Thursday, July 4, 2019


உச்சநீதி மன்ற தீர்ப்புகள்;


பொருள் மொழி பெயர்ப்பு இறக்குமதியில் (Semantic Import) உள்ள அபாயங்கள்


'தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்ஸ்டாலின் வலியுறுத்தல்' என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்வரும் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது.

'உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும்' என தி.மு.. - பா... கட்சிகள் வலியுறுத்தி உள்ளன……."ஆங்கிலம் தவிர கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும்.

அதேவேளையில் தமிழ் மொழி அந்தப் பட்டியலில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. செம்மொழித் தமிழை உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது உலகத் தமிழர்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்து விடும். எனவே அப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும்" தி.மு. தலைவர் ஸ்டாலின்; https://www.dinamalar.com/news_detail.asp?id=2311978

அச்செய்தியின் கீழே வெளிவந்திருந்த கீழ்வரும் வாசகர் கடிதமும் எனது கவனத்தினை ஈர்த்தது.

"எத்தனையோ வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை, பத்திரிகையில் செய்தி வரணும் என்பதற்காக இப்படி பேசுவதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம்"; வாசகர் கடிதம்...

ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, அசாமி மற்றும் ஒரியா என 5 மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில், தமிழில் மொழிமாற்றம் செய்ய உச்சநீதி மன்றம் ஏன் தயங்குகிறது? என்ன பிரச்சினை? என்று ஸ்டாலின் உள்ளிட்டு தமிழ்நாட்டில் எந்த தலைவரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.

அதனை உச்சநீதி மன்றமும் தெளிவுபடுத்தியதாகவும் தெரியவில்லை.

முதலில் ஓர் ஐயம்.தமது குடும்பப் பிள்ளைகளை எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைக்கும் தலைவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் தமிழில் மொழி மாற்றம் செய்யக் கோருவதில் நேர்மை இருக்கிறதா? 'அந்த' தலைவர்கள் வழியில் குக்கிராமங்களிலும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் ஊடுருவி வரும் சூழலில், அக்கோரிக்கைக்கான சமூக வலிமையானது பலகீனமாகாதா?

உச்சநீதி மன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்வதில் உள்ள தடையைச் சுட்டிக்காட்டிய, எனது கீழ்வரும் வாசகர் கடிதம் தினமலரில் வெளிவந்துள்ளது.

ஜப்பானிய மொழியைப் போலவே, இந்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி டெக்னிகல் சொற்கள் ஒலிப்பியல் ஃபோனடிக் முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள். தனித்தமிழ்ப் பிரியர்கள் செல்வாக்கில், திராவிட ஆட்சியில் அந்த முறை ஒழிந்து, பொருள் மொழிபெயர்ப்பு மூலமாக செமாண்டிக் இறக்குமதி செய்கிறார்கள். அந்த முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தால், பொருள் சிதைவுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். எனவே தமிழக அரசு ஃபோனடிக் முறையை அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே, இச்சிக்கல் தீரும்.” (https://www.dinamalar.com/news_detail.asp?id=2311823#4772182 )

உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சட்டம் தொடர்பான சொற்களை (Legal Terms) தமிழில் மொழிமாற்றம் செய்ய இரண்டு வழிகளே உள்ளன.

ஒன்று, ஆங்கிலத்தில் உள்ள சொல்லுக்கு முழுவதும் இணையான தமிழ்ச்சொல் இருந்தால், அதனைப் பயன்படுத்தலாம். அத்தகைய தமிழ்ச்சொல் இல்லாத நிலையில், புதிய தமிழ்ச்சொல்லினை உருவாக்கி பயன்படுத்தலாம். அதன் பொருளைப் புரிய வைக்க, மீண்டும் 'அந்த' ஆங்கிலச் சொல்லின் துணையையே நாட வேண்டும். இந்த மொழிமாற்ற முறையானது, பொருள் மொழிபெயர்ப்பு இறக்குமதி முறையாகும். (Semantic import).

மேற்குறிப்பிட்ட சிக்கல்களைத் தவிர்க்க, இரண்டாவது வழியும் உள்ளது. அது ஒலிப்பியல் இறக்குமதி ஆகும். (Phonetic Import).

உச்சநீதி மன்ற தீர்ப்பில் உள்ள சட்டம் தொடர்பான ஆங்கிலச்சொல் ஒலிப்பை முன்மாதிரியாகக் கொண்டு, அந்த ஒலிப்புக்கு ஓரளவு ஒத்து வரும் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஓரளவு 'ஓசை ஒற்றுமையில்', ஒரு புதிய தமிழ்ச்சொலினை உருவாக்கிப் பயன்படுத்துவதானது, ஒலிப்பியல் இறக்குமதி ஆகும். (Phonetic Import).

