'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (3)
சமூக வண்ணக் குருட்டில் வளர்ந்த இரட்டை வேடப் போக்குகள்
மனித உரிமை, பெண்ணுரிமை போன்றவற்றினை மேற்கத்திய மோகத்தில் அணுகுவதில் உள்ள குறைபாடுகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html) அந்த 'மேற்கத்திய முற்போக்கு மோகம்' பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்ததா? அதிலும் கூட நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல் பாரதி பயணித்தது போலின்றி, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' துணை புரியும் வகையில், 'பெரியார்' ஈ.வெ.ராவின் பாதிப்பில், பாரதிதாசன் 'விட்டுக் கொடுத்து' பயணித்தாரா? என்ற ஆய்வுக்கு, அவர்களின் படைப்புகளை உட்படுத்த வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.
பாரதிதாசன் இரண்டும் கெட்டான் போக்கில் பயணித்ததாலேயே. ஈ.வெ.ரா அவர்களுக்கு தமது 'தமிழ் அடையாள அழிப்பு' சீர்திருத்தம்(?) என்பதானது, கீழ்வரும் விளைவில் முடிவதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது.
ஈ.வெ.ரா மற்றும் அவர் வழியில் சுயலாப நோக்கின்றி பயணித்த எண்ணற்றோரின் உழைப்புகளும், இழப்புகளும், 'திராவிட ஆதாய அரசியல் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு' முதலில்லாத மூலதனங்களாக மாற நேரிட்டது.
அது எவ்வாறு நிகழ்ந்தது என்ற சமூக செயல்நுட்பத்தினை விளங்கிக் கொள்வதன் மூலமே, அதனால் விளைந்த பாதிப்புகளில் இருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும்.
‘'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த ஈ.வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, ஈ.வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், ஈ.வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்?
'தமிழ் எங்கள் இழிவுக்கு நேர்' என்ற போக்கில், 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாடு மூலம் ஈ.வெ.ரா மேற்கொண்ட சீர்திருத்தமானது, 'தமிழ்வேர்க்கொல்லி'யாகி விட்டதா? அதை நியாயப்படுத்துபவர்கள் எல்லாம், பாரதிதாசனையும் புகழ்வதானது, தமிழுக்கு பெருமையா? இழிவா?
‘'பெரியார்' இயக்கத்தில் புலமையாளனாக நான் பயணித்த கட்டத்தில், தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான ஈ.வெ.ராவின் மேலே குறிப்பிட்ட தவறான நிலைப்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு பயணித்தேன். எதையுமே 'பார்ப்பன ஆதரவு அல்லது எதிர்ப்பு' என்று பார்க்கும், கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கி, சமூக வண்ணக் குருடராக
(Social Color Blind) நான் பயணித்தேன். (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )
அந்த போக்கில் எனது ஆய்வு குவியத்தில் 'மார்க்சியம் - லெனினியம்' உள்ளாகி, அந்த போக்கில் 'மார்க்சிய பெரியாரியல்' புலமையாளனாக வளர்ந்தேன். அந்த காலக்கட்டத்தில் 'பெரியார்' எதிர்ப்பாளராக இருந்த பேரா.அ.மார்க்ஸ் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான விடைகளை தேடியதும், அவ்வாறு நான் புலமையாளனாக ஆனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
(‘எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (1)’;
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
'மார்க்சியம், தேசியம்' தளங்களில் நின்று, ஈ.வெ.ராவுக்கு எதிராக அ.மார்க்ஸ் அந்த காலக்கட்டத்தில் கேள்விகள் எழுப்பியது போல, 'தமிழ்' தொடர்பாக ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிரான கேள்விகளை, அந்த காலக்கட்டத்தில் நான் சந்திக்கவில்லை.
பின்னர் நான் இசையின் இயற்பியல் (Physics of Music) ஆய்வுக்கு, தமிழ் இலக்கியங்களை உட்படுத்தி பெற்ற ஆய்வு முடிவுகள் எல்லாம், என் கண்களை திறக்க (திருக்குறள் 573);
பின்னர் நான் இசையின் இயற்பியல் (Physics of Music) ஆய்வுக்கு, தமிழ் இலக்கியங்களை உட்படுத்தி பெற்ற ஆய்வு முடிவுகள் எல்லாம், என் கண்களை திறக்க (திருக்குறள் 573);
தமிழ் தொடர்பான ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடுகளை எல்லாம் மறுஆய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் வெளிப்பட்டது. (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html &
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html )
தமிழைப் பாராட்டிக்கொண்டே, 'பெரியார்' கொள்கையாளனாகப் பயணிக்கும் இரட்டை வேடப் போக்கில், பாரதிதாசன் பாணியில் நான் பயணிக்கவில்லை. அகத்தில் சாதிப்பற்றுடன் தமது சாதி பிரபலங்களுடன் நெருக்கமாகி, புறத்தில் 'பெரியார்' கொள்கையாளராக, நானறிந்த பலர் பயணித்த போக்கிலும், நான் பயணிக்கவில்லை.
'பெரியார்' இயக்கத்தில் சேர்ந்து, படித்து, நல்ல வேலையில்/ சுயசம்பாத்தியத்தில் இருந்து கொண்டு, 2ஆவது, 3ஆவது, 4ஆவது தலைமுறையாக தமது சாதிக்குள்ளேயே எல்லா திருமணங்களையும் நடத்திக் கொண்டு, 'கறுப்பு சட்டையுடன்', 'சாதி ஒழிப்பு' 'பெரியார்' கொள்கையாளராக, தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களை, 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்திலேயே, நான் மதித்து, என்னை நெருங்க அனுமதித்ததில்லை.
நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதை நாம் பணியாற்றுமிடம் மற்றும் வாழுமிடம் போன்ற மைக்ரோஉலகத்தில் மறைத்து வாழ்வது கடினம் ஆகும். மைக்ரொஉலகத்தில் சாதிப்பற்றுடன் சுயலாப நோக்கில் வாழ்ந்து கொண்டு, மேக்ரோஉலகத்தில் 'சாதி எதிர்ப்பு முற்போக்காளர்களாக வலம் வர தமிழ்நாட்டில் முடியும்;
என்று நிரூபித்து பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தமிழ் ஆதரவாளர்களாகப் பயணிப்பவர்களில் பெரும்பாலோரின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் விளையாட்டுப் பள்ளி முதலே ஆங்கிலவழிப் பள்ளிகளில் பயின்றார்கள்; பயில்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆங்கிலவழிப் பள்ளிகள் 1970களில் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட காலத்தில் ஆட்டு மந்தைகள் போல் ஏதோ நல்லவழி என்று நினைத்து அப்பள்ளிகளில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்தார்கள். உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட அறிஞர்களும் தலைவர்களும் பற்றாளர்களும் , அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது பெரும் கொடுமையாகும்.
புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக ,அந்த தமிழ்வழி வீழ்ச்சி ஓட்டத்திலேயே தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ், பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000
வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார். அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ் வழியில் எத்தனை சதவீதமோ, அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ், பி.ஈ படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை,- அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில்.
இன்று ஏழைகளும் அவ்வழியில் செல்ல, ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க ஆளின்றி மூடப்பட்டு வரும் சவாலை தமிழ்நாடு சந்திக்க நேர்ந்தது. (‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’; http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)
ஆங்கில வழிக் கல்வி மூலம் 'ஆங்கில வல்லாண்மையில்', தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தீவிரமடைந்துள்ளது. அந்த போக்கில், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு (வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை), தமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக்கொண்டு, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், 'சமற்கிருத வல்லாண்மையை' எதிர்ப்பது சரியா?
காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் 'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்பு இருந்ததற்கு (பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டு) சான்றுகள் உண்டா? இல்லையென்றால் தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்களிப்பில் ஒரே கல்வெட்டில் அடுத்து அடுத்து இடம் பெறும் பல கல்வெட்டு சான்றுகளுடன் பயணித்ததா? தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு (Complimentary role) வகித்துள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html)
இன்றைய சாதி மோதல் காலனியத்திற்குப் பின் தான் தமிழ்நாட்டில் முளை விட்டது போலவே (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html & http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html );
'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்பும் காலனிய சூழ்ச்சியில் வெளிப்பட்டதா?
நாகசாமி, ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் தமிழ் தொடர்பான உண்மைகளை இருட்டடிப்புக்கு உள்ளாக்கி, 'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்புக்கு அடித்தளம் உருவாக்கியுள்ளார்கள்;
காலனிய சூழ்ச்சியில் வெளிப்பட்டு, தமிழ் தொடர்பான ஆய்வுகள் மூலமாக அடங்கி வரும் 'அந்த' எதிர்ப்புக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார்கள்;
என்பது எனது ஆய்வு முடிவாகும். அவர்களின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை எல்லாம் அறிவுபூர்வமாக எதிர்ப்பதன் மூலமே, அவர்களால் இருட்டடிப்புக்குள்ளானவைகளை வெளிக்கொண்டு வர முடியும், என்பதும் எனது கருத்தாகும்.
அந்த முயற்சிகளில் பாராட்டப்படும் வகையில் பங்களிக்கத் தொடங்கியுள்ள 'பெரியார்' ஆதரவு அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழ்ப் புலமையாளர்களுக்கு எல்லாம்;
இன்றைய சாதி மோதல் காலனியத்திற்குப் பின் தான் தமிழ்நாட்டில் முளை விட்டது போலவே (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html & http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html );
'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்பும் காலனிய சூழ்ச்சியில் வெளிப்பட்டதா?
நாகசாமி, ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் தமிழ் தொடர்பான உண்மைகளை இருட்டடிப்புக்கு உள்ளாக்கி, 'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்புக்கு அடித்தளம் உருவாக்கியுள்ளார்கள்;
காலனிய சூழ்ச்சியில் வெளிப்பட்டு, தமிழ் தொடர்பான ஆய்வுகள் மூலமாக அடங்கி வரும் 'அந்த' எதிர்ப்புக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார்கள்;
என்பது எனது ஆய்வு முடிவாகும். அவர்களின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை எல்லாம் அறிவுபூர்வமாக எதிர்ப்பதன் மூலமே, அவர்களால் இருட்டடிப்புக்குள்ளானவைகளை வெளிக்கொண்டு வர முடியும், என்பதும் எனது கருத்தாகும்.
அந்த முயற்சிகளில் பாராட்டப்படும் வகையில் பங்களிக்கத் தொடங்கியுள்ள 'பெரியார்' ஆதரவு அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழ்ப் புலமையாளர்களுக்கு எல்லாம்;
'தமிழ் எங்கள் இழிவுக்கு நேர்' என்ற போக்கில், 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாடு மூலம் ஈ.வெ.ரா மேற்கொண்ட சீர்திருத்தமானது, 'தமிழ்வேர்க்கொல்லி'யாகி வருவதை சுட்டிக் காட்ட வேண்டிய சமூகப் பொறுப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அதனைத் தட்டிக்கழிப்பவர்கள் எல்லாம், வரலாற்றில் குற்றவாளிகளாக இடம் பெறுவதையும் தவிர்க்க முடியாது.
பொதுவாக நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும் உள்ள தகவல் பரிமாற்ற வலிமையானது
(Communication strength), நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்ததே ஆகும்.
இது டிஜிட்டல் யுகம். சமூக வண்ணக் குருட்டில் வெளிப்படும் கருத்துக்களும், இரட்டை வேடப் போக்குகளும் மாணவர்களின் படித்த இளைஞர்களின் கேலிப்பொருளாகி வரும் காலம் இதுவாகும்.
"ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்"
என்ற உண்மையை 'துக்ளக்' வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம்;
தமிழ்வழிக்கல்வி மீட்சியில் 'பெரியார்' ஆதரவாளர்களும், பிராமணர்களும் ஒன்று சேர வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
“தாய்மொழியில் ஒரு குழந்தை நல்ல பயிற்சி பெற்றால், மற்ற மொழிகளில் அது கற்றுக் கொள்வது சுலபம் என்று எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன. ஆங்கில வழியில் கற்பதால் இயற்கையாக தமிழிலும் தேர்ச்சி பெறுவதில்லை. ஆங்கிலத்திலும் தேர்ச்சி வரவில்லை. இதுதான் யதார்த்த நிலை.” என்பதையும் 'துக்ளக்' சுட்டிக்காட்டி;
"ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடம் கற்க வேண்டியதன் அவசியத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இதுபற்றி சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்." என்று 'துக்ளக்' 'தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு' தமது பங்களிப்பை துவங்கி விட்டது.
ஒன்று ஈ.வெ.ராவின் ஆங்கிலவழிக் கல்வி ஆதரவு போக்கினை நியாயப்படுத்தி, தமிழ்வழிக்கல்வியை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸையும், துக்ளக்கையும், 'பெரியார்' கட்சிகள் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், தாய்மொழிவழிக்கல்வி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஈ.வெ.ராவின் கொள்கை தவறு என்று, ஈ.வெ.ரா வழியிலேயே துணிச்சலுடன் அறிவித்து, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு பகிரங்கமாக பங்களிக்க வேண்டும்.
'இசை இயற்பியல்'
(Physics of Music) அணுகுமுறையில், பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்னை பாராட்டி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தமது நிலைப்பாடு தவறு என்று துணிச்சலுடன் அறிவித்து, திருத்திய நிலைப்பாடு எடுத்து, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்திருப்பார்;
என்று உண்மையில் நான் நம்புவதாலும்;
காலம் தாழ்த்தாமல், இன்று திராவிடர் கழக தலைவராக இருக்கும் கி.வீரமணி அவர்களை, ஈ.வெ.ரா வழியில் துணிச்சலுடன், என்னை பாராட்ட மனமில்லையானாலும், தமிழ் இலக்கியங்கள் பற்றிய நிலைப்பாட்டினை ஈ.வெ.ரா வழியிலேயே மாற்றிக் கொண்டு, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுக்குமாறு நான் கோருகிறேன்.
'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையானது, இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கப்பட்டு, நிறைவேறவில்லை.
ஆனால் தமிழ்வழிக்கல்வி மீட்சியில். அது போல 'பெரியார்' ஆதரவாளர்களும்;
ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;( http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)
ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;
வரும் 2018 சூன் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும்; ( ‘‘தமிழ் அழிவு சுனாமி’யிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html );
என்று நான் நம்புகிறேன்.
2018 மார்ச்சில் முன்வைக்கப்பட்ட எனது கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 2019
மார்ச்சில் இந்த பதிவில், அதே கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன்.
சமூக வண்ணக் குருட்டு நோயில் ஈ.வெ.ரா அவர்கள் சிக்கியிருந்தால்;
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றதும்;
இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்கு' ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினைக் கோரி பெற்ற்தும்;
நடந்திருக்குமா? எனவே மேலே குறிப்பிட்ட கோரிக்கையானது தாமதமின்றி செயல்வடிவம் பெற எந்த தடைக்கும் நியாயம் கற்பிக்க முடியாது.
சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன் 'சமூக வண்ணக் குருடர்களாக' பயணிப்பவர்கள் எல்லாம், தி.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு எந்த அமைப்பில் இருந்தாலும்;
அந்தந்த அமைப்பில் உள்ள இரட்டைவேடப் போக்குகளுடன் முரண்பட்டு, என்னைப் போலவே தெளிவுபெற வாய்ப்புண்டு. அதன் விளைவாக, எதிரெதிர் போக்குகளில் பயணிப்பவர்களும், ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜியைப் போலவே,('திராவிட நாடு பிரிவினை' போன்ற) ஒருமித்த கருத்துள்ள 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' போன்ற இலக்குகளில் ஒன்றுபட்டு பயணிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த இருவரும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது.
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html)
சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன் 'சமூக வண்ணக் குருடர்களாக' பயணிப்பவர்கள் எல்லாம், தி.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு எந்த அமைப்பில் இருந்தாலும்;
அந்தந்த அமைப்பில் உள்ள இரட்டைவேடப் போக்குகளுடன் முரண்பட்டு, என்னைப் போலவே தெளிவுபெற வாய்ப்புண்டு. அதன் விளைவாக, எதிரெதிர் போக்குகளில் பயணிப்பவர்களும், ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜியைப் போலவே,('திராவிட நாடு பிரிவினை' போன்ற) ஒருமித்த கருத்துள்ள 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' போன்ற இலக்குகளில் ஒன்றுபட்டு பயணிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த இருவரும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது.
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html)
No comments:
Post a Comment