Wednesday, July 10, 2019


 'துக்ளக்' யோக்கியதை என்ன


'விடுதலை' யோக்கியதை என்ன?



'துக்ளக்' இதழைக் கண்டித்து 'விடுதலை' இதழில்  வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்என்ற தலைப்பில்  வெளிவந்த கட்டுரையில்:

"கிளர்ச்சி தொடக்கப்பட்டது மார்ச் முப்பது - தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தது. 13.4.1924 இரண்டே வாரத்தில் வைக்கம் சென்று போராட்டத் துக்குத்  தலைமை தாங்குகிறார்.

உண்மை இவ்வாறு இருக்க, 'துக்ளக்' என்னும் துப்புக்  கெட்ட இதழ் ஒரு  கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது"

.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசி கட்டத்தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார்என்று எழுதுகிறது என்றால், இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."

-       'துக்ளக்' இதழைக் கண்டித்து 'விடுதலை' இதழில் வெளிவந்த கட்டுரை; http://viduthalai.in/2011-07-25-07-58-59/183388-2019-06-20-12-00-48.html

அறிவுபூர்வமான விவாதத்தில், விவாதப் பொருளின் வரை எல்லைகளுக்குள் இருந்து விவாதிப்பதே அறிவுள்ளவர்களின் நாகரீகமாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2015/10/). 

அவசரப்பட்டு 'வக்கிரப்புத்தி', 'துப்புக்  கெட்ட இதழ்' என்ற சொற்களுடன் முன் வைத்தது தவறானால், அசிங்கம் யாருக்கு? இது டிஜிட்டல் யுகம். நாகரீகமான வாதங்கள் மூலமாகவே, மாணவர்களின், படித்த இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.   

'துக்ளக்' இதழில்ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்தது. (கீழே குறிப்பு 1-இல்) அதில் '.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில் தான் கலந்து கொண்டு தலைமையேற்றார். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டப் பெருமை முழுவதும் அவருக்கே தரப்படுகிறது.' என்று குறிப்பிட்டிருந்தேன்.

அது தொடர்பாக வந்த விமர்சனத்திற்கு கீழ்வரும் பதிவுகளில் விளக்கமும் கொடுத்துள்ளேன்.



மார்ச் 31, 2015-இல், '‘தந்திதொலைக்காட்சி:  கி.வீரமணி பேட்டி; சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டுமல்லவா?' 

என்ற தலைப்பில் வெளிவந்த எனது கட்டுரையைப் படித்திருந்தால், மேற்குறிப்பிட்டவாறு 'விடுதலை' இதழில் கட்டுரை வெளிவந்திருக்காது; என்பதும் எனது கருத்தாகும். அக்கட்டுரையில் 'வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு' என்ற தலைப்பில் எப்போது .வெ.ரா பங்கேற்றார்/ என்பதை விளக்கியுள்ளேன்.

                             வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு:

வைக்கம் போராட்டத்தின் வரலாறு, 1865இல் தொடங்குகிறது. திருவாங்கூர் அரசு வைக்கத்தில் அனைத்து பொது சாலைகளிலும் நடக்கலாம் என்ற அரசாணையானது, நீதி மன்ற தீர்ப்பு மூலம் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குப் பொருந்தாது என்று அமுலாகிறது. அதை எதிர்த்து ஈழவ இளைஞர்கள் நடத்திய போராட்டம் 'ஜாலியன்வாலாபாக் ' பாணியில் ஒடுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். பின் 1905லும், 1920லும் அப்போராட்டங்கள் தொடர்ந்தன. 1923இல் காகிநாடாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் போராட்டத்தை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த அந்த போராட்டத்தில், காந்தி மேற்கொண்ட அணுகுமுறை போராட்டத்தைப் பலகீனப்படுத்தியது. காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டதை காந்தி கண்டித்தார். இந்து அல்லாதவர்கள், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது, பொருளுதவியும் செய்யக்கூடாது என்று காந்தி தடுத்தார். அதனால் போராட்டத்தில் பங்கேற்றிருந்த அகாலிக் கட்சியினர் விலக, போராட்டத் தலைவர்களில் ஒருவராக கைதாகியிருந்தஜார்ஜ் ஜோசப்பும் போராட்டத்தை விட்டு விலகி, போராட்டம் பிசுபிசுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இது போன்ற சீர்திருத்தங்களில் ஈடுபட்டு புகழ் பெற்றிருந்த பெரியாருக்கு அழைப்பு வந்தது. திருவாங்கூர் அரசர் ஈரோட்டில் பெரியார் இல்லதிற்கு விருந்தினராக வந்தவர். வைக்கம் எல்லையில் தமக்கு தந்த அரச மரியாதையைப் புறக்கணித்து, பெரியார் தமது மனைவி நாகம்மையுடன் போராட்டத்தில் ஈடுபட, போராட்டம் சூடு பிடித்தது. பெரியார் சிறையிலிருந்தபோது, அரசர் மரணமடைய, அதைக் கெட்ட சகுனமாகக் கருதி, பெரியாரை வைக்கத்திலிருந்து விடுதலை செய்து, மீண்டும் சென்னையில் சிறை வைத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மட்டும் நடக்கும், (கோவில் நுழைவு உரிமையற்ற) சமாதானத்தை காந்தி ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் 'வைக்கம் வீரர்' என்று பெரியாருக்கு பட்டம் கொடுத்தது.’

