Monday, June 24, 2019

துக்ளக்ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்‘ 


கட்டுரை தொடர்பான விமர்சனம் (1)



தமிழ்நாட்டில் உரிய சான்றுகளின் அடிப்படைகளில் அறிவுபூர்வமாக விவாதிக்கக் கூடியவர்களாக நான் அடையாளம் கண்டுள்ள சிலரில் ஒருவர் திரு.பொ.முருகானந்தம் ஆவார். துக்ளக் இதழில்ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்தது. அதில் உள்ள நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ளதை அப்படியே இங்கு வெளியிடுகிறேன்; 1944க்கு முன், .வெ.ரா அவர்கள் குடிஅரசு இதழில் அவ்வாறு வெளியிட்டதையும் நினைவு கூர்ந்து.

ஐயா,

வணக்கம்.

1.வைக்கம் போராட்டம் தொய்வுறும் நெருக்கடிக்கு வந்தபோது பெரியார் கேரள போராட்டக் குழு அழைப்பின் பேரில் சென்றார். அவர் சென்ற பின் போராட்டம் வலுப்பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

ஏதோ கடைசி நேரத்தில் பெயர் வாங்கச் சென்றது போல் பதிவு செய்திருப்பது உண்மைக்கு புறம்பானது.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் அழைப்பின் பேரில் இடையில் சென்றது உண்மை தான்கடைசியில் எனக் கூறுவது சரியல்ல.

2. 1938 கட்டாய இந்தி எதிர்ர்ப்புப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்கம்நீதிக்கட்சி ஆரம்பத்தில் இருந்தே  பங்கெடுத்து வந்திருப்பதை அன்றைய பதிவுகளின் மூலம் அறியலாம்.

.தனித்தமிழ் இயக்கம் உருவாகி இருந்த சூழலில் தமிழறிஞர்கள்பேராசிரிரியர்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

நீதிக்கட்சித் தலைவர்களில் முக்கியமான செ.தெய்வநாயகம் தனது சொந்த இடத்தை போராட்ட அலுவலகமாக பயன்படுத்த கொடுத்தார்.

தமிழறிஞர்கள் தங்களது எதிர்ப்பை முதலில் பதிவு செய்தார்கள்அடுத்த செயல்பாடுகள் கூட்டு முயற்சியாகவே  மேற்கொள்ளப்பட்டன.

இதில் சு..இயக்கம்நீதிக்கட்சி,தமிழறிஞர்கள் இணைந்தே போராடினர் என்பதை நூல்கள் மூலம் அறிய முடிகிறது.

1938 இந்திப் போராட்டத்திலும் பெரியார் ஆரம்பத்தில் இருந்தே பங்கெடுத்து வந்துள்ளார்.

சான்றுகளுக்குரிய நூல்கள்:

1.தமிழன் தொடுத்த போர்  -  மா.இளஞ்செழியன்

2. தமிழர் காவலர் செ.தெ.நாயகம்கதிர்.முத்தையன்

3.தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும்வளர்ச்சியும்  - முனைவர்.சாரதா நம்பி ஆரூரன்

4. 1965 இந்தி பொதுமொழியாக கொண்டுவருவதைக் கண்டித்த போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை. காமாரஜருக்கு எதிராக அரசியலாக பார்த்துள்ளார் என கருத முடிகிறது. இருந்தாலும்

பெரியார் 1965 போராட்டத்தில் எடுத்த நிலை விமர்சனத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான

செய்திகள் படிக்க கிடைப்பது அரிதாகவே உள்ளது.

1965 இந்திப் போராட்டத்தில் பெரியார் நிலை குறித்து உங்கள் வலைப்பதிவில் உள்ளவை கீழே:

///

திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, 'நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே .வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், .வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டு, .வெ.ராவை அவமதித்து, பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், அண்ணாவும், ராஜாஜியும் தூண்டி, நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான திசையில், தமிழ்நாடு பயணித்து, சீரழிவின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. 

1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின.(குறிப்பு கீழே) அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது ////


1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்கள் தலைமையில்தான் போராட்டம் நடைபெற்றது . பெரியார் இடையில் வந்து பெயர் வாங்கிக் கொண்டார் என்பது உண்மையா என அறிய பின்வரும் குறிப்புகள்  உதவும்.

இந்தி திணிப்பு ஆணை வந்தவுடன், 28.0.1938-ல் சுயமரிதை இயக்கம்நீதிக்கட்சிதமிழறிஞர்கள் உள்ளிட்ட உணர்வாளர்கள் கூடி இந்தி எதிர்ப்பு வாரியத்தை உருவாக்கினார்கள்.அதில் பெரியாரும் ஒரு உறுப்பினர். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.செ.தெ.நாயகமும் அக்கூட்டத்தில் பங்கு பெற்று இருந்தார். இவரே அக்கூட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் தான் தனது சொந்த இடத்தில் தியாகராயநகரில் இந்தி எதிர்ப்புக்காக தலைமை நிலையத்தை ஏற்படுத்தினார். அங்கிருந்து தான் ஈழத்தடிகளே தங்கி தனது போராட்டப்பணிகளை செய்துவந்தார்.

01.06.38-ல் அங்கிருந்து தான் பல்லடம் பொன்னுசாமி என்பவர் (காங்கிரசுக்காரர்) உண்ணாவிரதப் போராட்டத்தினைத் துவங்கினார். 03.06.38-ல் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் இந்தி எதிர்ப்புணர்வுள்ள பலரும் கலந்துகொண்டனர். அன்று (03.06.38) மாலை பல்லடம் பொன்னுச்சாமி கைது செய்யப்பட்டார். அவர் கைதானவுடன் ஏற்பட்ட பரபரப்பான சூழலைப் பன்படுத்தி இந்தி எதிர்ப்பு கூட்டம் ஊர்வலமாக மாற்றப்பட்டு இரவு 9 மணிக்கு முதலமைச்சர் இல்லம் முன்பு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தவுடன் அன்றைய தினம் நள்ளிரவில் முதல் சர்வாதிகாரி திரு.செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சாமிசண்முகாநந்தம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டம் துவங்கிய முதல் நாள் கைதான மூவரில் ஒருவர் நீதிக்கட்சி (செ.தெ.நாயகம்), இன்னொருவர் சுயமரிதை இயக்கம் (காஞ்சி மணிமொழியார்) மூன்றாவது நபர் சாமி சண்முகானந்தா (காங்கிரசுக்காரர்). ஈழத்தடிகள் முதல் சர்வாதிகாரி என முகநூலில் தமிழ்த்தேசியம் பேசும் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஆனால் ஈழத்தடிகள் இரண்டாவது சர்வாதிகாரியாக 28.07.38 ல் கைதானார். ஈழத்தடிகள் முதல் சர்வாதிகாரி இல்லை என்பதோடு, அவர் நீதிக்கட்சி தலைவரின் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.. செ.தெ.நாயகம் முதலில் கைதான பின் நடைபெற்ற நீதிமன்ற குறுக்கு விசாரணையில் ஈழத்தடிகள் பேசியது 22.09.38 விடுதலையில் வெளிவந்துள்ளது.

அடுத்து போராட்டத்தலைவர்களிடையே போராட்டம் முதலமைச்சர் வீட்டு முன்பா அல்லது பொது இடத்திலா என்பதிலே முரண் இருந்தது. பெரியார் பொது இடத்தில் நடத்த வேண்டும் என தனது நிலையை வெளிப்படுத்தினார். அந்த நிலைக்கே செப்16க்கு பிறகு போராட்டக்களம் மாறியது. ஆனால் பெரியார் போராட்டத்தை எதிர்த்ததாக ஈழத்தடிகள் தனதுஇந்திஎதிர்ப்பு அன்றும்-இன்றும்நூலில் குறிப்பிட்ட அவதூறை , உண்மை என பரப்புரை செய்யக் கிளம்பி விட்டார்கள். தனது சொந்த அலுவலகத்தில் ஈழத்தடிகளுக்கு உணவு, இருப்பிடம் கொடுத்தவர் நீதிக்கட்சி தலைவர் செ.தெ.நாயகம் அவர்கள்தான்.

பெரியாரின் விடுதலை,குடியரசு,பகுத்தறிவு இதழ்கள் 1925-லிருந்தே இந்தி எதிர்ப்பு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்ட காலகட்டத்தில் கடும் அடக்குமுறைக்கு ஆளானது. 07.10.38 ல் விடுதலைப் பதிப்பாளர் வெ கிருஷ்ணசாமியும், ஆசிரியர் முத்துச்சாமியும் கைது செய்யப்பட்டு 09.01.39 ல் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது..கடைசியாக, 19.02.1940 ல் சென்னை கோகலே மன்றத்தில் பெரியார் இறுதி எச்சரிக்கை விடுத்துப் பேசினார். 21.02.1940 ல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது

நீதிக்கட்சி தெலுங்கர் தலைமையில் இருந்ததால் இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டவில்லை என்பதாக ஒரு வாதத்தினை முன் வைக்கிறார்கள். 16.1037 ல் தென்னிந்திய நல உரிமைச் சங்க ஆட்சிக்குழு கூடி நிறைவேற்றிய தீர்மானங்கள்:

1)மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படுவதை ஆதரிப்பது.

2) கட்டாய இந்தியை கண்டிப்பது.

3) கட்டாய இந்தியை கண்டித்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வது.

இதன் அடிப்படையில் 26.12.37, 27.02.38ல் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன.

 27.02.38 காஞ்சிபுரம் மாநாட்டில் தான் சென்னை மாகாண முன்னாள் கவர்னர் சர்.கே.வி.ரெட்டி ஆங்கிலத்தில் உரையாற்றியதை செ.தெ,நாயகம் தமிழில் மொழிபெயர்த்தார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி போன்ற பலமான அமைப்புகளின் மூலம் போராட்டம் வீரியமாக நடைபெற்றது. தமிழறிஞர்கள் இதில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார்கள். 

13.11.1938-ல் இந்தி எதிர்ப்புக்காக கூட்டப்பட்ட பெண்கள் மாநாட்டில் தான் ஈவெரா பெரியார் என பட்டம் பெற்றார். மாநாடு முடிந்த பின் பெண்களைப் போராடத் தூண்டியதாக வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார் பெரியார்.

தமிழறிஞர்கள் மட்டுமல்ல நீதிக்கட்சி தலைவர்கள், சு..இயக்கப்பெண்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுபட்டு இந்தியை வென்றனர் என்பதே உண்மை வரலாறு.

அன்புடன்,
பொ.முருகானந்தம்.

குறிப்பு: ஹிந்தி, போலீசார், நடராஜன் இது போன்ற சொற்கள் உங்கள் பதிவுகளில் நான் கண்டதில்லை.துக்ளக் அவ்வாறு மாற்றி உள்ளதா? துக்ளக்-கில் மட்டும் இவ்வாறு வருவது ஏன் என விளக்கம் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் ஐயா.
------------------------------------------------------------------------------------------------------------------

                                                     எனது விளக்கம்

'தமிழ்' என்ற சொல்லானது, ஆங்கில மொழியில் 'Tamil ' என்றும், 'Tamizh' என்றும் எழுதப்படுவதானது, ஒலிப்பியல் ஏற்றுமதி (Phonetic Export) ஆகும். அதில் 'zh' என்பதை 'ழ்' என்று உச்சரிக்கப் பழகாத ஆங்கிலேயர்களுக்கு சிரமத்தைத் தரும்.

அது போலவே,  हिन्दीஎன்ற சொல்லானது, தமிழ் மொழியில் 'இந்தி' என்றும், 'ஹிந்தி' என்றும் எழுதப்படுவதானது, ஒலிப்பியல் இறக்குமதி (Phonetic Import) ஆகும். அதில் 'ஹி' என்ற எழுத்தானது, வட மொழி எழுத்துக்களை தமிழில் எழுத உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தாகும்; 'ஸ்டாலின்' என்று தமிழில் எழுதப் பயன்படும் 'ஸ்' என்ற எழுத்தைப் போலவே. 'ஸ்டாலின்' என்ற சொல்லில் கிரந்த எழுத்தைத் தவிர்த்து, 'ச்டாலின்' என்று எழுதுவதைப் போலவே; '.மார்க்ஸ்' என்பதை,  '.மார்க்ச்' என்றும் எழுதுவதைப் போலவே; 'ஹிந்தி' என்ற சொல்லில் கிரந்த எழுத்தைத் தவிர்த்து, 'இந்தி' என்று எழுதுவதும் ஆகும்‘Tamizh’ என்பதைச் சரியாக '‘தமிழ்என்று ஆங்கிலேயர்கள் உச்சரிப்பதானது, எந்த அளவுக்கு சரியோ, அது போலவே, ‘हिन्दीஎன்ற சொல்லை, 'ஹிந்தி' என்று எழுதி உச்சரிப்பதும் சரியாகும்.

தமிழில் கிரந்த எழுத்து எதிர்ப்பானது, எவ்வாறு தமிழின் வளர்ச்சிக்குக் கேடானது, என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘ஒருங்குறி சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான எதிர்ப்புகள் தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; 

பொதுவாக எனது உரைநடையானது, படிப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடிய வகையில் இல்லை, என்பதைப் பலர் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே துக்ளக் இதழில் எனது கருத்தில் சிதைவின்றி, துக்ளக் வாசகர்களுக்கு பரிச்சயமான நடையில் திருத்தி வெளியிடுமாறு, துக்ளக் ஆசிரியரைக் கேட்டுக்கொண்டேன். அவ்வாறே 'ஹிந்தி, போலீசார், நடராஜன்' போன்ற சொற்கள் எல்லாம், துக்ளக்கில் வெளிவந்தஎனது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன

தற்போது இசைத்தகவல் தொழில்நுட்பம் (Music Information Technology) தொடர்புடைய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நான், 'பெரியார்' சிறையிலிருந்து .வெ.ரா அவர்களை மீட்கும் நோக்கில்;

இசை ஆய்வுக்கு முன், சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் படித்தவைகளை நினைவு கூர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறேன். மறு ஆய்வு நோக்கில், மேற்குறிப்பிட்ட விமர்சனத்தில் இடம் பெற்ற சான்றுகளை மீண்டும் படிக்கும் ஆர்வத்தினை, இந்த விமர்சனம் தூண்டியுள்ளது1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் துவங்கி வளர்ந்த தீக்குளிப்புகள் மற்றும் தற்கொலைகள் எல்லாம், தாய்மொழி அடையாளச் சிதைவுக்கு உள்ளானதன் விளைவான‌, 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிகிறது.
 (https://tamilsdirection.blogspot.com/2019/06/alexithymic.html)  

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா..மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார்எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html

இன்றும் அதே போக்கில் பயணித்து வருவதை, என்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் அறிவார்கள். மிகுந்த கவனத்துடன், 'சமூக வடிப்பான்கள்' (Social Filters) மூலமாக, 'அந்த' தகுதியுடையவர்களையே, என்னுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் போக்கையும் கடைபிடித்து வருகிறேன். (‘தமிழ்நாட்டில் ஏமாறாமல், தன்மானத்துடன் வாழ்வதற்கான இரகசியங்கள்?’; 
https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_12.html )



       ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்

                                      (துக்ளக்; 19-06-2019) 

.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில் தான் கலந்து கொண்டு தலைமையேற்றார். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டப் பெருமை முழுவதும் அவருக்கே தரப்படுகிறது. இதுபோல் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான பெரும் தமிழ்ப் பண்டிதர்களே. இதில் .வெ.ரா.வும், அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டார்கள். .வெ.ரா.தான் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார் என்பது தவறு.

1937- தேர்தலில் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி..பெ.விஸ்வநாதன் போன்ற சைவத்தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி..பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போதுமொழிப் போர் தியாகிகள்என்று கூறப்படுகிற தாளமுத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும், அண்ணாதுரையும் சேர்ந்தனர்.

இரண்டாவது தடவை நடந்த ஹிந்தி எதிர்ப்பு 1964-65 வாக்கில் நடந்தது. ஹிந்தியை இரண்டாவது மொழியாக மாணவர்கள் கற்க மறுத்து தி.மு..வும், மாணவர்களும் சேர்ந்து ஹிந்தியை எதிர்த்துப் போராடினர்.

வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதே பெரியார்தான் என்ற சித்திரம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது போல், ஹிந்தி எதிர்ப்பை திராவிட இயக்கங்கள்தான் முன்னெடுத்தன என்று கூறப்படுவதும் உண்மையல்ல.

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில், ஹிந்தி -சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில், தி.மு.. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு..ஸ்டாலின், ‘இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல. தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால்தான். என் மொழியில் வளர விடுங்கள். என் மொழியிலேயே படிக்க விடுங்கள் என்பதற்காகத்தான் போராடுகிறோம். தமிழ் மொழிக்கான திராவிட இயக்கத்தின் போராட்டம், உணர்வு மிக்கதுஎன்று கூறியுள்ளார். ஆனால், உண்மை என்ன?

1965-ல் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, .வெ.ரா. பெரியார் 3.3.1965 ‘விடுதலைஇதழின் தலையங்கத்தில் எழுதியது இது.

இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள்என்று எழுதினார். அதேபோல், ‘காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஒழிய வேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்என்று 8.3.1965-ல் விடுதலை தலையங்கத்திலும் எழுதியுள்ளார்.

எனவே .வெ.ரா.வின் ஹிந்தி எதிர்ப்பு நிலைப்பாடு என்பது இதுதான். ஸ்டாலின் வெளிப்படுத்திய கருத்து தொடர்பாக, அந்த மேடையிலேயே கி.வீரமணியோ அல்லது தி.. சார்பில் வேறு எவருமோ .வெ.ரா.வின் கருத்து என்னவென்று தெளிவுபடுத்தினார்களா என்று தெரியவில்லை.


- வீரபாண்டியன்

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment