Monday, July 3, 2017

தமிழ்நாட்டு 'அறிவுஜீவி'களில், மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும்;


அந்நியமாகி, சருகாக உதிர்ந்து வருபவர்கள் இருக்கிறார்களா?


தமிழ்நாட்டு இந்துத்வா எதிர்ப்பாளர்களின் மிகுந்த பாராட்டுதலுக்கு உள்ளான நிகழ்கால அறிஞர் நோவாம் கோம்ஸ்கி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky  )

காரல் மார்க்ஸைப் போலவே, இந்தியா தொடர்பாக தவறான கருத்துக்களை கோம்ஸ்கி வெளிப்படுத்தியதை, உரிய சான்றுகளுடன் பதிவு செய்துள்ளேன். (‘Why Karl Marx on castes in India, Noam Chomsky on Nandigram and Amartya Sen on Modi, were wrong?’; http://veepandi.blogspot.sg/2017/06/why-karl-marx-on-castes-in-india-noam.html )

இவை போன்ற எனது விமர்சனங்களை மறுக்காமலும், ஏற்றுக் கொள்ளாமலும், புறக்கணித்து தமிழ்நாட்டில் பயணிக்கும் அறிவு ஜீவிகள் எல்லாம்;

திராவிடர்/திராவிட‌ இயக்க அறிவுஜீவிகளான அண்ணா, குத்தூசி குருசாமி, 'டார்பிடோ' ஜனார்த்தனம், உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்த, தவறான போக்கிலேயே பயணிக்கிறார்களா? என்ற விவாதமானது (http://tamilsdirection.blogspot.sg/2015/10/ );
இன்றைய தேவையாகும்.

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்சி திசையில் பயணிக்கச் செய்யும் வகையில், அந்த விவாதம் நடைபெறுவது நல்லது;

எவரையும் தனிப்பட்ட முறையில் கண்டிக்கும் நோக்கமின்றி.

ஆனால் காந்தி, நேரு போன்றவர்கள் எல்லாம் வெவ்வேறு அளவுகளிலான, சுயலாப நோக்கில், பொது வாழ்வில் பயணித்தவர்களா? என்ற ஆய்விற்கு, முகாந்திரம் இருக்கிறது, என்பதும் எனது கருத்தாகும்.

'பெரியார்' ஈ.வெ.ரா, கோட்சே போன்றவர்கள் எல்லாம் சுயலாப நோக்கமின்றி பொது வாழ்வில் பயணித்தவர்களாக, நான் கருதுகிறேன். ‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி வாழ்ந்தவர் கோட்சே என்பதும் எனது கருத்தாகும். (‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

'பெரியார்' ஈ.வெ.ரா, கோட்சே உள்ளிட்ட எவரையும் தனிப்பட்ட முறையில் கண்டிக்காமல்;

அத்தகையோரின் பொதுவாழ்வால் சமூகத்திற்கு விளைந்த சாதக பாதங்களை, பாரபட்சமின்றி, பாடம் கற்று முன்னேறும் நோக்கில் விமர்சித்தே, நான் பயணிக்கிறேன்.

1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறிய 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கினார்.

'சுயமரியாதை' தொடர்பாக அவர் வெளிப்படுத்திய, சுயசிந்தனையிலான 'பிரமிப்பூட்டும்' கருத்துக்கள் எல்லாம், அவரின் 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதல் இல்லாத காரணத்தாலும், 1944 முதல் நீதிக்கட்சியிலிருந்த புலமையாளர்களின் 'அறிவுபூர்வ கடிவாளம்' நீங்கி பயணித்ததாலும், அக்கருத்துக்களுடன், தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான‌ 'கழிவு நோய்கள்' கலந்து;

அதன் தொகுவிளைவாக;

தமிழ்நாட்டு பொதுவாழ்வானது, சுயமரியாதைக்கு கேடான, 'பொதுவாழ்வு வியாபாரிகளிடம்' சிக்கி, சீரழிந்து, இன்று அந்த சீரழிவும் முடியும் கட்டத்தில் இருப்பதை, ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2016/12/ )

தமிழ்மொழி, இலக்கியங்கள், வரலாறு தொடர்பாக காலனிய சூழ்ச்சியில் சிக்கி பயணித்த, ஈ.வெ.ரா அவர்களின் கவனத்திற்கு;

1944க்கு பின், ஈ.வெ.ரா அவர்களுக்கு இருந்த அறிவு வரை எல்லைகள் இல்லாத அண்ணா, குத்தூசி குருசாமி, 'டார்பிடோ' ஜனார்த்தனம், உள்ளிட்ட இன்னும் பலரில் எவராவது, எச்சரித்து, அந்த தவறான திசையிலிருந்து நல்வழிப் படுத்த முயற்சித்தார்களா? இல்லையா? அத்தகைய முயற்சியின்றி, 'தமிழ் உணர்வு' மற்றும் 'தமிழின உணர்வு' என்று 'உணர்ச்சிபூர்வ' போக்கினை, ஊதிப் பெருக்க வைத்தது சரியா? என்ற ஆய்வினை, பொதுநல நோக்கில் மேற்கொள்ள வேண்டிய காலக்கட்டம் இதுவாகும்.

எனது விமர்சனங்களை மறுக்காமலும், ஏற்றுக் கொள்ளாமலும், புறக்கணித்து தமிழ்நாட்டில் பயணிக்கும் 'இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு' அறிவு ஜீவிகள் எல்லாம், அந்த போக்கின் தொடர்ச்சியாகவே இன்றும் பயணிக்கிறார்களா?

அந்த போக்கானது, தமிழ்நாட்டில் முளைவிட்டு வளர்ந்த சமூக செயல்நுட்பம் காரணமாகவே, தமிழ்நாட்டில் இன்று வாழும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதானது, அவர்களை அவமதிப்பதாகும், என்று அந்தந்த கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் கருதும் அளவுக்கு, உலகிலேயே தனித்துவமான (Unique) 'வழிபாட்டுப் புழுதிப் புயலில்' தமிழ்நாடு சிக்கியுள்ளது. ‘மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, 'பெரியார்' ஈ.வெ.ரா, அம்பேத்கார் முதல் பாரதி, முத்துராமலிங்கத் தேவர் வரை அந்த வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்காதத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாடு உள்ளது.’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.htmlஅந்த வழிபாட்டுப் புழுதிப் புயலே, அந்த தலைவர்களை எல்லாம், இன்றைய மாணவர்களிடமிருந்தும், படித்த இளைஞர்களிடமிருந்தும், அந்நியமாக்கி வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (குறிப்பு கீழே) 

மேலே குறிப்பிட்ட 'அறிவுஜீவிகளில்' சுயலாப நோக்கின்றி பயணிப்பவர்கள் எல்லாம்;

இன்றைய மாணவர்களிடமிருந்தும் இளைஞர்களிடமிருந்தும் அந்நியமாகி, சருகாக உதிர்வதை, தவிர்க்க முடியாது;

தமிழ் மட்டுமே தெரிந்து, அதிலும் ஆழ்ந்த புலமையின்றி, எண்ணிக்கையில் 'அதிவேகமாக' ( தமிழ் இதழ்களையும், புத்தகங்களையும் விலைக்கு வாங்கி படிப்பவர்களின் எண்ணிக்கை போல)  குறைந்து வரும், உணர்ச்சிபூர்வ அரை தற்குறிகளை (semi-literates)  நம்பி, அந்த 'அறிவுஜீவிகளில்',  பயணிப்பவர்கள் எல்லாம்,  முன்னதாகவே சருகாகி உதிரும் போக்கில், சிக்கியிருந்தால் வியப்பில்லை.

“வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வருவது போலவே, கடந்த சுமார் 200 வருடங்களாக, உலகின் மீது செல்வாக்கு செலுத்தி வந்த ஐரோப்பாவும், அமெரிக்காவும் செல்வாக்கும் முடியும் கட்டத்தை எட்டி விட்டன. அந்த செல்வாக்கின் பின்பலத்தில், தமிழ்நாட்டில் அரங்கேறிய 'திராவிடர்' வரலாற்றுப் பிறழ்வும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து அந்நியமாகி, முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.(http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html )

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் எல்லாம், 'உணர்ச்சிபூர்வ திராவிட நோயில்' சிக்கி, பயணிக்க  முயற்சித்தாலும், அந்த நோயே முடிவுக்கு வரும் கட்டத்தில் இருப்பதால், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி தடுக்க முடியாததாகி விட்டது. 'தமிழ்வழிக்கல்வியின்' (எனவே தமிழின்) மீட்சிக்கு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட 'அஞ்சி', 'இந்துத்வா எதிர்ப்பில்' உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், 'சருகாகி' உதிர்ந்து போவதும், இயற்கையின் போக்கே ஆகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2017/05/blog-post.html )

தமிழ்வழிக்கல்வியும் (எனவே தமிழும்) மீளும் என்ற நம்பிக்கையை;

ஆர்.எஸ்.எஸும், மோடி அரசும் ஏற்படுத்தி உள்ளார்கள். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

அந்த சாதக சூழலை அடையாளம் கண்டு;

அந்நிய சூழ்ச்சி வலையிலிருந்தும், பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்தும், சாத்தியமற்ற உணர்ச்சிபூர்வ 'பிரிவினை' போக்குகளிலிருந்தும், 'விடுதலை' பெற்று;

சுயலாப நோக்கின்றி, தாய்மொழி தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் நலன்களை, முன்னிறுத்தும் கட்சி உருவாகாத நிலையில்;

தமிழ்நாட்டில் 'மோடி எதிர்ப்பு' என்பது 'ஊழல் வளர்ப்பு' என்பதுடன், 'அரசியல் அமாவாசை சமூக செயல்நுட்பம்' மூலம் ஒன்றி, நம்ப முடியாத அளவுக்கு பலகீனமாகி வருகிறது.(http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html) ; எதிர்காலத்தில் பல அரசியல் நையாண்டி திரைப்படங்களுக்கான கதைகளும், காட்சிகளும் முன்னோட்டமாக அரங்கேறிவரும் வகையில்.

அத்தகைய சூழலில், தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸிலும், பா.ஜ‌.கவிலும் வெளிப்படும் முரண்பாடுகளை கூர்ந்து கவனித்து, மேற்குறிப்பிட்ட நலன்கள் மீது உண்மையான ஈடுபாடு கொண்ட பிரிவினரை அடையாளம் கண்டு, ஆதரித்து பயணிப்பதே புத்திசாலித்தனமாகும்; சமூக மாற்றத்தில் வளரும்/வீழும் முரண்பாடுகள் பற்றிய சரியான புரிதல் நோக்கில். (‘இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?; http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும்,  'இந்துத்வா எதிர்ப்பு' வேடம் போடுபவர்கள் உள்ளிட்ட, பேராசிரியர்களையும், துணைவேந்தர்களையும் கேலிப்பொருளாக கருதுவதை, குறை சொல்ல முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

‘பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகளில், கீழ்வரும் முக்கிய தகவலானது, இடம் பெற்றதாக தெரியவில்லை. (http://www.frontline.in/static/html/fl2016/stories/20030815007913400.htm  )

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர் அந்த 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. (http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும்.

'இந்துத்வா எதிர்ப்பு' வேடம் போடுபவர்கள் உள்ளிட்ட, பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக் ‘கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும்,  பேராசிரியர்களையும், துணைவேந்தர்களையும் கேலிப்பொருளாக கருதுவதை,  குறை சொல்ல முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடும் போக்கில் தமிழ்நாடு சிக்கியதற்கு;

1967க்குப்பின் அரங்கேறிய 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில்;

'அறிவு விபச்சார' கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், சுயலாப நோக்கில், 'உணர்ச்சிபூர்வமாக' ஊதி வளர்த்த, 'துதி' சமூக சூழலே முக்கிய காரணமாகும் என்பதே:

'திருச்சி பெரியார் மையம்' மூலம், எனது சமூகவியல் ஆய்வு குவியத்திற்கு வந்த 'பெரியார் சமூக கிருமிகள்' மூலம், நான் கண்டுபிடித்த, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வழிகளில் ஒன்றாகும்.

'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், பேராசிரியர்களும், இல்லாத சமூக வட்டத்தில் வாழ்வது என்பதானது;

'தவிர்க்க முடியாத' இழப்புகளை ஏற்படுத்தும் என்பதும்;

அந்த இழப்புகளை விரும்பி ஏற்று, 'பாராட்டு, புகழ்' ஏக்கமின்றி, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில் சிக்காமல், தகுதியான நபர்களுக்கும், அரசு/அரசு உதவி தமிழ்வழிக்கல்வி நிறுவனங்களுக்கும், நம்மால் இயன்ற உதவிகளை விளம்பரமின்றி வழங்கி,  உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்ந்து, 'நம்ப முடியாத' சாதனைகளை படைக்க முடியும், என்பதும்;

எனது அனுபவமாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html &     http://drvee.in/ )

தமது சொந்த வாழ்வில் 'இழிவான' சமரசங்களுடன், பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன்கள் பெற்றுக்கொண்டு, மீடியா வெளிச்சத்துடன் முற்போக்காக வலம் வருபவர்கள் 'சாயமானது', இன்றைய மாணவர்களிடமும், படித்த இளைஞர்களிடமும் 'வெளுக்க' தொடங்கி விட்டது. தமது சொல்லுக்கும், வாழும் வாழ்வுக்கும், இடையிலான 'முரண்பாடுகளை', தமது 'எடுபிடி' வலைப்பின்னலின் துணையுடன், இனி மறைத்து வாழ்வதும், 'டிஜிட்டல் யுகத்தில்' கடினமே.


தமது சமூக வட்டத்தில் அநீதிகளையும், அயோக்கியர்களையும் சகித்துக் கொண்டு;

தமிழ்நாட்டு அரசியல்/உலக‌  கொள்ளைக்காரர்களில் ஒரு சாராரின் எடுபிடியாக இருந்து கொண்டு, மறுசாராரின் ஊழல்களையும், உலக அநீதிகளையும் எதிர்க்கும் 'பொதுவாழ்வு வியாபாரிகளாக' வாழாமல்;

இழப்புகளை சந்தித்து, சுயலாப நோக்கற்ற‌ பொது நோக்கில் பயணிக்கும் 'அறிவு ஜீவிகள்' எல்லாம், வணங்கத்தக்கவர்களே ஆவர்.

அத்தகையோரின் வளர்ச்சியும், எழுச்சியும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதால், பொதுவாழ்வு வியாபாரத்திற்கு ஆப்பு அடிக்கும் காலம் நெருங்கி வருகிறது.   

இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் எப்படி இருக்கிறார்கள்? என்ற புரிதலுடன் நான் கீழ்வருமாறு பயணிக்கிறேன்.

‘வெறும் பேச்சும், எழுத்தும், அதிலும் 50 வயதைத் தாண்டியவர்களிடம் 'அறிவுரையாக' வெளிப்பட்டால், அதை ஏளனமாக பார்க்கும் போக்கில் தான், அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலையாகும். எனவே அவர்களுக்கு, அதை செயல் மூலம் தெரிவிக்கும் முயற்சியிலும், நான் ஈடுபட்டுள்ளேன்.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில் நான் மேற்கொண்ட ஆய்வுகளானது, இசைத் தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information technology) புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு நானே எதிர்பார்த்திராத‌ அதிசயம் நிகழ்ந்து வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

திருச்சி என்.ஐ.டி, சாஸ்திரா பல்கலைக்கழகம் மூலம் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் தொடர்பில் உள்ள எனக்கு, மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

அதிலும் கிராமப் பின்னணியில், பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று (ஆய்வுக்கான புலனறிவு -cognitive skills- அதிகம் உள்ளதால்  http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ), இன்று ஐ.ஐ.டி, என்.ஐ.டி, சாஸ்திரா போன்ற உயர்தர நிறுவனங்களில் பயின்றவர்கள்/பயில்பவர்கள் மீது, மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; (http://tamilsdirection.blogspot.sg/2017/06/next-phase-3.html

குறிப்பு:

'பெரியார்' இயக்கத்தில் இருந்து, 'அந்த' புயலில் சிக்கி, தி.க. தலைவர் கி.வீரமணியை நான் 'ஆசிரியர்' என்று அழைத்த காலக்கட்டத்தில், 'தீவிர' 'பெரியார்' எதிர்ப்பாளராகவும், எனக்கு நெருங்கிய நண்பராகவும், இருந்த பேரா.அ.மார்க்ஸ் நிகழ்காலத்தில், அதே 'புயலில்' சிக்கி, பயணிப்பதானது, நம்பமுடியாத வரலாற்று நகைச்சுவையாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/04/2.html )


‘கருத்து வேறுபாடுகளை மதித்து அறிவுபூர்வமாக விவாதிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் 'மற்றவர் பார்வை அடிப்படையிலான உணர்வுகள்'(Empathy )  பற்றிய புரிதலைச் செயல்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் முஸ்லீம் மற்றும் பெரியாரியல் அறிஞர்களும், முஸ்லீம் மற்றும் பெரியார் அமைப்புகளின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்துத்வா அறிஞர்களும் தமிழ்நாட்டில் உரையாற்றி, அவரவர் நிலைப்பாடுகளை மதித்து விவாதிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். சாதி மோதல்களில் எதிரெதிர் அணிகளில் உள்ள அந்தந்த சாதிகளைச் சேர்ந்த அறிஞர்கள் சந்தித்து,  அந்த முறையில் விவாதிக்க வேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

No comments:

Post a Comment