Saturday, January 26, 2019

இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (3)


உலக அளவிலான 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கு வெளிச்சம் காட்டும்சிக்னல்கள்’ தமிழ்நாட்டில்?


இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக தமது மொழி, மொழியினர் என்ற அடையாளங்களும் வலுவாக இருக்கின்றன. குஜராத் மாநிலம் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும். அங்கு குஜராத்தி மொழியும், குஜராத்தியர் என்ற அடையாளமும், தமிழ்நாட்டில் தற்போதுள்ள தமிழ், தமிழர் என்ற அடையாளங்களை விட வலுவாக இருப்பதுடன், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக இருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்றாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை பலகீனமாவதன் மூலம், மீண்டும் இந்தியாவில் தமிழ்நாடு வித்தியாசமாகப் பயணிக்கிறதா?

தற்போது 'இந்தியர்' என்ற அடையாளம் தொடர்பாகவும், 'தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு' என்பது தொடர்பாகவும், என்னென்ன 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருகின்றன? என்று தெரியாமலேயே, தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகளும், இயக்கங்களும், இந்திரா காந்தியின் நெருக்கடி கால ஆட்சியில், 'ஆட்சிக் கலைப்பு'க்கு உள்ளாவதற்கு முன் இருந்த, தி.மு. போல, செயல்பட்டு வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
(‘இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (2); சமூகத்தில் முக்கியமானக் கட்டங்களில் வெளிப்படும் 'சிக்னல்கள்'; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_13.html

மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பினை அதீதமாக ஈட்டியிருந்த தி.மு. ஆட்சியை ஆதரித்த போக்கில், தனித்தமிழ்நாடு கோரிக்கை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  (‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html

ஒரு சமூகமானது தாய்மொழி பாரம்பரியம் தொடர்பான  சமூக ஆணி வேர்களை அழிக்கும் 'சமூக வேர்க்கொல்லி' நோயில் சிக்கி விடுமானால், அந்த சமூகத்தில் வெளிப்படும் அழிவுகளிலும், குற்றங்களிலும், பிற பாதிப்புகளிலும், அக்கிருமிகளால் ஏற்படும் சமூக நோய்களின் 'வலிமை' வெளிப்படும்.

‘1967-இல் தமிழ்நாட்டில் தி.மு. ஆட்சியைப் பிடித்த போது, அது போன்ற நோய் விஷக்கிருமிகளிடம் தமிழ்நாடு சிக்கிவிட்டதாக, அன்று பதவி இழந்த முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தபோது, அவர் மீது கோபப்பட்டவர்களில் நானும் ஒருவன், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து, அந்த ஆட்சி மாற்றத்தை வரவேற்ற மாணவர்களில் நானும் ஒருவனாக இருந்ததால். இன்று காங்கிரஸில் இருந்த‌, பக்தவச்சலத்தின் பேத்தியும், அந்த நோய்க்கிருமிகளில் இடம் பெற்றுள்ளாரா? இல்லையா? என்பது அவர் மீது நடக்கும் சி.பி. விசாரணை முடிவில் தெளிவாகும்.

அதன் வளர்ச்சிப் போக்கில், 'திராவிட' ஊழல் குற்றவாளிகள் எல்லாம், 'தம்மால் முடியவில்லையே' என்று வெட்கப்படும் அளவுக்கு, கடந்த 10 மாதங்களாக, சி.பி. விரும்பினாலும் கைது செய்ய முடியாத அளவுக்கு நீதிமன்றம் மூலம் தடுக்கும் வல்லமையை, தமிழ்நாட்டு 'தேசியக்' கட்சியின் ஊழல் குற்றவாளி வெளிப்படுத்தியுள்ளார்

ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்து

ஜெயலலிதாவும் அதை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து:

பின் தனது மரணத்தை தானே வரவழைக்கும் போக்கில், ஜெயலலிதா சசிகலாவை தனது வீட்டுக்குள் அனுமதித்து:

மரணத்திற்குப் பின், ராஜாஜி அரங்கத்தில், அவர் பிணத்தைச் சுற்றிஅந்தகுற்றவாளிகள் நின்றதும், 'சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற கவலையின்றி, நாட்டின் தலைவர்கள் எல்லாம் 'அந்த' குற்றவாளிகளை வணங்கி அஞ்சலி செலுத்தியதும், அதன் உச்சக்கட்டமாக பிரதமர் மோடியும் அவர்களை வணங்கியது மட்டுமல்லாமல், தமிழக பா.. தலைவர்களில் ஒருவர் (நேரடி ஒளிபரப்பாவது தெரிந்தும்) வற்புறுத்தி நடராஜனை வணங்க வைத்ததும்;

இந்தியாவையே ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது;

என்பதை உலகுக்கு அறிவித்தது. 'ஆட்சியைக் கலைத்தால் தனித்தமிழ்நாடு கோரிக்கை புத்துயிர் பெறும்' என்று தி.மு. ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் எச்சரித்து, ஆட்சியைக் கலைத்த பின்னர், காங்கிரசும், பா..கவும் மத்திய அமைச்சரவையில் தி.மு.க-வை இடம் பெறச் செய்த பின்னணி அறிந்தவர்களுக்கு, 'அந்த சலாம்' வியப்பைத் தருமா?

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பொது ழுக்கக்கேட்டினை முதன் முதலாக அரங்கேற்றியதே ஒரு தேசியக் கட்சியாகும், என்பதை அறிந்தவர்களுக்கும், 'அந்த' சலாம் வியப்பைத் தராது.

இந்திய விடுதலைக்குப் பின் 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத்துக்க நாளாகஅறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் .வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதாவது ஜெயலலிதா மறைவிற்குப் பின் அரங்கேறிய கூவத்தூர் பாணிக்கு, தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டதே, காங்கிரஸ் எனும் தேசியக்கட்சியாகும்.

அதே ராஜாஜியின் ஆதரவுடன், அதே பாணியில் தி.மு. எம்.எல்.ஏக்களை 'வளைத்து', கட்சியில் நெடுஞ்செழியனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்த கருணாநிதி முதல்வரானார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர், ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் 'அதே' பாணியில் பயணித்தனர். அந்த வரலாற்றுப் பின்னணியிலேயே, சசிகலா குடும்பம் 'அந்த' பாணியின் உச்சக்கட்ட வளர்ச்சியை கூவத்தூரில் வெளிப்படுத்தியுள்ளது.

மேலே குறிப்பிட்ட போக்கில், தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு 'சலாம்' போட்டு பயணித்து வந்த தேசியக் கட்சிகள் எல்லாம், காஷ்மீரில் 'மென்சக்தி'(Soft Power) பற்றிய சரியான புரிதல் இன்றி, வன்சக்தியையே (Hard Power) நம்பி மேற்கொள்ளும் தேசக்கட்டுமான (Nation Building) முயற்சிகள் எல்லாம், அங்கு பிரிவினைக் கோரிக்கையை வளர்க்கவே துணை புரிந்ததா? என்ற திறந்த மனதுடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்தினை இனியும் தாமதப்படுத்துவதானது;

சோவியத் நாடு சிதறுண்ட பாணியில், இந்தியாவையும் சிதற வைக்கு ம் திசையில் பயணிக்கச் செய்யும்.

தேசக்கட்டுமானத்தின் அடித்தளத்தில் பெரும்பங்கு வகிப்பது மென் சக்தியாகும்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வன்சக்தி ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது வன்சக்தியாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்சக்தி ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, வன்சக்தியையே நம்பி பயணிப்பதானது, தற்கொலைப் பாதையாகும்ஊழல் மற்றும் பாரபட்ச நோய்களில் அரசு சிக்குமானால், மென்சக்தி பலகீனமாகி அந்த அரசு பயணிப்பதைத் தவிர்க்க முடியாது.

இது தொடர்பாக, 1994இல் ‘PUCL BULLETIN’ இதழில், 'ENCOURAGING NEW TRENDS IN HUMAN RIGHTS ACTIVITIES’ (by Prof.S.A.Veerapandian, Member, Tamilnadu PUCL '- PUCL BULLETIN -People's Union for Civil Liberties, India. May 1994) வெளிவந்த கட்டுரையின் கீழ்வரும் பகுதியானது, ஆய்விற்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.

ஒரு நாட்டின் வன்சக்தி உள்ளிட்டு அரசு எந்திர செயல்பாட்டிற்கான செலவுகளுக்கும், வளர்ச்சிக்கான செலவுகளுக்கும், இடையிலான நேர்த்தகவானது;

எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதோ, அதற்கு ஏற்றார்ப் போல, பொருளாதார மற்றும் மனிதவள மூலதன உருவாக்கமானது வளரும். (to facilitate capital formation in economic as well as human resource-nature term)
அந்த தகவானது வளரும் போக்கில், மூலதன உருவாக்கமானது குறையும்.

அந்த தகவு வளர்ந்து, மாறுநிலைக்கும்(critical value) மேலாக அதிகரிக்கும் போது, மென்சக்தி பலகீனமாகி, கறுப்புச் சட்டங்களின் துணையுடன் வன்சக்தி அதிக அளவில் செலவாகி ஆட்சி செய்ய வேண்டிய நெருக்கடியில், அந்த நாடு சிக்கி விடும்.

மேலே குறிப்பிட்ட மூலதன வளர்ச்சிக்கான சமநிலை சீர்குலைந்து, சமூகமானது மூலதன இழப்புப் போக்கில், வீழ்ச்சி திசையில் பயணிக்கும்.

மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துடன் பயணித்த சோவியத் நாடு, செக்கோஸ்லோவோக்கிய போன்ற நாடுகள் அந்த திசையில் பயணித்தே சிதறலுக்கு உள்ளாக நேர்ந்தது. (The energy for the functioning of this mechanism is ultimately derived only from the people. From expenditure point of view, this energy can be divided into two parts. While the first part is used just to maintain the functioning, the second part is used for productive development activities. Obviously, the ratio of the first part to the second part must be minimum, to facilitate capital formation in economic as well as human resource-nature terms. The ratio has a maximum critical value for a given society to survive as a democracy.  Once the limit is crossed black laws will have to be enacted and a dominant percentage of total energy will have to be spent just to maintain social coordination……… The original social equilibrium is lost and the trend of social disequilibrium appears. Capital erosion will inevitably accompany this phase, thereby strengthening the trend of social disequilibrium………… The painful transitions taking place in the multinational centralized systems like the former Soviet Union and Yugoslavia reveal this truth.)

இந்திய விடுதலைக்கு முன், பிரிவினை நோக்கில் தமிழ்நாட்டில் வலிமையாக வளர்ந்த மென் சக்தியிடம், 1952 பொதுத்தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சியானது, அந்த தோல்வியைச் சரியான தேசக்கட்டுமான திசையில் எதிர்கொள்ளாமல், சுயநல சந்தர்ப்பவாதம் வழியில் முதலில் எதிர்கொண்டு, பின் 1967க்குப் பின், 'திராவிட' ஊழலை அந்த சந்தர்ப்பவாத அரசியல் பேரத்திற்குப் பயன்படுத்தி, இன்று இந்தியாவையே தமிழ்நாட்டின் 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் விளைவில் முடிந்துள்ளது; 'திராவிட' ஊழல் குற்றவாளிகள் எல்லாம், 'தம்மால் முடியவில்லையே' என்று வெட்கப்படும் அளவுக்கு, தமிழ்நாட்டில் 'தேசிய' ஊழல் குற்றவாளிகள் வெளிப்படுவதற்கும், அதுவே காரணமானது

இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது? பிரிவினை சமரசப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தொடங்கி, வளர்ந்து, இன்று 'வற்றி' வரும் தீக்குளிப்புகள்/தற்கொலைகள் மூலமாக, எவ்வாறு 'அந்த' மென்சக்தியும் வற்றி வருகிறது? ஆதாய அரசியலில் அந்த மென்சக்தியானது நீர்த்துப் போன போக்கில், அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது? (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html  )

குறுகிய அரசியல் லாபத்திற்காக, தேசியக்கட்சிகள் எல்லாம், சரியான தேசக்கட்டுமானத் திசையில் மென்சக்தியை வளர்க்காமல், வன்சக்தியின் வலிமையையே நம்பி ஆட்சி செய்வதானது, இந்தியாவை சோவியத் நாடு பாணியில் எதிர்காலத்தில் சிதறும் திசையிலேயே பயணிக்கச் செய்யும். 

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான', 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, ‘வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு- சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.’ என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அதே நேரத்தில், இயற்கையின் போக்கில், 1944இல் தமிழ்நாட்டில் நடந்த பாதகமான 'சமூக மடைமாற்றத்திற்கு' எதிரான திசையில்;
(‘சமூக தள விளைவு (social polarization) பற்றிய சான்றுகள்? தமிழும், தமிழர்களும்,சீரழிய, 'பாதகமான சமூக மடை மாற்றம்'   காரணமா?’; http://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html

இந்தியாவில் சரியான தேசக்கட்டுமானத்திற்கான 'திறவுகோல்' உருவாவதற்கானசாத்தியத்திற்கான சிக்னல்கள்' தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வருகின்றன.

'தமிழர்' என்ற அடையாள நோக்கிலும், 'இந்தியர்' என்ற அடையாள நோக்கிலும், சரியான தேசக்கட்டுமான சமூக செயல்நுட்பத்தை கண்டுபிடித்து, இந்தியாவில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று;

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் உள்ள மக்கள் படும் தவிர்க்கக்கூடிய துயரங்களில் இருந்து விடுதலை பெறுவதுடன்;

வெளிநாட்டு, உள்நாட்டு சூழ்ச்சி வலைகளில் இருந்து இந்தியாவை மீட்டு வளரச் செய்வதற்கு, அம்முயற்சிகள் உதவும்.

ஒரு தனிமனிதனால் ஆகக்கூடிய முயற்சியல்ல என்பது தெரிந்தும், பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாமல், சுயலாப நோக்கின்றி, தமிழின், தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் காலப்போக்கில் சேர்ந்து, ‘ஈகோ’ (Ego) சிக்கலற்ற கூட்டுமுயற்சியாகி, உரிய பலனைத் தரும் என்பது எனது அசாத்திய நம்பிக்கையாகும்.

கடுமையான பொருளாதாரச் சிக்கலையும், பயங்கரவாதத்தையும், சமூக சீர்குலைவையும் சந்தித்து வரும் அமெரிக்கா, ஷ்யா போன்ற நாடுகளிலும் 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருவதையும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

எனவே எனது அசாத்திய நம்பிக்கை வெற்றி பெறுமானால், அது உலக அளவிலான 'தேசக்கட்டுமான சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கும் வெளிச்சம் காட்டுவதாக அமைந்தாலும் வியப்பில்லை
(‘இந்தியாவில், தமிழ்நாட்டில், 'தேசக் கட்டுமானச் சிக்கல்'  (Nation Building Crisis); http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) 

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா
(‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress
என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்; தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதால்.  
(‘தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கான முயற்சியும், இந்தியாவிற்கே முன்னுதாரணமான தேசக்கட்டுமானத் திசையும்’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html )
 

     
குறிப்பு:

தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும், 'திராவிட மன நோயாளிகள்' செல்வாக்கானது, எனது ஆய்வின் பலன்களால், தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும் கண்டுபிடித்துள்ளேன். ’தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும்இசைஎன்ற சொல்லை, 'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும்என்பது, தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்
(‘ உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை 'நத்தி' பிழைத்து தான், எனது ஆய்வுகள் தமிழ்நாட்டில் 'வெளிச்சத்திற்கு வர முடியும்' என்ற நிலையை மாற்ற, எனது வரை எல்லைகளுக்குட்ப்பட்டு (Limitations), எனது வாழ்க்கையையே ஒரு போராட்டமாக அனுபவித்து வாழ்ந்து வந்துள்ளேன். அதே காரணத்தால், வெளிச்சத்திற்கு வராமல், உலக அளவில் தமிழுக்கு பெரும் புகழ் ஈட்ட வல்ல ‘‘Ancient Music Treasures – Exploration for New Music’ First published in 2006 - ISBN 81 – 903416 -0- X / 9-788190-341608; Pages: 160; Tables: 14; Figures: 16)

எனது ஆங்கில புத்தகம், இன்றுவரை இருட்டில் இருப்பது தொடர்பான தகவல்களை, வாய்ப்பும் நேரமும் அமையும்போது வெளிப்படுத்துவேன். தமிழ்நாடானது, திருப்பு முனையில் இருப்பதால், அந்நூலை விரிவாக்கி, வெளியிடும் முயற்சியிலும் உள்ளேன்; 'இருளின் காலம்' முடிவில் இருப்பதால்.

NOTE: 'ANCIENT MUSIC TREASURES - EXPLORING FOR NEW MUSIC COMPOSING' 

No comments:

Post a Comment