Thursday, March 14, 2019

செம்மொழி நிறுவனத்தில் நாகசாமி? (3) 

 

நீக்ரோவைப் போல, 'பறையா' ஒழிய தாமதம் ஏன்?




சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு உணவு விடுதியில் நடந்த சம்பவம்.

சிங்கப்பூரில் 'IT' துறையில் வேலை பார்க்கும் சில தமிழ் இளைஞர்கள் ஒரு ஓட்டலில் உணவருந்திய மேசையின் எதிர் நாற்காலிகளில் கறுப்பர்கள் அமர்ந்திருந்தார்கள். இரு சாராரும் உரையாடத் தொடங்கிய பின், அந்த ஆங்கில உரையாடல் போக்கில் ஒரு தமிழ் இளைஞர் தமது பேச்சில் 'நீக்ரோ'(Negro) என்ற சொல்லை உச்சரித்தவுடன், எதிரில் இருந்த கறுப்பர்கள் முகத்தில் கோபம் வெளிப்பட்டது. உடனே தமிழ் இளைஞர் குழம்பி, 'சாரி (sorry)‍' என்று சொன்னார்.

'நீக்ரோ என்ற சொல்லானது அடிமை என்ற பொருளில் எங்களை அவமதிக்கும் சொல். இப்போது 'கறுப்பர்' என்ற சொல்லில் தான் எங்களை அழைப்பது வழக்கம்' என்று அந்த கறுப்பர்களில் ஒருவர் விளக்கம் கொடுத்தார்.

கறுப்பர்கள் மத்தியில் 'நீக்ரோ' என்ற சொல்லின் பிரயோகத்திற்கு வெளிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக அமெரிக்காவிலும், பிற மேற்கத்திய நாடுகளிலும், அந்த சொல் ஒழிந்து, 'கறுப்பர்' என்ற சொல்லே பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வருகிறது. (https://www.npr.org/2017/12/13/568317026/negro-not-allowed-on-federal-forms-white-house-to-decide )

தமிழில் 'பறையர்' என்ற சொல்லானது தீண்டாமைக்கு எப்போது உள்ளாகியது? என்பது தொடர்பான எனது ஆய்வில், அது காலனிய சூழ்ச்சியில் நடந்திருப்பதானது வெளிப்பட்டது. அதனை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html & http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

'நீக்ரோ' என்ற சொல்லானது, அதன் தோற்றத்திலேயே கறுப்பின மக்களைக் குறிக்க வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய சொல்லாகும். அந்த சொல்லானது பொருள் ரீதியிலான பயணத்தில் (semantic travel) 'கீழ்மக்கள்' என்று இழிவுபடுத்தும் பொருளுக்கு உள்ளானது. (https://en.wikipedia.org/wiki/Negro )

சங்க இலக்கியங்களில் குடிமகனாக மதிக்கப்பட்ட 'பறையர்' என்ற சொல்லானது, 'நீக்ரோ' என்ற சொல்லைப் போல, துவக்கத்திலேயே வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய‌ சொல்லாக இல்லை; இழிவுக்குரிய சொல்லாகவும் இல்லை. இடையில் காலனி ஆட்சியில் தான், அந்த சொல்லானது 'தீண்டாமைக்கு' உள்ளானது. அதாவது துவக்கத்தில் மதிக்கத்தக்க பொருளில் இருந்த 'பறையர்‘ என்ற சொல்லின் பொருளானது, காலனி ஆட்சியில் தான், சூழ்ச்சிகரமான பொருள் சிதைவுக்கு (mischievous semantic distortion) உள்ளானது. தமிழ்நாட்டில் தலித் சாதிகளில் 'பள்ளர்', 'பறையர்', 'சக்கிலியர்' என்பது போன்ற பல சொற்கள் இருக்கையில், இந்தியாவிலும் பிற மொழிகளில் தலித் சாதிகளைக் குறிக்க பல சோற்கள் உள்ள நிலையில்;

இன்று உலகில் இழிவானதை குறிக்க 'பறையர்' என்ற சொல் பயன்படுத்தப்படுவதானது, எனது கவனத்தை ஈர்த்தது. உயிரணு(genes) தொடர்பான கீழ்வரும் கட்டுரையில், 'பறையா' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

“A decade later, Dawkins played the role of interpreter for an even broader audience. Average effects became selfish genes and individuals became lumbering robots controlled by their genes. Group selection became a pariah concept, taught only as an example of how not to think.” RICHARD DAWKINS IS WRONG ABOUT RELIGION’- by David Sloan Wilson http://www.skepticalaboutskeptics.org/investigating-skeptics/whos-who-of-media-skeptics/richard-dawkins/richard-dawkins-is-wrong-about-religion/
 
இதென்ன கொடுமை! என்று அதிர்ந்து, அது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், கணிதத்திலும் 'பறையா' இடம் பெற்ற அநீதியும் கீழ்வரும் சான்றில் வெளிப்பட்டது.

In the area of modern algebra known as group theory, the term pariah was introduced by Griess (1982) to refer to the six sporadic simple groups that are not sub quotients of the monster group.’- https://en.wikipedia.org/wiki/Pariah_group
 
எனது கருத்தினை  ‘akandabaratam@yahoogroups.com’  -இல் வெளியிட்டு, அதனை David Sloan Wilson- க்கு Forward (20 Sep 2016)   செய்தேன்.

                      Misuse of the word ‘negro’ and ‘pariah’ in the western world

The employment of the Tamil word ‘pariah’ in the following text attracted my attention, in the light of my discoveries related to the ‘untouchablity’ in music in Tamilnadu, India.

“A decade later, Dawkins played the role of interpreter for an even broader audience. Average effects became selfish genes and individuals became lumbering robots controlled by their genes. Group selection became a pariah concept, taught only as an example of how not to think.”
‘RICHARD DAWKINS IS WRONG ABOUT RELIGION’- by David Sloan Wilson
 
Why did David Sloan Wilson choose the word ‘pariah’ to communicate the negative dimension of ‘Group selection’? 

Could he have used the term ‘Negro’, that was “associated it with the long history of slavery, segregation, and discrimination that treated African Americans as second-class citizens, or worse” (Smith, Tom W. (1992) "Changing racial labels: from 'Colored' to 'Negro' to 'Black' to 'African American'." Public Opinion Quarterly 56(4):496–514) without objection?
Unlike the word ‘Negro’, introduced by the Spanish and Portuguese (https://en.wikipedia.org/wiki/Negro ) ;

the Tamil word ‘pariah’ was found in the ancient Tamil texts to mean those who could play a ‘group’ of a kind of percussion instruments; and was designated as the ‘group’ eligible to be identified as the ‘citizens’ of the society. (புறநானூறு 335:  7 - 8: puRanhAnURu 335: 7-8).

How did the word ‘pariah’ originally meaning a respectable ‘group’ of the citizens, acquire the negative dimension, and under what social mechanism, it entered into the ‘group’ of the western world, ‘influencing’ even the reputed writers, who had stopped using the word ‘Negro’, to use the word ‘pariah’ in their writings?

Worse, how did that social mechanism, influence even the ‘western’ science, to ‘absorb’ the word ‘pariah’ into Mathematics (‘In the area of modern algebra known as group theory, the term pariah was introduced by Griess (1982) to refer to the six sporadic simple groups that are not sub quotients of the monster group.’- https://en.wikipedia.org/wiki/Pariah_group )?

Did the ‘Dalit groups’, in India, object to the above unpardonable misuse of the word ‘pariah’ in the western world? If so, what social mechanism prevented the ‘due’ success of their efforts?

Hope David Sloan Wilson, in his research, will consider the ‘group-level adaptation’ of the ‘mischievous negative’ meaning of the Tamil word ‘pariah’ in the western world, in spite of the opposition from the ‘pariah’ group in Tamilnadu to the negative employment of the word.

In the concluding part of his article, David Sloan Wilson had noted down the following.

“Toward the end of The God Delusion, Dawkins waxes poetic about the open-mindedness of science compared to the closed-mindedness of religion. He describes the heart-warming example of a scientist who changed his long-held beliefs on the basis of a single lecture, rushing up to his former opponent in front of everyone and declaring “Sir! I have been wrong all these years!”

The western world “have been wrong all these years!” w.r.t the employment of the Tamil word ‘pariah’ in their writings.

Will David Sloan Wilson take the lead to end the misuse of the Tamil word ‘pariah’ in the western world?

Will the Indian govt take the necessary steps to rescue the Tamil word ‘pariah’ from the ‘Group Theory’ in Modern Algebra of Mathematics?

அதனைத் தொடர்ந்து, 2016 செப்டம்பரில் கீழ்வரும் பதிவினையும் வெளியிட்டேன்.

Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?http://tamilsdirection.blogspot.com/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html
 
அமெரிக்காவில் உள்ள பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் தமது ஆய்வில் 'பறையர்' என்ற சொல்லினை தீண்டாமையோடு தொடர்பு கொண்டதாகக் கருதியது எவ்வாறு தவறானது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அந்த ஆய்வு முடிவானது, காலனி சூழ்ச்சியை மறைக்கும் உள்நோக்கம் கொண்டதா? இல்லையா? என்பது ஜார்ஜ் ஹார்ட்டின் மனசாட்சிக்கே வெளிச்சம். அமெரிக்காவில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) என்றால், 'தமிழுக்கு பெருமை' என்று அறிவுக்கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதும், எவ்வளவு அபாயகரமானது? என்பதற்கு, அந்த ஆய்வும் ஓர் உதாரணமாகும். தமிழ் இருக்கைகளில் மேலே குறிப்பிட்டது போன்ற அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணித்து, அவை தொடர்பாக உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிவரும் மறுப்புகள் இருளில் சிக்காமல், உரிய முக்கியத்துவம் பெற வழி உண்டா? தமிழ் இருக்கை ஆர்வலர்கள் எல்லாம் இனியாவது அதில் கவனம் செலுத்துவார்களா? (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html )

மேலே குறிப்பிட்ட எனது முயற்சிகள் தமிழ்நாட்டில் 'சமூக நீதி' பேசும் கட்சித்தலைவர்களின், தலித் தலைவர்களின் பார்வையில் பட்டதா? குறிப்பாக கணிதத்தில் 'பறையா' என்ற சொல் இடம் பெற்ற அநீதியை அகற்ற, அவர்களில் எவராவது முயற்சிகள் மேற்கொண்டார்களா? என்பது எனக்கு தெரியாது.

மேலே குறிப்பிட்ட 'பறையா' தொடர்பாக எழுதிய டேவிட் சுலோவான் வில்சன் (David Sloan Wilson) வெள்ளைக்காரர் என்பதால் தமிழ்நாட்டில் எவரும் கண்டு கொள்ளவில்லையா? அவர் நாகசாமி போன்ற பிராமணராக இருந்திருந்தால், தமிழ் நாட்டில் எவ்வளவு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கும்?

'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்களே தோன்றின' என்று 2007இல் எழுதிய செல்டன் பொல்லாக் வெள்ளைக்காரர் என்பதால் தான், தமிழ்நாட்டில் மீடியா வெளிச்சத்தில் வலம் வரும் செல்வாக்கான தமிழ்த்தலைவர்களும், எழுத்தாளர்களும் கண்டுகொள்ளவில்லையா? என்ற கேள்வியை ஏற்கனவே பார்த்தோம்   

ஷெல்டன் பொல்லாக் வெள்ளையராக இல்லாமல், அமெரிக்காவில் குடியேறிய பிராமணராக இருந்திருந்தால், தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களும், கட்சிகளும், 'பார்ப்பன சூழ்ச்சி' என்று, அந்த புத்தகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் போட்டி போட்டு நடத்தியிருக்க மாட்டார்களா?  (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

2007இல் வெளிவந்த உலக அரங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரானஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள  நூலில் ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (2007) 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்களே தோன்றின' என்று  வெளிவந்துள்ளதை, மேலே குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் மறுத்தார்களா? எவருமே மறுத்திருக்கவில்லை என்றால், அது தமிழின் வளர்ச்சிக்கு கேடாகாதா?’ அதனை அறிவுபூர்வமாக மறுத்திருந்தால், அதே ஷெல்டன் பொல்லாக் கருத்தினை எதிரொலித்து நாகசாமியின் ஆய்வுநூல்கள் வெளிவந்திருக்குமா? (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 7 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும், 'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள, கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?

அந்தப் புத்தகமும் (புதிதாக வெளிவரும் புத்தகங்களை வாங்கும் பழக்கமுள்ள‌) .மார்க்ஸ் என்னிடம் பல வருடங்களுக்கு முன் படிக்கக் கொடுத்த புத்தகமாகும். அப்புத்தகத்திலிருந்த 'அபத்தமான' தவறுகளை உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுத்து  ஷெல்டன் பொல்லாக்கிற்கு மின் அஞ்சல் மூலம் 2007-இல் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்த மறுப்பும் இன்று வரை வரவில்லை. அதைத் தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த பலருக்கும் அனுப்பினேன்.  உலக அரங்கில் புகழ் பெற்ற செல்வாக்குள்ள ஒரு அமெரிக்க அறிஞரின் தமிழைப் பற்றிய அபத்தமான கருத்துக்களை,  தமிழ்நாட்டில் 'செல்வாக்குள்ள''புகழ் பெற்ற' எந்த தமிழ் அறிஞராவது- மறைந்த கணபதி ஸ்தபதியின் முயற்சியால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட ஐந்திறம் பற்றி மிகப் பெரிய விவாதப் புயலைக் கிளப்பியவர்கள் உட்பட-   மறுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ( http://tamilsdirection.blogspot.in/2014_10_01_archive.html). அப்படி எவரும் மறுத்திருக்கவில்லையென்றால், அது தமிழுக்கே ஆபத்தான அறிகுறியில்லையா? எனது மறுப்புகளை ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்காகப் பதிவு செய்துள்ளேன். (https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION-ebook/dp/B07T8QV6RT)

அதே போல், பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக உரைகள், லெக்சிகன், அகராதி போன்றவைகளை மட்டுமே நம்பி, மேற்கொள்ளப்படும் மொழி பெயர்ப்புகளில் உள்ள குறைபாடுகள் பற்றி, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். அது சரியென்றால், தாமதமின்றி உலகில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு திருத்த இணைப்பு வழங்கினால் தான், ஷெல்டன் பொல்லாக் போன்ற உலக அறிஞர்கள் தமிழைப் பற்றி தவறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படும். அது பற்றிய கவலை தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

ஆக உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம். அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்வோம்;

என்ற நிலையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? அல்லது நாகசாமி போன்ற பிராமண எழுத்தாளர்களை எதிர்க்கும் 'உணர்ச்சிபூர்வ' பாணியில் செல்டன் பொல்லாக் போன்ற வெள்ளைக்கார எழுத்தாளர்களை எதிர்த்தால், உலகின் கேலிப்பொருளாகி விடுவோமே? என்ற மீடியா வெளிச்சத்தில் வலம் வரும் தமிழ்ப் புலமையாளர்களும், எழுத்தாளர்களும் பயப்படுகிறார்களா? அவ்வாறு கேலிப்பொருளாகும் போக்கிலேயே, தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மற்றும் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா' வலம் வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html) 

அவ்வாறு புலமைக்குக் கேடான 'வெறுப்பு அரசியலில்' பயணிப்பதன் காரணமாக லெக்சிகனிலும், உரைகளிலும் உள்ள குறைபாடுகள் தொடர்பாக எந்த ஆய்வுகள் வெளிவந்தாலும், அதை ஆய்ந்து அந்த குறைபாடுகளில் இருந்து தமிழ்க்கல்வியை மீட்பது பற்றிய அக்கறையும் தமிழ்நாட்டில் இல்லையா?  (http://tamilsdirection.blogspot.com/2018/12/  & https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html )

வெறுப்பு அரசியலே தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' மூலமாக 'ஆதாய அரசியலை' அரங்கேற்றி, மேக்ரோ உலகத்தை அம்மணங்களின் ஊராக மாற்றியது. தமிழ்நாட்டின் மேக்ரோ உலகமானது அம்மணங்களின் ஊராக இருப்பது வரை தான், மேலே குறிப்பிட்ட போக்கில் தமிழ்நாடு பயணிக்க முடியும். ஆனால் மைக்ரோஉலகில் அந்த போக்கினை நிர்மூலமாக்கும் 'சமூக சுனாமி' வரப் போவதை உணர்த்தும் முன் அபாயஅறிகுறிகள் (Warning signals) வெளிப்பட்டு வருகின்றன;

என்பதை புறக்கணிக்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனவே உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம்;

என்பது இனி தொடராது. அதன் விளைவாக லெக்சிகன் மற்றும் உரைகள் தொடர்பான குறைபாடுகளில் இருந்து தமிழ்க்கல்வி மீள்வதும் சாத்தியமாகும்.

No comments:

Post a Comment