வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(1)
சில தினங்களுக்கு முன் நடந்த கீழ்வரும் அனுபவத்தினை, சமூக நலன் நோக்கில் பகிர்வது சரியெனப்பட்டது.
எனது பாதுகாவலராக (Care
Taker) இருக்கும் மூதாட்டி, சில தினங்களுக்கு முன், தயங்கி, தயங்கி, கீழ்வரும் கேள்வியைக் கேட்டார்.
'சார், தப்பா எடுத்துக்காதீங்க, நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?"
என்றார்.
"என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க. தப்பா எடுத்துக்க மாட்டேன்' - நான்
" நீங்க பாத்ரூம்ல உள்ள இருக்கறப்ப வெளியே, நீங்கள் ஏதோ பேசுற மாதிரி குரல் கேட்குதே" அவர்.
ஒரு நிமிடம் யோசித்தேன்.
கீழ்வரும் எனது பதிவு ஞாபகத்திற்கு வந்தது.
“உலகில் நிரம்பி உள்ள புதியவைகளை (full
of new things) மனமகிழ அனுபவித்து வாழ வேண்டுமானால் (Joyful
life), ஒரு குழந்தைக்கான கண்களும், காதுகளும், உள்ளமும் நமக்கு வேண்டும்.
இன்றும் கூட குழந்தைகள் விளையாடும்போது, அவர்களுள் ஒரு குழந்தையாக நாம் விளையாட முடியும். ஆனால் அவ்வாறு விளையாடும்போது, நீங்கள் 'குழந்தை' போல நடித்தால், தங்களுள் ஒருவராக உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அருகில் இருந்து உங்களைப் பார்க்கும் பெரியவர்கள், உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? என்று எண்ணக்கூடும்; நீங்கள் உண்மையில் அந்த குழந்தைகளில் ஒருவராக மாறினால்.
‘The world is full of new
things which could be enjoyed only if we have the eyes, ears and mind of the
child.
Even now you can ‘start’
enjoying life like a child in the midst of children. If you ‘act’ like a child,
they may not accept you as one of them. Also, the adults nearby watching you
may think you have become mad, if you really ‘become’ one of them.’ (‘Joyful
Life: Are you aware of the child in you?’; https://veepandi.blogspot.com/2014/01/normal-0-false-false-false-en-us-x-none.html
)
மேலே குறிப்பிட்ட கேள்வியை எழுப்பிய, கிராமத்திலிருந்து வந்து என்னைப் பாதுகாத்து வரும் மூதாட்டி, என்னை பைத்தியம் என்று கருதினால் என்ன ஆகும்?
அவரிடம் உண்மையையும் மறைக்க நான் விரும்பவில்லை.
‘என்ன ஆனாலும் சரி’; என்று முடிவு செய்து, எனது அறிவு மற்றும் அனுபவத்திற்கு சவாலாக வெளிப்பட்ட கேள்விக்கு, கீழ்வருமாறு பதில் சொன்னேன்.
"அம்மா, காலைல எந்திருச்சதிலிருந்து, நம்மை வீட்டைச் சுற்றி வெளியே பறவைகள் எழுப்பும் ஒலியை, தினமும் நான் கூர்ந்து கவனிப்பேன். பாத்ரூம்ல இருக்கறப்ப, காதில் விழும் அந்த ஓசைகளில் இருந்து, சில பகுதியை பிரித்து, நான் அது போல குரல் எழுப்பி பார்ப்பேன். பின் அதையே ட்யூனாக மாற்றி பாடுவேன். அது நன்றாக வந்தால், மனதில் அதற்கேற்ற சொற்களைப் போட்டு பாடுவேன். வாக்கிங் போகும் போதும், கேட்கும் பறவைகளின் ஓசைகளைக் கொண்டு, மனதிற்குள் அது போன்ற பயிற்சி செய்வேன்."
என்று சிறு விளக்கம் அளித்து, அவரின் முகத்தைப் பார்த்தேன். என்னை 'பைத்தியம்' என்று கருதியதற்கான அறிகுறிகள் வெளிப்படவில்லை.
பின் சற்று துணிச்சலாக,
"அப்படி ஓசைகளை பிரிச்சுப் பாக்கறதுதாம்மா சந்தம்"
என்று சொன்னேன்.
ஏதோ புரிந்தது போல், தெரிந்ததது. பின் அவர் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார். நான் அந்த சவாலில் இருந்து தப்பித்து விட்டதாகக் கருதி வாழ்ந்து வருகிறேன். (குறிப்பு கீழே)
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நேர/ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க, 'நான் அனுமதித்துள்ள மனிதர்களைத் தவிர, என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ எவரும் பேச முடியாது. ஈமெயில் மூலமாக மட்டுமே எவரும் தொடர்பு கொள்ள முடியும்' என்ற வரையறையானது, இயற்கையோடும், சாமான்யரின் சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும் வாய்ப்பினை, எனது போக்கின் இயற்கை மூலமாக வழங்கியுள்ளது. அதனைக் கூட இருந்து பார்த்து வரும் அவருக்கு, மேலே குறிப்பிட்ட பதிலானது, என்னைப் பற்றிய வெளிச்சத்தை அவருக்கு கொடுத்திருக்கும்;
என்று நினைக்கிறேன். 'பைத்தியம்' என்று கருத மாட்டார், என்றும் நம்புகிறேன்.
எனது கடந்த காலத்தில் வித்தியாசமான ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்து வந்துள்ளேன். தப்பிப்பதற்கு இருந்த வழிகளை நாடாமல், கடனில் மூழ்கி அவமானங்களைச் சந்தித்தேன். பேராசிரியராக இருந்த போதும், கல்லூரி முதல்வராக இருந்த போதும், சமூகத்தை ஆராயும் நோக்கில், விரும்பியே அவமானங்களை 'அனுபவித்திருக்கிறேன். என்றுமே கிடைக்கும் தூரத்தில் இருந்த 'பாதுகாப்பு மண்டிலத்தில்'
(Comfort Zone) அடைக்கலமாகி வாழும் எண்ணம் இருந்ததில்லை;
என்பதை கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
‘வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய 'சுயலாப கணக்குகளை' எல்லாம், குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைத்து 'வளமான' முட்டாள்கள்?’; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_5.html
‘எனது வாழ்க்கை பரமபதத்தில் 'எதிர் நீச்சல்' போக்கில், எனது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, கி.வீரமணி, ஆண்டன் பாலசிங்கம் போன்றோருடன் 'நெருக்கமான' வாய்ப்புகளை எல்லாம் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல், அறிவுபூர்வ விமர்சனப் போக்கில் அவர்களை விட்டு விலகி, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எனது மாமனார் மற்றும் அவரின் வைப்பட்டி/துணைவி குடும்பத்திற்கு வாலாகி, 'வளம் சேர்க்காமல்', அவரின் சட்டபூர்வ மனைவி, மற்றும் ஒரே மகளின் உரிமைகளுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, கடனில் மூழ்கிய காலத்திலும், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம தலைமையில் இருந்த விஜய், அவர் விரும்பிய இசை ஆய்வுத்திட்டத்தை நிதி உதவியுடன் மேற்கொள்ள வற்புறுத்தியபோது, அத்திட்டம் ('உலகில் உள்ள இசைகள் எல்லாம், கர்நாடக இசைக்குள் அடக்கம்' என்று பாலமுரளி கிருஷ்ணா
வெளியிட்ட கருத்தினை நிரூபிக்கும்) மூலம் எனது திறமைகளை, எனக்கு தவறாக பட்ட திட்டத்தில் பயன்படுத்த எனது மனசாட்சி இடம் கொடுக்காமல் மறுத்து, பயணித்த பரமபத விளையாட்டில்; (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html
)’
எவ்வாறு உலகில் மூழ்காமல், உண்மையான புத்திசாலித்தனத்துடன் வாழ்வது? என்ற கேள்விக்கு;
உலக அளவில் புகழ் பெற்ற ஸ்பினோசா வெளிப்படுத்திய விடையையும், புறநானூறு வெளிப்படுத்திய விடையையும், கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.
‘வாழ்ந்த மனிதரின் பாவ புண்ணியங்களை பாரபட்சமின்றி நிறுத்து, புண்ணியம் மிகுந்தவர்களை மோட்சத்திற்கும், பாவம் மிகுந்தவர்களை நரகத்திற்கும் 'ஞமன்' அனுப்பும் சிற்பத்தினை;
கம்போடியா நாட்டில் உள்ள 'ஆங்கோர் வாட்' கோவிலில் கண்டு வியந்தேன்.
புராணங்கள் என்பவை பல பரிமாணங்கள் கொண்டவை ஆகும். அதனை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
எனவே 'ஞமன்' என்ற சொல்லினை, மேலே குறிப்பிட்ட சிற்பமாக மட்டுமே புரிந்து கொள்வதும், அல்லது அவரவர் அறிவு, அனுபவங்களின் அடிப்படைகளில் கூடுதல் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதும், அவரவரின் விருப்பமாகும்.
நமது இயற்கையின் இயல்பினைப் புரிந்து நாம் வாழ்ந்து வருவதை சீர் தூக்கி நிறுத்து, அதன் முடிவான நல்ல, மற்றும் கெட்ட பலன்களை நாம் அனுபவிப்பது;
தொடர்பான நாமும், ஞமனும், பலன்களும் ஒன்றியே பயணிப்பது;
என்ற எனது புரிதலானது, கீழ்வரும் சான்றுகள் வெளிப்படுத்தும் உண்மைகளோடு ஒப்பிடத்தக்கதாகும்.
'அகநேர்மையுடன்' கூடிய புரிதலில் நல்ல திசையில் பயணித்து நல்ல முடிவை எட்டுவதும், 'அந்த' புத்திசாலித்தனம் இல்லாமல், 'அக சீரழிவுடன்' பிறரின் பாராட்டு, புகழகுக்கு ஏங்கி, பிறர் பொறாமைப்பட வாழும் நோக்கில், தீய திசையில் பயணித்து தீய முடிவை எட்டுவதும், அவரவர் 'இயற்கை' ஆகும். இது தொடர்பாக, 'நாத்தீகர்' என்று தவறாக சிலரால் கருதப்பட்ட ஸ்பினோசா (https://en.wikipedia.org/wiki/Baruch_Spinoza
) தமது 'எதிக்ஸ்'
(ETHICS) நூலில், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
'கடலில் எதிரெதிர் காற்றுகளால் தூக்கி அடிக்கப்படும் அலைகளாக மனிதர்களைக் கருதினால், சுதந்திர மனிதர் அவ்வாறு அலைக்கழக்கப்படுவதில் பாதிக்கப்படாத வகையில் முயற்சித்து , கடலில் அலையாகிய தனது இடத்தினைப் புரிந்து பயணிப்பார்' (If
people are like the waves on the sea, tossed about by contrary winds, then the
free person is one who strives not to be affected by being tossed about, who
strives to understand his position as a wave on the sea.- Proposition 68
‘Ethics’)
'தமது இயற்கையின் இயல்பினைப் பற்றிய புரிதலின்றி, கெட்ட மனிதர் மோசமான அனுபவ பலன்களை அனுபவிப்பார்; நல்ல மனிதருடன் ஒப்பீடுகையில்.'
(Lacking understanding of his
own nature, he (the evil person) will inevitably have more bad experiences than
good ones’ Page 132, Spinoza’s Ethics)
மேற்குறிப்பிட்ட கருத்தானது, கீழ்வரும் சான்றினை எனக்கு நினைவூட்டியது.
"'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
" புறநானூறு 192:
6 – 13
'ஆற்று நீர் வழிப்படூஉம் புணை போல்' பயணிக்கும் சுதந்திர மனிதர், ஆற்றின் ஓட்டத்தில் அலைக்கழக்கப்படுவதில் பாதிக்கப்படாத வகையில் முயற்சித்து, 'ஆர் உயிர் முறை வழிப்படூஉம்' என்பதில் 'தெளிந்த திறவோர்' ஆக, மேலிடத்திற்கு வாலாட்டாமலும், தமக்கு கீழுள்ளவர்கள் வாலாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமலும், செயல் சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாகப்' பயணிப்பார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html
)
'ஆற்று நீர் வழிப்படூஉம் புணை போல்'
பயணிக்கும் போது, அலைக்கலைப்பில் சிக்கியது பற்றிய கவலையில் மூழ்காமல், சிக்கிய சுழலில்
மீண்டும் சிக்காத எச்சரிக்கையுடன் விலகி, அடுத்த போக்கினை எதிர்கொள்ளும் சுறுசுறுப்புடன்
பயணிப்பதே புத்திசாலித்தனமாகும்.
குழந்தைகள் அழுவதும், பின் அழுததற்கான காரணங்கள் அகன்ற பின்பு தாமதமின்றி மகிழ்ந்து விளையாடுவதும், தமது மனதிற்கு எந்த காரணத்தாலோ பிடிக்காத நபருடன் 'ஓட்டுவதைத்' தவிர்த்து, வெறுத்து விலகி வாழ்வதும் எனது கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தைகள் அழுவதும், பின் அழுததற்கான காரணங்கள் அகன்ற பின்பு தாமதமின்றி மகிழ்ந்து விளையாடுவதும், தமது மனதிற்கு எந்த காரணத்தாலோ பிடிக்காத நபருடன் 'ஓட்டுவதைத்' தவிர்த்து, வெறுத்து விலகி வாழ்வதும் எனது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவ்வாறு வாழும் குழந்தையின் கண்களும், காதுகளும், உள்ளமும் துறு துறு வென்று தம்மைச் சுற்றியுள்ளவற்றை கூர்ந்து கவனித்து, பெரியவர்களைப் பற்றிய கவலையின்றி வாழும்.
அவ்வாறு நாம் வாழ வேண்டுமானால், எந்த அளவுக்கு நமது உடலும், உள்ளமும் அனுமதிக்கிறதோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கைக்கான தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழ முடியும்;
கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்'
(Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; நமது சொகுசு தேவைகளுக்கும்
(Needs),
ஈடுபாடுகளுக்கும்
(Interests) நாம் அடிமையாகி, நமது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்காமல்.
ஸ்பினோசா அது போன்றே வாழ்ந்து மறைந்தார் என்பதை 'Spinoza
- A life ' (by Steven Nadler) என்ற நூலின் மூலமாக நான் விளங்கிக் கொண்டேன்.
'பலகீனமான சுதந்திரமானது', வெளியில் தெரிந்தும்/தெரியாத இழிவான சமரசங்களில், நமது வாழ்வை சங்கமமாக்கி விடும். பதவியின் காரணமாகவோ, வசதியின் காரணமாகவோ, சமூகத்தில் மேல் நிலைகளில் இருந்தவர்கள் எல்லாம், 'அந்த' நிலைக்கு மன அடிமையாகி, வெளியில் தெரியாத 'தன்மானக்கேடான சமரசங்களுடன்', 'பலகீனமான சுதந்திரர்களாக' வாழ்ந்த போக்கானது, 1967
முதல் அதிவேகமாக அதிகரித்ததும், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணமானது;
திராவிட அரசியலில் காலில் விழுந்து காரியம் சாதிக்கும் 'சமூக நோய்', 1967க்குப் பின் முளை விட்டு, வீரியத்துடன் வளர்ந்ததற்கும் அதுவே காரணமானது;
என்பதும், மேலே குறிப்பிட்டவாறு, 'விரும்பி' அவமானங்களை அனுபவித்து, நான் மேற்கொண்ட சமூக ஆய்வின் முடிவாகும்.
திராவிட அரசியலில் காலில் விழுந்து காரியம் சாதிக்கும் 'சமூக நோய்', 1967க்குப் பின் முளை விட்டு, வீரியத்துடன் வளர்ந்ததற்கும் அதுவே காரணமானது;
என்பதும், மேலே குறிப்பிட்டவாறு, 'விரும்பி' அவமானங்களை அனுபவித்து, நான் மேற்கொண்ட சமூக ஆய்வின் முடிவாகும்.
'காரியம்' சாதிக்க 'போலியாக' சிரிப்பது, பாராட்டுவது, கண்டிப்பது, மேல் நிலையில் உள்ளவர்களுக்கு வாலாட்டுவது, கீழ்நிலையில் உள்ளவர்களை தமது செல்வாக்கின்(?) மூலம் வாலாட்ட வைப்பது என்ற போக்கில் சாகும் வரை பயணித்து, இயல்பைத் தொலைத்த கோமாளிகளாக வாழ்ந்து, எவ்வளவு சொத்து சேர்த்தாலும், செத்த பின், அந்த சொத்து கூட வராது. ஆனால் செத்தவரை நினைப்பவர்கள் மனதில்,
'அந்த' கோமாளி வருவதை எவரும் தடுக்க முடியாது. தமக்குள்ள நேர்மையான, இயல்பான தகுதி, திறமைகள் மூலம் வாழ்வதை விரும்பாமல், தமது வசதி வாழ்வினை உயர்த்தி 'சொகுசு பாதுகாப்பு மண்டிலம்' நோக்கிய பயண வெறியை அகத்தில் மறைத்து, புறத்தில் 'யோக்கியர்' வேடத்துடன் 'பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி, தனித்தமிழ்நாடு, ஈழ விடுதலை' ஆதரவு 'குறுக்கு வழிகளில்' இதுவரை அம்பலமாகாமல் பயணித்து, தமது 'வெறியில்' வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம், 'அந்த' கோமாளிகள் வரிசையில் சிறப்பு இடங்களும் காத்திருக்கின்றன; வருங்கால 'சூது கவ்வும்' போன்ற திரைப்படங்களில், பாத்திரங்களாக இடம் பெறும் வகையில்
தமது 'பொதுத்தொண்டருக்கான இலக்கணத்தினை' 'பெரியார் கட்சிகளின்' தலைவர்களே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்யத் தயங்குகிறார்களா? என்ற ஐயம் எழும் அளவுக்கு (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html );
தமது 'பொதுத்தொண்டருக்கான இலக்கணத்தினை' 'பெரியார் கட்சிகளின்' தலைவர்களே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்யத் தயங்குகிறார்களா? என்ற ஐயம் எழும் அளவுக்கு (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html );
'பெரியார்' என்ற பிம்பத்தினுள் சிறை பட்டதாலும், தமது அறிவு வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான, அடையாள அழிப்புடன் கூடிய 'வெறுப்பு நோய்' வளரும் வகையில் வாழ்ந்து மறைந்ததாலும்;
பணக்கார சொகுசு வாழ்க்கையிலிருந்து, விரும்பி கீழ் இறங்கி, உலகிலேயே இணை சொல்ல முடியாத அளவுக்கு 'சாமான்ய' வாழ்வு நிலையில் ஈ.வெ.ரா அவர்கள் வாழ்ந்ததை;
ஸ்பினோசாவுடன் ஒப்பிட முடியாததாகி விட்டது.
நிகழ்கால வரலாற்றில் இந்தியாவில், அகத்தில் சுயலாப கணக்குகளின்றி, தடைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல், முன்னேறி அரிய சாதனை படைத்த பின்னும், பாராட்டு, புகழ் போன்றவற்றை தவிர்த்து, தன்முனைப்பின்றி நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஏக்நாத் ரானடே ஆவார். (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html)
எனது அனுபவத்தில், மேலே குறிப்பிட்ட ஸ்பினோசா வெளிப்படுத்திய விடையை விட, புறநானூறு வெளிப்படுத்திய விடையே, செயல் சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாக' நாம் வாழ உதவும்.
எனது அனுபவத்தில், மேலே குறிப்பிட்ட ஸ்பினோசா வெளிப்படுத்திய விடையை விட, புறநானூறு வெளிப்படுத்திய விடையே, செயல் சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாக' நாம் வாழ உதவும்.
அவ்வாறு வாழ, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையோடும், அந்த இயற்கையை விட்டு அதிக தூரம் விலகி வாழ வசதி அல்லது விருப்பம் இல்லாத சாமான்யர்களின் சமூகத்தோடும், (எனது அனுபவத்தில் பிரமிப்பூட்டும் படைப்புக்கான
(Creativity)/ஆராய்ச்சிக்கான ஊற்றுக்கண்கள்) 'ஒட்டி' (திருக்குறள் 140) வாழ்வதற்கான 'குழந்தை இரகசிய'த்தைத் தான், நான் துவக்கத்தில் விளக்கியுள்ளேன்.
மனிதர்கள் எல்லாம் மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer)
(https://en.wikipedia.org/wiki/Transducer)
ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver),
சிக்னல் பரப்பியாகவும்(Transmitter),
ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில்; (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html)
செயல் சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாக' நாம் வாழும் இரகசியத்திற்கான மூலங்களில்
(sources) ஒன்றாக குழந்தைகள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாமான்யர்களின் குடும்பங்களில்;
நகர்புற நாகரீகத்திலும், ஆங்கிலவழி அடிப்படைக்கல்வியிலும் சிக்குவதற்கு முன்பு வரை.
அவ்வாறு சிக்கிய குழந்தைகள் எல்லாம், 'மேலே குறிப்பிட்ட குழந்தையை' கீழ்வரும் போக்கில் தொலைத்து, ஆரம்பப் பள்ளியிலேயே 'பெரியவர்களாக' வளர்கிறார்கள்.
அவ்வாறு சிக்கிய குழந்தைகள் எல்லாம், 'மேலே குறிப்பிட்ட குழந்தையை' கீழ்வரும் போக்கில் தொலைத்து, ஆரம்பப் பள்ளியிலேயே 'பெரியவர்களாக' வளர்கிறார்கள்.
‘விடியற்காலை 5 மணிக்கே தூக்கக் கலக்கம் கூட கலையாத குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து வேனில் ஏற்றும் வரை அவர்கள் கடைபிடிக்கும் கட்டாயப்படுத்தல் போக்கும் சரி, பள்ளி திரும்பிய குழந்தைகளைப் பின் படிக்க வைக்கும் போக்கும் சரி, மதிப்பெண்கள் குறைந்தால் பெறும் கோபமும், பிள்ளைகளை அடிப்பதும் சரி, குரங்காட்டியையும் பெரும்பாலான தாய்மார்கள் விஞ்சி விடுவார்கள்.
அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும், முதலாம் வகுப்பு சேரும் முன்னரே, இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 'கலைகளில்', முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள்.
உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழி கல்வியற்ற ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல்
(originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள்
(values) ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையான கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ
(domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ
(unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
)
மேலே குறிப்பிட்ட போக்கில் சிக்கி அல்லது தப்பித்து வளர்ந்து, இன்று கல்லூரி மாணவர்களாகவும், அல்லது முனைவர் பட்ட ஆய்வாளர்களாகவும் என்னுடன் பழகும் வாய்ப்புள்ளவர்களில்;
எனக்குள் இருக்கும் 'குழந்தையை' நான் பராமரித்து, பாதுகாத்து வருவதைக் கண்டு;
எனது ஆராய்ச்சிகளின் மூலமாக வியந்து,
தாங்கள் இழந்த/தொலைத்த 'குழந்தையை' தங்களுக்குள் தேடத் தொடங்கியிருந்தாலும் வியப்பில்லை.
தமிழின், தமிழ்நாட்டின், தமிழர்களின் மீட்சிக்கு, அது போன்ற தேடல்களும் முக்கிய பங்கு வகிக்கும்;
'பலகீனமான சுதந்திரர்கள்' எல்லாம் திருந்த வேண்டும், அல்லது ஒதுங்க வேண்டும்;
என்ற நெருக்கடியையும் ஏற்படுத்தும்; என்பதும் எனது கணிப்பாகும்.
குறிப்பு: சாஸ்திரா பல்கலைக்கழகத்திலும், திருச்சி NIT-இலும், எனது 'Music
Information Technology' (இசைத்தகவல் தொழில்நுட்பம்) வகுப்புகளில் பங்கேற்ற B.Tech
மாணவர்களுக்கு, எவ்வாறு பறவைகள் உள்ளிட்டு இயற்கையிலிருந்து வெளிப்படும் ஓசைகளில் இருந்து, இசைக்கான சந்தம் உருவாக்குவது? என்பதை விளக்கியிருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களிலும் 'அந்த' நுட்பம் பற்றிய சான்றுகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment