Sunday, March 3, 2019


செம்மொழி நிறுவனத்தில் நாகசாமி? (1)

 

தி.மு. தலைவர் ஸ்டாலின் கருத்தும், தமிழக முதல்வர் கடமையும்


செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம் பெற்றிருக்கிறார். தமிழர்களை - அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பாஜக அரசு அவமானப்படுத்துகிறது. ஒரு ஆய்வு அல்ல - பல்வேறு ஆய்வுகளை - கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும், வேதங்களும் தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றித் தேர்வு செய்ய முடியும்?  

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

 

'மாதொரு பாகன்' நூலை இந்துத்வா ஆதரவாளர்கள் எதிர்த்துள்ள நிலையில்

மோடி ஆட்சியில் 'மாதொரு பாகன்' ஆங்கில நாவலுக்கு சாகித்யா அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.

2017இல் சமஸ்கிருதத்திற்கான உயரிய விருது, இராமாயணத்தை மொழிபெயர்த்த ராபர்ட் கோல்ட்மேனுக்கு வழங்கப்பட்டது. அந்த மோழிபெயர்ப்பினை விட சிறப்பான மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளதை ராஜிவ் மல்கோத்ரா குறிப்பிட்டுள்ளார். 
அந்த வகையில், செம்மொழி குழுவில் நாகசாமி இடம் பெற்றுள்ள முடிவும் எடுக்கப்பட்டிருந்தால் வியப்பில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக்குறைவின் காரணமாக தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்க விலக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எனவே மேலே குறிப்பிட்ட கருத்தில் அரசியலுக்காக வெளிப்பட்ட வாசக இரைச்சலைத் தவிர்த்து, அதில் உள்ள நியாயத்தினை பரிசீலித்து, உரிய நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்வார்;
 
என்பது எனது எதிர்பார்ப்பாகும். அந்த நியாயம் என்ன? என்பதை இங்கு விளக்கியுள்ளேன்.

தமிழ் மொழியிலிருந்து தான் சமஸ்கிருதம் தோன்றியது என்றும், சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்றும், ஆய்வுகள் வெளி வருவதில் தவறில்லை;

அதனை அறிவுபூர்வ திறனாய்வுக்கு உட்படுத்தி சரி, அல்லது தவறு என்று நிரூபிப்பதை, 'அந்த' ஆய்வாளர்கள் வரவேற்கும் வரையில்.

தமது ஆய்வுக்கான எதிர்ப்பினை இருட்டில் தள்ளி, தமக்குள்ள செல்வாக்கினை தவறாகப் பயன்படுத்தி, ஊடக வெளிச்சத்தில் தமது ஆய்வு சரியென்று விளம்பரம் செய்பவர்கள் யாராயிருந்தாலும், அத்தகையோர் சமூகத்திற்கு கேடானவர்கள் ஆவார்கள்.

சுமேரிய மொழி தொல் தமிழ் என்றும், சுமேரிய மொழி மாற்றத்திற்கு உள்ளாகி சமஸ்கிருதம் தோன்றியதால், சமஸ்கிருதமும் திராவிட மொழியே என்றும் மலேசியாவைச் சேர்ந்த மறைந்தமுனைவர் லோகநாதன் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  

அதனை அறிவுபூர்வ திறனாய்வுக்கு உட்படுத்தி சரி, அல்லது தவறு என்று நிரூபிப்பதையும் நான் வரவேற்கிறேன். ஆனால் அந்த ஆய்வினையும், அதன் மறுப்பையும் இருட்டில் தள்ளுவதை எதிர்க்கிறேன். தமது ஆய்வுக்கான எதிர்ப்பினை இருட்டில் தள்ளுவதை ஆதரிக்காமல், இந்துத்வா புலமையாளர் ராஜிவ் மல்கோத்ரா போலவே (https://en.wikipedia.org/wiki/Rajiv_Malhotra), அந்த எதிர்ப்பினை அறிவுபூர்வமாகவே சந்தித்து மறைந்தவர் லோகநாதன் என்பதையும் நான் அறிவேன்.

லோகநாதன், ராஜிவ் மல்கோதரா போன்று முனைவர் நாகசாமி பயணிக்கவில்லை, தமது ஆய்வு முடிவுகளுக்கு எதிரான ஆய்வுகளை இருட்டில் தள்ளினார்;

என்று நான் கருதுவதற்கான காரணங்களை இங்கு முன்வைத்துள்ளேன். அதனை அறிவுபூர்வமாக நாகசாமியோ, அவரது நிலைப்பாட்டினை ஆதரிப்பவர்களோ மறுப்பதை நான் வரவேற்கிறேன்.

முனைவர் நாகசாமி ‘Mirror of Tamil and Sanskrit’ என்ற புத்தகத்தில் தமிழ் தொடர்பாக வெளிவந்த ஆய்வு முடிவுகள் எனது கவனத்தை ஈர்த்துள்ளன

அந்த புத்தகத்தில் தமிழ் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள தமது ஆய்வு முடிவுகளை எல்லாம், நாகசாமி தமது நெருங்கிய நண்பரான தி.மு. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து விவாதித்தாரா? இல்லையா? அந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு நாகசாமிக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். இல்லையென்றால் 'தமிழ்நாட்டு சிவத்தம்பியாக' நாகசாமி கருதப்படும் வாய்ப்பும் இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2019/02/2.html )

அது போல, கருணாநிதிக்கு நெருக்கமாக பயணித்து, எம்.ஜி.ஆர் எதிர்ப்பில் 'ஐந்திறம் சர்ச்சையில்' முக்கிய பங்காற்றிய  ஔவை நடராஜன் போன்றவர்கள் 

மேலே குறிப்பிட்ட நூலில் வெளிப்பட்ட ஆய்வு முடிவுகளை மறுத்தார்களா? மறுக்கவில்லையென்றால், அது சரியா


இடைப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் தவிர்த்து,
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html &
http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

1969 முதல் இன்றுவரை கருணாநிதியின் பின்பலத்தில், ஔவை நடராஜன், நாகசாமி போன்றவர்களே தமிழ்நாட்டின் புலமை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதால்; மேற்குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

தமிழ் எழுத்தானது வட நாட்டிலிருந்து வந்தது என்றும், அசோகர் காலத்தில் பிராமணர்களால் கி.மு 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று மேலே குறிப்பிட்டுள்ள நூலில் நாகசாமி தமது ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளார்.

The Tamil script is derived from Brahmi, which was invented by the Brahmins or the Brahmanas when Emperor Asoka wanted to propagate his message through his edicts. The earliest known written records in Tamil are assigned to 2nd century BCE and are in the Brahmi script.

நாகசாமியிடம் பயின்று, அவரைப் போலவே தொல்லியலில் ஆழ்ந்த புலமையுடன் இருப்பவர் முனைவர்.சாந்தலிங்கம் ஆவார்.

அவர் தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றிய நாகசாமியின் ஆய்வு முடிவினை மறுத்து, தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றி உரிய சான்றுகளுடன் கீழ்வரும் காணொளியில் விளக்கியுள்ளார்.


தமது ஆய்வு முடிவுகளுக்கு எதிரான மேலே குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் இருட்டில் தள்ளாமல் வரவேற்று முனைவர் நாகசாமி பதில் அளித்துள்ளார்

என்று எவரேனும் தெரிவித்தால், நன்றியுடன் அதனை நான் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். இல்லையென்றால், எனது ஆய்வின் படி, காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு .வெ.ராவின் கருத்துக்களை உட்படுத்தாமல் மரணித்து வரும் 'பெரியார்' கட்சிகளுக்கு, நாகசாமி போன்றவர்களின் ஆய்வு முடிவுகள் எல்லாம், 'மூக ஆக்ஸிஜன்' போல, ஆயுளை நீட்டிக்கவே துணை புரியும்

ராஜிவ் மல்கோத்ரா (https://en.wikipedia.org/wiki/Breaking_India) போன்ற இந்துத்வா புலமையாளர்கள் எல்லாம், தமிழ் தொடர்பான நாகசாமியின் ஆய்வுமுடிவுகளுக்கு எதிராக வெளிப்படும் சான்றுகள் பற்றி அறிந்து கொள்ளாமல், நாகசாமியின் தவறான முடிவுகளை ஏற்று பயணிக்கிறார்களா? அது போன்ற பயணங்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து துண்டிக்கவே துணை புரியாதா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் தமிழும் தமிழ் உணர்வும் எந்த அளவுக்கு தேசியத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டது? என்ற புரிதல் உள்ளவர்களுக்கே, 'அந்த' அபாயம் விளங்கும். (https://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html) 

காலனியத்திற்குப்பின் அறிமுகமான 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ், அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாதிகள் எல்லாம், பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள‌ 'பார்ப்பார், பார்ப்பான், ஐயர், அந்தணர், ஆரியர்' ஆகிய சொற்களுடன் தொடர்புடையவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
(http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html ) 

இந்திய ஆட்சியில் தமிழ் தொடர்பானவைகள் மற்றும் தமிழ்நாட்டின் மத்திய அரசு துறைகளில் தமிழ் புறக்கணிப்புக்கு உள்ளாகிய காரணங்களால், வி. அய். சுப்பிரமணியம் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் அறிஞர்கள் தமது உரையாடல்களிலும், தமது எழுத்துக்களிலும் தமிழ்நாடு தனிநாடாகாதா? என்ற ஏக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதையும் நான் அறிவேன். இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாகஉரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

நாகசாமியின் இது போன்ற நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது. (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html) அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.


சாந்தலிங்கம் போன்று நாகசாமியின் முன்னாள் மாணவர்களான .பத்மாவதி, மார்க்சிய காந்தி, குழந்தை வேலன் போன்ற இன்னும் பலர் நாகசாமியின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டார்களா? மறுத்துள்ளார்களா? இல்லை, 'நமக்கேன் வம்பு?' என்று 'வாழ்வியல் புத்திசாலிகளாக'(?) ஒதுங்கிக் கொண்டார்களா? என்பதை அறிவதும் அவசியமாகும்.

நாகசாமியின் புலமை நேர்மையை நான் சந்தேகிக்கும் காரணங்களும் இருக்கின்றன.

ஐராவதம் மகாதேவன் எந்த சார்புமின்றி, யாருக்கும் பயப்படாமல் தனது ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தி, விவாதத்திற்கு உட்படுத்தி தமிழ் ஆர்வலர்களாலும், சமஸ்கிருத ஆர்வலர்களாலும் ஒரே நேரத்தில் பாராட்டப்படும் தனித்துவ புகழ் பெற்றவர் ஆவார். ஐராவதம் மகாதேவனின் தமிழ் தொடர்பான ஆய்வுமுடிவுகளை வரவேற்கும் சாந்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், நாகசாமியின் ஆய்வு முடிவுகளை ஏன் கண்டிக்கிறார்கள்? என்ற கேள்வியையும் இருட்டில் தள்ள முடியாது.

'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வுகளில், இசைக்கல்வெட்டுகள் தொடர்பான எனது ஆய்விற்கு துணை புரிந்த முனைவர் .பத்மாவதியின் முயற்சியால்;


நான் தொல்லியல் அறிஞர் நாகசாமியை சிலமுறை சந்தித்திருக்கிறேன். எனவே கீழ்வரும் ஆய்வு முடிவு தொடர்பாக, அவர் கருத்து ஏதும் தெரிவிப்பார், என்ற ஆவலும் எனக்கிருந்தது.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சிவன் கோவிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட கல்வெட்டு பின்வருமாறு அமைந்துள்ளது.

                 
வா    சி
  சி வா
  ய     சி
சி     
    சி 

ஆனாயநாயனார் புராணத்தில் உள்ள சான்றின்படி ' சி வா ' என்ற ஐந்தெழுத்து மந்திரமானது, மோகன ராகத்திற்கான சுரங்களில் இருப்பதையும்;

சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் பண்ணு பெயர்த்தல் முறையில் அந்த ஐந்தெழுத்து மந்திரத்தினை உட்படுத்தி, எவ்வாறு மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் இடம் பெற்றுள்ள ஐந்து வரிசைகளையும் பெற முடியும்?

என்பதை விளக்கும் கட்டுரையானது, .பத்மாவதி துணையுடன் உருவாகி வெளிவந்தது (1990களில்). அந்த கட்டுரையினை அவர் நாகசாமியிடம் கொடுத்திருந்தார்.அந்த விளக்கம் சரி என்று ஏற்று நாகசாமி அறிவித்திருந்தால், அதே கோவிலில் இருக்கும் அது போன்ற இன்னும் சில 'நமசிவாய' அட்டவணைக் கல்வெட்டுகளை அரசு உதவியுடன் ஆய்வுக்கு உட்படுத்தி, இன்னும் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்கும். 

கடந்த 20 வருடங்களில் தருமபுரி கம்பைநல்லூர் சிவன்கோவில் பாரம்பரிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாக வளர்ந்திருக்கும்.

அந்த விளக்கம் தவறு என்றால், அதை எங்களிடம் விளக்கியிருக்க வேண்டும்.
அந்த விளக்கம் தொடர்பான இசையியல் (Musicology) தமக்கு விளங்கவில்லையென்றால், என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். 

நான் கடைசியாக சுமார் 10 வருடங்களுக்கு முன் .பத்மாவதியை சந்தித்தது வரை, நாகசாமியிடமிருந்து அது தொடர்பாக எந்த கருத்தும் வெளிப்படவில்லை. இனியாவது நாகசாமி வெளிப்படுத்தினாலும், 'இல்லையென்பதை விட தாமதமாக நடந்தாலும் நன்றே' (Better late than never) என்ற வகையில் அதனை நான் வரவேற்பேன்.

அந்த கட்டுரையினை கூடுதல் சான்றுகளுடன் விரிவுபடுத்தி கீழ்வரும் இசை ஆய்வு இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன்



அது மட்டுமல்ல, நாகசாமி போன்று உயர் பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பை அங்கீகரிப்பதன் மூலமே, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கும் அது போன்ற அட்டவணை மற்றும் சக்கர வடிவ கல்வெட்டுகளும், அது போன்ற பல ஆய்வு முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்.


அது போலவே,  தொல்காப்பியத்தில் வரும்இசை மொழியியல்’ (Musical Linguistics) தொடர்பான சான்றுகளில் ஒன்றாக, ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் கல்வெட்டு தொடர்பான எனது ஆய்வு முடிவும் வெளிவந்துள்ளது.

(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_15.html)

அந்த விளக்கம் சரி என்று ஏற்று நாகசாமி அறிவித்திருந்தால், கடந்த 20 வருடங்களில் ஈரோடும், அரச்சலூரும் பாரம்பரிய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து எவ்வளவு தொழில், வியாபார வாய்ப்புகளை பெருக்கியிருக்கும்? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து விடை பெறலாம்.

இனியாவது நாகசாமி அது தொடர்பான தமது கருத்தினை வெளிப்படுத்தினாலும், 'இல்லையென்பதை விட தாமதமாக நடந்தாலும் நன்றே' (Better late than never) என்ற வகையில் அதனை நான் வரவேற்பேன்.

அடுத்து நாகசாமி மேலே குறிப்பிட்ட தமது நூலில், தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது சமஸ்கிருத மூலங்களில் (Sanskrit sources) இருந்து உருவானதாக தமது ஆய்வுமுடிவினை வெளிப்படுத்தியுள்ளார்.

‘The Tamil poetics as prescribed in Tolkappiyam was adopted from Sanskrit sources as for example phonetics and alankaras such as Upama.’ 

சமஸ்கிருத இலக்கணத்தில் இடம் பெற்ற ஒலிப்பியலானது(phonetics) அடிப்படையிலேயே தொல்காப்பியத்தின் ஒலிப்பியலில் இருந்து எவ்வாறு வேறுபட்டது? என்பதை எனது பதிவுகளில் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அது மட்டுமல்ல, உலக மொழிகளுக்கு பாணினியின் அஷ்டதாயி நூலில் உள்ள மொழியியல் பங்களித்துள்ளது போல;

உலக மொழிகளுக்குகான 'இசை மொழியியல்' மூலமாக தொல்காப்பியம் இருப்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். அது மட்டுமல்ல, சமஸ்கிருத மொழியின் உள்ளடக்கத்தில் பிற மொழியாளர்களின் பங்களிப்பு தொடர்பான சான்றுகளையும் கணக்கில் கொண்டால், நாகசாமியின் ஆய்வு முடிவுகள் எந்த அளவுக்கு தவறானவை? என்று விளங்கிக் கொள்ளலாம்.

(‘Why anti-Sanskrit is harmful to the Tamil development ?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/why-anti-sanskrit-is-harmful-to-tamil.html )

தமிழில் உள்ள இலக்கியம், கலை, இசை, நடனம், சட்டம், சமூக நெறிமுறை போன்றவை எல்லாம் சமஸ்கிருதம் மற்றும் வேத பாரம்பரியம் ஆகியவற்றின் தாக்கத்தில் விளைந்துள்ளதாக;

நாகசாமி மேலே குறிப்பிட்ட தமது நூலில் விளக்கியுள்ளார். (the impact of Vedic tradition and Sanskrit on Tamil life - its literature, art, music, dance, legal system and social custom)

மற்றவற்றில் எனக்கு புலமையில்லை. ஆனால் இசை தொடர்பாக மேலே குறிப்பிட்டுள்ள கருத்தினை நாகசாமி மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்;

என்பது தொடர்பான சான்றுகளை இங்கு முன் வைக்கிறேன்.

நாகசாமி தமது வாதத்திற்கு அடிப்படையாகக் கொண்ட 'நாட்டிய சாஸ்திரம்' தொடர்பான மூலப்பிரதிகள் எல்லாம், முற்காலத்தில் தமிழ்நாட்டில் சேர நாடாக இருந்த கேரளாவில் தான் கிடைத்துள்ளதா? கிடைத்துள்ள மூலப்பிரதிகளின் உள்ளடக்கத்தில் உள்ள வேறுபாடுகள் பற்றி என்னென்ன ஆய்வுகள் வெளிவந்துள்ளன? நாட்டிய சாஸ்திரம் நூலில் எந்தெந்த பகுதிகள் எந்தெந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டன, என்பது தொடர்பாக என்னென்ன ஆய்வுகள் வெளிவந்துள்ளன? நாட்டிய சாஸ்திரம் நூலில் இசை தொடர்பான பகுதிகள் எல்லாம் கி.பி 4ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டதாக தொல்லியல் அறிஞர் பண்டார்கர் தெரிவித்துள்ளாரா? 

'நாட்டிய சாஸ்திரம்' தொகுப்பு முதன் முதலாக வெளிவந்த காலமானது கி.மு 500 முதல் கி.பி 500 வரை கணக்கிடப்பட்டுள்ளது. (‘its first complete compilation is dated between 500 BCE and 500 CE ‘; ‘Wallace Dace (1963). "The Concept of "Rasa" in Sanskrit Dramatic Theory". Educational Theatre Journal. 15 (3): 249.’) 'நாட்டிய சாஸ்திரம்' வெளிவந்துள்ள பல பிரதிகளுக்கிடையே (several manuscript versions), அத்தியாய தலைப்புகளிலும் உள்ளடக்கத்திலும் பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பிடத்தக்க இடைச்செறுகல்களும், திரிதல்களும் இடம் பெற்றுள்ளன; நிகழ்காலத்தில் பயன்படுத்தப்படும் 'நாட்டிய சாஸ்திரம்' பிரதியானது கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்து; என்பது போன்ற ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. (The text has survived into the modern age in several manuscript versions, wherein the title of the chapters vary and in some cases the content of the few chapters differ.[3] Some recensions show significant interpolations and corruption of the text,[17] along with internal contradictions and sudden changes in style.[18] Scholars such as PV Kane state that some text was likely changed as well as added to the original between the 3rd to 8th century CE, thus creating some variant editions, and the mixture of poetic verses and prose in a few extant manuscripts of Natyasastra may be because of this.[19][20] According to Pramod Kale, who received a doctorate on the text from the University of Wisconsin, the surviving version of Natya Shastra likely existed by the 8th-century.[19]; https://en.wikipedia.org/wiki/Natya_Shastra#Date_and_author )

என்ற விவாதங்களை எல்லாம் இருட்டில் தள்ளி,

மேலே குறிப்பிட்ட கருத்தினை நாகசாமி முன்வைத்துள்ளதானது சரியா? 



தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளையும், தமிழில் இசைச்சுரங்களுக்கு இடையிலான 'இணை கிளை பகை நட்பு' முறையானது, சமஸ்கிருதத்தில் உள்ள 'வாதி சம்வாதி' முறையிலிருந்து எவ்வாறு வேறுபட்டது? என்பதையும், தமிழுக்கே உரித்தான 'ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை' முறையையும், உலக அளவில் பின்பற்றக்கூடிய தாள இலக்கணம் தமிழில் இருப்பதையும்,( http://musicresearchlibrary.net/omeka/items/show/2440)  இது போன்ற இன்னும் பலவற்றையும் கணக்கில் கொண்டால், தமிழ் இசையியலானது எந்த அளவுக்கு சமஸ்கிருத இசையியலில் இருந்து வேறுபட்டது? என்பது தெளிவாகும். 

தமது வாதத்திற்கு எதிரானது என்பதால் தான், இந்தியாவில் தொல்முதல் அரச்சலூர் இசைக்கல்வெட்டு (Most ancient musical inscription) தொடர்பான எனது ஆய்வினை கணக்கில் கொள்ளவில்லையா? (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none.html ) 

மேலே குறிப்பிட்ட பின்னணியில், செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றித் தேர்வு செய்யும் குழுவில் நாகசாமியின் பெயர் இடம் பெற்றது சரியல்ல, என்பது எனது கருத்தாகும். தி.மு. தலைவர் ஸ்டாலின் கருத்தினை கணக்கில் கொண்டு, தமிழக முதல்வர் அக்குழுவில் இருந்து அவரை அகற்றுவதே சரி என்பதும் எனது கருத்தாகும். அதற்கு இடம் கொடுக்காமல், தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பினைக் கணக்கில் கொண்டு, நாகசாமி தாமாகவே அக்குழுவிலிருந்து விலகினால், அது நல்லது என்பதும் எனது கருத்தாகும்.
 

எனது ஆய்வு முடிவுகளுக்கு எதிரான சான்றுகளைத் தேடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி, தவறுகள் வெளிப்பட்டால், அதனை பகிரங்கமாக எனது ஆய்வு வட்டத்தில் தெரிவித்து, திருத்தி பயணிப்பதும், எனது ஆய்வு வெற்றிக்கான இரகசியங்களில் ஒன்றாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html) அதைத் தவிர்த்து, எனக்குள்ள 'செல்வாக்கு என்ற காற்றில் ஊதிப் பெருத்த பலூனாக' எனது ஆய்வுகள் புகழுடன் வலம் வரலாம். ஆனால் எனது காலத்திலோ, அல்லது பிற்காலத்திலோ, 'அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின்' மூலமாக, 'அந்த' பலூன் உடைந்து நொறுங்குவதை, 'எந்த' செல்வாக்கும் தடுக்க முடியாது; டிஜிட்டல் யுகத்தில் அது எளிதாகியுள்ளதாலும். நிகழ்காலத்தில், 'தமிழ் தொடர்பான பெரியார் பலூன்' அவ்வாறு நொறுங்கும் படலமும் துவங்கி விட்டது.
(https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html) நாகசாமி விழிக்கவில்லையென்றால், 'தமிழ் தொடர்பான நாகசாமி பலூனும்' அவ்வாறு உடைந்து நொறுங்குவதைத் தவிர்க்க முடியாது. 

நாகசாமியைப் போலவே, இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர் பொ வேல்சாமி தமிழ் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்து எவ்வாறு தவறானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' போக்கிலானவெறுப்பு நோயின் வளர்ச்சியும், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை பற்றி, தமக்குள்ளவரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமல் எழுதும் எழுத்தாளர்களின் வளர்ச்சியும், எந்த அளவுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? என்பதையும் முனைவர் பட்ட ஆய்வாக மேற்கொள்ளலாம்.(http://tamilsdirection.blogspot.com/2017/02/1500.html ) 

தமிழ் இசை ஆய்வாளர்களின் படைப்புகளை எல்லாம் இருட்டடிப்புக்கு உள்ளாக்கி,  ஊடக வெளிச்சத்தில்  மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' வெளிவந்தது தொடர்பான எனது கருத்துக்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/01/)
 

மேலே குறிப்பிட்ட ஊடக இருட்டடிப்பு சமூக செயல்நுட்பமாகியுள்ள; 

'எப்பொருள் எவர் வாய் என்றாய்ந்து அப்பொருள்

 புகழ்வதும் இதழ்வதும் இழிவு' – புதுக்குறள் 423

என்ற இழிவானபோக்கில் பயணிக்காமல், திருக்குறள் (423) வழியில் இந்த பதிவு உருவானது. 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.’

(அதிகாரம்: அறிவுடைமை - 423) 

செம்மொழி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமானமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களில், தமது சான்றுகளின் வரை எல்லைகள் தெரியாமல், 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' ஆய்வுகள் உள்ளனவா? என்று எவரும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால், அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பும் வழங்க இயலும். (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html ) 

செம்மொழி நிறுவனம் எவ்வாறு துவக்கம் முதலே தடம் புரண்டு பயணித்து வந்துள்ளது? உரிய விசாரணை மூலம் குறைகளை அடையாளம் கண்டு, வெளிப்படைத்தன்மையையும் (Transparency), பொறுப்பேற்பையும் (accountability) உறுதி செய்யும் விதி முறைகளை உருவாக்கி, எவ்வாறு சரியான திசையில் பயணிக்கச் செய்ய வேண்டும்? என்பதற்கான அவசியத்தையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) 

செம்மொழி நிறுவனம் தமிழின் வளர்ச்சிக்கு சரியான முறையில் செயல்பட வேண்டுமானால்,

நாகசாமியின் மேற்குறிப்பிட்ட ஆய்வினை எதிர்த்தவர்கள் எல்லாம், 'அந்த' விசாரணை மற்றும் விதிமுறைகளை உருவாக்கும் கோரிக்கைகளை முன்னெடுப்பதே தீர்வாகும்.


குறிப்பு: 'நான் தமிழுக்கு எதிரானவனா?' என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி எழுதியுள்ள கட்டுரை தினமணி (08.03.2019) இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரையின் முடிவில் "உலக தமிழ் அறிஞர்கள் மத்தியில் அவர் (ஸ்டாலின்) தமிழ் மொழி குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். எனவே, தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்


அந்த‌ கட்டுரையின்படி நாகசாமியும் தி.மு. தலைவர் கருணாநிதியும் தமிழ் தொடர்பாக ஒரே போக்கில் பயணித்தவர்களா? என்ற கேள்வி எழுகிறது. ஔவை நடராஜன் போன்ற கருணாநிதிக்கு நெருக்கமான தமிழ் அறிஞர்கள் அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பாகும். இல்லையென்றால் கருணாநிதியை விட்டு விட்டு, நாகசாமியை மட்டும் தமிழுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுவது நேர்மையாகாது.
 

No comments:

Post a Comment