Monday, March 25, 2019

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வானநிலை?

 

மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்! (1)




சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உலக இசை மாநாடு நடைபெற்றது. நெதர்லாந்த் (எனது நினைவின்படி) நாட்டிலிருந்து வயதில் மூத்த வெள்ளைக்காரப் பெண்மணியும் அந்த மாநாட்டில் உரையாற்றினார். அந்த உரையில் எனது 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வுகளைக் குறிப்பிட்டு பாராட்டினார். அந்த காலக்கட்டத்தில், பேரா.என்.ராமநாதன் இசைத்துறைத் தலைவர். அவரின் அழைப்பின் பேரில், நான் இசைத்துறை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் முன்னிலையில் பலமுறை உரை நிகழ்த்தியிருந்தது, அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மறுநாள் மாநாட்டு ஆய்வரங்கில், நான் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்த சான்றுகளைக் குறிப்பிட்டு, 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) பற்றி உரையாற்றினேன். இடைவேளையில் மேலே குறிப்பிட்ட வெள்ளைக்கார மூதாட்டியிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

சமஸ்கிருத சான்றுகளைப் பற்றியும் கர்நாடக இசைப் பற்றியும் மிகவும் உயர்ந்த கருத்து கொண்டிருந்த அந்த பெண்மணி எனது உரையை ரசிக்கவில்லை என்பது தெரிந்தது. அது மட்டுமல்ல, நான் குறிப்பிட்ட சான்றுகள் அந்த பொருளில் உள்ளனவா? என்றும் ஐயங்கள் இருப்பதாக என்னிடம் வெளிப்படையாகக் கூறினார்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், வெளிநாடுகளில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், கடந்த சுமார் 20 வருடங்களாக நான் உரையாடிய சந்தர்ப்பங்களில் எல்லாம், மேலே குறிப்பிட்ட வெள்ளைக்கார பெண்மணியைப் போல;

தமிழ் இசை என்றாலே, அபத்தமான அரைகுறைச் சான்றுகள் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக மிகைப்படுத்துபவர்கள் என்ற கண்ணோட்டமே வெளிப்பட்டது

தொடர்புள்ள துறைகளில் உள்ள புலமையாளர்கள் மத்தியில், தமிழ், தமிழ்  இசை தொடர்பான, தமது ஆய்வுமுடிவுகளை நிரூபிக்காமல், உணர்ச்சிபூர்வ ஆதரவாளர்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் போல பேசுவதும், எழுதுவதும் ஆகிய போக்கே, தமிழைப் பற்றி செல்டான் பொல்லாக் போன்றவர்கள் கீழாகக் கருதுவதற்கும் 

(http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html);  

தமிழ் இசைப் பற்றியும், அந்த கீழான கண்ணோட்டம் தொடர்வதற்கும் காரணங்கள் ஆகும். அவ்வாறு நிரூபிக்கப்படுவதன் முக்கியத்துவம் பிரபல எழுத்தாளர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் விளங்காததும் வியப்பைத் தருகிறது.

'அந்த' இழிநிலையை நிரூபிக்கும் வகையில் ஒரு 'பிரபல' எழுத்தாளர் ஒரு 'பிரபல' தமிழ் இசை 'அறிஞரை' எடுத்த பேட்டியில் வெளிப்பட்ட பல அபத்தங்களில் சில:

"இந்துஸ்தானி இசை தமிழிசையின் வளர்ச்சி நிலைதான்./செவ்வியல் என்பது சலனம் இல்லாமல் இலக்கணத்திற்குள் அடைபட்டு மக்களிடமிருந்து அன்னியப் பட்டு கிடப்பது. வாழும் இசை செவ்வியல் இசையாக இருக்க முடியாது. /இணை, கிளை, நட்பு, என்ற இந்த ‘பொருந்து சுவரக் காட்டங்கள்தான் ‘ஐரோப்பிய இசையில் (Harmonical Notes or Chords) என்று கூறப்படுகிறது. ஆக அடிப்படையில் இரு இசை மரபுகளும் ஒன்றே./"; 

