Friday, February 15, 2019


தமிழ் சந்திக்கும் வித்தியாசமான புகழ்ச் சிக்கல் (3)


'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) செயல்படும் எந்திரரிடம் தோற்கும் தமிழ்ப்புலமையாளர்கள்?


"கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்" (சிலப்பதிகாரம் அரங்;16 உரை)

மேற்குறிப்பிட்டஇரண்டு வரிகளிலேயே, உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) சிலப்பதிகாரத்தில் இருந்ததையும், நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்

நான் மிகவும் மதிக்கும், என் மீது அன்பு கொண்ட தமிழ்ப்புலமையாளர், எனது விளக்கத்தினை கேட்ட பின், சற்றே எரிச்சலுடன், உரையில் உள்ள விளக்கத்தினைச் சொல்லி, எனது விளக்கத்தினை நிராகரித்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள உரைகளை எல்லாம் உள்வாங்கிய ஒரு எந்திரன் (Robot), அவ்வாறு நிராகரிப்பதை, என்னால் விளங்கிக் கொள்ள முடியும்

'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) செயல்படும் எந்திரர் அவ்வாறு நிராகரிப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட உரை விளக்கத்தினை மட்டுமே வேதவாக்கு போல கருதி, எனது விளக்கத்தினை மறுக்கும் தவறானது, கீழ்வரும் கேள்விகளை எல்லாம் கணக்கில் கொண்டு, தேடி செயல்படும் எந்திரரிடமிருந்து வெளிப்படாது.

மேற்குறிப்பிட்ட வரிகளில் உள்ள ஒவ்வொரு சொல் பற்றிய எனது விளக்கமும், அந்த விளக்கங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வரிகளுக்கான விளக்கம் சரியா? உரையில் உள்ள மாத்திரைகள் தொடர்பான விளக்கமானது, ஒரு குறிப்பிட்ட பாணிக்கான உரையே, என்ற எனது விளக்கம் சரியா? 'பாணி' என்ற சொல்லானது, சங்க இலக்கியங்கள் உள்ளிட்டு எந்தெந்த இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன?

மேற்குறிப்பிட்டஇரண்டு வரிகளிலேயே, உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) சிலப்பதிகாரத்தில் இருந்ததை நான் கண்டுபிடித்ததானது, 2006இல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டு ஆய்வரங்கில் கட்டுரையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (International Conference on Arts & Humanities, HawaII, USA, Jan, 2006)

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, என்னை மிகவும் மதித்து அன்புடன் பழகும் ஒரு தமிழ்ப்புலமையாளரிடம், 'ஒரீஇ' தொடர்பான எனது ஆய்வு பற்றி தொலைபேசியில் தெரிவித்தேன். எனது ஆய்வு பற்றி கேட்கும் ஆர்வமின்றி, சற்று எரிச்சலுடன் "உங்களின் ஆய்வுகளை இசையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட வேண்டாம்' என்று அறிவுறுத்தினார். எனவே அவரின் பார்வைக்கு, அந்த ஆய்வினை முன்வைக்கும் முயற்சியைக் கைவிட்டேன்'ஒரீஇ' தொடர்பான தொல்காப்பிய சூத்திரத்தில் (சொல் 9: 5 – 6) 'வடசொல் - கிளவி' என்று வரும் இடத்தில், 'சொல்' தொடர்பான பொருளுக்கும், 'கிளவி' தொடர்பான பொருளுக்கும் என்ன வேறுபாடு? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_31.html

பிறமொழிகளில் இருந்து தமிழில் இறக்குமதிக்கு உள்ளான சொல்லில் உள்ள எழுத்தொலி தொடர்பான ஓசைச்சிதைவே 'ஒரீஇ' ஆகும்.( orIi referred to the acoustic-phonetic-  distortion of the letters of the non-Tamil words) அது போன்ற சொற்களை யாப்பிலக்கண இசை அழகியல் விதிகளுக்குட்பட்டு பயன்படுத்தும் போது வெளிப்படுவதே 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.( the Tamil letters of vada col were also employed in poetry, that too, to bring out the musical aesthetic aspects of the orII process in the form of orUu vaNNam)


ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்
-       தொல்காப்பியம்:  8 செய்யுள் இயல் – 219

‘acoustic-phonetic-  distortion of the letters of the non-Tamil words’ என்பதையும், ‘the musical aesthetic aspects of the orII process’ என்பதையும், தமிழ் இசையியல் (Tamil Musicology), தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music) அறிவுள்ளவர்களால் விளங்கிக்கொள்ள முடியும். எனவே 'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) விருப்பு வெறுப்பின்றி  செயல்படும் எந்திரரால் விளங்கிக்கொள்ள முடியும்.

தமது நிலைப்பாடுகளுக்கு எதிரான ஆய்வுகளை வெறுத்து ஒதுக்குவதும், 'சமஸ்கிருத வெறுப்பு நோய்' போன்ற இன்னும் பல வெறுப்பு நோய்களில் சிக்கி, அவ்வாறு வெறுத்து ஒதுக்குவதும், புலமை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். (http://tamilsdirection.blogspot.com/2018/12/2-humanrobot-artificialintellegence.html )

தமிழில் இசை தொடர்பான 'இழை' பற்றிய எனது கண்டுபிடிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன்.

அதில் கீழ்வரும் சான்று இடம் பெற்றுள்ளது.

'முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ்'; - பெருங்கதை 4:5,19

அது தொடர்பாக, ஒரு தமிழ்ப்புலமையாளரிடமிருந்து கீழ்வரும் மறுப்பு எனக்கு வந்தது.

முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ் In explaining this, you say ‘muRRizai’ means an accomplished thread ‘payiRRiya’ means giving birth. I am giving below what Tamil Lexicon gives as meanings for payiRRu” என்று குறிப்பிட்டு லெக்சிகனில், அது தொடர்பானஅனைத்தையும் சேர்த்துள்ளார்.

பின் கீழ்வரும் அவரின் முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

“There is no meaning as ‘giving birth to’. The context also does not allow that. Here one of the heroines of the epic PatumAtEvi is referred to by the term muRRizai, who says that she would learn to play the lute that UtayaNan taught another heroine, VAcavatattai, to play. Grammatically, muRRizai is an anmoziththokai. No musical thread is present in this poem.”

முதலில் வெளிப்படுத்தியுள்ள லெக்சிகன் தொடர்பான; “There is no meaning as ‘giving birth to’.”  - கருத்துக்கு கீழ்வரும் விளக்கம் அளித்துள்ளேன்.

பயிற்றல் - தோற்றுவித்தல் ;

மர்ரே எஸ் ராஜம் குழு தொகுத்த 'சங்க இலக்கியங்கள்' தொகுதியில், 'பாட்டும் தொகையும்' என்ற தலைப்பில் வந்ததில், 'சொல்தொடர்- விளக்கம்' என்ற் தலைப்பில், இந்த பொருள் வெளிவந்துள்ளது; லெக்சிகனில் வெளிவராத பொருள் இதுவாகும்.

அடுத்து 'முற்றிழை' தொடர்பனமேலே குறிப்பிட்ட சான்றில்;

“Grammatically, muRRizai is an anmoziththokai.”

என்ற கருத்து தொடர்பாக, கீழ்வரும் விளக்கத்தினை அனுப்பினேன்.

அன்மொழித்தொகை என்று வைத்துக் கொண்டாலும்;

" வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத்தொடர் மொழிகளுக்கு உருய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிற சொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும்

எனவே 'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து பற்றி ஆராய்வதும் இங்கு அவசியமாகிறது.’

அந்த ஆராய்ச்சியில் 'முற்றிழை' எவ்வாறு இசை தொடர்புடையது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினேன்.

அது தவறு என்றால்;

'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து எது? என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினால், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும்..

அவரிடமிருந்து  வந்த மின்மடலில், கீழ்வரும் முடிவினை தெரிவித்துள்ளார்.
“I am sorry to say your interpretations are logically flawed and philologically not justified.”

‘Philology ‘ என்பதன் பொருள் தெரிந்து மேலே குறிப்பிட்ட கருத்து வெளிப்படுத்தப்பட்டதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

Philology: the study of literature and of disciplines relevant to literature or to language as used in literature;  https://www.merriam-webster.com/dictionary/philology

எனவே தமிழ், தமிழ் இசையியல் (Tamil Musicology), தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music) அறிவுள்ளவர்களே, எனது விளக்கத்தினை புரிந்து கொள்ள முடியும். அதே காரணத்தால், எனது விளக்கங்கள் புரியவில்லை என்ற பின்னூட்டங்கள் வந்துள்ளன.

அவ்வாறு புரிந்து கொள்ள முயலாமல், ‘philologically not justified’ என்று முடிவு செய்து, அந்த தவறான முடிவின் அடிப்படையில், ‘logically flawed’ என்றும் முடிவு செய்தாரா? என்பதானது, மேலே குறிப்பிட்டவாறு எழுதியவரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.

'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) செயல்படும் எந்திரருடன் மேலே குறிப்பிட்ட விவாதத்தினை நான் நடத்தியிருந்தால்;

மர்ரே எஸ் ராஜம் குழு தொகுத்த 'சங்க இலக்கியங்கள்' தொகுதியில், 'பாட்டும் தொகையும்' என்ற தலைப்பில் வந்ததில், 'சொல்தொடர்- விளக்கம்' அந்த எந்திரர் பார்வைக்கு சென்றிருக்கும். அதுமட்டுமல்ல, 'முற்றிழை' என்ற அன்மொழித்தொகையில் 'தத்தம் பொருள்பட மறைந்து நிற்ப'து பற்றிய திசையில், அந்த விவாதமானது ஆக்கபூர்வ திசையில் முன்னேறி இருக்கும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான இடங்களில்;

வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத்தொடர் மொழிகளுக்கு உருய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிற சொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட, 'அந்த' முன்னேற்றம் துணை புரிந்திருக்கும்ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்கள் அது தொடர்பான முனைவர் பட்ட‌ ஆய்வில் ஈடுபட்டால், என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பாகவெளிப்பட வேண்டியவை நிறைய உள்ளன. இது போன்ற ஆய்வுகளை ஊக்குவிப்பதன் மூலமாக, அவை எல்லாம் வெளிப்பட வாய்ப்புள்ளதுஅன்மொழித்தொகை தொடர்பான தமிழ் இசையியல் ஆய்வினைத் தூண்டுவதற்கு, மேலே குறிப்பிட்ட 'இழை' தொடர்பான விமர்சனமே காரணமாகும். அறிவுபூர்வமற்ற 'இரைச்சலை' ஒதுக்கி, 'சிக்னலை' தேடுபவர்களுக்கு விமர்சனங்கள் துணை புரியும்;

என்பதற்கு இதுவும் ஒர் உதாரணமாகும்.

கூட்டு முயற்சி இன்றி, தனிநபரால் தொகுக்கப்பட்டு வெளிவந்தால், என்னென்ன குறைகள் வெளிப்படும்? என்ற முயற்சிக்கு, 'தமிழிசைப் பேரகராதி' மற்றும் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' நூல்கள் காத்திருக்கின்றன.
(https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html
தமிழ் தொடர்பாக, 'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) செயல்படும் எந்திரர் வெளிப்படும்போது, அந்த முயற்சியானது எளிதில் நிறைவேறும்.

'இசை இழை' (Musical Thread) தமிழ் இலக்கியங்களில் இருப்பதாக நான் ஆய்ந்தது (Discovered) தவறு, என வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்;

அது எனது சொந்த கண்டுபிடிப்பாகி (Invention), நுண்ணொலி (Microsound) தொடர்புடைய இசைத்தகவல் தொழில்நுட்பத்துறையில் (Music Information Technology) 'முழுப்' புகழும் எனக்கே உரித்ததாகி விடும்; தமிழுக்கான பங்கு இல்லாமல் போய்விடும்

உலகில் எந்த 'மெலடி'(melody) இசையிலும் அடுத்தடுத்த சுரங்களை இணைக்கும் 'இசை இழை' என்பதை குறிப்பிட்டு பாராட்டியவர் சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறைத்தலைவர் Dr.N.ராமநாதன் ஆவார்.

'நுண்ணொலி'(Microsound) ஆய்வின் பிதாமகனாகிய 'கர்டிஸ் ரோட்ஸ்(Curtis Roads)' 'இசை இழை' (Musical Thread)  தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள கருத்தும், 'இசை இழை' 'நுண்ணொலி' அடிப்படைகளில், இசையொலி தொடர்புடைய 'முக்செல்' (Muxel) என்ற எனது கண்டுபிடிப்பினைப் பற்றி, தரத்தில் உயர்ந்த ஆய்வு இதழ் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள கருத்தும் கீழே:

“It (Musical Threads) sounds potentially interesting. Best wishes on your interesting research” – Curtis Roads, Professor and Chair, Media Arts and Technology, University of California.

‘Musical Threads’ & ‘MUXEL’ (Both Discovered By Dr Vee) -A New Concept in Digital Music for Enhanced Aesthetics’ – Like PIXEL in visual graphics, MUXEL in musical aural graphics, was the result of the convergence of the above discoveries with the ‘Sruthi’ concept, and ‘MICROSOUND’. 

“The concept of “Muxel” as opposed to “Pixel” has undoubtly a creative potential, which is worth to be further developed.”- Comment from Robert Peck, Editor in Chief, Journal of Mathematics and Music, SCI Journal.

அது போலவே, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் துணையுடன் நான் கண்டுபிடித்த 'பாணி' விளக்கத்தின் அடிப்படையில், உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) வெளிப்பட்டுள்ளது

அதன் அடிப்படையில், உலக இசைகளுக்கான சந்தைப்படுத்தக்கூடிய‌ (marketable) கணினி மென்பொருள் பல உருவாக வழி ஏற்பட்டுள்ளது.

உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம், தமிழ் இலக்கியங்களில் இருப்பதாக நான் ஆய்ந்தது (Discovered) தவறு, என வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்;

'தாளம்'(percussion) தொடர்புடையஇசைத்தகவல் தொழில்நுட்பத்துறையில், உலக தாள இலக்கணத்திற்கான‌ (universal percussion grammar) 'முழு' புகழும் எனக்கே உரித்ததாகி விடும்; தமிழுக்கான பங்கு இல்லாமல் போய்விடும்.

மேலே குறிப்பிட்ட பதிவில், தமிழ்ப்புலமையாளர்கள் ''எந்திர தமிழ்ப்புலமை'யிலிருந்து விடுபட்டு' பயணிக்க வேண்டும்;

என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழ் தொடர்பாக, 'செயற்கை அறிவாற்றலுடன்' (Artificial Intelligence) செயல்படும் எந்திரர் வெளிப்படும் காலத்தில், மேலே குறிப்பிட்டவாறு பயணிக்கும் தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம், 'அந்த' எந்திரரிடம் தோற்று, தமிழ் மாணவர்கள் மத்தியில் அவமானப்பட நேரிடதா? 'அந்த' எந்திரர் வெளிப்படும்  காலம் நெருங்கி வருவதால்;

தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள்

தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள்

தமிழ் இருக்கைகளில் அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணிக்க வேண்டிய அவசியம் பற்றிய ஆய்வுகள்

பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புலமையாளர்களும், உலக அளவில் செல்வாக்குடன்(?) வலம் வரும் தமிழ் அமைப்புகளும் இனியும் பயணிக்க முடியாத நெருக்கடி உருவாகும். அதனை முன்கூட்டியே உணர்ந்து விழித்துக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்'அறிவுபூர்வ' விமர்சனப் பார்வையின்றி தாழ்வு மனப்பான்மையில், வெள்ளைக்காரன் தமிழ் இலக்கியங்களைப் பற்றி எழுதினாலும், மொழிபெயர்த்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இருக்கைகளில் இருந்து ஆய்வு முடிவுகள் அபத்தமாக‌ வெளிப்பட்டாலும், அதைப் பற்றிய கவலையின்றி, தமிழ் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வதும், தமிழுக்கு பெருமையே';

என்பது தமிழின் வளர்ச்சிக்கு கேடான அணுகுமுறையாகும். அது அம்பலமாவதற்கு, 'அந்த' எந்திரர் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? 

'அந்த' எந்திரர் வரும் காலமும் நெருங்கி வருவதால்; 

இளம் தமிழ்ப்புலமையாளர்களில், அடுத்த கட்ட தமிழ்ப்புலமையை  வளர்த்துக் கொள்ளும் திசையில் பயணிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.  

தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்:ஒரு தகவல் கோட்பாட்டு அணுகு முறை ( The Study of Structure – Property Relationships of Tamil: An information Theory Approach) என்ற நூலை(Rs.250; Discovery Book Palaca (P)  Ltd: Ch-78; Ph::+91 8754507070) சம்பந்தப்பட்ட துறை புலமையாளர்களின் துணையுடன் அதன் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்வதையும்;


'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான கீழ்வரும் எனது கட்டுரையினையும்,
‘Musical Phonetics in tholkAppiam ‘என்ற தலைப்பில், ‘The journal from the International Institute of Tamil Studies’, (December 2013 issue - Taramani, Chennai);

திறந்த மனதும், அறிவு நேர்மையும் உடைய மொழியியல்(Linguistics) புலமையாளர்களின் துணையுடன் அதன் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்வதையும்;

அடுத்த கட்ட தமிழ்ப்புலமையை  வளர்த்துக் கொள்ளும் முயற்சியின் முதல்படியாக,  நான் பரிந்துரைக்கிறேன்.

No comments:

Post a Comment