தமிழர் விரோதப் போக்கில் பயணிப்பது; 'பெரியார்' கட்சிகளா? ஆர்.எஸ்.எஸ்ஸா?
நேரு குடும்ப சுயநல அரசியல்
ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத்
தொடங்கியுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா காந்தியின் கணவரான
பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
‘Feroze The
Forgotten Gandhi’ ( by Bertil Falk ) புத்தகத்தில்
இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும்,
பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது
பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.
அவ்வாறு ஊழல் களங்கத்துடன்,
நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;
இந்தியா விடுதலை ஆனது
முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை
ஈர்த்தது.
அவ்வாறு இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப்
பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித்
தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி
காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா? பின் 1967இல் ஆட்சி மாற்றம் வெளிப்படுத்திய
'பொதுவாழ்வு வியாபார' போக்கில், முதல்வர் அண்ணா மனமுடைந்து, விரைவில் மரணமடைய விரும்பியதையும்,
அண்ணாவை அறிமுகம் செய்த ஈ.வெ.ரா அவர்களும் மனமுடைந்து, முனிவராக ஒதுங்க விரும்பியதையும்,
இன்று வரை விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது சரியா?
அவ்வாறு விவாதத்திற்கு
உட்படுத்தியிருந்தால்;
கீழ்வரும் கேள்விகளை
எழுப்பும் வாய்ப்பு வந்திருக்காது, என்பது எனது கருத்தாகும்.
கீழ்வரும் கேள்விகளுக்கு, 'பா.ஜ.க அலுவலகம்
இழுத்து மூடும் போராட்டம்' நடத்திய கட்சிகளின் சார்பில் பதில்கள் வெளிவருமா?
1. கர்நாடகாவை இன்று ஆள்வது காங்கிரஸ் அரசு. காவிரி பிரச்சினைக்காக
போராடுவதென்றால், முதலில் காங்கிரஸ் அலுவலகமான, 'சத்தியமூர்த்தி பவனை' இழுத்து மூடும்
போராட்டம்' தானே நடத்தியிருக்க வேண்டும். இன்று வரை சோனியாவும், ராகுலும், கர்நாடக
முதல்வரை, உச்சநீதி மன்ற ஆணையை மதித்து, தமிழ்நாட்டிற்கு தண்ணிர் தருமாறு அறிவுறுத்தினார்களா? அல்லது கர்நாடக
முதல்வர், அவர்களுக்கு கட்டுப்படவில்லையா?
2. தமிழ்நாட்டில் 6 வருடங்களாக மீத்தேன் திட்டத்தை எதிர்த்து
போராட்டம் நடந்து, பிரதமர் மோடி அரசு அத்திட்டத்தை
அதிகாரபூர்வமாக கை விட்டது.
மீத்தேன் திட்டத்திற்காக போராடுவதென்றால், 'சத்தியமூர்த்தி
பவனை இழுத்து மூடும் போராட்டம்', தி.மு.க அலுவலகமான 'அண்ணா அறிவாலயத்தை இழுத்து மூடும்
போராட்டம்' தானே நடத்த வேண்டும்; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் நாகரீகம் இல்லையென்றாலும்;
காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு தடையை,பிரதமர் மோடி நீக்கியதற்கு,
நன்றி தெரிவிக்கும் நாகரீகம் இல்லையென்றாலும்.
3 . 2011 - 13 காலத்தில், காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசில்
சுற்றுப்புற சூழல்துறையில் அனுமதி வழங்கப்பட்ட
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதென்றால்;
முதலில் 'சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடும் போராட்டம்', தி.மு.க அலுவலகமான
'அண்ணா அறிவாலயத்தை இழுத்து மூடும் போராட்டம்' தானே நடத்த வேண்டும்; ஜல்லிக்கட்டு, மீத்தேன்
போன்றவற்றை போல, இத்திட்டத்தையும் மோடி அரசு கைவிடும் அளவுக்கு, எதிர்ப்பையும் உணர்த்த
வேண்டுமென்றால்.
4. 1969இல் முதல்வரான தி.மு.க தலைவர் சட்டசபையிலேயே ,
'காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டிக்கொள்வதற்கு ஆட்சேபணையில்லை' என்று
அறிவித்த போது, இப்போது போராடும் கட்சிகளின் தலைவர்களில் யார்? யார்? அன்று இருந்தார்கள்?
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்? பின் பிரதமர் இந்திரா காலத்தில் தானே, காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன.
அதற்கு பொறுப்பான கட்சிகளுடன் நேசமாக இருந்து கோண்டு, 'பா.ஜ.க அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம்'
நடத்துவது சரியாகுமா?
5. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் 'ஈழம்' இருந்தபோது,
கச்சத்திவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை, விடுதலைப்புலிகள் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காத, அமைப்புகளுக்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்காக போராடும் அருகதை உண்டா?
‘
மேற்குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம்
'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தோன்றாதா? பா.ஜ.கவை
எதிர்ப்பதென்றால், அதற்கு அறிவுபூர்வமாக போராட, அந்த அமைப்புகளுக்கு தெரியவில்லையா?
'தமிழ் உணர்வு' என்பது இன்றைய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் கேலிப் பொருளாக, இது
போன்ற போராட்டங்களும், அரசியலில் சுயநல குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே வெளிப்படும், 'எழுச்சிமிகு
உணர்ச்சிகர' பேச்சுக்களும், எழுத்துக்களும் காரணங்கள் ஆகி வருவதும், புரியவில்லையா?
( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7)- தமிழும்,
தமிழ் உணர்வும், மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.in/2015_06_01_archive.html
) இப்படிப்பட்ட தவறான திசையில், தமிழ்நாடு பயணிப்பதானது, எப்போது முளைவிட்டு, எப்படி
வளர்ந்தது? என்பதை அடுத்து பார்ப்போம்.
'பொர்க்கி' இந்தியர்களை வளர்த்து, இந்தியாவில் காலூன்றிய காலனி ஆட்சியில் உருவான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும், அந்த 'பொர்க்கி' நோய் ஊடுருவி, உண்மையான தேசபக்தர்களுடன் மோதலுக்குள்ளாகி, பயணித்த சூழலில்;
'பொர்க்கி' இந்தியர்களை வளர்த்து, இந்தியாவில் காலூன்றிய காலனி ஆட்சியில் உருவான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும், அந்த 'பொர்க்கி' நோய் ஊடுருவி, உண்மையான தேசபக்தர்களுடன் மோதலுக்குள்ளாகி, பயணித்த சூழலில்;
தமிழ்நாட்டிலும் காங்கிரசில் முளை விட்டு, வ.உ.சி போன்ற காந்தியின்
எதிர்ப்பாளர்களை காவு வாங்கி, ஆனாலும் நீதிக்கட்சி தலைவர்களின் நேர்மையான சமூக சூழலில்;
வளர சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'பொது வாழ்வு
வியாபார சமூக செயல்நுட்பமானது', 1944இல் காலனிய சூழ்ச்சியில் நீதிக்கட்சித் தலைவர்களுக்கும்,
ஈ.வெ.ராவிற்கும் இருந்த தொடர்பைத் துண்டித்து;
ஈ.வெ.ராவின் 'இணையற்ற' தியாகத்தால் உருவாகியிருந்த,
சமூக ஆற்றலை 'தீனியாக்கி' வளர்ந்த ஆபத்தினையும், அந்த 'பொர்க்கி' நோயின் வளர்ச்சியால்,
ஈ.வெ.ரா, அண்ணா, ராஜாஜி போன்றோர் பொதுவாழ்வில் மனமுடைந்து மறைந்ததையும், ஏற்கனவே பார்த்தோம்.
காலனி சூழ்ச்சியில் இந்தியாவில் முளைவிட்ட
'பொர்க்கி' நோயானது, தனித்துவமான தமிழ்நாட்டு சூழலில், நேர்மையாக உருவாகும் சமூக ஆற்றல்களை
எல்லாம் 'தமிழ் இன உணர்வு' முகமூடியில் 'கவர்ந்து', அந்த நோயின் 'உச்சக்கட்ட வெளிப்பாடாக',
இன்று 'சசிகலா பினாமி ஆட்சியானது' அரங்கேறியுள்ளதா?
தமக்கும் தமது குடும்பத்திற்கும் 'வெளியில்
தெரியாத சுயநல நீதி', மற்ற தமிழர்களை ஏமாற்ற 'தமிழ் இன உணர்வு முகமூடி', என்று பயணித்து
வரும் தலைவர்களின் ஆதரவோடு, அந்த அரங்கேற்றம் நடந்துள்ளதா?
அந்த பொதுவாழ்வு வியாபார 'பொர்க்கி' நோய்க்கு
எதிராக, தமிழ்நாட்டில் வெளிப்பட்ட கோபக்கனலை, ஈ.வெ.ராவும், ராஜாஜியும் 'உணர்ந்து',
காமராஜின் 'ஸ்தாபான காங்கிரஸ்' வளர்ச்சிக்கு திருப்பத் தவறியதன் விளைவே, 'சசிகலா பினாமி
ஆட்சி' அரங்கேற்றத்திற்கு வழி வகுத்ததா?’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html
)
‘தமிழ்நாட்டின் தலைக்குனிவாக,
சசிகலாவின் பினாமி ஆட்சி அரங்கேறியிருப்பதானது;
தமிழையையும், தமிழர்களையும்,
தமிழ்நாட்டையும் சிறைப்படுத்தி, சீரழித்து வரும் 'திராவிடர், திராவிட' நோயின் உச்சக்கட்ட
வெளிப்பாடாகும்.
அந்த பினாமி ஆட்சியின்
அரங்கேற்றத்திற்கு, 'இந்துத்வா எதிர்ப்பு, தமிழ் உணர்வு' என்ற அடிப்படைகளில் கிடைத்து
வரும் ஆதரவும், அந்த ஆதரவு போக்கினை, ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் 'பொங்கல் விழா நிகழ்ச்சிகள்'
மூலம் ( சசிகலா) நடராஜன் 'பேணி, பாதுகாத்து' வந்த போக்கும், எந்த வரலாற்றுப் பின்னணியில்
உருவானவை? என்பது ஆய்விற்குரியதாகும்.
அறிவுபூர்வ அணுகுமுறையில்,
'இந்துதவா' என்பது, இன்று இரண்டு கூடாரங்களாக பிரிந்து, அறிவுபூர்வ 'மோதலில்' பயணித்து
வருவதை, தமிழ்நாட்டில் மீடியா வெளிச்சத்துடன் வலம் வரும், ('சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேற்றத்தை
ஆதரித்து வரும்), பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்கள் எல்லாம்
கவனித்து, அந்த மோதல் தொடர்பான, தமது கருத்தை, அறிவுபூர்வமாக பதிவு செய்து வருகிறார்களா?
என்பது எனக்கு தெரியாது.
எவராவது தெரிவித்தால், நன்றியுடன் அதனை பரிசீலிப்பேன்.’ ( ‘'திராவிடர், திராவிட' சிறையிலிருந்து; தமிழை எவ்வாறு மீட்க முடியும்?’;
http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post.html
)
‘1980களில் போராளிகளின்
எண்ணிக்கையில், ஆயுத பலத்தில், பண பலத்தில் விடுதலைப் புலிகள் மூன்றாம் இடத்தில் இருந்த
போது;
முதல் இரண்டு இடங்களில்
இருந்த 'புளோட்' தலைவர் உமா மகேசுவரனையும், 'டெலோ' தலைவர் சிரி சபாரெத்தினத்தையும்
'வானளாவ' புகழ்ந்து, அந்த குழுக்கள் சார்பில் வெளிவந்த இதழ்களிலும், நூல்களிலும் எழுதிய
எழுத்தாளர்களிலும், புகழ்ந்த பேச்சாளர்களிலும், யார், யார், அந்த இரண்டு தலைவர்களையும்,
அக்குழுக்களின் போராளிகளையும் விடுதலைப் புலிகள் அழித்த பின், பிரபாகரனை 'வானளாவ' புகழ்ந்து
எழுதினார்கள்? பேசினார்கள்?
அதே போல், முன்பு ஜெயலலிதா
காலில் விழுந்து வணங்கியவர்களில் யார், யார்,
ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா காலில்,
இன்று விழுந்து வணங்குகிறார்கள்?
மேற்குறிப்பிட்ட இரண்டு
போக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டா? ஆக, 'யார் எப்போது அதிகாரத்தில் முதலிடத்தில்
இருக்கிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் வாலாட்டி பிழைப்போம்', என்ற போக்கானது, எப்போது
முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்டத்தில் உள்ளதா? அந்த போக்கில் பயணிப்பவர்களில்,
'பார்ப்பன எதிர்ப்பு, தன்மானம், இனமானம், பகுத்தறிவு' என்று 'முற்போக்கு' வேடத்தில்
பயணிப்பவர்கள் யார்? என்பது ஆய்விற்குரியதாகும்.(‘தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம்
புரண்ட', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப்
போக்கும்; சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா?’;
http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.html)
அதில் நமது யோக்கியதை
என்ன? என்பதும் முக்கியமாகும்: தமிழ்நாட்டின் மீட்சி பற்றி பேச, நமக்கு யோக்கியதை இருக்க
வேண்டுமானால். சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சத்தை அகற்றுதல், தாய்மொழிவழிக்கல்வியை
ஊக்குவித்தல், என்று நிகழ்காலத்தில் ஆர்.எஸ்.எஸைப் போல, ஆக்கபூர்வமாக தன்னை நெறிப்படுத்திக்
கொண்டு பயணிக்காமல், 'அரசியல் நீக்கம்' (Depoliticize) பற்றிய புரிதலின்றி, திராவிட
அரசியல் கட்சிகளின் வால்களாக, அறிவுபூர்வமாக நிராகரிக்கப்பட்ட 'ஆரிய - திராவிட' போதையில்,
சருகாகி, உதிரும் திசையில், 'பெரியார்' கட்சிகள்
பயணிப்பதன் விளைவானது, வெளிப்படும் காலமும், அதிக தொலைவில் இல்லை.’ ( ‘தமிழ்நாட்டு
பொதுவாழ்வில் 'அந்த மூச்சுத் திணறலுக்கு' எதிரான ஜன்னல் திறக்கிறதா?’; http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_11.html
)
‘‘இன்று 'ஜல்லிக்கட்டு
ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று
வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;
1991இல் தமிழ்நாட்டில்
'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;
கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ்
பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி,
கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:
'ஜல்லிக்கட்டு ஆதரவு'
போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;
மலைகள், காடுகள், தாது
மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;
அடுத்து அடுத்து வந்த
ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?
மீத்தேன் எரிவாயு திட்டம்,
ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல்
கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும்,
எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில்
சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால்,
அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா? பணம் சம்பாதிக்க, தன்மானம்
இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும்
மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகளின்'(?) எண்ணிக்கையும்
வளர்ந்திருக்குமா?
'திருச்சி பெரியார் மையம்'
மூலம் 'வளர்ந்து', 'சசிகலா குடும்ப அரசியல்' வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரரான
பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'வாழ்வியல் முன் மாதிரி'(Role Model?) ஆக, என்னைப்
போன்று, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வது 'முட்டாள்த்தனம்' என்று எனது குடும்பத்திலும்,
சுற்றத்திலும், தமிழ்நாட்டில் கணிசமான தமிழர்கள் மத்தியிலும் 'பலர்' மதி மயங்கி, பயணித்து
வருவது, நடந்திருக்குமா? அந்த போக்கில் தமிழ்நாடு பயணித்து, தலை குனிவான 'சசிகலா பினாமி
ஆட்சி'யானது அரங்கேறியிருக்குமா? ‘
(http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post.html ) 'பணத்தை 'தெய்வமாக' கருதி,
தமிழர்களில் கணிசமானோர் தலைகுனிவாக வாழத் தொடங்கியுள்ளார்கள்', என்பதை வெளிப்படுத்தியுள்ள
‘சமூக அபாய எச்சரிக்கையே’ சசிகலாவின் பினாமி ஆட்சியாகும். 'பெரியாரின்' பகுத்தறிவானது,
அதற்கு துணை போவதானது, உலக அளவில் பகுத்தறிவுக்கே தலைகுனிவாகும்.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்
ஊடுருவி, 'இந்தியாவிற்கு எதிராக' அப்போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி, வெறுப்புக்கும்,
கண்டனத்திற்கும் உள்ளானது.
ஆனால் அடுத்து நடக்கும்
மாணவர், இளைஞர்கள் போராட்டத்தில்;
'பெரியார் பொம்மைகளை
உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்ட அவசியம் குறித்து பிரச்சாரம் நடந்தால்;
அப்போராட்டமானது எதிர்பாராத
மிகுந்த ஆதரவுடன் அரங்கேறினால் வியப்பில்லை: 'பெரியார் கட்சிகள்' சசிகலா குடும்ப அரசியலை
ஆதரிக்கும் போக்கு தொடர்ந்தால்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html
)
‘இந்தியாவில் இன்று பணக்கார
மாநில வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில், பிற மாநில மற்றும் வெளிநாட்டினர் 'வளர்ந்து' வருவதையும், 'திராவிட மன நோயாளிகளாக'
தமிழர்கள் 'வீழ்ந்து' வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html ); தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும்,
உடல் உழைப்பிலும், 'திறமைசாலி' தமிழர்களில் பெரும்பாலோர், 'பிழைப்பிற்காக' - அவர்களில்
பலர் குடும்ப வாழ்க்கையின் 'பலன்களை' துறந்து, 'பணம் ஈட்டும் எந்திரர்களாக' - வெளிமாநிலங்களுக்கும்,
வெளிநாடுகளுக்கும் வெளியேறும் போக்கில்; பணம் சம்பாதிப்பதற்காக, 'எதையும்' இழக்கத்
தயாரான தமிழர்களின் எண்ணிக்கையானது, 'அதிவேகமாக' அதிகரித்து வரும் போக்கில்; இந்தியாவில்
வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாதபடி;
'தமிழர் சமூக தற்கொலை'
போக்கில், தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
எனவே இந்தியாவானது 'சிதறலுக்கு'
உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான', 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும்
வெளிநாட்டின மக்களுக்கு- சாதகமாகவும், 'வீழ்ச்சி'
போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல,
தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள்,
தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட
அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்'
என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச
கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின்,
தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.’ ( ‘'ஆர்.எஸ்.எஸ்
-ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம்: தேச கட்டுமான (Nation Building) சீர் குலைவினை தடுக்குமா? துரிதப் படுத்துமா?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/blog-post.html
)
'இந்தியர்' அடையாளத்தை
பகையாக கருதி பயணிக்கும், தனித்தமிழ் ஆதரவாளர்களும், அவர்கள் பங்குக்கு, தமிழர்களை
வேரற்றவர்களாக்கும் வகையில் பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.(‘
தமிழின்
மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'
பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’;
http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html
)
கடந்த சுமார் 20 வருடங்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள இசை அறிவியல் நுட்பங்களை, எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை நான் வெளிப்படுத்தி வந்துள்ளேன்; (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html) தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும், 'திராவிட மன நோயாளிகள்' செல்வாக்கானது, எனது ஆய்வின் பலன்களால், தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும், அதன் மூலம் கண்டுபிடித்துள்ளேன். ’தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை, 'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும்’ என்பது, தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?‘ (‘ உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை 'நத்தி' பிழைத்து தான், எனது ஆய்வுகள் தமிழ்நாட்டில் 'வெளிச்சத்திற்கு வர முடியும்' என்ற என்ற நிலையை மாற்ற, எனது வரை எல்லைகளுக்குட்ப்பட்டு (Limitations), எனது வாழ்க்கையையே ஒரு போராட்டமாக அனுபவித்து வாழ்ந்து வந்துள்ளேன். அதே காரணத்தால், வெளிச்சத்திற்கு வராமல், உலக அளவில் தமிழுக்கு பெரும் புகழ் ஈட்ட வல்ல '‘ Ancient Music Treasures – Exploration for New Music’ First published in 2006 ( ISBN 81 – 903416 -0- X / 9 788190 341608)
Pages: 160; Tables: 14; Figures: 16- எனது ஆங்கில புத்தகம், இன்றுவரை இருட்டில் இருப்பது தொடர்பான தகவல்களை, வாய்ப்பும் நேரமும் அமையும்போது வெளிப்படுத்துவேன். தமிழ்நாடானது, திருப்பு முனையில் இருப்பதால், அந்நூலை விரிவாக்கி, வெளியிடும் முயற்சியிலும் உள்ளேன்; 'இருளின் காலம்' முடிவில் இருப்பதால்.
ஆங்கிலவழிக்கல்வி காரணமாக, தமிழில் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில், அவர்கள் பேசும், எழுதும் தமிழானது, 'காட்டுமிராண்டி தமிழா?' என்ற கேள்வியை எழுப்பும் போக்கும்;
திராவிடக் கட்சிகளின்
ஆட்சி சாதனையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். மேலே குறிப்பிட்ட தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்காமலும், அவ்வப்போது
அவர்களுடன் 'நட்புடனும்' பயணித்து வரும் கட்சிகளும், தலைவர்களும், 'பா.ஜ.க அலுவலகம்
இழுத்து மூடும் போராட்டம்';
உலகில் எந்த அரசும், மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமலும், சுயலாப நோக்கின்றியும், ஆட்சியில் இல்லை என்பதும், ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்டு இன்னும் பல நாடுகளை மீறி, ஐ.நா செயல்பட்டதில்லை என்பதும், தொடர்பான சர்வதேச அரசியல் பொருளாதார ஞானமின்றி, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான போராட்டம்;
1944இல், தி.க தோற்றத்தில் திசை மாறி, உணர்ச்சிபூர்வ போக்கில், வழிபாடும் அரங்கேறி, நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்த விளைவின் உச்சக்கட்டமே, இன்று 'சசிகலா பினாமி ஆட்சி'யாகும். எனவே தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும்:
நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், இன்றி பொதுவாழ்வில் வலம் வருபவர்களை அடையாளம் கண்டு, நாம் ஒவ்வொருவரும், துணிச்சலுடன், இழப்புகளை விரும்பி ஏற்று, அத்தகையோரை, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, பயணித்தால் மட்டுமே:
தமிழின்,
தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க இயலும். நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், உள்ளவர்களில்,
சுயலாப நோக்கின்றி, இழப்புகளை விரும்பி ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், மீட்சிக்கு
வழியில்லை. பொதுவாழ்வு வியாபாரிகளின்
'முதலில்லா - அதீத லாபம் ஈட்டும் - மூலதனமாக' (Capital without investment), தமிழும்,
தமிழுணர்வும் பயன்படுவதை தடுக்கவும் முடியாது.
கடந்த சுமார் 20 வருடங்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள இசை அறிவியல் நுட்பங்களை, எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை நான் வெளிப்படுத்தி வந்துள்ளேன்; (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html) தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும், 'திராவிட மன நோயாளிகள்' செல்வாக்கானது, எனது ஆய்வின் பலன்களால், தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும், அதன் மூலம் கண்டுபிடித்துள்ளேன். ’தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை, 'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும்’ என்பது, தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?‘ (‘ உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை 'நத்தி' பிழைத்து தான், எனது ஆய்வுகள் தமிழ்நாட்டில் 'வெளிச்சத்திற்கு வர முடியும்' என்ற என்ற நிலையை மாற்ற, எனது வரை எல்லைகளுக்குட்ப்பட்டு (Limitations), எனது வாழ்க்கையையே ஒரு போராட்டமாக அனுபவித்து வாழ்ந்து வந்துள்ளேன். அதே காரணத்தால், வெளிச்சத்திற்கு வராமல், உலக அளவில் தமிழுக்கு பெரும் புகழ் ஈட்ட வல்ல '‘ Ancient Music Treasures – Exploration for New Music’ First published in 2006 ( ISBN 81 – 903416 -0- X / 9 788190 341608)
Pages: 160; Tables: 14; Figures: 16- எனது ஆங்கில புத்தகம், இன்றுவரை இருட்டில் இருப்பது தொடர்பான தகவல்களை, வாய்ப்பும் நேரமும் அமையும்போது வெளிப்படுத்துவேன். தமிழ்நாடானது, திருப்பு முனையில் இருப்பதால், அந்நூலை விரிவாக்கி, வெளியிடும் முயற்சியிலும் உள்ளேன்; 'இருளின் காலம்' முடிவில் இருப்பதால்.
ஆங்கிலவழிக்கல்வி காரணமாக, தமிழில் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில், அவர்கள் பேசும், எழுதும் தமிழானது, 'காட்டுமிராண்டி தமிழா?' என்ற கேள்வியை எழுப்பும் போக்கும்;
பணத்திற்காக எதையும்
இழக்கத் தயாரான தமிழர்கள், எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரித்து, 'தமிழர்கள் காட்டுமிராண்டிகளா?'
என்ற கேள்வியை எழுப்பும் போக்கும்;
உலகில் எந்த அரசும், மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமலும், சுயலாப நோக்கின்றியும், ஆட்சியில் இல்லை என்பதும், ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்டு இன்னும் பல நாடுகளை மீறி, ஐ.நா செயல்பட்டதில்லை என்பதும், தொடர்பான சர்வதேச அரசியல் பொருளாதார ஞானமின்றி, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான போராட்டம்;
போன்ற போராட்டங்கள் எல்லாம்
தமிழ்நாட்டில் அரங்கேறி வருவதானது, யார், யாருக்கு, என்னென்ன பலன்களை தரும்? என்பதும்
ஆய்விற்குரியதாகும். மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து, நீண்ட காலம் சிறையில் இருந்து, மனித உரிமைக்கான நோபெல் பரிசையும் பெற்று, இன்று தேர்தல் வழியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் ஆங்க் சான் சூ கி ஆவார். மியான்மரில் ராகின் மாநிலத்தில் வாழும் ரோகிங்யா முஸ்லீம்கள் மீது இராணுவத்தினர் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்கள் புரிந்தது தொடர்பான, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மனித உரிமை விசாரணை முடிவை, மியான்மர் அரசு எதிர்த்துள்ளது. (‘Myanmar rejects UN probe of crimes against Rohingya Muslims’; http://www.newindianexpress.com/world/2017/mar/25/myanmar-rejects-un-probe-of-crimes-against-rohingya-muslims-1585752.html )
1944இல், தி.க தோற்றத்தில் திசை மாறி, உணர்ச்சிபூர்வ போக்கில், வழிபாடும் அரங்கேறி, நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்த விளைவின் உச்சக்கட்டமே, இன்று 'சசிகலா பினாமி ஆட்சி'யாகும். எனவே தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும்:
நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், இன்றி பொதுவாழ்வில் வலம் வருபவர்களை அடையாளம் கண்டு, நாம் ஒவ்வொருவரும், துணிச்சலுடன், இழப்புகளை விரும்பி ஏற்று, அத்தகையோரை, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, பயணித்தால் மட்டுமே:
No comments:
Post a Comment