Tuesday, January 24, 2017

சாதி, மத உயர்வு தாழ்வுகளை ஒழிப்பதில்;


ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி வெளிப்படுத்தியுள்ள பாடம்


தமிழ்நாட்டில் எந்த பொதுப் பிரச்சினையாக இருந்தாலும், அந்த பிரச்சினையில் மட்டுமே ஒருமித்த கருத்துடையவர்கள் எல்லாம், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்டு போராடினால், வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதையும்;

தமது நிலைப்பாட்டிற்கு மக்களை திரட்ட முடியாதவர்கள் எல்லாம், அந்த ஒற்றுமையான போராட்டத்தில் ஊடுருவி, அப்போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்தால், வெற்றி பெற முடியாது என்பதையும்;

அந்த அமைப்புகள் இனி தமது அடையாளத்துடன், அது போன்ற போராட்டங்களில் நுழைய முயன்றால், ஒதுக்கப்படுவார்களா? என்பது அடுத்து வரும் போராட்டம் மூலம் தெரியும் என்பதையும்;

உணர்த்தியுள்ள போராட்டம், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் ஆகும். 

‘அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த 'ஜல்லிக்கட்டு மீட்சி' போராட்டமானது, 1965 போராட்டத்திற்கு எதிரான திசையில், 1938ஐ நோக்கி, 1938 போராட்ட திசையில், அதனையும் விஞ்சி, சாதனை படைத்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/1938-1965.html )

அவ்வாறு சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, 'ஒற்றுமையுடன்' போராடி, வெற்றி பெற்று, நடைபெறும், 'ஜல்லிக்கட்டில்';

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது போல, 'ஜல்லிக்கட்டில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்தால்', அந்த ஏற்ற தாழ்வு இருப்பதை, அகற்றுவதற்கும்,

மேலே குறிப்பிட்ட 'ஒற்றுமையை' பயன்படுத்துவதே புத்திசாலித் தனமாகும்.

மாறாக, அதற்காக, "ஜல்லிக்கட்டு த‌டுக்கப்படவேண்டும்'' என்று அவர் கூறுவதையும், 'உணர்ச்சிபூர்வ வெளிப்பாடாக'வே கருத முடியும்; அவருக்கு இந்தியாவில் பிரிவினையைத் தூண்டும் வெளிநாட்டு நிதி உதவி  'பீட்டா' போன்ற‌ அமைப்புகளின் தூண்டுதல் இல்லை என்ற நம்பிக்கையில். அதாவது ஒரு தனிமனிதர் வெளிப்படுத்தும் ஒரு கருத்திற்கான காரணம் சரியாக இருந்து, தீர்வு தவறாக இருந்தால், அந்த காரணம் தான் அதிக முக்கியத்துவம் பெறும், தவறான தீர்வுக்கு ஆதரவற்ற நிலையில். 

அது போன்ற உணர்ச்சிபூர்வ' வெளிப்படுகளை, சமூக 'சிக்னலாக' (Social signal) கருதி, மேலே குறிப்பிட்ட ஆக்கபூர்வ திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் அதனை கண்டிக்கும் ஆற்றல்/நேர விரயத்தில் ஈடுபட மாட்டார்கள். அது மட்டுமல்ல, அந்த கருத்தை சொன்னதற்காக, கிருஷ்ணசாமி மற்ற சமூக பிரச்சினைகளில் எடுத்திருந்த நிலைப்பாடுகளை விவாதித்து, மேலே குறிப்பிட்ட ஒற்றுமையான முயற்சி திசையிலிருந்து, திரும்பும் தவறையும் செய்ய மாட்டார்கள்.

ஒருவரின் நிலைப்பாடுகள் என்பவை விவாதத்தின் கருப்பொருளாகும் போது தான், அவரின் நிலைப்பாடுகள் அனைத்தையும், விதி விலக்கின்றி விவாத்திற்கு உட்படுத்த வேண்டும்.

அந்த விவாதத்திலும், அவரை 'எடை போடும்' முயற்சியும், அந்த விவாதத்திற்கு தொடர்பில்லாததாகும். அவரை 'எடை போடுவது' என்பதானது, கருப்பொருளாகும் போது தான், அவரின் தனிப்பட்ட நிலையில் தொடர்புள்ள தகவல்கள் அனைத்தையும், விதி விலக்கின்றி விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். 

இந்த மூன்று எல்லைக் கோடுகளையும் தாண்டி நடைபெறும் விவாதங்கள் எல்லாம், அறிவுபூர்வ போக்கிலிருந்து தடம் புரண்டு, உணர்ச்சி பூர்வ போக்கில் சிக்க வைத்து விடும்.

சாதி, மத  ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதிலும், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில், ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது, என்பதை 'வைக்கம் போராட்டம்' மூலம், ஈ.வெ.ரா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

வைக்கம் போராட்டத்தில் கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கும் உரிமை மட்டுமே அப்போராட்டத்தின் வெற்றியில் கிடைத்ததால், கோவில் நுழைவு கோரிக்கை நோக்கில், அப்போராட்டத்தை இழிவு படுத்த முடியுமா?

எந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டுமானால்;

'வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
 துணை வலியும் தூக்கிச் செயல்' திருக்குறள் 471

நான் கல்லூரியில் பேராசிரியராக, 'பெரியார்' இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற காலத்தில், எனது மாணவர் ஒருவர் 'பெரியார்' கொள்கையில் ஈர்க்கப்பட்டு, தி.க மாணவரானார். 

1980களில், ஒரு முறை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது, 'கள்ளர்' சாதியைச் சேர்ந்த அவர், தனது கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களுடன் தொடர்பின்றி ஒதுங்கி இருந்ததை, விவாதத்தில் அறிந்தேன். அந்த மாணவர், “கல்லூரியில் எனக்கு தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திற்கு,  அவர்கள் வீட்டிற்கு நான் போய் வருவேன். ஆனால் எனது கிராமத்தில், நான் அதை நடைமுறைப் படுத்தினால், என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். பின் நான் எப்படி, படித்து உருப்பட முடியும்?" என்று அவர், தனது நிலையை தெளிவு படுத்தினார்.

ஆனால் அது போல் 'பெரியார்' இயக்கத்தில் சேர்ந்து, படித்து, நல்ல வேலையில்/ சுயசம்பாத்தியத்தில் இருந்து கொண்டு, 2ஆவது, 3ஆவது, 4ஆவது தலைமுறையாக தமது சாதிக்குள்ளேயே எல்லா திருமணங்களையும் நடத்திக் கொண்டு, 'கறுப்பு சட்டையுடன்', 'சாதி ஒழிப்பு' 'பெரியார்' கொள்கையாளராக, தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களை, 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்திலேயே, நான் மதித்து, என்னை நெருங்க அனுமதித்ததில்லை. 

பொதுவாக நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும் உள்ள தகவல் பரிமாற்ற வலிமையானது (Communication strength), நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்ததே ஆகும். 

தமிழில் 'இனம்' என்ற சொல்லானது காலனிய சூழ்ச்சியில் திரிந்த போக்கில், 'சாதி' என்ற சொல்லும் திரிந்து, இன்றுள்ள சாதி அமைப்பானது அதே சூழ்ச்சியில் உருவானது தொடர்பான சான்றுகளையும் பார்த்தோம். "ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா?" என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) அது போன்ற ஆய்வுகளை விளங்கி, அறிவுபூர்வமாக விவாதிக்காமல், உணர்ச்சிபூர்வமாக 'சாதி ஒழிப்பில்' பயணிப்பவர்களில் யார்? யார்? இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலையில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி, பயணிக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

'சாதி' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இந்தியா பயணித்து வருவதும், 'இனம்', அதன் அடிப்படையில் 'திராவிடர்' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'வித்தியாசமான' போக்கில் தமிழ்நாடு பயணித்து வருவதும், ஆகிய பின்னணியில்; மேற்குறிப்பிட்ட இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலை பற்றிய ஆய்வினையும், மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அத்தகைய ஆய்வின் மூலமே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினா போராட்டத்தில்' ஊடுருவிய சமூக விரோத சக்திகளையும், அவர்கள் மேற்கொண்ட 'ஆதரவு தூண்டில் மீன்' சமூக செயல்நுட்பத்தையும், விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்ததே, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு காரணமா? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html ) தமிழ்நாடு அது போன்று 'முள்ளி வாய்க்கால் அழிவு' போன்ற திசையில் பயணிக்காது என்பதையும், 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி' உணர்த்தியுள்ளது. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1697611

'தமிழ் இன உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' போன்றவற்றை 'பொது வாழ்வு மூலதனமாக'  கருதி, திராவிட அரசியல் கொள்ளை குடும்பங்களின் 'வாலாக', 'வளமாக' வளர்ந்து வரும், நானறிந்த 'பெரியார் சமூக கிருமிகளை' விட, வேறு வழியின்றி பிழைப்பிற்காக விபச்சாரம் செய்பவர்களும், அந்த விபச்சாரிகளின் தரகர்களும்  மதிக்கத் தக்கவர்களே ஆவர்; ஏனெனில் அவ்வாறு அவர்கள் வாழ்வதன் மூலம், மேல்நடுத்தர, வசதியான தமிழர்களில் பெரும்பாலோர், எந்த அளவுக்கு 'பொது வாழ்வு வியாபாரிகளை' 'உரசாமல்', 'சுயநல பாதுகாப்புடன்' வாழ்ந்து வருகிறார்கள்? என்பதை வெளிப்படுத்தும் 'சமூக சிக்னலாக' (Social Signal), அந்த விபச்சாரிகளும், தரகர்களும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களில் 'அதி புத்திசாலிகள்' அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து வருகிறார்கள்; அந்த சமூக சிக்னலின் அடுத்த கட்ட அபாய எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி.

தமிழ்நாட்டை 'அந்த அரசியல் விபச்சார' நோயிலிருந்து மீட்க 1949 முதல் 1967 வரை ஈ.வெ.ரா அவர்கள் முயற்சித்து, தனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலின்றி பயணித்து தோற்றதன் வெளிப்பாடாக; ‘1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/race-race.html )  

அகத்தில் 'சாதி வெறியுடனும்', (மேலே குறிப்பிட்ட 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு) புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரர்களாகவும் வலம் வருபவர்களை விட, தமது சாதி அடையாளத்துடன் அகத்திலும், புறத்திலும் நேர்மையாக வாழ்பவர்கள் எல்லாம்;

அதிக மனிதாபிமானம் உடையவர்களாகவும், தம்மால் இயன்ற அளவு சாதி, மத உயர்வு தாழ்வுகளை கடைபிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள், என்பது எனது அனுபவமாகும்.

சாதி உயர்வு தாழ்வுகளை அகற்றுவதில், சமூக உளவியலில் (Social Psychology) நடைபெறும் மன மாற்றங்கள் மூலமே, அவை தொடர்பான சட்டங்களும் தமது கடமையை சரியாக செய்யமுடியும். எனவே சமூக அளவில் சாதி, மத உயர்வு, தாழ்வுகளை எதிர்ப்பதாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு பெரும்பாலான அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில்; ("முஸ்லீம்களை 'அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாக' 'இந்து' தேசியவாதிகள் கருதவில்லை. ‘தீண்டாமை கொடுமைக்கு இந்து சமூகமே காரணம்  என்றும், ‘அதை ஒழிக்க வேண்டும்என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்த, கொல்வால்கரும், தியோரஸும் கண்டித்துள்ளார்கள்."; http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_27.html )

எந்த ஒரு பிரச்சினையில் ஆதரவு வந்தாலும், அந்த ஆதரவை ஏற்று பயணிப்பதே புத்திசாலித்தனமாகும். அவர் தமக்கு பிடிக்காத கொள்கை சார்பானவர் என்ற அடிப்படையில், அந்த ஆதரவினைப் புறக்கணிப்பது, முட்டாள்த்தனமாகும்.

அவ்வாறு ஈ.வெ.ரா அவர்கள் பயணித்ததாலேயே; இந்திய விடுதலைக்கு முன், தமது 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கான ஆதரவை, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களிடம் பகிரங்கமாக கோரி, பெற்றார்;  ஆந்திராவில் இருந்த பிராமண நாத்தீகர் கோராவுடனும் சேர்ந்து செயல்பட்டார்.

எனவே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், எங்கெங்கு சாதி உயர்வு தாழ்வு கடை பிடிக்கப்படுகிறது? என்பது தொடர்பான சரியான தகவல்களை பெறுவதிலும், அதில் முன்னணி பங்கு வகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்து, 'அனைத்து சாதி'களின் ஒற்றுமை மூலம் வெற்றி பெற்று நடக்கும் ஜல்லிக்கட்டில், 'சாதி உயர்வு, தாழ்வு கடை பிடிப்பதை' கை விடுமாறு கோருவதும், அவர்களில் உடன்பட மறுத்து, 'சாதி வெறியராக' வெளிப்படுபவரை தனிமைப் படுத்தி, ஊடக குவியத்தில் பலகீனமாக்கி, அதன்பின் மேலே குறிப்பிட்ட திருக்குறள் வழியில் வெற்றி பெறுவது சாத்தியமே.

குடையைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் அந்த கால மாட்டைப் போல, மேலே குறிப்பிட்ட முயற்சியில், 'இந்துத்வா' ஆதரவாளர்களை 'பெரியார்' கொள்கையாளர்களும், 'பெரியார்' கொள்கையாளர்களை 'இந்துத்வா' ஆதரவாளர்களும், தமக்கு 'கெட்ட பெயர் வந்து விடுமோ?' என்று அஞ்சி, 'ஒற்றுமையுடன்', செயல்பட தயங்கினால், மேலே குறிப்பிட்ட சாதி, மத உயர்வு தாழ்வுகளை ஒழிப்பதில், அவர்களுக்குள்ள 'நேர்மையானது', கேள்விக்குறி ஆகாதா? ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியில் இருந்து கூட, அந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?

No comments:

Post a Comment