Thursday, March 21, 2019

அரசியல் பரமபதத்தில்(3)

வரும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கரையப் போகும் திராவிடக் கட்சி?



வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு. அமோக வெற்றி பெற்றால், இப்போதுள்ள ஆட்சி கவிழ்ந்து, ...தி.முக கட்சி கரைந்து விடும். மாறாக தி.மு. படுதோல்வி அடைந்தால், தி.மு. தலைவர் ஸ்டாலின் தலைமையானது பலகீனமாகி, இன்னொரு தமிழ்நாடு காங்கிரசாக தி.மு. மாறிவிடும்.

தமிழ்நாட்டில் மனித உறவுகளிலும், உரையாடல்களிலும் 'லாபநட்ட கள்வர் கணக்கு' ஆதிக்கம் செலுத்தி வருவதால்;

கருத்துக்கணிப்பில் கேள்வி கேட்பவருக்கு என்ன லாபம்? எந்த பதில் சொன்னால் தனக்கு லாபம் அல்லது பாதிப்பு இருக்காது? என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்னே தான் பதிலே வெளிப்படும்.


அதிலும் பொது இடங்களில் தி.மு.-வை விமர்சித்தால், தப்பித்தவறி அங்கிருக்கும் தி.மு. ஆதரவாளர்கள் கோபமாக அதனைக் கண்டித்து பேசும் சூழலானது, 1969க்குப் பிறகு முளைவிட்டது; குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் அநியாயமாக உயிரிழந்து, அவரது தந்தை அச்சுறுத்தலுக்கு இலக்காகி, "இறந்தது என் மகனல்ல" என்று விசாரணையில் தெரிவித்த கோலம் அரங்கேறிய பின்பு, அதன் வளர்ச்சிப் போக்கில், முன்பின் தெரியாதவரிடம் தி.மு.கவை எதிர்த்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கும் போக்குகள் (அந்த சம்பவத்திற்குப் பிறகு திருநெல்வேலியில் கால்நடை ஆய்வாளர் அரசுப் பணியாளர் மாநாட்டில் வெளிப்பட்டது போல‌) கருத்துக் கணிப்புகளிலும் எதிரொலித்தது.

தமிழ்நாட்டு சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் 2011 மற்றும் 2016 முதல் கடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரை, துக்ளக் தவிர்த்த, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம்,  பெரும்பாலும்  தி.மு. வை நம்ப வைத்து ஏமாற்றிய கணிப்புகளாக முடிந்ததற்கு, அதுவே காரணமாக இருந்தால் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் மீடியாக்களில் 'சூடாக' விவாதிக்கப்படும் கட்சி அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம்;

மீடியாவின் செல்வாக்கு வளையத்தில் சிக்காமல் பயணிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் மத்தியில் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்துவது கிடையாது.

மீடியாக்களில் 'சூடாக' வெளிப்படும் கட்சி அரசியல் செய்திகளை, பரிசோதனைக்காக, நான் அத்தகையோரிடம் தெரிவித்த போது, அவர்கள் எள்ளளவு ஆர்வம் கூட காட்டாதது, எனக்கு வியப்பை அளித்தது. (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக கடந்த தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதை, தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே, நான் எவ்வாறு சரியாககணித்தேன்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/05/blog-post.html)

தமிழ்நாடு ஆதாய அரசியலில் பயணிக்கத் தொடங்கியது முதல், அனைத்து கட்சிகளிலும் 'உள்குத்து அரசியல்' உள் நுழைந்தது. அந்த உள்குத்து அரசியல் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், உச்சத்திற்கு சென்றதானது, நான் எதிர்பார்க்காத ஒன்றாகும்

தி.மு., ...தி.மு. ஆகிய‌, இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,  'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space) பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும்  கொள்கை அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,  'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில்செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.

அந்த இரண்டு கட்சிகளிலுமே,  'உழைப்புக்கு  பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றியவர்களே அதிகம் என்றால், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize)  போக்கில்,  தங்களின் அரசியல் வெளியை (Political space) விட்டு, அந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிவிட்டதை,  அது உணர்த்தாதா? ‘ 

'உள்குத்து அரசியல்' தி.மு.கவையும் பாதித்திருந்தாலும், ஜெயலலிதாவையே முட்டாளாக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதானது, எனக்கு வியப்பினை ஏற்படுத்தியது

‘2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின், வெளிவந்தவைகளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் செயற்குழு  கூட்டத்தில் நிகழ்த்திய உரை தொடர்பான, கீழ்வரும் செய்தியானது, எனது ஆய்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

ஆவேசம். தேர்தலின் போது நம்பிய பலர் துரோகம் செய்ததாக ஜெயலலிதா...

பணத்தை அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைhttp://www.dinamalar.com/news_detail.asp?id=1545868 

'பெரியார்' .வெ.ரா 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் வெளிப்படுத்திய‌ ‌ஆவேசத்திற்கும்,  முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கும்,  நிறைய ஒற்றுமைகள் இருப்பதில் வியப்பில்லை, என்பதை கீழ்வருபவை உணர்த்துகின்றன.

பிற கட்சிகளில் எல்லாம், பணம் வாங்கிக் கொண்டு, 'சீட்' தருகின்றனர். நான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சீட் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பணமும் கொடுத்தேன். ஆனால், மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், பணத்தை பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில் சிலரும், பணத்தை செலவு செய்யவில்லை.

சிலர், தங்கள் மாவட்டத்தில், வேறு யாரேனும் வெற்றி பெற்றால், தங்களுக்குஅமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தில், அவர்களை தோற்கடிக்க பாடுபட்டுள்ளனர்.

ஒருவரை மாவட்ட செயலராக்கினால், அவர் தன் உறவினரை மாவட்ட செயலராக்கி விட்டு, தி.மு.., மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டுள்ளார். இவை எல்லாம் எனக்கு தெரியாது என, நினைக்கிறார்.

கட்சி நிதி என்ற பெயரில், அவர் பணம் வசூலித்ததும், அவரது நண்பர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதும், எனக்கு தெரியும்.

ஒரு மாவட்ட செயலர், தன் மாவட்டத்தில் மற்றவர்களை தோற்கடிக்க, வேலை பார்த்து விட்டு, அவர் மட்டும் எம்.எல்..,வாகி உள்ளார்.

ஒரு மாவட்ட செயலர், மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க பணம் கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி, சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளில், அதிருப்தி ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை; ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம். இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர் துரோகம்செய்து விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)

சிலர் எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர்.

தி.மு..,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர். “ 

முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கு காரணமானவர்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான,  'தகுதி, திறமைகள்' இல்லாத சிற்றின மனிதர்களே ஆவர். அத்தகையோரை அனுமதிக்கும், கட்சியும் சரி, குடும்பமும் சரி, அவர்களின் 'சுயரூபம்' வெளிப்படும் வாய்ப்பு வரும் போது, அதனால் விளையும் சீர்குலைவிலிருந்து தப்பமுடியாது

அந்த சிற்றின மனிதர்கள் எல்லாம், வசதி குறைவில் இருக்கும் போது நம்மிடம் காண்பிக்கும் விசுவாசம் எல்லாம், நம்மை ஏணியாக்கி வளரும் உள்நோக்கத்திலான நடிப்பு ஆகும். வாய்ப்பு கிடைத்தால், தமது வளர்ச்சிக்காக, எல்லா மனித மதிப்பீடுகளையும் காவு கொடுத்து, மனித மிருகங்களான, தமது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.’ 

வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு., ...தி.மு. உள்ளிட்ட கட்சிகளில் மேலே குறிப்பிட்ட உள்குத்து வேலைகள் இன்னும் அதிக வீச்சுடன் எந்த அளவுக்கு செயல்படும்? என்ற முன்னோட்ட சிக்னலை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. அதில் தி.மு.கவும், பா..வும் தத்தம் வாக்கு வங்கிகளை தினகரன் வெற்றியில் இழந்திருந்தால் வியப்பில்லை.

இதற்கு முன் நடந்த ஆட்சிகளில் இருந்த ஊழலே இப்போதுள்ள ஆட்சியிலும் தொடர்கிறது; மக்கள் போராட்டங்கள் ஜெயலலிதாவின் பார்வைக்கு செல்வதற்கு இருந்த தடைகளை மீறி சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அந்த தடைகள் இன்றி, இந்த ஆட்சியில் உடனுக்குடன் 'அதே' ஜெயலலிதா பாணி தீர்வுகள் வெளிப்பட்டு வருகின்றன‌. கடந்த அரசு ஊழியர் போராட்டத்தினை ஜெயலலிதாவை விட, அதிக சாமர்த்தியத்துடன் இந்த அரசு கையாண்டிருக்கிறது.

அரசியல் பரமபதத்தில் ஸ்டாலின் - சசிகலா நன்கொடையாக, தமிழக ஆட்சி நிலைக்கப் போகிறதா? (http://tamilsdirection.blogspot.com/2017/09/2-18.html )

என்ற பதிவில், 'எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் விரும்பினாலும், ஆட்சியைக் கவிழ்க்க முடியாத' திசையில், எவ்வாறு ஓபிஎஸ்‍- ஈபிஎஸ் கூட்டு தலைமையில் தமிழக ஆட்சி பயணித்து வருகிறது? என்பதையும் விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் பெரிதாக அதிருப்தி அலை வீசவில்லை.

தமிழ்நாட்டு தேர்தல் தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்களைப்போலவே ஆர்வமின்றி உள்ளார்கள். அதையும் மீறி ஆர்வமுள்ள சிலரில் பெரும்பாலோர் தி.மு. ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களில் சுயலாப நோக்கின்றி தி.மு.கவை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகையோருடன் உரையாடியபோது, தமிழ்நாட்டின் மீட்சி தொடர்பாக, எனது நிலைப்பாட்டிற்கும், அத்தகையோரின் நிலைப்பாட்டிற்கும் இடையில் 'ஒற்றுமையில் வேற்றுமை' வெளிப்பட்டது.

ஒற்றுமை: கருணாநிதி, சசிகலா உள்ளிட்டு குடும்ப ஆட்சிகளிடமிருந்து விடுபட்டால் தான், தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்.

வேற்றுமை:அதற்கு சாத்தியமாக, வரும் பொதுத்தேர்தலில் தி.மு. அமோக வெற்றி பெற்று, ...தி.மு., சசிகலா தினகரன் கட்சிகள் சுவடின்றி அழியும். அதன்பின் தி.மு. விற்கு மாற்றாக வெளிப்படும் புதிய கட்சியின் மூலமே, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைய வாய்ப்புண்டு.

ஆர்.கே.நகர் பாணியில், வரும் பொதுத்தேர்தலில் தி.மு. அணியில் சில தொகுதிகளில் டெபாசீட் போகும் அளவுக்கு மிகப்பெரும் தோல்வி ஏற்படும். அதன்பின் ..தி.மு. விற்கு மாற்றாக வெளிப்படும் புதிய கட்சியின் மூலமே, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைய வாய்ப்புண்டு.

கீழுள்ளது எனது கணிப்பாகும். ஜெயலலிதாவின்மர்ம மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும், தமிழ்நாட்டின்  சமூக அதிர்ச்சி வைத்தியமாகும்' வாய்ப்பு இருப்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html )

தமிழ்நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில், என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்? தமிழ்நாட்டில் இன்றுள்ள ஆதாய அரசியல் சுவடின்றி அழிந்து, அநேகமாக இந்தியாவிற்கே வழிகாட்டியாக, என்ன வகையான அரசியல் தமிழ்நாட்டில் அரங்கேற வாய்ப்புள்ளது.

என்று ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள் எல்லாம், கீழ்வருபவற்றை கணக்கில் கொண்டால், அந்த ஆய்வானது அதிகம் பலனளிக்கும்

1. அனைத்து கட்சிகளிலும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அமாவாசைகள்;

2. 'அரசியல் அமாவாசை செயல்நுட்பத்தில்' செல்லரித்து, இன்று 'திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகி, வாக்கு சேகரிக்கும் வலைப்பின்னலானது 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, திராவிடக் கட்சிகளின் மேல் மட்டத் தலைவர்களை கோமாளிகள் ஆக்கி வரும் போக்கு;

3. மைக்ரோ உலகமாக உள்ளகிராமங்களில் எல்லாம் பொதுவாழ்வு வியாபாரிகளின் சாயமானது வெளுக்கத் தொடங்கியுள்ள போக்கு;

4. தமிழை திராவிட அரசியலில் சிறைப்படுத்தி, அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியல் வலிமையில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின், 'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகளும், அதன் காரணமாக, ஆட்சியில் இருந்த/இருக்கும் கட்சிகளை அடிவருடி பிழைத்து வந்த பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் சருகாகி உதிரும் வாய்ப்புகளும்;

5.. சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், ...தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு; .(http://tamilsdirection.blogspot.com/2017/04/)

6. கட்சிகளுக்கு தொடர்பில்லாமல் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு முன்பிருந்தே, விளம்பரமின்றி பிரமிக்கும் வகையில், கிராமங்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உதவிகள் புரிந்து வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்து நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள்;

மேலே குறிப்பிட்டவைகளின் சார்பு வலிமைகளின் (Relative Strengths) தொகுவிளைவிலேயே (Resultant), தமிழ்நாடு பயணித்து வருகிறது; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் நம்பமுடியாத அதிர்ச்சிகளை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.’

தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக  பா..-வானது, இனி வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும்.‘ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

தி.மு. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ...தி.மு. வெற்றிக்கான வாய்ப்புகளும்;

...தி.மு. கூட்டணியில் பா..போட்டியிடும் தொகுதிகளில் தி.மு. வெற்றிக்கான வாய்ப்புகளும்;

நீடிப்பதையும் தவிர்க்க முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு. கூட்டணியில் இடம் பெற்றகாங்கிரஸ் வேட்பாளர்களும், ...தி.மு. கூட்டணியில் இடம் பெற்ற பா.. வேட்பாளர்களும் நேரடியாக மோதும் தொகுதிகளில், பா...வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.

ஆர்.கே.நகர் பாணியில் தினகரன் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தி.மு. டெபாசீட்டுடனும், பா.. 'நோட்டாவுடனும், போட்டி போட்ட கட்சிகளாகவே தேர்தல் முடிவுகளில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.’ (https://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html )

மேலே குறிப்பிட்ட வரிசையில் முதலாவதாக இடம் பெற்ற அரசியல் அமாவாசைகளும், கடைசியாக இடம் பெற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக வெளிப்படுவார்கள். தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ள படித்த இளைஞர்களில் 'எல்கேஜி' (LKG) திரைப்பட கதாநாயகனைப் போல பலர் இருக்கக்கூடும், என்பது எனது கணிப்பாகும். எனவே இரண்டு கட்சிகளில் எந்த கட்சி கூட்டணியும் அமோக வெற்றி பெற்றாலும், அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளுமே மேற்கண்ட இரண்டு பிரிவினரிடம் சிறைபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகும் வாய்ப்பும் இருக்கிறது.

ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா?

எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.. உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2016/05/ )

மேலே குறிப்பிட்ட போக்கில்,வேட்புமனு தாக்கல் தொடங்கிய பின்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத அளவுக்கு காங்கிரஸ், பா.. ஆகிய இரண்டு கட்சிகளுமே பலகீனமாக உள்ளன. (https://www.dinamalar.com/news_detail.asp?id=2236163)

தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய'  அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;

என்று பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;


தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.


குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா.ஜ.க  வேர் பிடிக்க முடியாது;


என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

(‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு (4); 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததா?’; http://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html )

தமிழக
மக்களின் பொதுக்கருத்துருவாக்க (public opinion) சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி

காங்கிரசும், பா..கவும் மேலே குறிப்பிட்ட போக்கில்;

'தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு 'சலாம்' போட்டு பயணித்து வந்துள்ளன. தமிழ்நாட்டில் விமான நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாதது வரை, தமிழ்நாட்டில் இந்திய தேசிய எதிர்ப்புக்கான மென்சக்தியின் அச்சுறுத்தும் வலிமையானது, தேசியக்கட்சிகளை வாலாக்கி, ஊழலுக்கும் பிரிவினை அச்சுறுத்தலுக்கும், 'அந்த சலாம்' போடும் அவலத்திலேயே அக்கட்சிகளை எல்லாம் நீடிக்க வைக்கும்.
 
அந்த‌ தேசியக் கட்சிகள் எல்லாம், காஷ்மீரில் 'மென்சக்தி'(Soft Power) பற்றிய சரியான புரிதல் இன்றி, வன்சக்தியையே (Hard Power) நம்பி மேற்கொள்ளும் தேசக்கட்டுமான (Nation Building) முயற்சிகள் எல்லாம், அங்கு பிரிவினைக் கோரிக்கையை வளர்க்கவே துணை புரிந்ததா? என்ற திறந்த மனதுடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்தினை இனியும் தாமதப்படுத்துவதானது;

சோவியத் நாடு சிதறுண்ட பாணியில், இந்தியாவையும் சிதற வைக்கும் திசையில் பயணிக்கச் செய்யும்.' என்ற எச்சரிக்கையையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா?
(‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress

என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்

தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதால். (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html )

No comments:

Post a Comment