இது தொடர்பாக, நான் முன்வைத்த சான்றுகளை அறிவுபூர்வமாக மறுக்காமல்,

"தமிழ் மொழி விதயம் என்றால், உடனே இட்டுக்கட்டி இல்லாத காரணங்கள் சொல்லி ஏய்ப்பதே வேலையாக அலைகிறார்கள். இந்திக்காரன் முட்டாள்த்தனம் செய்தால் தமிழனும் செய்யணுமா என்ன? வஞ்சகர்கள். ஒரீஇ என்பதை ஒருத்தன் கேலி செய்கிறான் என்றால் அவனை ஐயப்பட வேண்டும்"

என்பது போன்ற பின்னூட்டங்கள் (Feedback) எனக்கு வந்துள்ளன.

வாதப்பொருளின் எல்லை வரம்பை மீறி, வாதிப்போர் மீது பாயும் அநாகரீகம் பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/10/ )

பொதுவாக புலமையாளர்கள் எல்லாம் இது போன்ற பின்னூட்டங்களை வெளிப்படுத்தும் நபர்களுடன் விவாதிப்பதைத் தவிர்ப்பார்கள். பொதுவாக தி./தி.மு. ஆதரவாளர்களில் அதிகார பீடங்களுக்கு நெருக்கமானவர்களிடம், இது போன்ற பின்னூட்டங்கள் வெளிப்பட்டு, புலமையாளர்கள் அத்தகையோரிடம் விவாதிப்பதைத் தவிர்த்துப் பயணித்தார்கள். அதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களில் பலர், அறிவுபூர்வ விமர்சனங்களை எல்லாம் துரோகமாகக் கருதி கண்டித்து, தமிழ்நாட்டின் அறிவுப்புலத்தினை இன்னும் சீரழித்தார்கள்விவாதத்தில் தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக தம்மைக் கருதிக் கொண்டு, விவாதத்தில் ஈடுபடும் மன‌ நோயாளிகளும் வளர்ந்தார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அவ்வாறு தம்மை விமர்சித்தோரை சுட்டுக் கொன்றார்கள். (குறிப்பு-2 கீழே)


1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களைப் படித்து, 1944க்கு முன் தமிழ்நாடு பயணித்த போக்கினை உணர்ந்த‌ நான், என்னுடன் விவாதிப்பவர்கள் வெளிப்படுத்தும் அநாகரீகப் போக்குகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விவாதிக்கிறேன்; தமிழ்நாட்டில் அறிவுப்புலத்தில் உணர்ச்சிபூர்வ போக்குகளின் செல்வாக்கினை வீழ்த்தும் நோக்கில். 

உச்சநீதி மன்ற தீர்ப்புகளில் உள்ள சட்டம் தொடர்பான சொற்கள் எல்லாம், பொருள் மொழி பெயர்ப்பு முறையில் மொழி மாற்றம் செய்து வெளிவருவதானது எவ்வாறு தமிழுக்கும் தமிழர்களுக்கும் கேடாகும்? என்பது பற்றி அறிவுபூர்வமாக விவாதிக்க விரும்புபவர்களின் பார்வைக்கு, கீழ்வருவது உரியதாகும்

ஆங்கிலத்தை பொருத்த வரை பல்லாயிரம் சொற்களை லத்தீன கிரேக்க மொழிகளிலிருந்து, தனி-ஆங்கில கவலையின்றி இணைத்து கொள்வதே மரபு.

கணிததின் பிறிவுகளாகிய துறைகளை எடுத்துக்கொள்வோம் - ஜியாமெட்ரி,

ட்ரிகனாமெட்ரி இரண்டும் கிரேக்க சொற்கள், கிரேக்க காலத்திலிருந்தவை;

கால்குலஸ் லத்தீன சொல்; லெப்நிட்ஸால் ஜெர்மனிய மொழியின்றி

லத்தீனமொழியிலேயே அறிமுகப்படுத்தப்பட்ட சொல்; அல்ஜீப்ரா ஒன்பதாம்

நூற்றாண்டு அரபு மொழிச்சொல், அல் குவாரிஸ்மியின் நூலிலிருந்து.

தமிழிலும் பூகோளம், சதுரங்கம், வர்கம், வர்கமூலம் என்று தமிழை போல் ஒலிக்கும் மிளிரும் சம்ஸ்கிருத கலைச்சொற்கள் உள்ளன.

தனிமப்பட்டியலை ஆய்ந்தால் முன்காலத்துப்பெயர்களை தவிர பலவும் லத்தீன பெயர் கொண்டவை. பொடாசியம் விதிவிலக்கு அரபு சொல் அல்கலி என்பது

லத்தீனத்தில் கலீயம் என்று தாவியது. பாட் ஆஷ் (பானை சாம்பல்) என்ற ஆங்கிலவேறும், அரபு வழி லத்தீன் உருவும் உண்டு பொடாசியத்திற்கு’;
- VarahaMihira Gopu; இணைய தேடலில் கிடைத்தது.



தொல்காப்பியத்தில் 'ஒரீஇ' தொடர்பான சூத்திரம் என்பதானது;

பிறமொழிச் சொற்களில் உள்ள எழுத்துக்களில், தமிழ் எழுத்தொலிகள் போல் இல்லாத‌, அந்த பிறமொழி எழுத்துக்களை ஒலிச்சிதைவுடன் (acoustic-phonetic- distortion of the letters of the non-Tamil words,) எவ்வாறு அச்சொற்களை தமிழில் இறக்குமது செய்வது? அவ்வாறு தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு எல்லாம், தமிழ்ச்சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிகள் ஏன் பொருந்தாது? ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய உருவாக்கப்பட்ட 'கடகானா' (katakana syllabary) முறையானது, எவ்வாறு தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில் அமைந்துள்ளது? தொல்காப்பிய  'ஒரீஇ' முறையானது, எவ்வாறு உலக மொழிகளுக்கான பிறமொழிச்சொற்கள் இறக்குமதிக்கான இலக்கணம் ஆகும்?
என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘‘orIi' - 'ஒரீஇ' – A Misunderstanding that derailed the Tamil development’; http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_31.html &  https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&feature=youtu.be  & தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்றபங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’; http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html)


குறிப்பு-1தமிழ்நாட்டில் வெளிப்பட்ட எதிர்ப்பிற்குப் பின்னர், உச்ச நீதி மன்ற தீர்ப்பு மொழிமாற்றம் செய்து வெளிவரும் மொழிகளின் வரிசையில் தமிழும் இடம் பெற்றுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. (https://www.ndtv.com/india-news/supreme-court-verdicts-will-be-available-in-7-languages-including-tamil-2063398 )

முதலில் அந்த வரிசையில் தமிழ் ஏன் இடம் பெறவில்லை? என்பது பற்றிய ஆர்வம் இல்லாமல் போவது ஆபத்தாகும். ஏனென்றால் உச்சநீதி மன்ற தீர்ப்புகளில் உள்ள சட்டம் தொடர்பான சொற்கள் எல்லாம், பொருள் மொழி பெயர்ப்பு முறையில் மொழி மாற்றம் செய்து வெளிவந்தால், பாதிக்கப்படுவது உச்ச நீதி மன்றம் அல்ல. மேற்குறிப்பிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்படப் போவது, தமிழும், தமிழர்களுமேதமிழில் சரியாக எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்களும், இளம் தலைவர்களும் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில், அது பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

குறிப்பு-2: நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமானபேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama & Rajini Rajasingham Thiranagama: Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy
By D.B.S. Jeyaraj; http://dbsjeyaraj.com/dbsj/archives/33112  (‘தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு - 'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை - கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

1983க்கு முன், பிரபாகரன் உள்ளிட்ட 'பொடியன்கள்' எல்லாம், இலங்கையின் காவல் துறையால் தேடப்பட்ட போது, அப்போது பேராசிரியர்களாக பணியாற்றிய நிர்மலாவும், நித்தியானந்தமும் அவர்களை தங்கள் வீட்டில் இரகசியமாக தங்க வைத்துக் காப்பாற்றினார்கள். 1983க்கு பின், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்த போது, பிரபாகரனிடம் வெளிப்பட்ட குறைபாடுகளை அவர்களும் ஆண்டன் பாலசிங்கமும் நானும் விவாதித்தோம்பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம்என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார்.(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html) அப்போது நான் நித்தியானந்ததிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன். 'நீங்கள் எப்படி இவர்களை ஆதரித்து, இந்தபடி வளர்த்துள்ளீர்கள்? " என்று கேட்டேன். அதற்கு அவர் "அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் எல்லாம் சொகுசாக வாழ்ந்த‌ வாய்ப்பேச்சு ,வீரர்களாக எங்களுக்கு காட்சி அளித்தார்கள். எனவே இலங்கை அரசை எதிர்த்து, இந்த பொடியன்கள் வன்முறைகளைக் கையாண்ட போது, அவர்கள் எங்களை ஈர்த்தார்கள். எனவே அவர்களை ஆதரித்தோம்" என்றார்.. அதன்பின் சில நாட்களில் அவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். நிர்மலா லண்டனில் வாழ, யாழ்ப்பாணத்தில் பேராசிரியராக பணியாற்றிய அவரின் தங்கை, விடுதலைப்புலிகளை விமர்சித்தற்காக சுட்டுக்கொல்லப்பட்டார்.

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment