Wednesday, March 27, 2019

செம்மொழி நிறுவனத்தில் நாகசாமி? (4)



நாகசாமி தொடர்பான எதிர்ப்பானது, 'சமஸ்கிருத எதிர்ப்பு', 'பார்ப்பன எதிர்ப்பு' என்று தடம் புரள்வது தமிழுக்கு நல்லதா?



சென்னை பெரியார் திடலில் நாகசாமியின் திருக்குறள் தொடர்பான ஆய்வு முடிவுகளுக்கு எதிரான விளக்கங்கள் வெளிப்படும் வகையில், முன்னாள் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், புலமையாளர்கள் ஆற்றிய உரைகளின் காணொளிகள் சில எனது கவனத்தை ஈர்த்தன‌.

ஒரு சமூகத்தில் ஒரு முக்கிய பிரச்சினை தொடர்பான கூட்ட அரங்கில் பெரும்பான்மையாக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் இருந்தால், அது வளர்ச்சிக்கான அறிகுறியாகும். அதற்கு மாறாக நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் இருந்தால், அது வீழ்ச்சிக்கான அறிகுறியாகும்

1967க்கு முன் தி.மு.‍-வின் வளர்ச்சி போக்கில், அந்த சுதாரிப்பு இல்லாததாலேயே காமராஜரின் காங்கிரஸ், அண்ணாவின் தி.மு. விடம் தோற்றது

நாகசாமியின் தமிழ் ஆய்வு தொடர்பான கூட்ட அரங்கில், 'அந்த' காங்கிரஸ் திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதைக் கணிக்க, மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்த அரங்கின் பார்வையாளர்கள் பற்றிய தகவல் உதவும்.

'அந்த' காங்கிரஸ் திசையில், தமிழ் தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாடு பயணித்தால், அது கட்சிப் பிரச்சினை மட்டுமல்ல; தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் போக்கில், அது தமிழின் மரணப்பயணத்திற்கான, தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறி வருவதற்கான அபாய எச்சரிக்கை ஆகும்.

அடுத்து, திருக்குறள் தொடர்பாகவும், தமிழ் தொடர்பாகவும் தனது ஆய்வில் நாகசாமி வெளிப்படுத்தியுள்ள சான்றுகளில் உள்ள குறைபாடுகள், அவர் முன்வைத்த வாதத்தில் உள்ள குறைபாடுகள், அவற்றுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களின் குவியமாக இருக்க வேண்டும்

அதிலிருந்து தடம் புரண்டு,சமஸ்கிருத எதிர்ப்பும், 'பார்ப்பன' எதிர்ப்பும் குவியத்திற்கு உள்ளாவதும்;

நாகசாமியின் 'உள்நோக்கம்' குவியத்திற்கு உள்ளாவதும் அறிவுபூர்வமாகாது. உணர்ச்சிபூர்வமின்றி ஒரு பொருளை அறிவுபூர்வமாக சிந்திக்கும் அல்லது விவாதிக்கும் திறமையே புலமை ஆகும். 
(‘intellectualism : the ability to think about or discuss a subject in a detailed and intelligent way, without involving your emotions or feelings’ ; https://dictionary.cambridge.org/dictionary/english/intellectualism )

அவ்வாறு நாகசாமியின் 'உள்நோக்கம் பற்றிய ஆராய்ச்சியை' ஆதரிப்பவர்கள் எல்லாம். கீழ்வரும் கேள்வியைப் புறக்கணிக்க முடியுமா?

தமிழ் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள தமது ஆய்வு முடிவுகளை எல்லாம், நாகசாமி தமது நெருங்கிய நண்பரான தி.மு. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து விவாதித்தாரா? இல்லையா? அந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு நாகசாமிக்கு இருப்பது போலவே, கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் இல்லையா? 

இந்தியாவின் தொன்மையான, ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டு உரிய முக்கியத்துவம் இன்றி, சுற்றுலா வருமானம் ஈட்டும் வாய்ப்பை இழந்து நிற்பதற்கு, அந்த இருவரில் யார் காரணம்? என்ற ஆய்வை விடுத்து, நிவாரணம் நோக்கி முயல்வது இனியும் தாமதமாகலாமா?  
(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_15.html ) 

உணர்ச்சிபூர்வமான சமஸ்கிருத எதிர்ப்பு எவ்வாறு தமிழின் வளர்ச்சிக்குக் கேடாகும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/01/why-anti-sanskrit-is-harmful-to-tamil.html)

தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வரும் உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பானது, குடுமியான்மலை இசைக்கல்வெட்டு தொடர்பான எனது ஆய்வுகளுக்கு எவ்வாறு கேடானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்புள்ளவையா?’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html)

ஆங்கில மொழியில் வெளிவந்துள்ளநூல்களில், எவ்வாறு பிற மொழியாளர்களும் படைப்பாளர்களாக இருக்கிறார்களோ, அவ்வாறே சமஸ்கிருத மொழியில் வெளிவந்துள்ளநூல்களில், தமிழ்ப் புலமையாளர்களும் படைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள்

உலகில் நாத்திகம் பற்றி, அதிகமான நூல்கள் உள்ள தொன்மை மொழிகளில் சமஸ்கிருதம் மற்றும் பாலி முதலிடம் வகிப்பதை, நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தெளிவுபடுத்தியுள்ளார்.  ( 'Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language; Greek, or Roman or Hebrew or Arabic)';  Page 35; ' Identity and Violence- The Illusion of Destiny- Amartya sen) வடமொழியில் இருந்த மனுதர்மம் உள்ளிட்ட சில நூல்கள் எந்த சூழலில் உருவாகி, இந்தியாவின் எந்தெந்த பகுதிகளில் அவற்றில் இருந்தவை நடைமுறைபடுத்தப்பட்டன? தமிழ்நாட்டில் அவை நடைமுறைபடுத்தப்பட்டதற்கு சான்றுகள் உண்டா? (http://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

தமிழாக இருந்தாலும், சமஸ்கிருதமாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், அல்லது வேறு எந்த மொழியாக இருந்தாலும், அந்தந்த மொழிகளில் உள்ள நல்ல நூல்களையும், கேடான நூல்களையும் பிரித்தறியும் பகுத்தறிவு இல்லாமல், ஒரு மொழியில் உள்ள நூல்கள் எல்லாமே கேடானவை என்பது போல, அந்த மொழியை வெறுப்பதும், கண்டிப்பதும் அறிவுபூர்வமாகாது.

அதிலும் காலனிய சூழ்ச்சியில், தமிழ் மொழியில் உள்ள 'இனம்' மற்றும் 'சாதி' போன்ற சொற்கள் எல்லாம் சூழ்ச்சிகரமான பொருள் திரிபுக்கு (mischievous semantic distortion) உள்ளானது தெரியாமல் (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html);

நாகசாமியின் தமிழ் தொடர்பான ஆய்வுக்கு எதிர்ப்பானது,'பார்ப்பன எதிர்ப்பு' குவியமாக தடம் புரள்வதும், வாத முரண் ஆகாதா? (http://tamilsdirection.blogspot.com/2015/10/)

'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம். அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்வோம்;

என்ற நிலையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? அல்லது நாகசாமி போன்ற பிராமண எழுத்தாளர்களை எதிர்க்கும் 'உணர்ச்சிபூர்வ' பாணியில் செல்டன் பொல்லாக் போன்ற வெள்ளைக்கார எழுத்தாளர்களை எதிர்த்தால், உலகின் கேலிப்பொருளாகி விடுவோமே? என்ற மீடியா வெளிச்சத்தில் வலம் வரும் தமிழ்ப் புலமையாளர்களும், எழுத்தாளர்களும் பயப்படுகிறார்களா? (‘செம்மொழி நிறுவனத்தில் நாகசாமி? (3); ‘நீக்ரோவைப் போல, 'பறையா' ஒழிய தாமதம் ஏன்?’; https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

ஆங்கிலத்தில் எது வெளிவந்தாலும், தமிழைப்பற்றி வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் எழுதி எது வெளிவந்தாலும், அறிவுக்கண்களை மூடிக்கொண்டு பாராட்டுவதானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?


'‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992)' என்ற நூல் எழுத குறிப்புகள் கொடுத்து உதவி செய்ததாக, ஒரு ...தி.மு. ஆதரவு பேராசிரியர் என்னிடம், சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பெருமையுடன் தெரிவித்தார்; அறிவுபூர்வமற்ற முறையில், எம்.ஜி.ஆரை இழிவு செய்து, அந்த நூலின் உள்ளடக்கம் இருந்தது தெரியாமல். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html )


ஜார்ஜ் ஹார்ட்டின் ("தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை." என்பது போன்ற)  அபத்தமான ஆய்வுகளுக்கு, உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுப்பு தெரிவிக்காமல், கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவரை பாராட்டியதற்கும், மேலே குறிப்பிட்டதற்கும் வேறுபாடு உண்டா? (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html ) 
 
சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழ் செம்மொழியானது, என்று செல்டன் பொல்லாக், நாகசாமி வெளிப்படுத்திய ஆய்வு முடிவுகளை ஜார்ஜ் ஹார்ட் மறுத்தாரா? இனியாவது மறுப்பாரா?

தொடர்புள்ள துறைகளில் உள்ள  புலமையாளர்கள் மத்தியில், தமிழ், தமிழ்  இசை தொடர்பான, தமது ஆய்வுமுடிவுகளை நிரூபிக்காமல், உணர்ச்சிபூர்வ ஆதரவாளர்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் போல பேசுவதும், எழுதுவதும் ஆகிய போக்கே, தமிழைப் பற்றி செல்டான் பொல்லாக் போன்றவர்கள் கீழாகக் கருதுவதற்கும் (http://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html );  

தமிழ் இசைப் பற்றியும், அந்த கீழான கண்ணோட்டம் தொடர்வதற்கும் காரணங்கள் ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

செல்டன் பொல்லாக்கின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை எதிர்த்து, நான் ஆங்கிலத்தில் ஏற்கனவே கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்

தற்போது நான் எழுதி விரைவில் வெளிவர உள்ள‌ ' Ancient Tamil Texts – The pitfalls in the Study & Translation' நூலிலும் அது தொடர்பாகவும் எழுதி உள்ளேன்.(‘உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வானநிலை? மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்!; https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html) 

மேற்கத்திய உலகில் இந்துத்வா ஆதரவு/எதிர்ப்பு தொடர்பான விவாதங்களில் புகழ் பெற்று வரும் ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள், நாகசாமியின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை வரவேற்று உள்ளார்கள். (https://rajivmalhotra.com/)
நாகசாமி தமிழ் தொடர்பாக எழுதிய நூல்களும், கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளிவந்து உலகின் கவனத்தினை ஈர்த்துள்ளன. அதற்கு எதிராக வெளிப்படும் உரைகள், கட்டுரைகள், நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தால் தான், உலகின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழில் வெளிவருவது தமிழ் தெரிந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும். அதுவும் முக்கியமே. அது போல, ஆங்கிலத்திலும் வெளிவருவதன் மூலமே, நாகசாமியின் ஆங்கில நூல்களை வாசித்தவர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும். 

தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, உள்மறை சுயலாப வேலைத் திட்டத்துடன் (Hidden selfish agenda) வெளிப்பட்டு வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html) 

உள்மறை சுயலாப வேலைத் திட்டமின்றி சமூக அக்கறையில் பயணிக்கும் புலமையாளர்கள் எல்லாம், எதெரெதிர் கொள்கைகளில் பயணித்தாலும், ஒருவரையொருவர் மதித்து, நாகரீகமாகவே அறிவுபூர்வ விவாதங்களில் ஈடுபடுவார்கள். .வெ.ரா அவர்கள் பிராமணர்கள் அமைப்பில் அவ்வாறே உரையாடியிருக்கிறார்.( http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html) 

ராஜிவ் மல்கோத்ராவை நான் அறிவேன். உள்மறை சுயலாப வேலைத் திட்டம்  இன்றி, .வெ.ரா அவர்கள் 'பார்ப்பன எதிர்ப்பு' நோக்கில் பயணித்தது போலவே, 'இந்துத்வா ஆதரவு' போக்கில் பயணிப்பவர் ராஜிவ் மல்கோத்ரா ஆவார். அறிவுபூர்வமாக முன்வைக்கும் வாதங்களை பரிசீலித்து, சரியென்றால், .வெ.ரா அவர்களைப் போலவே துணிச்சலுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அவர் என்பதை அறிவேன். ஆனால் நாகசாமி பற்றி அது போல என்னால் கணிக்க முடியாது, என்பதற்கான காரணங்களையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html)

ராஜிவ் மல்கோத்ரா மற்றும் நாகசாமியின் தமிழ்நாடு தொடர்பான, மற்றும் தமிழ் தொடர்பான ஆய்வுகளை விமர்சித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை அல்லது நூல் எழுதும் எண்ணம் எனக்குள்ளது. அடுத்து வெளியிட உள்ள நூல்கள் தொடர்பான பணிகள் மற்றும் நான் மேற்கொண்டுள்ள இசை தொடர்பான ஆய்வுத் திட்டங்கள் காரணமாக, அந்த முயற்சியில் ஈடுபடுவதானது தாமதமாகலாம்.

புலமையும் வாய்ப்பும் உள்ளவர்கள் எல்லாம் வாதத்திற்கான குவியத்திலிருந்து தடம் புரளாமால், எதிர் நிலைப்பாடுகளில் திறந்த மனதுள்ளவர்களையும் ஈர்க்கும் வகையில், அந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும். உள்மறை சுயலாப வேலைத் திட்டமின்றி தமிழின் மீட்சியில் அக்கறை உள்ளவர்கள் எல்லாம், அந்த முயற்சிக்கு தம்மால் இயன்ற அளவு ஆதரவு வழங்குவதும் சாத்தியமே


Note: ‘Philosophy of Peninsular India - ThirukkuRaL_aRam- A comparative study of Thirukkural and Baghavat Gita’ by H.V.விஸ்வேஸ்வரன்

(Bold Mine)

“Bhagavat Gita (Gita) is also an old treatise on the meaning and purpose of human life.  It is supposed to be an epitome of the Upanishads. As there is no attempt in the past to include kuRaL as part of Indian philosophical thought, we try to give an account of the philosophy of kuRaL , THE PHILOSOPHY OF PENINSULAR INDIA. 

This work does not sit in judgment of which one is superior than the other. Both are superior on their own right. Otherwise they might not have survived this long and  still continue to inspire mankind.”


 
The above link was forwarded to Rajiv Malhotra. 



2 comments:

  1. https://www.inamtamil.com/vetacattiraṅkaḷiṉ-karuttukaḷ-tirukkuṟaḷiṉ-aṭippaṭaiyil-tirikkappaṭṭavaiye/?fbclid=IwAR3LJ589MVEAOKGBMy2E_C251s54LgjpebuiKmmHsZdxZpeKiCPwpRl34fo


    ReplyDelete
  2. My reply to nagaswamy can be found in the following link:

    https://www.inamtamil.com/vetacattiraṅkaḷiṉ-karuttukaḷ-tirukkuṟaḷiṉ-aṭippaṭaiyil-tirikkappaṭṭavaiye/?fbclid=IwAR3LJ589MVEAOKGBMy2E_C251s54LgjpebuiKmmHsZdxZpeKiCPwpRl34fo

    ReplyDelete