Wednesday, February 13, 2019


இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (4)


1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததா?


தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய'  அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;

என்று பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;

தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா..  வேர் பிடிக்க முடியாது;

என்பது தொடர்பான எனது ஆய்வினை இந்த பதிவில் விளக்க முனைந்தேன்.

1952 பொதுத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியாகும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சியை, 1949இல் முளை விட்ட தி.மு. ஓரங்கட்டி, பின் அதே கட்சி இன்று தி.மு. வின் வாலாக ஒட்டிப் பயணிக்கும் அளவுக்கு, அசுர வேகத்தில் வளர்ந்த போக்கின் சமூக ஆற்றல் மூலங்கள் பற்றிய ஆய்வின் மூலமே

'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்ட நிலையிலும்
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா..  வேர் பிடிக்க முடியாது;

என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.

காங்கிரஸ் கட்சியானது, காமராஜர் முதல்வரானது முதல் 1967 வரை, மேக்ரொ உலகில் இருந்த தமது செல்வாக்கின் மூலங்கள் பற்றிய சரியான புரிதலில் பயணித்திருந்தால், மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு. வளர்ந்த போக்கின் சமூக ஆற்றல் மூலங்கள் புரிந்திருக்கும்.  அந்த புரிதலுடன் காங்கிரஸ் பயணித்திருந்தால், 1967- இல், ஆட்சி மாற்றம் நடந்திருக்காது.

காமராஜர் முதல்வரானது இருந்த முதல் 1967 வரை இருந்த செல்வாக்கினை 'தேசியத்திற்கான' செல்வாக்காகக் கருதி காங்கிரஸ் பயணித்ததும், தி.மு.கவின் வளர்ச்சிக்கும், .வெ.ராவின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அரங்கேறிய கூவத்தூர் பாணிக்கு, தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டே, இந்திய விடுதலைக்குப் பின், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்பதை அறிந்தவர்களுக்கு, மேலே குறிப்பிட்ட போக்கினை ஆராய்ந்து அறிவது எளிதாகும்.

இந்திய விடுதலைக்குப் பின் 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத்துக்க நாளாகஅறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் .வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதாவது ஜெயலலிதா மறைவிற்குப் பின் அரங்கேறிய கூவத்தூர் பாணிக்கு, தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டதே, காங்கிரஸ் எனும் தேசியக்கட்சியாகும்.

அதே ராஜாஜியின் ஆதரவுடன், அதே பாணியில் தி.மு. எம்.எல்.ஏக்களை 'வளைத்து', கட்சியில் நெடுஞ்செழியனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்த கருணாநிதி முதல்வரானார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர், ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் 'அதே' பாணியில் பயணித்தனர். அந்த வரலாற்றுப் பின்னணியிலேயே, சசிகலா குடும்பம் 'அந்த' பாணியின் உச்சக்கட்ட வளர்ச்சியை கூவத்தூரில் வெளிப்படுத்தியுள்ளது.’ (https://tamilsdirection.blogspot.com/2019/01/3.html )

தமிழ்நாட்டில் இன்று ஆதாய அரசியலின் முதுகெலும்பாக இருக்கும் 'அரசியல் நீக்கம்' (depoliticize) தொடரும் வரை, 'திருமங்கலம், ஆர்.கே.நகர் பாணியில்' தமிழ்நாடு பயணிப்பதற்கு திராவிடக் கட்சிகளை விட, தேசியக் கட்சிகள் தான் அதிக பங்களித்து வந்துள்ளார்கள்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

தமிழ்நாட்டில் உள்ள புலமைக் குறைவின் விளைவாக, 'கருத்தில் குறைபாடும்', 'வாதத்தில் குறைபாடும்', 'உணர்ச்சிகர' பேச்சுகளில் 'காணாமல்' போக, அதைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமல், உணர்ச்சிகரமாக கைத்தட்டுபவர்கள் அரங்கில் இருக்கும் காட்சிகள், தமிழ்நாட்டில் நிறைய உண்டு. அவற்றில் பல இணைய தளங்களில் இடம் பெற்று,  ஆய்வாளர்களுக்கு அரிய தடயங்களாக உள்ளன.

மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ அரங்கமானது, தமிழ்நாட்டில் 1967க்கு முன், என்னைப் போன்ற தி.மு. ஆதரவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நிறைந்திருந்த தி.மு. சார்பு அறைக்கூட்டங்களில், பொதுக்கூட்டங்களில் மட்டுமே காண முடிந்தது.

காமராஜர் ஆதரவுப் போக்கில் பயணித்த என் தந்தையும், அவரது நண்பர்களும், தி.மு. பேச்சாளர்களை சமுகத்திற்குக் கேடான இழிவானவர்களாக கருதி, என்னைப் போன்றமாணவர்கள் 'முதிர்ச்சியின்றி', அவர்களின் 'கவர்ச்சிகர' பேச்சுக்களில் 'மயங்கி' இருப்பதாக கருதி இருந்தார்கள். அதே நேரத்தில், பெரியவனான பின், என்னைப் போன்றவர்கள் திருந்தி விடுவோம், என்று கருதி, உயர்நிலைப்பள்ளி/கல்லூரி மாணவர்களாயிருந்த என்னைப் போன்றவர்களுடன், எனது தந்தை உள்ளிட்ட பெரியவர்கள் எல்லாம்;

எஙகளுடன் அவ்வப்போது விவாதித்து, அந்த தவறானப் போக்கிலிருந்து விடுவிக்க முயற்சிக்காமல்,‌ 'அலட்சியமாக' இருந்தார்கள்.

1967க்கு முன், மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு. வளர்ந்த போக்கின் சமூக ஆற்றல் மூலங்கள் புரியாமல், காமராஜர் ஆதரவுப் போக்கில் பயணித்த என் தந்தையைப் போன்றவர்கள் எல்லாம் பயணித்த போக்கு காரணமாகவே, 1967- இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இன்று தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தில் வாழும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமின்றி சாமான்யர்களுடன், குறிப்பாக கிராம மக்களுடன் அரசியல் தொடர்பு அறுந்த நிலையில் தான் அனைத்து கட்சிகளும் பயணிக்கிறார்கள்.

அதில் விதி விலக்காக, அரசியல் நீக்கம் (depoliticize)மூலமாக வலிமைப் பெற்ற தனிநபர் விசுவாசத்தினை, சாமான்யர்களின், குறிப்பாக கிராமப் பெண்களின், குவியமாக ஜெயலலிதா தம்மை வளர்த்துக் கொண்ட போக்கின் உச்சமாகவே;

கடந்த பாராளுமன்ற தேர்தலில், இரண்டு இடங்கள் தவிர, மற்ற அனைத்திலும் வெற்றி பெறுவதற்குக் காரணமானது; இந்தியாவில் வீசிய மோடி அலையிலும் தமிழ்நாடு வித்தியாசமானது என்பதை நிரூபித்து.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு. கட்சிக்காரர்களுக்கும், ...தி.மு. கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாட்டினையும்;

'ஆட்சியில் இருக்கும் போது, 'சம்பாதித்த'(?) பணத்தை, தி.மு. காரன் தனக்கே வைத்துக் கொள்கிறான். ஆனால் ...தி.மு. காரனோ கிராமத்தில் மற்றவர்களுக்கும் உதவி, தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை அந்த கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணுகிறான்.' என்பதையும்;

ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் இருந்து சறுக்கிய திசையில் ஜெயலலிதா பயணிக்கத் தொடங்கியதானது, கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிப்பட்டது. ஜெயலலிதாவிற்கு எதிரான சக்திகள் ...தி.மு.க-வில் வலுவானதே அதற்கு காரணமாகும். அதனைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியதும் ஜெயலலிதாவே ஆவார்.

சுயநல நோக்கில், கட்சி நலனை சீர் குலைத்து, செயல்பட்டவர்கள் தொடர்பாக, அண்ணாவைப் போல மனமுடையாமல்;

1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயம் தொடர்பாக ஆவேசப்பட்டு, எச்சரித்து, பின் அதிலிருந்து 'பெரியார்' .வெ.ரா, அந்த ஆவேசத்திலிருந்து, வழுக்கியது போல வழுக்காமல், ஜெயலலிதா துணிச்சலுடன் தனது ஆவேசத்திலிருந்து வழுக்காமல்;

அந்த நோயிலிருந்து, தமது கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்என்பது இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்; அதே சிக்கலை சந்தித்துள்ள எதிர் கட்சிகளும் ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் .

'அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்கில், 'தமக்கென்ன லாபம்?' என்ற எதிர்பார்ப்புள்ளவர்களின் ஆதிக்கத்தில்,  ...தி.மு., தி.மு., உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சிக்கியுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா தமது முயற்சியில்  வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் திருப்பு முனையாக, அமைய வாய்ப்புள்ளது. 

தி.மு..,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” - முதல்வர் ஜெயலலிதா; http://www.dinamalar.com/news_detail.asp?id=1545868 
(June 20, 2016;  http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_20.html)

அந்த போக்கே ஜெயலலிதாவின் மர்மமான மரணத்திற்கு காரணமானதா? என்ற கேள்விக்கு, அவரது மரணம் தொடர்பான விசாரணை நேர்மையாக நடந்தால், விளக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

1944-இல் தி. தொடங்கிய போது, தமிழ்நாட்டில் இருந்த ஆக்கபூர்வ/அழிவுபூர்வ சமுக ஆற்றல்கள் யாவை?; அவை எந்தெந்த மனிதர்களின் 'இயல்பை' பொறுத்து, அந்தந்தமனிதர்கள் மூலம் வெளிப்பட்டன? 1949இல் தி.மு. உருவானபோது முதல் இடத்தில் இருந்த அண்ணாவிற்கும், இன்று தி.மு. தலைவராக இருக்கும் 'கலைஞர்' மு. கருணாநிதிக்கும், இடையில் 'தலைவர்கள் வரிசையில்' இருந்தவர்கள் யார்? யார்? எந்த 'சமூக செயல்நுட்பத்தின்' அடிப்படையில், அவர்களை எல்லாம் பின் தள்ளி, இன்று தி.மு.கவானது நேரு பாணி குடும்ப அரசியலில் சிக்கியது? அந்த  'சமூக செயல்நுட்பத்தின்' பிரதிநிதிகளாக இன்று அழிவுபூர்வ சமூக ஆற்றல்களின் பிரதிநிதிகளாக வலம் வருபவர்கள் யார்? அவர்களின் சுயலாப கணக்கில் சிக்கிய,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு' போன்ற முகமூடிகளை எவ்வாறு அகற்றி, அவர்களின் 'சுய உருவத்தை' மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, 1944க்கு முன் இருந்த, நேர்மையான சுயசம்பாத்திய திறமையும், ஆர்வமும் அற்ற‌, அத்தகையோருக்கான 'சிற்றினம்' என்று, அவர்களை ஓரங்கட்ட முடியும்? என்ற கேள்விகளின் மூலமே;

தமிழ்நாடானது, இன்றைய திருப்பு முனையிலிருந்து எந்த திசையில் பயணிக்கும்? என்பதைக் கணிக்க முடியும். (April 23, 2017; ‘சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், ...தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா?’; http://tamilsdirection.blogspot.com/2017/04/ )

தமிழ்நாட்டின் சமூகப்புலம் (Social Field) என்பதானது தமிழ்நாட்டில் வாழும் மனிதர்களிடமிருந்தே  உருவாவதாகும். அந்த சமூகப்புலத்தில் வெளிப்படும் சமூகஆற்றல்  (Social Energy)  என்பவை எவ்வாறு உருவாகின்றன? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். .( http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

1949 இல் தி.மு. தோன்றி, மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு. வளர்ந்தது. அவ்வாறு தி.மு. வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது, மேக்ரொ உலகில் இருந்த தமது செல்வாக்கானது, மைக்ரோ உலகில் தி.மு.கவின் வளர்ச்சி மூலம் ஆபத்துக்குள்ளாகும் அபாயம் பற்றி சுதாரிக்காமல் இருந்ததாலேயே, தமிழையும், தமிழ் உணர்வையும் தி.மு.- வானது தமது சுயநல அரசியலுக்காகசிறை பிடித்து, தேசியத்திற்கு எதிராக வளர்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே, 1967இல், ராஜாஜியின் துணையுடன், தி.மு.  ஆட்சியைப் பிடித்தது.  அதன்பின் தொண்டர்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, பணம், கட்சியில் கீழிருந்து மேல் வரை, சர்க்காரியா குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வழிகளில் பணம் சேர்த்தல் உள்ளிட்டஆதாய அரசியலில்  தி.மு. சிக்கியது. அந்த போக்கில்,, 1967க்கு முந்தைய காங்கிரசை விட இன்னும் மோசமாக மேக்ரோ உலகிலேயே ஆதாய அரசியல் பலத்தில் பயணித்தது; நேரு குடும்ப அரசியல் பாணியில் இன்னும் மோசமான குடும்ப அரசியலில் தி.மு. பயணித்தது. (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

வைக்கம் போராட்டமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமும், மற்றவர்களால் துவக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேற 'தடுமாறிய' நிலையில், .வெ.ரா தலைமை ஏற்று, இடையில் தடைகளுக்கு பயந்து, 'தமக்கு தொடர்பில்லை' என்று ( 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடந்தது போல)  ஒதுங்காமல், இறுதி வரை போராடி வெற்றி ஈட்டினார். 1944க்கு முன் சமூக நீதிக்காகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்காகவும் தமிழ்நாட்டில் இயல்பானப் போக்கில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களின் குவியமாகி .வெ.ரா பயணித்தார்.

.வெ.ரா அளவுக்கு பணக்கார வாழ்வு நிலையிலிருந்து விரும்பி சாமான்ய வாழ்வு நிலைக்கு இறங்கி, போராட்டங்களிலும், சிறைவாசங்களிலும் உரம் பெற்று, மைக்ரோஉலக செல்வாக்கோடு, மேக்ரோ உலகில் தமிழ்நாட்டில் வலம் வந்த வேறு எந்த தலைவரும் இல்லாத காரணத்தால், அந்த சமூக ஆற்றல் குவியமானது அவருக்கு கிட்டியது.

1944 வரை .வெ.ராவின் உழைப்பால் உருவாகியிருந்த சமூக ஆற்றலானது, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களுடன், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட சமூக ஆற்றல் மூலங்களிடமிருந்து அந்நியமாகி, பயணித்ததன் விளைவாக, 'தி.மு.' பிரிவினையில் விரயமான பகுதி போக; எஞ்சிய பகுதியும், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம், .வெ.ராவிடமிருந்து பறி போனதா
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html  

என்ற ஆய்வின் மூலமும், .வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகள்' எவ்வாறு சிறைபடுத்தினார்கள்? என்பதற்கான விடையையும் பெற வாய்ப்புள்ளது. பொதுவாழ்வில் மனம் வெறுத்து, 'முனிவராக ஒதுங்கி' விட விரும்புவதாக, .வெ.ரா, அன்றைய முதல்வர் அண்ணாதுரையிடம் தெரிவித்ததற்கு அடிப்படை காரணங்கள் யாவை? என்ற ஆய்வும், அதற்கு துணை புரியலாம். (http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )

தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, .வெ.ரா மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் .வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.

ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ளசான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், .வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

அதே போல, 'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய சொற்களின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தொடர்பான, எனது ஆய்வுகளையும், .வெ.ரா இன்று படித்தால், அவரின் 'இந்திய தேசிய' எதிர்ப்பு என்பதானது;

திராவிட அரசியல் கொள்ளை சூழ்ச்சியில், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது, என்பதையும் பகிரங்கமாக அறிவித்து, 'திராவிடர்/திராவிட 'குழப்பங்களிலிருந்து விடுபட்டு, தெளிவான 'தமிழர்' அடையாளத்தை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகவே வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html )

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா? (‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress )

என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்; தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதால். (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html )

தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம் (Depoliticize) தொடரும் வரை, கொள்கைகளை விட, தலைவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும்.

அது தெரியாமல், தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவு செய்து கண்டிக்கும் போக்கில், எச்.ராஜா, சீமான், வைகோ போன்ற இன்னும் பலர் பயணிக்கும் வரையில், அவர்கள் சார்ந்த கட்சிகள் எல்லாம், 'நோட்டா'வுடனும், 'டெபாசீட்டுடனும்' போட்டி போடும் நிலை தான் தொடரும். (https://tamilsdirection.blogspot.com/2019/02/2.html )

தமிழ்மொழி, 'இனம்' தொடர்பான .வெ.ராவின் நிலைப்பாடுகள் எல்லாம் இன்றைய ஆய்வுகளில் அபத்தமாகி வருவதானது, 'பெரியார்' கட்சிகளின் மரணத்தைத் துரிதப்படுத்தலாம். அதே நேரத்தில், பணக்கார வாழ்வு நிலையிலிருந்து விரும்பி சாமான்ய வாழ்வு நிலைக்கு இறங்கி, போராட்டங்களிலும், சிறைவாசங்களிலும் உரம் பெற்று, மைக்ரோஉலக செல்வாக்கோடு, மேக்ரோ உலகில் தமிழ்நாட்டில் வலம் வந்த .வெ.ராவைப் போல, காந்தி உள்ளிட்டு வேறு எந்த தலைவரும் வாழ்ந்ததில்லை;

என்ற உண்மையானது இன்றைய மாணவர்களின் படித்த இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பானது டிஜிட்டல் யுகத்தில் அதிகமாகும். அடுத்து தமிழ்நாடு பயணிக்கும் திசையில், அது செல்வாக்கு செலுத்தவும் வாய்ப்பிருக்கிறது. அந்த புரிதலும், தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிப்பதற்கான முன்நிபந்தனையாகும்.

சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் .வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார்அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டகாங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது.
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

அந்தப் போக்கானது நீடிக்கும் வரையில், 'தமிழர்' அடையாளத்தை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகவே வளர்த்தெடுக்கும் முயற்சியில் முன்னேற்றமானது தாமதமாகும்.

'திருமங்கலம், ஆர்.கே.நகர் பாணியில்' தமிழ்நாடு பயணிப்பதையும் குறை கூற முடியாது


ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின், கட்சிகளும் தலைவர்களும் தாம்எந்த கூட்டணியில் பயணித்தால் வெற்றி பெற முடியும்? என்று குழம்பும் அளவுக்கு, அமாவாசைகளின் புரட்சியில் சிக்கி தமிழ்நாடானது பயணிக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில், என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்? தமிழ்நாட்டில் இன்றுள்ள ஆதாய அரசியல் சுவடின்றி அழிந்து, அநேகமாக இந்தியாவிற்கே வழிகாட்டியாக, என்ன வகையான அரசியல் தமிழ்நாட்டில் அரங்கேற வாய்ப்புள்ளது?

என்று ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்களின் ஆய்விற்குதவும் வழிமுறைகளையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 


‘நெருக்கடி காலத்திலும், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்திரா காங்கிரசுக்கு எவ்வளவு பெரிய வெற்றியைத் தந்தார்கள்? என்பதைக் கணக்கில் கொள்ளாமல்;

தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கினை துவக்கி, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பயணித்த திசையில்; (‘'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்' பட்டியலில் ஜெயலலிதா? 'திராவிட பொதுவாழ்வு வியாபார குடும்ப‌ அரசியல்'  சங்கமமாகி முடிவை நோக்கி ?’ ; http://tamilsdirection.blogspot.com/2017/11/cognitiveskills.html)

தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக  பா.ஜ.க-வானது, இனி வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும்.‘ 

தி.மு. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ...தி.மு. வெற்றிக்கான வாய்ப்புகளும்;

...தி.மு. கூட்டணியில் பா..போட்டியிடும் தொகுதிகளில் தி.மு. வெற்றிக்கான வாய்ப்புகளும்;

நீடிப்பதையும் தவிர்க்க முடியாதுவரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு. கூட்டணியில் இடம் பெற்றகாங்கிரஸ் வேட்பாளர்களும், ...தி.மு. கூட்டணியில் இடம் பெற்ற பா.. வேட்பாளர்களும் நேரடியாக மோதும் தொகுதிகளில், பா...வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.

ஆர்.கே.நகர் பாணியில் தினகரன் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தி.மு. டெபாசீட்டுடனும், பா.. 'நோட்டாவுடனும், போட்டி போட்ட கட்சிகளாகவே தேர்தல் முடிவுகளில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறதுமைக்ரோ உலகில் உள்ள‌ மனிதர்களின் சுக துக்கங்களோடு ஒட்டி வாழும் வலைப்பின்னலை உருவாக்கும் உழைப்புடன் கூடிய, தமிழின் தமிழரின் நலனை முன்னிறுத்தும் தேசியக்கட்சி வெளிப்படும் வரை, தமிழ்நாடு அந்த திசையிலேயே பயணிக்கும்

No comments:

Post a Comment