அடுத்து கூடுதலாக, 'வைக்கம் போராட்டம்' தொடர்பான தகவல்களும் சான்றுகள் பற்றி ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு:

வைக்கம் போராட்டம் பற்றிய தகவல்களும் சான்றுகளும் கீழ்வரும் இணைய தளத்தில் உள்ளன. அதில் .வெ.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கும் முன் நடந்த போராட்ட காலம் வரும் பகுதிகள் கீழே:

வைக்கம் பொராட்டம் எப்போது தொடங்கியது? .வெ.ரா அவர்கள் எப்போது அப்போராட்டத்தில் கலந்து கொண்டார்?’


The first ever attempt at entry into the temple was made by a group of about 200 Ezhava youth in 1803-4.

The Ezhavas first took up issue in 1905. The Ezhava representatives in the Travancore Legislature (Kochu Kunjan Channar, Kunju Panicker and Kumaran Asan) raised the question of use of the public roads around the temples by avarnas. The authorities remained adamant and refused to take up the matter even for discussion because it was considered a religious question. In 1920-21, representative Asan also raised the question and it was decided to shift the notice boards a little, so that some parts of the roads would be accessible to the avarnas.

T. K. Madhavan met Mahatma Gandhi at Tirunelveli on 23 September 1921 and apprised him of the conditions of the Ezhavas and their achievements through the SNDP. Because they had already achieved admission to school, Mahatmaji agreed that the time was ripe for temple entry. Mahatmaji promised to write to the State Congress Committee to take up the issue.

Madhavan attended the Kakinada AICC meet (1923) in the company of Sardar Panikkar and K. P. Kesava Menon. Madhavan got a pamphlet printed: A request to the Indian National Congress on behalf of the untouchables of India. Madhavan tried with all his might to convince the members of the need to eradicate untouchability. The Congress agreed to include the eradication of untouchability in their constructive programs and resolved to lend full support to the Vaikom Movement, and authorized the Kerala Provincial Congress Committee (KPCC) to undertake the task.

In accordance with the Kakinada Congress resolution, the KPCC met at Ernakulam on 24 January 1924 and formed an Untouchability Abolition Committee (UAC) consisting of K. Kelappan (convener),

The KPCC, the UAC and the Publicity Committee reached Vaikom on 28 February 1924.

On the morning of 30 March 1924, a bugle call for action was sounded. The first batch of volunteers selected to offer Satyagraha were Kunjappy (Pulayan), Bahuleyan (Ezhava) and Venniyil Govinda Panicker

There was another crucial incident, which triggered the action. Sree Narayana Guru himself was prohibited from passing through the roads around the temple. Sri Bhargavan Vaidyar mentions this in the golden Jubilee Souvenir of Neyyattinkara S N D P Union. The editorial of the Malayala Manorama on 29 March 1924 (the day before the starting of the Satyagraha) mentions, If a venerable sage like Sree Narayana Guru and his disciple Mahakavi Kumaran Asan were driven away from the road around the temple by a drunken upper caste buffoon in the name of caste, can their people take it lying down? If they rise up in revolt can any authority stop them by force?

Periyar E. V. Ramasamy came with his wife Nagammai and a group of followers and offered Satyagraha on 14 April.' 

துக்ளக் சோ முன்பு ஓர் இதழில் சமஸ்கிருத சொற்களைக் கொண்டு, கண்டபடி பொருளற்ற வாக்கியங்களை உருவாக்கி, துக்ளக் இதழில் வேதங்களில் இருந்து அவற்றை எடுத்துப்போட்டதாக அறிவித்து, அந்த வாக்கியங்களின் பொருள் என்று, துக்ளக் சோ தாமாக உருவாக்கிய கருத்துரையை வெளியிட்டார். அந்த குறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை. பின் சில மாதங்கள் கழித்து, துக்ளக் சோவே, அந்த குறைபாட்டினை துக்ளக் இதழில் வெளியிட்டு, தமக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். அதற்காக அவரை 'சமஸ்கிருத விரோதி, வேத விரோதி' என்று உணர்ச்சிபூர்வ சமஸ்கிருதப் பற்றாளர்கள் எவரும் துக்ளக் சோவை கண்டித்ததாக தெரியவில்லை
(‘'சோ.ராமசாமியும், .வெ.ராமசாமியும்'’;
http://tamilsdirection.blogspot.com/2018/09/ )


துக்ளக்' இதழை,பெரியார் கொள்கையாளராக பயணித்த காலத்தில் வெறுத்து, தவிர்த்து வந்த நான், பழந்தமிழ் இலக்கியங்களை 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) ஆய்வுக்கு உட்படுத்தி பயணித்த போக்கில்;

அது போன்ற வெறுப்பு நோய்களில் இருந்து விடுபட்டேன். 2005 சூலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த போது, 'துக்ளக்' இதழில் 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் பற்றிய கட்டுரை வெளிவந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின் துக்ளக் இதழை வாங்கி, அந்த கட்டுரையைப் படித்து வியந்தேன். தி.மு. தலைவரின் ''தொல்காப்பிய பூங்கா' நூலில் இருந்த குறைகளை அறிவுபூர்வமாக வெளிப்படுத்திய அந்த முயற்சிக்கு, தமிழ்நாட்டு பிரபல மீடியாக்களில் இடம் அளித்தவை துக்ளக்கும், தினமலர் நாளிதழ் மட்டுமே என அறிந்தேன்.

அந்தப் பிரச்சினையில், 'தமிழ், தமிழ் உணர்வு, வீர தீர சூரர்கள்' வாலைச் சுருட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்களா? இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், 'தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்' என்ற கட்டுரையை உருவாக்கி தமிழ், தமிழுணர்வு, பெரியார் கொள்கை ஆதரவாளர்கள், இந்துத்வா ஆதரவாளர்கள் உள்ளிட்ட எனது சமூக வட்டத்தில் சுற்றுக்கு விட்டேன்.இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் (abridged version)  'சுதேசி செய்தி' (நவம்பர் 2013) இதழில் வெளிவந்துள்ளது

நன்கு படித்து, பாரம்பரியப் பண்பாடு மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களை, குறிப்பாக நன்கு படித்து பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும்  பிராமணர்களை, வாசகர்களாகக் கொண்டுள்ள இதழ் அதுவாகும்
(‘தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

தமிழ்நாட்டில் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் வேகமாக ஊடுருவி வருகின்றன. 'தாய்ப்பால் பைத்தியம்' என்று நூல் எழுதி, ஆங்கிலத்தை தமிழர்களின் வீட்டு மொழியாக்கும் .வெ.ரா வின் நச்சுக்கருத்துக்கு, இன்றும் வக்காலத்து வாங்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

எனவே தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடு மாறும் அபாயம் இருக்கிறது
(‘‘தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html

'அந்த' அபாயத்தில் இருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க, கடந்த சுமார் 10 வருடங்களாக, எனது வரை எல்லைகளுக்குட்பட்டு நான் முயற்சித்து வருகிறேன். அந்த முயற்சிக்கு இன்று 'துக்ளக்' எனக்கு துணை நிற்கிறது
(‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்; 'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?’; 
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

'பெரியார்' பிம்ப வழிபாடானது தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு தடையாக நீடிப்பதால், 'பெரியார்' பிம்ப சிறையில் இருந்து .வெ.ராவை மீடகவும் நான் முயற்சிக்கிறேன்.வெ.ரா வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', அவரின் கொள்கைகளை உட்படுத்தி, எந்த 'பெரியார்' கட்சியாவது பயணிக்கிறார்களா? அவ்வாறு உரிய திருத்தங்களுடன் பயணிக்க மறுப்பதானது, 'குருட்டு பகுத்தறிவு' ஆகாதா

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கொல்வால்கர் எழுதிய “Bunch of Thoughts”நூலில், இன்றைய காலக்கட்டத்திற்கு ஒவ்வாதவைகள் இருப்பதை துணிச்சலுடன் அறிவித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பயணிக்கிறது. (https://timesofindia.indiatimes.com/india/rss-has-discarded-chunks-of-golwalkars-thoughts-mohan-bhagwat/articleshowprint/65879084.cms) 'அந்த' துணிச்சலை, எந்த 'பெரியார்' கட்சியாவது இதுவரை வெளிப்படுத்தியதா? இனியாவது வெளிப்படுத்துவார்களா?

