ப.தண்டபாணி தமிழ் இசை அறிஞருடன்
எனது அனுபவங்கள்
'தமிழன் கண்ட இசை', 'திராவிடர் இசை' நூல்கள் எழுதி, இணை சொல்ல முடியாத இழப்புகளைத் தமிழிசைப் பற்றின் காரணமாகவே சந்தித்து வாழ்ந்து மறைந்த பொறியாளர் தண்டபாணி பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
(‘'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' மீளும் தமிழ்நாடு?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/
)
திரு.பொ.முருகானந்தம் அனுப்பிய கீழ்வரும் தண்டபாணி தொடர்பான ஒளிப்பதிவே, இதனை எழுதத் தூண்டியது.
நான் 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்த காலக்கட்டத்தில், ப.தண்டபாணியின் 'தமிழன் கண்ட இசை' என்ற சிறுநூலைப் படித்தபோது, அதுவே எனது வாழ்வில் ஒரு திருப்பு முனைக்கு காரணமாகும் என்று நினைக்கவில்லை. நான் இயற்பியல்(Physics) பட்டப்படிப்பு படித்த காலத்திலேயே, ஒலியியலில் கம்பியில் அதிர்வுகள், வாயுவில் அதிர்வுகள், லிசஜோஸ்(Lissajous)
படங்கள் தொடர்பான பாடங்களைப் படிக்கும்போதும், சோதனைகள் செய்த போதும், இவையெல்லாம் இசையில் என்ன பங்கு வகிக்கும்? என்ற ஆர்வங்கள் அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. பின் கல்லூரி ஆசிரியராகி பாடங்கள் நடத்தும்போதும் அவை தொடர்ந்தது. அந்த பின்னணியில் நான் படித்த முதல் இசைப்புத்தகமானது, அந்த ஆர்வத்தினை மேலும் தூண்டியது.
1980களில் ஈழ விடுதலையில் எனது பங்களிப்பு தொடர்ந்த காலத்தில், ப.தண்டபாணி விடுதலையில் எழுதிய கட்டுரைகளும், ஈழ விடுதலை தொடர்பாக, முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு சிறைகள் சென்றதும், அவர் மீது எனக்குள் ஒரு ஈர்ப்பினைத் தூண்டுவித்தது. அவர் எங்கிருக்கிறார்? என்று தேடிய முயற்சியில், சென்னை ராயப்பேட்டையில் (வேலை தேடுபவர்கள் பொதுவாக தங்கும்) ஒரு மிக சாதாரண விடுதி அறையில் சந்தித்தேன். குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமைப் பொறியாளருக்கு அடுத்த நிலையில் பதவி வகித்தவர் அவர் என்பது அறிந்து அதிர்ச்சியில் உறைந்தேன். பல சந்திப்புகளில் அவரிடமிருந்து நான் பெற்ற தகவல்களின் சுருக்கம் வருமாறு:
வீராணம் ஊழல் போன்றவற்றில் தனது மேலதிகாரியாக இருந்த தலைமைப் பொறியாளரின் (ஒரு மலையாளி) ஊழல்களை எல்லாம் உரிய ஆதாரங்களுடன் விசாரணை அதிகாரியாகக் கண்டுபிடித்தார். அவர் பழிவாங்கும் நோக்கில், தமக்கிருந்த செல்வாக்கில், கீழ்வருமாறு அவரைத் தண்டித்தார்.
நெருக்கடி காலத்தில், கச்சத்தீவு தொடர்பாக 'முரசொலி' யில் எழுதியதற்காக கட்டாயப்பணி ஓய்வில் அனுப்பப்பட்டார். அந்த ஓய்வூதியத்தை வாங்க மறுத்த அவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முரசொலியில் நெருக்கடிகால கொடுமைகளாக கருணாநிதி எழுதிய 'இன்னா நாற்பது' பட்டியலில் ப.தண்டபாணியின் கட்டாயப்பணி ஓய்வும் இடம் பெற்றிருந்தது.
வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பில், அந்த தலைமைப் பொறியாளரின் ஊழலும் இடம் பெற்றிருந்தது. தீர்ப்பு வந்தபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அந்த தலைமைப் பொறியாளரை பணிநீக்கம் செய்தார், ஆனால் தி.மு.க ஆதரவாளர் என்ற காரணத்தால், எம்.ஜி.ஆர் தண்டபாணியின் கட்டாயப்பணி ஓய்வினை ரத்து செய்து, தலைமைப் பொறியாளராக பணி உயர்த்தி ஆணை பிறப்பிக்காமல் இழுத்தடித்தார்.
பின் 1989இல் கருணாநிதி முதல்வராகி, எம்.ஜி.ஆரால் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த மலையாளி தலைமைப் பொறியாளரின் பணி நீக்கத்தை ரத்து செய்தார். ஆனால் ப.தண்டபாணிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமுல் படுத்தவில்லை.
மேலே குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்த போது, அப்போது நான் திருச்சியில் இருந்தேன். ஜெயலலிதா ஆட்சியில் அழகு.திருநாவுக்கரசு குடிநீர் வடிகால் துறை அமைச்சரானார். அவருக்கு நெருக்கமான எனது சக பேராசிரியர் மூலமாக, ப.தண்டபாணிக்கு உரிய ஆணை பெற முயற்சித்தேன். அதற்குள் அவர் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். பின் நான் தஞ்சைக்கு மாற்றலானேன். திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் எனக்கு நெருக்கமான நண்பராக இருந்த பேரா.பொன்னுசாமி கல்வி அமைச்சரானார். நான் சென்னை சென்றபோது, தண்டபாணியை அழைத்துச் சென்று, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் அறையில் பொன்னுசாமிக்கு அவரை அறிமுகப்படுத்தி, தி.மு.க-வால் வஞ்சிக்கப்பட்டவர் என்ற கோணத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினேன். அவரும் முயற்சிப்பதாக உறுதி கூறினார்.
பின் சென்னை மாநிலக்கல்லூரிக்கு மாற்றல் ஆன பின், பலமுறை ப.தண்டபாணியைச் சந்தித்திருக்கிறேன்; அண்ணாநகரில் அவர் நண்பரின் வீட்டில் வாடகையின்றி வாழ்ந்த காலத்தில்.
அடுத்த சில காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பேரா.பொன்னுசாமியின் முயற்சி பலன் தரவில்லை. அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான தஞ்சை இரத்தினகிரிக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தேன். அவர் தண்டபாணியிடமிருந்து நீதிமன்ற ஆணை உள்ளிட்ட கோப்பினைக் கேட்டார். தமது ஒரே ஆயுதமாக தண்டபாணி வைத்திருத கோப்பினை வாங்கி இரத்தினகிரியிடம் கொடுத்தேன். இடையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடமும் விபரங்களைச் சொல்லி, ப.தண்டபாணியும் அவரது நண்பரான இசை அறிஞர் வஜ்ரமுதலியாரும் (சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாழ்ந்தவர்), கிரின்வேஸ் சாலையில் இருந்த அமைச்சரின் வீட்டில் தமிழ்க்குடிமகனைச் சந்திக்க வைத்தேன்.
எதுவும் நடக்கவில்லை. அந்த கோப்பு அவரை விட்டு போனது தான் மிச்சம். நான் மனம் நொந்து சிலகாலம் ப.தண்டபாணியைச் சந்திக்கவில்லை.
அவர் மரணித்து சில மாதங்கள் கழித்து தான், எனக்கு அந்த தகவல் கிடைத்தது. இன்னும் நிறைய எழுதக்கூடிய தகவல்கள் என்னிடம் உள்ளன. நேரம் கிடைக்கும்போது எழுதும் எண்ணமும் உள்ளது.
அவருக்கு சுமார் 20 வருடங்களாக வருமானமின்றியிருந்த சூழலில், அவர் மீது மிகுந்த வருத்தத்துடன் அவரின் மனைவி பாண்டிச்சேரி அருகில் சொந்த ஊரில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மரணமடைந்ததும், எவருக்கும் தெரிவிக்காமல் ஊருக்கு கொண்டு சென்று விட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவர்கள் முகவரி இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்தால் அங்கு சென்று அவர்களைப் பார்க்கும் எண்ணமும் உள்ளது.
அவர் கன்னிமாரா நூலகத்திலேயே வாழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு நாட்குறிப்பில் அவர் குறித்து வைத்திருந்த இசை ஆய்வுத் தகவல்களை நான் படித்து வியந்திருக்கிறேன். வீ.பா.கா சுந்தரம் தமது 'தமிழிசைக் கலைக் களஞ்சியம்' திட்டத்தில் அவரை இணைத்து பணியாற்றியிருந்தால், இப்போதுள்ள குறைகள் இன்றி, இன்னும் சிறப்பாக வெளிவந்திருக்கும் என்பதும் எனது கருத்தாகும்.
தமிழும், தமிழ் உணர்வும் எந்த அளவுக்கு மனித மிருகங்களான பொதுவாழ்வு வியாபாரிகளிடம் சிக்கி சீரழிந்தது? என்பது தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்படும் வகையில், ஈடு இணை சொல்லமுடியாத துயரங்களை தன்மானத்துடன் எதிர்கொண்டு வாழ்ந்து மறைந்தவர் ப.தண்டபாணி. தமிழக அரசு அவருக்கான உயர்நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தி, பணப்பலன்களை உரிய வட்டியுடன் அவரின் குடும்பத்தாரிடம் சேர்ப்பிக்கும் முயற்சியில், நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம்.
அவரின் குடும்பத்தாருக்கு அவர் மீது இருந்த கோபமும், வருத்தமும் நீடிப்பதானது, தமிழ்நாட்டிற்கு கேடாகும். எனவே தமிழ்நாட்டினை 'அந்த' சாபத்திலிருந்து மீட்கவும், அதைச் செய்தாக வேண்டும்.
2015இல் முதல் மாதங்களில் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி-பதில் பகுதியில் வெளிப்பட்டிருந்தபடி, கொள்ளையடித்த அரசியல்வாதிகளின் குடும்பங்கள் அனுபவித்து வரும் வெளியில் தெரியாத தண்டனைகளைப் போலவே;
அதை அனுமதித்த சமூகமும், அது போன்ற தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது.
சமூகத்தை சீரழித்த பாவங்களில், நிகழ்காலத்தில் வெளியில் சொல்ல முடியாமல், கொள்ளையடித்த
அரசியல்வாதிகள் அனுபவித்த தண்டனைகள் போக, எஞ்சியவை எல்லாம் அவர்களின் 'ஜீன்'கள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன.
நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்'
(gene: a unit of heredity which is transferred from a parent to offspring and
is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள் 573) ஆவர்.
பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html ) (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html & http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

வாழ்க்கையில் இன்பமாக வாழ்வது எப்படி? என்ற கேள்விக்கு, திறவுகோலாக நான் சந்தித்தவற்றில், கீழ்வருவதானது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சில வருடங்களுக்கு முன், தஞ்சை புதுப்பேருந்து நிலையம் அருகேயிருந்த புதுக்கோட்டை சாலையில் காலை சுமார் 6 மணியளவில் நான் நடைப்பயிற்சி(Walking)
மேற்கொண்டிருந்தேன். தெரு ஒரமாக சுமார் 15 கிராம கூலித்தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாக உட்கார்ந்து, தங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான முகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அன்று வேலைக்குப் போனால் தான், பணம் கிடைக்கும்? கூப்பிட வரும் லாரியில், அவர்களில் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்? தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த லாரி அன்று வருவதும் தடைபடலாம்? என்று குழம்பிக்கொண்டு கவலையுடன் அவர்கள் இல்லை: ஸ்டார் ஓட்டல்களில், பெரும் பணக்காரர் கூடும் இடங்களில், அத்தகைய கவலையுடன் கூடிய முகங்களையும், அந்த கவலையை மறைத்து போலியாக சிரித்து உரையாடும் முகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்டது போன்ற மகிழ்ச்சியான முகங்களை, அங்கெல்லாம் பார்ப்பது அரிதாகும்.
