளில் அக்கறை காட்டி, மதிக்க வேண்டிய தனிமனித உறவுகளை சிதைத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக' எப்படி வளர்ந்தார்கள்?
https://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html  ) தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா?(எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து, இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக வளர்த்து வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புபவர்களும், மனச்சாட்சியும், அறிவுநேர்மையும், உள்ளவர்களும்,  எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த வகையில் வாழ்பவர்களெல்லாம்,  உணர்ச்சி பூர்வ‌மாக‌ பேசுபவர்களையும், எழுதுபவர்களையும்,  'இவர் நம்மாளு' என்று  அவர்களுக்கு துணை போகாமல், அவர்களை ஒதுக்கினால்தான், தமிழ்நாடு தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று  நம்புகிறேன்.


Note: 'தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்'
https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html

No comments:

Post a Comment