'ராஜா அம்மணமாயிருக்கிறார்' என்ற கதையில் வரும் (தமிழ்நாட்டிலும் உள்ள) பெரியவர்களைப் போல (https://en.wikipedia.org/wiki/The_Emperor%27s_New_Clothes) பயப்படாமல், 'அந்த' கதையில் வரும் குழந்தையைப் போலவே, துணிச்சலையே இன்றைய மாணவர்களும், படித்த இளைஞர்களும் வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் இசை தொடர்பாக, குறிப்பாக தமிழிசை தொடர்பாக, 'செல்வாக்குடன்'(?) வெளிப்படும் அபத்தங்களை எல்லாம், அவர்களின் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது? என்றும் யோசித்து வருகிறேன். தமிழிசைப் பற்றி அபத்தமாக வெளிப்படும் கருத்துக்களுக்கு, தமிழ்நாட்டிலேயே மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் அறிவுபூர்வ எதிர்ப்பு வெளிப்படுவதானது, உலக இசை அறிஞர்கள் பார்வையில், ‘தமிழ் இசையின் தாழ்வான‌ நிலை’ தொடர்பான கண்ணோட்டத்தை மாற்ற துணை புரியும்.

'கர்நாடக இசையே உயர்வானது. சமஸ்கிருத மொழியில் உள்ள இசை நூல்களே உயர்வானது' என்ற நோக்கில், தமிழ் இசையைக் கீழாக கருதுபவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இசையியலில் புலமையின்றி அந்த போக்கில் பயணித்த, தனி வாழ்வில் மிகவும் நேர்மையான‌ பேராசிரியர் ஒருவர் என் மீது மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார். அவர் அறிவுபூர்வ சான்றுகளின்றி, மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டை மேடையிலும் முழங்க ஆரம்பித்தார். அதன்பின் அவருடன் எனக்கு இருந்த தொடர்பினை நானாகவே துண்டித்துக் கொண்டேன். அறிவுநேர்மையின்றி வலம் வரும் பேச்சாளர்க‌ளும், எழுத்தாளர்களும் சமூகத்திற்குக் கேடானவர்கள் என்பதும், அதன் மூலம் பணம் ஈட்டுபவர்கள் எல்லாம் 'அறிவு விபச்சாரிகள்' என்பதும், எனது கருத்தாகும்.

ஆனால் கர்நாடக இசையில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக் காட்டும் புலமையாளர்கள் எல்லாம், தமிழ் இசை தொடர்பான அறிவுபூர்வ ஆய்வுகள் அவர்கள் பார்வைக்கு வராததன் காரணமாகவும், மேலே குறிப்பிட்ட தமிழ் இசை தொடர்பான அபத்தங்களே அவர்களின் பார்வைக்கு வருவதன் காரணமாகவும், 'அந்த' அபத்தங்கள் எல்லாம் 'தமிழிசைக்கு பெருமை' என்று சாதனைகளாக கருதி, உலகில் உள்ள 'செல்வாக்கான' தமிழ் அமைப்புகள் பாராட்டி, 'அந்த' சாதனையாளர்களை கெளரவித்து வருவதாலும், தமிழ் இசை தொடர்பான தாழ்வான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 

இசை ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' ஆதரவாளராகப் பயணித்த காலத்திலும், எனது நிலைப்பாடுகளை அறிவுபூர்வமாக விமர்சிப்பவர்களைத் தேடி விவாதித்தே, 'பெரியாரியல் புலமையாளனாக' வளர்ந்தேன். அதன் காரணமாக, பெரியாரியலுக்கு எதிரான மார்க்சிய வெலினிய புலமையாளர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். (‘'அறிவுபூர்வ விவாத வறட்சியில்'- 'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்; http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html) இன்றும் அது போலவே, தமிழ் இசையைக் கீழாகக் கருதும், அறிவு நேர்மையுள்ள‌ இசைப்புலமையாளர்களுடன் விவாதித்து, தமிழிசை தொடர்பான சான்றுகளுடன், எனது ஆய்வுமுடிவுகளை எல்லாம் நிரூபித்து வருகிறேன்.

மேற்குறிப்பிட்டவாறு தமிழ் இசைப் பற்றி கீழான கண்ணோட்டம் உடைய உலக இசைப்புலமையாளர்கள் தொடர்ந்து என்னுடன் உரையாடி, எனது ஆய்வுக்கட்டுரைகளைப் படித்த பின், அவர்கள் அந்த கண்ணோட்டத்தில் இருந்து விடுபடுவதும், நடந்து வருகிறது. அதன்பின் நான் வெட்கப்படும் அளவுக்கு எனக்கு மிகுந்த மரியாதை வெளிப்படும் சங்கடங்களையும் நான் அனுபவித்து வருகிறேன்.

சிங்கப்பூரில் புகழ் பெற்ற சிம்பொனி இசை அமைப்பாளர் ஜான் சார்ப்லி (John Sharpely; http://www.johnsharpley.com/Welcome.html ) வெள்ளைக்காரர் ஆவார்.

சுமார் 14 வருடங்களுக்கு முன், எனது ஆய்வுக்கட்டுரைகள் மூலமாக எனக்கு அறிமுகமானார். அந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூர் 'எஸ்பிலனேட்' (esplanade) அரங்கில் அவர் நிகழ்த்திய மேற்கத்திய செவ்விசை நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார். அன்று சிங்கப்பூர் குடியரசின் தலைவர் நாதன் குடும்பம் உள்ளிட்டு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அந்த அரங்கில் பார்வையாளர்கள் அனைவரும்மேற்கத்திய சூட்’ (western Suit) உடையிலோ, அல்லது பாரம்பரிய உடையிலோ தான் நுழைய முடியும். அதற்காகவே ஒரு இந்திய பாரம்பரிய ஆணுடை வாங்கி அணிந்து சென்றேன். இடைவேளையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தமது ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் (Autograph) கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். நான் அந்தப் பக்கம் சற்று தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். என்னைக் கவனித்ததும், நாற்காலியில் இருந்து உடனே எழுந்து, என்னை நோக்கி வந்து, எனது கையைப்பிடித்து குலுக்கிக் கொண்டே, “நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னை கெளரவித்து விட்டீர்கள்என்று  அமெரிக்க ஆங்கிலத்தில் பாராட்டி விட்டு, பின் மீண்டும் சென்று நாற்காலியில் அமர்ந்து கையெழுத்துக்கள் போடத் தொடங்கினார்.

அந்த நீண்ட இடைவெளிக்குப் பின், சில மாதங்களுக்கு முன் ஈமெயில் (Email) மூலம் அவரைத் தொடர்பு கொண்டேன். மிகுந்த அன்புடன் உடனே பதில் போட்டு, அடுத்த முறை சிங்கப்பூர் வரும்போது, என்னைச் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்பு, அந்த நீண்ட இடைவெளிக்குப் பின், சிங்கப்பூரில் எனது மகனுடன் ஒரு விலை உயர்ந்த  உணவகத்தில் விருந்துக்கு அழைத்திருந்தார். சுமார் 3 மணி நேரம் இசை ஆய்வுகள் பற்றிய உற்சாகமான உரையாடல் நிகழ்ந்தது. அந்த உரையாடலின் போதும், தமக்கு இந்திய இசை தொடர்பாக சமஸ்கிருத நூல்கள் பற்றி மட்டுமே தெரியும், தமிழில் இசை நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது, என்று குறிப்பிட்டார்.

பின் கடந்த வாரம் அவரின் வீட்டில் 'இசை மருத்துவக் குணமாக்கல்' (Music Healing) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த சுமார் 15 நபர்களில், அவர்களுடன் நானும் எனது மகனும் பங்கேற்றோம். நேபாளத்திற்குச் சென்று, பயிற்சி பெற்று, வாங்கி வந்திருந்த பாரம்பரிய இசைக்கருவிகள் துணையுடன், வந்திருந்த அனைவரையும் பயிற்சிக்கு உட்படுத்தி பிரமிக்க வைத்தார். இடைவேளையில் உரையாடிய போது, நான் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, 'தமிழ் இசையியல்' (Tamil Musicology) தொடர்பான சான்றுகளை விளக்கிய போது, தாம் இனி தான் அவை பற்றி அறிய முயற்சிக்க வேண்டும் என்றார்.

ஆக, பிறமொழி இசைப் புலமையாளர்கள் மத்தியில் சமஸ்கிருத இசை நூல்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன, என்பதும், தமிழ் இசை தொடர்பான சான்றுகளை துவக்கத்தில் நம்ப மறுக்கும் போக்கும், நமது இசையியல் புலமை தொடர்பாக அவர்களுக்கு மிகுந்த மதிப்பு வந்தால் மட்டுமே, தமிழ் இசை தொடர்பான சான்றுகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள், என்பதும் எனது அனுபவங்கள் மூலமாக வெளிப்பட்டது

எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும். (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html ) முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டு, எனது ஆய்வுத்திட்டங்களில் (R & D Projects) உள்ள குழுவினர் எல்லாம், அந்த போக்கில் தயவு தாட்சண்யமின்றி பயணிப்பதும், அந்த திட்டங்களின் வெற்றிகளின் இரகசியமாகும்.( http://tamilsdirection.blogspot.com/2019/01/ )

என்னை மிகவும் மதித்து அன்பு செலுத்திய காரணத்தால், என்னுடன் பழகுபவர்களில் எவரும் உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வான‌ நிலைக்கு பங்களிப்பு வழங்கினால்;

அந்த தவறினை  நான் கண்டிக்காமல் விட்டதில்லை. என்னுடன் பழகியவர்கள்/ பழகுபவர்கள் அதை அறிவார்கள். என் மீது மிகுந்த அன்பு கொண்ட மம்மதுவின் தவறுகளையும், அந்த அடிப்படையிலேயே சுட்டிக்காட்டினேன். (‘'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' மீளும் தமிழ்நாடு?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/ ).

மம்மதுவைப் போலவே, என் மீது மிகுந்த அன்பினை வெளிப்படுத்திய இளையராஜாவும் அதற்கு விதி விலக்கல்ல. இளையராஜாவின் சிம்பொனி வெளிவந்து விட்டதாக நினைத்து, 'சிம்பொனி இசை என்றால் என்ன?' என்பதை விளக்கிய எனது கட்டுரை 'உண்மை' மாத இதழில் வெளிவந்திருக்கிறது. பின்னர் தான் வெளிவராத சிம்பொனி இசையை தமிழ்நாடு பாராட்டிக்கொண்டிருக்கிறது, என்பது எனக்குத் தெரிந்தது; இசை ஆசிரியர் தன்ராஜிடம் இளையராஜா போன்றே மாணவராக பயின்ற இசை ஆசிரியர் வெங்கடேசன் மூலமாக. 'எனக்கும் இளையராஜவுக்கும் இருந்த தொடர்பு பற்றி நன்கு அறிந்த லண்டனில், திருக்குறள் (788) இலக்கணமாக வாழும்,  எனது உயிர் நண்பர் தொல்காப்பியன், மேலேக் குறிப்பிட்ட 'சர்ச்சையில்' நான் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை, என்று அறிவுறுத்தினார். தொல்காப்பியன் உள்ளிட்டு எனக்கு நெருக்கமான எவரிடமும் வெளிப்படும் குறைகளை,  அவர்களிடமே சுட்டிக்காட்டுவது எனது இயல்பு என்பதையும் அவர் அறிவார். ஆனாலும் எனது 'வாழ்வியல்' நன்மைக்காகவே, அவர் அவ்வாறு அறிவுறுத்தினார்.'  (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_99.html) (குறிப்பு கீழே)

அந்த வகையில் தவறு செய்தவர்களில் இளையராஜா முதல் நபருமல்ல; கடைசி நபருமல்ல; அச்சூழலை ஆதரித்து வளர்த்து வருபவர்களும் பகுதி குற்றவாளிகளே ஆவர். தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வமாக வளர்ந்த வழிபாட்டுப் போக்கில் இளையராஜாவும் ‘பலி’யானானவரே, என்பது எனது கருத்தாகும். அவரின் என்றும் நிலைக்கும் 'How to Name It', 'Nothing but wind' போன்ற இசை முயற்சிகள் எல்லாம் உரிய முக்கியத்துவம் பெறாமல், அவரின் 'வெளிவராத சிம்பொனி'(?) முக்கியத்துவம் பெற்றதானது, அவருக்கு மட்டும் இழுக்கல்ல. தமிழ்நாட்டில் வழிபாட்டுப் போக்கினை ஊக்குவித்த அனைவருமே குற்றவாளிகள் ஆவார்கள்.


அது தொடர்பாக, என்னைக் கண்டிப்பதற்காக தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், 'நான் தான் டாக்டர்.வீ ' என்று தெரிந்த பின், அந்த முயற்சியைக் கைவிட்டதாகவும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அந்த காலக்கட்டத்தில், உசிலம்பட்டி பகுதியில், 'முதல்வர் அம்மா அவர்களே! டாக்டர் வீ-யைக் கைது செய்ய வேண்டும்' என்ற வகையில் சுவரொட்டிகளைப் பார்த்தாகவும், ஒரு நண்பர் என்னிடம் தெரிவித்தார். அந்த போக்கில் பயணிக்கும் தமிழ்நாட்டில், உலக அளவில் தமிழ் இசைக்குப் புகழ் ஈட்ட வல்ல எனது ஆய்வு முடிவுகள் எல்லாம், சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இருட்டில் இருப்பதில் வியப்புண்டோ? அறிவுப்புலத்தில் உள்ள குறைகளை, இருட்டில் தள்ளும் போக்கினை ஊக்குவிக்கும் சமூகமானது அறிவுப் பாலைவனமாகி விடும்.

(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

இசை ஆய்வில் ஈடுபடத் தொடங்கிய பின், நம்பமுடியாத அவமானங்களையும், துயரங்களையும் நான் சந்தித்தேன். ஆனால் தமிழ் இசை ஆறிஞர் ப.தண்டபாணியுடன் ஒப்பிடுகையில், அவை ஒன்றுமில்லை, என்பதும் எனது கருத்தாகும். (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html) நாங்கள் இருவருமே திராவிட அரசியல் பொதுவாழ்வு வியாபாரிகளின் சுயநலன்களுக்காகப் பலியானவர்கள் ஆவோம். அதற்கான நீதி கிடைப்பதைத் தாமதப்படுத்த முடியுமே தவிர, தவிர்க்க முடியாது.

அதைப் பற்றி கவலைப்படாமல், எனது ஆய்வுகளைப் படித்து விளங்கி என்னை ஊக்குவித்து வருபவர்களின் துணையுடன், நான் முன்னேறி வருகிறேன். எனது ஆய்வுகள் ஆங்கிலத்தில் சில ஆய்வு இதழ்களிலும், http://musicresearchlibrary.net/omeka/    இணைய தள‌த்திலும் வெளிவந்திருக்கின்றன. (http://drvee.in/?page_id=23

தான் வாழும் சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டிய வாழ்வும், அதன் மூலம் தனது இயல்போடு இசைந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passions)  அடையாளம் கண்டு, பேணி வளர்த்து, இயல்பான இன்பங்களை அனுபவித்தும், துன்பங்களை அதற்கான 'விலையாக' ‘அனுபவித்தும் வாழ இயலும்;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html )

ஏற்கனவே எனது ஆய்வுகள் பற்றி அறிந்தவர்கள் கீழ்வரும் கேள்விகளை அடிக்கடி எழுப்பி வருகிறார்கள்.

1. உங்களின் ஆய்வுகள் எல்லாம் ஆங்கிலத்தில் நூல்களாக வராமல், உல்கின் கவனத்தை ஈர்க்க முடியுமா?

2. உங்களுக்குப் பின் ங்கள் ஆய்வுகள் தொடர சிலரையாவது பயிற்றுவிக்க வேண்டாமா? அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா?

கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூரில் வாழும் எனது மகனும், அவ்வப்போது மேலே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்புவதுண்டு. கூடுதலாக வயதான காலத்தில் ன்னுடன் வந்து சிங்கப்பூரிலேயே நிரந்தரமாக தங்குமாறு அழுத்தமும் கொடுப்பதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணமானது, எனது கவலையைத் தூண்டி, அது தொடர்பாக நான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html )

மேலே குறிப்பிட்ட சூழலில், கடந்த சில வருடங்களாக சில மாதங்கள் சிங்கப்பூர், சில மாதங்கள் திருச்சி NIT ஆய்வுத் திட்டம் என்று வாழ்ந்து வருகிறேன். நான் சிங்கப்பூரில் இருக்கும் காலங்களில், புதையலை தோண்டுவது போல, எனது மகன் எனது வாயைக் கிளறி, எனது சுமார் 30 வருட ஆய்வுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, கீழ்வரும் இணைய தளத்தினை கடந்த வருடம் வெளியிட்டார்.

 
மேலே குறிப்பிட்ட முதல் கேள்வி தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

உலக அளவில் தமிழுக்கு பெரும் புகழ் ஈட்ட வல்ல ‘‘Ancient Music Treasures – Exploration for New Music’ First published in 2006 - ISBN 81 – 903416 -0- X / 9-788190-341608; Pages: 160; Tables: 14; Figures: 16)

எனது ஆங்கில புத்தகம், இன்றுவரை இருட்டில் இருப்பது தொடர்பான தகவல்களை, வாய்ப்பும் நேரமும் அமையும்போது வெளிப்படுத்துவேன். தமிழ்நாடானது, திருப்பு முனையில் இருப்பதால், அந்நூலை விரிவாக்கி, வெளியிடும் முயற்சியிலும் உள்ளேன்; 'இருளின் காலம்' முடிவில் இருப்பதால்.’ (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html )

எனது ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றை கூடுதலாக சேர்த்து, திருத்தி, 'Ancient Music Treasures- Exploring for New Music Composing ' என்ற தலைப்பில் நூலை எழுதி முடித்தேன்.

சிங்கப்பூரில் எனது நூல்களை வெளியிடுவதற்காகவும், எனது ஆய்வுகளுக்கு உதவுவதற்காகவும் ஒரு நிறுவனத்தை எனது மகன் பதிவு செய்து, 'அமெசான்' (Amazon) வழியாக அந்நூலை வெளியிட்டுள்ளார்.

 
மேலே குறிப்பிட்ட தகவலை ஜான் சார்ப்லிக்கு தெரிவித்தேன். தான் அந்நூலை உடனே வாங்கி விட்டதாகவும், விரைவில் படிக்க இருப்பதாகவும் எனக்கு பதில் போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, நானறிந்த வெளிநாட்டு புலமையாளர்களுக்கும் அந்த தகவலை அனுப்பத் தொடங்கியுள்ளேன்.

மேலே குறிப்பிட்ட நூலில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பெருங்கதை, ஆனாயநாயனார் புராணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பான சான்றுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரிய விளக்கங்களுடன் வெளிவந்துள்ளன.

எனது பலமைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் மூலமாக, தமிழ் இசை தொடர்பான சான்றுகள் மதிக்கத்தக்க சான்றுகளாக புலமையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியானது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

அடுத்து கீழ்வரும் நூல்களும் வெளியாக உள்ளன.

BOOK’s to be published:

‘Ancient Tamil Texts – The pitfalls in the Study & Translation’ 
(பின்னர் தலைப்பில் சிறிய மாற்றத்துடன் வெளிவந்துள்ளது; 
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)


‘Musical Linguistics in Ancient Tamil Texts – A New Gateway to Marketable NLP Applications’

தொடர்ந்து அடுத்தடுத்த நூல்களையும் எழுதி முடித்து, அடுத்தடுத்து வெளியிட எண்ணியுள்ளோம்.

.’உங்களுக்குப் பின் ங்கள் ஆய்வுகள் தொடர சிலரையாவது பயிற்றுவிக்க வேண்டாமா? அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா?’ என்பது தொடர்பாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை, அடுத்த பதிவில் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.

எனது மகன் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். (pannpadini@gmail.com) 

குறிப்பு: 'ஆய்வு வட்டம்' சார்பாக, மறைந்த வெ.கிருட்டிணமூர்த்தி வெளியிட்ட “சோழர் வளர்த்த வேதக் கல்வி முதலிய கட்டுரைகள்” நூலில் 'சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது கூடுதலாக தொடர்புள்ள படங்களுடன் நல்ல வண்ணம் கீழ்வரும் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது.
https://www.vinavu.com/2016/07/28/history-of-symphony/ 


'ஒரு ஊரின் 'கோத்திரத்தை', அந்த ஊரில் உள்ள இசையின் மூலம் ஆராய்ந்தறியலாம்', என்று 'நாலடியார்' மூலம் நான் கண்டுபிடித்த திறவுகோலின் அடிப்படையிலேயே, மேற்குறிப்பிட்ட க‌ட்டுரையினை நான் எழுதினேன்.(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

(வளரும்)

No comments:

Post a Comment