ஊழல் வலைப்பின்னலில் இடம் பெற்று பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தாலும், அதை வெறுத்து பயணிப்பவர்களும், ப.தண்டபாணி போன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க நம்மால் இயன்ற பங்களிப்பு வழங்குபவர்களும் உள்ள சமூக வட்டங்களில் மட்டுமே, அது போன்ற குற்ற உணர்ச்சியற்ற மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்க முடியும்.
'பணமே பிரதானம்' என்ற நோக்கில், தமிழையும், தமிழ் உணர்வினையும் முதலில்லாத மூலதனமாக்கிப் பயணித்த அரசியல்வாதிகளே, ப.தண்டபாணி போன்றோர் அனுபவித்த கொடுமைகளுக்குக் காரணமான சமூக குற்றவாளிகள் ஆவார்கள்;
தமிழ்நாட்டில் குற்ற உணர்வற்ற மகிழ்ச்சியான முகங்களைப் பார்ப்பது அரிதாகும் அளவுக்கு;
இயல்பில் பலகீனமான தமிழர்களை எல்லாம் தமக்கு எடுபிடிகளாக்கி, தமிழ்நாட்டில் சமூக சீர்குலைவுகளைத் தூண்டி வரும் சமூகக் கிருமிகளும் ஆவார்கள்.
ப.தண்டபாணி போன்றோர் அனுபவித்த கொடுமைகளுக்கு, 'நமக்கேன் வம்பு?' என்று பயணித்த/பயணிக்கும் 'யோக்கியத் தமிழர்களும்' பங்காளிக் குற்றவாளிகள் ஆவார்கள். அத்தகையோருள் ஆண்ட/ஆளும் கட்சிகளுக்கு நெருக்கமான 'யோக்கியத் தமிழர்கள்' மிகவும் ஆபத்தானவர்கள், என்பதும் எனது அனுபவங்கள் ஆகும். மேலே குறிப்பிட்ட கொடுமைகள் தமக்கும், தமக்கு வேண்டியவர்களுக்கும் நிகழ்ந்ததாகக் கருதி, சரியான சாத்தியமுள்ள நிவாரண முயற்சிகளில் ஈடுபடுபவர்களே, தமிழின் தமிழ் நாட்டின் மீட்சிக்கான நாயகர்கள் (Hero) ஆவார்கள்;
அது போன்ற நாயகர்கள் சுயவிளம்பரத்தைத் தவிர்த்து, மைக்ரோஉலகில் எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறார்கள்; இருண்ட சுரங்கப்பாதையில் வெளிப்படும் வெளிச்சத்தைப் போல.

குறிப்பு: கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.
"கர்நாடக அரசு கல்வி, நிர்வாகம், வேலை வாய்ப்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து ஆணைகள் அமுல்படுத்தியுள்ளது. அதே ஆணைகளை வாங்கி, 'கன்னடம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்' என மாற்றி ஏன் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்கக் கூடாது?"

"கர்நாடக அரசின் அந்த ஆணைகளை வாங்கித் தாருங்கள். நான் முயற்சிக்கிறேன்"
என்று அவர் பதில் சொன்னார். எனக்குத் தெரிந்த 'தனித்தமிழ்' முக்கிய நபரிடம் அதைத் தெரிவித்தேன். ஒன்றும் பலனில்லை.
அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தகவலைச் சொன்னேன். அவர் பெருமையுடன்
"அந்த கர்நாடக அரசின் ஆணைகள் வந்து விட்டன. எனது துறையில் தான் உள்ளது"
என்றார். அதாவது பேரா.பொன்னுசாமியின் முயற்சியால் அந்த ஆணைகள் கிடைத்த பின், ஆட்சி மாற்றம் நடந்ததிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் ப.தண்டபாணிக்கு ஏற்பட்ட முடிவே, 'அந்த' ஆணைகளுக்கும் நடந்தது.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, பேரா.பொன்னுசாமி 'கட்சி மாறி'யாகி விட்டார். அந்த தவறினை அவர் செய்யாமல், அ.இ.அ.தி.முகவில் நீடித்திருந்தால், மீண்டும் அவர் மூலம் முயற்சி நடந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய கச்சத்தீவு தீர்மானத்தில் பேரா.பொன்னுசாமி ஆற்றிய முக்கிய பங்கினையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html
)
No comments:
Post a Comment