Monday, July 15, 2019


'ஒரீஇ' தந்த வெளிச்சம் (2):


தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் இலக்கியசான்றுகள் அடிப்படையில்;



காலனிய மனநோயில் 'ஒரீஇய' பெண்ணுரிமை




தொல்காப்பியத்தில் வரும் 'ஒரீஇ' சூத்திரம் தொடர்பாக;

சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதிக்குள்ளாகும் சொல்லில் உள்ள எழுத்துக்களில், எந்த எழுத்தின் ஓசைக்கு இணையான ஓசை உள்ள தமிழ் எழுத்து இல்லையோ, 'அந்த' எழுத்தின் ஓசையை அப்படியே இறக்குமதி செய்ய முடியாது. எனவே ஒலிப்பியல் இறக்குமதிக்கு (Phonetic Import) தகுதியற்ற 'அந்த' எழுத்தின் ஓசைக்குப் பதிலாக, 'அந்த' ஓசைக்கு நெருக்கமான தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தி, வட சொல்லினை, தமிழ் எழுத்துக்கள் மூலமாக இறக்குமதி செய்தலே, 'ஒரீஇ' முறையாகும். (‘'ஒரீஇ' தந்த வெளிச்சம் (1); தனித்தமிழ் அறிவின் 'கறுப்பு - வெள்ளை நோய்'; 

அதாவது சமஸ்கிருத மொழியில் உள்ள ஒரு சொல்லில் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் ஓசைகளில், தமிழில் 'ஒரீஇ' மூலமான தேந்தெடுத்தலில் அனுமதிக்க முடியாத ஓசை தொடர்புடைய எழுத்தானது, 'அந்த' தேர்தெடுத்தல் முறையில் அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது தமிழ் மொழியின் ஓசை அமைப்புக்கு ஏற்ற எழுத்தை அனுமதித்து, ஏற்க முடியாத எழுத்தை அனுமதிக்க வழியின்றி மறுக்கும் முறையே ஒரீஇ முறையாகும். அந்த முறையில் அனுமதிக்கப்படும் எழுத்துக்கள் புணர்ந்தே தமிழில் வடசொல் உருவாகும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான செயல்முறையில், அனுமதிக்கக் கூடியவைகளை மட்டும் அனுமதிக்கும் வடிப்பான் (Filter) போன்றே 'ஒரீஇ' செயல்படுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் 'இனம்' என்ற சொல்லின் அடிப்படையில், 'சிற்றின' மனிதர்கள் எவ்வாறு செல்வாக்குள்ள 'தீயின' மனிதர்களாக வளர்ந்தார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘'நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460’; 

பழந்தமிழ் இலக்கியங்களில் 'இனம்' என்ற சொல்லில் இடம் பெறும் மனிதர்களில், 'சீரினம்' என்ற அடிப்படையில் உள்ள மனிதர்களும் இருப்பார்கள். 'சிற்றினம்' என்ற அடிப்படையில் உள்ள மனிதர்களும் இருப்பார்கள். ‘'பாவம், புண்ணியம்' அல்லது 'நல்லது, கெட்டது' போன்று பிரித்து பார்க்காமல், குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்து மனித உறவுகளையும், 'வியாபார' நோக்கில் அணுகி, கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம், இழிவைப் பற்றிய கவலையின்றி, 'பொருள் ஈட்டும் நோக்கில்' செயல்படும் (processing) மூளை உள்ளமனிதர்களையெல்லாம், 'சிற்றினமாக', சங்க இலக்கியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

'இனம்' என்ற அடிப்படையில் இடம் பெற்ற‌ 'சிற்றினம்' மனிதர்களை அனுமதிக்காமல் (ஒரீஇ), ‘சீரினம்' மனிதர்களை மட்டும் அனுமதித்து, 'அந்த' சீரின மனிதர்கள் சேர்ந்து உருவான‌ பெருமை மிகு 'பேரினம்' என்ற அடிப்படையில் உருவான பரந்த சுற்றத்தை விட்டு பிரியாமல் வாழும் 'தலைக்கோன் மகளிர்' பற்றிய சான்று வருமாறு:

சீரின மதித்துச் சிற்றின மொரீஇப்
பேரினத் தவரொடு பெருங்கிளை பிரியாத்
தலைக்கோன் மகளிர்
பெருங்கதை 5. நரவாண காண்டம் 131 – 134

'தலைக்கோன் மகளிர்எந்த அளவுக்கு புலமை மிக்கவர்கள்? என்பது தொடர்பான சான்றுகளை அடுத்து பார்[ப்போம்.

'திருக்குறளில் (118) இடம் பெற்ற 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்' தலைக்கோலே' என்பதை எனது ஆய்வு மூலமாக நிறுவியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தலைக்கோல் எனது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது பட்டமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பிலாலான கோல் என்ற விளக்கம் மட்டுமே உரையில் இருந்தது. அது என்ன குறிப்பிட்ட வடிவமைப்பு என்ற ஐயம் எழுந்தபோது, அது தொடர்பான ஒரு புராணக்கதை சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் காணப்பட்டது.

சிலப்பதிகாரம் :

அரங்கேற்றுக் காதை 1 - 3;      அரங்கேற்றுக் காதை 119 -120 ;

கடலாடு காதை       18 - 25;          நடுகற்காதை        100 - 101;

அந்த தலைக் கோல் வடிவம் இந்திரன் மகன் சயந்தனோடு தொடர்பு படுத்தப் பட்டிருந்தது.

எனக்கு தெரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் இது தொடர்பாக கேட்ட போது, இந்திரனுக்கு மகனே கிடையாது என்றும், சயந்தன் இந்திரனின் இன்னொரு பெயராக இருக்கக் கூடும் என்றும் உறுதியாகக் கூறினார்.

அந்த குழப்பத்திலிருந்து தெளிவு பெற சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத் தலைவர் முனைவர் ஆர்.தியாகராஜனை அணுகினேன். அவர் உடனே அவர் துறை நூலகத்திலிருந்த ‘Puranic Encyclopaedia என்ற நூலை எடுத்து கொடுத்தார். அந்நூலில் இருந்த செய்திகள் எனது குழப்பத்தைத் தெளிவுபடுத்தியதுடன், மேலேக் குறிப்பிட்ட கண்டுபிடிப்புக்கும் திறவுகோலானது.
(Puranic Encyclopaedio -- VETTAM MANI  - Motilal Banarsidoss--1979   Patna)

இந்திரனுக்கும் அவர் மனைவி சசிதேவிக்கும் மகனாகப் பிறந்தவனே சயந்தன். (M.B. Adi Parva chap 112, Stanza 3 and 4).

தலைக்கோல் ஏன் சயந்தன் வடிவில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது.

ஒரு சமயம் இந்திர தர்பாரில் தலைமை விருந்தினராக அகஸ்தியர் இருக்கிறார். இந்திரன் அவரை கெளரவிக்க ஊர்வசியை நடனமாட ஏற்பாடு செய்கிறார். நடனத்தின் இடையே இந்திரன் மகன் சயந்தன் அரங்கிற்குள் நுழைகிறான்.சயந்தன் கண்களும் ஊர்வசியின் கண்களும் சந்திக்க காதல் அரும்பியது. அதனால் ஊர்வசியின் கால்கள் தாளத்தில் தடுமாறுகிறது. அதன் விளைவாய் நடனத்திற்க்கேற்றவாறு நாரதர் யாழில் வாசித்த இசை தடுமாறுகிறது. அகஸ்தியர் முதலில் சயந்தன் மீது கோபப்பட்டு அவனை பூமியில் மூங்கிலில் தலைக் கோலாக சாபமிடுகிறார். அடுத்தபடியாக ஊர்வசியைப் பூமியில் மாதவியாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். அதன்பின் நாரதருக்கு சாபமிடாமல், அவர் வாசித்த யாழ் பூமியில் மக்களின் யாழாகச் சாபமிடுகிறார்.

அதாவது சுர இசையையும் தாள இசையையும் சமன் செய்து வழி நடத்தும் தலைக் கோலாக , இந்திர சபையில் அந்த சமனைக் கெடுத்த சயந்தன் சாபமிடப்படுவது தான் இங்கு முக்கியமாகும்.

மேலேக் குறிப்பிட்ட தெளிவிற்குப் பின் மேலும் ஆய்வுகள் செய்து ' சமன் செய்து சீர் தூக்கும் கோல்' ஏன் தராசாக இருக்க முடியாது என்றும், அது சுர இசையையும், தாள இசையையும் சமன் செய்து நடனத்திற்கு வழி காட்டும் தலைக் கோலே என்றும் நிறுவியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2510  )

அதன்பின் தமிழில் எழுத்தின் ஒலிக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும் ஆய்வு செய்து வெளியிட்டேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2445 )

ஆக வாயு புராணம், எனது 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற முக்கிய கண்டுபிடிப்புக்கான சிக்னலை எவ்வாறு வழங்கியது, என்பது தெளிவானது. (‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

'அந்த' ஆய்வின் தொடர்ச்சியாக, நான் எவ்வாறு 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' கண்டுபிடித்தேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

'சிற்றினம்' மனிதர்களை அனுமதிக்காமல் (ஒரீஇ), சீரினம்' மனிதர்களை மட்டும் அனுமதித்து, பெருமை மிகு 'பேரினம்' என்ற அடிப்படையில் உருவான பரந்த சுற்றத்தை விட்டு பிரியாமல் வாழும் 'தலைக்கோன் மகளிர்' பற்றிய சான்றுகளுடன்;

அதே காலக்கட்டத்தில் மேற்கத்திய உலகில் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள்? என்பது தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிட்டால் தான்;

மேற்கத்திய உலகில் 'பெண் உரிமை' தொடர்பான குறிப்பு ஆயத்திற்கு (paradigm) அடிமையாகி, தமிழ்நாட்டிலும், 'அந்த' காலக்கட்டத்தில் அவ்வாறே இருந்ததாக யூகிப்பதானது, எந்த அளவுக்கு அபத்தமானது? என்பது தெளிவாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். நாகசாமி போன்ற தொல்லியல் அறிஞர்கள், அது தொடர்பான தொல்லியல் சான்றுகளை எல்லாம், தொலைக்காட்சி பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். (தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது சமஸ்கிருத மூலங்களில் (Sanskrit sources) இருந்து உருவானதாக, நாகசாமி வெளியிட்ட கருத்து தவறு என்பதை நான் விளக்கியுள்ளேன்; http://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html.  திருக்குறள் (423) வழியில் அவரின் கருத்தினை அணுகுவதே சரியாகும்.)

இன்றும் ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தியாவில் ஊதியத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இன்றும் அந்த பிரச்சினை எவ்வாறு உள்ளது? என்று ஆய்வதும் பலனளிக்கும்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பெண்கள் எப்போது வாக்குரிமை பெற்றார்கள்? பெண் கல்வியும், வேலை வாய்ப்புகளும், ஊதியமும், எவ்வளவு மோசமான நிலையில் இருந்து, எந்தெந்த காலக்கட்டங்களில் முன்னேறி, இன்று என்ன நிலையில் உள்ளது?

ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations) எப்படி தீர்மானிப்பது?

மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனித உரிமை மீறல் ஆகாதா?

அதிலும் தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி முன்வைக்கப்படும் பெண்ணுரிமை என்பதானது, சமூகத்திற்கு எந்த அளவு கேடு பயக்கும்?

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தமக்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது குடும்பத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது சமூக வட்டத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; பொதுவில் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; என்று பேச்சுரிமை பல தளங்களில் செயல்படுவதாகும். அந்தந்த சமூக பாரம்பரிய, பண்பாடுகளின் அடிப்படையில் அவை செயல்படுவதாகும். .நாவின் மனித உரிமைகள்,  அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில் செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும். மேற்கத்திய நாடுகளில் ' பூங்கா- park- ' போன்ற பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து புரள்வது அவர்களுக்குள்ள உரிமை. அதைப் பார்த்து, இந்தியாவில் அதை அனுமதிக்க முடியுமா? அந்த நோயில் சிக்கி, இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க, ஆண்- பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா? (‘மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்; 'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள்’; 

எனவே தமிழ்நாட்டில் மேற்கத்திய குறிப்பாய (Western Paradigm) அடிப்படையில்,

தமிழ்நாட்டில் முன்வைக்கும் பெண்ணுரிமையானது, தமிழ்நாட்டின் வரலாற்றில் கானியத்திற்கு முன் இருந்த பெண்ணுரிமை பற்றிய புரிதலின்றி, காலனிய மனநோயில் சிக்கி முன்வைக்கப்படும் பெண்ணுரிமை ஆகும்

காலனியத்திற்குப் பின் அரங்கேறிய சமூக நோய்களை எல்லாம், காலனியத்திற்கு முன்பே இருந்ததாக நம்ப வைத்த சூழ்ச்சியையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அவ்வாறு காலனிய மனநோயில் சிக்கி முன்வைக்கப்படும் பெண்ணுரிமையானது, தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் இலக்கியசான்றுகள் அடிப்படையில் முன்வைக்கப்படும் பெண்ணுரிமையில் இருந்து 'ஒரீஇய' பெண்ணுரிமை ஆகும்பிறமொழிச் சொற்களை தமிழில் ஒலிப்பியல் இறக்குமதி (Phonetic import) செய்யும் போது தவிர்க்கப்பட வேண்டிய பிறமொழி எழுத்துக்களைப் போல, பெண்ணுரிமை தொடர்பாக உலக அளவில் வெளிப்படும் கருத்துக்களை, தமிழ்நாட்டில் பெண்ணுரிமை நோக்கில் இறக்குமதி செய்யும் போது, தவிர்க்கப்பட வேண்டியதாக‌, காலனிய மனநோயில் சிக்கி முன்வைக்கப்படும் பெண்ணுரிமை இருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று வீச்சுடன் செயல்படும் மனித உரிமை மற்றும் பெண்ணுரிமை அமைப்புகளும், அவர்களை ஆதரிக்கும் என்.ஜி.ஓக்களும், எந்த காலக்கட்டத்தில் உதயமாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளார்கள்? அதே காலக்கட்டதில் தான், தமிழ்நாட்டில் அரசியலானது, பொதுவாழ்வு வியாபாரமாகி, சமூக சீரழிவானது அதிகரித்ததா? குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் இருந்த 'சமூக சுமை தாங்கிகளும்’, தமிழ்நாட்டில் வற்றத் தொடங்கி விட்டனவா
(https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_12.html)


தாம் வாழும் பகுதியில் செல்வாக்கானவர்கள் சம்பந்தப்பட்ட அநீதிகளை எதிர்க்கும் 'முட்டாளாக'(?) வாழாமல், 'யாரை எதிர்த்தால், அதிக பாதிப்பின்றி வெற்றியும் பாராட்டும் பெறலாம், என்று 'புத்திசாலித்தனமாக' கணக்கிட்டு, 'போராடி' புகழுடன் வலம் வரும் மனித உரிமை வீரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? என்ற அறிவுபூர்வ விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சுமார் 50 வருடங்களில் 'ஒரீஇய' மனித உரிமை, பெண்ணுரிமை என்.ஜி.ஓக்கள் வளர்ந்த போக்கும், தமிழ்நாட்டைச் சீரழித்த அரசியல் கொள்ளையர்கள் வளர்ந்து போக்கும், ஒன்றையொன்று எந்த அளவுக்கு வளர்த்தது? என்ற முனைவர் பட்ட ஆய்வினை எவரும் மேற்கொண்டால், அதற்கு என்னால் இயன்ற அளவுக்கு உதவ முடியும்.