ஆங்கிலத்தை தமிழர்களின் வீட்டு மொழியாக்கும் .வெ.ரா-வின் கருத்து தவறு என்று அறிவித்து, தமிழ்வழிக்கல்வியை 'விடுதலை' ஆதரிக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. .வெ.ராவின் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜி ஆதரித்திருக்கிறார். அதே அணுகுமுறையில் துக்ளக்கும், விடுதலையும் தமிழ்வழிக்கல்வியை ஆதரித்து ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது; 'தமிழ்வழிக்கல்வி எதிரி'யாக 'விடுதலை' குவியமாகும் சிக்கலும் நெருங்கி வருவதால்

தி.கவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் புரவலர்களாகக் கொண்டு'தமிழ்வழிக்கல்வி மீட்சி' மையம் சார்பாக;


கருத்தரங்கம்; தமிழ்வழியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த ..எஸ், .பி.எஸ், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள்  ஆகியோரை கெளரவித்தல்:

தாய்மொழிவழிக்கல்வி பலன்கள் பற்றிய உலக ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக  திராவிடர்கழகம் - ஆர்.எஸ்.எஸ் இணைந்த‘ தமிழ்வழிக்கல்வி மீட்சி அமைப்பு  சார்பாக வெளியிடல்முதலில் சென்னையிலும், பின்னர் மாவட்ட தலைநகரங்களிலும் இந்நிகழ்ச்சிகளை நடத்துதல்;

என்ற எனது பேராசை நிறைவேறும்; என்றும் நம்புகிறேன்.

இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’

ஆங்கிலம் தெரிந்த 'பெரியார்' ஆதரவாளர்களின் பார்வைக்கு: ‘Ganesha and the Modern Intellectual’ ; http://typewriterguerilla.com/2017/09/ganesha-and-the-modern-intellectual/

குறிப்பு 1:

                 ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்
                                      (துக்ளக்; 19-06-2019)

Excerpt - 'விடுதலை' கட்டுரை தொடர்புள்ள பகுதி:

.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில் தான் கலந்து கொண்டு தலைமையேற்றார். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டப் பெருமை முழுவதும் அவருக்கே தரப்படுகிறது. இதுபோல் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான பெரும் தமிழ்ப் பண்டிதர்களே. இதில் .வெ.ரா.வும், அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டார்கள். .வெ.ரா.தான் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார் என்பது தவறு.

1937- தேர்தலில் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி..பெ.விஸ்வநாதன் போன்ற சைவத்தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி..பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போதுமொழிப் போர் தியாகிகள்என்று கூறப்படுகிற தாளமுத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும், அண்ணாதுரையும் சேர்ந்தனர்.
இரண்டாவது தடவை நடந்த ஹிந்தி எதிர்ப்பு 1964-65 வாக்கில் நடந்தது. ஹிந்தியை இரண்டாவது மொழியாக மாணவர்கள் கற்க மறுத்து தி.மு..வும், மாணவர்களும் சேர்ந்து ஹிந்தியை எதிர்த்துப் போராடினர்.

வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதே பெரியார்தான் என்ற சித்திரம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது போல், ஹிந்தி எதிர்ப்பை திராவிட இயக்கங்கள்தான் முன்னெடுத்தன என்று கூறப்படுவதும் உண்மையல்ல.

குறிப்பு 2: From: https://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html - வைக்கம் போராட்டம் தொடர்பான எனது கருத்து தொடர்பான பின்னூட்டம் (comment)

'ஐயா

.வே. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சி உத்தரவில் வைக்கோம் சென்று ஆலயப்பிரவேச போராட்டத்தில் பங்கெடுத்தார். ஆனால் தமிழ்நாட்டு ஈவேரா பக்தர்கள் ஏதோ அவர்தான் போராட்டத்திற்க்கு தலைமைதாங்கி , வெற்றிபெற்றது போல் பிம்பத்தை உருவாக்கி ஈவேரா துதி செய்கின்றனர் . உண்மையில் அங்கு பங்கேற்ற பல தலைவர்கள் - முக்கியமாக மலையாள தலைவர்களில் - இவரும் ஒருவர் ; இரண்டாம் தள தலைவர் என சொல்லலாம்.

நீங்கள் குறிப்பிட்ட வைக்கோம் விகிபீடியா பக்கமே “Soon after this the Maharajah of Travancore, Moolam Thirunal died on 7 August 1924 and his niece Maharani Sethu Lakshmi Bayi came to power. As part of her installation durbar, she released all the prisoners.” என்கிரது.

ஆனால் ஈவேரா பக்தர்கள் ”When the Raja unexpectedly died Periyar was released from the Trivandrum prison because additional trouble was feared, since the death of the Raja somehow connected with Periyar's imprisonment as a bad omen” என எழுதியுள்ளனர்.
தமிழர்கள் ஈவேரா போன்ற பிப்ம துதியில் இருந்து வெளி வராவிட்டால் , சமூக கலாசார நாசம் அடைவர்.

EVR was a half educated demagogue; Personality cult around his figure has already done lot of damage


Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1


No comments:

Post a Comment