Monday, April 6, 2015

‘தந்தி’ தொலைக்காட்சி:  கி.வீரமணி பேட்டி (2)

காலத்தின் 'நகைச்சுவையை' ரசிக்க;

 தந்தி தொலைக்காட்சியில் கி.வீரமணியின் பேட்டியில்,


"விடுதலையிலும், உண்மையிலும் ஒரு நாள் கூட கோட் பண்ணினதில்ல?" என்ற கேள்விக்கு,

விடுதலையிலும், உண்மையிலும் காட்டிட்டா, நான் இந்த பொறுப்பை விட்டு விலகிடறேன்." என்று பதில் சொல்கிறார் கி.வீரமணி.

'தந்தி தொலைக்காட்சி' அது தொடர்பாக, சரியான சான்றை வெளியிடவில்லை என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். கீழ் வரும் சான்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, கி.வீரமணி சார்பாக ஏதும் விளக்கம் வெளிவந்திருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன் அதை இங்கும் பதிவு செய்யலாம்.






                                             மேலுள்ள சான்றில் முக்கிய பகுதி:
கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி பெரியார் திடலில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கி. வீரமணி

பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது” 

http://keetru.com/index.php/component/content/article?id=3414 

காலத்தின் ''நகைச்சுவையை' ரசிக்க விரும்புபவர்கள் 1980 களுக்கு சற்று முன்னும், பின்னும், 'பெரியார் ஈ.வெ.ரா‍' பற்றியும், 'தேசியம்' பற்றியும் பேரா.அ.மார்க்ஸ் எழுதி வெளிவந்த, கட்டுரைகளையும், புத்தகத்தையும் படிக்கவும்.அன்று சக பேராசிரியராகவும், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பருமாக இருந்த அவர், நான், பெரியார் கொள்கைப் பற்றில் எழுதி, வெளியிட்ட 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற சிறு நூலை மறுத்து, 'கடுமையாக'க் கண்டித்து, கட்டுரைகளும், நூலும் வெளியிட்டார். அதிலும் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளிவந்திருக்கும். அவற்றைப் படித்து விட்டு, கீழ் வரும் அவரின் கருத்தையும் படித்தால் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அவரே மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். நீண்ட இடைவெளி; இப்போது எப்படி என்று எனக்கு  தெரியாது. 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களை, இந்த காலக்கட்டத்தில், 'ஆசிரியர்' என்று பேரா.அ.மார்க்ஸ் எழுதி வருவதானது, எனக்கு நம்பமுடியாத நகைச்சுவையாகும்.

பெரியார் ஈ.வெ.ரா சாகும் வரை பொது சிவில் சட்டத்தை (Common Civil Code) ஆதரித்து கருத்து வெளியிட்டது  உண்மையா? அவர் மறைவிற்குப் பின் அதை விடுத்து, பெரியார் அமைப்புகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருவது உண்மையா? அந்த மாற்றத்திற்கான விளக்கங்கள் ஏதும் வெளிவந்துள்ளதா? என்பது பற்றி ஆராய, எனது ஆய்வுப்பணிகளுக்கிடையே (R & D Projects) வாய்ப்பும் நேரமும் இதுவரை அமையவில்லை. இயலுமானால், பேரா.அ.மார்க்ஸ் அது பற்றி ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்தினால், நல்லது. அவர் வெளிப்படுத்துவதில் உணர்வுபூர்வ போக்கு, எப்போதுமே  சற்று தூக்கலாக இருந்தாலும், மனதறிந்து பொய் சொல்லக் கூடியவர் அல்லர். இன்றும் அப்படி இருப்பதாகக் கருதி, இதனை முன்வைக்கிறேன்.







எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423


‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து அவர்பால்

 வெறுப்பை உமிழ்வது அழிவு’- 'புது'க்குறள்


தமிழ்நாட்டில் பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள், உணர்வுபூர்வமாக தடம் புரண்ட போக்கு, 1944இல் முளைவிட்டு, 1949இல் வீரியம் பெற்று, 1965இல் பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து 'இந்தி எதிர்ப்பு போராட்டமாக' வடிவெடுத்து, 1967இல் ஆட்சியைப் பிடித்து, தமிழ்வழியின் மரணப்பயணத்தைத் துவக்கி, பொதுப் பிரச்சினைகளை வைத்து புதுப்பணக்காரர்கள் உருவான போக்கில்,திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் பின்பலத்தில்,  தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள் மட்டுமின்றி, இயற்கைக் கனிவளங்களையும் சூறையாடி, அந்த போக்கில் 'பலன் பெறும் சுய‌நலக் களவர்'களாக வாழ்வதே 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்ற நோயை அரங்கேற்றி, அம்பலமாகி, இன்று அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, தமிழ்நாட்டை மீட்கும் போக்குகள் முளை விடத் தொடங்கியுள்ள காலக் கட்டம் இது. "இந்தியாவில் முன்னுதாரணமாக;தமிழ்நாட்டின் மீட்சிக்கான, ‌  'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து விட்டது"
http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html 

சுயலாப நட்ட நோக்கற்ற இயல்பான அன்புடன், தனதளவிலும், குறைந்த பட்சம் தனது சமூக வட்டத்திலும் தனி மனித உறவுகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்களே இந்த சினர்ஜி சமூக செயலில் ஈடுபட அருகதையுள்ளவர்கள். 'பகுத்தறிவு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' உள்ளிட்ட இன்னும் பல கொள்கைக் கூடாரங்களில் 'வாழ்வியல் புத்திசாலிகளாக' வாழும் சமூகக் கள்வர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கி, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்பதற்கு, அந்த அருகதையுள்ளவர்களே, பங்களிப்பு வழங்க‌ முடியும்; காலத்தின் நகைச்சுவைகளையும் ரசிக்க முடியும்.

No comments:

Post a Comment