இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு (6)
தமிழ் நாட்டு மாணவர்களின் புலன் அறி திறன் வளர்ச்சிக்கு (Cognitive
Skills Development) ஆபத்து;
நெருக்கடியில் அண்ணா செய்த தவறினை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்வது தமிழ்நாட்டுக்குக் கேடாகும்
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, அதற்கான பலன்களை அனுபவிப்பது தன்மானக் கேடாகும்;
என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பலரில் நானும் ஒருவன். (‘ஏழைகள் இந்தி படிக்கும் வாய்ப்பு ஒழிய காரணமான, 1965
இந்தி எதிர்ப்பு போராட்டம்; சமூக சாபத்திலிருந்து
(Social Curse), நான் விடுதலை பெறும் ‘பரிகார வாய்ப்பு’;
மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வரும் கருத்தினை வெளியிட்டிருந்தேன்.
‘1967 வரை, விருப்பமுள்ளவர்கள் (தேர்வில் ‘பாஸ்’
(pass) ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை) இந்தி பயிலும் வாய்ப்பானது, அப்பள்ளிகளில் இருந்ததை;
ஒழிக்கும் வினை ஊக்கியாக
(catalyst) அமைந்து, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு வித்திட்டது. 1965
இந்தி எதிர்ப்பு போராட்டமாகும்.’
1967 வரை, விருப்பமுள்ளவர்கள் (தேர்வில் ‘பாஸ்’
(pass) ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை) இந்தி பயிலும் வாய்ப்பினை, விருப்பமின்றி எந்த நெருக்கடியில் சிக்கி, அண்ணா நீக்கினார்? என்பது தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.
துக்ளக் (12-06-2019
) இதழில், 'தமிழை அழிக்கும் ஹிந்தி எதிர்ப்பு அரசியல்' என்ற தலையங்கத்தில், கீழ்வரும் தகவல் வெளிப்பட்டுள்ளது.
‘தமிழகத்தில் அமலில் இருந்த மும்மொழிக் கல்வித் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று,
1968-ல் துவக்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா ஆட்சியை குறிவைத்து மீண்டும் நடந்த வன்முறைகளின் காரணமாகத்தான் அதைக் கைவிட்டார் அண்ணா. எனவே, மும்மொழித் திட்டத்தையோ, ஹிந்தி படிப்பதையோ அண்ணா தானாகவே முன்வந்து நிறுத்தவில்லை. ஹிந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றுதான் அண்ணா கோரினாரே தவிர, தமிழர்கள் ஹிந்தி படிக்கக் கூடாது அல்லது அவர்களுக்கு ஹிந்தியைக் கற்பிக்கக் கூடாது என்று அவர் கூறவில்லை.’
1967-இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னும் தொடர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது, ஆட்சிக்கே ஆபத்தாகும் திசையில் பயணித்ததால், எத்தகைய நெருக்கடியில் முதல்வர் அண்ணா மும்மொழித் திட்டத்தினை கை விட்டார்? என்பதற்கான விளக்கம் அடுத்து வருகிறது.
‘On 19 December 1967, the
agitation was restarted. It turned violent on 21 December and acts of arson and
looting were reported in the state. Annadurai defused the situation by
accepting most of their demands. (Madras State Administration Report, 1968
Madras (India : State). On 23 January 1968, a resolution was passed in the
Legislative Assembly.’
தமிழ்நாட்டில் பள்ளிகளில் விருப்பப் பாடமாக இந்தியும் சேர்ந்து மும்மொழித் திட்டம் அமுலில் இருந்ததை நீக்க, அண்ணா ஏன் தயங்கினார்? என்ற கேள்விக்கான விடையை அடுத்து பார்ப்போம்.
உலகில் கூடுதலான மொழிகளைப் பயிலும் இளம் மாணவர்களின் புலனறி திறன் வளரும் என்பதை உலக அளவில் மேற்கொண்ட பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
A voluminous body of research
points to many interrelations between language development and cognition ; ‘Interrelationship
of Language and Cognitive Development (Overview)’; http://quote.ucsd.edu/cogdevlab/files/2014/09/Deak_Ency_Lang_Dev_Relation_Lang_Cog_Dev_2014.pdf
; Whatever the reason, learning multiple languages might help children master
complex cogni-tive skills slightly earlier than same-aged peers.; https://www.researchgate.net/publication/265905729_Interrelations_of_language_and_cognitive_development
அது மட்டுமல்ல, ஒவ்வொரு மொழியிலும் உள்ள தனித்துவமான கூறுகள் மூலமாக, கூடுதலாக பயிலும் ஒவ்வொரு மொழி தொடர்பான புலன் அறிதிறன் வளர்ச்சிப் பலனும் நமக்குக் கிட்டும்.
Some effects are specific to language, whereas
others are more general; ‘Effects That Language Has on Cognitive
Development’; https://www.livestrong.com/article/93181-effects-language-cognitive-development/
;
நான் 1967க்கு முன் கல்வி பயின்ற புண்ணியத்தால், இந்தி கற்கும் வாய்ப்பு கிட்டியது. பின் பல வருடங்களுக்கு முன், 60 வயதினை நெருங்கும் காலத்தில், கல்லூரி முதல்வராக பணியாற்றிக் கொண்டே, சமஸ்கிருதம் அடிப்படைக் கல்வி கற்றேன்; இசை இயற்பியல் (Physics of Music) நோக்கில் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தது போல, சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆராயும் பேராசையில்.
உலக அளவில் புகழ் பெற்ற நவீன மொழியியல் விஞ்ஞானி நோவாம் சோம்ஸ்கி, 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'
(Musical Linguistics in tholkAppiyam) தொடர்பான எனது ஆய்வினைப் படித்து,
"உலகில் புதிதாக வளர்ந்து வரும் இசை மொழியியல் துறையில் இடம் பெறத் தக்கது."
என்று பாராட்டியதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
அது போல இன்னும் பல கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். (http://drvee.in/) அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற இன்னும் பல தமிழ்நாட்டு சாதனையாளர்கள் எல்லாம், 1967க்கு முன் இருந்த மும்மொழித் திட்டத்தில் படித்த, உயர்நிலைப் பள்ளி வரையில் தமிழ்வழியில் படித்த, புண்ணியம் பெற்றவர்கள் ஆவோம்.
ஆனால் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டு திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம், தமிழ்நாட்டில் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தியும் படித்து வருகிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து, 'அந்த' தலைவர்களின் 'இந்தி எதிர்ப்பு யோக்கியதையை' எடை போடலாம்.
‘கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களாக இருந்தவர்களால் 'வில்லனாக' சித்தரிக்கப்பட்டவர் திருச்சி ' REC
( இன்று NIT-
National Institute of Technology)- 'இன் முதல் இயக்குநர் மணிசுந்தரம் ஆவார்.
அவருடன் நெருக்கமாக பழக, எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மூலம்;
நியாயமான கோரிக்கைகள் எல்லாம், 'உணர்ச்சிபூர்வ' சிறையில் சிக்கி, தீருவதற்கான வாய்ப்பையும் கெடுத்து, சங்க தலைவர்களின் பொதுவாழ்வு வியாபார மூலதனமாவதை, தடுக்க முடியாத மோசடியில் தமிழ்நாடு சிக்கி பயணிக்கிறது;
என்பது தொடர்பான அனுபவங்களை நான் பெற்றேன். வாய்ப்பு அமையும் போது, அதனை பதிவாக வெளியிடுவேன்; 'ஈழ விடுதலை' எவ்வாறு 'திராவிட அரசியல் பொதுவாழ்வு வியாபாரிகளிடம்' சிக்கி, 'சாண் ஏறி முழம் சறுக்கின கதையானது? என்பதை வெளிப்படுத்தியது போலவே.
அந்த காலக்கட்டத்தில், தனது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு திராவிடக் கட்சித் தலைவரின் மகனை குறிப்பிட்டு, அப்போது 'பெரியாரிஸ்டாக' பயணித்த என்னிடம் கிண்டலாக கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.
“அவன் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவன். கூடுதலாக இந்தியும், ஒரு மேற்கத்திய மொழியும் படித்தவன். தமிழை ஒரு பாடமாக கூட படித்ததில்லை. 'தமிழ், தமிழ்' என்று ஏன் தமிழ்நாட்டை ஏமாற்றுகிறீர்கள்?"
இன்று திக, தி.மு.க, ம.தி.மு.க, அ.இ.அ.தி,மு.கவில் வசதியாக வாழும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் ஆங்கில வழியில், தமிழை ஒரு பாடமாக கூட படிக்காதவர்களே இருந்தால், வியப்பில்லை; விதி விலக்குகள் கூட இல்லாத அளவுக்கு.’
தமிழ்நாட்டில் ஏழைப் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் விருப்பப் பாடமாக இந்தி பயில வாய்ப்பளித்த மும்மொழித் திட்டத்தினை ஒழித்து, ஆனால் தமது குடும்பப் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி படிக்க வைத்த, வைக்கும் குடும்பப் பிள்ளைகளில் எவரும், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற சாதனையாளர்களாக உருவாக, ஏன் வாய்ப்பில்லை? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
அது மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலி'(?) 'திராவிட' தலைவர்கள் எல்லாம், சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்களின் வரிசையில், எவ்வாறு இடம் பெற வாய்ப்புள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக; 'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள்' இருப்பது தொடர்பான ஐயங்களையும் வெளியிட்டுள்ளேன்.
உலகில் கூடுதலான மொழிகளைப் பயிலும் இளம் மாணவர்களின் புலனறி திறன் வளரும் என்பதை உலக அளவில் மேற்கொண்ட பல ஆய்வுகள் நிரூபித்துள்ள்ளதை அறிந்த 'அறிஞரான' அண்ணா, எந்த நெருக்கடியில் சிக்கி, தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தினை கைவிட்டு, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் புலனறி திறன் வளர்ச்சிக்குக் கேடான இருமொழித் திட்டத்தினை சட்டமாக்க நேரிட்டது? என்பது தொடர்பான விபரங்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்திருந்தால், தமிழ் நாட்டில் இந்தி பிரச்சார சபை மூலமாக இந்தி பயில்வதில் முன்னணி மாநிலமாக இருக்கும் சூழலில், அவர் இன்று இருமொழிக் கொள்கையை முன்னெடுத்திருப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த தவறான போக்கிலிருந்து தி.மு.க விடுபடவில்லையென்றால், தி.மு.க தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளின் முன்பு, அப்பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை எதிர்த்து, 'புதுமையான இந்தி எதிர்ப்புப் போராட்டம்' நடக்க வாய்ப்புள்ளதை, கீழ்வரும் செய்தியானது வெளிப்படுத்தியுள்ளது.
பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் வெளியிட்டுள்ளார். 'திமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டி கொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று ?' எச்.ராஜா டுவிட் ;
''அரசியல் நீக்கம்'
(Depoliticize) கோலோச்சும் சூழலில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிப்பட்ட எதிர்பாராத பிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்;' என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
சென்னை மெரினா ஜல்லிக்கட்டு காற்றானது, ஸ்டெர்லைட், எண்ணெய்க் கிணறு, எட்டுவழிச்சாலை என்று இன்னும் பலவாக தமிழ்நாடெங்கும் அரசியல் சூறைக்காற்றாக வீசிய போக்கில், ஒட்டிக் கொண்ட தி.மு.க-வின் 'புத்திசாலித்தனத்துக்கும்', 'அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியானது, 'அந்த' பிரச்சினைகளில் தி.மு.க பங்களித்து 'பலன்கள்' பெற்றதை இருட்டில் நீடிக்க துணை போன 'ஏமாளித்தனத்திற்கும், வரலாற்று சாட்சியங்களாகவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, மேற்குறிப்பிட்ட பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
''அரசியல் நீக்கம்'
(Depoliticize) மூலம் விளைந்த ஆதாய அரசியலில், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பலூனாக',
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிப்பட்ட எதிர்பாராத பிரமிக்க வைக்கும் வெற்றிகளைக் கருதினால், 'அந்த' வெற்றி பலூனை உடைக்கும் ஊசியாக, தி.மு.கவின் நிகழ்கால, தமிழ்நாட்டு ஏழை மாணவர்களுக்கு கேடான, இந்தி எதிர்ப்பு இரு மொழிக் கொள்கை நிலைப்பாடு வெளிப்படும், என்பதும் எனது கணிப்பாகும்.
அதனை முன்கூட்டியே உணர்ந்தால், 'கட்சி இருக்குமா? இருக்காதா? என்ற போட்டியில், அ.இ.அ.தி.மு.கவை பின்னுக்குத் தள்ளி, தி.மு.க முன்னேறும் வாய்ப்பினைத் தவிர்க்கலாம். எது நடந்தாலும், அது தமிழ்நாட்டிற்கு நல்லதே. ஏனெனில் இருமொழிக் கொள்கையை சமாதியாக்கி, விருப்பமாக இந்தியையும், உலக மொழிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களும், ஆங்கிலவழி தனியார்ப் பள்ளி மாணவர்களைப் போல, பயிலும் வாய்ப்பினை வழங்கும் கட்சியே ,இனி தமிழ்நாட்டில் எடுபடும்.
குறிப்பு:
1995-இல் கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.
"கர்நாடக அரசு கல்வி, நிர்வாகம், வேலை வாய்ப்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து ஆணைகள் அமுல்படுத்தியுள்ளது. அதே ஆணைகளை வாங்கி, 'கன்னடம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்' என மாற்றி ஏன் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்கக் கூடாது?"
"கர்நாடக அரசின் அந்த ஆணைகளை வாங்கித் தாருங்கள். நான் முயற்சிக்கிறேன்"
என்று அவர் பதில் சொன்னார். எனக்குத் தெரிந்த 'தனித்தமிழ்' முக்கிய நபரிடம் அதைத் தெரிவித்தேன். ஒன்றும் பலனில்லை.
அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தகவலைச் சொன்னேன். அவர் பெருமையுடன்
"அந்த கர்நாடக அரசின் ஆணைகள் வந்து விட்டன. எனது துறையில் தான் உள்ளது"
என்றார். அதாவது பேரா.பொன்னுசாமியின் முயற்சியால் அந்த ஆணைகள் கிடைத்த பின், ஆட்சி மாற்றம் நடந்ததிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் ப.தண்டபாணிக்கு ஏற்பட்ட முடிவே, 'அந்த' ஆணைகளுக்கும் நடந்தது.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, பேரா.பொன்னுசாமி 'கட்சி மாறி'யாகி விட்டார். அந்த தவறினை அவர் செய்யாமல், அ.இ.அ.தி.முகவில் நீடித்திருந்தால், மீண்டும் அவர் மூலம் முயற்சி நடந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html
)
மொழிப்
பிரச்சினை என்பதானது, இந்தியாவின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும், திறந்த மனதுடனும், அறிவு
நேர்மையுடனும், ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினையாகும். அதில் காரியம் சாதிக்கும்
நோக்கில் தான், இந்தித் திணிப்பை
எதிர்த்து செயல்படுவதே புத்திசாலித் தனமாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/08/blog-post.html
)
No comments:
Post a Comment