Wednesday, February 6, 2019


வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாகவாழும் இரகசியங்கள்(2)


புறநானூற்று வரிகளை அக நோக்கில் குவியமாக்கும் செயல்நுட்பம்?



‘'ஆற்று நீர் வழிப்படூஉம் புணை போல்' பயணிக்கும் சுதந்திர மனிதர், ஆற்றின் ஓட்டத்தில் அலைக்கழக்கப்படுவதில் பாதிக்கப்படாத வகையில் முயற்சித்து, 'ஆர் உயிர் முறை வழிப்படூஉம்' என்பதில் 'தெளிந்த திறவோர்' ஆக, மேலிடத்திற்கு வாலாட்டாமலும், தமக்கு கீழுள்ளவர்கள் வாலாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமலும், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாகப்' பயணிப்பார்கள்.’  என்ற புறநானூறு (192: 6 – 13) காட்டிய வழியை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_10.html )

அந்த பாடலில் வரும்;

'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'

என்ற வரிகளை புறநோக்கில் பிறரை நோக்கிய அணுகுமுறையில், நான் விளங்கிக் கொண்டபொருளை, மேலே குறிப்பிட்டுள்ளேன். அதே வரிகளை அக நோக்கில் என்னைக் குவியமாக்கியஅணுகுமுறையில், நான் விளங்கி, என்னை நானே கண்காணித்து பின்பற்றும் பொருளை- இரகசியத்தை- இந்த பதிவில் வெளிப்படுத்துகிறேன்.

உலகில் மிகுந்த புகழ் பெற்ற புலமையாளர்கள் பாராட்டும் அளவுக்கு எனது ‘Musical Linguistics’, Defreezing Music from Building Architectre’, ‘Music Information Technology’ உள்ளிட்ட இன்னும் பலஆய்வு முடிவுகள் இருந்தாலும்( http://drvee.in/ );

நான் 'அந்த மாட்சியில்' வியந்து மயங்கினால், அது என்னையும், எனது புலமை வளர்ச்சியையும் முடக்கி விடும் என்பதை நான் அறிவேன். நம்மிடமும் நமது ஆய்வுகளிலும் தெரியும் குறைகளை நம்மிடம் நேரடியாக சுட்டிக்காட்ட பிறர் தயங்கும் 'புதைகுழியில்' நாம் சிக்கி விடும் அபாயமும் அந்தப் போக்கில் தவிர்க்க முடியாததாகி விடும்.

பாராட்டுக்கள் என்பவை எல்லாம், ஏமாந்தால் நம்மை அதற்காக ஏங்கும் மனநோயாளிகளாக மாற்றி விடும்; நமக்கான ரசிகர் வட்டம் வளர்ப்பதிலேயே, நமது ஆற்றலின் பெரும்பங்கு விரயமாகும் அபாயமும் உண்டு;

என்று நம்மை எச்சரிக்கும் வகையில், பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை சீரழித்தவர்கள் ஆயிற்றே? என்று கவலைப்படாமல், தமக்குள்ள திறமைகளை எல்லாம் 'அறிவு விபச்சார மூலதனமாக்கி', அவ்வாறு சீரழித்தவர்களுட‌ன் நெருக்கமாகி, 'அந்த' மனநோயாளிகள் எல்லாம் பலன்கள் அனுபவித்து, அத்தோடு அடங்காமல், 'முற்போக்கு யோக்கியர்களாகவும்' தம்மிடம் ஏமாந்தவர்களிடம் பாராட்டுகளும் 'அனுபவித்து'(?), 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்ந்து, நம்மை எச்சரிப்பவர்களும் அவர்களே ஆவர்.

அந்த எச்சரிக்கையுடன், நமது நிலைப்பாடுகளுக்கும், ஆய்வுமுடிவுகளுக்கும் எதிராக வெளிப்படும் கருத்துக்களில், நம்மை வசை பாடும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி, அறிவுபூர்வமாக ஏதும் வெளிப்பட்டுள்ளதா? என்று தேடும் ஆர்வம் இருக்க வேண்டும். இருந்தால், அதற்கு நமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவுபூர்வ விளக்கத்தை நாம் தர வேண்டும். அதில் உரிய சான்றுகள் அடிப்படையில் குறைகள் வெளிப்பட்டால், பகிரங்கமாக அதை ஏற்றுக்கொண்டு, உரிய திருத்த திசையில், நமது ஆய்வுகள் பயணிக்க வேண்டும்.

அப்போது தான், நமக்கு எதிரான நிலைப்பாடுகள் உள்ளவர்களும் நம்மை மதிப்பார்கள். எதிர்பாராத திசைகளில் இருந்து, நமது ஆய்வுக்கு உள்ளீடுகளும், உதவிகளும் கிடைக்கும்;

என்பதும் எனது அனுபவமாகும்

மேலே குறிப்பிட்ட புறநானூற்று வரிகளை அக நோக்கில் நம்மைக் குவியமாக்கியஅணுகுமுறையில், நம்மை நாமே கண்காணித்து வாழும்போது, நமது வாழ்க்கையே சமூகத்தில், குறிப்பாக மைக்ரோ உலகில், ஒரு தனி மனித இராணுவம் போல, நமக்கே வியப்பூட்டும் வகையில் அமைந்து விடும். எதிர்பாராத இன்பங்களையும், துன்பங்களையும், நேரான மனநிலையில் (Positive Frame of Mind) எதிர்கொண்டு அனுபவிக்கவும் முடியும்

அந்த போக்கில் நமக்கான தர அடையாளமானது (benchmark) பிரமிக்கும் வகையில் வலுவாகி, தரம் தாழ்ந்த திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் நம்மிடம் ஒட்ட முடியாத சமூக பிரிவாகவும், தரமுள்ளவர்களே நமது சமூக வட்டத்தில் இடம்பெறும் அளவுக்கும், ஒரு சமூகத் தளவிளைவும் வெளிப்படும்.

தமிழ்நாட்டில் நடந்து வரும் சமூக தள விளைவில் (Social Polarization), நாம் எந்த திசையில் பயணிக்கிறோம்? என்பதன் மூலமாகவே, நமது வாழ்வின் திசையும் நிர்ணயமாகும். அதைப் பொறுத்தே, சமூகத்தின் வளர்ச்சிக்கா? வீழ்ச்சிக்கா? நமது பங்களிப்பு, என்பதும் தெளிவாகும்.

நமக்கும், நமக்குப் பிடித்தவர்களுக்கும் ஒரு அளவுகோல், நமக்கு பிடிக்காதவர்களுக்கு வேறு அளவுகோல், என்ற போக்கில் நாம் பயணித்தாலும், யார் பயணித்தாலும், அது இரட்டை அளவுகோல் (வேட) தவறாகும். உதாரணமாக, தமது பிள்ளைகளைத் தரமான தனியார்ப் பள்ளியில் படிக்க வைத்த ஒரு பேராசிரியர், தாம் பணியாற்றிய அரசு கல்லூரியில் தமது வகுப்பில் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை. ஆனால் பல புத்தகங்கள் எழுதி 'முற்போக்கு'  வட்டங்களில், அவர் புகழுடன் வலம் வந்தார். அவர் என்னுடன் பேச முற்பட்ட சமயங்களில் எல்லாம், மிக சுருக்கமாக பேசி, தொலைவில் வைத்தே பழகினேன். எனது நட்பு வட்டத்தில் அத்தகையோரை நான் அனுமதித்ததில்லை. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமான முற்போக்கு பேராசிரியர், தான் பணியாற்றிய துறையில், தமது வகுப்பில் ஒழுங்காக பாடம் நடத்தாத துறைத் தலைவரைக் கண்டித்தார். 

அதன் காரணமாகவே, மைக்ரோ உலகில் பல கேலி கிண்டல்களுக்கு அவர் உள்ளானார். மைக்ரோ உலகிலிருந்து, அரசியல் நீக்கம் (depoliticize) காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள மேக்ரோ உலகில், அத்தகையோர் எல்லாம் எவ்வாறு செல்வாக்குடன் வலம் வந்தார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

மேலே குறிப்பிட்ட தமிழ்நாட்டு முற்போக்காளர்களின் முற்போக்கு பிம்பவழிபாடு காரணமாக, இருளில் சிக்கிய உண்மையை அடுத்து பார்ப்போம். பேராசிரியர் சிவத்தம்பியும் தமிழை விட தமது வளர்ச்சியில் மிகவும் கவனமாகவே வாழ்ந்து மறைந்தவர் ஆவார்.
(“For Sivathamby, his love of Tamil took a lower ranking below that of his self promotion skills with those who held power.”; https://sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425) இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா எதிர்த்த, 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணித்த 'வாழ்வியல் புத்திசாலியாக வாழ்ந்த' அவர், பின் விடுதலைப் புலி பிரபாகரன் கை ஓங்கிய காலத்தில், திருச்சி கே.கே.நகரில் வாழ்ந்த பிரபாகரனின் பெற்றோர்களை தரிசித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக 'ஞானஸ்நானம்' பெற்றார். பின் முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின் தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி தமக்கு ஒத்து வராத உலகத்தமிழ் மாநாட்டு அமைப்பினை செல்லாக்காசாக்கி, புதிய அமைப்பின் மூலம், 2010 சூனில் கோவையில் செம்மொழி மாநாடு நடத்த துணை போனார். பின் 2010 டிசம்பரில்இல் கொலும்பில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை, தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர் எதிர்த்தார்
(http://www.newindianexpress.com/world/2010/sep/04/sivathamby-opposes-colombo-tamil-meet-183904.htmlஅவ்வாறு சிவத்தம்பிக்கு அழுத்தம் கொடுத்த தமிழ்நாட்டு எழுத்தாளர்களில், தமிழ் அமைப்புகளில், 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை' உருவாக முயற்சித்தவர்களில், எவராவது;


தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள் 
(https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html), தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள் 
(https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html)தமிழ் இருக்கைகளில் அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணிக்க வேண்டிய அவசியம் பற்றிய ஆய்வுகள் 
(https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html) பற்றி இதுவரை கவலைப்பட்டார்களா? தமிழை விட தமது வளர்ச்சியில் மிகவும் கவனமாகவே வாழ்ந்து வந்தார்களா?

இது போன்ற வாழ்வியல் புத்திசாலிகளைப் போல வாழ வழியில்லாத சாமான்ய வாக்காளர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமது வாக்குகளைப் பணத்திற்கு விற்றதை குறை கூற முடியுமா
(http://tamilsdirection.blogspot.com/2017/ ) 

சமூக முதுகெலும்பு முறிந்த சுயநல 'அறிவுஜீவிகளின்' மற்றும் 'அபாய' லட்சுமண் கோட்டினை 'வாழ்வியல் புத்திசாலித்தனத்தில்' தாண்டாதமனித உரிமை வீரர்களின்(?), சுயலாப ஒத்துழைப்பின்றி, அரசியல் கொள்ளையர்கள் தமிழ்நாட்டைச் சூறையாடியிருக்க முடியுமா? அதனால் விளைந்த 'அரசியல் நீக்கம்' (depoliticize) தொடரும் வரை, 'திருமங்கலம், ஆர்.கே.நகர் பாணியில்' தமிழ்நாடு பயணிப்பதையும் குறை கூற முடியுமா?  

புறத்தில் 'யோக்கியராக‌' வெளிப்படுபவர்களில், அக நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லாம், எந்தப் பக்கம் செல்வாக்கு மாறுகிறது? என்று கண்காணித்து, அந்தப் பக்கம் மாறி பலன் பெறும் 'யோக்கியர்களாக' வாழ்வார்கள்சிறிமாவோ பண்டாரநாயகாவை விட்டு பிரபாகரன் ஆதரவு போக்கிலும், 'புளோட்' உமா மகேசுவரனை ஆதரித்தவர்கள், பின் பிரபாகரன் ஆதரவு போக்கிலும், 'மாறிய' புத்திசாலிகளைப் போலவே'.  

தமிழ்நாட்டில் மனித உரிமை வீரர்களின்(?) இரட்டை அளவுகோல் அணுகுமுறை பற்றி விவாதிக்க வேண்டிய நெருக்கடியை 'மாதொருபாகன்' ஏற்படுத்தியுள்ளது.
 (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலிகளின்' 'இரட்டை அளவுகோல்' சமூக நோயில் சிக்காமல் பயணிக்கும் போது, 'கருத்து கறுப்பு வெள்ளை நோயிலும்' நாம் சிக்காமல் பயணிப்பது எளிதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html

'கருத்து கறுப்பு வெள்ளை நோயே', பிம்ப வழிபாட்டின் அடித்தளமாகும்.

கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கி, புற 'கட்சி, கொள்கை' லேபிள்களில் ஏமாந்து, 'பெரியார்' கொள்கையாளர்களாகத் தம்மை கருதி அல்லது பிறரை ஏமாற்றி வாழ்பவர்களில் சிலர், இன்று எனது உண்மையையையும், நேர்மையையும் சந்தேகித்து, நான் 'பிராமண சார்பாக விலை போய் விட்டதாகநேரில் விவாதிக்கும் துணிவின்றி, எனது முதுகுக்குப் பின்னாள் பிரச்சாரம் செய்ததும், துக்ளக் இதழில் நான் ஏமாந்து, ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகஎழுத சம்மதித்துள்ளதாக, எனது அறிவை சந்தேகித்து, “நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்என்று நேரடியாக எனக்கு அறிவுரை வழங்க முற்பட்டதும்

கல்லூரி பேராசிரியராக பணியாற்றியதால், புலமையாளர்களுடன் பழகும் அனுபவங்கள் நிறைந்திருந்த எனக்கு;

'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்ததால் கிடைத்த மேலே குறிப்பிட்ட அனுபவங்கள் எல்லாம், வேறு வழியில் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத அரிய சமூக சிக்னல்கள் ஆகும்விவாதப் பொருளுக்கான வரம்பை மீறி, விவாதத்தில் எதிர்நிலையில் உள்ளவரின் நேர்மையையும் அறிவையும் விவாதத்திற்குள் தன்னிச்சையாக நுழைத்து களங்கப்படுத்துவது அநாகரீகமாகும். அந்த அநாகரீகமின்றி வாதாடக்கூடிய 'பெரியார்' ஆதரவாளர்கள் அரிதாகி வருகிறார்கள். அது போலவே, தமக்கு ஆதாயமானவர்களைப் புகழும், பின் ஆதாயமில்லையெனில், அவர்களை இகழும் 'முற்போக்குகள்' வரிசையில் இடம் பெறாதவர்களும் அரிதாகி வருகிறார்கள்.

.வெ.ரா பிராமணர் அமைப்புக்களிலும் பிராமணர் நடத்தும் நிறுவனங்களிலும் உரைகள் ஆற்றியிருந்தும், பிராமணர் நடத்தும் இதழ்களில் பேட்டிகள் அளித்திருந்தும், தனது திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜி உள்ளிட்ட பிராமணர்கள் ஆதரித்ததை பகிரங்கமாக நன்றியோடு அறிவித்திருந்தும்;

தமது அறிவு வரை எல்லைகள் பற்றிய தெளிவின்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்களை எல்லாம் வேதவாக்குகளாக இன்றும் கருதிக்கொண்டு, 'பெரியார்' பிம்பத்தில் .வெ.ராவை சிறைப்படுத்திய சமூக செயல்நுட்பத்தால் வெளிப்பட்டதே மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஆகும்.
(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html

தமிழ்நாட்டை ஊழல் சூறையாடி, அந்த ஊழல் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்திற்கு காரணமான 'திராவிட' ஊழல் ஆதிக்கவாதிகளுக்கு, 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், 'ஆயுதமாக' பயன்பட்டு வருகிறார்களா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்

இசை ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்த காலத்தில், எனக்கும் மிகவும் நெருக்கமான சக பேராசிரியராக .மார்க்ஸ் இருந்தார். அப்போது 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்று நான் எழுதி வெளியிட்ட நூலுக்கு எதிராக, அவர் கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டு சொற்பொழிவும் நிகழ்த்தினார்.

அந்த நிலையிலும், “நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா? " என்று நான் அவர் மீதோ, அவர் என் மீதோ குற்றம் சுமத்தியதில்லை. தாம் வாழ்கின்ற இடத்தில், பணியாற்றுகின்ற இடத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், கண்முன் நடக்கிற அநீதிகளை தம்மால் முடிந்த அளவுக்கு எதிர்த்தும் வாழ்கின்றவர்கள், அவரவர் நிலைப்பாடுகள் எதிரெதிராக இருந்தாலும் மதித்து வேறுபடும் நாகரீகத்தையே வெளிப்படுத்துவார்கள்; இன்றும் தமிழ்நாட்டில்.

அந்த காலக்கட்டத்தில், .மார்க்ஸ் வகுப்புக்கு இடையூறு விளைவித்த ஓழுங்கீன மாணவர்களில் எடுபிடி மாணவர்களாக  இருந்த சிலருடன், 'பெரியார் கொள்கை 'போதையில் நான் சேர்ந்து (தமிழில் படிக்கும் ஆர்வமற்ற, ஆங்கில அறிவில்லாதவர்களுக்கு, சர்வதேச அரசியல்/ஊழல் பற்றி விளக்கி) செயல்பட்டதானது, ஒரு 'சமூகக் குற்றம்' என்பதை இப்போது உணர்ந்துள்ளேன்; அதன் மூலம், 1948 தூத்துகுடி மாநாட்டில் .வெ.ரா ஆற்றிய 'அபாய அறிவிப்பு' உரையின் சமூக முக்கியத்துவத்தையும்,  புரிந்து கொண்டேன்.

1944க்கு முன் தமிழ்நாட்டில் தலைவர்களின், சிலைகளின், பிம்ப வழிபாடு இருந்ததில்லை. எந்த கொள்கையாளராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட உண்மை, நேர்மை, புலமை போன்றவற்றின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டார்கள்; சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பெரும்பாலோர் அவ்வாறே ஆத்திகர்களாலும் மதிக்கப்பட்டார்கள்.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், இந்துத்வா கட்சிகளாக இருந்தாலும், உண்மையாகவும், நேர்மையாகவும், சுயலாப கணக்கின்றி வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் திக்கத்தக்கவர்களே ஆவர்.

மேலே குறிப்பிட்ட 'இரட்டை அளவுகோல்' சமூக நோயிலும், அதன் தொடர்ச்சியான 'கருத்து கறுப்பு வெள்ளை நோயிலும்', நாம் சிக்காமல் பயணிக்கும் போது, அத்தகையோரை நாம் மதிப்பதும், நம்மையும் அத்தகையோர் மதிப்பதும், ஆக்கபூர்வமான  சமூக தளவிளைவினை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்.

தமது நிலைப்பாட்டிற்கு எதிரான கட்சிகளை, கட்சிகளில் உள்ள நபர்களை, நடத்தும் இதழ்களை 'எதிரியாக' அணுகுவது 'வெறுப்பு சமூக நோயின்' அறிகுறியாகும். 1944க்குப் பின், அது சமூக நோயாக வளர்ந்து, இன்று அனைத்து கட்சிகளிலும் அத்தகைய நோயாளிகள் இடம் பெறும் அளவுக்கு உச்சத்தில் உள்ளது: அடுத்த கட்டமாக வீழ்ச்சியையே இயற்கையின் போக்கில் எதிர்நோக்கி.

'பெரியார்' இயக்கத்தில் நான் பெற்ற அனுபவங்களை 'கறுப்பு வெள்ளையாகவே' நான் அணுகியதில்லை. அவற்றை சமூக வண்ணமயமாகவே அணுகி, எனது சமூக ஆய்வுக்கான அரிய உள்ளிடுகளாகவே பயன்படுத்தி வருகிறேன்.

'பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில், கீழ்வரும் நிகழ்ச்சியானது, எனக்கு மறக்க முடியாத அனுபவமானது.

1970களின் கடைசியில், தஞ்சாவூர் (இன்றைய) பழைய பேருந்து நிலையம் அருகில் தி. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் உணர்ச்சிகரமாக பேசிய தி. பொருளாளர் கா.மா.குப்புசாமி, "கம்பன் என்ன பெரிய கவிச்சக்கரவர்த்தி? எங்க கட்சியில இருக்காரே துரை.சக்கரவர்த்தி. அவருகிட்ட போட்டி போட முடியுமா?" என்று பேசிய போது, ஒரே கை தட்டல். அதை ரசித்த 'முட்டாள்களில்' நானும் ஒருவன். (பழந்தமிழ் இலக்கியங்களை 'இசையின் இயற்பியல்' ‍– Physics of Music-   ஆய்வுக்கு உட்படுத்தும் வரை, அவ்வாறே பயணித்தேன்).

இன்று எனது முட்டாள்த்தனத்தினை உணர்ந்து வருத்தப்பட்டாலும், அவ்வாறு பேசிய மறைந்த கா.மா.குப்புசாமி மீது எனக்கு இன்றும் வருத்தம் இல்லை. 'பெரியார்' இயக்கத்தில் நான் பழகிய உண்மையான, நேர்மையான மனிதர்களில் அவரும் ஒருவர் ஆவார். .வெ.ராவின் தமிழுக்கு எதிரான வாதங்கள் எல்லாம், அவருக்கு நெருக்கமான தமிழ்ப்புலமையாளர்களின் எதிர்ப்பின்றி முன்னெடுக்கப்பட்டதாலேயே, கா.மா.குப்புசாமி போன்றவர்கள் அது போல பேசி கைத்தட்டல்கள் பெறும் அவலமானது, தமிழ்நாட்டில் அரங்கேறியது.
 

அது போலவே, மறைந்த துரை.சக்கரவர்த்தி மீதும் எனக்கு வருத்தம் இல்லை. நகைச்சுவை ததும்ப பேசிய அவர், என்னிடம் ஒரு முறை கீழ்வரும் இரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கிராமப்பகுதிகளில் பொதுக்கூட்டம் பேசுவதற்கு முன், அந்த கிராமத்தில் செல்வாக்கான சாதியில் உள்ள செல்வாக்கான மனிதர்களின் பெயர்களை விசாரித்துக் கொள்வார். பின் தனது பேச்சின் துவக்கத்திலேயே, தான் அந்த செல்வாக்கான நபருக்கு தூரத்து உறவினர் என்பதை தனது பேச்சின் போக்கில் வெளிப்படுத்தி விடுவார். அதன்பின் தனது பேச்சில், அந்த செல்வாக்கான சாதி உள்ளிட்டு எல்லா சாதிகளுமே இந்து மதத்தில் இழிவான சாதிகள் என்றும், இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து, கைத்தட்டல்கள் வாங்கி விடுவார்.’

அந்த பொதுக்கூட்டத்தில் அந்த 'இரகசிய செயல்நுட்பத்தினை' கடைபிடிக்காமல், அன்று பேசிய தீவிரத்தை விட, குறைவாக பேசி இருந்தாலும், அந்த பொதுக்கூட்டமானது வன்முறையின்றி அமைதியாக நடந்திருக்காது. அது போலவே, தமிழ்நாட்டில் 'பெரியார்', அண்ணா மீது மதிப்பு கொண்டவர்களில், பெரும்பாலோர் இந்துமத பக்திமான்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம் (Depoliticize) தொடரும் வரை, கொள்கைகளை விட, தலைவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும்.

அது தெரியாமல், தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவு செய்து கண்டிக்கும் போக்கில், எச்.ராஜா, சீமான், வைகோ போன்ற இன்னும் பலர் பயணிக்கும் வரையில், அவர்கள் சார்ந்த கட்சிகள் எல்லாம், 'நோட்டா'வுடனும், 'டெபாசீட்டுடனும்' போட்டி போடும் நிலை தான் தொடரும்.

கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது

'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'

என்ற புறநானூற்று வரிகளை, அக நோக்கில் தம்மைக் குவியமாக்கியஅணுகுமுறையில் தம்மைத் தாமே கண்காணித்து வாழ்பவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரட்டை வேடப் போக்குகளில் பயணிக்க மாட்டார்கள்.

கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; மது சொகுசு தேவைகளுக்கும் (Needs), ஈடுபாடுகளுக்கும் (Interests) தாம் அடிமையாகி, மது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்கியும் அவர்கள் வாழ மாட்டார்கள்.

சாவு எப்போது வந்தாலும் வரவேற்கும் மனநிலையிலேயே, ஒரு தனி மனித இராணுவம் போலவே சாகும் வரை வாழ்வார்கள்.

உலக அளவில் அறிவுபூர்வஅதிர்வலைகளை ஏற்படுத்தியஸ்பினோசா, அது போன்றே வாழ்ந்து மறைந்தார். ('Spinoza - A life ' - by Steven Nadler)

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) ஒரு தனி மனித இராணுவம் போல வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும்

No comments:

Post a Comment