அது போன்ற சமூக சூழலில் உருவான‌ 'சிற்றின' மனிதர்கள், செல்வாக்குள்ள 'தீயினமாக' உள்ள சமூகத்திற்கான, 'புதிய பெருங்கதை' பாடல்:

'சிற்றின மதித்து சீரின மொரீஇப்
தீயினத் தவரொடு பெருங்கிளை பிரியாக்
கீழறி வினத்தோர்

வாழ்க்கையைக் காதலிக்க தெரிந்த புத்திசாலித் தமிழர்கள் பின்பற்ற வேண்டியது:

சீரின மதித்துச் சிற்றின மொரீஇப்
பேரினத் தவரொடு பெருங்கிளை பிரியாத்
தலைக்கோன் மகளிர்
பெருங்கதை 5. நரவாண காண்டம் 131 – 134

'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், தலித், பொதுவுடமை, மனித உரிமை, பெண்ணுரிமை' உள்ளிட்டு இன்னும் பலமுகமூடிகளுடன் வாழும் பொதுவாழ்வு வியாபாரிகள் எவரும், மது சமூக வட்டத்தில் நுழைய முடியாத (ஒரீஇ) வடிப்பான்களுடன் வாழ்பவர்கள் எல்லாம், 'பேரினமாக' ஒன்று சேரும்ஒரீஇசமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் உள்மறையாக (Latent) வளர்ந்து வருகிறது.

பேரினத்தவரொடு பெருங்கிளை பிரியாதவர்கள் எல்லாம், தீயினத்தவரொடு பெருங்கிளை பிரியாதவர்களிடமிருந்து விலகும் ஒரீஇ’ சமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதானது, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல அறிகுறியாகும்அதன் வெளிப்பாடாக‌, ஆதாயத்திற்காக தம்மை புகழ்வது தெரிந்தும், அதில் கள்ளுண்ட வண்டு போல மயங்கி வாழும் தலைவர்கள் எல்லாம், சாமான்யர்களின் உரையாடல்களில் கோமாளிகளாக வலம் வருகிறார்கள். நேர்மையுடன் வாழ்பவர்களை மட்டுமே, தமிழ்நாட்டில் வியந்து மதிக்கும் படலம் தொடங்கி விட்டது.



குறிப்பு: .வெ.ரா அவர்களின் பெண்ணடிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிப்பு:

இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்............மனித சமூக வளர்ச்சிக்கு இரு பாலார் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது." 'பெண் ஏன் அடிமையானாள்?' பக்கம் 23 – 24

பெரியார் மேலே எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகளில் சில கீழே உள்ளன.

How Men's Brains Are Wired Differently than Women's?
male brains had more connections within hemispheres, whereas female brains were more connected between hemispheres;
male brains may be optimized for motor skills, and female brains may be optimized for combining analytical and intuitive thinking;

Data from this study and previous research supports the notion that males and females rely on different brain networks to perform the same function, with the implications must notable in the academic realm. Halpern and colleagues (2007) suggest that we can use this knowledge to teach female and male students ways to solve problems that correspond to their most efficient cognitive process (i.e. verbal versus visuospatial solution strategies) to allow more flexibility in their problem solving and positively impact performance overall.’ (‘Gender differences in working memory networks: A Brain Map meta-analysis’; http://brainmap.org/pubs/Hill_BP_14.pdf )

செவிலியர் (nursing) பணியில் பெண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, ஆண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகளில் ஆண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, பெண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; என்பது என் கருத்து.
(https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html)

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment