Sunday, March 10, 2019

செம்மொழி நிறுவனத்தில் நாகசாமி? (2)

தமிழுக்கு எதிரானவர்  ஈ.வெ.ராவா? நாகசாமியா?




தமிழ் மொழியிலிருந்து தான் சமஸ்கிருதம் தோன்றியது என்றும், சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்றும், ஆய்வுகள் வெளி வருவதில் தவறில்லை;

அதனை அறிவுபூர்வ திறனாய்வுக்கு உட்படுத்தி சரி, அல்லது தவறு என்று நிரூபிப்பதை, 'அந்த' ஆய்வாளர்கள் வரவேற்கும் வரையில்.

தமது ஆய்வுக்கான எதிர்ப்பினை இருட்டில் தள்ளி, தமக்குள்ள செல்வாக்கினை தவறாகப் பயன்படுத்தி, ஊடக வெளிச்சத்தில் தமது ஆய்வு சரியென்று விளம்பரம் செய்பவர்கள் யாராயிருந்தாலும், அத்தகையோர் சமூகத்திற்கு கேடானவர்கள் ஆவார்கள்.

சுமேரிய மொழி தொல் தமிழ் என்றும், சுமேரிய மொழி மாற்றத்திற்கு உள்ளாகி சமஸ்கிருதம் தோன்றியதால், சமஸ்கிருதமும் திராவிட மொழியே என்றும் மலேசியாவைச் சேர்ந்த மறைந்தமுனைவர் லோகநாதன் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.( https://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html )

'சமஸ்கிருதமும் திராவிட மொழியே' என்ற ஆய்வு முடிவினை வெளிப்படுத்தியுள்ளமலேசியாவைச் சேர்ந்த மறைந்தமுனைவர் லோகநாதனின் ஆய்வுமுடிவினை அறிவுபூர்வமாக மறுக்காமல், ‘சமஸ்கிருத எதிரியாக’, சமஸ்கிருத ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தால், அது தவறாகும்.

அது போலவே தமிழ் தொடர்பான தொல்லியல் அறிஞர் நாகசாமியின் ஆய்வு முடிவுகளை அறிவுபூர்வமாக மறுக்காமல், ‘தமிழ் எதிரியாக’, தமிழ் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தால், அது தவறாகும். 


அந்த தவறானமுயற்சிகளுக்கு துணை போகின்றவர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மையிலான 'காலனிய மனநோயாளிகளாகவோ' அல்லது 'தனித்துவமான திராவிட மனநோயளிகளாகவோ' இருப்பார்கள் (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  )

ஔவை நடராஜன், வைரமுத்து, சுப.வீ, பொற்கோ, ம.ராசேந்திரன், வீ. அரசு போன்ற இன்னும் பலர் ஊடக வெளிச்சத்தில் தமிழுக்கு குரல் கொடுப்பவர்கள் ஆவார்கள். அந்த வரிசையில் முதலில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அண்மையில் மறைந்த‌ தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும் ஆவார்கள்.

நாகசாமி தமிழ் தொடர்பாக வெளியிட்டுள்ள தமது ஆய்வு முடிவுகளை இதுவரை அவர்களில் எவராவது ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து வெளியிடாமல் இருந்திருந்தால், அது சரியா?  

கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு தி.மு.க தலைவராகியுள்ள ஸ்டாலினுக்கும், தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கும் இடையில் வெளிப்பட்டுள்ள கருத்து மோதலானது, உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி அறிவுபூர்வமாக பயணித்தால் மட்டுமே, அது தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படும் வாய்ப்புள்ளது. அந்த மோதல் தொடர்பாகவும், மேலே குறிப்பிட்ட நபர்கள் எல்லாம் மெளனம் சாதித்தால், அது தமிழுக்கு இழைக்கும் துரோகமாகாதா? 

'நான் தமிழுக்கு எதிரானவனா?' என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி எழுதியுள்ள கட்டுரை தினமணி (08.03.2019) இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரையின் முடிவில் "உலக தமிழ் அறிஞர்கள் மத்தியில் அவர் (ஸ்டாலின்) தமிழ் மொழி குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். எனவே, தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த‌ கட்டுரையின்படி நாகசாமியும் தி.மு. தலைவர் கருணாநிதியும் தமிழ் தொடர்பாக ஒரே போக்கில் பயணித்தவர்களா? என்ற கேள்வி எழுகிறது. ஔவை நடராஜன் போன்ற கருணாநிதிக்கு நெருக்கமான தமிழ் அறிஞர்கள் அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பாகும். இல்லையென்றால் கருணாநிதியை விட்டு விட்டு, நாகசாமியை மட்டும் தமிழுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுவது நேர்மையாகாது

தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி அறிவுபூர்வமாக ஸ்டாலினின் நிலைப்பாட்டினை தவறு என்று நிரூபித்துள்ளார். அந்த விவாதத்தினை ஸ்டாலின் தொடரலாம். தேர்தல் பணிச்சுமையில் சிக்கியுள்ள அவரால் தொடரமுடியாத சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள கருணாநிதிக்கு நெருக்கமாக பயணித்த மேலே குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் அந்த அறிவுபூர்வ விவாதத்தினை முன்னெடுக்கலாம்.

ஆனால் அதற்கு முன், நாகசாமி மட்டுமல்ல, எவரையும் தமிழுக்கு எதிர்ப்பாளாராக குற்றம் சுமத்தும் முன், கீழ்வரும் கேள்விகளுக்கு விடைகள் கண்டாக வேண்டும்.

'தமிழ் எதிர்ப்பாளர்' என்பதற்கான அளவுகோலில் பாரபட்சம் கடைபிடிக்கப்பட்டால், அது தமிழின் வளர்ச்சிக்கு நல்லதா? கெட்டதா?

அவ்வாறு பாரபட்சப் போக்கினை கடைப்பிடித்தவர்கள் எல்லாம் தமிழின் வளர்ச்சிக்கு கேடானவர்கள் ஆக மாட்டார்களா?

.வெ.ரா அவர்களின் தமிழ் தொடர்பான நிலைப்பாடுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html & http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html )

ஈ.வெ.ரா அவர்களுக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;

 ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
ஆக பயணித்தார்.

தனிமனித அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், ஈ.வெ.ரா அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, ஈ.வெ.ராவிற்கு நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த ஈ.வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, ஈ.வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், ஈ.வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த ஈ.வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் ஈ.வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

வைக்கம் போராட்டத்தில் எழுச்சி ஊட்ட, ஈ.வெ.ரா அவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடியதை, கோவை அய்யாமுத்து தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு எழுச்சியூட்ட பாரதிதாசன் பாடல்களை ஈ.வெ.ரா ஏன் பாடவில்லை? என்பதும் மேலே குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெற வேண்டும். (http://tamilsdirection.blogspot.com/2017/12/blog-post_20.html )

தமிழில் புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, இலக்கண அறிவின்றி செவி புலன் அறிவில் எதுகை மோனையை பயன்படுத்தி, உணர்ச்சிபூர்வமாக பேசுவதும், எழுதுவதும் வளர்ந்த 'வழிபாட்டுப் போக்கில்'; (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

அந்த வழிபாடு ஏற்படுத்திய சமூக தேவைகளின் அடிப்படைகளில், திருவள்ளுவர் உள்ளிட்ட பிம்பங்களுக்கு தேவைகள் உருவானதன் வடிகாலாகவே, பழந்தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் தோற்றங்களை உருவாக்கும் போக்குகள் வெளிப்பட்டனவா? என்ற ஆய்வுக்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். 

1953இல் பாரதிதாசன் தூண்டி, வேணுகோபால் சர்மா திருவள்ளுவரின் தோற்றத்தை, எந்த சான்றுகளும் இன்றி, கற்பனையாக, ஓவியமாக வரைந்து, அன்றைய முதல்வர் பக்தவச்சலம், தி.மு.க தலைவர் அண்ணா ஆகியோரின் ஏகமனதான பாராட்டுடன், அண்ணா பரிந்துரையின்  பேரில் முதல்வர் பக்தவச்சலம் அந்த திருவள்ளுவரின் தோற்றத்திற்கு தமிழக அரசின் அங்கீகாரத்தை வழங்கினார். ( https://www.quora.com/in/Tamil-Literature-Who-drew-the-Thiruvalluvar-picture-first)

அது தொடர்பாக, ஈ.வெ.ரா அவர்கள் அந்த காலக்கட்டத்தில் என்ன கருத்தை பேச்சாகவோ, எழுத்தாகவோ வெளியிட்டார்? என்பதை இனி தான் ஆராய வேண்டும்.

தாய்மொழி தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் தமிழருக்கு கேடென ஈ.வெ.ரா அவர்கள் பிரச்சாரம் செய்து வந்த சூழலில், 1967இல் அண்ணா முதல்வராகி, இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தி, திருவள்ளுவர் மட்டுமின்றி, 'தீ பரவட்டும்' என்று அண்ணாவால் கண்டிக்கப்பட்ட 'கம்ப ராமாயணத்தை' எழுதிய கம்பருக்கும், மற்ற பழந்தமிழ் இலக்கிய படைப்பாளர்களுக்கும், சென்னை மெரினாவில் சிலைகள் அமைத்தார். அந்த தோற்றங்கள் எல்லாம், திருவள்ளுவர் தோற்றத்தை போலவே, எந்த சான்றுகளும் இன்றி, கற்பனையில் வடிக்கப்பட்டவையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  அண்ணாவின் ' அந்த' சாதனை தொடர்பாகவும் ஈ.வெ.ரா அவர்கள் என்ன கருத்து வெளியிட்டார்? என்பதையும் ஆராய வேண்டும். ( http://tamilsdirection.blogspot.com/2018/03/ ) 

நானறிந்த வரையில் உலகில் மதங்களில் மட்டுமே கற்பனையாக ஓவியங்களும் சிலைகளும் உருவாகியுள்ளன. இலக்கிய உலகில் புலவர்களின் உருவங்கள் கற்பனையாக வடிக்கப்பட்டது இல்லை.மெரினாவில் உள்ள தமிழ் தொடர்பான சிலைகளும் கூட, அந்தந்த புலவர்கள் மற்றும் கண்ணகி போன்ற பாத்திரங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஆடைகள் தொடர்பான தொல்லியல்/இலக்கிய சான்றுகளைக் கணக்கில் கொண்டு உருவானதாக தெரியவில்லை. இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டால், அவை எல்லாம் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. 

அண்ணாவின் 'தீ பரவட்டும்' நூலைப் படித்தவர்கள் மனதில், அவர் 1967இல் முதல்வரான பின், அவரது ஆட்சியில் சென்னை மெரினாவில் கம்பருக்கு சிலை வைத்தது சரியா? என்ற கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும். 1949-இல் தி.மு.க தோன்றிய பின், 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயல்படும்' என்ற அறிவிப்பை அறிந்தவர்களுக்கும், அந்த‌ கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும். (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த தவிர்க்க முடியாத வரை எல்லைகள் (limitations) காரணமாக, தமக்கிருந்த அறிவு நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் அவர் தமிழ் தொடர்பான தமிழருக்கான‌ ஆணிவேர்கள் தமிழர்க்கு கேடானவை என்று அறிவித்தார்.  தி.மு.க, 'இரட்டைக்குழல்' துப்பாக்கியாக, பெரியாரின் அந்த நிலைப்பாடுகளை ஏற்று செயல்பட்டார்களா?  பெரியாருக்கிருந்த‌ வரை எல்லைகள் இல்லாத அண்ணதுரைக்கு, பெரியாரின் அந்த நிலைப்பாடுகள் தவறு என்று தெரியவில்லையா? தெரிந்து பெரியாருக்கு அதை தெளிவுபடுத்த என்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதை செய்யாமல், சேர, சோழ, பாண்டிய அரசர்களையும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களையும் 'கவர்ச்சித் தமிழ், கவர்ச்சித் தமிழ் உணர்வு' என்று சிறைபிடித்து, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததில், தி.கவை விஞ்சி, தி.மு.க சாதனை படைத்ததா? அந்த சாதனையின் அடித்தளத்திலேயே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சமூக புற்று நோய்' போல் அதிவேகமாக பரவியதா? அந்த புற்றுநோயில் சிக்கி, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், குற்ற உணர்வே இல்லாமல், மேடைப்பேச்சில், எழுத்தில், 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாகவும், புரவலர்களாகவும் வெளிச்சம் போடும் 'தமிழ்வேர்க்கொல்லிகள்' போல், தமது சுயநல 'தமிழுணர்வு கணக்குகளில்' தமிழைச் சிறைபிடித்து, வளர்ந்தார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html)

1944க்கு பின், ஈ.வெ.ரா அவர்களுக்கு இருந்த அறிவு வரை எல்லைகள் இல்லாத அண்ணா, குத்தூசி குருசாமி, 'டார்பிடோ' ஜனார்த்தனம், உள்ளிட்ட இன்னும் பலரில் எவராவது, எச்சரித்து, அந்த தவறான திசையிலிருந்து நல்வழிப் படுத்த முயற்சித்தார்களா? இல்லையா? அத்தகைய முயற்சியின்றி, 'தமிழ் உணர்வு' மற்றும் 'தமிழின உணர்வு' என்று 'உணர்ச்சிபூர்வ' போக்கினை, ஊதிப் பெருக்க வைத்தது சரியா? என்ற ஆய்வினை, பொதுநல நோக்கில் மேற்கொள்ள வேண்டிய காலக்கட்டம் இதுவாகும்.

எனது விமர்சனங்களை மறுக்காமலும், ஏற்றுக் கொள்ளாமலும், புறக்கணித்து தமிழ்நாட்டில் பயணிக்கும் 'இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு' அறிவு ஜீவிகள் எல்லாம், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கின் தொடர்ச்சியாகவே இன்றும் பயணிக்கிறார்களா?

அந்த போக்கானது, தமிழ்நாட்டில் முளைவிட்டு வளர்ந்த சமூக செயல்நுட்பம் காரணமாகவே, தமிழ்நாட்டில் இன்று வாழும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதானது, அவர்களை அவமதிப்பதாகும், என்று அந்தந்த கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் கருதும் அளவுக்கு, உலகிலேயே தனித்துவமான (Unique) 'வழிபாட்டுப் புழுதிப் புயலில்' தமிழ்நாடு சிக்கியுள்ளது (http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post.html

அந்த வழிபாட்டை ஊக்குவித்த தலைவர்கள் மறைந்ததும், 'அந்த' வழிபாடும் மறைந்து, 'அந்த' தலைவரின் பெயர் மீண்டும் முன்னுக்கு வருகிறது. உதாரணமாக, 'அம்மா' என்று ஜெயலலிதாவை அழைத்த தொலைக்காட்சியும், நபர்களும் இன்று 'ஜெயலலிதா' என்று உச்சரிக்கிறார்கள். 'தலைவர், கலைஞர்' என்றவர்கள், இன்று 'கருணாநிதி' என்று உச்சரிக்கிறார்கள். இருக்கும் தலைவர்களாவது விழித்து, தமது பெயரையே உச்சரிக்குமாறு எச்சரிப்பார்களா? அந்த போக்கிற்கு பிள்ளையார் சுழியாக வெளிப்பட்ட 'பெரியார்' சிறையிலிருந்து ஈ.வெ.ரா அவர்களை 'பெரியார்' கட்சிகள் விடுவிப்பார்களா? மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் 'கேலிப்பொருள்' வரிசையில் இடம் பெறாமல், அத்தகையோர் எல்லாம் தப்பிப்பார்களா? 
(http://tamilsdirection.blogspot.com/2015/06/ )

நாகசாமியின் ஆய்வுமுடிவுகளை அறிவுபூர்வமாக நான் மறுத்துள்ளேன்.நாகசாமியைப் போலவே, இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர் பொ வேல்சாமி தமிழ் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்து எவ்வாறு தவறானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html
ஈ.வெ.ரா அவர்களின் தமிழ் தொடர்பான நிலைப்பாடுகள் எல்லாம் எவ்வாறு த‌வறானவை? என்பதை எனது ஆய்வுகள் மூலமாகக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு இன்றுள்ள அமைப்புகள் எல்லாம் தத்தம் கட்சிகளில் உள்ளவர்களின் யோக்கியதையை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்பதற்கான ஈ.வெ.ரா அவர்களின் திறவுகோலையும் நான் வெளிப்படுத்தி வருகிறேன். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html)

காலனி ஆட்சிக்கு முன் கல்வியில் 'பார்ப்பன ஆதிக்கம்' இருந்ததாக 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரம் செய்வது எவ்வாறு தவறானது? என்பதையும் உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளேன் .
ஈ.வெ.ரா அவர்களின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். (http://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில் பெண் புலமையாளர்கள், கல்வி முறை தொடர்பான சான்றுகளை தொல்லியல் அறிஞர் நாகசாமி போன்றவர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் வெளிப்படுத்தி வருவதை நான் வரவேற்கிறேன்.

எனவே நாகசாமியாக இருந்தாலும், ஈ.வெ.ரா அவர்களாக இருந்தாலும், அவர்களின் தமிழ் தொடர்பான நிலைப்பாடுகளை எதிர்க்கும் அதே வேளையில், அவர்களிடம் இருந்து வெளிப்படும் நல்லவைகளையும் வரவேற்பதே சரியாகும். 

யாராக இருந்தாலும் ஒரு மனிதரின் நிலைப்பாட்டினை அறிவுபூர்வமாக எதிர்ப்பதை விடுத்து;

'கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதியைப்' போல, 'தமிழுக்கு எதிரானவர், தமிழ்த் துரோகி' என்பது போன்ற தீர்ப்புகளை வழங்குவது சிறுபிள்ளைத் தனமாகும்.

‘பிறந்த மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையதாகும்.

தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த ஈ.வெ.ரா அவர்கள் அந்த நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதல் இல்லாமலும், தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறாகவும், அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு தனிநாடு கிடைத்தாலே போதும் என்றும், 'திராவிட/தமிழ் நாடு' பிரிவினையை முன்னெடுத்ததானது, தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு; 

தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’ கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;

எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;

மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.’

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

நிகழ்கால வரலாற்றில் என்னைக் காயப்படுத்திய சம்பவங்களில் ஆப்கானிஸ்தானில் 2001 மார்ச்சில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதும் ஒன்றாகும். மீடியாக்களில் அதை செய்தவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் என்று வெளியானது. ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கா தாலிபன் இயக்கத்தை வளர்த்தது எனக்கு நினைவுக்கு வந்தது. தனது பொருளாதார நலன்களுக்காகவே அது போன்று அமெரிக்க செயல்பட்டதும், அமெரிக்காவை சொர்க்கபூமியாகக் கருதி அங்கு குடியேறியுள்ள நமது உறவினர்களும், நண்பர்களும் எனது நினைவுக்கு வந்தார்கள். 'உலகம் எக்கெடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலிகளாகப் பிழைப்போம்' என்று வாழும் நாமும், நமது குடும்பமும், நண்பர்களும் அந்த பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதற்கு மறைமுக குற்றவாளிகள் இல்லையா? என்பது பற்றி நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.


மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ஈ.வெ.ரா அவர்கள் மீதோ, அண்ணா மீதோ குறைகளை கண்டுபிடித்து, கண்டிக்கும் நோக்கில் மேற்கொள்வது தவறாகும். 


2007இல் வெளிவந்த உலக அரங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரானஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள  நூலில் ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (2007) 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்களே தோன்றின' என்று  வெளிவந்துள்ளதை, மேலே குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் மறுத்தார்களா? எவருமே மறுத்திருக்கவில்லை என்றால், அது தமிழின் வளர்ச்சிக்கு கேடாகாதா?’ அதனை அறிவுபூர்வமாக மறுத்திருந்தால், அதே ஷெல்டன் பொல்லாக் கருத்தினை எதிரொலித்து நாகசாமியின் ஆய்வுநூல்கள் வெளிவந்திருக்குமா? ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html )
நாகசாமி தொடர்பாக தமிழ்நாடெங்கும் வெளிப்பட்டு வரும் எதிர்ப்புகள் எல்லாம்  2016 பிப்ரவரியில் எழுதிய கீழ்வரும் பதிவினை நினைவூட்டின.

'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று,  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? உடனே 'யார்? யார்? கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்'? (http://tamilsdirection.blogspot.com/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_15.html


ஆனால் செல்டன் பொல்லாக் அளவுக்கு நாகசாமி தமிழை கீழிறக்கவில்லை, என்ற நிலையிலும், செல்டன் பொல்லாக்கிற்கு வெளிப்படாத எதிர்ப்புகள் நாகசாமிக்கு  வெளிப்பட்டு வருகின்றன.


இன்றுள்ள சீரழிவிலிருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்பதில், சுயலாப நோக்கின்றி, உண்மையான சமூக அக்கறையுடன் தீர்வு நோக்கி, ஆக்கபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம்;

சீரழிவில் நம் ஒவ்வொருவருக்கும், அளவில் வேறுபட்டாலும், அதில் பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து:

உணர்ச்சிபூர்வ இரைச்சலை ஒதுக்கி, அறிவுபூர்வமாக தீர்வுகளை தேடும் நோக்கிலேயே, மேலே குறிப்பிட்ட ஆய்வுகளில் ஈடுபடுவதானது பலனளிக்கும். 
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு கேடானதா?  தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/)

அந்த திசையில் ஈ.வெ.ரா, நாகசாமி உள்ளிட்டு தமிழ் தொடர்பாக வெளிவந்து 'சர்ச்சைகளுக்கு' இடமளித்த கருத்துக்களை எல்லாம் அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில்;

கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு தி.மு.க தலைவராகியுள்ள ஸ்டாலினுக்கும், தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கும் இடையில் வெளிப்பட்டுள்ள கருத்து மோதலானது, உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி அறிவுபூர்வமாக பயணித்தால் மட்டுமே, அது தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படும் வாய்ப்புள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள தி.க அல்லது ஆர்.எஸ்.எஸ் போன்ற ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில், நாகசாமியின் தமிழ் தொடர்பான ஆய்வுகளை மறுக்கும் தொல்லியலாளர்களையும், தொடர்புடைய பிற துறைகளின் புலமையாளர்களையும் அழைத்து ஒரு ஆய்வரங்கம் நடத்தலாம். அதில் இடம் பெற்ற ய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடலாம். கூடுதலாக, அக்கட்டுரைகள் தொடர்பாக நாகசாமி விளக்கங்கள் தர முன்வந்தால், அவற்றையும் சேர்த்து அந்நூலில் வெளியிடுவதானது, நிச்சயமாக தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment