Thursday, March 7, 2019

சிங்கப்பூரிலிருந்து த‌மிழ் ஆசிரியர்கள்? (2)


தமிழ்நாட்டில் மைக்ரோஉலகம் கோவணம் கட்டியவர்கள் ஊராகவும்,

 

மேக்ரோஉலகமானது அம்மணங்களின் ஊராகவும்?

 



தமிழ்வழிக் கல்விக்குத் தமிழர் குடும்பங்கள் மாறுவதற்கு முன் அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கத் தமிழ்வழி ஆசியர்கள் தேவை அல்லவா?’ என்ற பின்னூட்டம் தொடர்பாக;

'தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில அசிரியர்களும் சிங்கப்பூரில் இருந்து வரத் தொடங்கலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் விளம்பரங்களில், தமது பள்ளியில் சிங்கப்பூர் ஆசிரியர்கள் பணிபுரிவது முக்கியத்துவம் பெற்றாலும் வியப்பில்லை.' என்ற விளக்கத்தினை ஏற்கனவே பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post_6.html )

அதைத் தொடர்ந்துஅரசியலும் சமூகமும் அவலப்பட்டு இருக்கையில் தனி மனிதன் நேர்மை பலனளிக்குமா? அதனால் தான் நேர்மை ஒரு முட்டாள்தனம் ஆகிறது. அம்மணங்களின் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி ஆகிறான்.  இதற்காக ஒரு இயக்கம் தோன்றினால் ................  அதில் இணைந்து தலைவனாகி ஆதாயம் அடைய அநேகர் வருவர், இயக்கம் ஏமாளி ஆகும்.’


என்ற பின்னூட்டம் தொடர்பாக இங்கு பார்ப்போம்.


'அரசியலும் சமூகமும் அவலப்பட்டு இருக்கையில் தனி மனிதன் நேர்மை பலனளிக்குமா? அதனால் தான் நேர்மை ஒரு முட்டாள்தனம் ஆகிறது' என்ற கருத்தானது;

'அந்த' தனி மனிதர் தன்மானத்துடன் தமிழ்நாட்டில் மேக்ரோ உலகத்தில் வாழும் போது, அந்தகோமாளி’ விபத்து நேரிடலாம்.

மேக்ரோஉலகத்தில் பணம் சம்பாதிக்க, எவர் காலிலும் விழவும், விழுந்த காலையே வாறவும், அரசு மற்றும் நீதித்துறைகளில் ஊழல் வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அல்லது அத்தகைய ஊழலுக்கு தரகர்களாகவும், இன்னும் அது போன்ற வழிகளில்;

தமிழ்நாட்டில் 'தன்மானம்' என்ற கோவணம் இழந்து வாழ்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது போன்ற மனிதர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக மாநில அளவில் செல்வாக்குள்ள மேக்ரோ உலகில் வாழ்வதை ஒரு முறையான ஆய்வு வெளிப்படுத்தினால் வியப்பில்லை.

மேக்ரோ உலகில் வாழும் கோவணம் இழந்த அதீத செல்வாக்குள்ள நபர்களுடன் 'எந்த'(?) வழியிலாவது தொடர்பு கொண்டு பணம் சம்பாதிக்க, மைக்ரோஉலகிலும் 'தன்மானம்' என்ற கோவணத்தை இழப்பதற்கு தயாரானவர்களும் இருக்கிறார்கள். அந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்களை நான் ஆய்வுக்கு உட்படுத்தி கண்டுபிடித்த 'வெற்றிக்கான இரகசியங்களையும்' ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்

'தன்மானம்' என்ற கோவணத்தை இழக்காமல், தம்மால் முடிந்த நேர்மையான வழிகளில் பணம் ஈட்டி வாழ்பவர்கள் எல்லாம், ஒப்பீட்டளவில் அந்தந்த கிராமங்களில், ஊர்களில், மேலே குறிப்பிட்ட 'கோவணம்' இழந்த மேக்ரோ உலக மனிதர்களுடன் தொடர்பின்றி மைக்ரோ உலகில் வாழ்வதையும் அதே முறையான ஆய்வு வெளிப்படுத்தினாலும் வியப்பில்லை.


வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய லாப நட்ட கணக்குகளை எல்லாம் உற்றம், சுற்றம், நட்பு உள்ளிட்ட மகத்துவமான மனித உறவுககளில் நுழைத்து 'சுயலாபக் கள்வர்களாக' வாழ்வதானது, தன்மானம் என்ற கோமணம் இழந்தவர்களிடம் வெளிப்படும் 'தனித்துவமான' (Unique) பண்பாகும்.

மைக்ரோ உலகில் 'தன்மானம்' என்ற கோவணத்தை இழக்காமல் வாழ்பவர்கள் எல்லாம் தமக்கு தெரிந்து மேலே குறிப்பிட்டவாறு கோவணம் இழந்து மேக்ரோ உலகில் 'அதிவேகப் பணக்காரராக' வலம் வருபவர்களை எல்லாம் ஏளனமாக தமக்குள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். அவர்களில் பலர் ஆதாயத்திற்காகவே தம்மை புகழ்வது தெரியாமல், அந்த போதையில் 'பெருமையுடன்'(?) அம்மணமாக வாழ்பவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறு கேலி, கிண்டல் செய்வதில் முன்னணியில் இருப்பவர்களும் எனது கவனத்தை ஈர்த்துள்ளார்கள். தன்மானம் என்ற கோவணத்தை இழக்கும் முழு துணிச்சலின்றி அரைகுறையாக இழந்து, மேலே குறிப்பிட்ட 'அதிவேகப்பணக்காரர்களோடு ஒட்டி' அவ்வப்போது பலன்கள் அனுபவித்துக் கொண்டு, அவர்கள் மீது தமக்குள்ள பொறாமையால் அவர்கள் பற்றி தமக்கு தெரிந்த விபரங்களையும் கேலி கிண்டலுக்கு உட்படுத்தி முன்னணியில் இருப்பவர்களும் அவர்களே ஆவார்கள். அத்தகையோரையும் அடையாளம் கண்டவுடன், எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றியே வாழ்கிறேன். தன்மானத்துடன் வாழும் மைக்ரோ உலக தொடர்புகளை மிகவும் மதித்து பேணி, தன்மானம்இழந்தமேக்ரோ உலக தொடர்புகளை எல்லாம் விரும்பி குறைத்து பயணிக்கும் என்னைப் போன்றவர்கள் கீழ்வருவது போன்ற அனுபவங்களையும் பெற்று வருகிறோம்.

தினமும் காலையில் விழித்தது முதல், இரவு தூங்கத் தொடங்கும் வரை, தமது குடும்பம், நட்பு உள்ளிட்டு அனைத்து மனித உறவுகளிலும், யார் யார் வசதியில் செல்வாக்கில் வளர்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசதியானவர்களுக்கு 'எப்படி வாலாட்டி' நெருக்கமாகி 'தாமும் வளர்வது' என்பதையே வாழ்வின் 'இலட்சியமாகி' கருதி வாழ்பவர்களில்,- பெரியார் கொள்கைப் பற்றில் நான் 'ஏமாந்து' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததால் -  எனது சமூக வட்டத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களில் சிலரும் என்னை 'வாழத் தெரியாத முட்டாளாக'க் கருதி, தமக்குள் எள்ளி நகையாடியதை நான் அறிவேன். என்னிடம் அதை நேரில் வெளிப்படுத்தியவர்களும் அதில் அடக்கம். பெரியார் இயக்க தொடர்புக்கு முன்னும், விலகிய பின்னும் அத்தகையோர் எனது சமூக வட்டத்தில் இடம் பெற்றதில்லை. அதே நேரத்தில், பெரியார் இயக்க தொடர்பு காலத்தில் மிகவும் மதித்துப் போற்றத்தக்கவர்களும் எனக்கு நண்பர்களாகக் கிடைத்து, இன்றுவரை தொடர்வதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அப்படி என்னை முட்டாளாகக் கருதி வாழ்ந்தவர்களில் ஒரு நபருக்கு, இந்திய அளவில் 'மிக முக்கியமானவர் என் நண்பர்' என்று தெரிந்ததும், என்னுடன் இருந்து, தொடர்பற்ற நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் 'வெறி'யுடன் என்னைத் தேடி வந்து சந்தித்த அனுபவத்தை, நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்

மைக்ரோ உலகத்தில் மேலே குறிப்பிட்டது போன்ற அனுபவங்கள் எல்லாம் என்னைப் போன்று வாழும் எனது நண்பர்களுக்கும் கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் எனக்கு தெரியாமல் இன்னும் பலருக்கும் கிடைத்து வரலாம்.

நான் சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, பாராட்டு, புகழ், செல்வாக்கு போன்றவற்றிற்கு ஏங்கி, ஊடக வெளிச்சத்துடன் மேக்ரோ உலகில் பயணிக்கத் தொடங்கும் போது, மேக்ரோஉலகமான அம்மணங்களின் ஊரில் 'கோவணம் கட்டிய கோமாளி ஆக' தான் நான் துவக்கத்தில் காட்சி தருவேன். அந்த போக்கில் நான் பெரும் வெற்றிகளுக்கு ஏற்ப, எனது 'கோவணமானது' எனக்கு தெரியாமலேயே கழன்று விழுந்து விடும். அவ்வாறு மேக்ரோஉலகில் நுழைந்தவர்களுக்கு நடந்ததையும், நடப்பதையும் நான் அறிவேன்

நாட்டின் நலனுக்காக மேக்ரோ உலகில் 'கோவணத்துடன்' முதல்வர் பதவியில் பிரமிக்கும் வகையில் பங்களித்து, 'கோவணம்' கழன்று விழுவதற்கு வாய்ப்பு வழங்காமல், தாமாகவே பதவி விலகி, நமக்கு சிறந்த முன்னுதாரணமாக வெளிப்பட்டவர் ஓமாந்தூரார் ஆவார்; பதவி விலகிய பின் மைக்ரோ உலகில் திரும்பி மிகுந்த மனநிறைவான, சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் வாழ்ந்து மறைந்தவரும் ஆவார்

தமிழ்நாட்டில் மைக்ரோ உலகமானது, மேக்ரோ உலகத்திலிருந்து 'அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக துண்டிக்கப்பட்டு பயணித்து வருவதையும்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

ஒரு சமூகத்தில் புதிதாக தோன்றும் இயக்கமானது, சுயலாபக்கள்வர்களின் தலைமையில் சிக்கி, அதன் விளைவாக 'இயக்கம் ஏமாளி' ஆவதானது மக்களின் ஏமாளித்தனத்தினைப் பொறுத்ததாகும். 'உணர்ச்சிபூர்வ'(?) தமிழ் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சிக்கியதமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனம் குறைந்ததன் காரணமாகவே, ஆதாய அரசியலில் கட்சிகள் பயணிப்பது வளர்ந்து, திருமங்கலம் இடைத் தேர்தலில் 'கொள்ளையில் தமது பங்கு' என்ற வாக்காளர்கள் வசூலித்து, 'அந்த' போக்கில் நம்பிக்கையுடன் பயணித்த தி.மு.-வை அடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட ஆக முடியாத அளவுக்கு 'எதிர்பாராத' தோல்வியைத் தந்த புத்திசாலிகள் தமிழ்நாட்டு மக்கள் ஆவார்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு 'சசிகலா' படத்தைத் தவிர்க்கும் அளவுக்கு தினகரனை 'அச்சுறுத்தி', 'வசூலித்து', திமு.க-வை டெபாசீட் இழக்க வைத்தார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு., ...தி.மு. கூட்டணியின்றி தனித்து 2 தொகுதிகளில் பா.. கூட்டணி வெற்றி பெற்றது. அதன் பின்னும் 'திராவிட' கட்சிகளின் நோய்களில் இருந்து விடுபடாமல் பா.. பயணித்தற்கு தண்டனையாக‌,  அதே பா..-வை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாக் கட்சியாக்கியவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

மேக்ரோஉலகில் எல்லா கட்சிகளிலும் செல்வாக்குடன் வலம் வரும் அரசியல் வாரிசுகள் எல்லாம் மைக்ரோஉலகில் எந்த அளவுக்கு இழிவாக பார்க்கப்படுகிறார்கள்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம். தம்மிடம் ஆதாயத்திற்க்காக சூழ்ந்துள்ள வட்டத்தைத் தாண்டி, அந்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, 'அந்த' வாரிசுகளும் 'அந்த' ஆதாய வட்டத்தில் சிறைப்பட்டிருப்பதும் இயற்கையின் வினோதம் ஆகும். எனவே அடுத்து வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் இன்னும் 'அதிர்ச்சிதரும்' முடிவுகள் வெளிப்பட்டால் வியப்பில்லை.
 
தமிழ்நாட்டில் மைக்ரோ உலகமானது கோவணங்களின் ஊராகி வருவதால்;

மேக்ரோஉலக அம்மணங்களின் ஊரில் செல்வாக்குடன் வலம் வருபவர்கள் எல்லாம், அடுத்து வர உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மைக்ரோஉலகமான கிராமங்களுக்கும், நகரங்களில் (பெருமளவில் வாக்களிக்கும்) சாமான்யர் வாழும் பகுதிகளிலுக்கும், வாக்கு 'வாங்க'(?) வரும் சமயங்களில் எந்த அளவுக்கு கோமாளிகளாக வெளிப்படுகிறார்கள்? என்று 'ரசிக்கும்' ஆர்வமுள்ளவர்கள் சிரமத்தைப் பார்க்காமல் அந்த முயற்சிகளில் ஈடுபடலாம். 

தமது பணி, வசதி வாய்ப்புகள் காரணமாக மேக்ரோஉலக அம்மணமான மனிதர்களையே, காலையில் விழித்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை சந்திக்கும் 'தண்டனைகளுக்கு' உள்ளானவர்கள் எல்லாம், மேக்ரோஉலக அம்மணங்களின் ஊரில் சிறைப்பட்ட கைதிகள் போலவே சாகும் வரை வாழ நேரிடும்.

அவ்வாறு சிறைக்கைதியாவதைத் தவிர்க்கும் வழியாக, எளிமையான வாழ்க்கையும், பாராட்டு, புகழ் போன்றவை நம்மைத் தேடி வந்தாலும் தவிர்த்து வாழ்வதும், அம்மணங்களாக வாழும் மனிதர்களின் சந்திப்புகளை குறைப்பதோடு, தவிர்க்கமுடியாத சந்திப்புகளின் கால அளவுகளையும் குறைக்க உதவும். அந்த போக்கில் நாம் மைக்ரோஉலகில் பிரமிக்கும் வகையில் வாழ்ந்து வரும் மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கூடும்;

என்பதும் எனது அனுபவங்கள் ஆகும்.

ஆதாய அரசியல் ஒழியும் வரை, மேக்ரோ உலகில் உள்ளஅரசியல் செல்லாக்காசு பெரிசுகளை' ஓரங்கட்ட முடியாது. அரசு மற்றும் நீதி மன்றங்களில் உள்ள கறுப்பு ஆடுகளை ஒழிக்காமல், ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிக்காமல், ஆதாய அரசியலை ஒழிக்க முடியாது. ஆதாய அரசியல் ஒழியாதது வரை, அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயிரிழந்த உதயகுமார், திருச்சி கிளைவ் விடுதியில் காவல் துறைக் கண்மூடித் தாக்குதலில் கை, கால் உடைந்த மாணவர்கள், அச்சுறுத்தலுக்கும் கொலைக்கும் இலக்காகி சொத்தை இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், சத்யம் தியேட்டர்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர், நிர்மலாதேவியிடம் சிக்கிய மாணவிகள், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, போன்ற இன்னும் பல எண்ணிலடங்காத கொடுமைகளை நேற்றும், இன்றும், நாளையும் சந்திப்பதிலிருந்து தமிழ்நாடு தப்பிக்க முடியாது. 'தன்மானம்' என்ற கோமணம் இழந்து, ஊழலுடனும், ஆதாய அரசியலுடனும் ஒட்டிப் பயணித்தவர்களும், பயணிப்பவர்களும் மேற்குறிப்பிட்ட கொடுமைகளின் 'கூட்டுப்பங்காளி குற்றவாளிகள்' ஆவார்கள். 'அந்த' பங்காளிகளின் சண்டையில் குற்றங்கள் வெளிப்பட்டு, 'பேரங்கள்' மூலமாக குற்றவாளிகள் தப்பித்து, காலப்போக்கில் மக்களை அந்த கொடுமைகளை எல்லாம் பல வழிகளில் (உதயகுமார் முதல் பொள்ளாச்சி வரை, அடுத்து நாளை நடப்பவை உள்ளிட்டு) மறக்கச் செய்யும் 'சமூகக் கிருமிகளும்' ஆவார்கள்.சோமசுந்தர பாரதியார் (https://ta.wikipedia.org/wiki/ ) சுட்டிக்காட்டிய 'தன்மானம்' இன்றி, ஈ.வெ.ரா முன்னெடுத்த 'சுயமரியாதை' இயக்கமானது '1925 முதல் சாண் ஏறி, 1944 முதல் முழம் சறுக்கின' கதையானதன் விளைவுகளா இந்த கொடுமைகள்? என்று விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

எனவே ஆதாய அரசியல் ஒழியும் வரை, மேக்ரோ உலகமானது அம்மணங்களின் ஊராகவே நீடிக்கும். மக்கள் ஆதரவில் மேக்ரோஉலகில் ஒரு இயக்கம் தோன்ற வழியில்லை

ஆனால் ஆதாயத்திற்கு இடமின்றி சொந்த காசை, சொந்த உழைப்பை செலவு செய்பவர்கள் முயற்சியில், மைக்ரோ உலகில் தோன்றும் இயக்கம் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் காலம் கனிந்து வருகிறது. 'அதிவேகப் பணக்காரர்கள்' மைக்ரோ உலகில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. மக்களின் உதவியுடன் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் செயல்படும் அரசுப்பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. அர்ப்பணிப்போடு மனித தெய்வங்களாக பணியாற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  சுயலாப நோக்கின்றி வாழ்பவர்களுக்கு மைக்ரோஉலகில் செல்வாக்கானது நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஊழலையும், அரசியல் கொள்ளையர்களையும், அவர்களின் அடிவருடி அறிவுஜீவிகளையும், நிர்மூலமாக்கும் 'சமூக சுனாமி' வரப் போவதை உணர்த்தும் முன் அபாயஅறிகுறிகளாகவே (Warning signals), இவை எல்லாம் வெளிப்பட்டு வருகின்றன;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். எனவே தமிழ்வழிக்கல்வியின் (எனவே) தமிழின் மீட்சி தடுக்கமுடியாததாகி விடும்.

No comments:

Post a Comment